நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.3
நாம் 41(3)
Advertisement
வேந்தன் வீட்டில் உள்ளவர்களில் ஒருசிலர் தவிர.. மற்றவர்கள் இவர்களின் உடை விஷயத்தை புன்னகையுடன் ஏற்றவர்கள்.. சீர் வரிசை பொருட்கள் தர்ஷினி வீட்டில் பார்க்கும்போதே சிறு பிடித்தமின்மையை மறைமுகமாக சித்ராவிடம் காண்பித்தனர்.
இங்கு வீடு கொள்ள அளவிற்கு என மொத்தமாக பார்க்கும்போது.. ” ஏன்டா இப்படி உனக்கு இன்னைகே இவ்வளவு வைக்க வேண்டும் என்ற பிடிவாதம். அக்கா, அத்தையை சமாளிக்க முடியல. ஏன் வேந்தன் இப்படி பண்ணுறான்?. ஏன் நீங்க அவன் இஷ்டத்திற்கு செய்யவிடுறீங்கனு கேட்குறாங்க டா. ”
” ம்மா.. நான் பாதி தான் இன்று செய்வதா இருந்தேன். அரசி தான் இப்படி பண்ண சொன்னா. அவகிட்டயே கேளுங்க. ” புன்னகையுடன் அவளை மாட்டிவிட..
Advertisement
‘ ஏன்டா உனக்கு தெரியாது?. ‘ என அவள் பார்க்க.. ‘ தெரியாது ‘ என அவளை போல் பாவனை செய்ய அவனை கஷ்டபட்டு முறைத்து..
Advertisement
சித்ராவை பார்த்தவள்… ” அத்த.. மாமா, அத்தை, அக்கா முறையிருப்பவங்க எங்களுக்கு சீர்கொடுப்பது போல.. ” முடிக்கும் முன்..
என்ன கூற வருகிறாள்? என புரிந்து.. ” எழிலரசி அவங்க எதையும் வாங்காதப்ப தட்டை கொடுக்க விரும்பமாட்டாங்க. “
Advertisement
வேந்தனின் அரசி மீதான காதல், அவளிற்கு தான் சீர் செய்வேன் என கூறியது.. இது ஊரில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது. அதனால் முன்பே கலந்து ஆலோசிக்காத.. தெரிவிக்காத கோபத்தில்.. சித்ரா கடின குரலில் கூற.. அவர் குரலில் இருவரும் அதிர்ந்து.. வேந்தன் ஏதோ கூறப்போக.. அரசி அவனின் கைபிடித்து தடுத்து விட்டாள்.
” அத்த.. உடைகள், நகைகள், மாலை தவிர.. எங்க நிச்சியம் போது, விருந்து வைக்கும் போதுமுறை இருப்பவங்க கொடுத்த காசில் தான் மற்ற எல்லாம் வாங்கியிருக்கு. தனு யாரையும் சீர் வைக்க வேண்டாம் என்று கூறியது சிலருக்கு தான் தெரியும். மற்றவங்க யாரும் ஏன் நீங்க வைக்கலனு?. அவங்களிடம் கேட்கவும், தனுதான் எல்லாம் செய்யபோது என்பதை தெரியபடுத்த வேண்டாம் என்று நினைத்தேன். அதான். “
சித்ராவின் பதில் எதிர்பார்க்காமல் இன்பாவை அழைத்து.. ” அண்ணா உடை, நகை இருக்கும் தட்டு எழு. மாலை, சந்தனம், குங்குமம் இருக்கும் தட்டு. வெற்றிலை, பாக்கு, பூ இவற்றை மட்டும் எங்களுக்கு கொடுப்பதற்கு ஏற்றார் போல் தட்டில் எடுத்து வைத்தும் பின்.. மற்ற எல்லாவற்றையும் எடுத்துவிட்டு.. எல்லோரும் உட்காரும் படி மெத்தை போட்டுவிடு. ” கட்டளை குரலில் இன்பாவிடம் கூற.. அவனின் பார்வை வேந்தனிடம் சென்ற போது ‘செய் ‘ என கண்முடி திறத்தான்.
அடுத்த பத்தாவது நிமிடம் அவள் கூறியது போல இடம் மாறியது. சித்ராவிடம் குறை கூறியவர்கள் அந்த இடத்தை பார்த்தபிறகு.. அதற்கு என்று ஏன் இப்படி?. என எதுவும் கேட்க, சமாதானம் செய்யமுடியாத அளவிற்கு..
தன்மையாக கூறியிருக்கலாம் போல!. என நினைத்து தன் கவலையை மறைத்து சித்ரா.. ரவிந்திரனின் அருகில் நின்றார். ரவிந்திரன் எதிலும் தலையிடாமல் தன் மகன், மருமகள் விருப்பம் அனைத்திற்கும் தனக்கு சம்மதம் என்பது போல அமைதியாக இருந்தார்.
” முயல்குட்டி பாதியாவது வைத்து இருக்கலாம் தானே?. ” முயல்குட்டி விரும்பியது போல் இல்லாது போனதில் வருந்தி கேட்க..
” தனு.. பாதி வைத்தா கூட அதை யாரையாவது கொடுக்க வைக்கனும். விரும்ப மாட்டாங்கனு தெரிந்த பிறகு எதுக்கு?. தனுமாமா எனக்காக முன்பு வாங்கியது இருக்கு. பின்ன என்ன வேண்டும்மா?. ”
தன்னால் தனுமாமா விருப்பிய பாதி கூட வைக்க முடியவில்லை என வருத்தத்தை மறைத்து சாதாரணமாக பதில் கூறியவளிடம்..
” ம்.. அந்த போட்டோவில் புன்னகைத்து போல சிரிப்பு வேண்டும். “
போன் வால்பேப்பரில் இருக்கும் அவளுடைய சிறுவயது புகைபடத்தை காண்பித்து கேட்பவனிற்கு..
தன்னை மாற்ற நினைக்கிறான் என புரிந்து.. ” ஓ.. அப்ப அந்த போட்டோவில் இருப்பது போல அண்ணாவை பக்கத்தில் உட்கார வைச்சுக்கட்டா ?. ” வேண்டும் என்றே அவள் கேட்க.
அவனோ ‘ சரி ‘ என்பது போல தலையசைத்து புன்னகைக்க.. ‘ நிஜமா? ‘ என விழிவிரித்து பார்க்க.. அவனிற்கு தன் முயல்குட்டியின் கண்களுக்கு முத்தமிட தோன்ற.. ‘ ஓ.. முடியாதே ‘ என வேகமாக திரும்பி.. அவனே இன்பா பார்த்து அருகில் வரவழைத்து.. அரசியின் அருகில் அமரவைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்க.
‘ தன்னவளின் முகத்தில் மலர்ந்த புன்னகையை வர வைத்துவிட்டேன் ‘ என்ற நிம்மதியுடன் என்றும் அவளை மயக்கும் மெல்லிய புன்னகையுடன் தன்அரசியை பார்த்தவன்.. அவளவள் ‘ தனுமாமா ‘ என கொஞ்சி அவளின் கண்ணாலே கன்னத்தில் முத்தம் பெற்றான்.
வேந்தன் ‘ தன் ஆசை ஒவ்வொன்றாக நிறைவேறி கொண்டு இருக்கிறதே ‘ என்ற துள்ளலை கண்களில் காண்பித்து அந்த மகிழ்ச்சியை தன்னவளின் இதழில் காண்பிக்க.. அவளோ அவனின் விருப்ப முறைப்பை கொடுக்க.. அதை புன்னகையுடன் ஏற்று..
‘ முழு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு ரோஜாவை கொண்டு கோர்த்த மாலையை ‘ சிறிது கண்கள் கலங்கி தன் முயல்குட்டியை காதலுடன் பார்த்து தன் அரசியின் கழுத்தில் சூடி சடங்கை ஆரம்பித்தான்.
அவனிற்கு அவனே போட்டுகொண்டான். ஆனால் இதை பார்த்த அவனவள்.. ‘ ஏன்டா?. ‘ என்று அவளின் அழுத்தமான பரிசை முதுகில் பெற்றான். ‘ வலிக்குதுடி ‘ பாவமாக அவளை பார்க்க.. புன்னகையுடன் உடனே தடவல் கிடைத்தது.
மற்றவர்கள் இதுதான் நடக்கும் என்று தெரிந்ததால்.. வேந்தன் டிசைன் டிசைனாக செய்யும் கூத்தை சிரிப்புடன் பார்த்திருந்து.. அவனின் முறைப்பையும் பெற்றனர்.
பின் அனைவரும் வெற்றிலை, பாக்கு, பூ கொடுத்து ஆசிர்வாதம் செய்தனர். அப்போது பலர்.. ” டேய் உங்க பிள்ளைகளுக்காவது எங்களை முறை செய்ய விடுவியா?. ” கேட்க..
புன்னகையுடன்.. ” ம்.. தராளமா செய்யலாம். ” கூறியவர்களின் மனதில் மகிழ்ச்சியையும்.. பாதிபேர் குழந்தைகள் என்று கேட்டது.. தன் தனுவின் பதில் என அவனின் முயல்குட்டிக்கு நாணத்தையும் வரவழைத்தான். பின் அனைவரும் நலுங்கு, சீர் வைக்கும் சடங்கை சிறப்பாக முடிந்ததில் மகிழ்ந்தனர்.
அவர்களை பார்த்திருந்த நிமிடம் அருகில் இருந்தவர்களில்.. ” வேந்தா நலுங்கிற்கு எங்களை ஒரேமாதிரி உடை இன்னைக்கு போட வைத்து.. எங்க முறைக்கான மதிப்பை மற்றவர்கள் முன் காண்பித்து விட்ட டா. ” புன்னகையுடன் மகிழ்ந்து அனைவரின் சார்பில் யோகா கூற..
” அக்கா… நான் சீர் செய்ய வேண்டானு சொல்லிட்டேன். இருந்தாலும் நீங்க எல்லாம் தான் இன்னைக்கு முக்கியம் என்று.. நலுங்கு வைக்கும் போது பார்த்தவுடன்.. நீங்க எங்களின் அத்தை, அக்கா, மாமா, தங்கை என தனியா தெரியவும்.. பின் நாட்களில் எங்க பிள்ளைகளுக்கு போட்டோவிலும் தெரிய வேண்டும் என்று.. இந்த ஏற்பாட்டை செய்து அரசி தான். “
இளமதி அன்று அடுத்த தலைமுறையினருக்கு உறவுமுறை கூறி அழைப்பதில் பிரச்சனை என்று வருந்தமாக கூறியதால் எல்லோரையும் ஒருபார்வை பார்த்து ‘ எப்படி என் முயல்குட்டியோட யோசனை?. ‘ புன்னகையுடன் கூறி தோள் அணைத்து விடுவித்தான்.
நான்கு நாட்களாக தங்களின் உடைகள் இந்த நேரத்திற்கு, இந்த சடங்கிற்கு என்று கூறி.. அடுத்தடுத்து தைத்து வந்ததால்.. நேற்று மாலைதான் உடை கொடுக்கபட்டு.. சாதாரணமாக காலை அணிந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம்!. குறிப்பிட்ட முக்கியமான சிலர் மட்டும் ஒன்று போல் அணிந்ததில் ஏதோ புரிந்து மகிழ்ச்சியுடனே தான் நலுங்கு வைத்தனர்.
இருந்தாலும் தங்களின் மாமா, அத்தை என்ற உரிமையை.. சில இடங்களில் மட்டும் தான் காண்பிக்க முடியும். இத்தனை நாட்கள் எழிலரசி யாரையும் மாமா என்று அழைக்காமல்.. அண்ணா என்ற அழைப்பு. அதுகூட வேந்தனும் முறை செய்யக்கூடாது என கூறியதால்.. சிறு வருத்தம் இப்போது வரை அனைவருக்கும் இருக்க தான் செய்து.
இப்போது அரசியின் செயல்.. அவளின் எதிர்கால யோசனை கேட்டு அனைத்தும் ஒரு நொடியில் மறைந்துவிட்டது.
வேந்தனின் விருப்பம், எங்களின் உரிமையை காண்பித்த மகிழ்ச்சியில் யோகா எழிலரசியை கட்டிக்கொண்டு..
” ம்.. நீ வேந்தனிற்கு கிடைத்ததில்.. அவன்மேல தான்.. நாங்க எல்லோரும் பொறாமைபடனும் போல. ” அப்படிதானே?? என வேந்தனை ஒருபார்வை பார்க்க..
அவன் முறைப்பும், சிரிப்புமாக அக்காவின் கையை எடுத்துவிட்டு அவன் இறுக்கஅணைத்து.. ” ம்.. இதுவே இப்பதான் தெரியுதா?. ” நக்கலாக கூறி அனைவரின் முறைப்பை பெற்றான்.
அதை அவன் புன்னகையுடன் ஏற்று அதன்பிறகு புகைபடம், சாப்பாடு என முடித்து வேந்தன், எழிலரசி குடும்பத்தினர் மட்டுமே இருக்க.. மற்றவர்கள் அவரவர் வீடு, ஹோட்டல் அறைக்கு சென்றுயிருக்க..
சித்ரா வேந்தனை வீட்டில் உள்ளவர்கள் முன் திட்டிக் கொண்டுயிருந்தார்.
” ஏன்டா மெஹந்தி போடும் இடத்தை மாற்றி வைக்கிறேன் என்று எல்லோரையும் டென்ஷன் ஆக்குற? ”
” ம்மா.. இதில் உங்களுக்கு என்ன டென்ஷன்?. ”
” எங்களுக்கு ஒன்னும் இல்லடா.. இனி நம்ம வீட்டில் சாரு கல்யாணம் மட்டும்தான். அதுவும் இந்த ஊரில் இருக்குமா. வெளியூரில் நடக்குமா தெரியாது.
அக்கா, மாமா எல்லாம் பெரிய வீட்டில் என்று சொன்னதும்.. அங்க இருந்த மாதிரி இருக்கும்.. அப்படியே மெஹந்திக்கு உங்க எல்லோர் கூட இருந்த மாதிரி இருக்க போறோம் என்று ஆசையா சொன்னாங்க. அவங்களுக்காக தான் கேட்குறேன். “
உறங்கும் அரசியை பார்த்தவன்.. ‘ இவ இதைதான் அப்பவே சொன்னா. நான் எங்க கேட்டேன்.. ‘
” ம்.. சரி ம்மா. எதையும் மாற்ற வேண்டாம். நீங்க வீட்டிற்கு போங்க. நான் அரசியோட வரேன். ” சித்ரா அவனை முறைத்தும்.. ரவி புன்னகையுடன் பார்த்து என கமலேஷ், வசுந்தராவை உடன் அழைத்து செல்ல..
மாடியில் இருந்த ஹாலில் உறுதி அன்று படுத்து இருந்ததை போல படுத்துயிருந்தாள் எழிலரசி.
நலுங்கு முடிந்து மீண்டும் அன்று போல் காய்ச்சல் வந்து விடப்போகிறது என்று.. வேந்தன் வீட்டில் இருந்து கிளம்பும்முன் மாத்திரை கொடுத்திருந்தான்.
அரசி தேவையானோர் சாப்பிட்டு முடித்து.. அனைவர் சொல்லும் முன்னே தூக்க கலக்கத்தில் இருந்தாள். அப்பா, மாமாவிடம் மட்டும் வேந்தன்.. பாட்டி வீட்டில் முதலில் கூறியிருக்க.. பின் தன்னவள் வீட்டில் வைக்கலாம் என கூறிவிட்டு..
நண்பர்களுடன் மாடிக்கு அழைத்து வந்து உறுதி அன்று போலவே ஹாலிலே வேந்தன் மடியில் வைக்கத்திருக்க.. அன்று இருந்த அதே நபர்களுடன் மற்றும் தீபிகா, தர்ஷினி, கதிரவன் இருந்தார்கள்.
சித்ரா மாற்றியதை கேட்டு.. பின் ‘ ஏன் மாற்றினாய்?. ‘ என கோபமாக தான் கேட்டபடி தான் மாடி ஹாலிற்கே வந்தார். வேந்தன் அங்கு எழிலரசியை மடியில் வைத்திருப்பதிலேயே.. அவன் மனதில் வேறு ஏதோ என எண்ணி.. தன்மையாக கூறி.. அதை இப்போது மீண்டும் மாற்றி அமைத்து அமைதியாக சென்றுவிட்டார்.
வேந்தனை நீண்ட நேரமாக பார்த்திருந்த தர்ஷினி.. ” மாமா கல்யாணத்திற்கு போக முன்ன அக்கா இல்லமா.. நீங்கதான் இந்த வீட்டிலிருந்து கிளம்பும் முன்ன அதிகம் அழுவீங்க போல. ” ஒவ்வொரு தடவையும் இவர் இங்குயிருந்து கிளம்ப மிகவும் கடினபடுவதை பார்த்துயிருப்பால் அதை வைத்துகேட்க..
மெல்லிய புன்னகையுடன்.. ” ம்.. எனக்கு ரொம்ப கஷ்டம்தான் நினைக்கிறேன். கல்யாணம் முன்.. அரசி கூட இந்த வீட்டில் அதிகம் இருக்கனும் நினைத்தேன்.. அது இப்ப ரொம்பவே கம்மியாகிடுச்சா.. அதான் மெஹந்திய இங்கயே வைக்கலாம் நினைத்தேன். ஆனா இருக்க முடியாம போச்சு. “
கவலைகூறிக் கொண்டுயிருக்கும் போது.. பேப்பர் பந்து அவனின் மீது விழ.. அது வந்த திசையை பார்க்க.. அங்கே திலகன் முறைந்துக் கொண்டுயிருந்தான்.
” டேய் நீ இங்க கம்மிய இருந்த?. ”
வேந்தன் சோகமாக ‘ ஆம் ‘ என தலையாட்டா.
” டேய் இது ஒன்னகே அநியாமா தெரியல. என்னைய பார்த்தாளே என் மாமானார்.. ஏன் வாசலோடவே அனுப்புறார் தெரியுமா?. ”
தெரியாது என அரசி போல பாவனை செய்ய.. அதில் இன்னும் கடுப்பாகி.. அருகில் இருந்த தலையணையை தூக்கி போட.. அதை புன்னகையுடன் வேந்தன் பிடிக்க..
” டேய்.. நீ இங்கயே நாள் முழுவதும் இருந்தது.. தெரிந்தால் தான்டா.. நான் அங்க போனா என்னைய ஹாலிற்கு கூட விடாம கிளம்பி விடுறார். ” பாவமாக கூற..
சத்யா உட்பட அனைவரும் சிரித்துவிட்டு.. அவனின் முறைப்பை பெற்றனர். அதன்பின் மேலும் சிலநிமிடங்கள் புன்னகையான பேச்சுகள் பேசி.. ஒருமணிநேரம் ஓய்வு எடுத்துபின் மெஹந்திக்கு ஏற்றவாறு அனைவரும் வேந்தனின் பாட்டி வீட்டிற்கு சென்றனர்.
அங்கு வினோ புகுந்த வீட்டினர் விஸ்வநாதனின் தங்கைகள் ராகவி, ரேவதி, தாமரை. காவ்யாவின் தங்கை வித்யா, தம்பி ராஜேஷ் அவனின் வருங்கால மனைவி அஞ்சலி, அவளின் அண்ணா, இன்பாவுடன் படித்த பாலா, கிருஷ்ணா, அவனின் தங்கை அஞ்சலி தோழி..
உறவினர்களின் கல்யாணம் முடிந்த அவர்களின் பெண்கள், மருமகள், சென்னையில் இருந்து வந்தவர்கள் என பெரியஇளைஞர் பட்டாளம், இளையவர்கள், பெரியவர்கள் என வீட்டின் உள்ளே, தோட்டத்தில் என எங்கும் மகிழ்வுடன் வேந்தன் எழிலரசி வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை.. நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல்..
எமரால்டு மற்றும் ஆலிவ்கீரின் அதில் பேபி பிங்க் மற்றும் தங்க நிற சரிகையில் வேலை செய்யப்பட்ட லெஹங்கா அணிந்து.. போட் நேக் டாப் என்பதால் சிவப்பு, வெள்ளை வைரகற்கள் பதித்த தோடு.. அழகுகலை நிபுணர்களால் மெல்லிய ஒப்பனை, தலை அலங்காரம் செய்யபட..
இது எழிலரசியா? என அவர்கள் வியக்கும் அளவிற்கு அரசியாக எழிலரசியும்..
அவளுடன் தன் அரசி உடையின் டிசைன் போல் ஆண்களுக்கு ஏற்ற குர்தா, ஆலிவ்கீரின் பிளைன்பேட் அணிந்து.. அரசிக்கு ஏற்ற வேந்தனாக அரசியுடன் வர..
அதுவரை வீட்டு தோட்டத்தில் கண்ணாடி குடுவை, இளஞ்சிவப்பு பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யபட்ட இடத்தில் பாதி மட்டுமே வெளிச்சம் கொடுத்துக் கொண்டுயிருந்த விளக்குகள் அவர்கள் வந்தபின் அனைத்தும் முழுமையான தன் பிரகாசத்தை காண்பித்தது. அந்த ஓளியில் இளஞ்சிவப்பு மற்றும் அடர்பச்சை நிற உடைகள் அணிந்துயிருந்த உறவினர்கள் எல்லோரையும் வரவேற்பு புன்னகையுடன் பார்த்து.. பின் அவர்களுக்கு உரிய இடத்தில் நின்றாள்.
உறவினர்கள் அனைவரும் ஆங்காங்கே ஒரே கலர் ஆனால் அவர்களுக்கு பிடித்தார் போல் சுடி, சேலை, லாங் டிரஸ், லாங் டாப் ஸ்கர்ட்.. உடைகளில் உட்கார்ந்து மருதாணி போடுவதற்கு அமைக்கபட்ட இடத்தின் அருகில் நின்று இருந்தனர். இருவரின் பெற்றோரையும் பார்த்தாள்.
தங்களை இதுபோன்ற உடையில் முதன்முதலில் பார்த்து தங்கள் மகனா, மகளா?. என ஆனந்தகண்ணீருன் சற்று தள்ளி தன் அக்கா, தங்கைகளுடன் அம்மாக்களும், அண்ணா, மச்சான்களுடன்அப்பாக்களும் நின்று ரசித்து கொண்டுயிருந்தனர்.
மற்றவர்களில் ரிசெப்ஷன் அன்று அணிவதைபோன்று மெஹந்திக்கு அணிந்ததை அழகு, பூரிப்பு, பொறாமையுடன் சிலர் பார்த்திருக்க..
அவர்களில் தங்களை சாதாரணமாக பார்க்கும் தன் விருப்பியவர்களிடம் பார்வை செலுத்திவிட்டு.. எழிலரசி தன்னவனிடம் ‘ ஆரம்பிக்கலாம் தானே ‘ என்ற பார்வையை செலுத்த.. ” ம்.. ” அவளிடம் தெரிவித்துவிட்டு.. பெற்றோர்கள், மருதாணி போட வந்தர்களிடம் ஆரம்பிக்கலாம் என பார்த்தான்.
அதன்பிறகு மருதாணி போட விருப்பமுள்ளவர்கள் போட ஆரம்பிக்க.. சிலர் இரண்டு நாட்கள் முன் போட்டதே இன்றும் மாறாமல் அப்படியே இருக்க.. போடுபவர்களுடன் கதை பேச ஆரம்பித்தனர்.
சென்னையில் இருந்து வந்த நிஷா, ராகினி, ஆர்த்தி, அனு, சாந்தினி எல்லாம் சத்யா, அவள் தங்கை ஷாலினி, தீபிகாவுடன் இருந்தனர். இங்கு பெண்கள் கால்களுக்கு போடும் போது கூச்சபடாமல் இருக்க வேண்டும் என ஒருமணி நேரத்திற்கு ஆண்கள் வெளியே சென்றுவிட்டனர்.
வேந்தன், தன்னவளிற்கு ஆரம்பிக்கும் முன் சில புகைபடங்கள் தனியாக.. அம்மா, அத்தம்மா, அத்தைகள், சித்திகள் என பெரியவர்களுடன்.. அவர்கள் புகைபடம் எடுப்பதை பார்த்து வந்தவர்களுடன் என பல புகைபடங்கள் எடுத்துவிட்டு..
அரசியை வீட்டின் உள்ளே பூஜை அறைக்கு அழைத்து வந்து.. சிறிய அளவில் பிரசாதம் பூசி பின் தானும் வைத்துகொண்டு.. அவளை அள்ளிஅணைத்து மாடிபடி ஏறினான்.
” முயல்குட்டி அம்மா காலையில் வேண்டாம் சொன்னதில் வருத்தம் இல்லதானே?. ”
” தனு அப்ப இருந்தது. அதன்பின் அத்தை பக்கம் இருந்து பார்த்தா.. அவங்க எல்லோரிடமும் என்னாக.. நீங்க பண்ணுவதையும் சொல்ல முடியாமாலும்.. தனியா நம்ம விருப்பபடி செய்வதை முழுமனசோட ஏற்று கொள்ள முடியாமா.. நடுவில் இருக்காங்க.
அந்த டென்ஷனை நம்மகிட்ட காண்பித்தாங்க. பெரியப்பா, சத்யா வீட்டில் இருந்து எல்லாரும் கொடுக்க வேண்டியவர்களின் கையில் கொண்டு வந்து.. நம் முன்னாடி வைத்தாங்கள.. நமக்கு அது போது என்று சரியாகிட்டேன். ” முகத்தை பார்த்தபடியே கூற..
அவளவன் அவளின் இதழை மட்டும் பார்த்து ‘ ம்.. ஆம்.. சரி.. ‘ என கேட்டு வர.. அதனை பார்த்தவள் அவனின் பார்வை தாக்குதல் ஏதோ செய்ய.. அதனால் வந்த உணர்வை கட்டுபடுத்த உண்டாக காரணமானவனின் கழுத்தில் கண்முடி புதைய..
கண்ணினுள் அதை விட அவளின் எண்ணங்கள், உணர்வுகள் எங்கோ செல்ல.. அவளின் இதயம் துடிப்பு அவளிற்கே கேட்டது. உதட்டை கடித்து கஷ்டபட்டு கட்டுபடுத்தி கண்களை திறந்து பார்க்க..
அலங்காரத்துடன் இருக்கும் அறை மற்றும் கட்டிலை பார்த்து அதிர்ந்து விழிவிரித்து தன்னவனை பார்க்க.. அவனோ தங்களின் அறையில் மடியில் இருப்பவளை கள்ளபுன்னகையுடன் பார்த்து.. ‘ ஏன் இங்கு.. இப்ப இவ்வளவு அலங்காரம் ? ‘ என கேட்க அவள் வாய்திறந்து வார்த்தை வரும்முன். தக்காளி பழ நிறத்தில் சிவந்து இருக்கும் அவள் இதழுடன் தன் இதழ் மூலம் பேச ஆரம்பித்து விட்டான்.
இப்போது இருவரின் கண்களும் தானாக மீண்டும் மூடி அவர்களின் நினைவுகள் பின்நோக்கி.. நலுங்கு முடிந்து பின் மழைபோல் பொழிந்த நீரில் இருவரும் நடனம் ஆடியது.. அவளவனின் கைகள் தன்னவளின் மேல் எல்லை மீறியும் மீறாமலும் நடுவில் சுற்றி சுழன்றது. அவளுடன் அந்நீரில் நனைய ஆசையிருந்தாலும்.. பின்வரும் நாட்களில் இதே இடத்தில் நிஜ மழையில் நனையாலாம்.
இன்றைய அவளின் உடல்நிலைக்கு இதுவே நீண்ட நேரம் போதும் நினைத்த பின்.. அவளை தன் மார்பில் புதைத்து கொண்ட ஒருநிமிடம் இருவரும் ஒன்றும் பேசாமல் அணைப்பிலே வைந்திருந்து.. பின் அவளை உடை மாற்ற பாட்டிதாத்தா அறையில் விட்டு.. அவன் அம்மாஅப்பா அறைக்கு வர..
வேந்தன் கூறி இருந்த சில நிமிடங்கள் கடந்து வேந்தன் அறைக்கு திலகன், எழிலரசி அறைக்கு சத்யா மற்றும் அழகுநிலைய பெண்கள் வந்த பின்னே இருவருமே மீண்டும் தன்நிலைக்கு வந்ததை நினைத்திருக்க.. அப்போது வந்தவர்களால் இப்போது அதிலிருந்து வர முடியாமல் அவனின் கைகள் அவள் பின் கழுத்தையும்.. அவள் முதுகையும் என அழுத்தி பிடித்து இருந்தனர். அந்நேரத்தில் தான் வேந்தனின் காதில் நீண்ட நேரமாக கேட்கும் இருவரின் போன் ஒலியில் தன்நிலைக்கு வந்து தன்னவள் இதழிலில் இருந்து பிரித்து.. நெற்றி முத்தம் கொடுத்து அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்.
” சொல்லு டா. ”
” டேய் கல்யாண மாப்பிள்ளை ஆச்சேனு நானும் பாசமா பேச நினைக்குறேன். ஆனா நீ பண்ணுவதை பார்த்து வாயில் இருந்து வண்ண வண்ணமா வார்த்தை வரும்போல டா. ”
புன்னகையுடன்.. ” அப்படியா.. இரு ஸ்பிக்கரில்… ” போடுறேன்.. முடிக்கும் முன்..
” டேய் டேய் ஏன்டா. எழிலரசி தயவில்.. இப்பதான் தியா என்னிடம் வெளிப்படையா எல்லோர் முன் உரிமையா நடந்துகுறா. அதுக்கு ஆப்பு வைத்துவிடுவ போல. கோச்சுகாத டா. பாசமாவே கேட்குறேன். இப்ப நீங்க இரண்டுபேரும் வெளிய வரீங்களா. உங்களுக்காக ஆட்கள் காத்திருக்காங்க. “
எழிலரசியின் மீது பயம் போல் காட்டிக்கொண்ட நண்பனின் பேச்சை சிரிப்புடன் கேட்ட படியே.. அரசியை கட்டிலில் அமர வைத்தான்..
” திலகா யார் காத்திருந்தாலும் முக்கால்மணி நேரம் அவங்களை சமாளி டா. முடியலனா உடனே கால் பண்ணு.. எடுக்கலனா நீயே மாடிக்கு வந்து கூப்பிடு. வைக்கிறேன். ” அரசியை ரெஸ்ட் ரூம் சென்றுவர கூறி.. தனக்கு தேவையானதை எடுத்துவைத்த படியே பேசி.. பதில் அளிக்கும் முன் போன்னை வைத்துவிட்டான்.
எதிரில் பேசியவன் அவன் சொன்னபடியே வந்தவர்களை சமாளித்து சாப்பிட அழைத்து சென்று.. நண்பனால் குறைந்த எனர்ஜியை ஏற்ற தானும் அப்படியே சாப்பிட்ட வேண்டும் என நினைத்து சென்றான்.
முயல்குட்டியின் இரண்டு கணுக்காலிலும் முத்தமிட்டு.. தினமும் செய்யும் ஆயில் மசாஜ் முடித்தபின்.. அவளிற்கு மெஹந்தி போட ஆரம்பித்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆனாது. தன்னவனின் கை சூடும்.. மருதாணியின் குளிர்ச்சியும் சேர்ந்து அவளின் கை தானாக கட்டிலின் கீழ் இருந்து பாதிவரை உயரம் கொண்ட சேரில் அமர்ந்து இருந்த தன்னவனின் கூந்தலை வருட ஆரம்பிக்க..
அவளை நிமிர்ந்து பார்த்தவன்.. ‘ முயல்குட்டி உன் கால்களை கொஞ்ச தூண்டிய மனதை ரொம்ப கஷ்டபட்டு அடக்கி போடுறேன். ஒழுங்கா கைய எடுடி. ‘ முறைக்க..
அவனின் பார்வை புரிந்து.. புன்னகையுடன்.. ” தனு இது நீயா இழுத்துக்கொண்டது. நான் என்ன பண்ண?. வேண்டும் என்றால்.. ” முடிக்கும் முன்..
கன்னத்தை கிள்ளி.. ” பொண்ணுங்க கூட யாரும் உன்கால்களை பார்க்க கூடாது என்றுதான்.. இங்கவந்து போடுறேன். நான் ஒரு பொண்ணை தொட விட்டுவிடுவனா ?. ”
‘ போடி ‘ என பார்வை பார்த்து போட ஆரம்பித்தான்.
மெதுவாக அவனின் காதில் மெல்லிய குரலில்.. “ நம்ம குழந்தைகள் டெலிவரி அப்ப.. பெண் டாக்டர் தொடுவாங்களே?. ” சிரிப்புடன் கேட்க.
தன் மிக அருகில் இருந்த அவளின் வயிற்றின் மேல் பட்டும் படாமல் முத்தமிட்டு.. நிமிர்ந்து.. ” ம்.. அவங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை. ஆனா நானும் அந்நேரத்தில் முயல்குட்டி கூடவே இருப்பேனா. அதனால அவங்களுக்கு அதிக நேரம் வேலை கொடுக்கமா நம்ம பசங்க வந்துடுவாங்க. ” வெக்கமும், கனவுமாய் அவன் கூற..
தன்னவனின் சிவந்த கன்னத்தை முத்தமிட்டு.. ” தனு வினோ அண்ணி.. நீங்க டாக்டர் படித்து இருக்க வேண்டியது சொன்னாங்க. ஆனா அதை பற்றி நீங்க.. ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல.? ” வருத்தம், கோபம் கலந்த குரலில் தலைமீது தன் முகத்தை கேட்க.
மெல்லிய புன்னகையுடன் தன்னவளின் முகத்தை தன் முன் கொண்டு வந்து நெற்றியில் முத்தம்பதித்து.. ” ம்.. அதற்கு நீ தான் காரணம். ”
