Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 8 1

நெஞ்சம் ஏங்குதே….

  அத்தியாயம் -8



Advertisement

Advertisement

Advertisement

 அருள் ஜோதியின் உடலை சென்னை  எடுத்து வர  மறுநாள் மதியம் ஆனது..

Advertisement

அனைத்து சொந்தமும் ரிஷிவீட்டில் கூடியிருந்தனர்.

குஜாராத்தில் இருந்து தனி சிறிய விமானத்தில் தான் அருள் ஜோதியின் உடலை எடுத்து வந்தனர்.

 ஆயிரம் வேலை இருந்தது அருள் ஜோதி உடலை  சென்னைக்கு எடுத்து வர.

ரிஷியால் அழைய முடியவில்லை,, அருள் ஜோதியின் இறப்பு சான்றிதழை வாங்கியவன்,  அதை போலீஸ் ஸ்டேஷனில் பதில் செய்து லட்டர் வாங்கி, தனி விமானம் புக் செய்து, அருள் ஜோதியின் உடலை எடுத்து வர, சவப்பெட்டி புக் செய்து என்று குகனும், ரிஷியும் அழைந்து கொண்டிருந்தனர், எல்லாம்  இடத்திற்க்கும் அழைந்து திரிந்து ஓய்ந்து போய் தான், சென்னைக்கு  வந்து சேர்ந்தனர்,

இங்கே ரிஷி வீட்டில், சுதாவின், சொந்தம் தேவகி வீட்டு ஆட்களின் சொந்தம்,  என்று அனைவரும் கூடியிருக்க.

அருள் ஜோதியின்  உடலை பார்த்து அனைவரும் கத்தி அழுதனர்.

அதுவும்  அந்த பச்ச பிள்ளைகளை பார்த்து,இன்னும்  கதறி  அழுதனர், ஒரு மணி நேரம் கழித்து கொஞ்சம் அழுகைகள் குறைந்தது,  அடுத்தாக அருள் ஜோதிக்கு என்ன ஆனது, என்று பேச்சுக்கள்  ஓட.

பின்பு அது முடிந்ததும், மொழி ஏன் இன்னும் வரல, அக்கா செத்ததுக்கு  கூட வர மாட்டாளா, இலங்கையில தான் இருக்கா, அவளால வர முடியாத.

திருநெல்வேலியில இருந்து நாமலே வந்துட்டோம், அவளால் வரமுடியாது, என்று அனைவரும் பேச.

ஐயப்பன்  இளய மகளுக்கு போனில் அழைத்துக்கொண்டிருந்தார்,

 அவளோ போனை  எடுக்கவில்லை.

மணி இப்பவே 3,  ஐந்து மணிக்கு அருள் ஜோதியின்  உடலை எடுத்தாக வேண்டும், இன்னும் மொழி  வரல என்று அனைவருக்கும் பேச..

சுதாவும், தேவகியும் பாதி உயிர் போனது போல அமர்ந்து இருந்தனர், ஹாஸ்பெட்லிலே  அழுது தீர்த்து விட்டனர், இரு குழந்தைகளையும் மாற்றி, மாற்றி பார்த்துக்கொண்டனர், குழந்தைகள் பசிக்கு அழ,.

கனத்த மனதோடு, பேபி பால் பௌடரை சுடு தண்ணிர் கலந்து, பதமாக ஆற்றி, இரண்டு குழந்தைகளுக்கு கொடுப்பதும், அவர்களை சுத்தம் செய்து பார்த்துக்கொண்டே..

 வந்தவர்களிடம் பேசி அழுதுகொண்டிருந்தனர்.

மணி நான்கை  நெருங்கிக்கொண்டிருக்க.

ஒரு கார் வந்து ரிஷியில்  வீட்டு வாசலில்  நின்றது.

கார் வந்த சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க,

கார் நின்ற அடுத்த நொடி, காரில் இருந்து வேகமாக இறங்கிய  மொழி “அக்கா…!” என்று கத்தி கொண்டே ஓடி வந்தாள்…

அனைவரும் மொழியை பார்க்க.

சவப்பெட்டியில் படுத்திருந்த சகோதரியை பார்த்தவள், கத்திய, கத்தலில் அங்கே உள்ள அனைவருமே அழுதிருந்தனர்.

அவள் அருகில்  யாருமே நெருங்க முடியவில்லை, “அருள், அருள் அருள் கா, எழுந்து வா,  வா,  உனக்கு என்ன ஆச்சு, ஏன் எங்களை விட்டுட்டு  போனா, வா நீ, வந்து எனக்கு பதில் சொல்லு வா, வாடி என்று அவள் கதறி அழ.

 அங்கே உள்ளவர்களுக்கே  மொழியை பார்த்து பாவமாக இருந்தது, குகன் வந்து சமாதானம் பண்ண, “அவளை வர சொல்லுடா, வர சொல்லு, என்கிட்ட பேச சொல்லு என்று தம்பியை அணைத்து இன்னும் அழுதாள்,.

தேவகி மொழி சத்தம் கேட்டு  அவள் அருகில் வர. தன் அம்மாவை பார்த்த மொழி..

“மா அவளை வர சொல்லுமா, எல்லாரும் பொய் சொல்லுறீங்க, அவ நல்லா இருக்க தானே, அவளை எழந்து வர சொல்லு, ஏன் படுத்து இருக்க”  என்று தேவகியை கட்டிக்கொண்டு அழ..

ஐயப்பனு சின்ன மகள் அழுவதை பார்க்க முடியவில்லை,,  வாய் பொத்தி அழுது கொண்டிருந்தார்,..

அனைவரும் மொழியை தான் பார்த்திருந்தனர்..

நேரம் ஆகா, ஆகா மொழி அழுகை கூடியதே தவிர, குறைவே யில்லை.. அவள் கத்தி, தொண்டை  வரண்டு போயிருக்கும், அப்படி கத்தி கொண்டு இருந்தாள்.

ஐயப்பனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை..

மொழி அருள் ஜோதியின் சவபெட்டியை  கையால் தட்டி, “வா ஜோ, வா ஜோ என்கிட்ட பேச மாட்டியா, பேசு, “என்று அழ…

ஐயப்பன் சின்ன மகளை சமாதானம் பண்ண தந்தை பார்த்து இன்னும் கத்தி அழுதாள்.

மொழி வந்ததில் இருந்து ரிஷி அவளை முறைத்தபடியே தான் பார்த்துக்கொண்டிருந்தான், ..

அவனுக்கு அவள் மேல் உள்ள வெறுப்பு இன்னும் கூடிக்கொண்டே தான் இருந்தது.

அவள் அழுகை எல்லாம் அவனுக்கு ட்டிரமாவாகத் தான்   தெரிந்தது,.

 ஹாஸ்பிடல்ல அத்தனை பேரு இவளை  பார்க்க வரச்சொன்னோம், அப்போ  பார்க்க வரல,  இப்ப வந்து அழுது சீன் போடுற என்றே அவளை முறைத்து  பார்த்தான்.

 அவனுக்கு கோபம் நேத்து சாயங்காலம் சொல்லி இப்ப வந்திருக்கிறாள் என்றே.

 உண்மையான பாசம் இருந்தால் சொன்ன உடனே கிளம்பி வந்து இருக்க வேண்டாமா..

 இப்ப வந்து அழுது சீன் போடுற என்றே கோபமாக  அவளை பார்த்தான்.

 ஐயப்பன் மகள் அழுவதை பார்த்து,  தலையை தடவி “வேண்டாம் அழாதடா என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

 மொழியின் அழுகை கொஞ்சம் கூட குறையவேயில்லை,, அழுதவள், அழுத அப்படியே இருந்தாள்.

 ஐயப்பனுக்கு பயமாகி போனது பெரியமகள் போனதை நினைத்து சின்ன மகள் அழுதே  செத்து விடுவாள்  போல  என்று பயந்தவர்..

 தேவகியும்,  சுதாவையும் அழைத்து   மொழியை  சமாதானம் பண்ண சொல்ல.

 அவர்களை அணைத்துக் கொண்டு இன்னும் அழுதாள்.

 5 மணி ஆகி விட அருள் ஜோதியை எடுக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

 அருள்மொழி அக்காவை விட மாட்டேன் என்று சவப்பெட்டியை கட்டிக்கொண்டு கதறி அழ..

 யாராலும்  அவளை  சமாதானப்படுத்த முடியவில்லை.

  அழுகை,   கத்தல்,  கதறல்  அருள்ஜோதியை தூக்கி செல்வார்கள் என்று  தலையில் அடித்துக் கொண்டு அவள் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தாள்.

 அனைவருக்குமே கஷ்டமாக இருந்தது. அவர்கள்  அருள் ஜோதிக்கு செய்ய வேண்டியதை நன்றாக செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்க..

 மொழி கத்தி  ஆர்ப்பாட்டம் பண்ண,  ஒன்றும் சரியாக  நடக்க முடிய வில்லை.

 அனைவரும் மொழியை பார்த்துக் கொண்டிருக்க.

 ரிஷிக்கு பயங்கர கோபம்..

 எழுந்து வந்தவன்  பளார் என்று ஒரு அரை  அரைந்தான்  மொழியை,.

 ரிஷி அடித்ததும் வாயை மூடி கொண்டவள் தேம்பி, தேம்பி  அழ..

 அமைதியா இருக்கணும் என்பது போல்  தன் கை  விரலை காட்டி செய்கை செய்தவன் விருட்டென்று  சென்றுவிட்டான்….

ஐயப்பனுக்கு பயங்கர கோபம் எப்படி என்ன சின்ன பொண்ணை இவர் அடிக்கலாம் என்று,..

யார் இந்த உரிமையை அவருக்கு கொடுத்தது  என்று.

மொழியை அடிக்கவுமே நிஷா வேகமாக மொழி அருகே வந்தாள்,,..

மொழியை அப்போது தான் அனைவரும்  சரியாக பார்த்தனர்.

ரிஷி அடித்த கன்னத்தில் மேல் கைவைத்திருந்தாள், அந்த கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்ட நீடில் இன்னும் எடுக்க படாமல் இருக்க.

அதை அனைவரும் பார்த்தனர், இவ்வளவு நேரம் மொழி கையை யாரும் சரியாக பார்க்க வில்லை.

 ஐயப்பன் வேகமாக மகளிடம் வந்து “என்ன பாப்பா கைல ட்ரிப்ஸ் போட்ட மாதிரி நீடில் இருக்கு என்னாச்சு” என்றார்…

 மொழி அழுதுக்  கொண்டு இருக்க நிஷா தான் பதில் சொன்னால்

“இரண்டு நாளைக்கு முன்னாடி அவளுக்கு புட் பாய்சன் ஆயிடுச்சு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருந்தோம்,  இன்னிக்கி காலையில் தான் மொழியை  டிஸ்சார்ஜ்  பண்ணி  அவளை  கூட்டிட்டு வந்தேன்” என்றாள்..

 அனைவரும் அமைதியாக இருக்க.  நிஷா பேசியதை கேட்ட  படி இருந்தான்  ரிஷி.

 அவனுக்கு நேற்றைக்கு  வராததற்க்கு   சாக்கு சொல்வது போலே தான் தெரிந்தது,,மொழியின் நிலமை  அவனுக்கு புரியவில்லை..

 மிகவும் இறுகிப்போகி இருந்தான்.

 மடமடவென்று அருள் ஜோதியின் உடலை எடுத்து செல்ல அனைத்து காரியங்களும் நடந்தது ..

 தேவகி சின்ன  மகளை உள்ளே அழைத்து சென்று விட்டார்..

 மொழி குழந்தைகளை பார்க்க இன்னும் அழுதாள்.

 இரண்டு ஆண்  குழந்தைகள் அச்சு அசல் ரிஷி போலவே இருந்தனர்..

 இரண்டு குழந்தை வாங்கி கொண்டவள்  ஒரு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டவள், இன்னொரு குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டாள் ..

 நிஷாவுக்கே  அழுகையாக வந்தது.

 இந்த இரு பிள்ளைகள் முகத்தை பார்த்து. தாயில்லாமல் இந்த பிள்ளையை எப்படி வளருமோ என்று அவளும் வேதனை கொண்டாள்.

 அருள்ஜோதிக்கு அனைத்து சடங்குகளும் ரிஷி தான் செய்தான்,  ஐயப்பன் ஒரு, இரு சடங்கு செய்தாரே தவிர அனைத்தையும் செய்யவில்லை.

அருள்ஜோதிக்கு  ஆண் பிள்ளைகள் என்பதால் இரண்டு பிள்ளைகளையும்  தாய்க்கு எண்ணையும்,  சீயக்காயும் தன் பிஞ்சு  கையால்   கடைசியாக தாய்க்கு வைத்தனர்.

மொழி ஒரு குழந்தையும், சுதா இன்னொரு குழந்தையும் வைத்திருந்தனர்,  தண்ணி எல்லாம் அருள்ஜோதி மீது ஊற்ற வில்லை, ஆப்ரேசன் செய்த உடல் அல்லவா, ஆகவே முக்கியமான  சடங்கை மட்டும் செய்தனர்,.

 அருள்ஜோதியின் உடல் எடுத்துச் செல்லும்போது சுதா பயங்கரமாக அழுதார்..

 அவர் அழுததை  பார்த்து மொழிக்குமே இன்னும்  அழுகை வந்தது..

 ராமமூர்த்தி தான் மனைவி சமாதானம் செய்து விட்டு   ரிஷியோடு எலக்ட்ரிக் சுடுகாடு சென்றார்.

அருள்ஜோதிக்கு அனைத்தையும்

 முடித்து விட்டு வர இரவு  ஏழு மணி ஆகியிருந்தது,

  நிஷா உடனே கிளம்பி இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!