தர்ஷனின் தகப்பன் மொழி இடம் “நன்றி மா பையனை கொண்டு வந்து விட்டதுக்கு,,” என்றான்.
“அய்யோ உங்க வெய்ப் குழந்தையை அடிக்கப் பார்த்துக்கோங்க” என்று சொல்ல.
Advertisement
“அவ தினம் அவனை அடிக்கிற, நான் எவ்வளவு சொல்லியும் அவ கேக்கல என் பொண்டாட்டி ஆக்சிடன்டல செத்துப் போயிட்டா அவ தங்கச்சி என் குழந்தை நல்லா பார்த்துப்பா என்று நான் அவளை கல்யாணம் பண்ணேன்.
Advertisement
Advertisement
அவளும் நல்லா தான் பாத்துக்கிட்டா என்னைக்கு அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது, அன்னையிலிருந்து என் பிள்ளையை அவ சரியா பாத்துக்கிறது இல்லை, ஏன் கேட்டா குழந்தையை அடிப்பா” என்று … அவன் புலம்ப..
மொழி தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்
என்று பிள்ளைகள் பேச மொழி அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டு வந்தாள்.
அவள் மனதில் பெரிய பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது,
நானும் இப்படித்தான் ஆகிவிடுவேனோ என் பிள்ளையை பார்த்துக் கொண்டு ஆத்வீக்கையும், சாத்வீக்கையும் விட்டு விடுவேனோ என்று மனதில் தேவையில்லாததை நினைத்து வருந்தினாள்.
மனதில் தர்ஷனுடைய அப்பா சொன்னதை நினைத்தாள்,
அவளுக்கு குழந்தை வர்ரத்துக்கு முன்னாடி தர்ஷனை நல்லா தான் பார்த்துக்கொண்டாள். அவளுக்கு எப்போ ஒரு குழந்தை வந்துச்சு அன்னையிலிருந்து என் பையனை கொடுமை படுத்துற, அடிக்கிற என்று சொன்னது அவள் காதில் விழுந்து கொண்டே இருக்க..
பழைய யோசனை அவளுக்கு மீண்டும் தலை தூக்கியது இந்த குழந்தை வேண்டும் என்று…
அன்று மிகவும் சோர்வாக இருந்தாள் மொழி பிள்ளைகளை உண்ண வைத்து தூங்க வைத்துவிட்டு அவள் அறைக்கு வந்து யோசித்த படியே படுத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவளை பின்னிருந்து ஒரு கரம் அணைத்து தூக்கியது.
யார் என்று உணர்ந்தவள் அமைதியாக இருக்க.
“ஏய் மல்கோவா தூக்கமா” என்றான் ரிஷி.
“இல்லை” என்று அவள் தலையாட்ட.
அவளை அணைத்து முத்தமிட்டவன் அவளிடம் ஒன்றி, ஒரு கூடலை முடித்தவன். மீண்டும் அவளை அனுக மொழி எதுக்கும் தடை சொல்லவில்லை.
ரிஷி அவளை திருப்தியாக அனுபவித்து விட்டவன்,
அவளைத் தன் மார்பில் போட்டுக் கொண்டு.
“நாம் எங்கேயாவது போலாமாடி” என்றான்.
“ம்ம்ம்” என்று தலையாட்டி இருந்தாள் மொழி.
அப்ப நாளைக்கு போகலாம் என்றான் ரிஷி.
எங்கே என்றால் மொழி.
” இங்க பக்கத்தில் தான் டூ டேஸ் எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லாம நீயும் நானும் மட்டும்” என்றான்.
“ஐயோ பிள்ளைங்க தேடுவாங்களே” என்றால் மொழி.
“அவங்களை அம்மா அப்பா பாத்துப்பாங்க நீ வாடி” என்றான்.
“போங்க ரிஷி பிள்ளைகள் வந்தால் நானும் வருவேன் இல்ல நானும் வரமாட்டேன்% என்றாள் மொழி.
“மொழி புரிஞ்சுக்கோ எனக்கு பிசினஸ் டென்ஷன், ரொம்ப டிப்ரஷனா இருக்கு, ஒரு இரண்டு நாள் உன் கூட நான் தனியா என்ஜாய் பண்ணனும்.. நீ எனக்கு மட்டுமே இருக்கணும்,
நீதாண்டி என்னுடைய எனர்ஜி பூஸ்டர், உன்னை நல்லா கொஞ்சி ரொம்ப நாளாச்சு டி, அமுல் பேபி, நீ ரொம்ப நேரம் எனக்கு வேணும், அது இங்க முடியாது, அதுக்கு தான் தனியா இரண்டு நாள், உன்னை என் கைகுள்ளே வச்சு ஆச தீர கொஞ்சி தீர்க்கனுமடி போலாமா”, என்றான்.
மொழி அவனை முறைத்து பார்த்தவள், “இப்போ மணி 2, சார்.. பத்து மணியில இருந்து என்னை கொஞ்சிட்டு இருக்கீங்க இது போதாத உங்களுக்கு” , என்றாள்.
“எனக்கு போதாது டி, குழந்தை இருக்குன்னு, மெதுவா தாண்டி, உன் கிட்ட நடந்துக்கிறேன், இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா உன் வயிறு பெருசா ஆகிடும் இது கூட முடியாதுடி , அப்பறம் குழந்தை பிறந்துட்டா நாம எப்படி எல்லாம் என்ஜாய் பண்ண போக முடியாது மொழி, ஒரு டூ டேஸ்” என்று அவளிடம் கெஞ்ச.
“ஏய் வேணும்னே என்னை டென்சன் பண்றியா, பசங்க வளந்துட்டாங்க அவங்ககிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணு.
அம்மா, அப்பா பாத்துப்பாங்க அவங்களை, நீ எனக்கு வேணும், என்னை கவனி” என்றான்.
“பத்து மணியிலிருந்து உங்களை தான் கவனிச்சுட்டு இருக்கேன் என்னால பிள்ளைகளை விட்டு வர முடியாது, தனியா” என்றாள்.
“என்னடி ஓவரா சீன் போடுற முதல்ல உனக்கு நான் அப்புறம் தான் உனக்கு ஆத்விக்கும், சாத்விக்கும்” என்றான்..
தன் பக்கத்தில் இருந்த அவனை தள்ளி விட்டவள்..
“எனக்கு முதல்ல ஆத்விக்கும் சாத்விக்கும் தான் அப்புறம் தான், நீங்க எல்லாரும்” என்றாள்…
“உனக்கு நான் தான் முதல்ல அடுத்தது நமக்கு பிறக்க போற குழந்தை, அடுத்தது தான் ஆத்விக்கும், சாத்விக்கும்” என்றான்..
இருவருக்கும் பெரும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.
“கம்மிங் சாட்டர்டே, சண்டே என்கூட வர தனியா” என்றான்.
அவளோ அமைதியாக இருக்க.
“வாடி “என்று அவளை இழுத்து அணைத்து கொண்டு தூக்கினான்.
மொழிக்கு பயங்கர கோபம், இவனுக்கு என் உடம்பு தான் தேவை போல, என் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காதவனின் பேச்சை நான் ஏன் கேட்க வேண்டும்,..
எனக்கு குழந்தை பிறக்காத போதே, இவன் பிள்ளைகளை பிரித்து பேசுகிறான், நாளைக்கு எனக்கு பிள்ளைகள் பிறந்தால், என்னை ஆத்விக், சாத்விக்கிடமிருந்து பிரித்து விடுவானோ என்ற பயம் வந்தது.
அவளை மார்போடு அணைத்து தூங்கும் ரிஷியை பார்த்து கோபம் வர.
அவனை மெல்ல விலக்க பார்க்க.
அவனோ தூக்கத்திலும், அவளை இன்னும் நெறுங்கி அணைத்து படுத்தான்..
மொழிக்கு தூக்கமே இல்லை…
குழந்தை பிறப்பதற்கு முன்னாடியே இவன் என் அக்கா பிள்ளைகளை என்னிடமிருந்து பிரித்து வைக்கிறான், குழந்தை பிறந்து விட்டால் இவன் தன்னை, தனி குடித்தனம் கூட அழைத்து செல்வானோ என்று தப்பு, தப்பாக யோசித்தவள்.
மறுநாள் பிள்ளைகளை ஸ்கூலிற்க்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு.
ஹாஸ்பிடல் சென்று விட்டாள், அவளால் யாருக்காவும், எதற்க்காவும் ஆத்விக், சாத்விக்கின் மேல் உள்ள பாசத்தை பங்கு போட முடியாது, என்று முடிவு எடுத்தவள் ஹாஸ்பெட்டலுக்கு ஆபாசன் பண்ண செல்ல.
அங்கே குகனின் மனைவி இவளை பார்த்து விட.. மொழி இவளை பார்க்க வில்லை, அவள் டாக்டரின் அறையில் இருக்க.
வெளியே வந்த நர்ஸ்சிடம் கேட்டாள் குகனின் மனைவி, “அவங்க என் அண்ணி எதர்க்கு வந்து இருக்காங்க என்ன உடம்புக்கு” என்று அவள் கேட்க.
“மேம் அவங்க அபாஷன் பண்ண வந்து இருக்காங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் அபாசன் பண்ணிடுவாங்க, என்று அவள் சொல்ல அதிர்ந்து போனால் குகனின் மனைவி..
உடனே தன் கணவனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல.
அவன் உடனே தன் மாமனுக்கு அழைத்து விசயத்தை சொல்லி விட்டான்..
மொழியின் மேல் கொலவெறியோடு காரை ஓட்டிக்கொண்டு வந்தான் ரிஷி..