Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 17 1

நெஞ்சம் ஏங்குதே…



Advertisement

 அத்தியாயம் -17

Advertisement

Advertisement

  மொழிக்கு பயமாக இருந்தது.

Advertisement

சாத்வீக் , ஆத்விக்கிற்க்கும்  நான் அவர்களின்   அம்மா இல்லை சித்தி என்று  தெரிந்தால்..

தன்னை வெறுத்து விடுவார்களோ என்ற பயம்  அவளுக்கு வந்து விட்டது.

அச்சிறு பிள்ளைகள் மனதில் சித்தி என்பவள் கொடுமை படுத்துவாள் என்ற எண்ணம் உருவாகி இருக்க, இதை எப்படி நீக்குவது.

அவர்களுக்கு நான் சித்தி என்பது தெரிய கூடாது, நான் அவர்களுக்கு அம்மா, என்று தான்  அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று பிள்ளைகளை இன்னும் அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டாள்.

மொழிக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது, தனக்கும் ஒரு  பிள்ளை பிறந்தால் நான் என் பிள்ளையை மட்டும் நன்றாக பார்த்துக்கொண்டு, இவர்களை  சரியாக கவனிக்காமல் விட்டு  விடுவேனா?.

அப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன் என்று மனதில் தோன்ற.

இன்னொரு மனமோ நீ உன் அக்கா பிள்ளைகளையே உயிராக பார்த்துக்கொள்கிறாய், உன் ரத்தத்தில் உதித்த பிள்ளையை , நீ எப்படி பார்ப்பாய் என்று மனதில் தோன்ற.

தனக்கு பிள்ளைகள் பிறந்தால், இவர்கள் மேல் வைத்துள்ள பாசம் குறைந்து விடுமா, நானும் எல்லாரையும் மாதிரி சித்தியாக மாறி விடுவேனா?.

மனதில் ஆயிரம் யோசனை ஓட.

கடைசியாக ஒரு முடிவை எடுத்தாள் மொழி.

எனக்கு சாத்விக், ஆத்விக்கை தவிற வேற பிள்ளைகள் வேண்டாம் இவர்களே போதும், இவர்கள் மேல் வைத்துள்ள பாசத்தை நான்  யாரோடும் பங்கு போட மாட்டேன் இவர்களே எனக்கு போதும் என்று முடிவு எடுத்தவள்.

 அவள் எப்போதும்  மருந்து வாங்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றாள்.

 அந்த மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் பெண்மணிக்கும் மொழிக்கும் நல்ல பழக்கம் ஆத்விக்கிற்கும்,சாத்வீக்கும் அடிக்கடி சளி பிடிக்க மெடிசன் வாங்க என்று அடிக்கடி செல்வாள் மொழி, அதனால் அவளுக்கு நல்ல பழக்கம்.

 அவளிடம் மெதுவாக  தனக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் அதை தடுக்க ஏதாவது மெடிசன் இருக்கிறதா என்று கேட்டால்.

 அவள் அபாஷன் பண்ண தான் மருந்து தர மாட்டோம் ஆனால் பிள்ளை உருவாகுவதை  தடுக்க மருந்து இருக்கிறது நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்து இருந்து 12 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை போட்டால் கரு உருவாகாது என்று ஒரு மெடிசன் டப்பாவை அவளிடம் கொடுக்க.

 அப்பாடா இதுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்று அந்த மாத்திரை  டப்பாவை வாங்கிக் கொண்டாள் மொழி..

 அந்த மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் பெண்மணி “ஏன் மேம் பிள்ளைங்க வளந்துட்டாங்கல்ல இன்னொரு குழந்தை பெத்துக்கலாமே” என்று கூற.

“இல்லமா எனக்கு கொஞ்சம் ஹெல்த் பிரச்சனை  இருக்கு. எனக்கு  இரண்டு பிள்ளைகளே  போதும்” என்று அந்த பெண்மணியிடம் சொல்லி சமாளித்து விட்டாள்..

அவரும்  சரி என்று விட்டார்.

 ரிஷியிடம் நன்றாகவே நடந்து கொண்டாள்  அருள்மொழி..

ஆனாலும்  ரிஷிக்கு  ஏதோ குறைவது போல் தெரிந்தது.

 ரிஷி அடிக்கடி மொழியிடம்  கேட்பான். “என்ன ஆச்சு மொழி ஏதாவது பிரச்சனையா  என் கிட்ட ஏதாவது உனக்கு சொல்லனுமா “?. என்று.

“அவளோ ஒன்றும் இல்லை”? என்பாள்.

 ரிஷிக்கு சில நாட்களாக அவளை நன்றாக பார்த்தான் அவள் திடீர் திடீரென்று  ஏதோ யோசனையோடு இருப்பாள்.

நடு இரவில் பிள்ளைகளை சென்று பார்த்து  விட்டு வருவாள். பின்பு  நடுராத்திரியில்   எழுந்து கப்போர்டை உருட்டுவாள்.

 “ஏண்டி இப்படி இருக்க ஒழுங்கா தூங்கு” என்று அவளை திட்டுவான்.

 இது இன்று நேற்று இல்லை கடந்த ஆறு மாதமாக இப்படித்தான் இருக்கிறாள் மொழி.

 ஒவ்வொரு மாதமும் சுதா மொழியிடம் கேட்பார். உனக்கு  நாள் தள்ளிப் போய் இருக்கா, நாள் தள்ளிப் போயிருக்கா என்று அவள்  இல்லை அத்தை , சரியாக பிரியட்ஸ் வந்து விட்டது என்பாள்.

 சுதாவுக்கு ஏமாற்றமாக இருக்கும்.

 அவருக்கும்  மொழி இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.

அவளுக்கும்  பிள்ளை பிறந்தால் நன்றாக இருக்கும், அவளும் எல்லா சுகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.

 மொழிக்கு அந்த மாதம் பீரியட்ஸ் வரவில்லை சரி அதிக வேலை செய்திருந்ததால் வரவில்லை என்று நினைத்து இருந்தால்.

 ஒன்றரை மாதமாகியும் பீரியட்ஸ் வரவில்லை, ஏன் என்று அவள் யோசித்தாள், ஒரு வேலை ரத்தம் கம்மிய இருக்குமோ என்று மொழி நினைக்க.  இரண்டு மாதமாகியது பீரியட்ஸ் வரவில்லை உடலில் பல மாற்றங்கள் உண்டானது மொழிக்கு.

 அவளுக்கே என்ன ஆச்சு எதுவும் புரியவில்லை..

 சுதா  எப்பொழுதும் கேட்பது போல் கேட்க அவள் பீரியட்ஸ் வரவில்லை என்று கூறிவிட்டாள்..

 உடனே மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு செக் பண்ணி பார்த்தார் மருமகளை, அவள்  கர்ப்பமாக இருப்பது தெரிய சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருந்தார் சுதா..

 உடனே அனைவருக்கும் போன் போட்டு மொழி கர்ப்பமாக இருப்பதை சொல்ல அனைவருக்கும் சந்தோஷம்..

 இதைக் கேட்டு மொழிக்கு அதிர்ச்சி இது எப்படி,? இது எப்படி?  என்று  கேள்விகள் மனதில் வர.

 மாத்திரை சாப்பிட்டேன் தானே என்ற அவள் நினைத்துக் கொண்டிருக்க.

 மொழியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவர் “வாடா” என்று வீட்டிற்கு அழைத்து சென்றார்  சுதா.

 ராமமூர்த்தி மிகவும் சந்தோஷப்பட்டார்,  நீண்ட நாள் கழித்து தன் வீட்டில் நல்லது நடப்பது போல் அவர் மனது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

 பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் சுதா பேரப்பிள்ளைகளிடம் “நம்ம வீட்டில் ஒரு குட்டி பாப்பா  வரப்போகுது” என்று ஸ்வீட் ஊட்டி விட்டு  பிள்ளைகளிடம் சொல்ல.

ஆத்வீக்கும்,  சாத்வீக்கும் மொழியை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டனர்.

 “மம்மா ஜாலி,  ஜாலி நம்ம வீட்டுல குட்டி பாப்பா வரப்போறாங்க” என்று குதித்தனர்..

 மொழிக்கு  பிள்ளைகள் முத்தமிட்டதும் மெல்ல சிரித்தவள் அமைதியாகவே இருக்க.

 சுதா மொழி அமைதியாக இருப்பதை பார்த்து அவளுக்கு ஓய்வு தேவை என்று  நினைத்து  “நீ மேலே போய் தூங்கு மொழி, பிள்ளைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றவர்.

 ஆத்விக்கிடமும், சாத்வீக்கிடமும்  “இனிமே அம்மாவை  ரொம்ப தொல்லை பண்ண கூடாது. அம்மாவை தூக்க சொல்லக்கூடாது. அம்மா மேல ஏறக்கூடாது. அம்மாவை பத்திரமா பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்ல.

 அவர்கள் “சரி பாட்டி” என்று தலையாட்டினர்..

 சுதா பேரப்பிள்ளைகளிடம்  சொல்வதைக் கேட்டுக் கொண்டே மெல்லமாக மாடி ஏறினாள் மொழி..

 இப்பதான்  நான் உண்டாகி இருக்கேன். அதற்குள் என் பிள்ளைகளை என்னிடம் வரக்கூடாது என்று சொல்கிறாரே..

 குழந்தை  பிறந்து விட்டால் என்னையும் என் அக்கா பிள்ளைகளையும்  பிரித்து விடுவாரோ என்று பயம் வந்துவிட்டது மொழிக்கு.

 என்ன செய்ய?  குழந்தையை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா? என்று ஆயிரம் யோசனை ஓடியது மனதில்.  வேண்டாம் இந்த பிள்ளை  வேண்டாம் என்று மனது சொல்ல..

 அறிவு கெட்டவளே நீ எத்தனை பிள்ளை பிறந்தாலும் ஆத்வீக்கையும் சாத்வீக்கையும் நன்றாக பார்த்துக் கொள்வாய் என்று  புத்தி சொல்ல..

 அமைதியாக படுத்திருந்தாள் மொழி.

 ரிஷி வேகமாக வேலையை முடித்து கொண்டு வந்தான்,வரும்போது பிள்ளைகளுக்கு ஸ்வீட்டும் ஸ்னாக்ஸ்சும் மொழிக்குப் பிடித்த ஸ்வீட் வாங்கிக் கொண்டு வந்தான்.

 சுதா மகனின்  மகிழ்ச்சியை பார்த்தவர் “டேய் அப்பா ஆகிட்டேடா” என்று சொல்ல.

 சுதாவை அணைத்துக் கொண்டவன்.

 “எங்கம்மா அவ” என்றான்,

“ரொம்ப சோர்வா இருந்தா டா நான் தான் மேல ரூம் போய் படுக்க சொன்னேன்” என்றான்.

 “பிள்ளைகள் எங்கம்மா” என்றான் பிள்ளைகள் அவர்கள் ரூமில் உட்கார்ந்து ஹோம் ஒர்க் எழுதிக் கொண்டிருக்க பிள்ளைகளிடம் முதலில் சென்றவன்..

 பிள்ளைகளிடம்  குட்டி பாப்பா வரப்போகிறது என்று சொல்ல.

 “பாட்டி சொன்னாங்க டாடி” என்று சொல்ல பிள்ளைகளுக்கும் இனிப்பை  ஊட்டி விட்டவன்..

  ஸ்னாக்ஸை கொடுத்து “சாப்பிட்டு ஹோம் வொர்க் பண்ணுங்க நான் அம்மாவை பாத்துட்டு வரேன்” என்று மேலே சென்றான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!