Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 17 4

 நாளைக்கு எனக்கு குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கவனிச்சுக்கிட்டு என் பிள்ளைகளை நான் கவனிக்க முடியாம ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது ரிஷி என்னை புரிஞ்சுக் கோங்க ரிஷி, என்னால முடியாது” என்றாள்.

 “எத்தனை பிள்ளை வந்தாலும் ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் சமம் தான், அதை நீ புரிஞ்சுக்கோ. நாமா சேர்ந்து நம்ம பிள்ளைகளை வழக்கலாம் டா, பீல் பண்ணாத,



Advertisement

உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, நம்ம பிள்ளைகளுக்கு நீ சித்தியின்னு தெரியவராது.

அப்படி தெரிஞ்சாலும், நான் சமாளிப்பேன், அவங்களுக்கு சொல்லி புரியவைப்பேன்'” என்று மொழியை பேசி சமாதானம் பண்ணினான்.

Advertisement

Advertisement

மொழிக்கு   ரிஷி சமாதானம் பண்ணியதும் கொஞ்சம் யோசித்தாள்,  ரிஷி சொல்வது சரியென்று தோன்றியது, இருந்தாலும் ஒரு சிறிய பயம் இருந்தது,.

 ரிஷி அவளை சமாதான பண்ணியவன் ஹாஸ்பிடலுக்கு அழைத்து  வந்திருந்தான்.

Advertisement

 டாக்டர் செக் பண்ணி பார்த்துவிட்டு “பேபீஸ்  நல்லா இருக்காங்க கவனமா பாத்துக்கோங்க, கொஞ்சம் பிபி தான் இருக்கு அதுக்கு மாத்திரை எதுவும் தேவையில்லை ரிலாக்ஸா இருந்தா போதும், நல்லா ஹெல்தி உணவா  சாப்பிடுங்க,  வேற எந்த பிரச்சினை இல்லா” என்று மருந்து கொடுத்து அனுப்பினார்.

 வீட்டுக்கு வந்தது மொழியிடம் சமாதானம் பண்ணி அவளைக் கொஞ்சி,  அவன் அணைப்பிலே வைத்திருந்தவன்,  “உனக்கு இந்த குழந்தை வேணாமடி நீயும் நானும் சேர்ந்து ஒரு குழந்தை பெத்துக்கிறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து கொஞ்சி அவளை சமாதானம் பண்ணி தூங்க வைத்து விட்டு, பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தான்.

 மொழி நன்றாக தூங்கி கீழே வந்தாள் அப்போது வீட்டில் யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து ரிஷி பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தான்.

 பிள்ளைகள் மொழியை பார்த்தவுடன் “மம்மா,” என்று  அவளின் இரு பக்கம் சென்று அமர்ந்து கொண்டு “பேபி எப்பம்மா வரும் மா” என்று கேட்க.

 மொழி அவர்களை பார்த்து சிரிக்க.

 ரிஷி  சொல்லி இருந்தான்  “இன்னும் 7 மன்த்ல  பேபி வந்திரோம் டா” என்று..

பிள்ளைகள்  “குட்டி பாப்பா  எப்ப வரும் மா, பாப்பாவுக்கு நாங்க டாய்ஸ் கொடுப்போம்”  என்று  மொழியிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்..

 ஒரு மாதம் கழித்து ஆத்வீக், சாத்வீக் ஸ்கூலில் பேரண்ட்ஸ் மீட்டிங்கிற்கு  சென்று இருந்தாள்  மொழி.

 அவளை  தனியாவிட கூடாது என்று ரிஷியும் கூட வருவதாக   இருந்தது, கடைசி நேரத்தில் ரிஷிக்கு தவிர்க்க முடியால  வேலை வந்து விட,  மருமகளோடு ராமமூர்த்தி வந்திருந்தார் மீட்டிங்கிற்கு..

 பேரன்ட்ஸ் ஒவ்வொருவராக  வர..

 பேரண்ட்ஸ் மீட்டிங் முடித்து விட்டு பிள்ளைகளோடு  கிளம்பி இருந்தனர்.

 மொழி கொஞ்சம் தாமதமாக தான் வந்திருந்தாள், வரும் போது டிராப்பிக் ஆகி  விட மீட்டிங் முடிந்து  பாதி பேர் கிளம்பி இருந்தார்கள்.

 ஆத்விக்கும் சாத்விக்கும் பிரண்ட்டோடு  சிரித்துக்  பேசி கொண்டு  கொண்டிருந்தனர்.

 மொழி டீச்சர் மீட்டிங் அட்டென்ட் பண்ண, மொழியிடம் ஆத்விக், சாத்விக்  டீச்சர்  இருவரும் நன்றாக படிக்கிறார்கள் நன்றாக ஆர்வம் உள்ளது டிராயிங்,  ரைம்ஸ் என்று அனைத்தும் அவர்கள் நன்றாக செய்கிறார்கள்.

 பிள்ளைகளோடு நன்றாக பழகிகிறார்கள் பிள்ளைகளோடு அனைத்தும் ஷேர் செய்து கொள்கிறார்கள்,  நீங்கள் கூட்டு குடும்பமாக இருக்கிறீர்களா என்று கேட்க ஆமாம் என்றால் மொழி.

 வெரி குட் ஆத்வீக்கன் சாத்வீக்கும் ரொம்ப நல்ல பிள்ளைங்க  என்று பாராட்டினார் அவரின் ஆசிரியர்.

பேரன்ஸ் மீட்டிங் முடிஞ்சது நீங்க பசங்களை அழைத்து செல்லலாம் என்று டிச்சர் கூற.

சரி என்று மொழியும், ராமமூர்த்தியும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கிளம்ப…

 ஆத்விக்கும்,சாத்விக்கும் ‘தர்ஷன் மட்டும் இருக்கான் அவனை அழைத்துக்  செல்வோம்” என்று கூற.

 மொழி  டிச்சரிடம் கேட்டால் “இந்த பையனோட பேரண்ட்ஸ் வரலையா”? என்று.

“அவங்க எந்த மீட்டிங்கு வர மாட்டாங்க மேடம்,  இருங்க அவங்க அப்பாக்கு கால் பண்றேன்” என்ற கால் பண்ண தர்ஷனோட  அப்பாவை போனை எடுக்கவில்லை.

 “போன் எடுக்கல மேடம்” என்றார்  டீச்சர்..

“நாங்க வேணா அந்த பையனை அவங்க வீட்ல டிராப்  பண்ணிடட்டுமா”? என்றாள்  மொழி.

 “ஓகே மேம் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவர்

  ” இதில் ஒரு  சைன்  மட்டும் போடுங்க ” என்று மொழியிடம் சைன்  வாங்கிக் கொண்டு  தர்சனை அனுப்பி வைத்தார்.

 பிள்ளைகள் மூன்று பேரும் கைகளை கோர்த்துக்கொண்டு குதித்துக் கொண்டு வந்தனர் ராமமூர்த்தி கார் ஓட்ட முன்னாடி அமர்ந்திருந்தாள் மொழி மூன்று பிள்ளைகளும் பின்னாடி அமர்ந்து கொண்டு சிரித்து பேசிக்கொண்டு வந்தனர்.

 “மா ஐஸ் கிரீம்,  ஐஸ் கிரீம்” என்று பிள்ளைகள் சொல்ல மூன்று பேரையும் ஐஸ்கிரீபார்லர்  அழைத்து சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தவள் தர்ஷன் வீட்டுக்கு வந்தாள்.

 வீடு  உள்பக்கம் பூட்டி இருந்தது.

 ராமமூர்த்தி காரிலே இருக்க தர்ஷனையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, மொழி தான் அவர்கள் வீட்டுக்கு முன் வந்தாள்.

 மொழி பத்து நிமிடமாக காலிங் பெல் அடிக்க வீடு திறக்கவே இல்லை.

 ஒருவேளை தூங்கிவிட்டாரோ என்றவள் “சித்தி போன் நம்பர் சொல்லு” என்று தர்ஷனிடம் கேட்க.

 “சித்தி போன் நம்பர் தெரியாது, அப்பா போன் நம்பர் தான் இருக்கு” என்று ஐடி கார்டு எடுத்துக்காட்ட.

 ஐடி கார்டில் உள்ள போன்  நம்பரை பார்த்து  மொழி போன் பண்ண.

 உடனே எடுக்கப்பட்டது போன்..மொழி அவரிடம் விஷயத்தை சொல்ல “இதோ 10 மினிட்ஸ் வந்துவிட்டுகிறேன்” என்று தர்ஷனுடைய  அப்பா10 நிமிடத்தில் ஓடி வந்திருந்தான்.

 “ஏன் எல்லாரும் வெளியே நிக்கிறீங்க” என்று தர்சனுடைய அப்பா கேட்க.

 “பெல் அடிச்சும்  கதவு திறக்கல” என்றால் மொழி..

 தர்ஷனுடைய அப்பாவும்  வீட்டின்  பெல் அடிக்க,  பெல் நீண்ட நேரம் அடித்தும் கதவை திறக்கவே  இல்லை.

உடனே தன் இரண்டாவது மனைவிக்கு போன் செய்தான்.

 ஒரு ஐந்து நிமிடம் கழித்து  கதவு திறக்கப்பட்டது.

 தூக்க கலக்கத்தில் ஒரு குண்டான பெண் வந்து நின்றாள்.

 “கதவை பூட்டிவிட்டு என்ன பண்ற பையன் வருவான்னு  தெரியாதா” என்று  தர்ஷனின்  அப்பா   சத்தம் போட..

அங்கிருந்து அனைவரையும்  பார்த்து  முறைத்தவள், தர்ஷனை  பார்த்து “இந்த சனியனை கொண்டு போய் ஹாஸ்டல்ல போடுனா என் உயிரை வாங்கிட்டு  இருக்க, சும்மா, சும்மா பெல் அடிச்சு  என் தூக்கத்தை கெடுக்கிற” என்று அவரின் மனைவி  கத்த.

 தர்ஷனின் அப்பாவும் கத்தி இருந்தார் “என் பொண்டாட்டியோட தங்கச்சின்னு உன்ன கல்யாணம் பண்ணேன்  பாரு என்னை செருப்பால அடிக்கணும்”  என்றான்.

 “உன்னை யாரு என்ன கல்யாணம் பண்ண சொன்னது” என்றால் அவளும் சண்டைக்கு நின்றபடியே.

 தர்ஷன் அரண்டு போய் அவன் தந்தையும் காலை கட்டிக்கொள்ள.

 தர்ஷனை தூக்கி தோளில் வைத்தவன். “நல்லா தான்டி தர்சனை பார்த்துக் கொண்டு இருந்த, அப்புறம் என்னடி ஆச்சு உனக்கு, உனக்குன்னு  ஒரு  குழந்தை பிறந்த உடனே உன் புத்திய காட்டிட்டு அப்படித்தானே” என்றான் தர்ஷனின் தகப்பன்…

 “ஆமா அப்படித்தான்,  என் பிள்ளையை  தான் என்னால  பார்க்க முடியும், என்  அக்கா பிள்ளைகளை  எல்லாம் பார்த்து வளர்க்க முடியாது நீ இருக்க தானே நீயே வளர்க்க வேண்டியது தானே ” என்றவள் தர்ஷனை இழுத்துக் கொண்டு சென்றாள்,  எல்லாம் இந்த சனியனால வந்தது என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!