“இல்லப்பா நான் வரலைப்பா” என்று ஒரே முடிவாக சொல்லி விட்டாள் அருள் ஜோதி..
வருத்தமாகத்தான் திருநெல்வேலி வந்து சேர்ந்தார்கள் ஐயப்பனும், தேவகியும்..
Advertisement
பின்பு அருள்ஜோதியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட மாமனார், மாமியாரை எப்படி பிரிந்து வருவாள்..
அருள்ஜோதி மாசமாக இருந்த நாள் முதல் காலையில் எழுந்ததும் ராமமூர்த்தி மருமகளுக்கு ஆரஞ்சு ஜூஸ்சை பிழிந்து விட்டே மருமகளை அழைப்பார்,, எழுந்ததும் மருமகள் கையில் பெரிய கிளாஸ் ஜூசை கொடுப்பார்..
Advertisement
Advertisement
கொடுத்த ஒரு மணி நேரத்தில் டிபன் எடுத்துக் கொண்டு வந்து நிற்பார் சுதா..
மருமகளை பார்த்து பார்த்து கவனித்தார்கள், அருள்ஜோதியின் முகம் கொஞ்சம் சுருங்கினால் போதும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்று விடுவார்கள்..
Advertisement
பார்க், பீச்,மால் என்று அவளை அழைத்துக் கொண்டு சுத்துவார்கள் அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுப்பார், அவள் கேக்குறதுக்குள் அனைத்தையும் வாங்கி கொடுப்பார்கள் மருமகளை சந்தோஷமாக வைத்திருந்தார்கள் இருவரும்..
ரிஷியை அதிகம் தேடாமல் இருக்க, இவர்களும் ஒரு காரணம் …
நாட்கள் மாதங்களாக செல்ல.. இதோ அருள்ஜோதிக்கு ஆறாவது மாதம் முடிந்து ஏழாவது மாதம் வந்திருந்தது..
அருள்மொழி நன்றாக விளையாடிக் கொண்டிருந்தாள்..
ஓல்ட் கப் முதல் மூன்று மேட்ச் ஜெயித்த இந்தியன் டீம், அடுத்த இரண்டும் மேச்சும் தோற்க்க..
காரணம் அறிந்த கோச் அருள் மொழியையும்,நிஷாவையும் இந்தியன் கிரிக்கெட் டீமில் சேர்த்து இருந்தார்..
இதுக்காகத்தான் காத்திருந்தது போல இருவரும் நன்றாக அடி சூப்பர் சிக்ஸ்க்கு தகுதி பெற்றது இந்தியன் டீம்..
அருள்மொழி நன்றாக பௌலிங் ஆடி நிறைய விக்கெட் எடுத்திருந்தாள் அவளுக்கு பேட்டிங் க்கு சான்ஸ் கிடைக்கவே இல்லை..
நிஷா ஆடியோ போட்டிகளில் 50, 70 ரன்கள் எடுத்து அவளின் பெயரை நிலை நாட்டியிருந்தாள். பல வெற்றிகளுக்கு பிறகு..
இந்தியா, பாகிஸ்தானோட இறுதி போட்டிக்கு தயாராக இருந்தது..
மொத்த நாடே இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மேச்சை பார்த்துக் கொண்டிருந்தது….
இதோ பாகிஸ்தான் இறுதி இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயம் பண்ணியது 20 ஓவர்களில் 250 ரன் அடித்தார்கள் பாக்கிஸ்தான் வீரங்கனைகள்..
இந்திய 251 அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கினார்கள் இந்திய பேட்ஸ் பெண்கள்.
முதலில் நன்றாகத்தான் ஆடினார்கள் விக்கெட் அடுத்தடுத்து போக, நிஷாவும் களத்தில் இறங்கினாள். அவளும் ஆடி எப்படியோ 15 ஓவர்களில் 150 ரன் அடித்தனர்கள்.
இன்னும் இரண்டு விக்கெட் 5 ஓவரில் 101 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இருக்க..
களத்தில் இறங்கினாள் அருள்மொழி.
அனைவரும் சீட்டின் இறுதில் அமந்திருந்தனர் கண்டிப்பாக 30 பந்துகளில் 100 ரன் அடிப்பது பெரிய விஷயம்..
அதுவும் கடைசியாக வரும் இரு பௌளர்கள் என்ன செய்வார்கள் கண்டிப்பாக இந்தியா ஜெயிப்பது பெரிய விஷயம்,, கண்டிப்பாக ஜெயிக்க முடியாது என்று இந்தியர்கள் பலர் கிரவுண்டில் இருந்து வெளியே சென்று விட்டனர் இந்தியா கண்டிப்பா தோற்று விடும் என்று…
அவ்வளவு பிரஷர் அருண்மொழியின் மீது..
அவள் கூட இருக்கும், இன்னொரு ஆட்ட வீரங்கனை பவுலர் அவளுக்கு பேட்டிங் விளையாடவே தெரியாது.
என்ன செய்வது என்று யோசித்தால். அவளை கட்டி அணைப்பது போல அருகில் சென்று ரன் ஓட வரக்கூடாது நான் கைஅசைத்தாள் மட்டும் தான் நீ ஓடி வரவேண்டும். என்று அவளுக்கு கட்டளையிட “சரி” என்றாள் அந்த பெண்.
இதுவே இரண்டாவது முறையாக அருள்மொழி பேட்டிங் பிடிக்கும் மேச்.
அருள்மொழி பேட்டிங் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது ஆனால் நிஷாவுக்கு தெரியும்.
கிரவுண்டில் இருந்து கத்திக் கொண்டிருந்தாள் நிஷா “மொழி, மொழி மொழி, மொழி,மொழி,மொழி” என்று.
அங்கு உள்ள சகா போட்டியாளர்கள் கூட நிஷா கத்தியதும் ஏன் இவள் இப்படி கத்துகிறார் இவள் பவுலர் தானே! என்ன இவள் செய்துவிட முடியும் என்பது போல அவளை பார்க்க.
மொழி இந்த பக்கம் அந்த பக்கம் பார்த்தால் எந்த பக்கம் சிக்ஸ் அடிக்க என்று யோசித்தவள் கரெக்டா பால் வர இழுத்து அடித்தாள், அந்த பாலை.
போய் விழுந்தது பவுண்டரி தாண்டி.
அப்பாடா! அப்படி ஒரு சத்தம் கிரவுண்டில் அவள் சிக்ஸ் அடித்ததும்..
தோக்குறோமோ ஜெயிக்கிறோமோ அவள் சிக்ஸ் அடித்ததை பார்த்து கிரவுண்டில் உள்ள அத்தனை இந்தியர்களும் எழுந்து நின்று கைதட்ட…
மொழிக்கு வெறி சாதிக்க வேண்டும், அதற்கு ஜெயிக்க வேண்டும், அவள் வரும் பாலையெல்லாம் உன்னிப்பாக கவனித்து நிதனாமாக, ஒரு வெறியோடு ஆடினாள், ஜெயித்தே ஆகவேண்டும் என்று வெறியில் ஆடினாள்.
அவள் எதிரில் உள்ள பெண் ரன்கள் எதுவும் ஓடவில்லை ஒன்று ஃபோர் போனது, இல்ல சிக்ஸ் போனது..
அங்கே இருந்த அனைத்து இந்தியர்களும் சந்தோஷ கூச்சலிட்டனர்..
மூன்று ஓவர்களில் 80 ரன் எடுத்திருந்தாள் மொழி….
மொத்த இந்தியாவே திரும்பிப் பார்த்தது அருள்மொழியை.
யாருடா இந்த பொண்ணு எவ்வளவு நாள் எங்கடா இருந்த இவ.! என்ன பேட்ஸ்மேன் டா இவ என்று அனைவரும் மூக்கில் மேல் விரலை வைப்பது போல் பேசிக் கொண்டிருந்தார்..
12/20 ரன் அழகாக அடித்து விடுவாள் இந்த பெண், என்று அனைவரும் இந்தியா ஜெயித்து விடும் என்று குதித்துக் கொண்டிருந்தனர்..
ஒரு ஓவர் மாறிவிடும் போதும் இந்தப் பக்கம் இருந்த பேட்ஸ் மேன் அந்த பக்கம் செல்ல வேண்டும் “நீ 1 ரன் அடித்துவிட்டு இங்கு வந்துவிடு என்று அந்த போளருக்கு மொழி சொன்னவள் ரெடியாக இருக்க..
அவளோ ஆர்வக்கோளாறில் இழுத்து அடித்து விட்டாள், அதில் ஒருத்தர் அவள் அடித்த பந்தை கேச் பிடித்து விட ஒன்பது விக்கெட்டுகள் ஆனது .
இன்னும் ஒரே விக்கெட்.
போனால் இந்தியா தோற்றுவிடும் 10 பாலில் 20 ரன்கள்.
மொழி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் வந்த பேட்ஸ்மேனை பார்த்து ப்ளீஸ் எப்படியாவது ஒரு பால் அல்லது இரண்டு பால் அடித்துவிட்டு இந்த பக்கம் வந்து விடு,, நான் அந்தப் பக்கம் சென்று விடுவேன் ப்ளீஸ் மெதுவாக அடி என்று அவளிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாள்..
“சரி” என்ற அந்த பேட்ஸ்வுமேன் மெதுவாக ஆடவென்று இரண்டு மூன்று பல் அவளே வேஸ்ட் செய்து விட.
இதோ ஏழு பாலுக்கு 20..
மொழிக்கு நம்பிக்கை இருந்தது.
இரண்டு பால் அடித்தாள் மொழி, அவளால் ஓட முடியவில்லை மூன்று ரன்கள் மட்டும் எடுத்தனர்.
ஐந்து பாலுக்கு 17 ரன்கள்..
அடித்தால் வெற்றி என்றிருக்க..
இப்போது சிக்ஸ் ஒன்று..
இப்போது நான்கு பாலுக்கு 11 ரன்கள்.
மீண்டும் ஒரு பால் வேஸ்ட் செய்ய. அடுத்த அடித்தா பாலில்
பவுண்டரில் இல்லாமல் விட்டுவிட மூன்று ரன்கள் ஓடி இருந்தனர்..
இரண்டு பாலுக்கு 8 ரன்கள் இருக்க..
அந்த பவுலர் பெண் அந்த பக்கம் இருந்தால் தயவு செய்து இரண்டு ரன்கள் எடுத்தே ஆக வேண்டும் எப்படி செய்ய என்றவள்.
ஒரு ரன்னோடு நிறுத்திக் கொண்டனர் ஒரு பாலுக்கு ஏழு ரன்.
மொழி பேட்டிங் இடத்தில் நின்றிருந்தாள்,.
தன்னால் ஜெயிக்க முடியும் என்று மொழிக்கு தோன்ற, சிறு பயமும் இருந்தது.
அந்த பாக்கிஸ்தான் பவுலர் பயத்தில் பால் போட அது நோ பால்லாகி இருந்தது..
அப்படியே ஒரு ரன் இந்தியாவிற்கு கொடுத்து விட..
ஒரு பாலுக்கு ஆறு ரன் என்று இலக்கு இருக்க, மொழியின் கையில் தான் இந்தியவோடு வெற்றி, இதோ அவளின் எதிர்காலமே அவள் கையில் இருக்க.
அனைவரும் மொழிக்காக பிரார்த்தனை செய்தனர்..
நிஷா கண்களை மூடி தன் அல்லாவை வேண்டிக் கொண்டாள்.
மொழிக்கு வெறி ஜெயித்தே தீர வேண்டும், சிக்ஸ் அடித்தே தீர வேண்டும் என்று, தன்னை எத்தனை பேர் கேலி செய்திருக்கிறார்கள், தன் தாயே தன்னை எவ்வளவு திட்டி இருக்கிறார்கள் பெண்களுக்கு எதுக்கு கிரிக்கெட், என்ன செய்ய முடியும் உன்னால் ஜெயிக்க முடியாது என்று.
இதோ இதோ ஒரே பால் தன் தலையெழுத்தையும், தன் இந்திய நாட்டின் வெற்றியையும் உறுதியை செய்யும் ஒரே பால் பவுளர் போட.
பால் வந்த வேகத்துக்கு இழுத்து அடித்துவிட்டாள் மொழி, பால் பறந்தது, எங்கே எவ்வளவு தூரம் சென்றது என்று யாராலும் கண்டுபிடிக்கவில்லை ஸ்டேடியத்திற்கு மேலே சென்றது பால். கண்டிப்பாக அது சிக்ஸர் என்று சொல்லிவிட குதித்துக் கொண்டு ஓடி வந்தால் கிரவுண்டின்னுள் நிஷா.
தோழியை கட்டி அணைத்து தூக்கி சுத்தினாள்.
அனைவரும் மொழியின் மேலே சென்று விழுந்தனர் சந்தோஷத்தில்.
இந்தியா முழுவதும் செய்தி பறந்தது திருநெல்வேலி பொண்ணு,
பாகிஸ்தானை ஜெயித்து விட்டாள் என்று.
அனைவரும் வாயிலும் அருள்மொழி அருள்மொழி என்றே இருந்தது.
கோபப்பட்ட ரிஷியின் முகத்திலும் புன்னகை..
பரவாயில்லையே திறமைசாலி தான். என் அருள்மொழி என்றான் மனதில்.