லிப்ட் வசதி ஏதும் இல்லை ஆனால் அனைத்து வேலையும் முடிந்த மாதிரி தான் இருந்தது..
Advertisement
இரண்டு பிளாக் ஏறி இறங்கியவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை அப்படியே தலை சுற்றி அமந்துவிட்டாள் கீழே..
Advertisement
ரிஷி எங்கே இருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
Advertisement
ஆனால் அவள் மனதில் ஒன்று தோன்றியது ரிஷி இங்கே தான் இருக்கிறான் என்று.
Advertisement
ஐந்தாவது பிளாக்கில் தான் வேலை செய்து கொண்டிருந்தான் ரிஷி.
அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று மேற்பார்வை பார்த்திருந்தான்…
சாயங்காலம் போல் கீழே வந்திருந்தான்…
அங்கே வேலை செய்யும் சில பேர் வந்து அருள்ஜோதியிடம் பேச இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவர்கள் பேசுவதில் இவளுக்கு உதவி செய்ய வந்திருக்கிறார்கள் என்று புரிந்தும். இவள் நான் பார்த்துக்கிறேன் என்று கூறி இருந்தவள்.
தம் கட்டி எழுந்து இன்னும் இரண்டு பில்டிங் நடந்து பார்த்து வந்தாள்.
சத்தியமாக இதற்கு மேல் அவளால் முடியவில்லை அப்படியே அங்கே சோர்வாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்க..
அங்கே வேலை செய்யும் ஒரு வயதான பெண்மணி வந்து இவள் சோர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு தண்ணீர் கொடுத்தார்.
அதை வாங்கி வேகமாக குடித்தவள் நன்றியோடு அவரை பார்த்து நன்றி சொல்ல.
அவர் குஜராத்தில் “இங்கெல்லாம் இருக்கக்கூடாது போ” என்று அவளை விரட்டி இருந்தார்..
பின்னே கழுத்தில் நகை அணிந்து இருந்தவள் பார்க்க அழகாக இருந்தால் இந்த காலத்தில் மாசமாக இருக்கிறாளா, கிழவியா?, சிறு பிள்ளையா என்று யார் பார்க்கிறார்கள்..
இந்தப் பெண்ணுக்கு ஏதோ ஆபத்து வந்துவிடுமானோ என்று பயந்தவர் “போ வெளிய போ வீட்டுக்கு போ” என்று அவளை விரட்டி இருந்தார் அந்த பெண்மணி, அங்கே இருப்பவர் அனைவரும் ஆண்களே.. இவளுக்கு ஏதாவது கெட்டது நடந்து விட்டாள்..
தன்னை உக்கார கூட விடாமல் விரட்டிய அந்த பெண்மணியை பார்த்து கோபம் வந்தது அருள் ஜோதிக்கு..
அவர் இவளுக்கு நல்லது செய்ய தான் நினைத்தார்.
இதோ மீண்டும் அந்த பில்டிங் வாசலில் கேட்டின் ஓரத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்..
இப்படி வந்து அமர்ந்திருப்போம் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை..
ரிஷியை பார்க்க முடியாதா திரும்பி சென்று விடலாமா என்று நினைத்தாள்..
அப்போதுதான் இரண்டு கார்கள் அவளை கடந்து சென்றது.
அதில் ஒரு காரில் ரிஷியை பார்த்தாள் அருள் ஜோதி..
“அத்தான்” என்று சத்தமாக கத்தியவள் அந்த கார் போன திசையை நோக்கி ஓடினாள்..
கார் மிக வேகமாக தான் சென்றது அந்த ரோட்டில்.
டிரைவர் யாரோ பின்னாடி ஓடி வருவதை பார்த்தவர் ரிஷியிடம் “சார் ஒரு லேடி ஓடி வராங்க கார் பின்னாடி” என்று கூற.
அப்பொழுதுதான் மிரர் வழியா ஒரு பெண் ஓடி வருவதை பார்த்தான் ரிஷி. அது அருள் ஜோதி என்று அவனுக்கு முதலில் தெரியவில்லை பின்பு நன்றாக உத்துப் பார்க்க அது தன் மனைவி என்று தெரிந்த நொடி “ஸ்டாப் த கார்” என்றான்.
கார் நின்றதும் இன்னும் வேகமாக ஓடி வந்தாள் அருள் ஜோதி ..
இறங்கிப் பார்த்தவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது மிகவும் சோர்ந்து போய் குளிக்காமல், தூசி படிந்து, தலைக் கூட வாரமல் அலங் கோலமாக இருந்தாள் அருள்ஜோதி..
என் அருள் ஜோதி தானா இவள் என்றவன் வேகமாக அவள் அருகில் வர .
ஐயோ பரிதாபம் அந்தப் பக்கம் வேகமாக சென்று கொண்டிருந்த இருந்த லாரி ஒன்று அருள்ஜோதி மீது வேகமாக வந்து மோதி இருந்தது..
தூக்கி எறியப்பட்டாள் அருள் ஜோதி.
அவள் பின்னாடி அந்த வாச்மேனும் ஓடி வந்திருந்தான்.
ரிஷிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அப்படியே ஷாக் அடித்தது போல் ஜோதியை பார்த்தப்படியே நின்றிருந்தான்.
டிரைவர் ஓடி வந்து அவனை உழுக்க.
அப்பொழுதுதான் சுய நினைவுக்கு வந்தவன் “ஜோ”! என்று கத்திய படியே ஓடி வந்தான் அவளிடம்..
அதற்குள் அந்த வாச்மேன் வந்து அவளை தூக்கி தாங்கி பிடித்திருந்தான்.
உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் போட.
நோ தன் காரில் தூக்கி செல்வதாக சொல்ல..
அந்த வாட்ச்மேன் நீ யாரு இந்த பொண்ணுக்கு என்று ரிஷியை பார்த்து கேட்டான்.
ரிஷி அழுது கொண்டே என் பொண்டாட்டி என்று குஜராத்தில் சொல்ல.
மெல்ல கண் திறந்த பார்த்த ஜோதி அந்த வாட்ச்மனை பார்த்து சிரித்து மை ரிஷி என்று கை காட்டினாள் ரிஷியை.
உங்க பொண்டாட்டியா என்று கேட்க.
அவன் ஆமாம் என்று தலையாட்ட நேற்றில் இருந்து அவள் இங்கேதான் உங்களை தேடிக்கொண்டிருந்தாள் என்று சொல்ல.
அந்த நோடி செத்துவிட்டான் ரிஷி.
என்னைத் தேடி நேற்றே வந்து விட்டவளை நான் இந்த கோலத்திலா பார்க்க வேண்டும் ஐயோ என்று தலையில் அடித்தவன்.
அவளைக் தன் கையில் அள்ளிக் கொண்டு தன் காருக்கு ஓடினான்.
அவளோ மெல்ல முழிப்பதும் பின்பு கண்ணை மூடுவது எனறு மயக்கத்தில் தான் இருந்தாள்.
“ஜோ,ஜோ” என்று அவளின் கன்னத்தை தட்டியவன் டிரைவரை “வேகமாக போடா” என்று கத்தியிருந்தான்.
அருள் ஜோதிக்கு ரத்தம் அதிகமாக சென்று கொண்டிருந்தது தலையில், கையில், தோளில் என்று எங்கே இருந்தது ரத்தம் வருகிறது என்று ரிஷிக்கு தெரியவில்லை,, இப்படி அடி பட்டு விட்டதே, இவளை நான் எப்படி காப்பாத்துவேன் என்று அவன் கண்ணீரோடு அவளை பார்க்க..
அப்பொழுதும் அவனைப் பார்த்து மெல்ல இதழ் விரித்து சிரித்துக் கொண்டிருந்தாள் அருள் ஜோதி.
அவளின் வாயசைவு அத்தான் என்று ஒலித்தது..
“ஏண்டி இங்க வந்த”? என்றான் கண்ணில் நீரோடு..
அவளின் சிரிப்பு குறையவே இல்லை, ரிஷியை பார்த்த ஆனந்தத்தில் சிரித்தாள்.
அவளுக்கு தெரிந்துவிட்டது தான் பிழைக்க மாட்டோம் என்று, இருக்கும் வரை அவனை கண் குளிர பார்க்க வேண்டும் என்று கண்ணை திறந்து திறந்து அவனை பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டு வந்தாள்.
அந்த சிரிப்பு அவனை கொல்லாமல் கொன்று பயமுறுத்தியது “சிரிக்காதடி” என்றான் அவளை.
அவளுக்கு வலி வேதனை அத்தனை இருந்தாலும் ரிஷி, ரிஷியை பார்த்து விட்டேன் என்று சந்தோஷத்தில் அவனை பார்த்து ஆசையாக புன்னகையித்தாள்.
இதோ ஹாஸ்பிடல் வந்துவிட அவளை சக்சரில் படுக்க வைக்க அப்பொழுது கூட அவளின் சிரிப்பு குறையவில்லை, அவன் கையையும் விடவில்லை ரிஷியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
நர்ஸ் அருள்ஜோதியின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துதான் ஆபரேசன் தியேட்டருக்குள் அருள்ஜோதியை அழைத்து சென்றாள்..
டாக்டர்களுக்கு முதலில் என்ன செய்வது என்றே புரியவில்லை, குழந்தையை காப்பாற்றுவதா, இல்லை இவளை காப்பாற்றுவதா,? தலையிலும் காலிலும் நல்ல அடி.
முதலில் இரத்தம் வருவதை தடுத்தவர்கள், குழந்தைகளை ஸ்கேன் பண்ண, குழந்தைகள் நன்றாகவே இருக்க,.
முதலில் ஆப்ரேசன் செய்து குழந்தை எடுத்தனர்.
ரிஷி இடம் பல பேப்பரில் சைன் வாங்கினர், பல லட்சங்களை ஹாஸ்பெட்டலில் பில் கட்டச் சொன்னார்கள்.
அவர்கள் சொல்லியதை அனைத்தும் செய்து முடித்து இருந்தான் ரிஷி.
நர்ஸ் வேகமாக வந்து சார் உங்களுக்கு ரெண்டு ஆம்பள பசங்க பிறந்து இருக்காங்க என்று சொல்லிச் செல்ல..
சந்தோஷப்படுற மனநிலையில் அவனில்லை இரண்டு ஆண் குழந்தைகள் என்று மனதில் சந்தோஷமாக இருந்தாலும் “என் மனைவியை காப்பாற்றிக் கொடுங்க” என்று அவன் அந்த நர்ஸ்சை கையெடுத்து கும்பிட்டான்..
“டாக்டர் பாத்துட்டு இருக்காங்க சார் கண்டிப்பா காப்பாத்துவோம்” என்று நம்பிக்கையோடு அவள் சொன்னாள்..
ராமமூர்த்தி மகனிடம் “என்னாச்சுடா மருமகளுக்கு” என்று கேட்க.
நடந்ததை அப்படியே சொல்லி கதறி அழுதவனை என்ன சொல்ல.
ஓங்கி ஒரு அரை அரைந்தார் மகனை, “நீ மட்டும் வளைகாப்புக்கு வந்திருந்தா இது நடந்திருக்குமா”?, என்று மகனை திட்ட.
திட்டி என்ன பிரோஷனம், நடந்தை மாற்றவா முடியும்…
ஒரு நர்ஸ் வந்து, ரிஷியை பார்த்து. “ரூம் வாங்க சார் டாக்டர் வர சொன்னாங்க” என்று கூறி செல்ல.
வேகமாக சென்றான் ரிஷி அவன் கூடவே ராமமூர்த்தியும் செல்ல, சுதா அப்படியே அங்கே உள்ள சேரில் அமர்ந்து விட்டார்…
என் மருமகளும் பேர பிள்ளைக்கு எந்த குறையும் இல்லாமல் திரும்பி வர வேண்டும் என்று பிராத்தனை செய்த படியே அமர்ந்திருக்க.
ஒரு நர்ஸ் வந்து சுதாவை பார்த்து “அருள்ஜோதி சொந்தமா நீங்க” என்று கேட்க,.
“ஆமாம் அவளின் அத்தை” என்று ஆங்கிலத்தில் சொல்ல..
“குழந்தையை வாங்கிக்கோங்க” என்று அழைத்து சென்றவள்.
இரண்டு குழந்தைகளை அவரிடம் தர.
“என்ன குழந்தை”? என்று கேட்க.
“டூ பாய் பேபிஸ்” என்று இரண்டு குழந்தைகளையும் அவரிடம் தர.
தன் மார்போடு தன் பேர பிள்ளைகளை அணைத்துக்கொண்டவர். ஒரு சேரில் அமர்ந்து கொண்டு தன் மடியில் பிள்ளைகளை படுக்க வைக்க.
அவர் மடி பத்த வில்லை பிள்ளைகளுக்கு, வெயிட்டாக இருந்தனர் பிள்ளைகள். நீண்ட கால்கள், கருத்த நிறம் அப்படியே ரிஷியை உரித்து வைத்து பிறந்திருந்தார்கள் அவனின் வாரிசுகள்..
ஐயப்பனுக்கு போன் செய்து “இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து விட்டது இங்கே குஜராத்துக்கு வாங்க” என்று சொல்ல..
உடனே அவர்களும் கிளம்பினார்கள்…
சுதா மொழிக்கு போன் செய்து விசயத்தை சொல்ல.
“அத்தை இரண்டு பசங்களா”? என்று கத்தி சிரித்தவள், “பிள்ளைகள் போட்டோ அனுப்புங்க அத்தை” என்றாள்…
உடனே சுதா மொழிக்கு பிள்ளைகள் போட்டோவை அனுப்ப..
தன் அக்கா பிள்ளைகள் ரிஷியை போலவே இருக்க.
கண் கலங்கிய படியே குட்டி ரிஷிங்க என்றாள் ஆனந்த கண்ணீரோடு.
சுதா அருள்ஜோதிக்கு ஆக்சிடன்ட் என்று யாருக்கும்சொல்ல வில்லை, மருமகள் வந்து விடுவாள், பேர பிள்ளைகள் நன்றாக பிறந்திருக்கிறார்கள் என்றால், மருமகளுக்கு ஏதும் ஆகாது என்று அவர் நம்பிக்கையாக இருக்க.
டாக்டர் சொல்லியதை கேட்ட ரிஷி தந்தையை அணைத்து கதறிக்கொண்டிருந்தான்…