Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 4 1

நெஞ்சம் ஏங்குதே…



Advertisement

 அத்தியாயம் -4

Advertisement

Advertisement

 அந்த  ஆசியா  கண்டம்  நாட்டில் உள்ள கிரிக்கெட் கிரவுண்டில்  நடுராத்திரியில்   தீவிரமாக பயிற்சி செய்துகொண்டிருந்தாள் அருள் மொழி.

Advertisement

அவள்  தூக்கம் பறிபோகி பல மாதங்கள் ஆனது.

ரிஷியை  அவளால்  மறக்க முடியலவில்லை.

இருவரும் தங்கள்   காதலை பரிமாறி  கொள்ள வில்லை, அவர்கள் இருவரின் பார்வையே  எனக்காக நீ காத்திரு நான் வருவேன் என்று இருக்க..

இதோ அனைத்தும் தவறாகி  போனது.

ரிஷி மொழி நடுவில் அருள் ஜோதி எப்படி வந்தாள் என்று இன்னும் புரியவில்லை அருள் மொழிக்கு.

மொழிக்கு  ரிஷியை நினைத்து அழ கூட முடியவில்லை,  தன் கண்ணீர் அக்காவின் வாழ்க்கையை  பாதித்து விடுமோ என்று தன் வேதனையை  தன் மனதோடு அழுத்தி, அழுத்தி அந்த வேதனையை வெறியாக்கி தனிமையில் வெறி பிடித்தவள் போல கடுமையான பயிற்சி செய்து கொண்டிருந்தாள்  மொழி…

இவளோடு சேர்ந்து தேர்ந்தெடுக்க பட்ட, வட மாநிலத்தை  சேர்ந்த நிஷா இவள் பயிற்ச்சி  செய்வதை பார்த்து அருகில்  வந்து,

இவளை பார்த்து  சிரிக்க..

  தன்னை பார்த்த சிரித்து நிஷாவை பார்த்தவள்..

நடுராத்திரி இப்படி யாரும் இல்லா கிரவுண்டில் பயிற்சி செய்தால் சிரிக்காமல் என்ன செய்வாள், என்று பார்த்த மொழி அவளை கண்டு கொள்ளாமல் அவள் தீவிமான பயிற்சியில் ஈடுபட…

“ஹஸோ  மிஸ் மொழி, இப்பவே இப்படி பயிற்சி பண்ண காலையில என்ன பண்ணுவீங்க? ” என்றாள் ஒரு சின்ன சிரிப்போடு…

“காலையிலையும் பயிற்சி பண்ணுவேன், தூக்கம் வரல நிஷா”, என்றாள்,,..

“எனக்கும் தான்’ என்றவன்.

“நாம இங்கே  சப்ஸ்டிடிட் ,டாக வந்திருக்கிறோம்,  நான் 13 வது ஆள், நீ 14 வது  ஆள் நமக்கு மேலா இன்னும் ஒருத்தர் இருக்காங்க.

நமக்கு விளையாட வாய்ப்பு கம்மி மொழி, நம்மல விளையாடவும் விடமாட்டாங்க.

எதுக்கு தேவையில்லாம பயிற்சி பண்ணி உடம்பு கெடுக்கனும், ஏசி ரூம் படுத்தோமா, நல்லா சாப்பாட்டோமா, ஆசியா நாட்டை ப்பிரி டைமுல சுத்தி பார்த்தோம்ப என்று  என்ஜாய் பண்ணு மொழி” என்றாள், நிஷா.

“நீ அதுக்குத் தான்  இங்கே வந்தீயா” என்றாள் மொழி நிஷாவை பார்த்து…

“உனக்கு இது தானே முதல் மேச் நீ அப்படி தான் பேசுவா, நான் இரண்டு வருஷமா இருக்கேன் கிரிகெட் டீமுல, என்னை பிரேக்கில் விளையாடுற பொண்ணுகளுக்கு, கூல்டிரிக் கொடுக்கவும் அவங்களுக்கு சூலேஸ் கட்டி , மாட்டவும் தான், கிரவுன்டு குள்ள அனுப்பு வாங்க, நானு உன்ன மாதிரி வந்த புதுசுல இதே மாதிரி வாய்ப்பு தருவாங்கன்னு தீவிரமா  பயிற்சி பண்ணி ரெடியா இருப்பேன்,  ஒன்னும் நடக்காது வேடிக்கை பார்த்துட்டு இருக்க வேண்டியது தான்.

ஏதாவது டெஸ்ட் மேச் தருவாங்க, அதுவும் கடைசி சில ஓவர்களில், நம்ம திறமையை எப்படி காட்டுறது, நான் எவ்வளவு பெரிய பேட்ஸ் மேன் தெரியுமா மொழி, இரண்டு வருஷமா என்ன சும்மாவே வச்சு இருக்காங்க வாய்பே தரலா”  என்று நிஷா புலம்ப..

“கண்டிப்பா ஒரு வாய்ப்பு வரும் நிஷா, அப்போ உன் திறமை காட்டு, ஏன் இப்படி விரக்தியா பேசுற.

நாம டீமுல செலக்ட் ஆனதே பெரிய விசயம், எத்தனை பேர் வாய்ப்பு கிடைக்காம இருக்காங்க.

பெண்கள் கிரிக்கெட்  ஓல்டு கப் மேச்ல செலக்ட் ஆனதே நம்ம திறமைக்கு கிடைச்சா  பெரிய அங்கிகாரம் நிஷா, கண்டிப்பா நமக்கு ஒரு வாய்ப்பு வரும், அப்போ நம்ம திறமை காட்டு  வோம் வா,” என்று நிஷாவை பயிற்சி பண்ண அழைக்க.

சிரித்த நிஷா, “நீ சொல்லுறது சரிதான், மொழி” என்று இரு பெண்களும் தீவிரமாக அந்த இரவில் பயிற்சி செய்து கொண்டிருக்க,..

இதை இவர்களின் கோச் ஒருவர் அவர் அறையில் இருந்து பார்த்திருந்தார்…

ரிஷி, அருள்ஜோதி ரிஷப்சன் நன்றாக முடிந்தது,.

அருள்  ஜோதி வீட்டார் இரவே கிளம்பிவிட.

அருள்ஜோதிக்கு கஷ்டமாக இருந்தது பெற்றோரை பிரிய.

குகன் கிளம்பும் போது அக்காவை அணைத்து கண்கலங்க, ஜோதிக்கு மனது பாரமானது.

அமைதியாக அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

சுதா  மகனுக்கும், மருமகளும் சுத்தி போட்டார்.. இருவரின் பொறுத்தம் அவ்வளவு அழகாய் இருந்தது, பல பேர் இவர்கள்  ஜோடி பொறுத்தத்தை  பற்றி பேச.

சுதாவுக்கு பயம் எங்கே மகன், மருமகளுக்கு கண்ணு பட்டு விடுமோ என்று, இருவரையும்  நிக்க வைத்து சுத்தி போட்டவர், “போய் குளிச்சிட்டு தூங்குங்க” என்று அவர்கள் அறைக்கு அனுப்பி விட..

அப்போது தான் அருள் ஜோதி தன் கணவனை பார்த்தாள், அவன் முகன் இறுக்கமாக இருக்க.

என்னா  ஆச்சு இவருக்கு என்று யோசித்தவள்,  இருவரும் அவர்கள் அறைக்கு சென்று கதவை சாத்த.

ரிஷி அமைதியாக சென்று கட்டிலில்  தலையை பிடித்த படியே அமர்ந்து விட்டான்.

 தலை வலியா இருக்குமோ  என்று நினைத்தவள்.

அவன் அருகில் சென்று “அத்தான் தலை வலிக்குதா” என்றாள்.

அவன்  அவளை நிமிர்ந்து பார்க்காமல் “இல்லை” என்று தலையாட்ட.

என்னாச்சு இவருக்கு, நம்ம ரூம்புக்குள்ள வந்தாலே, கட்டி பிடிச்சு கொஞ்சுறவன், இன்னைக்கு ஏன் இவ்வளவு அமைதியா இருக்கான், என்றவள்.

அந்த அறையிலே,  அவள் அணிந்திருந்த  அந்த கனமான லெகங்காவை  மாற்றி, வேற உடையணிந்து பாத்ரும் செல்ல.

அதை அவன் கவனிக்கவே இல்லை,..

என்னாச்சு இவனுக்கு, நான் ஊடை மேல கை வைத்தாலே அட்டை போல தன்னை ஒட்டிக்கொள்பவன், அவளை ஊடை மாற்றவிடமால் அவனே அதை செய்து, அவளிடம் சில்மிஷம் செய்யும், ரிஷிக்கு என்ன ஆனது, என்று யோசித்தபடியே குளித்து வந்தவள், அவனின் பக்கத்தில் அமர.

தள்ளி அமர்ந்தான் ரிஷி.

அருள்ஜோதிக்கு அவனின் செயல் வேதனை தர.

“என்னாச்சு  அத்தான் உடம்பு சரியில்லையா” என்றவள். அவனை தொட்டு பார்க்க.

அவளின் கைகளை விலகி விட்டவன், எழுந்து விட்டான்.

அருள் ஜோதி அமைதியாக   ரிஷியை பார்த்தாள்.

அவனோ அந்த ரூம்பில்  ஏதோ யோசித்துக்கொண்டே நடந்தவன்..

“நீ” என்று அருளை பார்த்தவன். எப்படி இவளிடம் பேசுவது, எதில் இருந்து  ஆரம்பிப்பது என்று யோசித்தவன்,.

“மொழி யாரு”?  என்று அருள் ஜோதியை பார்த்து கேட்க .

அருளுக்கு வேர்த்து கொட்டியது.

கையை பிசைந்து கொண்டவள் இவனுக்கு மொழியை பற்றி தெரிந்து விட்டதா என்று நினைத்தவள்.

அமைதியாக இருக்க.

“மொழி யாரு”? என்றான் கர்ஜனையாக.

அவள் பேசவேயில்லை அமைதியாக இருக்க..

“அப்போ மொழியை பத்தி உனக்கு தெரியாது, அப்படித்தானே” என்றான் ரிஷி..

அவளுக்கோ பயத்தில் கண்ணீல் இருந்து கண்ணீர்  கொட்ட.

“அழுதா கொன்னுடுவேன் பதில் சொல்லு மொழி யாரு”?. என்றான்.

அழுகையை கட்டு படுத்தியவள், “என், என் தங்கச்சி” என்றாள் திக்கி தினறி..

 ” உனக்கு  தங்கச்சி இருக்கிறதா என்கிட்ட இவ்வளவு நாளா  நீ ஏன்  சொல்லல “… என்றான்

அவளோ  பயத்தில் ஏதாவது பேசி பிரச்சனையாகி விட கூடாது என்று அமைதியாக இருந்தவள், பின்பு அழக்கூடாது, என்று தன் கண்ணீரை துடைத்தவள்…

“அவ” என்று ஏதோ சொல்ல வர.

“ஒரு நிமிஷம்” என்று அவளை தடுத்தவன்.

“நீ  முதல், முதலில் என்னை எங்க எப்போ  பார்த்த சொல்லு” என்றான்.

அவனுக்கு உண்மை தெரிந்தாகனும், என்ற முடிவோடு அவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க…

“சொல்லு உண்மையா மறைக்காம சொல்லு”, என்றான்.

அருள் ஜோதிக்கு எந்த பயமும் இல்லை,  உண்மையை சொல்ல ஏன் அவள்  பயப்பட வேண்டும் என்றவள்.

அவன் முன்னாடி  வந்து நின்றவள்.

 “என்ன கேட்கணுமோ கேளுங்க பதில் சொல்றேன்” என்றாள் கண்ணை துடைத்த படியே.

 “என்ன முதலில் நீ எப்ப பார்த்த”?..

 “செல்லம்மா பாட்டி வீட்டு பால்கனியில தான்  முதன் முதலாக உங்களை நான் பார்த்தேன், நான் நடந்து கோவிலுக்கு போகும் போது என்னை பார்த்து சிரிச்சு கை காட்டுனீங்க..” என்றாள்.

 “இரண்டாவது உங்களை  அதே பால்கனியில வச்சு தான் உங்களை  பார்த்தேன்.

 என்னை பார்த்து கண்ணடிச்சு சிரிச்சீங்க வீட்டுக்குள்ள வா அருள் எங்க போறன்னு கேட்டீங்க,..

 எனக்கு நீங்க கண்ண அடிச்சதும் வெட்கம் வந்துச்சு பயந்துகிட்டு கோயிலுக்கு போயிட்டேன்..

 கடைசியா  நான் உங்களை  கோவில் திருவிழாவில் பார்த்தது,  கடையில் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன் நீங்க என் பக்கத்துல வந்து அந்த கடையில  நான் ஆசைப்பட்ட வளையலை  வாங்கி என் கையில் கொடுத்தீங்க, எனக்காக காத்திரு நான் கண்டிப்பா வருவேன்னு , உன் கழுத்துல  தாலி கட்டுவேன்னு சொல்லி கிளம்பிட்டீங்க, போதுமா இது தான்  நமக்குள்ள நடந்த விசயம்” என்றாள்.

ரிஷி தலையை பிடித்த படியே சோபாவில் உட்கார்ந்து விட்டான்.

நான் மொழியை பார்த்து பேசி, பழகி  ஆசை பட்டு, அதை அருள் ஜோதியிடம் சொல்லி சென்றிருக்கிறேன்,..

ஐயோ என்று கத்த வேண்டும் போல இருந்தது, அருள் என்று பெயரால் அவன் ஏமாந்து போனான்.

பாவி உன் பெயர் என்ன வென்று கேட்டதுக்கு அருள் என்றாலே தவிற, அருள்மொழி என்று ஒரு வார்த்தை தன்னிடம் சொல்ல வில்லை மொழி, என்று அவளை திட்டி  யோசித்தவனுக்கு…

எனக்குத்தான்  தெரியாது  அவளுக்கு நான் யார் என்று தெரியுமே, பின்பு ஏன் இந்த கல்யாணத்தை நிறுத்த வில்லை அவள்,,

என் மீது பாசம் இல்லை, காதல் இல்லை ஏன்டி இப்படி என்னை ஏமாத்திட்ட மொழி என்று அவளிடம் மனதில் திட்டி  பேசியவன்.

அருள் ஜோதியை கவனிக்க வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!