Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே… Final 4

 குழந்தை அச்சு அசல் மொழி போலவே இருந்தாள்.



Advertisement

 அனைவருக்கும் குழந்தையை பார்க்க ரிஷியும் எட்டி மகளை   பார்த்தான். மொழியின் ஜாடையில் தான் இருந்தாள் குழந்தை…

 குழந்தையை பார்த்ததும் ஐயப்பனும் தேவகியும் அழுதனர்..

Advertisement

Advertisement

 “ஏன் சம்மந்தி   அழுகுறீங்க” என்றார் ராமமூர்த்தி.

 “என் பெரிய பொண்ணு அருள்ஜோதி மாதிரியே இருக்குது  குழந்தை, அவளும்  பிறந்தப்போ, இப்படிதான் இருந்தா, சுருட்ட முடி நெத்திக்கு மேல முடி இருக்காது, அருள்மொழிக்கு  அப்படி கிடையாது அவளுக்கு நெத்தி ஃபுல்லா முடி இருக்கும் ஆனால் அருள்ஜோதிக்கு நெத்தியில முடி இருக்காது அதே மாதிரி பிறந்து இருக்கா, என் பேத்தி” என்றார் ஐயப்பன்.

Advertisement

 தேவகி அப்போதுதான் குழந்தையை உற்றுப் பார்த்தவர் கணவனை கட்டிக்கொண்டு அழுதவர்.

 “நம்ம பெரிய பொண்ணு சாகலங்க நம்மளுக்காக உயிர் எடுத்து பிறந்த வந்து இருக்கா,.

 இதோ இருக்காலே என் பொண்ணு ஜோதி  வந்துட்டா, ஏன்மா அழுகுற என்ன நெனச்சு,  நான் வந்துடுறேன் மா, என்ன பாத்துக்கோ பத்திரமா என்று என் சின்ன மகள்  வைத்துல இருந்து  போறந்து வந்து இருக்கா,  இனி நான் அழ மாட்டேன்..

 இதோ வந்துட்டாளே என் அருள்ஜோதி  முதல் பொண்ணு,  இனி நான் அழவே மாட்டேன்” என்றவர் கண்களை துடைத்துக் கொண்டு தன் பேத்தி அணைத்து வைத்துக் கொண்டு மௌனமாக அழுதார் பெரிய மகளை நினைத்து.

 அங்கே இருந்த  அனைவருக்கும் மனம் பாரமாக இருந்தது ஐயப்பனும் தேவகியும் சொன்ன செய்தியில்.

 ரிஷி உடைந்தே போனான் ஜோதியின் ஞாபகத்தில்.

 ஒருவேளை என்னோடு வாழ  முடியாது என்று எனக்கு மகளாகப் பிறந்து வந்துவிட்டாளோ என்று கூட தோன்றியது அவனுக்கு.

 மனது மிகவும் வலித்தது ரிஷிக்கு ஏன் என்று புரியவில்லை.

 அனைவரும் குழந்தையை கொஞ்சி விட்டு கடைசியாக் தான் ரிஷியிடம் கொடுத்தார்கள்.

 நடுங்கும் கையோடு தன் குழந்தையை வாங்கியவன்.

 குழந்தையின்  முகத்தைப் பார்க்க அதுவோ அவனை  பார்த்து சிரித்து கண்களை சிமிட்டி கண் மூடியது..

 குழந்தையின் அழகில் தன்னை தொலைத்தவன் “சாரிடா” என்று குழந்தையை அணைத்துக் கொண்டான்.

 மொத்த குடும்பத்திற்கும் இரட்டிப்பு சந்தோஷம் இறந்து போன அருள்ஜோதியே  திரும்ப  பிறந்து வந்து விட்டாள் என்று அந்த குடும்பம் நம்பியது.

 அருள்மொழிக்கு இந்த விஷயம் தெரியாது.

 அவள் மயக்கத்தில் இருந்தால் நார்மல் டெலிவரி தான் என்றாலும் மயக்கத்தில் தான் இருந்தாள்.,  அயர்வில் அவள் தூங்கிக் கொண்டிருக்க ரூமுக்கு மாற்றப்பட்டாள்.

 அனைவரும் மொழியை  ரூம் சென்று பார்த்து வந்தனர்.

 அவள்  நீண்ட நேரம் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள், கடைசியாக ரிஷி  அவளை பார்க்க  குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் அறைக்கு வந்தான்…

 சிறிது நேரத்தில் கண்விழித்தாள் மொழி.

 அவளைப் பார்த்து சிரித்தவனுக்கு மனது அவ்வளவு பாரமாக இருந்தது.

 அவன் முகத்தைப் பார்த்து அதை கண்டுபிடித்த மொழி “என்ன ஆச்சு ரிஷி” என்றாள்.

 ஒன்றுமில்லை என்றவன் குழந்தையை அவளுக்கு காட்ட.

 தன்னைப் போலவே இருந்த தன் மகளை பார்த்தவளுக்கு  ஆனந்தத்தில் கண்ணீர் வந்து விட்டது. மனைவியை தோளோடு அணைத்து கொண்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “எப்படி இருக்கா நம்ம பொண்ணு” என்றான்.

 “நீங்கதான் பொண்ணு, பொண்ணு என்று  ரொம்ப ஆசைப்பட்டீங்க அதே மாதிரி பொண்ணு பிறந்துட்டா ஹேப்பியா மச்சான் “? என்றாள்.

 “ரொம்ப ஹாப்பி டா” என்றான் ரிஷி.

 அனைவரும் ஒவ்வொருவராக வந்து மொழியிடம்  குழந்தையைப் பற்றி , குழந்தை  ஜோதி மாதிரி இருக்க என்று மொழியை   அணைத்துக் கொண்டு சொல்ல.

 மொழி ஆச்சரியமாக  குழந்தையை பார்த்தாள்.

 தேவகி மொழியை அணைத்து முத்தமிட்டவர்.

 குழந்தை பெரிய மகள் ஜோதி போல இருக்கிறார் என்று சொல்ல மொழிக்கு அதிர்ச்சியாக இருந்தது..

 ஐயப்பன் தான் விளக்கமாக மொழியிடம்  சொன்னார் “நீ இப்படி இருப்ப டா, ஜோதி இப்படி இருப்பா” என்று சொல்ல அதையே  நினைத்துக் கொண்டு குழந்தையை பார்த்தவளுக்கு தன் அக்காவே பிறந்து வந்து விட்டாளா? என்ற  நினைத்தவளுக்கு   சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது.

 சுதா  மொழியின் கண்ணீரை துடைத்து விட்டவர் “அழக்கூடாது எல்லாரும் சந்தோஷமா இருக்கோம்,. நம்மல விட்டு போன ஜோதியை நெனச்சு பட்ட கஷ்டம், துன்பம் வேதனை  எல்லாம் உன் குழந்தை வடிவில்  மீண்டு வந்து இருக்கு,  இனி உன்  மனசுல எந்த கவலையும் வேண்டாம் உன்  அக்காவா நினைச்சு உன் குழந்தையை வழ” என்றிருந்தார்.

 மொழிக்கு சந்தோஷமே.. அவள்  சந்தோஷமாக ரிஷியை  பார்த்தாள். ரிஷி பேருக்கு தான் சிரிப்பது போல தெரிந்தது.

 அவனுக்கு  அவன் குழந்தையை அனைவரும் ஜோதி ஜாடையில் இருக்கிறாள்  என்று  சொல்வது அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

 மெல்ல அந்த குற்ற உணர்விலிருந்து மீண்டு வந்து கொண்டு இருந்தான்.

 தன் மகளை  அவன் ஜோதி  வடிவில் பார்க்க  முடியவில்லை அவனால்.

 அனைவரும் வெளியில் சென்ற விட்ட போது ரிஷியை  தன் பக்கத்தில் அழைத்தாள் மொழி.

 அவன் மனநிலையை புரிந்து கொண்டவள்.

 “உங்களுக்கு உங்க மகள் ஏஞ்சல் அத நீங்க புரிஞ்சிக்கணும்,.

   எங்க அப்பா அம்மா  குழந்தையை என்  அக்காவுன்னு சொல்லுறாங்க. அவ  உங்களுக்கு உங்க பொண்ணு , என் பொண்ண வெறுத்திடாதீங்க” என்றாள்.

 “ஏய் என்னடி பேசற அவ தாண்டி என் ஏஜ்சல்..  தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனா,  இல்லையா குழந்தை நம்ம பொக்கிஷம் என்று,   நான் எப்படி டி  வெறுப்பேன்?  நீ தேவையில்லாம ஏதும் யோசிக்காத யார் என்ன சொன்னாலும் என்னுடைய ரெண்டு ஏஞ்சல் நீங்க போதுமா” என்றான்.

 மொழி சரி என்று தலையாட்ட.

 ரிஷியின்  குடும்பமும் மொழியின் குடும்பமும் சந்தோஷமாக குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

 ஐந்து வருடம் கழித்து.

 தன் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஸ்போர்ட்சில்  பெரிய ஆளாக வந்து கொண்டிருந்தார்கள்  அவர்களுக்கு ஸ்டேட் லெவல் சாம்பியன்ஷிப்  போட்டி  நுழைவு எண்ட்ரன்ஸில்  பதிவுக்காக காத்துக் கொண்டிருந்தாள் மொழி.

 “சைன் போடுங்க மேம்” என்று மொழியிடன் அப்ளிகேஷன் ஃபார்ம்மை  கொடுத்தாள்,

அந்த ஸ்போர்ட்ஸ் அகடாமியில் ஆபீசில்  பணி புரியும் பெண்.

 அருள்மொழி  மதர் என்ற இடத்தில் அருள் மொழி என்று சைன் போட்டு கொடுக்க.

 “சாரி மேம் நீங்க தப்பா  நேம் என்டர் பண்ணி இருக்கீங்க” என்றாள்  அங்கே ஆபீசில் செக்கில்  இருந்த பெண்.

 “சரியா தானே  போட்டு இருக்கேன்” என்றால் மொழி,

 “இல்லா மேம்  மதர் என்ற இடத்தில் அருள் ஜோதின்னு போடணும். நீங்க அருள் மொழியும் போட்டு இருக்கீங்க தப்பா  நேம் போட்டு இருக்கீங்க” என்று சொல்ல.

 மொழிக்கு என்ன செய்வது என்று கஷ்டமாக போனது பிள்ளைகள் இரண்டும் அவளை பார்த்துக் கொண்டிருக்க.

” நான் அருள்மொழி தான் என்றாள்”

 அந்த பெண்ணிற்கு  அனைத்து  ஆதாரங்களும் சரியாக இருக்கிறதா என்று  சரி பார்த்து,   செக் செய்து அனுப்பி வைக்க வேண்டும்,  ஆத்விக், சாத்விக் ப்பேர்த் சர்ட்டிவிகேட்டில் பிள்ளைகளின் அம்மா அருள்ஜோதி  என்று இருக்க.

“நீங்க அருள்மொழி  என்று பெயரை தப்பா போட்டு இருக்கீங்க நீங்க பிள்ளைகளோட அம்மா வா”?.. என்று கேட்க..

அவள் ஆமாம் என்றாள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!