“என்ன பேசுற மொழி? அப்போ குழந்தையை இவங்க கிட்ட விட சொல்லுறீயா”? என்றார்.
அவள் “ஆமாம்” என்றாள்..
“நீ இப்படி பேசுவென்னு நான் நினைக்கல”. என்றார் ஐயப்பன்.
“ஒன்னா சேர்ந்து பிறந்த ரெட்ட பிள்ளைகளை பிரிக்கிறது பாவம் பா.
அந்த பாவத்தை நாம பண்ண வேண்டாம்.
பிள்ளைகளுக்கு அம்மா தான் இல்ல..
அப்பா இருக்காரு தானே, பிள்ளைகளை அப்பா கூட இருந்து பிரிக்கிறது மகா பாவம்” என்றவளுக்கு கண்ணீர் வந்தது.
இதை மொழியிடமிருந்து ரிஷி எதிர் பார்க்க வில்லை.
“அப்புறம் என்ன உங்க பொண்ணே சொல்லிட்டா, குழந்தைகளை எங்க கிட்ட விட்டுட்டு நீங்க கிளம்புங்க” என்றான் ரிஷி..
மகளை முறைத்த ஐயப்பன்.. “அவ சொன்னா நான் கேட்பேனா, எனக்கு என் பேரன் வேணும்” என்று அவர் நிற்க.
குகனும், தேவகியும் கூட ஐயப்பனிடம் சொல்லி பார்த்தனர், “ஒட்டி பிறந்த ரெட்டை பிள்ளைகளை பிரிக்குறது பாவங்க, அத நாம செய்ய வேண்டாம்.
நாம எப்பவேணுமுன்னாலும், வந்து குழந்தைகளை பார்த்துக்கலாம், பிள்ளைகள் வளரட்டும், அதற்கு பிறகு நாம முடிவு பண்ணலாம், எல்லாரும் வேதனையில இருக்கோம், கொஞ்ச பொறுமையா இருப்போம்” என்றனர்..
ஐயப்பனுக்கு மூத்த மகள் தன்னை விட்டு சென்றதை இன்னும் நம்பமுடியவில்லை, அதை ஏற்று கொள்ளவும் முடியவில்லை, தன் பேர பிள்ளைகளை பார்த்தாவது மனதை தேற்றலாம் என்று அவர் நினைத்திருக்க.
அதற்கும் வழியில்லாம் ஆகி விட்டதே, அவருக்கு ரிஷியை சுத்தமாக பிடிக்க வில்லை, தன் மகளோடு ஒரு வாரம் வாழ்ந்து விட்டு சென்றவர் இப்போ வந்து பேசுறார் என்ற கோபம்..
அப்படி பட்டவர் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்?.. அவருக்கு ராமமூர்த்தி, சுதா மீது நம்பிக்கை இருந்தது, தன் பேரப்பிள்ளைகளை நன்றாக பார்த்து கொள்வார் என்று, ஏனோ அந்த சின்ன பிள்ளைகளை தனியா விட்டு செல்ல மனம் வர வில்லை அவருக்கு.
சிறிது நேரம் பேரபிள்ளைகளை பார்த்திருந்தவர். பெத்த தகப்பனிடமிருந்து பிள்ளையை பிரிப்பது, பாவம் என்றே மனதில் தோன்றிய போதும், பிள்ளைகளை விட மனமில்லை, சரி குழந்தைகள் கொஞ்சம் வளரட்டும், தங்கள் வீட்டிற்க்கு கூட்டி செல்லலாம் என்று யோசித்தவர்,
“கிளம்பலாம்” என்று முடிவு எடுக்க.
அனைத்து சொந்தமும் ரிஷியின் வீட்டிலிருந்து சென்றிருக்க..
மொழி, குகன், தேவகி, ஐயப்பன் மட்டுமே இருந்தனர்…
ஐயப்பன் கிளம்பலாம் என்று சொன்னவுடனே தேவகியும், குகனும் கிளம்ப அருள்மொழி கிளம்புவது போல் தெரியவில்லை….
மொழி குழந்தையை வைத்துக்கொண்டே அமர்ந்திருந்தவள்.. கிளம்பாமல் இருக்க…
“அது சரி வராது பாப்பா நீ கிளம்பு, இப்பவே ஒரு மாசம் ஆச்சு, நாம போகலாம்” என்றார் ஐயப்பன்..
“இல்லப்பா, என்னால பிள்ளைகளை விட்டு வர முடியாது” என்றாள்…
“எனக்கும் தான் கஷ்டமா இருக்கு, பிள்ளைகளை விட்டு செல்ல, நாம நம்ம பிழப்பை பார்க்கணும் தானே, அதுக்காக இங்கேயே வா இருக்க முடியும், உனக்கு மேச் இருக்கே, கிளம்பு நீயும்” என்றார்…
“நான் மேச் ஆட போகலப்பா”, என்றாள் மொழி..
“புரியல பாப்பா, மேச் ஆட போகமா, இங்கே என்ன பண்ண போற”?, என்றார் ஐயப்பன்,.
“இல்லப்பா பிள்ளைகளை நானே இங்கேயிருந்து பாத்துக்கிறேன், சுதா அத்தையால இரண்டு பிள்ளைகளை பார்த்துக்க முடியாது”, என்று அவள் கூற.
ஐயப்பன் பேசுவதற்கு முன்.
ரிஷி பேசியிருந்தான்.
“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் மிஸ் மொழி, என் பிள்ளைகளை எனக்கு பார்த்துக்க தெரியும்.
நீ உன் குடும்பத்தை கூட்டிட்டு நீ கிளம்பு”, என்றான்.
“இல்ல அத்தையால பிள்ளைகளை தனியா பார்த்துக்க முடியாது” என்றாள் சுதாவை பார்த்த படியே. ரிஷியோடு பேசினாள், ஆனால் அவன் முகத்தை பார்க்காமலே பேசியிருந்தாள்..
” நான் பிள்ளைகளை பார்த்துக்க வேலைக்கு ஆள் வர சொல்லி இருக்கேன், அவங்க நாளைக்கு வந்துடு வாங்க, அவங்க வந்து பார்த்துப்பாங்க, நீங்க உங்க வேலையை பார்க்க கிளம்புங்க மொழி, இந்தியா கிரிக்கெட் டீமே, உனக்காக காத்திருக்கு, கிளம்பு நீ” என்றான்.
அவளோ அசையாமல் நின்றிருக்க,.
‘பாப்பா வா”, என்று ஐயப்பன் அழைக்க நகரவில்லை அவள்..
குகன் மொழியிடமிருந்த குழந்தையை வாங்கி ராமமூர்த்தியிடம் கொடுத்தவன், “வா” என்று அவளின் கை பிடித்து இழுத்து செல்ல.
“குகா என்னை விடு, நான் வரமாட்டேன், வரமாட்டேன்” என்று அவள் கத்த,
குகனுக்கு பயங்கர கோபம், “அக்கா வா, நம்ம வீட்டுக்கு போகலாம் வா” என்று அவன் அவளை வாசலுக்கு இழுத்து செல்ல.
“அவளோ பிலீஸ் டா என்னை விடுடா, என்னால வர முடியாது டா, பிலீஸ்டா பிள்ளைகளை விட்டுட்டு என்னால வர முடியாது குகா”, என்று அவள் அழ.
“நான் குழந்தையை விட்டு வரமாட்டேன், குழந்தைகளை வளர்க்குறது தான் எனக்கு முக்கியம்” என்றாள் திடமாக.
ஐயப்பன் மொழி செய்வதை பார்த்து ஓய்ந்து போனார். என்ன செய்வது என்று தெரியாமல்….
தேவகி மகளிடம் வந்தவர், “என்னடி பண்ணிட்டு இருக்க, ஒரு மாசம் இங்கே இருந்ததே பெருசு, நாம, நம்ம வேலையை பார்க்க போக வேண்டாமா? இங்கயே வா இருக்க முடியும், பிள்ளைகளை விட்டுட்டு போறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு, அதுக்காக இங்கேயே வா இருக்க முடியும், கிளம்பு பாப்பா, சுதா அண்ணி பாத்துப்பாங்க, அவங்களுக்கு முடியலன்னு சொன்னா அப்பறம் நாம என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம், கிளம்பு” என்று தேவகி கூற.
“என்னால முடியாது பிள்ளைகளை விட்டு என்னால் வர முடியாது அங்கு வந்துட்டு பிள்ளைங்க என்ன பண்றாங்களோ, பால் குடிச்சாங்களா, தூங்கினாங்களா, அழுதாங்களா? அது தெரியாம என்னால முடியாது, பிள்ளைகளை விட்டு எனக்கு இருக்கவே முடியாது” என்றாள்
“அப்போ இங்க தான் இருக்க போறியா” என்றவருக்கு
பயங்கர கோபம் மகளை முறைத்து பார்த்தவர். “எத்தனை நாளைக்கு இங்கே இருப்ப”? என்றார்..
“குழந்தை வளருற வரைக்கும் இங்கே இருப்பேன்”, என்றாள்..
“அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்று தேவகி சொல்லும் முன் ரிஷி சொல்லியிருந்தான்..
“பாத்தியா மாப்பிள்ளை சொல்லிட்டாரு அவர் பிள்ளையை அவரே பார்த்துப் பாரு நீ கிளம்பு” என்றார்..
முடியாது என்பது போல் மொழி தலையாட்ட, பளார், பளார் என்று அறைந்திருந்தார் மகளை தேவகி.
மொழியை அடித்ததும், சுதாவுக்கு மனது தாங்கவில்லை, தன்னிடம் இருந்த குழந்தையை தொட்டிலில் படுக்கவைத்து விட்டு மொழி அருகே வந்தவர்,.
அடிக்காதீங்க சம்மந்தி என்று தேவகியை பார்த்து சொன்னவர்.
அங்கே கண்ணீல் நீரோடு நின்ற மொழியின் அருகில் வந்து நின்றவர்..
“அத்த குழந்தை நல்லா பாத்துக்குறேன் டா, நீ போய் உன் வேலையை பாரு அத்தைக்கு கஷ்டமா இருந்தா ஆளுங்கள போட்டு குழந்தையை பாத்துக்குறேன், நீ கவலை படாதே டா, நீ எத்தனை நாளைக்கு இங்கே இருக்க முடியும் சொல்லு, கவலைபடாமா கிளம்பு, அத்தை பாத்துக்கிறேன்” என்று மொழிக்கு நிதானமாக சுதா எடுத்து சொல்ல.
“போக மாட்டேன்” என்பது போல் தலையாட்டியவள்.
“எங்க அக்காவை தான் விட்டுட்டேன் அவ பிள்ளையும் தனியாக விட்டுட்டு என்னால போக முடியாது அத்தை, என்னை போக சொல்லாதீங்க,.
காசுக்கு வேலை பாக்குறவங்க பிள்ளைகளை எப்படி நல்லா பார்த்துப்பாங்க? உங்களால ரெண்டு பிள்ளையை பார்த்துக்க முடியுமா? எவ்வளவு கஷ்டம்..
நம்ம மூணு பேர் சேர்ந்து ரெண்டு பிள்ளைகளை பார்த்துக்க முடியல. நீங்க தனியா எப்படி பாப்பீங்க நைட் பிள்ளைங்க பாலுக்கு அழுவாங்க வேலைக்கு வர்ர வங்க, கண்முளிச்சு எப்படி குழந்தைக்கு பால் கொடுப்பாங்க, கண்டிப்பா நல்லா பாத்துக்க முடியாது ஏனோ, தானோன்னு பிள்ளைகளை பார்த்துக்குவாங்க, பணத்திற்காக வருறவங்க தன் பிள்ளை மாதிரி எப்படி பார்த்துப்பாங்க, என்னை மாதிரி பிள்ளைகளை யாரு பார்த்துப்பா,
பிள்ளைகளை நான் வளர்க்கணும், நல்லபடியா, என் அக்காவை தான் விட்டுட்டேன், என் அக்கா பிள்ளைகளை நான் யாரை நம்பியும் விட முடியாது, யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்” என்று அவள் கூற.
சின்ன மகள் பேசியதே கேட்ட ஐயப்பனுக்கும் கஷ்டமாக இருந்தது தேவகியோ பெரிய மகளை நினைத்து அழுதார், குகன் அமைதியாக இருந்தான்.
மொழி பேசியதை அனைத்தும் கேட்ட ரிஷி இவள் கண்டிப்பாக தன் பிள்ளைகளை விட்டு செல்ல மாட்டாள் என்று தோன்ற அவளின் கையை பிடித்து வேகமாக இழுத்துக்கொண்டு வீட்டின் வாசல் வெளியே வந்தவன்.
“என் பிள்ளைகளை வளர்க்க எனக்கு தெரியும், யார் உதவியும் வேண்டாம்” என்றான்.
மொழியின் கையை பிடித்து இழுத்ததுமே தேவகி, குகன், ஐயப்பன் என்று அனைவரும் வெளியே வர..
“உங்க பொண்ணை கூட்டிட்டு கிளம்புங்க” என்று ஐயப்பனை பார்த்து சொன்னவன். கதவை உள் பூட்டி விட்டு உள்ளே சென்றான்…
இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது, இந்த அசிங்கம் தேவையா?என்று மகளை அங்கேயிருந்து கிளம்ப சொல்ல…
அவளோ வர மாட்டேன் என்பது போல, ரிஷியின் வீட்டு வாசல் படியில் அமர்ந்துக் கொண்டு வரமாட்டேன் என்று தலையாட்ட..
ஐயப்பன் மகளிடம் என்னென்னவோ பேசினார் அனைத்தும் காதில் வாங்கியவள் அமைதியாகவே அமர்ந்திருக்க…
தேவகிக்கு ரிஷி கதவை பூட்டியது வேதனையாக இருந்தது, இப்படி வெளியே அனுப்பி கதவை சாத்தி விட்டாறே, என்ற வருத்தம்.
அவரும் பெரிய மகளின் இழப்பில் இருந்து மீண்டு வரமுடியவில்லை, அருள்ஜோதி இறந்துவிட்டதை நினைத்து அழுவதா, அந்த ரெண்டு பிஞ்சு பிள்ளைகள் தாயில்லாமல் வளர்வதை நினைத்து வேதனை படுவதா, சின்ன மகள் பிடிவாதம் எங்கே போயி முடியுமோ, என்று வேதனை கொண்டார்…
ஐயப்பனுக்கு புரிந்து விட்டது மகள் பிள்ளைகளை விட்டு வர மாட்டாள் என்று, ஆனால் அது மாப்பிள்ளைக்கு பிடிக்க வில்லை, என்ன செய்ய முடியும்.
“மொழி எழுந்திரு, அவர் பெரிய இவர் மாதிரி உன்னை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டார், இன்னும் இங்கே இருந்து அசிங்கம் பட போறீயா,, வா பாப்பா நம்ம வீட்டுக்கு போலாம்” என்று அழைக்க.
அவளோ வரமாட்டேன் என்று தலையாட்ட,..
தேவகி ரிஷி கதவை சாத்தியதும் கோபத்தில் இருந்தவர். சின்ன மகளை பார்த்து “நீ என்ன தான் நெனச்சுட்டு இருக்க மனசுல, உன் அக்கா போன இடத்துக்கே எங்களை அனுப்ப போறீயா” என்றவர்,..
பெரிய மகளை நினைத்து அழ.
தாய் அழுவதை பார்க்க முடியாத மொழி.
தேவகியின் பக்கத்தில் வந்து, அவரின் கையை பிடிக்க வர.
“என்னை தொடாத என் பேச்சை கேட்க மாட்ட, என்னை எதுக்குடி நீ தொடுற.
உன் அக்கா போனது உனக்கு மட்டுமா இழப்பு, எனக்கும் தானாடி பெரிய இழப்பு, அவ உன்கூட பிறந்தவ, நான் அவளை பெத்தவடி, பெத்தவ வயிறு அவளை நினைத்து கலங்குது, அது உனக்கு தெரியுமா, நான் ஏன் அத அடக்கி கிட்டு இருக்கேன், உங்க ரெண்டு பேரும் வாழ்க்கைக்காக” என்று குகனையும் மொழியை பார்த்து கூறியவர்..
“போனவா போயிட்டா, நான் அடுத்து உங்க வாழ்க்கையை பார்க்க வேண்டாமா, அதுக்காக நான் என் பேர பிள்ளைகளை விட மாட்டேன், நாம அடிக்கடி வந்து பார்த்துக்கலாம், உன்ன இங்க விட முடியாது பாப்பா, உன் வாழ்க்கை எங்களுக்கு முக்கியம், அம்மா சொன்னத கேளு வா, நாமா கிளம்பலாம்” என்று கூற.
மொழி தேவகியின் மடியில் படுத்து கதறி அழுதாள், “என்னால குழந்தைகளை விட்டு வரமுடியாது மா”. என்று,
தேவகிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை,..
அவர் அவர் கணவரை பார்க்க, அவருக்குமே என்ன செய்வதென்றே புரியவில்லை.
இரண்டு பேரும் சின்ன மகள் பிடிவாதத்தை பார்த்து பயந்தனர், இது வரைக்கும் மொழி எந்த விசயத்திற்க்குமே பிடிவாதமாக இருந்ததில்லை, கிரிக்கெட் ஆடுவாள், திட்டினாள் அமைதியாக இருப்பாளே தவிற எதுத்து பேச மாட்டாள்.
இந்த பிடிவாதத்தை பார்த்து பெற்றோருக்கு பயம் வர.
சுதா கதவை திறந்து வந்தவர், “சம்மந்தி எங்களை மன்னிக்கவும், என் பையன் கதவை சாத்தியது தப்பு தான், அவன் ஏதோ கோபத்துல பண்ணிட்டான்,.
உங்களை மன்னிச்சிடுங்க” என்று அவர் மன்னிப்பு கேட்க.
பரவாயில்ல சம்மந்தி, “மொழியை எங்க கூட வர சொல்லுங்க” என்று தேவகி சுதாவிடம் கூற.
மொழியை பார்த்தார், கன்னம் வீங்கி அழுது, அழுது வீங்கிய முகத்தோடு தன் பேரப்பிள்ளை வளர்க்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவளை பார்த்தவர்,.
“மொழி” என்று அழைக்க.
அவரை திரும்பி பார்த்த மொழி..
“என்னை போக சொல்லாதீங்க அத்தை” என்றவள் கதறி அழ.
அதை பார்த்த அனைவருமே அழுதனர்,.
மொழி அழுததும் தாங்க முடியாத சுதா, அவரும் அவளை அணைத்துக்கொண்டு அழுதவர்..
தேவகியை பார்த்த சுதா , “கொஞ்ச நாள் மொழி இங்க இருக்கட்டுமே, பிலீஸ் தேவகி” என்று அவரிடம், கேட்க.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவர் கணவரை பார்க்க.
ஐயப்பன் மனைவியை பார்த்து வேண்டாம் என்று தலையாட்ட.
“சம்மந்தி கொஞ்ச நாள் மொழி இங்கே இருக்கட்டுமே”, என்று ஐயப்பனை பார்த்து அவர் கேட்க..
“இல்ல சம்மந்தி அது முடியாது, ரிஷி மாப்பிள்ளைக்கு மொழி இங்கே இருக்குறது புடிக்கல நாங்க எங்க மொழியை கூட்டிட்டு போறோம், ஒரு பொண்ணு வாழ்க்கை தான் போச்சு, இன்னொரு பொண்ணு வாழ்க்கையை நான் வீணடிக்க முடியாது” என்றவர்.
குகனை பார்த்த ஐயப்பன்..
“காரை ஸ்டாட் பண்ணு”, என்றவர்.
மொழியின் கையை பிடித்து இழுத்து செல்ல.
“அப்பா நான் வரல, வரலப்பா அப்பா பிலீஸ் பா”, என்று மொழி அழ.
ஐயப்பன் கார் கதவை திறந்து மொழியை இழுத்த படியே காரில் ஏறிகதவை மூட
கார் கிளம்பியது, சுதா மொழி கதறுவதை பார்த்த படியே அமர்ந்திருந்தார்,..
ராமமூர்த்தி அவர்கள் சென்றது, மனைவிடம் வந்து “சுதா”, என்று அழைக்க.
“இந்த மொழியை நம்ம ரிஷிக்கு கல்யாணம் பண்ணி வச்சுடலாமா” என்று கூற.
“என்ன பேசுற சுதா நீ!, உன் மருமக செத்து ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள உன் மகனை புது மாப்பிள்ளையாக்க போற நீ “.. என்று அவர் வேதனையில் கூற.
“இல்லங்க மொழியை தவிற என் பேரபிள்ளைகளை யாரும் நல்லா பாத்துக்க முடியாது, நீங்க வேன பாருங்க மொழி கண்டிப்பா திரும்பி நம்ம வீட்டுக்கு வருவா”, என்று கூற.
ராமமூர்த்திக்கு என்ன நடக்க போகுதோ என்று அவர் குழம்பி நின்றார்.?.