Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 30.2

 

நாம் 30(2)

 



Advertisement

   சமையல் அறை நுழைத்தவன்.. அங்கு மேகா எதையோ தேடிக் கொண்டுயிருக்க..

   ” என்ன தேடுகிறீங்க?. “  குரல்கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்.

   ” அது அதுவந்து.. டீ போட டீதூள் தேடினேன். ”

Advertisement

    வந்தவன் அடுப்பின் இடதுபக்கமிருந்து எடுத்தான். திலகன் இதனை பார்த்து.. ” என்னடா அவங்க என்னமோ..  பல வருடம் இருந்த வீடு போல..  டீ போட்டுறேனு வந்து தூள் தேடுறாங்க. நீ இங்க வர ஆரம்பித்து 15 நாள்தான் இருக்கும்.. அவங்க சொன்னவுடனே சரியா எடுக்குற. ” நக்கலாக மேகாவை பார்த்தும் பார்க்காதது போல கேட்டான்.

Advertisement

    வேந்தன் என்ன பிரச்சனை?. என்று அறிய முற்படவில்லை.. ஏற்கனவை அரசி மேகா, சத்யாவிடம்.. நடந்துக்கொள்ளும் முறைபற்றி மேலோட்டமாக கூறியிருப்பதால் ஒரளவு யூகித்தான். திலகனின் நக்கலான கேள்வியில் முழுதும்  புரிந்தது. வேந்தன் புன்னகையுடன் அவனை பார்த்துவிட்டு..

     திலகனை முறைப்புடன் பார்த்துக் கொண்டுயிருந்த மேகாவிடம்.. ” நானே டீ போட்டுகிறேன்.. நீங்க இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டுயிருந்த வேலைய பாருங்க. ” அவளின் பதிலை எதிர்பார்க்காமல்.

    ” திலகா, சத்யா உங்களுக்கு காபி போடுறேன். ” உன்னிடம் தேவையால்லாத பேச்சு என தானே களத்தில் இறங்கிவிட்டான்.

Advertisement

   ஏன்டா எங்களுக்கும் சேர்த்து போடமாட்டியோ?. ” வேந்தன் சத்யாவை பார்த்தான்.

   ” அண்ணா காபியே போடுங்க. எனக்கு டீயில் அதிகம் இஞ்சி போட்டா குடிக்கமாட்டேன். ” திலகனை பார்த்துவிட்டு கூற.. திலகனை பார்த்து (மாட்டினடா மகனே என ) வேந்தன் மெல்லிய புன்னகையை காண்பித்துவிட்டு.. தன் வேலையை செய்ய ஆரம்பித்தான்.

    திலகனோ.. என்னடா தியாவை பற்றி இதுகூட தெரியமா இருக்க?. ம்.. அவளிடம் இன்னும் நிறைய பழகவேண்டும் போலவே!.. வேந்தனின் பக்கத்தில் சத்யாவை பார்த்தவாறு நின்றுக்கொண்டான். 

   அவளோ இதை எதிர்பார்க்காததால்.. அதனை ஏற்க நாணம் கொண்டு சற்று திருப்பி.. ” அண்ணா நேற்று நல்லா என்ஜாய்  பண்ணிங்களா?.. ”

     ம்.. நல்லாவே என்ஜாய்  பண்ணினோம். ஆனா என்ன இவள மழையில் நனையாம இருனு.. எவ்வளவோ சொல்லியும் அடக்கமா.. நல்லா நனைந்து இப்ப காய்ச்சல் வேற வந்து படுத்துயிருக்கா. அங்கு அவ்வளவு பிடிவாதமும் பிடித்தா. .. ” அடுத்து ஆரம்பிக்கும் போது..

    ஆமா அண்ணா அவளுக்கு எப்போதும் பிடிவாதம் ரொம்பவே அதிகம். தான் சொல்வதை எல்லோரும் கண்டிப்பா கேட்க வேண்டுனு நினைப்பா. தான் பண்ணுவது தான் சரினு எல்லோரையும் கட்டாயபடுத்தியாவது செய்திடுவாவீட்டில் இருப்பர்களும் வேறு வழியில்லாம செய்திடுவாங்க. ” அவள் இன்னும் என்ன சொல்லியிருப்பாளோ..

   கொஞ்சம் பேச்சை நிறுத்துறீங்களா?. சரி உன் பெயர் என்ன?. ” கடுமையாக முறைத்து தன் எதிரில் இருந்தவளிடம் கேட்க..

    என்ன அண்ணா?. உங்களுக்கு என் பெயர் தெரியாதா?. நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறவ. ”

   வேந்தன் கூறியபின்.. சத்யாவின் முன் திலகன் தன்னை வேடிக்கையாக பேசுவது போல.. தன்னை நீ இந்த வீட்டு ஆள் என்று கூறி.. ஒன்றும் தெரியாமல்.. அங்கு அதிகம் பேசினாய்..  என்று நக்கலாக கூறியாதல் கடுப்புடன் தன் வேலையை பார்த்துக் கொண்டும்.. அதேசமயத்தில் அவர்கள் பேசுவதை கேட்பது போல அவர்களை பார்த்தவாறு.. கவனித்தாவாறு இருந்தவள்.. எழிலை பற்றி வேந்தன் கவலையுடன்.. பிடிவாதம் ஜாஸ்தி என்று கூறியதை.. கோபமாக கூறுகிறான் என நினைத்து அவள் கூற.. அவனின் இந்த கேள்வி அவளுக்கு குழப்பமாக, கோபமாகவும் இருந்தது.

     அதனால என்ன?.. நீ இப்ப அரசியின் அத்தைமகள், அருள்நிதி அண்ணாவோட தங்கை.. உனக்கும், இன்பாவிற்கு திருமணம் செய்யலாம் என பெரியவர்கள் பேசி வைத்துயிருக்கிறார்கள்.. இதுவரை உன்னை பார்த்தவுடன் நீ யாருனு?. எனக்கு தெரிந்து கொள்ளும் அளவிற்கு.. அறிந்து வைத்துயிருக்கிறேன். இதில் எனக்கு உன் பெயர் தெரிந்துயிருக்க வேண்டிய அவசியமில்ல. சரி இவ்வளவு நேரமும்.. யாரை அவனு பேசிட்டுயிருந்த?. “

     மேகாவிற்கு.. வேந்தனின் இந்தமாதிரியான கடுமையான பேச்சை.. இல்லை இல்லை எவரிடம் இந்த மாதிரியான கேள்வியை, கடுமையான முகத்தை பார்த்துயிறாததால் பயமும், அவமானமாகவும் இருந்தது.

   எழிலரசி மேகா இருவரும் சில மாதங்கள் மட்டுமே இடைவேளி என்பதால்.. இவள் விவரம் தெரிந்தது முதல் இவ்வாறு பேசியாதால் சட்டென்று மாற்ற தோன்றவில்லை.. விரும்பமும் இல்லை.

   எப்போதும் போல பேசி இவனின் கேள்விக்கு ஆள்ளானாள். ” அது எழிலரசிய பற்றி.. ”

    உன் பெயர்?.. ”

     மேகா. ”

     ம். இன்னைக்கு தான் கடைசி மேகா. இனி அரசிய அவ, இவனு பேசிடாத. மருமகள் என நீ.. சொல்வதுபடி பார்த்தாலும்.. வருங்கால கணவனோட தங்கையாவும், என்னைய அண்ணானு கூப்பிடவுடனேயும்..  அரசிய அண்ணி இல்ல இரண்டு பேருக்கும் சிலமாதங்கள் தான் வித்தியாசம் என்பதால் பேர் சொல்லி கூப்பிட்டுயிருக்கனும்.. இல்ல மரியாதையாவது கொடுத்துயிருக்கனும். எதுவும் பண்ணல.

    இனி அரசிய அண்ணி என்று தவிர வேறு எப்படியும் நீ கூப்பிடக்கூடாது. பிறகு நீ சொன்னது போல அரசி எப்படியிருந்தாலும் எனக்கு பிடிக்கும். இனி என்னிடம் இல்ல யாரிடம் அரசிய பற்றி குறைசொல்லவே.. ஏன் பேசவே கூடாது. அதை தவிர உன் வேலை என்னவோ அதை பார்த்தா உனக்கு நல்லது. ” இதுபோல வேந்தன் யாரிடமும் பேசியிருக்க மாட்டான்.. திலகனே அவனின் கடுமையான குரலில் அதிர்ச்சி கொண்டான்.

     வேந்தனுக்கும் தெரிந்தது.. இதுபோல் யாரிடமும் தான் பேசியது இல்லையென. வசுந்தரா.. அரசியை  பற்றி பேசினால்.. அவர்களுக்கு அரசியை பற்றி தெரியாது.. அதனால் அவள் பேசுவதை யாரும் கண்டுக்கொள்ளாமலும், அதனால் அவள் கூறுவதை எந்நாளும் ஏற்கும் சாத்திய கூறு குறைவு.

    ஆனால் மேகா மற்றவர்களிடம்.. ஒன்றுமில்லாத சிறிய விஷயம் பற்றி கூறினாலும் கூட.. அதை அப்படியே நம்பி.. தன்னவளை தவறாக நினைக்க வாய்ப்பு அதிகம் அதனாலேயே இந்த பேச்சு

   மேகா எந்த மறுப்பும் கூறாமல்.. தலை தானாகசரிதலையாட்டியது. சில நொடிகள் அங்கு அமைதி நிலவியது.

   ” மாமா.. மாமாஎன்றழைப்புடன் இன்பா வர..

   ” என்ன இன்பா?. என்னஇன்பா?. ” என வேந்தன், திலகன் ஒருசேர கேட்க.. வந்தவனோ முழிக்க. சத்யா புன்னகையுடன் பார்த்தாள்.

    இன்பாவை பார்த்த வேந்தன்.. ” இன்பா இனி நீ என்னைய மாமா என்றும்.. இவனை திலகன் மாமானு கூப்பிடு. சரியா. ” சரி என வேகமாக அசைக்க..

   “சரி எதுக்கு வந்த?. ”

   அது வந்து உங்கள எழில் கூப்பிட்டா.. நீங்க அங்க இல்ல.. பின்ன என்ன கூப்பிட்டா. நான் போய் அவள பார்த்து.. எல்லாம் செய்து முடித்து.. கீழ கூப்பிட்டு வந்துட்டேன். எழில் ஹாலில் உட்கார்ந்துயிருக்கா. ”

   அரசிய கூப்பிட்டு வந்துட்டேனு முன்னாடியே சொல்லாம.. வேற பேசவைத்துக் கொண்டுயிருக்க. ” வேகமாக டீயில் தேன் சேர்த்து தன்னவளிடம் வேகநடையுடன் சென்றான். அவனுடன் இன்பாவும், காபி கப்புடன் சத்யா, திலகனும் சொல்ல.. அவர்கள்  நால்வரையும் பார்த்தபடி தனியாக நின்றாள் மேகா.

    ஹாலிற்கு வந்தவன்.. எப்போதும் தன்னை பார்த்ததும்.. கண்களில் குறும்பும், புன்னகைமுகமாய் பார்க்கும் தன் முயல்குட்டி.. ஷோபாவில் கால்களை குறுக்கி படித்திருப்பதை பார்த்தவனுக்கு.. இனி மாதமாதம் தன்னவளை இவ்வாறு பார்க்க வேண்டிய சூழ்நிலை வருமே என்று மிகவும் வேதனையாக  இருந்தது

    அவளின் தலையை தன்மடியில் வைத்து தலையை தடவியவாறே.. ” அரசி எழுந்து உட்காரு.. நான் இன்னும் ஒன்னுமே குடிக்கல.. இரண்டுபேரும் டீ கொஞ்சம் குடிக்கலாம். ”

    இஞ்சிடீ குடித்தாள்.. இந்நேரத்தில் அவளிற்கு புத்துணர்வு கொடுக்கும்.. ஆனால் அவள் மறுப்பு கூற வாய்ப்பு அதிகம் என்பதால் அவன் இவ்வாறு கூற.. அது வேலையும் செய்தது.

    அவனை படுத்தவாறு நிமிர்ந்து பார்த்தாள். தன்னவனின் கண்களில் தன்னை பற்றிய வேதனை தெரிய.. தான் இவ்வாறு இருந்தால்.. தன்னைவிட அதிகம் கலங்குவான் என நினைத்து.. மெதுவாக எழுந்து தனியாக உட்கார பார்க்க.. அவனோ யார் இருக்கிறார்கள்?.  என்று பார்க்கவில்லை.. தன்னவளை மிக அருகில் அமர்த்திக் கொண்டான். தன் முன்னால் பார்க்க.. இன்பா டீ கப்புடன் நின்றான்.

    மெல்லிய இதழ்விரிப்புடன் தன்னவளிற்கு கொடுக்க.. கைநடுங்க வாங்கியவள் மிகவும் கவனமாக பிடித்து குடிக்க ஆரம்பித்தவள்.. சிறிது மட்டுமே குடித்தாள். அதுவே வேந்தனிற்கு போதுமானதாக இருந்தது. அவளின் இடதுபக்கத்தில் இன்பா அமர.. அதன்பின் வேந்தன் குடித்து முடிந்தவன். 

    ” இன்பா ஷோபாவை தள்ளிவைத்து கீழ்விரிக்கும் மெத்தைய போடு.. உட்கார, படுக்க வசதியா இருக்கும். ”

   சரி என தலையசைக்க.. திலகன் ஷோபாவை தள்ளிவைக்க.. இன்பாவும், சத்யாவும் படுக்கை, தலையனை எடுத்துவந்து போட்டபின்.. இருவரும் மெத்தையில் அமர்ந்தார்கள்.

 

    திலகா சாப்பிட்டியாடா?.. ” ஆம்இல்லை என்பது போல தலையசைக்க.. ” டேய் ஏதாவது ஒருபக்கம் ஆட்டு. சத்யா நீங்க போய் சாப்பிடுங்க. நானும், அரசியும் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிடுகிறோம். ”

   இல்ல டா.. நாங்களும் நீங்க சாப்பிடும்போதே சாப்பிடுறோம். இப்பதானே காபி குடித்தோம். ” மற்ற இருவரையும் பார்த்தாவாறே சரிதானே என்பது போல பார்த்து கூறினான். அவர்களும் மறுப்பு கூறவில்லை. அனைவரையும் பார்த்த அரசி தனக்காகதான் என்று புரிந்துக்கொண்டு..

   ” சத்யா எல்லோருக்கும் இங்கயே எடுத்துவா. டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். ”

  சரியென தலையசைத்து.. சத்யா இன்பாவை வாங்க என சைகையில் கூறிவிட்டு சென்றாள். அரசிக்கு மேகா வந்து தெரியாது. அவளை சாப்பிட அழைக்க வேண்டுமே.

   சமையல் அறை சென்றவள் இடியாப்பத்தை.. இட்லி வைக்கும் பாத்திரத்தில் சூடுபடுத்த.. குரூமாவை தனியாக சூடுபடுத்தினால். இன்பா சாப்பாடு வைக்கும் பாத்திரங்களை எடுத்து வைத்தவன்.. காய்களை நறுக்கி கொண்டுயிருந்த மேகாவிடம் வந்தான். ” வா மேகா சாப்பிடலாம். ”

    மேகா எழிலை பற்றி கூறியதை இன்பா அறிந்தால்.. வேந்தனை விட இவன் அதிக கோபப்பட வாய்ப்பு உள்ளாதால் அவள் மிகவும் கவனமாக அனைத்து கோபத்தையும் முகத்தில் தெரியாதவாறு.. இன்பா முன் மறைத்திருந்தாள். தான் சிறிது வெளிகாட்டினாளும் அது தனக்கே திரும்பும் என்பதை அறிவாள். அதனால் இன்பா அழைத்தவுடன் கைகளை சுத்தம் செய்துவிட்டு.. குரூமாவை எடுத்து வெளியே வந்தாள்.

    அங்கு சிறிய நான்கு வாழைஇலை, தண்ணீர் இருக்க.. வட்டதட்டில் வாழைஇலை வைத்து ஒன்றுயிருந்தது. பின் மேகா அவளாகவே எடுத்து வைத்துக்கொள்ள.. இதனை யாரும் கண்டுக்கொள்ளாமல் உணவை சத்யா பரிமாறினாள்.

   வேந்தன் தன்னவளிற்கு ஊட்டியபடி அவனும் சாப்பிட்டான். இன்பா இதுபோல எப்போதும் செய்வதால் மேகா கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் மனதில் புதிதாக எழிலரசியின் மீது பகைமை உணர்வு வந்துயிருந்தது.

   எப்படிதான் இவளுக்கு என்று அமைகிறார்களோ?. இத்தனை நாளாக அண்ணாவாக இன்பா அவள் அறையில் தாங்கினான். இப்போது புதிதாக வந்தவன் நடு ஹாலில் வைத்தே தாங்குகிறான். இவளிற்கு எதிராக ஒன்றேனும் நடக்காதா?. இல்லை அதற்கான சமயம் வரும் நாளிற்காக காத்துயிருக்க தயாரானாள்.

 

   இவர்கள் சாப்பிடும் நேரத்தில் வேந்தனின் வீட்டிலும் வேந்தனை பற்றிய கேள்வியுடன் வசுந்தரா மாடிபடியிலிருந்து ஹாலிற்கு வந்தாள்.

   ” அம்மா அண்ணா இன்னும் வரல போல?. ” சித்ரா ஆம்.. என தலையசைக்க..

   ” ம்.. போனாவது பண்ணினாங்களா?. ”

   இல்ல வசும்மா.. நான் இரண்டு தடவை பண்ணினேன் எடுக்கலஅநேகமா போன் சைலண்டில் இருக்கும். அப்பாவிற்கு கால் பண்ணி பார்த்தா தெரியும். 

    ம் நாம்ம.. அண்ணா பற்றி  நேரடியா தெரிந்துக் கொள்ள முடியாதளவிற்கு நம்ம நிலைமைய மாறிடுச்சு. ஆனா அவர பற்றி எனக்கு பெங்களூரில் இருந்து.. இப்ப இங்க இருக்காரு தகவல் வந்தது. ” புரியாமல் சித்ரா பார்க்க..

    ” நந்தினி அண்ணி.. எனக்கு கால் செய்து.. உங்க அண்ணா பெங்களூர் வந்துயிருக்காங்களானு கேட்டு.. ஏன்னு தெரிந்த பிறகு.. இதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்று சொன்னாங்கநான் சொன்னப்ப யாரும் கண்டுக்கொள்ளாம இருந்திங்க. இப்ப அவங்க.. இனி யாரெல்லாம் சொல்லப் போறாங்களோ?.

   சரிம்மா. இதுக்கு நீங்க எப்படி சம்மதம் சொன்னீங்க?. பிறந்தநாள இங்கேயே கொண்டாட வேண்டியது தானே. இப்பவே என்ன அவரசமா?. அங்க போய் கொண்டுவதற்கு?. “

    ஆம்மாடி.. அவன் என்னமோ என்னிடம் எல்லாம் கேட்டுவிட்டு செய்தது போல கேட்குற. உனக்கு எப்போ தெரியுமோ.. அப்பதான் எனக்கும் தெரியும். அதுக்கு மேல கேட்டதற்கு எழிலரசிக்கு சப்ரைஸ்னு சொல்லிட்டான். அதன்பிறகும் நான் கேட்டா என் புருஷன் என்னைய முறைப்பாரு. எனக்கு தேவையா. அதான் அவன் தேவையில்லாம எதுவும் பண்ணமாட்டானு.. போடானு விட்டுவிட்டேன். ”

   ம்.. நல்லா சமாளிக்கீறிங்க. சரி இன்னைக்கு என்ன?. எப்போதும் போல அண்ணா ரூம்ம கிளின் பண்ணுற வேலை பண்ணாம.. அமைதியா டிவி முன்னாடி உட்கார்ந்து இருக்கீங்க?. ”

    கேட்டவளை ஒருபார்வை பார்த்து திரும்பி விட்டார். என்னவென்று?. அவளும் அம்மாவின் தலையை திருப்பி சைகையால் கேட்க..

   நான் அவன் நிச்சியம் ஆனா நாளில் இருந்து ரூமிற்குள்ள போகல. அதவிட அவன் அனுமதிக்கலனு கூட சொல்லலாம். ”

   என்னமா சொல்லுற?. நீங்க போகலனா.. அப்ப எப்படி ரூம்கிளீனிங், டிரஸ் வாஷ் எப்படி பண்ணுறாங்க?. ”

   ஏன்டி அவன் என்ன உன்னை மாதிரியா.. எல்லாமே நானே பண்ண. அவன் சென்னையில் எல்லாமே தனியா பண்ணவன். அங்கயிருந்து எல்லாம் எடுத்துட்டு வந்துட்டான். அதனால அதை வைத்து உள்ளேயே செட் பண்ணி.. இங்கேயும் அவனே பண்ணிக்கிறான் போல. அதனால என்கிட்ட எதுவும் சொல்லல. ”

    ம்.. நாங்களும் தனியா இருந்தா.. எல்லாம் பண்ணுவோம். என்னமோ நீங்களே எல்லாம் பண்ணுற மாதிரி சொல்லுறீங்க. எல்லாவற்றிக்கும் ஆள் இருக்காங்க. அவங்க தானே செய்யுறாங்க. எனக்கு பண்ணுவதை பற்றி பிறகு பேசிக்கிறேன். சரி நீங்க அண்ணா ரூமிற்குள் சும்மா கூட போகலையா?. ”

   ‘ இல்லைஎன சித்ரா தலையாட்ட..

   இது ரொம்பவே அநியாயம் ம்மா. இருங்க அப்பாவிடம் அண்ணா எப்ப வருவாங்கனு கேட்டு.. நாம்ம இப்பவே அண்ணா ரூமிற்கு போறோம். ”

   சித்ரா ஏதோகூற வர.. அவரை தடுத்து.. ரவிந்திரனிற்கு கால் செய்து ஸ்பிக்கரில் போட்டாள்.

    அப்பா அண்ணா.. ” முழுதும் கூறிமுடிக்கும் முன்..

   ” வசு.. அண்ணா இன்னைக்கு வருவது சந்தேகம் தான். மருமகளுக்கு பிரியட்ஸ்யோட காய்ச்சல் வந்துயிருச்சு. இப்பதான் காய்ச்சல் கம்மியா ஆகியிருக்கா. அவங்க வீட்டில் இன்பா மட்டும்தான் இருப்பாரு போல. அதனால எப்ப வருவேனு அவன் சொல்ல. அப்புறம் ஈஸ்வர் ஒரு கல்யாணயத்திற்கு வெளியூர் போய்யிருக்கான். அதனால நானும்  சாய்ந்திரம் தான் வருவேன்.

   அதனால அம்மாவ சாப்பாடு எதுவும் பண்ண வேண்டானு சொல்லு. இப்பதான் வேந்தனும் கால் பண்ணினான். மதியசாப்பாடு அங்க அனுப்ப சொல்லும் போது.. உங்க இரண்டு பேருக்கும் அனுப்ப சொல்லி சொன்னான். சரியா. நான் வைக்கிறேன். ” அவள் கேட்க வந்த கேள்வி மற்றும் அவளுக்கு தேவையான தகவலையும் கூறிமுடித்து போனை வைத்தார்

    வசுவிற்கான சாதகமான பதிலால்.. ” அம்மா இரண்டு பேரும் கண்டிப்பா சாய்ந்திரம் மேலதான் வருவாங்க. அதனால சாப்பிட்ட உடனே அண்ணா அறைக்கு போறோம். ” புரியாத மனநிலையில்.. அவரும் வசுவிற்கு சரியென கூறி எழுந்தார்.

    இதில் இருவருக்கும் எழிலின் உடல்நிலை பற்றி அவள் போனிற்கு கால் செய்து கேட்ட தோன்றவில்லையா?. இல்லை விருப்பவில்லையா என இவருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

    பின் வசுந்தரா அரிசிஉப்பும்மா, தேய்காய் சட்னி சாப்பிட்டு.. சித்ராவிடம் இருக்கும் சாவியை கொண்டு.. வேந்தனின் அறைக்குள் இருவரும் நுழைத்தார்கள்.

    இது தன் மகன், அண்ணாவின் ரூம்மா!. என  நினைக்கும் அளவிற்கு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!