Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 1

அத்தியாயம் – 1

சென்னை தனியார் பேருந்து நிலையம், அந்த காலை வேளையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது, மக்களின் கூட்டம் அன்று ஏனோ அதிகமாகவே அலைமோதி கொண்டிருந்தது, அதில் சிலர்  கையில் பையுடன் தங்கள் பேருந்தை தேடி சுற்றி திரிந்து கொண்டிருக்க, இன்னும் சிலரோ தாங்கள் பயணம் செய்வதற்கான பேருந்தை அடையாளம் கண்டு கொண்டவாறு பேருந்தில் ஏறி தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டனர், அந்த வெள்ளை நிற பேருந்து தன் இருக்கைகளில் மக்களை நிரப்பிவிட்ட நிம்மதியில் மதுரையை நோக்கி புறப்படுவதற்காக தயாராகி கொண்டிருந்தது,…

பேருந்தின் ஓட்டுநர் சிறிது சிறிதாக ஆரம்பித்து பேருந்தை சீரான வேகத்தில் இயக்கி கொண்டிருந்தார், ஓரிரு மணி நேரங்களில், அந்த நீண்ட நெடுஞ்சாலையில் பேருந்து சரியான வேகத்தில் சென்று கொண்டிருந்தது, பேருந்தின் உள்ளே ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியர்கள் உட்பட அனைவரும் தங்கள் கணவன், மனைவி, சகோதரன், சகோதரி என ஒருவாராக பயணம் முடிந்து, தாங்கள் சந்திக்க போகும் உறவுகளை எண்ணி நெகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டு கொண்டிருந்தனர், அந்த நேரம் சரியாக அவர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநருக்கு போன் ஒலிக்க, அதனை ஏற்று பேசியவாறே பேருந்தை இயக்கி கொண்டிருந்தார்,..



Advertisement

சில நிமிடங்கள் அவரின் பேச்சினுடனே பேருந்து இயங்கி கொண்டிருக்க, யாரும் எதிர்பாரா விதமாக வந்து சேர்ந்தது அந்த கண்டெய்னர் லாரி, அவர்களுக்கு எமனாக வருகிறது என்பதை அறியாமல் பேருந்தில் உள்ளே இருப்பவர்கள் தங்கள் உறவுகளை காணப்போகின்ற சந்தோசத்தில் திளைத்திருக்க, அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும், ஓட்டுனரின் அஜாக்கிரதையால் சென்று கொண்டிருந்த இந்த தனியார் பேருந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேராக மோதிகொண்டது,…

இரண்டும் மோதி கொண்ட விபத்தில் பேருந்திலிருந்த பயணியாளர்கள்யாவும் ஒருவருக்கொருவர் தலையால் இடித்து கொண்டவாறும், சிலர் பேருந்தில் தலை இடித்து கொண்டும், கடைசி சீட்டில் அமர்ந்திருந்தவர் தூக்கி எரியப்பட்டு முன்சீட்டின் பக்கம் வந்து ரத்தகளறியுடனும் விழுந்தனர், இன்னும் சிலர் ரத்த சகதியாய், உடல் உறுப்புகள் துண்டிக்கபட்டு கிடந்தனர்,… பேருந்து முழுவதும் ரத்தசகதிகளால் நிரம்பியிருக்க அங்கு ஒருவனின் முகம் சிதைந்து ரத்தம் முழுவதுமாய் வெறியேறிகொண்டிருக்கும் கோர நிலையில் இருந்தான், அந்த நிலையிலும் அவனின் இதழ்களிலிருந்து ஒரு பெயர் மட்டுமே உச்சரிக்கபட்டது,…

Advertisement

Advertisement

“ஸ்மிருதி”

“ஸ்மிருதி”

Advertisement

“ஸ்மிருதி” என தன் உயிர் தன்னை விட்டு செல்ல இருக்கும் அந்த அந்த கடைசி நொடிகளிலும் கூட, அந்த பெயரை உச்சரித்தவாறு அவனின் கடைசி மூச்சு நின்றது, இதையனைத்தையும் தன் கண்ணெதிர்க்கவே பார்த்து கொண்டிருந்த அந்த பெயருக்கு சொந்தகாரியான நம் நாயகியோ, உடல் நடுக்கம் கொள்ள, தன் இதயத்தை யாரை கரத்தை வைத்து அழுத்தி பிழிவது போல் ஏற்பட்ட வலியுடன் உறக்கத்திலிருந்தவள் படபடப்புடன் எழுந்தமர்ந்தாள்,…

சுற்றி முற்றி பார்த்தவளுக்கு, தான் ஒரு அறையில் இருப்பதை கண்டு சற்றே நிம்மதியானாலும் பதட்டத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, தன் கண்முன்பே பார்த்த அனைத்தும் கனவு என்பதை புரிந்து கொள்ள அவளுக்கு வெகு நேரம் எடுத்துக் கொண்டது,.. தொண்டை வறண்டு, உடல் நடுகத்தோடு சேர்ந்த்து தொண்டையும் வலி எடுக்க, வேகமாக தனக்கு இடதுபுறமிருந்த சிறிய மேஜையின் மீதிருந்த தண்ணீர் ஜாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீரை எடுத்து தொண்டைக்குள் இறக்கினாள், நீர் தொண்டைக்குள் இறங்கிய பின்பும் அவளுக்கு ஏற்பட்ட அந்த நடுக்கம் குறைந்தபாடில்லை,…

கண்களில் நீர் வடிய, தன் கனவில் வந்த சம்பவத்தை நினைத்து பார்க்க பார்க்க, இதழ் துடித்து அழுகை பீறிட்டு வெளியேறியது, தன் வாயை இருகைளினால் மூடியவாறு சத்தம் வெளியே கேட்காதவாறு குலுங்கி அழுதாள்,…

ஓரிரு நிமிடங்கள் அழுகையுடனே நீடிக்க, அப்பொழுது தான் அவளின் பார்வை தனக்கு வலது பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த அவனின் மீது படிந்தது, அவனின் மீது படிந்திருந்த ஸ்மிருதியின் பார்வையில் இப்பொழுது துக்கம் தொலைந்து, கோபம், எரிச்சல், ஆவேசம், என பலவாறான உணர்வுகள் இணைந்து தெரிய, உறக்கத்திலிருந்த அவனின் முகத்தை அதற்கு மேலும் பார்க்க பிடிக்காதவளாய், படுக்கையிலிருந்து இறங்கியவள் அவ்வறையிலிருந்து வேகமாக வெளியேறினாள், அவள் சென்ற ஓரிரு நிமிடங்களிலேயே, ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனின் மூடிய கண்விழிகள் சில நொடிகளிலில் திறந்து விட போகிறேன் என்பதை பறைசாற்றும் விதமாக மூடிய கருவிழிகள் அசைந்து கொடுக்க உறங்கி கொண்டிருந்தவனின் முகத்திலும் பதற்றம் தாண்டவமாட அடுத்த நொடியே படபடப்புடன் உறக்கத்திலிருந்து விடுபட்டவாறு எழுந்தமர்ந்தான்,…

அவனின் முகத்திலும் துக்கம், பயம், பதட்டம் என பல உணர்வுகள் வந்து போக, தனக்கு வந்த கனவை பற்றி ஸ்மிருதி போல் இவனும் நினைத்து கண்ணீர் சிந்தினான்,.. இருவருக்கும் கனவில் ஒரே நிகழ்வுகளே தோன்றியது, அதே கோர விபத்து ஆனால் இவனின் கனவில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் அதே ரத்தம் வெறியேறியவாறான நிலையில் துடிதுடித்தவாறு தங்கள் கடைசி மூச்சினை வெறியேற்றியபடி கண்மூடினர்,….

தன் கண்களை மூடி, தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவன், மீண்டும் படுக்க போகையில் தான் தனக்கு அருகில் படுத்திருந்த, ஸ்மிருதியை காணாததை கண்டு திகைப்புற்றவனாய், படுக்கையிலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினான்,…

அறையை விட்டு வெளியே வந்தான், ஒரு விசாலமான ஹால், அதன் வலது திசையில் படர்ந்த திறந்தவெளி பால்கனி இருக்க, அங்கு நின்றவாறு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் ஸ்மிருதி,… அவளை கண்டுவிட்டோம் என்ற நிம்மதி மட்டும் அவன் முகத்தில் தெரிந்தது, மற்றபடி அவளின் அழுகையை கண்டுகொள்ளாதது போல் மீண்டும் அறைக்குள் வந்து படுக்கையில் படுத்து கொண்டான்…..

மறுநாள் காலை சூரிய தேவனின் விஜயத்தையும் கண்டுகொள்ளாமல் உறங்கி கொண்டிருந்தாள் ஸ்மிருதி, கடிகாரம் 9.30 என காட்டி கொண்டிருந்த நேரம், மேஜையிலிருந்த ஸ்மிருதியின் அலைபேசி அலறியது,.

அந்த அலைபேசியின் அழைப்பு ஒலி சிறிது கூட அவளை அசைத்து கொடுக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், பல முறை அந்த அலைபேசி விடாமல் ஒலித்து கொண்டிருக்க, ஒருவழியாக உறக்கம் கலைந்தது ஸ்மிருதிக்கு,…

கண்களை திறக்காமலேயே கைகளால் துழாவியபடி போனை கையில் எடுத்தவள், அழைப்பை ஏற்று காதில் வைத்த மறுநொடி,… “ஏய் ஸ்மிருதி இன்னும் தூங்கிட்டு இருக்கியா”  குரல் கடுகடுக்க பழக்கப்பட்ட குரலில் வேகமாக எழுந்து அமர்ந்தாள் ஸ்மிருதி,….

“ஹெலோ,… லைன்ல இருக்கியா? இல்லையா?”  மீண்டும் வந்த அதட்டலுடன் கூடிய குரலில்… “சொல்லுங்க அண்ணா, இருக்கேன்” என்றாள் பவ்யமாய்..

“இப்போ டைம் என்னனு தெரியுமா” என மறுபக்கத்திலிருந்த ஸ்மிருதியின் தமையானான விஷ்ணு வரதன் பற்களை நறநறக்க.. கடிகாரத்தில் பார்வையை பதித்தவள்,.. “9. 35 அண்ணா” என்றாள் மெல்ல…

“உன்னை” என்று மேலும் பற்களை கடித்தவனோ, “இன்னைக்கும் நீ அவனுக்கு பிரேக்ஃபாஸ்ட் செய்து கொடுத்து வழி அனுப்பல இல்ல” என்று வினவ,… “நைட்லாம் தூக்கமில்லண்ணா, அதான் தூங்கிட்டேன்,” என்றாள் ஸ்மிருதி கொட்டாவி விட்டப்படி…

“நான் அங்கே வந்தேன்னு வையேன்” என ஆவேசமாக கத்தியவனின் குரலை கேட்டு சிறிது பயந்தவள்,…”நிஜமாலுமே இன்னைக்கு நான் வேணும்னு பண்ணலண்ணா,” என்று சமாளிப்பாக கூற, “அப்படினா நேத்து வரைக்கும் நீ வேணும்னு தான் பண்ணிருக்க,  அப்படித்தானே” என பொறிந்தான் விஷ்ணு…

“இல்ல அண்ணா, நான் அப்படி சொல்ல வரல” என ஸ்மிருதி மேலும் சமாளிக்க வர, விஷ்ணுவோ “நான் இன்னைக்கு அங்கே கிளம்பி வரேன்” என்றவனிடம் ஏதோ சொல்ல வந்தவள் போனை அவன் கட் செய்து விடவும் சலிப்புடன் போனை தூக்கி போட்டுவிட்டு.. “ச்சே… நிம்மதியா தூங்காவாவது முடியுதா இந்த வீட்ல, எல்லாம் அவனால தான், அவனை பார்த்தாலே எனக்கு பிடிக்கல, இதுல நான் அவனுக்கு சமச்சி வேற போடனுமாம்,” என வாய்விட்டே புலம்பிக் கொண்டவள்,.. “இந்த அண்ணா வேற வரேன்னு சொல்லிருக்காரே, போச்சு இன்னைக்கு என் காதிலிருந்து பிளட் வரது உறுதி’ என படுக்கையிலிருந்து எழுந்தபடி குளியலறை நோக்கி சென்றாள்,…

ஓரிரு நிமிடங்களிலேயே  குளித்துவிட்டு சிவப்பு நிற குர்தாவையும், கருப்பு நிற பட்டியாலா பேண்டையும் எடுத்து போட்டு கொண்டாள்,.. அறைக்கு எதிர் திசையில் இருக்கும் சமையலறை நோக்கி வந்தவள், தனக்காக காபியை போட்டு, கப்பில் ஊற்றிக்கொண்டு தனக்கு மிகவும் பிடித்த இடமான அதே பால்கனிக்கு வந்து சேர்ந்தாள்,…

கப்பிலிருந்த காபியை உறிஞ்சியவாறே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள், அந்த இருபது மாடி குடியிருப்பில், மூன்றாவது மாடியில் இருந்த அப்பார்ட்மென்டின் பால்கனியில் தான் ஸ்மிருதி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்,….

காய்கறி விற்பவனிடம் பெண்கள் பேரம் பேசியவாறு காய்களை வாங்கி கொண்டிருக்க, இன்றும் அவளுக்கு அது ஒரு பொழுதுபோக்கு போல் இருந்தது, அதுவும் சில நிமிடங்கள் மட்டும் தான், இன்று விடுமுறை நாள் இல்லை என்பதால் சிறுவர் சிறுமிகளின் விளையாட்டையும், குறும்பு தனத்தையும் அவள் பார்க்க தவறினாள்,…

ஸ்மிருதி அந்த குடியிருப்பிற்கு வந்த இந்த ஒரு வாரத்தில் டீவியும், போனும் மட்டுமே பொழுதுபோக்காய் இருந்திருந்த சமயம், அவள் வசிக்கும் குடியிருப்பின் வெளிப்புறம் நடக்கும் நிகழ்வுகளும் இப்பொழுது பொழுதுபோக்காய்  மாறி போயிருந்தது,…

காபியை அருந்திவிட்டு கப்பை கழுவி முடித்திருந்த நேரம் அவளின் அலைபேசி மீண்டும் ஒலித்தது,… வேகமான நடையுடன் வந்தவாறு போனை கையில் எடுத்தவள், திரையில் தன் தமையனின் எண் தோன்றவும் ‘திரும்ப எதுக்காக அண்ணா கால் பண்ணுறாரு, இப்போ என்ன சொல்ல போறாரோ தெரியலயே’ என்ற புலம்பலுடன், அழைப்பை ஏற்று,.. “சொல்லுங்க அண்ணா” என்றாள் நல்ல பிள்ளையாக…

“ஸ்மிருதி,… லன்ச்க்கு நாங்க அங்க தான் வர போறோம், சோ ரெடி பண்ணிடு” என விஷ்ணு கண்டிப்புடன் கூடிய உறுதியான குரலில் சொல்ல, திகைத்த ஸ்மிருதி,… “என்னது,… இல்ல அண்ணா அதெல்லாம் வேண்டாம்” என்றாள் அவசரமாக…

“நான் உன்கிட்ட சொன்னது உனக்கு புரியலையா, சமச்சி வை நாங்க வரோம்” என்றான் அழுத்தமாக…

“அண்ணா… ஏன் அண்ணா” என்று சலித்து கொண்டவள்,.. “எனக்கு சமைக்க தெரியாது” என்றாள் மீண்டும் மெல்லமாக…

“உனக்கு சமைக்க தெரியாதுன்னு உன்னோட ஹஸ்பண்ட் மிஸ்டர் அஜய் கிருஷ்ணா கிட்ட சொல்லு நம்புவான், நான் நம்ப மாட்டேன்” என்று முடித்தவன் அடுத்த நொடியே இணைப்பை துண்டித்திருந்தான்,…

‘ச்சே…. இந்த அண்ணா ஏன் இப்படி பண்ணுறாரு, நான் அவனுக்காக சமைக்கணுமா, நோவே என்னால சமைக்க முடியாது’ என தன்னிடமே முடிவோடு உரைத்தவள்,, டீவியை ஆன் செய்து, சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள்…

நேரங்கள் கடந்து கொண்டிருக்க, ஸ்மிருதிக்கு விஷ்ணு சொன்னதே நியாபாகத்திற்கு வந்து இம்சை செய்தது, நிகத்தை கடித்தபடி இருந்தவளுக்கு டீவியிலும் கவனம் செலுத்த முடியாமல் போனது, பின்னர் தன்  அண்ணன் மீதிருக்கும் பயம் அவள் முதுகை சில்லிட வைக்க, எழுந்து கொண்டவள் சமையலை ஆரம்பிப்பதற்காக அடுக்கலையை நோக்கி நடந்தாள்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!