Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 13 1

கலாட்டா – 13

அந்த அதிகாலை வேளையிலே தேனி SP அலுவலகம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.



Advertisement

  ” MP மருதராஜன்  அவர்களின் மகன் கதிரவனை SP சுந்தர பாண்டியன் அவர்கள் இன்று அதிகாலை அதிரடியாய் போடி மெட்டில் வைத்து கைது செய்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் சம்பவத்திற்கு பின்னால் ஏதேனும் வலுவனா காரணம் உள்ளதா?? இல்லை இது எதிர்க்கட்சியினரின் திட்டமிடப்பட்ட சதியா?? என்று பொதுமக்கள் குழம்பியுள்ள நிலையில் காவல்துறை தரப்பில் இருந்து இப்போது வரை எந்தவொருவித அதிகாரப்பூர்வமான பதிலும் வராமல் இருப்பது மக்களுக்கு மிகுந்த  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மருதராஜின் ஆதரவாளர்கள் வேறு காவல் நிலையத்தின் முன் நின்று கலவரம் மேற்கொள்ள, அமைதியான அதிகாலை வேளை தேனி மக்களுக்கு மட்டும் ஆர்ப்பாட்டமாக விடிந்துள்ளது” என்று செய்தி வாசிப்பாளர் தன் பணியை செய்து கொண்டிருக்க,

Advertisement

அதை தன் போனின் திரையில் நிர்ச்சலனமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தர பாண்டியன்.

Advertisement

அப்போது அவரின் அறைக்கதவை தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் சத்யன், SPக்கு வணக்கம் வைத்து விட்டு, ” சார் வெளிய அந்த MP ஆளுங்க ரொம்ப வயலன்ட்டா இருக்காங்க சார்.. அதுவும் இல்லாம நாம இன்னும் அந்த கதிரவனை அரெஸ்ட் பண்ணதுக்கான ரீசன் வேற வெளிய சொல்லாம இருக்கது மக்களுக்கே நம்ம மேல தப்பான எண்ணத்தை தோண வைக்கிது சார்.. வெளியே மீடியா ஆளுங்க வேற உங்ககிட்ட பேசியே ஆகணும்ன்னு வெய்ட் பண்ணுறாங்க.. என்ன பண்ணலாம் சார்” என்று வெளியில் உள்ள நிலவரத்தை எடுத்துக் கூற,

Advertisement

அப்போதும் பெரிதாய் ஏதும் அலட்டிக்கொள்ளாதா சுந்தர பாண்டியன், “என்னன்னு போய் சொல்ல சொல்றீங்க சத்யன்?? அந்த கதிரவன் தன்னோட ஸ்கூல்ல படிக்கிற பொண்ணுங்களுக்கு கேன்டீன் ஃபுட் மூலமா போதை மருந்து சப்ளை பண்ணி அந்த பொண்ணுங்களை தன்னோட இச்சையை தீர்த்துக்க பயன்படுத்தி அதை வீடியோ எடுத்து அந்த பொண்ணுங்களை வெளியே வாயைத் திறக்க விடாம பண்ணிட்டு இருக்கானு போய் சொல்ல முடியுமா?? சொன்னா உடனே அதை இந்த சமுதாயம் தான் நம்பிடுமா?? இல்லை MP சார் மிஸ்டர் மருதராஜன் தான் நம்ப விட்டுடுவாரா?? இதை வெளிய சொன்னா அந்த பொண்ணுங்க யாரு அதுக்கான ப்ரூஃப் என்னன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பானுங்க நம்ம ஆளுங்க .. இதெல்லாம் வெளிய சொல்லி அந்த பொண்ணுங்களோட லைஃப்பை ஸ்பாயில் பண்ண சொல்றீங்களா சத்யன்? ” என்று அமைதியாக அதே சமயம் அழுத்தத்துடன் கேட்டார் அவர்.

இவையனைத்தும் முன்பே தெரிந்திருந்தாலும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் வெளியே காத்திருக்கும் மக்களுக்கும் ஊடகத்திற்கும் பதில் சொல்லியே தீர வேண்டிய கட்டாயம் இருப்பதால், ” அது எல்லாம் எனக்கும் புரியுது சார்.. ஆனா ஒருத்தரை கைது செய்தா அதுக்கான வேலிட் ரீசன் நம்ம புரோடியூஸ் பண்ணியே ஆகணும்.. அதுலயும் இவன் MP பையன் வேற.. மேலிடத்துல இருந்து ரொம்ப பிரஷர்.. அதோட கட்சி ஆளுங்க வேற ரொம்ப வயலன்டா இருக்காங்க.. இப்படியே போனா நம்மளால கன்ட்ரோல் பண்ண முடியாது சார்.. சோ நீங்க என்ன பண்ணலாம்னு சீக்கிரம் முடிவெடுக்கனும்” என்று சத்யன் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தினார்.

அதை உள்வாங்கிக்கொண்ட சுந்தர பாண்டியன் ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தவர், பின் ஒரு தெளிவோடு , ” சத்யன் அந்த பீரோக்குள்ள ஒரு பிங்க் கலர் ஃபைல் இருக்கும் அதை எடுத்து படிச்சு பாருங்க” என்று அவருக்கு ஆணையிட,

‘ இப்போ எதுக்கு இது ‘ என்று தோன்றினாலும் அதை காட்டிக்கொள்ளாமல் தன் மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்ற அந்த கோப்பை எடுத்து புரட்ட துவங்கியவரின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அந்த கோப்பு முழுவதையும் வாசித்து முடித்த சத்யன் கண்களில் கலவரத்துடன் SPயை நோக்கி, ” சார் என்ன சார் இது.. போன மாசம் மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல குண்டு வைக்க பிளான் பண்ணி செட் பண்ணி பிடிபட்ட அந்த நான்கு தீவிரவாதிகளில் இருந்து தப்பித்து போன மிச்சம் ஒருவன் தான் இந்த கதிரவன் அப்படின்னு ஆதாரம்லாம் ரெடி பண்ணி ஐஜி கிட்ட ரிபோர்ட் பண்ணிருக்கிங்க… இது எப்போ சார் நடந்தது?? ஐஜி எப்படி இதுல சைன் பண்ணாரு.. இது மட்டும் வெளிய தெரிஞ்சதுனா பெரிய கலவரமே நடக்க போகுது சார்” என்று அவர் அச்சத்துடன் கூற,

ஒரு புன்சிரிப்புடன் அவரை ஏறிட்ட சுந்தர பாண்டியன், “என்ன சத்யன் ஒரு போலீசா இருந்துட்டு இப்படி பயப்படுறீங்க …  பெண்கள் நம் நாட்டின் கண்கள்.. பெண்களை தெய்வமா வணங்குற மண்ணுய்யா இது .. அப்படி இருக்க, பெண் குழந்தைகளை இப்படி சீரழிக்கும் இவனும் தீவிரவாதியை விட மோசமானவன் தான்.. மத்த எந்த கேஸ்ல இவனை போட்டாலும் ரெண்டே நாள்ல வெளிய வந்திருவான் .. அதான் இவனை வெளியவே வர முடியாதபடி மொத்தமா வச்சு செய்ய ஒரு மாசமா தேடி தேடி இந்த பொய்யான ஆதாரங்களை ரெடி பண்ணி ஐஜி கிட்ட சப்மிட் பண்ணேன்.. அடிப்படையில அவரும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா தான அதுனால அவரும் இதை சைன் பண்ணி மேலிடத்துக்கு அனுப்பிட்டாரு.. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் வாங்க.. நான் இதை மீடியாகிட்ட சொன்னதும் அங்கங்க கலவரம் வெடிக்கும்.. சோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையா நம்ம ஆளுங்களை எல்லா பப்ளிக் பிளேஸ்ககும் போய் கவர் பண்ண சொல்லுங்க .. நான் போய் மீடியாகிட்ட பேசிட்டு வரேன்” என்று அவர் செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு கூறியவர், ஒரு நொடி நின்று, ” கொஞ்சமாச்சும் கவர்மென்ட் கொடுக்குற காசுக்கு வேலை பாருங்க சத்யன்.. MP கொடுக்குற காசுக்கு வேலை பார்த்து இத்தனை நாளாக என்னை ஏமாத்தி அந்த கதிரவனை காப்பாத்தினது போதும்.. ஏன்னா நீங்களும் ஒரு பொண்ணைத்தான் பெத்து வச்சிருக்கீங்க.. மத்த பொண்ணுங்களுக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கே நடக்கலாம்.. சோ இந்த ஆதாரத்தையும் அழிச்சிடலாம்னு அப்படின்னு ஏதும் எண்ணம் இருந்தா அதை இப்போவே மனசுல இருந்து அழிச்சிடுங்க .. இல்லை???” என்று அந்த வாக்கியத்தை முடிக்காமல் அவரை அழுத்தமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தார் சுந்தர பாண்டியன்.

தன் குட்டு வெளிப்பட்டு விட்டதில் விக்கித்து நின்ற அந்த MPயின் விசுவாசியான சத்யன், இதற்கும் மேல் MPக்கு உதவி செய்தால் தன் வேலை மட்டுமல்லாது உயிருக்கே உலை வைத்து விடுவார் சுந்தர பாண்டியன் என்று உணர்ந்து வேறு வழியின்றி சுந்தர பாண்டியன் சொல்லிவிட்டு சென்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.

ஊடகத்தை சந்தித்த சுந்தர பாண்டியன் தான் போட்டு வைத்திருந்த திட்டத்தின் படி கதிரவன் ஒரு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்று கூற அவர் எதிர்பார்த்தபடியே தேனி மாநகரம் முழுவதும் கலவரம் வெடிக்க மக்கள் அனைவரும் அல்லாடினர்.

முன்பே அமைத்து வைத்திருந்த பாதுகாப்பு படைகள் தங்களால் முடிந்த அளவிற்கு நிலமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தாலும், MP ஆதரவாளர்களின் ஆவேசம் கட்டுப்பாடில்லாமல் காட்டாற்று வெள்ளமாய் பெருக்கெடுக்க, பல ஆயிரம் ஜனங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாய் பாதிக்கப்பட்டது.

” செல்லாத்தா செல்ல மாரியாத்தா

எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா

இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா”

என்று பக்தி மனம் கமழ எல்.ஆர். ஈஸ்வரியின் குரல், பிரபலமான வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலை நிறைத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!