Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 40.3

 

நாம் 40(3)

 

   அவர்களின் முறையில் என்ன செய்வார்கள்.. பின் அவர்களின் விருப்பங்கள் கேட்டு.. வீட்டில் இருந்து கொண்டுவர வேண்டிய முக்கிய பொருட்கள் மட்டுமே கொண்டு வரக்கூறி.. மற்ற அனைத்தும் ஏற்பாட்டாளர்கள் ரெடி செய்து வைத்திருந்தனர். அனைவரும் கிளம்பி வர வேண்டியது மட்டுமே.



Advertisement

 

   ஓவ்வொரு மேடையிலும் நிச்சிய ஏற்பாடு தயாராக இருக்க.. விருந்தினர்கள் வந்துகொண்டுயிருந்தனர். விருந்தனர்கள் தாங்கள் வாழ்ந்த வந்தியிருந்திருக்கும் ஜோடிகளுக்கு ஏற்றார்போல் பார்த்து அமரும்படியாக ஜோடிகளின் பெயர் போட்டு சொல்லும் வழி குறிப்பு இருக்க.. அவர்களின் மேடை முன்னால் அமர்ந்தனர். ஆனால் விருந்தினர்களால் நாலு ஜோடிகளையும் பார்க்கும் படியாக இருந்தது. அதை பார்க்க புதுவிதமாகவும் இருந்தது.

 

Advertisement

   கரும்பச்சை, ஆரஞ்சு வண்ண பாவாடை தாவணி மாடல் சேலை அதற்கு ஆரஞ்சுவண்ண பிளவுஸ்.. வைர ஆரம், ஜிமிக்கி, இரு வளையல் நடுவே கண்ணாடி வளையல், சிறிய நெட்டிசூட்டியுடன்.. அளவான மேக்கப், தன்னவனால் கோர்க்கபட்ட இருசரம் மல்லிகை பூ என தோற்றத்தில் இருந்த எழிலரசியுடன்.. கரும்பச்சை ஷர்ட், கீரீம் கலர் பேட் அளவான நகைகளுடன் இருந்த வேந்தன்.. மாப்பிள்ளை கமலேஷ் உடன் மாப்பிள்ளை தோழன் மற்றும் மச்சானாக புன்னகையுடன் மாப்பிள்ளை அழைப்பிற்காக மண்டபத்தில் இருந்த விநாயகர் கோயிலில் இருந்தனர்.

Advertisement

 

   முயல்குட்டி ஏன் ஒருமாதிரி இருக்க?. ”

   ‘ ஒன்னும் இல்லைஎன தலையசைத்தாள்.

Advertisement

   அவளை முறைத்து திலகனை கமலேஷ் அருகில்  நிற்க வைத்துவிட்டு.. அரசியை சற்று தள்ளி அழைத்து வந்து ஓரமாக நின்று.. ‘ பதில் சொல்என அவளை பார்த்து நிற்க..

  ” தனு உன்னைய யாரு வசுந்தரா கிட்ட அப்படி சொல்ல சொன்னா?. ”

  அதுக்கு என்ன இப்ப?. ” அவனை முறைத்து..

   ” லூசாடா நீ?. நாம்ம கல்யாணம் பண்ணமா.. அவங்களுக்கு ஆசிர்வாதம் செய்வதில் பலனே இல்ல. ”

   ம்.. எனக்கும் தெரியும்டி. அதனாலதான் நாம்ம அண்ணா, அண்ணியோட ஒன்னா நின்னு சேர்ந்துதான் பண்ணபோறோம். ” ம்.. என தலையசைக்க..

   ” அரசி முன்ன.. இதைமட்டும் தான் யோசித்தியா?.” அவள் கேட்க யோசிப்பது போல அவன் கண்களை மட்டும் பார்க்க.. அதை புரிந்து..

   ” முயல்குட்டி நம்மள பண்ண சொன்னது வசு கேட்டு ஒன்னும் கிடையாது. யோகா அக்கா நலுங்கு அப்ப.. இதுதான் காரணமா இருக்கும் என்று கூறியிருக்காங்க. நாம்ம இங்க வந்த பின்னாடி நீ தூங்கியபோது அப்பா, அண்ணா வந்து கேட்டாங்க. நான்தான் இப்படி பண்ணலாம் என்று சொன்னேன். “

 

   நிஜமா நீ தான் சொன்னாயா?. ‘ இடுப்பில் கை வைத்து தன்னவனை தலைமுதல் கால்வரை பார்த்து கண்ணாலே கேள்வி கேட்ககேடி முயல்குட்டி.. இதுதான் சாக்குனு இப்படி பார்க்குறா!. ‘

 

   புன்னகையுடன்.. ” ஆமாம்டி முயல்குட்டி உன் தனுமாமாதான் சொன்னேன். வசுவிடம் சொன்னபோதே இப்படிதான் நினைத்தேன். அவகிட்ட சொல்லியிருக்க மாட்டேன். பின்னதான்அவளுக்கு வேறு எந்த சித்தனையும் வரக்கூடாதுனு அக்கா, மற்றவங்க முன்ன ரூம்மில் போய் சொன்னேன். அப்பா வந்து கேட்காம இருந்துயிருந்தா. நானே கிளம்பியவுடன் அவங்களிடம் சொல்லியிருப்பேன். ”

   அவன் விரும்பும் முறைப்பு செலுத்தி.. ” ம்.. முன்னாடியே யோசித்து வைத்த நீங்க.. ரூம்மிலே சொல்லாம.. எதுக்கு இங்க வந்து சொன்னீங்க?. ”

   ம்.. சொல்லதான்டி நினைத்தேன். ஆனா இன்னைக்கு என்னைக்கும்விட அதிகமா கண்மைய போட்டு.. மாமாவ உன்னையே பார்க்க வைச்சுட்ட. இப்பவும் பார்க்க வைக்குற. அதனால எப்பவும் போல கம்மி பண்ணுறேன். ” கூறியபடியே பாக்கெட்டில் வைத்துயிருந்த டிஷ்யூ எடுத்து அடர்த்தியாக இருந்ததை துடைத்தெடுத்தான்.

 

   வெளியிடத்தில் சட்டென்று செய்ததால்.. அவள் திட்ட வாய்திறக்கும் போது அனைவர் இருக்கும்இடம் அழைத்து வந்துவிட்டான். இவனை என திட்டியபடி தனுவை கிள்ளிவிட்டு.. விரலை பிடித்து நின்றாள். ஆனால் இவர் மனதிலும் கல்யாணம் முன்னே சபையின் முன் நாத்தனாருக்கு அண்ணன், அண்ணியின் கடமையை செய்யபோதில் அவ்வளவு சந்தோஷம்.

    ஒருநொடி பார்த்து சிரித்துக்கொண்டனர். இவர்களுக்கு என்று தனியாக உள்ள ஒருநபரால் இதனை தன் புகைப்படகருவியில் அழகாக படம்பிடித்துக் கொண்டார்.

 

   சில நிமிடங்களில் மாப்பிள்ளை அழைப்பு மேளதாளம், வானவேடிக்கையுடன் தொடங்கி.. மண்டபத்தில் உறவினர்கள் அனைவரும் நுழைய.. மணமகனின் நண்பர்கள் ஆடல், பாடலுடன் நால்வரை அழைத்து சென்று மேடையில் தனித்தனியாக அங்குயிருந்த ஷோபாவில் அமர வைத்தனர்.

   அடுத்து பெண் அழைப்பில்.. நால்வரையும் மேடைக்கு நேராக இருந்த நான்கு வழியாக..  பெரியப்பா, சித்தப்பா என தன் மகள்களை அழைத்து வந்து தங்கள் மாப்பிள்ளையின் பக்கத்தில் அமர வைத்தனர்.

 

    நந்தினி- சிவப்பு முள்ளங்கி நிறம் மற்றும் தங்கநிறத்தினால் ஆனா லெஹங்காவும். அஸ்வின் சிவப்பு நிற ஷெர்வானியும்.

   வசுந்தரா கடல் நிற பச்சை, நீலம் கலந்த லெஹங்காவும். கமலேஷ் பச்சைநிறத்தில் சட்டை, நீலநிறத்தில் வெஸ்ட்கேட், நிலநிற பேன்ட் அணிந்தும்.

    பிரியதர்ஷினி வானம்நீலநிற சேலை.. ஆரஞ்சுவண்ணபிளவுஸ் மற்றும் பாடர். கதிரவன் நிற லைட்ஆரஞ்சுசட்டை, கிரேகலர் பேன்ட்.

   மேகாஅடர்நீலம் மற்றும் லைட்பிங் லெஹங்காவும். பார்த்திபன்  தங்கநிற ஷெர்வானியும் அணிந்திருந்தனர்.

 

    சாருலதா அடர்பச்சை நிற பிளவுஸ், லைட் ஆரஞ்சு தாவணி, பிங்நிற பாவாடை அதன் அடியில் மூன்றுநிறமும் கலந்து பெரியபாடர் இருப்பது போலனா லெஹங்காவும்.. சத்யா, தீபிகா  டிசைனர் சேலைகள்.. 

   திருமணமான இருவீட்டின் அனைத்து பெண்களும் கிளிபச்சை சேலை, பிங்க் நிறபிளவுஸ் பட்டு புடவையும்.. அனைவரும் வைர நெக்லஸ், ஆரம் அதில் இருப்பதுபோலனா தோடு அணிந்திருந்தனர்.

   ஆண்கள் சிவப்பு நிற ஷர்ட் அணிந்து சிலர் வேஷ்டி, சிலர் சந்தனநிற பேன்ட் போட்டுயிருந்தனர். பெரியவர்களில் ஆண்கள் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டையும் பெண்கள் விருப்பமான சேலை மற்றும் எழிலரசி தேர்ந்தெடுத்த வைரநகையை அணிந்திருந்தனர்.

 

   மணமகன், மணமகள் அமர்ந்தவுடன் திரை அனைத்தும் விலக்கப்பட்டது. நால்வர் பெற்றோர்கள், முக்கியமான ஒருசிலர் மட்டுமே நடுவில் அமைக்கபெற்ற.. சிறிய மேடையில் அமர்ந்து நாலுவருக்குமான நிச்சிய ஓலையை அடுத்தடுத்து நாலுவருக்கும் வாசிக்கப்பட..

   அருகில் இருந்த மச்சான், நாந்தனர்களின் மூலம் கொடுக்கபடும் மோதிரத்தை.. அனைவரும் தங்களின் கல்யாணம் முடியும் வரை எதையும் சிந்திக்க கூடாது என தங்கள் மனத்திற்குள்ளே முடிவெடுத்து..

   அதனை அணிவிக்கும் போது முகம்கொள்ளா மகிழ்வும்.. கண்களில் காதல், காதலின் தொடக்கம் என காண்பித்து.. தன் துணைகளுக்கு நிச்சிய மோதிரம் அணிவித்தனர்.

   இதனை அனைவரும் பூ தூவி, வீசில் அடித்து, பலூன் வெடித்து என நான்கு ஜோடிகளையும் வாழ்த்தினர். ஈஸ்வர் மோதிரம் கொடுத்தால் அந்நேரத்தில் வேந்தன் அரசியின் கைபற்றியிருந்தான். தாத்தாகள், பாட்டி, அம்மாச்சிகள் மட்டும் சந்தனம் பூசி, குங்குமம் வைத்தனர்.

 

   பின்னர் திரைகள் முடப்பட்டு நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களின் தொழில்முறை நண்பர்கள் என அனைவரும் வாழ்த்த ஆரம்பித்தனர். அவர்களை உறவினர்களில் உள்ள கல்லூரி படிக்கும், படித்து வேலைபார்க்கும் இளையவர்கள்..

    சந்துரு போன்ற கல்லூரி, பள்ளி நண்பர்கள் தான் ஜோடிகள் உடன் இருந்து தேவையான உதவிகள், விருந்தனர்களின் தேவைகள், அவர்களை சரியான மேடைக்கு அழைத்து வருவது என வேலைகளை ஏற்றுக்கொண்டதால்..

   வேந்தன் தன்னவள், மாமா, அத்தம்மாவுடன் அமர்ந்துவிட்டான். அவனுடன் திலகன், வினோத், சத்யா குடும்பத்தினர் மற்றும் சென்னையிலிருந்து ஜோடிகளுடன் வந்தவர்கள் அமர்ந்துவிட்டார்கள்.

 

     துணைகளுடன் இருந்தவர்கள் தங்கள் திருமணத்தில் எதுபோல் உடையணியலாம், அலங்காரம், நகைகள், மேடை அலங்காரம் என புன்னகையுடன் பேசியிருந்தவர்களையும்., திலகன், வினோத் , சத்யா.. அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் வேந்தன் சாப்பிட அழைத்து சென்றான்.

 

    எழிலரசியின் அம்மா, அப்பா இன்பாவை இருக்க வைத்து உறவினர்களுடன் சாப்பிட சென்றுயிருக்க..

    அவளும், அண்ணாவும் மட்டும் இருப்பதால்.. இன்பாவின் தோளில் சாய்ந்து அமர்ந்துயிருந்த படி.. மேடையில் இருப்பவர்களை பார்த்திருந்தவள்.. ” அண்ணா நீ எப்ப கல்யாணம் செய்துக்க யோசிக்க போறா?. “

 

   புன்னகையுடன்.. ” ம்.. உங்களுக்கு பெண்குழந்தைகள் பிறந்து அதற்கு முடிஎடுத்து  காது குத்தும் வரை..  கல்யாணம் பற்றி எண்ணம் வராது. ”

   நிமிர்ந்து வெக்கபுன்னகையுடன்.. ” என்ன மாமானும், மச்சானுக்கும் சீக்கிரமே.. ஆளுக்கு ஒரு குழந்தைய மடியில் வைத்துயிருக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பீங்க போல. “

 

   ” ஆமாடி. ” புன்னகையுடன் கூறியபடி வேந்தன் தன் அரசியின் கைபிடித்து பாதாம் அல்வாவை கொடுத்து அவள் அருகில் அமர்ந்தான். துணைவன், தமையனை மாறி மாறி பார்த்து முறைக்க.. இருவரும் சிரிப்பை அடக்கி கொண்டு அவளை பார்த்திருந்தார்கள்.

 

   ” மாமா சந்துரு அண்ணா அவங்க கல்லூரி பிரண்டஸ் கூட சாப்பிட போகனும் கூப்பிட்டாங்க. கதிரவன் மாமாகிட்ட போறேன். ” சரி என தலையசைக்க..இன்னும் முறைப்புடனே அல்வா சாப்பிடும் தங்கையிடம் புன்னகையுடன் தலையசைத்து சென்றான்.

 

  தன்னவள் சாப்பிடும் இனிப்பை வாங்கியவன்.. ” இப்ப எதுக்குடி முறைக்கிற?. “

  ” இப்ப உடனே பதில் தெரியனுமோ?. ” ஆம் என மெல்லிய தலையாட்டல் புரிந்து இனிப்பை ஊட்டிவிட்டான்.

   அவன் கையை மென்மையாக பற்றி.. ” தனு நீங்க பல வருடம் தனியா காதலித்து.. நான் இரண்டு மாதம் தான் காதலித்து கல்யாணம் நடக்க போகுது. உடனே நமக்கு.. “

   தன்னவள் கைமேல் கை வைத்து..” என் முயல்குட்டி ஒரு வரிக்கே.. கன்னங்கள் சிவந்து பேசும் அழக கேட்க ஆசையாதான் இருக்கு. ஆனா இப்படி ஓரமா உட்கார்ந்து இல்ல. ஒன்னும் மட்டும் என் அரசிம்மாக்கு இப்ப சொல்லுறேன். நமக்கு சீக்கிரம் வேண்டும். ” புன்னகையுடன் கூறி இனிப்பை கொடுக்க..

   ‘ டேய் இதபற்றி தானே பேசுறேன்.. பின்ன எதை பற்றிய விளக்கம் கேட்க ஆசையா இருக்குனு சொல்லுற?. ‘ பார்வையுடன் இனிப்பை வாங்க.

 

  ” முயல்குட்டி நீயாதான் பதில் வேண்டுமா கேட்ட. சரி நீ ஏதாவது கேட்டு வேண்டானு சொல்லியிருக்கனா.. அதான் பேச சொன்னேன். ஆனா நீ பேசுற விஷயம், நீ இருக்க விதம்... ” கண்ணாலே ஒரு நொடி கன்னம், இதழ் பார்த்து.. “ பேசி முடித்தா?. உடனே முயல்குட்டி நீ வேண்டுனுதோனும்.. ஆனா இப்ப முடியுமா. அதான் பேசி ஒரு பயனும் இல்லாதை முடித்துவிட்டேன். ” அவளை பதில் பேசவிடாமல் இனிப்பை உண்ண உண்ண கொடுத்து.. அவன் பேசி முடித்து.. கடைசி வாய் இனிப்பை அவன் உண்டுமுடித்தான்.

   தன்னவனை சொல்லமாக கூட திட்டமுடியாமல்.. கண்கள் முடி தன்னை கட்டுபடுத்தி திறந்தவள் முன் நின்றவர்களை பார்த்து.. ஒருநொடி தலை பின்னால் போய் முன்னால் வந்து.. தன் மறுகையை நெஞ்சில் வைத்து அவர்களை பார்த்தாள்.

   ” ஏன் அக்கா இப்படி சத்தமோ.. அழைப்போ இல்லாம வந்து நிக்குறீங்க?. ” தன்னவள் பயந்ததை பார்த்து எழுந்து அருகில் நின்று தலையில் கை வைத்துநின்றான். ” அரசி பயந்துட்டா பாருங்க. “

 

   அவனை முறைத்து.. ” இங்க ஏன்டா தனியா உட்கார்ந்து இருக்கீங்க?. இன்பா வரும்போதே நீங்களும் மேடைக்கு வர வேண்டியது தானே?. ”

   அக்கா அரசிக்கு ஸ்விட் கொண்டு வந்தேன். அவ சாப்பிட்ட உடன் வரலாம் என்று நினைத்தோம். ”

   அவனை தோளில் அடித்து.. ” ம்.. அவ சாப்பிட்ட அழகதான் நாங்க பார்த்தோமே. ஏன்டா இங்க வந்தும் தைரியமா ஊட்டிவிட்டு இருக்க. ” ஓஓ.. என நினைத்து அரசியிடம் திரும்பி..

   முறைக்கும் தன்னவளை வேண்டும் என்றே கைபிடித்து.. ” சரி வாங்க போலாம். ” அவன் காதை பிடிக்க வர.. புன்னகையுடன் தன்அரசியின் கையை அக்காவிடம் கொடுத்து.. ” வாங்க போகலாம். “

 

    நாளை மணமக்களாக போகிற நாலு ஜோடிகளை விருந்தனர்கள் அனைவரும் வாழ்த்தி, புகைபடம் எடுத்து முடித்து.. இப்போது குடும்ப புகைபடம் எடுக்க போவதால் மூவரும் மேடைக்கு சென்றனர். இவர்கள் பேசும் அழகை மேடையில் இருந்த முக்கால்வாசி பேர் பார்த்து..

   இருவரின் போனிற்கும் அழைக்க.. ம்ஹூம் இருவர்  காதிலும் அதுவிழவே இல்லை. பின் ஏன்?. என இன்பன் புரிந்து யோகாவை போககூற.. அதன்பின்தான் மேடைக்கு வருகிறார்கள். மூவரையும் பார்க்க இரண்டுநாள் கழித்து நடந்து வருவதை இப்போதே பார்ப்பதுபோல இருந்தது. அவர்கள் அவர்களுடன் நின்றவுடனே தர்ஷினி தன் கண்மையை எடுத்து இருவருக்கும் திஷ்டி பொட்டு கன்னத்தில் வைத்து.. தன் அக்காவை கட்டிஅணைத்து விடுவித்தாள்.

 

    இதனை அனைவரும் ஏன் என புரிந்து புன்னகையுடன் பார்த்து.. பின் நாலுஜோடிகளுடன் இருவரும் தனியாக, குடும்பமாக, அனைத்து ஜோடிகளுடன் ஒன்றாக, இளையவர்கள் என பல புகைபடங்கள் எடுத்து முடித்து.. ஜோடிகள்  மட்டும் எடுக்கும் புகைபடம் எடுக்க ஆரம்பித்தனர்.

   நிச்சியம் முடிந்தவுடனே ஜோடிகள் எல்லோருக்கும் சிறிது உணவு கொடுக்கபட்டது. அதனால் மற்றவர்கள் அனைவரும் சாப்பிட வர.. திலகன், வினோத், சந்துரு பரிமாறுபவர்களை பார்த்துக்கொண்டனர். வேந்தன் இங்கும் எழிலரசிக்கு தேவையான அளவு உணவை மட்டும் கொடுத்து இருவரும் சாப்பிட்டனர்.

   பெரியவர்கள், குழந்தைகளுடன் இருந்தவர்கள் நடுவில் சிறிது நேரம் கூட தூங்காமல் இருந்ததால் அவர்களின் கணவன்மார்களுடன் மண்டபத்தின் மாடியில் ஒதுக்கப்பட்ட அறையில்படுக்க செல்ல.. ஆண்களில் ஒருசிலர், பெண்களில் எழிலரசி, சத்யா, தீபிகா மட்டும் இருந்தனர். அனைவரும் மாடியின் ஒருபகுதியில் பெரிய இடம் இருந்தது. அங்கு இருந்து பார்த்தாலே கீழே அனைத்தும் தெரிந்தது. பாதுகாப்பிற்கு எந்த குறையும் இல்லாத அளவிற்கு நண்பர்கள் ஏற்பாடு செய்திருப்பதால் பயம் இல்லை. ஆனால் நாலு ஜோடிகள் எந்த பிரச்சனை இல்லாமல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வேந்தன் பார்த்தபடி தன்னவளுடன் அமர்ந்தான்.

   ம்.. புகைபடம் அனைத்தும் நல்லவிதமாக அழகாகவே முடிந்து.. அவர்கள் அறைக்கு செல்ல.. பெண்கள் உதவிக்கு தனியா ஆட்கள் இருக்க.. ஆண்களுக்கு உதவி செய்ய இன்பா, சந்துரு சென்றனர். அவர்களுடன் இருந்த உறவினர்களில் சிலர் ஏற்கனவே சென்றுயிருந்தனர். சத்யா, தீபிகா தலையணையில் படுக்க.. அரசி வேந்தன் மடியில் உறங்கி விட்டாள்.. மற்ற மூவர் உறங்கும் பெண்கள் மூவரையும் அவர்களின் அறையில் விட்டுவிட்டு.. தங்கள் அறைக்கு சென்றனர். அனைவர் மனம் நிறைந்து நிச்சியம், ரிசெப்ஷன் முடிந்து நிம்மதியாக படுக்க.. மேடை அலங்காரம் திருமணத்திற்கு ஏற்றார்போல் மாற்ற ஆரம்பித்தனர்.

 

   அதிகாலை நான்குமணி.. வேந்தன் அரசியுடன் சேர்த்து இரு தங்கைகளுக்கும் சத்துமாவு கஞ்சியுடன் தன்னவளை எழுப்ப வந்தான். எழிலரசி இருந்த அறையை தட்டி அரசியை எதிர்பார்த்தவன் சத்யா தான் கதவு திறந்தாள்.

 

   எங்கே அரசி? ‘ என்பது போல சத்யாவை பார்த்தவன்..

   ” அண்ணா எழிலிற்கு காய்ச்சல் அடிக்குது. ” பதட்டத்துடன் கூற..

    கொண்டு வந்ததை சத்யாவிடம் கொடுத்து.. வேகமாக வந்தவன்.. குறுக்கி படுத்துயிருந்த அரசியை தொட்டு பார்க்க மிக அதிகநிலைக்கு சற்று குறைவாக இருந்தது. ” சத்யா யாருக்கும் எதுவும் சொல்ல தானே?. ” அவளை நேராக படுக்க வைத்தான்.

   இல்ல அண்ணா. எப்படி வந்ததுனு கேட்டா?. பிரச்சனைதானே. இன்னும் தீபிகாவிற்கு கூட சொல்லல. ” அவள் பிரஷ்ஷாகி கொள்ள பாத்ரூம் சென்றுயிருந்தாள்.

 

    பதில் கேட்டபடியே அவசரம் எனில் உடனடி தேவைக்கு ஏற்பாட்டாளர்களுடன் இருக்கும் மருத்துவரை வரக்கூறினான். வந்த மருத்துவர் வெப்பநிலை செக் செய்து ஊசி போட்டுவிட்டு.. நாளை மறுநாள் திருமண பெண் இவள் என தெரியுமாகையால் காய்ச்சல் ஏற்படும் அளவிற்கு என்ன நடந்தது என காரணம் கேட்க..

   ‘ இரவு குளிர்ச்சிக்கு எண்ணெய் தேய்த்தது.. நலுங்கு வைத்து.. உடனே குளிர்த்த தண்ணீரில் நினைந்ததை கூறினான். ‘

   அனைத்தையும் கேட்டவர் பெரியபிரச்சனை இல்லை நிம்மதி கொண்டு.. ” ம்.. பிரச்சனை இல்ல வேந்தன். ஒருமணி நேரத்தில் சரியாகியும். சாய்ந்திரம் ஒருதடவை ஊசியும் மூன்று நாளைக்கு மாத்திரை குடிக்கட்டும். ”

   சத்யா பதறி.. ” என்ன டாக்டர் மூன்றுநாளைக்கு மாத்திரையா?. ”

   அவங்களுக்கு பயப்படும் படி ஒன்னும் இல்லங்க. நாளைக்கு திரும்ப நலுங்கு இருக்கு.. திரும்ப காய்ச்சல் வந்துடுனு..  நலுங்கு.. மற்றவைகள் வைக்காமா போய்யாட்டா அதான்.

   நான் அனிதா. கீர்த்தி அக்காவோட சென்னையில் வேலை பார்த்து இருக்கேன். கொஞ்சம் உங்களபற்றி சொல்லிதான் அனுப்பி இருக்காங்க. ஒருவாராமா அலைச்சல், அதிகம் தலைக்கு குளிந்தது.. நேற்று எல்லாம் சேர்ந்து காய்ச்சல் வந்துயிருக்கு.

   ஒருமணி நேரம் தான். சாதாரணம் ஆகிவிடுவாங்க.. எழிலரசியை நினைத்து நீங்க டென்ஷன் ஆகாதிங்க. வேந்தன் உங்களுக்கும் கூட ஊசியும், மாத்திரையும் கொடுக்குறேன். இந்த கல்யாணம், உங்க கல்யாணத்தில் எதையும் மிஸ் பண்ணமாட்டீங்க. ” மெல்லிய புன்னகை மட்டும் புரிந்து.. 

   சரி என தலையசைத்தான்.

   வேந்தனுக்கு ஊசி போட்டுவிட்டு மருத்துவர் சென்றவுடன்சத்யா தீபிகா வந்தவுடன் நீங்க தர்ஷினி அறைக்கு போயிடுங்க. மேகாவிடம் தர்ஷினி சரியா பேசலையாமா. அதனால அவ நந்தினி ரூம்மில்தான் நைட்கூட இருந்துயிருக்காங்க. உங்களை கதிரவன் அங்க வந்து கிளம்ப சொன்னான். நீ அங்க போய் குளிச்சுக்குகோ. ” தயக்கத்துடன் கூற..

 

   ம்.. நாங்க பார்த்துபோம். நீங்க இங்க எப்படி இருப்பீங்க?. ”

   இங்க வந்தா அத்தம்மா தான் வருவாங்க. இன்பாவிடம் நான் இருக்கேனு சொல்ல சொன்னா அவங்க வரமாட்டாங்க. 

 

    மெல்லிய புன்னகையுடன்.. ” அம்மாவ.. அந்த அளவிற்கு மிரட்டி வைத்துயிருக்கீங்க. ”

    வருத்த புன்னகையுடன்.. ” ம்.. அவங்களிடம் நான் சரியா பேசியது கூட கிடையாது. என்னைய புரிந்துக்கொண்டாங்க.

   ஆனா நான் வசுவை பிறந்ததில் இருந்து பார்த்து.. நேரில் பார்க்காட்டியும் ஒருநாள் விட்டு ஒருநாள் அவகிட்ட மறக்காம போனில் பேசியும் கூட அவள நான் புரிந்து கொள்ளபோயிட்டேன். அதனால இப்ப இவதான் கஷ்டபடுறா. ” அரசியை மடியில் வைத்து பேசிக்கொண்டுயிருந்தான்.

 

    என்ன சொல்லி சமாதானம் செய்ய புரியாமல்?. ‘ நினைக்கும் வேலையில் தீபிகா வந்துவிடும் அறிகுறி தெரிய.. ” அண்ணா நீங்க போய் உங்க ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க. தீபிகா வந்துடுவா. தாங்க எல்லாம் எடுத்துட்டு கால் செய்யுறேன். “

 

   ம்.. சீக்கிரம் எடுத்துவையுங்க. . ” அரசியின் நெற்றியை பார்த்துவிட்டு வேகமாக சென்றான்.

   சத்யாவும் தீபிகா வந்தவுடன் மேலோட்டமாக கூறி.. வேந்தன் கொண்டு வந்த கஞ்சியை குடித்துவிட்டு தங்களின் பெட்டியோடு வெளியே வர..

   வேந்தனுடன் அவர்களின் துணைகள் இருந்தனர். ஏற்பாட்டார்கள் அனைத்தும் கவனிப்பதால் அந்நேரம் கீழே யாரும் இல்லை. மேலே கடைசி ரூம் என்பதால் அவர்களுக்கு வசதியாக இருந்தது. அறையின் உள்ளே வந்தவன் அரசியின் நெற்றியில் முத்தம் பதித்து.. தன் கவனகுறைவிற்கு பலமுறை சாரி சொல்லி.. சூட்டை இன்னும் விரைவில் குறைக்க.. வெற்று மார்பில் அவளை புதைத்து கொண்டான். அவளும் தன்னவனை உணர்ந்து அவனுள் ஒன்றினாள்.

   முக்கால்மணி நேரம் கடந்தநிலையில் கதவு தட்டும் ஓசை கேட்க.. அரசியின் கழுத்தை தொட்டு பார்த்து பரவாயில்லை என நிம்மதி கொண்டு டீஷர்ட் அணிந்து தன்னை சரிசெய்து கொண்டு கதவை திறக்க..

   இவனை பார்த்தது எதிரில் நின்றவர் முகத்தில் சிறு எரிச்சல் தெரிந்தது.  ‘ போங்கடாஎன அவரை விட தன் எச்சிலை மறைத்து.. ” சொல்லுங்க அண்ணி. “

 

   சொல்லுங்க அண்ணினா. நீங்க தான் சொல்லனும். ” புரியாமல் பார்க்க..

   ” கடவுளே.. ” வாய்விட்டு நேரடியாகவே புலம்பி.. ” வேந்தன் பொங்கல் வைக்கனும். அதற்கு சீக்கரமா எழனும் அத்தை சொன்னாங்க. எழிலரசி எழுந்தவுடன் கால் செய்வானு சொன்னீங்க. கால் செய்யல.. அதான் எழுந்தாச்சானு பார்க்க அத்தை அனுப்பினாங்க. “

 

  .. அதை மறந்தே போய்யிட்டேன்.. ” அவ எழல அண்ணி. நானும் அவள எழுப்பதான் வந்தேன். நீங்க கிளம்பி என்னைய கூப்பிடுங்க. “

 

   ம்.. வேந்தன் நீங்க எங்க போன்காலை எடுக்க மறந்து பல நாள் ஆச்சு. நீங்க உங்க ரூம் போங்க. நானும் இங்கயே கிளம்பி இரண்டுபேரும்.. ” முடிக்கும் முன்..

   ” அண்ணி அவ கொஞ்சம் டையடா இருக்கமாதிரி தெரியுறா. நான் தான் அவளை கிளப்பி.. நானும் இங்கதான் கிளம்ப போறேன். நானே உங்களுக்கு கால் பண்ணுறேன். “

   இவன் சொன்னாலும் கேட்கமாட்டான்.. ” ம்.. சீக்கிரமா கிளம்பி கால்பண்ணுங்க. ” சரி என தலையசைத்து தன்னவளிடம் வந்தான்.

   அவளை நெற்றி முத்தமிட்டு.. ” முயல்குட்டி.. ” கன்னத்தை தட்டி எழுப்ப..

   அவளும் மிகவும் கஷ்டப்பட்டு கண் திறந்து தனுவின் கலங்கிய கண்களை முதலில் புரியாது பார்த்தவள்.. தன் உடலின் சூட்டை உணர்ந்து.. அவன் உதவியுடன் குளியல்அறை சென்றவள்.. தன் தேவை அனைத்தும் முடித்து வந்தவளுக்கு.. இன்பாவை அழைத்து சூடான டீ கொண்டுவர செய்து வைத்துயிருந்ததை கொடுக்க..

   குடித்து முடித்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கும் தன்னவனுக்கு ஆறுதல் அளிக்க.. அவன் மடியில் அமர்ந்து இதழில் மென்முத்தம் கொடுத்து அவனை பார்க்க.. என்றும் அவள் பார்த்திறாத வருத்தம், கவலை, மன்னிப்பு அனைத்தும் கலந்ந கலவையாக கூடவே அவளை சாதாரணமாக பார்க்கும் தன் தனுவை பார்த்தாள்.

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!