Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே… Final 5

“அப்போ ஏன் தப்பா போட்டீங்க, அருள் ஜோதியின்னு சரியா போடுங்க” என்று புது பாம்ர்மை மீண்டும் கொடுக்க..



Advertisement

 அருள்மொழிக்கு அருள்ஜோதி என்று கையெழுத்து போட கை நடுங்கியது ஆத்விக்கும், சாதவிக்கும் அவள் பக்கத்தில் வந்து “அருள் ஜோதியின்னு சைன்  போடுங்கம்மா” என்றனர்..

Advertisement

 அவள் தயங்கி நிற்க.

Advertisement

 “எங்களுக்கெல்லாம் அப்பா சொல்லிட்டாரு மா எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் அருள் ஜோதியின்னு  பயப்படாம சைன் போடுங்க, நீங்க எங்க அம்மா” என்றனர்.

Advertisement

 மொழிக்கு பூமி  தலை கீழ் சுற்றுவது போல் இருந்தது பிள்ளைகளுக்கு என்னை பற்றி தெரிந்து விட்டதா? அவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லையே என்று நினைத்து  கண்ணீர் வர.

அவளின்  கண்ணீரை துடைத்து விட்ட பிள்ளைகள். “சைன் போடுங்க வீட்டுக்கு போகலாம்” என்றனர்.

 மொழி அப்ளிகேஷன் ஃபார்ம் பில்லப் செய்து, சைன் போட்டு அவர்களிடம்  அனைத்தையும்  சரிபார்த்து  வேலையை முடித்து விட்டு  நடந்து வர.

 ரிஷி  வேகமாக நடந்து வந்தான் இவர்களை பார்த்து.

 ரிஷியை  பார்த்தது மொழிக்கு அழுகை வந்தது  கணவனின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள் மொழி.

 மூன்று ஆண்களும் மொழியை தாங்கிய படியே வீடு வந்து சேர்ந்தனர்.

 வீடு வந்ததும் ரிஷியின்  தோளில் அடித்தால்  மொழி, “ஏன் சொன்னீங்க பிள்ளைங்க கிட்ட”என்று .

 “இந்த மாதிரி சூழ்நிலை எப்பயாச்சும் வரும்  என்று தெரியும் எனக்கு,  அப்ப நீ உடைஞ்சு போவேன்னு எனக்கு தெரியும் உன்னை தாங்கி பிடிக்க என் பிள்ளைங்க உனக்கு பக்க பலமா இருக்கணும் என்று  தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க கிட்ட நிதானமா  சொல்லி வச்சேன்  ” என்றான்..

 மொழி நிமிர்ந்து மகன்களை பார்த்து “அம்மாவை வெறுத்திட மாட்டீங்களேடா,  நான் உங்களுக்கு எப்பவும்  அம்மா தான்” என்றாள் அழுதபடியே.

 ஆதிவிக்கும்,,சாத்வீக்கும் அவளை அணைத்துக்கொண்டு “அம்மா அழாதீங்க, அப்பா எல்லாம் சொன்னாங்க, நீங்க எங்களை எப்படி வளர்த்தீங்கன்னு,   நீங்க எனக்கு அம்மாவுக்கு மேல் மா” என்றனர் இருவரும் அவளை அணைத்துக்கொண்டு..

 மொழிக்கு நீண்ட நாள் மனதில் உறுத்தி கொண்டிருந்த பாரம் நீங்கியது   போல இருந்தது அவள் சந்தோஷத்தில்  மகன்களை  அணைத்திருக்க.

 பள்ளிக்கு சென்று வந்த ரிஷியின் மகள்  ஜோவிகா ரிஷி,  “நானு” என்று அண்ணன்கள் அணைத்திருந்த தாயை ஓடி வந்து அண்ணன்களோடு சேர்த்து மொழியை  அணைத்துக் கொள்ள.

 சுதாவுக்கு மன நிறைவாக இருந்தது தன் பேரப்பிள்ளைகள் மொழியின் மீது வைத்திருக்கும் பாசத்தை  பார்த்து, இந்தப் பெண் மட்டும் சரியாக நேரத்தில்  என் குடும்பத்தில் வராமல் இருந்திருந்தாள் இன்று தன் பேரன்களை நான்  இப்படி வளர்த்திருக்க முடியுமா? என்று அவர் நினைத்திருக்க ..

 ரிஷிக்கும் அதே நினைவுதான் மொழி மட்டும் தன் அக்கா இறந்தவுடன் அப்படியே சென்று இருந்தாள்,  இந்த வாழ்க்கை தனக்கு அமைத்திருக்குமா மொழி மட்டும் தன் பிள்ளைகளை பார்க்கவில்லை என்றான் நான் என்னவாகி இருப்பேன்? என் குடும்பம் என்னவாக இருக்கும்? என்னை ஒரு குடும்பமாக மாற்றி  வாழ வைத்தது மொழிதான் என்று மனைவியை ஆசையாக பார்த்தான்.

 அந்தப் பார்வையின்  அர்த்தத்தை புரிந்த மொழி “டேய் உங்க அப்பா நம்மல  பொறாமையா பாக்குறாருடா,  அவரை போய் ஹக் பண்ணுங்கடா” என்று  மகன்களிடம் சொல்ல ஆத்விக்கும் சாத்விக்கும் மொழியிடமிருந்து பிரிந்து ரிஷி மேல் “டாடி” என்று தாவ.

அவனோ  நிக்க முடியாமல் சோபாவில் சரிந்தான்..

 அவன் சரியாவும் பிள்ளைகள் அவனை  அணைத்துக் கொண்டு சிரிக்கவும் சரியாக இருக்க.

 ஜோவிகாவிற்க்கு பொறாமையாக இருந்தது அவளின் தாயைக் கூட விட்டுக் கொடுப்பாள்.

 ரிஷியை யாருக்காக விட்டுக் கொடுக்க மாட்டாள்,அவனின் மகள். அண்ணன்களை தந்தையிடமிருந்து  பிரித்தவள் “நீங்க மம்மிகிட்ட போங்க நான் தான் அப்பா மேல் உட்காருவேன்” என்றவள் அண்ணன்களை பிரித்துவிட்டு தந்தையின் மடியில் உட்கார்ந்து கொண்டு. அவன் கழுத்தை கட்டிக்கொண்டு “ஐ லவ் யூ டாடி” என்று அவனை கொஞ்ச.

 மகள் செய்த காரியத்தை  நினைத்து சிரித்தவன் “லவ் யூ பேபி” என்று அணைத்துக் கொண்டான்.

 பிள்ளைகள் மூன்று பேரையும் தூங்க வைத்த மொழி ரிஷியிருக்கும்  அறைக்கு மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு  வர..

 ரிஷி  லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாலும் மொழியின் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தான்.

 மொழிக்கு   ரிஷி தன்னை பார்க்கவில்லை அவன்  என்று நினைத்து, அனைத்து பொருள்களையும் டம் டம் என்று சத்தத்தோடு எடுத்து வைக்க..

சத்தத்தை கேட்டு  சிரித்துக் கொண்டிருந்தவன்,  லேப்டாப்பை மூடிவிட்டு.

 அவளைப் பின் இருந்து  அணைத்து தூக்கி சுத்தி இருந்தான்…

 “விடுங்க ரிஷி நான் ரொம்ப கோவமா இருக்கேன்” என்றாள்.

 “என்னடி கோபம், உனக்கு என்ன கோபம், நம்ம  ரூமுக்குள்ள வரும்போது இந்த கோபம் எல்லாம்  இருக்க கூடாது, இந்த ரிஷி மட்டும்தான் உன் ஞாபகத்தில் இருக்க வேண்டும்”  என்று அவன் அவள் காதுமடலை  உரசிக்கொண்டு சரசம் பேச.

 மொழியின் கோபம் எங்கோ பறந்து விட்டது,.

 கணவன் கொஞ்சியது உருகியவள்.

 “இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மச்சான்” என்று சொல்ல,.

 “ஏய்  மச்சான்னு மட்டும் சொல்லாத  என்னை நானே  கண்ட்ரோல் பண்ண   முடியாது, அப்புறம் எக்கு தப்பா நடந்த அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றான் அவளை அட்டை போல ஒட்டிக்கொண்டு.

 “எப்ப பாரு அதே நினைப்புதான் இந்த மச்சானுக்கு” என்றாள்.

 “என்னை  உயிரோட கொல்லுடி  மொழிமா”  என்றவன் அவனை தூக்கி நான் மடி மீது வைத்துக்  கொண்டு கொஞ்ச.

  அவனின் கழுத்தை கட்டிக் கொண்டவள் “மனசு நிறைஞ்சு இருக்கு மச்சான்,  என் மனசுல இருந்து பாராம் எல்லாம் போச்சு” என்றவள் ரிஷியின  இதழில் வன்மமாக முத்தமிட்டு விலக.

“என்னடி நான் பண்றது எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க”  என்றான் ரிஷி சிரித்தபடியே…

 “அவ்வளவு சந்தோஷமா இருக்கேன் மச்சான்” என்றாள் அவனை இன்னும் நெருங்கி அணைத்த படியே..

 “என் ஏஞ்சல் சந்தோஷமா இருக்க காரணம் என்னவோ” என்றான் ரிஷி.

 “என் வாழ்க்கையில ஒவ்வொரு விஷயமும்  எனக்கு கிடைக்காதப்போ  நான் ஏங்குனேன், எனக்கு இது கிடைக்காதா,  எனக்கு இது அமையாதா?  எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காதா என்று. ஆனா எனக்கு எல்லாம் முதல்ல தப்பு தப்பா நடந்துச்சு, இப்போ எல்லாம் சரியா நடக்குது.

எனக்கு சரியான வாழ்க்கையே அமையாத  என்று என் மனசு நெஞ்சும் ஏங்குச்சு,,  இப்போ எல்லாம் கிடைச்சு என் மனசு நிறைஞ்சிருக்கு அதுக்கு காரணம் என் ரிஷிநந்தன் மச்சான்”  என்றவள் மறுபடியும் அவனுக்கு முத்தமிட்டு விலக..

 அவளை விலக விடாமல் பிடித்து அணைத்துக் கொண்டவன்

 “நீ சொன்ன  அதே டயலாக்   தான், நீ என்னை ஏமாத்திட்டு  போனப்போ என் மனசு உனக்காக ஏங்குச்சு எனக்கு நீ கிடைக்க மாட்டியா என்று  என் மனசும் உன்னை  நெனச்சு  ஏங்குச்சு,….

 இப்ப நீ என் கைக்குள்ள, என்  ஏங்குன மனசு எல்லாம் சரியா போச்சு..

 இனிமே நெஞ்சம் ஏங்குறதுக்கெல்லாம் ஒன்னுமே இல்ல, என் மனசு முழுக்க என் மொழி.

 என் மொழிமா” என்று உருகியவனின்   வாழ்க்கையே  வண்ணமயமாக மாறியது..

 விதி இவர்களில்  வாழ்க்கையில் விளையாடி அதில்  ஒருவர் உயிரையும் இழந்து,  மறுபடியும் இவர்கள்  இருவரும் இணைந்து ஒரு அழகான குடும்பமாய் உருவாகி, அவர்கள் நெஞ்சம் ஏங்கியது போல் நினைத்தவரின் கைகோர்த்து வாழும் வாழ்க்கை சொர்க்கம் போன்றது, ரிஷியும் மொழியும்  சந்தோஷமாக வாழ, வாழ்த்தி விடை பெறுவோம்,..

வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!