“அது, அது’ என்றவளுக்கு ரிஷியிடம் பேச முடியல வில்லை.
Advertisement
அவள் பேச தடுமாறுவதை பார்த்தவன்.
“உன் மனசுல என்ன நினைக்குறீயோ அதை சொல்லு மொழி” என்றான்.
Advertisement
Advertisement
மொழி தட்டு தடுமாறி, கடைசியாக சொல்லி விட்டாள்.
“எனக்கு இந்த குழந்தை வேண்டாம் ரிஷி, அபாஷன் பண்ணிடலாம்” என்ற அவள் சொன்ன நொடி…
Advertisement
அவள் பக்கத்தில் இருந்தா டீபாய் ஒரு மிதி, மிதித்து தள்ளி இருந்தான் ரிஷி. அந்த கண்ணாடி டீபாய் சத்தத்தோடு தூரபோய் விழுந்து நொருங்கியது.
“இது உனக்கு விழ வேண்டிய அடி..
அந்த டீபாய்க்கு விழுந்து இருக்கு.
என்ன சொன்ன, என்ன சொன்ன! என்கிட்டயே குழந்தையை அபார்ஷன் பண்ணிக்கலாமா கேட்கிறீயா? கொன்னுடுவேன் உன்னை, எவ்வளவு சந்தோஷமா இருக்கு என் குடும்பம், என் குடும்ப சந்தோஷத்தை கெடுக்க பாக்குறியா நீ, உனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சுடி, நீ நல்லா தானே இருந்த, என்ன ஆச்சுடி லூசுத்தனமா யோசிச்சிகிட்டு இருக்க.” என்றான் ரிஷி..
“நான் ஒன்னும் லூசுத்தனமா எல்லாம் யோசிக்கல எனக்கு ஆத்விக், சாத்வீக் இரண்டு பேரும் போதும்” என்றாள்
“ஆனா எனக்கு போதாது, எனக்கு கண்டிப்பா இன்னொரு குழந்தை பிறந்தே ஆகணும்” என்றான் .
“அப்போ இன்னொரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி பிள்ள பெத்துக்கோங்க என்னை விட்டுடுங்க” என்றாள்.
“உனக்கு வாய் கூடி போச்சு மொழி தேவையில்லாம யோசிச்சு உன் சந்தோஷத்தையும் கெடுத்து, எங்க நிம்மதி எல்லாம் கெடுக்க பாக்குற நீ” என்றான்.
அவன் கோபப்பட்டு பேசுவதை தாங்க முடியாதவள் “ரிஷி நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க, இந்த குழந்தை வேண்டாம் ரிஷி, இந்த குழந்தை பிறந்தால் நிறைய பிரச்சனை வரும், நம்ம நிம்மதி போய்விடும்” என்றாள்.
“என்ன நிம்மதி போயிடும்” என்றான்.
“சாத்வீக், ஆத்வீக்கிற்க்கும் என்னால முழு பாசத்தை கொடுக்க முடியாதுன்னு எனக்கு பயமா இருக்கு , அவங்களுக்கு நான் அம்மா இல்ல சித்தி என்று தெரிஞ்சா அவங்க என்னை வெறுத்திடுவாங்களோன்னு நான் வேதனையில் இருக்கிறேன் இப்ப இந்த குழந்தை அவசியமா
இது எப்படி உங்களுக்கு தெரியும் என்பது போல் மொழி ரிஷியை பார்க்க .
“நீ என் கூட இருந்துட்டு டெய்லி மாத்திரை சாப்பிடுவது எனக்கு தெரியாதுன்னு நெனச்சியாடி.
நான் ஒன்னும் முட்டாள் இல்ல,, நீ சாப்பிடுற மாத்திரையை மாற்றி வைத்து இப்ப நீ என் குழந்தை சுமந்துகிட்டு இருக்கியே அதுக்கு நான் தான் காரணம்” என்றான்.
அதானேப் பார்த்தேன், நான் தான் சரியாக மாத்திரை சாப்பிட்டேனே பின்பு எப்படி குழந்தை உருவாக முடியும், ரிஷிதான் மாத்திரைகளை மாற்றி வைத்தாரா, அவருக்கு எல்லா விஷயம் தெரிந்ததா ஐயோ இவர் பாக்குற மாதிரி நான் மாத்திரையை சாப்பிட்டு இருக்கேன் தெரியாம தானே சாப்பிட்டோம் என்று அவள் யோசிக்க.
“என்ன மேடம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு நினைக்குறியா.
உனக்கு எப்படி இந்த மாதிரி யோசனை எல்லாம் வருது.
எவ்வளவு தில்லாலங்கடி வேலை பார்த்திருக்க நீ.,
உன் மேல ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமா சந்தேகம் இருந்தது.
என் கூட சந்தோஷமா இருந்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சு நீ ஏதோ கபோர்டுல உருட்டுவது நான் கவனிச்சேன் ஆனா சரியா கவனிக்கல மறுபடி மறுபடி நீ கப்போர்ட்ல உருட்டினா, நான் திட்டவும் பக்கத்துல உள்ள டிரெஸ்ஸிங் டேபிளில் உள்ள சின்ன ட்டிராவை இருந்து ஏதோ எடுக்கிற மாதிரி நான் பார்த்தேன்.
சரி ஏதோ உனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குது, போல ஏதோ கீரிம், மெடிசன் இந்த மாதிரி எடுத்துக்கிறேன் நினைச்சேன் இது மறுபடி மறுபடி தொடர்ந்துச்சு..
அன்னைக்கும் அப்படித்தான் என்கூட நீ சந்தோஷமா இருந்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சு மெதுவா எழுந்து அந்த ட்டிராவை திறந்து ஒரு டப்பாவை எடுத்த, நான் அதை பார்த்தேன். அதில் இருந்து மாத்திரை எடுத்து முழிங்கிட்டு அப்பாடா அப்படி என்று பெருமூச்சுவிட்ட, அப்பறம் ஓய்வு அறைக்கு சென்று வந்து, என் பக்கத்துல படுத்துகிட்ட.
மறுநாள் காலையில நீ கீழே போன உடனே அந்த மெடிசின் டப்பாவை பார்த்தேன் ஏதோ எனக்கு உன்மேல சந்தேகமா இருந்தது அதனால தான் அந்த மாத்திரையை போட்டோ எடுத்து கூகுள்ல போட்டு பார்த்தேன்.
அப்ப தான் எனக்கு தெரிஞ்சது அந்த மெடிசன் கருத்தடை மாத்திரை குழந்தைகள் உருவாக்க தடுக்கிற மருந்து என்று, உன்கிட்ட பேசி சண்டை போட என்னால முடியல, குழந்தை உருவாகட்டும் அப்புறம் பேசிக்கலாம்னு நினைச்சு தான் மாத்திரையை மாற்றி வைத்தேன்” என்றான்.
அமைதியாக இருந்தவளுக்கு கோபம் தான் வந்தது அவன் மேல்.
அன்றே என்னிடம் கேட்டிருக்க வேண்டியதுதானே எவ்வளவு பிளான் போட்டு இப்பொழுது என்னை பெரிய பாவியாக ஆகிவிட்டானே என்று.
அவள் யோசிப்பதை பார்த்தவன் “நீ யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்ல அமைதியா இரு நல்லா சாப்பிடு உன் வைத்துல உள்ள குழந்தை நீ பார்த்துக்கோ, ஆத்வீக்கையும், சாத்வீக்கையும் நாங்க பாத்துக்கிறோம், நீ உன் வயித்துல வளருர குழந்தையை பார்த்துட்டு நிம்மதியா பிள்ளை பெத்து கொடு போதும்” என்றான்.
“எப்படி உங்க பிள்ளைக்காக, என் அக்கா பிள்ளைகளை நான் பார்க்க கூடாதா,, அவங்க என் பிள்ளைங்க, நான் தான் அவங்களை பார்த்துப்பேன், ஆத்விக்கும் சாத்விக்கும் தான் எனக்கு முக்கியம்” என்றாள்…
“நான் உன் அக்கா பிள்ளை என்று சொல்லவே இல்லை. உன் பிள்ளை என்று தான் சொன்னேன் நீ தான் அடிக்கடி அக்கா பிள்ளை அக்கா பிள்ளை என்று சொல்லி உன் பிள்ளைகளை நீயே பிரிச்சு பேசுற” என்றான்.
“நான் ஒன்னும் பிரிச்சு பேசல நீங்க தான் எங்க எல்லாத்தையும் பிரிக்கறதுனால தான் நான் அப்படி சொன்னேன்” என்றாள்..
“மொழி நான் சொல்றத புரிஞ்சுக்கோ பிள்ளைங்க, நம்ம பிள்ளைங்க புரிஞ்சுதா எனக்கு இன்னொரு குழந்தை உன் மூலமா வேணும் அவ்வளவுதான் இதுல உன் அக்கா குழந்தை, என் குழந்தை என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது இந்த மூன்று பிள்ளைகளும் நம்ம பிள்ளைங்க புரிஞ்சுதா உனக்கு”.
“எனக்கு இந்த குழந்தை வேண்டாம்” என்றால் அடமாக.
“எனக்கு இந்த குழந்தை வேணும், பெற்று கொடுக்கத்தான் வேண்டும் நீ, குழந்தையை அளிக்கணும்னு நினைச்ச உன்ன கொன்னே போட்டு விடுவேன்” என்றான்.
“அப்போ என்மேல் அக்கறையில் இல்லை, நான் செத்தாலும் உங்களுக்கு குழந்தை பெத்து கொடுக்கணும் அப்படித்தானே”?.
“லூசுத்தனமா பேசாத, நீ என் பொண்டாட்டி டி என் வாழ்க்கையை நீதான், ஏன் இப்ப கிறுக்குத்தனமா பேசுற அது நம்ம குழந்தை டீ அது ஒரு உயிர், நீ, நான் நாம வாழுற வாழ்க்கைக்கு அவ தாண்டி சாட்சி, அமைதியா இரு மனச ரிலாக்ஸ் வச்சுக்கோ, யோசி, சாத்வீக்கையும், ஆத்வீக்கையும் நாம நல்லா பாத்துக்கலாம்” என்றான்.
“எனக்கு பயமா இருக்கு ரிஷி என் பிள்ளைகள் என்னை வெறுத்திடுவாங்களோ, என்னை அவங்க சித்தி என்று சொல்லிவிட்டாள் அதை என்னால் தாங்கவே முடியாது.