Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனாய் மாறிய அன்பனே"

அசுரனாய் மாறிய அன்பனே

     பகுதி 3

  காலையில் ஆங்கில வகுப்பில் அசிங்கப்பட்ட சம்பவம் எல்லாம் அகல்யா மனதில் இப்போது துளியும் இல்லை. ஹரி ஹரி என்று ஒருவித மயக்கத்தோடு சுற்றிக் கொண்டு இருந்தாள். 

         ஒரே நாளில் இப்படி மயக்கி விட்டானே என்று படுக்கையில் உருண்டு கொண்டு இருந்தவள் நினைப்பு மொத்தமும் அவனிடம் தான் இருந்தது. கனவிலும் அவன் தான்.



Advertisement

          மறுநாள் காலை ஹரியே அவளைத் தேடி வந்து இருந்தான். “அகல்யா.. நான் அவ்வளவு அறிவாளி எல்லாம் கிடையாது. பட் என்னால முடிஞ்ச அளவு இங்கிலீஷ் சொல்லித் தரேன்.” என்றான்.

      அகல்யாவுக்கு றெக்கை இல்லாமல் பறப்பது போன்ற உணர்வு. அவளுக்கு ஆங்கிலம் கற்று கொள்ளும் ஆர்வம் எல்லாம் இல்லை. அவனைக் கற்றுக் கொள்ளலாமே. அவனுடன் இனி மணிக் கணக்காக நேரம் செலவிடலாமே.. என்று மனம் துள்ளியது.

      ஆனா அகல்யா நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா சந்திச்சா நல்லா இருக்காது. யாராவது ஏதாவது பேசுவாங்க. நீ உன் ஃப்ரெண்ட்ஸ் யாரானாலும் கூட்டி வா. அவங்களுக்கும் நான் சேர்த்தே சொல்லித் தரேன்”.. என்றான். 

Advertisement

      அகல்யாவுக்கு கற்பனைக் குதிரை பின்னுக்கு ஓடத் துவங்கியது போல ஒரு உணர்வு. யாரைக் கூப்பிட்டாலும் அவர்கள் அவள் ஹரியைத் தட்டிக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது?. ஆத்தி அந்த தப்பை மட்டும் பண்ணி விடக் கூடாது என்று யோசித்தவள்.

Advertisement

             “ஹரி.. என் தங்கச்சியும் இங்கிலீஷ்ல வீக் தான். அவளும் நம்ம ஸ்கூல்ல தான் படிக்கிறா. அவளைக் கூட்டி வரவா?.. என்று கேட்க.

             “ஓ எஸ். கண்டிப்பா கூட்டி வா. கரெக்ட்டா நாலு மணிக்கு நம்ம ஸ்கூல் கிரவுண்ட் ஆலமரம் பக்கம் வந்துடு. பாய்.”.. என்று மின்னலாய் மறைந்து இருந்தான். 

      அகல்யா மனம் எல்லாம் மாலை எப்போது வரும் என்று ஏங்கத் துவங்கி இருந்தது. கவுசல்யா சந்தோசமாக ஒத்துக் கொண்டாலும்.. “பையன் கிட்டயா?.. அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுமே அக்கா.” என்றாள்.

Advertisement

            “ஏண்டி நாம ஸ்கூலுக்கு போகாம ஏதோ படத்துக்கு போற மாதிரி இப்படி பயப்புட்ற. நம்ம ஊர்ல இங்கிலீஷ் டியூஷன் எடுக்க ஆளே இல்லை. அதுவும் நாம ஸ்கூல கிரவுண்ட்ல தான படிக்கப் போறோம்”.. என்று சமாதானம் செய்து வைத்தாள். 

      அந்த ஆலமரம் அருகில் நிறைய பேர் வட்ட வட்டமாக அமர்ந்தபடி படிப்பது வழக்கம் தான். அதனால் அவர்கள் படிப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  

     ஹரி அவளுக்கு புரியும்படி நன்றாகச் சொல்லிக் கொடுத்தான். அவன் கவனம் முழுமையாக படிப்பில் மட்டுமே இருக்கும். அவளுக்கு தான் அவனின் சின்னச் சின்ன தொடுகை. அவனின் காற்றில் பறக்கும் கேசம், அழகான ஆங்கில உச்சரிப்பு, அந்த ஸ்டைல்.. என்று அந்த வாலிபனைப் பார்த்து கிறக்கம்.

     அவள் கவனம் சிதறுவதை சில நேரங்களில் கண்ட ஹரி.. “அகல்யா புரியுதா இல்லையா?”.. என்று சின்ன அதட்டலுடன் அவளை நடப்புக்கு இழுத்து வருவான்.   

      ஆனாலும் நாட்கள் அவளுக்கு இன்பமாக நகன்றது. கவுசல்யாவும் அக்கா இந்த அண்ணா ரொம்ப நல்லா சொல்லி கொடுக்குறாங்க இல்ல”.. என்பாள். 

      அகல்யா தோழிகள் நிறைய பேர், ஏய் எனக்கும் ஒரு அறிமுகம் கொடு டீ என்று கேட்கத் துவங்கி இருந்தார்கள். அவர்களை எல்லாம் ஏதேதோ பொய் சொல்லி வெட்டி விட்டவளுக்கு காவேரியைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்த வாரம் நானும் உன் கூட வருவேன் டீ. என்று உறுதியாகவே சொல்லி விட்டாள். 

        அன்று கவுசல்யாவுக்கு உடம்பு சரியில்லாததால் விடுப்பு எடுத்து விட்டாள். அவள் மட்டும் ஹரிக்காக அங்கு காத்து இருந்தாள். அங்கு கூட்டமும் இன்று அதிகம் இல்லை. தூரத்தில் ஒரு பெண் ஹரியுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தாள். அவள் அவன் சட்டையில் ஏதோ விழுந்து இருக்கிறது என்ற சாக்கில் அவனைத் தொட்டுத் தொட்டு பேசிக் கொண்டே இருந்தாள். 

     இங்கு அகல்யா வயிறு பற்றி எறிந்தது. முதல் மரியாதை வடிவுக்கரசி போல விளக்கமாறுடன் சென்று அவளைத் துவைத்து எடுத்தால் என்ன என்று தோன்றியது. 

      ஒருவழியாக அவளை அனுப்பி விட்டு அவளை நோக்கி ஹரி வரத் துவங்கினான். ‘யாருடா அவள்?’ என்று அவனையும் அடிக்கத் தோன்றியது. அப்புறம் தான் அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று நினைவு வர.. இனி தாமதிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துக் கொண்டாள்.

     ஹரியோ எந்த சலனமும் இல்லாமல்.. “ஹாய் அகல்யா.. வேர் இஸ் கவுசி”.. என்று மலர்ந்த முகத்துடன் அவள் அருகில் வந்து அமர்ந்து இருந்தான். 

             “அவளுக்கு உடம்பு சரியில்லை.”. என்றாள் மொட்டையாக. “ஓ.. ஒகே அகல்யா அப்போ நாம கிளாஸை நாளைக்கு வச்சிக்கலாம்”.. என்றான். 

    அகல்யா மனம் கொதி நிலைக்குப் போய் இருந்தது. ‘ இவ்வளவு நேரம் அந்த பொண்ணு கிட்ட இவன் தனியா கடலை போட்டதை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. இப்ப மட்டும் தப்பா நினைப்பங்களாம்”.. என்று கேட்கத் துடித்த உதடுகளை அடக்கிக் கொண்டவள்.

    “ஹரி .. நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள். 

     அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு ஏதோ புரிந்து போய் இருந்தது. ஒரு தடவை தலையைத் தூக்கி சுற்றி பார்த்தவன். “பக்கத்தில் யாரும் இல்லை அகல்யா. இங்கேயே பேசலாம்” என்றான். 

      தனியாக பேசக் கூட வர மாட்டேன் என்கிறானே இவன் எப்படி அவள் காதலை ஒத்துக் கொள்வான் என்று இருந்தது அகல்யாவுக்கு. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. “ஹரி.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு. ஐ 

ஐ லவ் யூ”.. என்று திணறித் திணறி சொல்லி விட்டாள் அகல்யா.

     அவன் ஏற்கனவே எதிர்பார்த்ததாலோ.. அல்லது நிறைய பெண்கள் சொல்லி கேட்டதாலோ.. அவன் முகத்தில் பெரிய மாற்றம் இல்லை. 

              “அகல்.. இது வெறும் இன்ஃபச்சுவேசன்- ஒரு வித ஈர்ப்பு!!. அவ்வளவு தான். இது இந்த வயசில நார்மல் தான். இது படிக்க வேண்டிய வயசு. படிப்பை மட்டும் பார்க்கலாம் ‘.. என்றான் அவன் நிதானமாக.

     இதை கொஞ்சம் எதிர்பார்க்கத் தான் செய்து இருந்தாள் அகல்யா. “ நீ வேற யாரையும் லவ் பண்றியா ஹரி.” என்று அவள் கண்களில் ஏக்கத்துடன் கேட்க.

           “இல்லை அகல். நான் யாரையும் இதுவரை லவ் பண்ணலை. நீ பத்தாம் கிளாஸ் தான் படிக்கிற. இந்த வயசுல உன்னால தெளிவா யோசிக்க முடியாது”.. என்றான் அவளுக்கு புரிய வைக்கும் நோக்குடன்.  

     அகல்யா மனம்.. “அப்பாடா அந்த குரங்கை மட்டும் இல்ல எந்த குரங்கையும் இவன் லவ் பண்ணலை”. . என்று மனம் சந்தோஷம் கொண்டாலும்.. அவனிடம் விடாமல்..

         “ஏன் ஹரி.. வேணாம்னு சொல்லுற?.. நான் உன் அளவுக்கு கலரா இல்லைன்னு யோசிக்கிறியா??. இல்லை இங்கிலீசு தெரியலன்னு யோசிக்கிறியா”.. என்று கேட்டு இருந்தாள். 

        “ஹேய் ஏதாவது உளராத அகல். நீ எவ்வளவு அழகு தெரியுமா. உன்னைக் கட்டிக்கிறவன் கொடுத்து வச்சி இருக்கணும். எனக்கு உன்னை கட்டிக்கிற தகுதி இல்லைன்னு தான் சொல்றேன்.”.. என்றான்.

             “ஏன் உனக்கு என்ன குறை ஹரி? ராஜா மாதிரி இருக்க. என்னைத் தட்டிக் கழிக்க வேற சாக்கு இல்லாமல் உன்னை ஏன் இறக்கி பேசுற”.. என்றாள் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல்.

      விரக்தியாக ஒரு புன்னகை பூத்தவன்.. “உனக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாது அகல். நான் ஒரு அனாதை. இங்க பக்கத்து ஊரில் இருக்க ஆசிரமத்தில் நான் தங்கி இருக்கேன். “.. என்றான்.

     அகல்யா அவனை நம்ப முடியாமல் பார்க்க.. “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். எனக்கு அம்மா கிடையாது அப்பா மட்டும் தான். அப்பா என்னை நல்லா பார்த்துக்குவார். என்னை எல்லா கிளாசுக்கும், டென்னிஸ் ஸ்விம்மிங் என்று அழைத்து போவார். 

      எனக்கு அம்மா நினைப்பே வராம பார்த்துக்குவார். ஆனா ரெண்டு வருஷம் முன்னாடி, “எனக்கு வேலை என்று வெளியூர் அலைய வேண்டி இருக்கு தம்பி..” என்று பெங்களூரிலே ஹாஸ்டல்ல போட்டுட்டார்.

     ஆனா ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு அழைத்து போய் விடுவார். அதனால எனக்கு அப்பாவை பெருசா எதுவும் பிரிஞ்ச உணர்வு இல்லை. அப்படியே ஒரு வருஷம் போனது. அப்புறம் ஒரு நாள் அப்பா திடீர்னு ஹார்ட் அட்டாக்கில் என்னை விட்டு போய் விட்டாங்க என்ற இடி செய்திதான் வந்துச்சு. அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

     அழுது தீர்த்தேன். அப்பா பார்த்த தொழிலில் ஏதோ ஒரு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த அதிர்ச்சியில் தான் அவர் உடல்நலம் பாதிச்சு இருக்கு. நிறைய கடன் வாங்கி இருக்கிறார். அதனால் எல்லா சொத்துக்களையும் பேங்கும் கோர்ட்டும் பறிமுதல் செய்திடுச்சு. 

     அப்பா என்னுடைய ஸ்கூலுக்கு நிறைய டொனேஷன் அட்வான்சா கட்டி இருந்ததால் போன வருடம் வரை அதே ஸ்கூலில் தான் படித்தேன். அதற்கு மேல் அவங்களால் எதுவும் பண்ண முடியல. எனக்கு கார்டியன் ஆக இருந்த ஃபாதர் லூயிஸ் ரொம்ப நல்ல மனுஷன். அவர் தான் எனக்கு அனுமதி கேட்டு ஒரு வருடம் தங்க வைத்து இருந்தார். 

      அதற்கு மேல் அங்கு தங்க முடியாது என்ற நிலை வந்த போது தான் அவர் என் கிட்ட வந்து பேசினார். 

தொடரும்.

இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல்

பதிவிடுங்கள் தோழமைகளே. 

அன்புடன் லக்ஷ்மி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!