Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 16 4

 மொழி  வெட்க பட்டு அவனை இடுப்போடு கட்டிக்கொண்டவள்.

“என்னடி தினமும் இப்படி எனக்கு காபி கொடுக்க ரெடியா” என்றான்.



Advertisement

அவளோ “போங்க ரிஷி” என்று அவனின் தோளில் சாய.

Advertisement

 ஆத்வீக்கும்க சாத்வீக்கும் இவர்களை பார்த்துவிட்டு “டாடி நானு, நானு” என்று அவர்களும் ரிஷியின் தோளில் தொங்கி கொண்டனர்..

Advertisement

 மூன்று பேரையும் அணைத்தபடியே சோபாவில்  வந்து  சாய்ந்தான் ரிஷி.

Advertisement

 தன் மூன்று சொர்க்கங்களை

 தன் கைவளைவில் வைத்திருந்தான் ரிஷிநந்தன், ..

 மிகவும் சந்தோஷமாக இருந்தான் ரிஷி.

தன் வாழ்க்கையே போச்சு என்று இருந்தவனுக்கு, வாழ்க்கை ஆனந்தமாக மாறியது,.

ஒரு வாரம் ஜப்பானில் மொழியோடு இனிக்க, இனிக்க திகட்ட, திகட்ட வாழ்ந்து விட்டு  இந்தியாவுக்கு அழைத்து  வந்தான்.

சுதாவுக்கு  மொழியின் மலர்ந்த முகமே அவருக்கு சேதி சொன்னது, அவள் தன் மகனோடு வாழ ஆரம்பித்து விட்டாள் என்று…

மருமகளை  கட்டி அணைத்து மித்தமிட்டவர், “சீக்கிரமா ஒரு பேத்தியை பெத்து கொடு” என்று.,

“சரி” என்று தலையாட்டி வெட்கபட்டாள்  மொழி.

அன்று இரவு பிள்ளைகளை தன்னோடு படுக்க வைத்துக்கொண்ட சுதா,  மொழியில்  கையில் பீளாஸ்கை கொடுத்து மகன் அறைக்கு அனுப்பி வைத்தார்..

ரிஷி அவன் அறையில் பெட்டில் அமர்ந்து கொண்டு  லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவன்.

மொழி அறைக்கு வரவும், “பிள்ளைகள் எங்கே”? என்றான்.

“அத்தை அவங்க கூட படுக்க வச்சு கிட்டாங்க” என்றதும்

“ஏய் ஜாலி” என்றவன்.

மொழியை பார்க்க, அவளோ தலை நிறைய பூ வைத்து, கையில் பிளாஸ் கோடு நிற்க.

லேப்டாப்பை மூடிவைத்தவன்.

“கம் பேபி” என்று அவளை கை நீட்டி  பக்கத்தில் அழைக்க..

ரிஷியின் கையை பிடித்து கொண்டவள்,

“இது என்ன புதுசா பேபி சொல்லுறீங்க” என்றாள்.

“அது  பேபி பிறக்குற  வேலையை பார்க்க போறாம், அப்போ பேபியோட அம்மாவை, பேபியின்னு தானே கூப்பிடனும்” என்றான்

“சீ” என்று  மொழி வெட்க பட.

“சீ என்ற வார்த்தைக்கே இங்கே வழியில்லடி என் பொண்டாட்டி” என்றவன்.

“அது என்ன புதுசா பிளாஸ்க்”, என்றான்.

“அதுல சூடா பாதாம் பால் இருக்கு அத்தை குடுத்து விட்டாங்க” என்றாள்.

“அது நடுராத்திரிக்கு  தேவை படும் மல்கோவா”, என்றவள்.

மொழியை வாரி அணைத்து அவன் செயலில் இறங்கினான்,  நல்லிரவு கடந்தவுடன்,  ரிஷி அவளை பாடாய் படுத்த,   “போதும் நந்து கண்ணா”, என்று அவனிடம்  மொழி கெஞ்ச.

அவனோ அவளை விடமால் கொஞ்சி கொண்டே  இருந்தான்.

“நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு ரிஷி, நான் சீக்கிரம் எழுந்துக்கனும்  நந்து கண்ணா, மீதியை  நாளைக்கு வச்சுக்கலாம்” என்று அவனிடம் அவள் கெஞ்ச,..

“அம்மா பாத்துப்பாங்க  டி, நீ  காலையில தூங்கு” என்றான்.

“இல்லப்பா பிள்ளைகள் என்னை தேடுவாங்க, கொஞ்ச நேரம் தூங்க விடுங்க என்னை” என்றாள்.

 “உன் பிள்ளைகளால  நீ தப்பிச்ச போடி” என்று மெல்ல அவளை விடுவித்தான்.

 “விடுங்கன்னு சொன்னா தள்ளிப் படுக்க சொல்லல,  அப்படியே ஹக் பண்ணிட்டே  தூங்கலாம் தூங்குங்க” என்றாள்.

 “ஓ ஹக் பண்ணிக்கலாமா” என்றவன் அவளை ஹக் பண்ணி தூங்க தாயாரானவனை பார்த்து சிரித்தவள்..

 “நீங்க   ஹக்  பண்ணி  தூங்குற லட்சணமா  இது”? என்றாள்.

 “ஆமாம்” என்றவன், “வேகமாக எனக்கு ஒரு பிள்ளை பெத்துக்கொடு இல்லன்னா இன்னும்  உன்னை டார்ச்சர் பண்ணுவேன்” என்றான்.

 “ஒரு பிள்ளை போதுமா ரிஷி” என்றாள்.

 “அது முதல்ல ஒரு பாப்பா பிறக்கட்டும் அப்புறமா சொல்றேன் “என்றான் கண்ணடித்து.

 ரிஷியின் தலைகோதி  அவனின் நெத்தியில்   முத்தமிட்டவள் “தூங்கு நந்து  கண்ணா” என்றாள்.

 அவளை மார்போடு அணைத்து குழந்தை போல் தூங்கிக்கொண்டு  இருந்த  கணவனை தட்டிக் கொடுத்தபடியே  தூங்க வைத்தாள் மொழி..

 காலை  ஆறு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கீழே ஓடி வந்திருந்தாள் மொழி.

 சுதா அப்பொழுதுதான் எழுந்து டிபன் செய்ய தயாராகிக் கொண்டிருக்க அத்தை நான் பார்த்துக்கிறேன் என்றாள்.

“நீ  ஒன்னும் பார்த்துக்க வேண்டாம் உன் பிள்ளைகளை எழுப்பி குளிக்க வைத்து டிரஸ் பண்ணி கூட்டிட்டு வா,  நான் சமையலை  ரெடி பண்ணி வைக்கிறேன்” என்றார் சுதா.

“தேங்க்யூ அத்தை” என்றவள் சுதாவை அணைத்து கன்னத்தில் முத்தமிட.

 “இந்த காபி குடித்துவிட்டு போ” என்று அவள் கையில் காப்பி டம்புளரை  வைத்தார்

 சுதாவை நன்றியோடு பார்த்தவள், காபியை குடித்து விட்டு,  தன் பிள்ளைகள் எழுப்பச் சென்றாள்.

 தன் செல்வங்களை முத்தம் கொடுத்து குட் மார்னிங் சொல்லி எழுப்பியவள் அவர்களை காலை கடனை முடிக்க வைத்து,பிரஷ் பண்ணி குளிக்கவைத்து டிரஸ் பண்ணி அழைத்து வர மணி ஏழரை  ஆகி இருந்தது.

 சுதா அனைத்தும் ரெடி பண்ணி வைத்திருக்க தன் பிள்ளைகளுக்கு தோசையை  ஊட்டி விட்டாள்.

 முதல் நாள் என்பதால்  பிள்ளைகள் பள்ளிக்கு  சந்தோஷமாக கிளம்பினார்கள்.

 ராமமூர்த்தி வாக்கிங் சென்று வர அவரே பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதாக இரு பேரபிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்.

 சுதா மருமகளின் களைப்பை பார்த்தவர்,, “மொழி நீ முதல்ல டிப்பன்  சாப்பிடு” என்று சொல்ல.

“அத்தை அவர் வரட்டும் சேர்ந்து சாப்பிடுகிறேன்” என்றாள்.

“அவன் எழுந்து வரட்டும் நீ முதல்ல சாப்பிடு ” என்று ஒரு தட்டில் தோசையை வைத்துக் கொடுத்தார்..

.

 மொழிக்கு ரிஷியை விட  அவன்  குடும்பத்தை அவளுக்கு  மிகவும் பிடித்தது.

 10 நாட்கள் சென்றிருந்தது வழக்கம் போல் அவளுக்கு அனைத்தும் பழகி இருந்தது..

 அன்று  காலையில் அதுபோல தான் பிள்ளைகளுக்கு லஞ்சும், ஸ்னாக்சும் பேக் செய்து கொண்டு இருந்தாள் மொழி.

 ஸ்னாக்ஸ் பேக் செய்வதை   பார்த்த சாத்விக்  “மம்மா என் ஃப்ரெண்டு  ஸ்நாக்ஸ் பேக்பண்ணி  குடுங்க” என்று கேட்க.

 “ஏன்டா உன் ஃப்ரெண்ட் ஸ்நேக்ஸ் கொண்டு வர மாட்டானா” என்று மொழி கேட்க.

 “ஆமாம் மா  என் ஃப்ரெண்டு  தர்ஷன் இருக்கான்ல அவனுக்கு அம்மா கிடையாது, சித்தி மட்டும் தான் அதனால அவங்க சித்தி அவனுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்து  மாட்டாங்க.

 டெய்லி நான் தான் ஸ்னாக்ஸ் கொடுப்பேன் அதனால தான் நீங்க எனக்கு அதிகமா வைங்க இன்னொரு பாக்ஸ் வேணும் கொடுத்து விடுங்க” என்றான்.

 “ஏண்டா அவங்க சித்தி ஸ்னாக்ஸ் கொடுத்து விட மாட்டாங்களா”?.

 ” அவங்க சித்தி அவனுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்க மாட்டாங்க,  அவங்களுக்கு ஒரு குட்டி பாப்பா இருக்கு,  அந்த பாப்பா எங்க ஸ்கூல்ல தான் படிக்குற,  அந்த பாப்பாவுக்கு மட்டும் ஸ்னாக்ஸ் கொடுத்து விடுவாங்க.” என்றான் சாத்விக்..

 மொழிக்கு ஒரு மாதிரியாக இருந்தது என்ன இது இப்படியும் மனிதர்கள்  இருக்கின்றார்களா? என்றவள், சாத்வீக்கிடம் இரண்டு மூன்று கேள்விகள் கேட்க,  அவன் சொன்ன பதிலில் ஆடிப் போனாள் மொழி.

 சாத்வீக்கின் மனதில் சித்தி என்ற வார்த்தைக்கு இவ்வளவு பெரிய விளக்கமா,  ஐயோ என்றவள்,   தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

 நான் அவர்கள் அம்மா இல்லை சித்தி என்று தெரிந்தால் பிள்ளைகள்  என்ன நினைப்பார்கள்,  தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு வந்தவிட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!