அனைவரும் வீட்டை சுத்தம் பண்ணி குளித்துவிட்டு சிறு விளக்கு ஏற்றி வைத்து வேப்பிலை அரைத்து வாசற்படியில் வைத்தனர், மயானம் சென்று வந்தவர்கள் வெப்பிலை நாவில் தொட்டு வைத்துவிட்டு வீட்டின் உள்ளே வர வேண்டும், அடுத்தது இந்த வீட்டில் எந்த ஒரு கசப்பான நிகழ்வு நடக்க கூடாது என்று.
ரிஷி ஓய்ந்து போய் தான் வீடு வந்தான், மொட்டை அடித்து, மீசையை எடுத்து, வேஷ்டி துண்டில் இருந்தான்..
Advertisement
வந்தவனிடம் நாவில் வேப்பிலை சாரை தொட்டு வைக்க சொல்ல, அவர்கள் சொன்னதை போல செய்தான்,
அவன் நாக்கில் வைத்த வேப்பிலை கசப்பு உடல் முழுவதும் பரவியது..
Advertisement
Advertisement
வாழ்க்கையே கசந்து போனது போல் ஒரு உணர்வு.
வீட்டை சுற்றி பார்த்தான் வீடு நிறைய சொந்தங்கள் இருந்தது மொழிதான் அங்கேயும் இங்கேயும் அழைந்து கொண்டு இருந்தாள், அனைவருக்கும் தண்ணீர் குடிக்க கொடுக்க, உணவு சாப்பிட அழைக்க என்று அவள் அனைவரையும் அழைத்து கொண்டிருக்க, அவளை பார்த்தவனுக்கு கடுப்பாக இருந்தது விருட்டென்று எழுந்து அவன் மாடிக்கு சென்று விட்டான்
Advertisement
சொந்தங்களும் உணவு உண்டு விட்டு பாதி பேர் சென்றுவிட பாதிப்பேர் அங்கே இருந்தனர்.
நாளை மூன்றாம் நாள் அருள்ஜோதி இறந்து, நாளைக்கே விசேஷம் செய்து விடலாம் என்று அனைவரும் பேசி முடித்திருந்தனர்
சுதா மகனைத் தேடி மகனுக்கு உணவு கொண்டு மாடிக்கு சென்றார்.
அவன் படுத்திருந்த நிலையை பார்த்தவருக்கு மனம் வலித்தது.
மெல்ல மகனை எழுப்பி அவனுக்கு உணவு சாப்பிட கொடுக்க, “வேண்டாம்” என்றான்.
“நேத்துல இருந்து நீ சாப்பிடல டா சாப்பிடு டா பிள்ளைகளை வளர்க்கணும் டா கஷ்டமா தான் இருக்கும் டா” என்றவர் மகனை அணைத்துக்கொண்டு ஊட்டி விட்டு வந்தார்.
காலையிலே அருள்ஜோதிக்கு செய்யும் சடங்குகள் ஆரம்பம் ஆகின..
அருள்ஜோதியின் அஸ்தியை எடுத்து பக்கத்தில் உள்ள கடலுக்கு சென்று காரியம் செய்து வந்தனர்..
மதியானமே விசேஷம் வைத்திருந்தனர் அனைத்து சொந்தங்களும் வந்து விசேஷத்தில் கலந்து கொண்டு, விசேஷம் முடிந்ததும் சாயங்காலம் அவர்கள் அனைவரும் கிளம்பி விட அருள் மொழியின் குடும்பமும், ராமமூர்த்தி குடும்பம் மட்டுமே ரிஷி வீட்டில் இருக்க..
ஐயப்பன் ராமமூர்த்தியிடம் பேச ஆரம்பித்தார் “நாங்க ரெண்டு குழந்தை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு போறோம்” என்று..
ராமமூர்த்திக்கு ஐயப்பன் பேசியது கஷ்டமாக இருந்தது என்ன சொல்வது என்று, யோசித்தவர் ” நாங்க பார்த்துக்கிறோம்” என்ற கூற வர,,
“போதும் சம்பந்தி என் பெரிய பொண்ணை பறிக்குடுத்துட்டோம், இனி எங்க பேற பிள்ளைகளையும் பறிகொடுக்க முடியாது இந்த பிள்ளைகளை நாங்க பார்த்துக்கிறோம் மொழி இருக்கா என் பொண்டாட்டி இருக்கா நாங்க பார்த்துக்கிறோம்.” என்றதும்.
சுதா கதறி கதறி அழுதார்..
ராமமூர்த்தி மனைவியை அணைத்து சமாதானம் பண்ண மாடியில் இருந்து ரிஷி வேகமாக இறங்கி வந்தான்..
“அவங்க உங்க பேர பிள்ளைகள் தான், நான் இல்லையின்னு சொல்லலை நீங்க உங்க பேரபிள்ளை பார்க்க வரலாம், போலாம் ஆனால் என் பிள்ளைகளை நான் எங்கேயும் விடுறதா இல்லை” என்றான் ரிஷி..
“போதும் உங்களுக்கு கட்டி கொடுத்து என் பெரிய பொண்ணு செத்ததெல்லாம் போதும் என் பேர பிள்ளைகளை நான் விடுறதா இல்லை நாங்கள் தூக்கிட்டு போவோம்” என்றார் ஐயப்பன் நிற்க.
ரிஷிக்கு பயங்கர கோபம் “நான் இல்லாமையா உங்க பொண்ணு புள்ள பெத்தா”?
என்ன பேசுகிறோம் என்று கோபத்தில் பயங்கரமாக பேசி விட்டான்.
சுதா மகனை தடுக்க, “பின்ன என்ன பெத்தவன் நான் உயிரோட இருக்கேன் தானே எனக்கு என் பிள்ளைகளை பார்த்துக்க தெரியும் அவங்களை கிளம்பச் சொல்லுங்க” என்றான்.
அங்கேதான் மொழி, குகன் தேவகி அனைவரும் இருந்தனர் ஐயப்பன் பேசுவது சரியே என்பது போல அவர்கள் அமைதியாக நின்றிருக்க..
“இப்ப எதுக்கு பேசிகிட்டு ஒரு மாசம் ஆகட்டுமே முப்பது நாள் கழிச்சு பேசிக்கொள்ளலாமே” என்று ராமமூர்த்தி கூற.
“இல்ல இப்பவே பேசி முடிவு எடுத்து ஆகணும் நீங்க குழந்தையை கொடுங்க நாங்க கிளம்புறோம்” என்றார் ஐயப்பன்
“குழந்தையை கொடுக்க முடியாது என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க” என்றான் ரிஷி..
ஐயப்பன் வேகமாக சென்றவர் அரைமணி நேரத்தில் போலீஸ்சோடு ரிஷி வீடு வந்தார்.
தேவகி மொழி குகன் எல்லாரும் போலீஸ்சை பார்த்து பயப்பட.
என்ன பண்றீங்க என்றனர் அனைவரும்…
“நீ சும்மா இரு என் பொண்ணு போய்ட்டா என் பேரப்பிள்ளைகள் விட முடியாது எப்படியாவது பேர புள்ளை வாங்காமல் இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன்” என்று ஐயப்பன் திடமாக நிற்க.
ரிஷி ஹாலில் அமர்ந்திருந்தான்..
சுதாவும் மொழியும் தான் குழந்தைகளை ரூம்பில் வைத்திருந்தனர்..
போலீஸ் வந்ததும் பயந்துவிட்டனர் அனைவரும்.
ராமமூர்த்தியையும், ரிஷியையும் போலீசுக்கு நன்றாக தெரியும் என்பதால் இருவரிடமும் வந்து ஐயப்பன் கொடுத்த கம்ளைண்டை பத்தி பேச..
நாங்க பார்த்துக் பேசிக்கொள்கிறோம் என்று அவர்கள் சொல்ல..
போலீஸ்காரர் “ரெண்டு குடும்பமும் சமதானமாக பேசி முடிவெடுங்க போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வந்தா பெரிய பிரச்சனை ஆயிடும்” என்று சொல்லி அவர் செல்ல.
ராமமூர்த்தி ஐயப்பனின் அருகில் சென்று “உங்களுக்கு என்ன தான் வேணும் இரண்டு குழந்தைகளும் கொடுக்க முடியாது என ஒரு குழந்தை நீங்க வச்சுக்கோங்க ஒரு குழந்தை நாங்க வளர்த்து கொள்கிறோம்” என்றார்.
ஐயப்பன் யோசித்துக் கொண்டிருக்க ரிஷி குழந்தைகளை கொடுக்க முடியவே முடியாது என்றான், என் இரண்டு பிள்ளைகளும் என் வீட்டில் தான் இருக்கணும் என்றான்.
ராமமூர்த்தி ரிஷியை பார்த்து “டேய் பார்த்து பேசு அவங்களுக்கும் பேர பிள்ளைகள் தான்” என்றார்.
“நான் அவங்க பேரப்பிள்ளைகள் இல்லை என்று சொல்லவே இல்லையே அவங்க எப்ப வேணா வரட்டும் பார்க்கட்டும் ஆனா பிள்ளைங்க என் கூட தான் இருப்பாங்க” என்றான்..
“இப்படி பிடிவாதம் பிடிச்சா என்னதான் டா வழி “.
“அவங்களுக்கும் இளப்பு பெருசு தானே, அவங்களை பத்தி யோசி, உன் இழப்பு பெருசு தான், அத என்னால புரிஞ்சுக்க முடியுது” என்றவர் கண் கலங்கி பேச..
அனைவரும் பேசிப் பேசியே ஓய்ந்து போயினர்..
சரி முப்பது நாள் கழித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.. 30 நாளும் ரிஷி வீட்டில் தான் ஐயப்பன் குடும்பம் இருந்தது, குகனும், ஐயப்பனும் ஐந்தாம் நாள் சென்று விட, ரிஷியும் குஜராத் சென்று விட்டான்,.
அருள் ஜோதி இறந்து முப்பதாவது நாள்,.
அனைத்து சொந்த பந்தத்தையும் அழைத்து அருள்ஜோதிக்கு சாமி கும்பிட்டனர்.
அனைவரின் முகத்திலும் கண்ணீர், கவலை,வேதனை, தேவகி அழுது, அழுது அவருக்கு காய்ச்சலே வந்து விட்டது, சுதா ரெட்டை குழந்தைகளை எப்படி வளர்க்க போறோம், அருள் ஜோதி இறந்ததை நினைத்து திடிர், திடிரென்று குழைந்தைகளை பார்த்து, பார்த்து அழுவார், ஆண்கள் எல்லாம் வேலை, என்று வெளியில் சென்று விட.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நடந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை,..
குழந்தைகள் பசிக்கு ஒவ்வொரு முறையும் அழும்போது மொழிக்கு உயிர் போயி, உயிர்வரும்.
அவளுக்கு இப்போது எந்த சிந்தனையும், இல்லை குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்களை பசியில் அழ வைத்து விட கூடாது, என்று அவர்களை அப்படி பார்த்துக்கொண்டாள்.
சுதாவே சில முறை குழந்தைகளுக்கு பால் கொடுக்க மறந்து விட.
சரியாக பிள்ளைகள் பால் குடிக்கும் நேரத்தை பார்த்து, பார்த்து கொடுப்பாள் மொழி,.
மொழி இருப்பதால் சுதாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது,.
நீ போயிட்டீயா, ஏன் போனா?, எதுக்கு போனா? அப்போ உன்னை இனி பார்க்க முடியாதா, இந்த பிள்ளைகளை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு, ஒரு உயிர் வேணுமுன்னா என் உயிரா எடுத்திருக்க கூடாது இறைவா, எங்க அக்கா உயிர் தான் உனக்கு வேணுமா, இந்த பிள்ளைகளை பார்க்க பாவமாக இல்லையா, ஏன், ஏன் இப்படி நடந்தது,.. ஏன் இப்படி நடக்குது, இந்த பிள்ளைகளை விட்டு என்னால் இனி இருக்க முடியுமா, என்னை மாதிரி யார் இந்த பிள்ளைகளை பார்ப்பார்.
என்ன நடந்தாலும் சரி இனி எனக்கு இந்த பிள்ளைகளை பார்ப்பது தான் கடமை, வாழ்க்கை என்று அவள் முடிவு பண்ணி இருக்க.
வெளியில் பயங்கர சத்தம், என்னவென்று மொழி பார்க்க.
ரிஷியும், ஐயப்பனும் பயங்கரமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.
சொந்தங்கள் அனைவரும் பேசி, சுதா வீட்டில் ஒரு குழந்தையும், ஐயப்பன் வீட்டில் ஒரு குழந்தையும் வளரட்டும் என்று பேசி முடிக்க.
ரிஷி முடியாவே முடியாது என்று ஐயப்பனோடு சண்டை போட.
ஐயப்பன் ஒரு குழந்தையை தூக்கி சொல்வேன் என்று பிடிவாதமாக நிற்க.
மொழி இருவருக்கும் நடுவில் வந்தவள், குழந்தைகளை பிரிக்கிறது பாவம், பிள்ளைகளுக்கு அம்மா தான் இல்ல, அப்பா இருக்காரு தானே, இரண்டு குழந்தைகளும் அப்பா வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று அவள் பேச.