Skip to content
Post Views: 2,154
அத்தியாயம் 3
“அம்மு படி டா.. நாளைக்கு எக்ஸாம் இருக்கு இல்ல?” என குழந்தையிடம் ஆராத்யா கெஞ்சிக் கொண்டு இருக்க,
Advertisement
“இவன்கிட்ட கெஞ்சி என்னைக்காவது வேலைக்கு ஆகி இருக்கா.. இப்ப நான் வந்து நாலு குடுப்பேன்.. அப்புறம் தானா படிக்க உட்காரப் போறான் பாரு!” என்று கூறியபடி வந்த ஸ்ருதி கையில் இருந்த காபியை ஆராத்யாவிடம் நீட்டினாள்.
“தேங்க்ஸ் ஸ்ருதி!” என்று வாங்கியவள்,
Advertisement
Advertisement
“நான் சொன்னா அஜய் கேட்டுப்பான்.. இல்ல டா அம்மு?” என்று நான்கு வயது குழந்தையிடம் கேட்க, ஆமாம் என்று சமத்தாய் அமர்ந்தான் அஜய்.
“எங்க நான் அடிச்சிடுவேனோனு பல்டி அடிச்சுட்டான் உன் பக்கம்.. நீயும் பெருமை பட்டுக்கோ!” என்ற ஸ்ருதி,
Advertisement
“நீ காபி குடிச்சுட்டு கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணு.. நான் இவனை பாத்துக்குறேன்!” என்று ஸ்ருதி கூற, அஜய் ஆராத்யா தான் வேண்டும் என அடம் செய்ய,
“படுத்துறான் பாரு.. சரி அரை மணி நேரம் தான்.. முடிச்சுட்டு கீழ வாங்க!” என்று கூறி கீழே சென்றுவிட்டாள் ஸ்ருதி.
தரைத்தளத்தில் ஸ்ருதியும் அவள் அன்னை அம்பிகாவும் அஜயோடு இருக்க, மேலே ஒற்றை அரையில் ஆராத்யா தங்கி இருக்கிறாள். அதற்கு எதிரில் மொட்டை மாடியில் நிழலுக்காய் ஷீட்டும் போடப்பட்டிருக்க, மாலை அலுவலகம் முடிந்து வந்ததும் அங்கே தான் செலவிடுவாள் அஜயுடன் சிறிது நேரத்தை.
இரண்டு வருடமாய் இங்கே ஸ்ருதியோடு தான் இருக்கிறாள் ஆராத்யா.
வெட்ட வெளியாய் இருக்கும் வீட்டின் மேல் புறத்தில் இருந்து எதிரில் இருக்கும் பெரிய வீடு நன்றாய் தெரியும்..
ஸ்ருதி ஆராத்யாவின் கல்லூரி தோழி! கணவன் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.. இன்னும் ஆறு மாதத்தில் ஸ்ருதி அஜயை அங்கே அழைத்து செல்லும் எண்ணத்தில் இருக்கிறார் ஸ்ருதியின் கணவர்.
படித்து முடித்த அஜய் அன்னையை தேடி சென்றுவிட, மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஆராத்யா அதிலேயே கால்களை கூட்டி அமர்ந்து கைகளை கோர்த்துக் கொண்டு சாய்ந்துவிட்டாள்.
தனிமை எப்பொழுதும் பிடிக்காத ஒன்று. அப்படி அது கிடைத்தாலும் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விடுவாள்.
காரில் இருந்து ஆராத்யாவைக் கண்டவன் புன்னகையோடு வீட்டினுள் சென்று அன்னையிடம் பேசிவிட்டு முகம் கழுவி உடைமாற்றி பால்கனி வந்த போது ஊஞ்சலில் தனியாய் அமர்ந்திருந்தாள் ஆராத்யா.
சில நொடிகள் தான் நின்றிருப்பான்..பார்க்க சொல்லி கெஞ்சிய மனதை அடக்கி வாசிக்க சொல்லி உள்ளே வந்துவிட்டான்.
“இந்த சாட்டர் டே உங்களுக்கு லீவ் தானே? வெளில போலாமா எல்லாரும்? ரொம்ப நாள் ஆச்சே எல்லாருமா வெளில போய்?” என கல்பனா சாப்பிட அமர்ந்த கணவனிடம் கேட்க,
“சாட்டர் டே! அதுவும் பாதி நாள் லீவ்.. அது பொறுக்கல இல்ல உனக்கு?” என்று அகிலன் கூற,
“தர்ஷி வளைகாப்புக்குன்னு எப்படியும் பர்ச்சேஸ் பண்ணணுமே! கல்பனா சொல்றது சரி தான்.. போய்ட்டு வரலாம் டா அகி!” என்றார் மகேஸ்வரியும்.
“ஈவ்னிங்கா பிளான் பண்ணுங்க ம்மா.. பாக்கலாம்..” என்று அகிலன் சாப்பிட, அப்பொழுது தான் அறையில் இருந்து வந்த ரகுவும் சாப்பிட அமர்ந்தான்.
“நார் நீங்களும் வரலாமே?” கல்பனா ரகுவை கேட்க,
“இதென்ன டி நாரு மோருன்னு.. இப்படி கூப்பிடாதன்னா கேட்க மாட்டியா?” அகிலன்.
“டேய்! உனக்கென்ன வந்துச்சு? அவனே எதுவும் சொல்லல? கொழுந்தனார் தானே நீ வானு பேசாம மரியாதையா நீங்க வாங்கனு பேசுறாளே! அவளை போய் திட்டிட்டு இருக்குற?” என சண்டைக்கு வந்ததும் மகேஸ்வரி தான்.
“எப்படி ம்மா இப்படி? உங்க ரெண்டு பேரையும் புரிஞ்சுக்குறதுக்குள்ள..” என அகிலன் தலைசுற்றி போயிருந்தான்.
“வர்றியா ரகு! உன்கூட வெளில போய் ரொம்ப நாள் ஆச்சு” என்றார் அன்னையும் மகனிடம்.
“இந்த வீக் பிரீ தான் மா.. ஆபீஸ் டீம்அவுட் பிளான் இருக்கு..” ரகு கூற,
“அதெல்லாம் நீங்க போக வாய்ப்பில்லையே!” என்றாள் கல்பனா.
“ஆமா அண்ணி! ஆபீஸ்ல எல்லாரும் போறாங்க.. சோ அங்க எனக்கு ஒர்க் இருக்காதே! அதை சொல்ல வந்தேன்.. மாக்ஸிமம் சாட்டர் டே தான் பிளான் பண்ணுவாங்க.. சோ எனக்கும் ஓகே தான்.. போலாம்!” என்றான்.
“ஆபீஸ் எல்லாம் ஓகே தானே ரகு? ப்ரோப்லேம் எதுவும் இல்லையே?” அகிலன் கேட்க,
“ம்ம் ரொம்ப நல்லா போது டா.. இப்ப கூட ஒரு ப்ராஜெக்ட் கம்பிளீட் பண்ணிருக்கோம்.. எக்ஸ்பென்சிவ் அண்ட் காம்ப்ளீகேட் டூ.. ஃபாரின் கிளைண்ட் இப்ப வர ஸ்டார்ட் பண்ணி இருகாங்க.. ஓகே ஆச்சுன்னா சீக்கிரமே அப்ராட் போக வேண்டியதிருக்கும் வித் டீம்!” என்று ரகு பதில் சொல்ல, அடுத்து அவர்கள் பேசி முடிக்கும் வரையும் வேலையை பற்றியே இருந்தது.
“உங்க பெரிய மகனுக்கு ஏன் த்த ஓன் பிசினஸ்ல இன்ட்ரெஸ்ட் இல்ல?” கல்பனா தன் அத்தையிடம் கேட்க,
“இவ்வளவு சீக்கிரமா கேட்டுட்ட?” என்று கிண்டல் செய்தார் மகேஸ்வரி.
“அவர்கிட்ட கேட்டா இன்ட்ரெஸ்ட் இல்ல வேற என்னன்னு விட்டுடுறார்!” என்றாள்.
“அது தான் நிஜமே! ரகு அவங்க அப்பா மாதிரி.. ரகு அப்பா அவங்க அப்பாவோட பிசினஸ்ஸ கையில எடுத்தார்.. ரகு அதையே ஃபால்லோ பண்ணி அவனே தனியா பிசினஸ்னு ஆரம்பிச்சான்.. அகி அப்படி இல்ல.. அவனுக்கு என்னவோ ஒரு ஆசை.. அதை நிறைவேத்திகிட்டான்!” என்றார்.
ரகுவின் அலைபேசி சத்தம் கேட்கவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் மொபைலைப் பார்க்க, அழைத்தது நந்தகுமார்.
“மறந்துட்டேன் டா ரகு.. தர்ஷி வளைக்காப்பு விஷயமா பேசனும் டா.. நீ தூங்க போறியா? இல்ல இப்ப வேலை எதுவும் இருக்கா?” என்றார் இளைய மகனிடம் மகேஸ்வரி.
“தர்ஷி போன் பண்ணினா மா.. மாமாவும் சொன்னாங்க.. என்ன பண்ணனும் சொல்லுங்க பண்ணிடலாம்.. நீங்க அகிகிட்ட பேசுங்க.. எல்லாம் ஓகே ஆனதும் எனக்கு சொல்லுங்க.. அரேஞ் பண்ணிடலாம்..” என்றவன் கைகழுவி மொபைலை அட்டன் செய்து காதில் வைத்துக் கொண்டே செல்ல,
“நந்தா மாமா தான் கால் பண்ணினார்.. சொல்றானா பாருங்க.. அப்படி என்ன தான் பேசுவாங்களோ ரெண்டு பேரும்!” அகிலன் மாடி ஏறி செல்லும் தம்பியை பார்த்தபடியே அன்னையிடம் கூற,
“என்னவோ அவரோடவாச்சும் பேசுறானே! நல்லது தானே டா..” என்றார் மகேஸ்வரியும்.
“அவங்க பிரண்ட்ஷிப் எல்லாம் ஓகே தான் அத்த.. ஆனா அடிக்கடி கால் பண்ணி பேசிக்குறதை பார்த்தா ஒரு டவுட் வருது!” என்றாள் கல்பனா.
“உனக்கு என்ன டவுட் வருது?” என்றார் மருமகளைப் பார்த்து.
“உங்க புள்ள யாரையும் லவ் பன்றாரோ?” கல்பனா கேட்க,
“அகி இப்ப வேற ஒரு பொண்ணை லவ் பன்றான்னு யாராவது சொன்னா கூட நம்புவேன்.. ஆனா ரகுவை சொன்னா ம்ம்ஹும்!” என்றவரை கல்பனா முறைத்துப் பார்க்க,
“ம்மா! நீங்க அவனுக்கு கெத்து காட்டுறேன்னு என்னை கோர்த்து விட்டுட்டிங்க.. நல்லா வருவீங்க!” என்றவன் மனைவி பார்வை தன்னிடம் திரும்பவும்,
“இங்க பாரு டி! லவ் பண்றதுக்கு எல்லாம் ராசி இருந்திருந்தா வீட்டுல பார்த்த உன்னை கல்யாணம் பண்ணி இப்படி அவதிப்படுவேனா? பேசாம வேலைய பாரு!” என்றவனும் எழுந்து செல்ல,
“லாஜிக் சரி தான்.. அதனால உங்களை எல்லாம் சும்மா விடுறேன்!” என்றவளும் அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.
“என்ன ரகு? என்ன பிரச்சனை? உன் அக்கா போன் பண்ணி புலம்புறா?” நந்தகுமார் ரகுவிடம் அலைபேசியில் கேட்க,
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே மாமா?” என்றவன் பால்கனி வந்து ஆராத்யா அமர்ந்திருந்த இடத்தை தான் பார்த்திருந்தான். இப்பொழுது அவள் அங்கே இல்லை.
“உனக்கு இல்ல சரி.. ஆனா அத்தைக்கு நீ குடுக்குறியே!” என்றான் நந்தா..
“மாமா!..” நீங்களுமா என்பதை போல ரகு அழைக்க,
“புரியுது ரகு! ஆனா நீயும் அவங்க பக்கம் யோசிக்கணுமே! பெத்தவங்க பயம்..” என்றான் அக்கறையாய்.
“புரியாம இல்லை மாமா! ஆனா ஆராகிட்ட பேச முடியல என்னால.. ஃபர்ஸ்ட் டீம்அவுட்.. அவளுக்காக தான் நான் போனதே! இப்பலாம் ஆபீஸ் பார்ட்டி, ஃபன்க்ஷன்னு எதையுமே அட்டன் பண்ண பயமா இருக்கு.. அவ பேசினது தான் நியாபகம் வருது..” என்றான் அன்றைய நாளின் நினைவோடு.
“சரி என்ன பண்ணலாம்? இவ்வளவு யோசிக்குற நீ அதையும் யோசிக்கணுமே?” என்றான் நந்தா.
“கல்யாணம்னு எடுத்ததும் எல்லாம் ஆராகிட்ட பேச முடியாது மாமா.. நிச்சயமா அவ நெகடிவ் பதில் தான் சொல்லுவா.. அவ என்னை புரிஞ்சிக்கணும்.. அதுக்காக தான் டைம் எடுத்துக்குறேன்!” என்றான்.
“டைம் எடுத்துக்குறது எல்லாம் சரி தான் மாப்பிள்ள.. ஆனா எடுத்த டைம்ல எந்த ஸ்டெப்பும் எடுக்கலையே!” என்றான் கிண்டலாய் உண்மையாயும்.
“என் நிலைமை மாமா.. நான் நேரா பார்த்தா கூட எதுவும் தப்பா போயிட கூடாதேன்னு யோசிச்சு யோசிச்சு பண்ண வேண்டியதா இருக்கு!” என்றான்.
“ம்ம்ம் சரி ஓகே.. அப்ப உன் அக்கா சொல்றபடி பண்ணலாம்.. அது தான் ஒரே வழி!” நந்தா கூற,
“ம்ம்ஹும்! வேண்டாம் மாமா! வேண்டவே வேண்டாம்!” என்ற ரகு நிச்சயமாய் தன் காதலில் இடையில் என யாரையும் நம்பவும் இடைப்புக விடவும் தயாராய் இல்லை..
“என்னன்னே கேட்காம வேண்டாம்னு சொல்ற! ஓகே புரியுது உன் பயம்.. ஆனா தர்ஷி சொல்றது சரினு தோணுது.. இப்ப நான் எதுவும் பேசி உன்னை டிஸப்பாயிண்ட் பண்ணல.. தர்ஷி வரட்டும்.. அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்.. ஆனா இனியும் இப்படியே இருந்தா ஸ்ட்ராயிட்டா அறுபதாம் கல்யாணம் கூட பண்ண முடியாது!” என்று கிண்டலாய் கூற,
“மாமா!” என்று சிரித்தவன்,
“நீங்க எப்ப வர்றிங்க?” என்று கேட்க,
“ஒன் வீக் லீவ் கேட்ருக்கேன் ரகு.. இப்ப லீவ் சேவ் பண்ணினா பேபி வந்ததும் டைம் ஸ்பென்ட் பண்ண வசதியா இருக்குமேன்னும் தோணுது.. ஆனா தர்ஷியையும் பாக்கணுமே! முடிஞ்சவரை கூடவே இருக்கனும்.. ஒவ்வொண்ணுக்கும் என்னைய தேடுறா அவ!” என்று சிரிக்க, இந்த பக்கம் ரகுவும் புன்னகைத்தான்.
“சரி பார்த்துக்கோ.. நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம்..” என்று கூறி வைக்க, மொபைலை அணைத்தவன் மீண்டுமாய் எதிர்வீட்டை ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே வந்துவிட்டான்.
கட்டிலில் விழுந்தவன் மனம் முழுதும் ஆராத்யாவின் எண்ணம் மட்டுமே ஆணிவேராய்.
அன்று விளையாட்டாய் ஆரம்பித்து வைத்த பேச்சு ஒன்று ஆராத்யா மனதின் எண்ணத்தை தெளிவாய் அங்கே கூற வைத்திருக்க, கேட்டவனுக்கு அதன்பின் அவளை நெருங்கவே அத்தனை பயம்.
ஆம் பயம் தான்.. எங்கே தான் நினைத்த நினைப்பிற்கு மாறாய் எதுவும் நிகழ்ந்திடுமோ.. தன் மனம் நிறைந்தவள் கைவிலகி விடுவாளோ என்று.
error: Content is protected !!