Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 17.1

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 17.1

             இரவு உணவையும் கொடுத்தே தான் பெரியாத்தாவையும், பவித்ராவையும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பினாள் பூர்ணா. பின்பு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பிரித்து அடுக்க ஆரம்பித்தவள், அதில் இருந்த மல்லிகை பந்தை கண்டு யோசனையாக தாயை பார்த்தாள். வள்ளியோ, அவள் பார்வையின் பொருள் உணர்ந்து திரும்பி பார்க்க கூட இல்லை, அப்படியே சாய்ந்து அமர்ந்து படுத்து விட்டார். தாய் உறங்கி விட்டார் என்று நினைத்த பூர்ணா, மீண்டும் அந்த பூ பந்தைத்தான் பார்த்தாள்.

                 பூர்ணா கணவன் கதிரவனுடன் வாழ மாட்டேன் என்று சொல்லி தாய் வீடு வந்து ஒரு வருடத்திற்கு பின்பு தான் நோய் வாய்ப்பட்டு கதிரவன் இறந்தது. என்ன தான் அத்து விட்டு ஒதுங்கி கொண்டாலும், கட்டிய கணவன் இறந்த பின் பூ வைப்பதில் உடன்பாடு இல்லாததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக பூ வைப்பது இல்லை. சட்ட ரீதியாக பிரிந்த பின்பு தன்னை அலங்கரித்து கொள்வதில் அவள் ஈடுபாடு காட்டவில்லை. கல்யாணம் கட்ட வில்லை என்பது வேறு, கட்டிய கணவனை அத்து விட்டு தன்னை அலங்கரித்து கொண்டு கிராம புறங்களில் ஒரு பெண் வாழத்தான் முடியுமா என்ன?.

         தாய் வீடு வந்த பின்பு ஒரு சாதாரண பூனம் சேலையும், கருப்பு பொட்டும், கழுத்தொடு அவள் காது குத்தில் தந்தை எடுத்து போட்ட ஒன்னராபவுன் தங்க சங்கிலியும், காதோடு ஒட்டிய விசிறி தோடும், பின்னி இறுக்கிய கொண்டையுமாக தான் இருப்பாள். சாதாரண அலங்காரம் கூட கிடையாது, அப்படி இருக்க இது என்ன பூ, வளையல், பொட்டு எல்லாம். உணவு பண்டங்களை பற்றிய சந்தேகம் இல்லை. ஆனால் அதோடு வந்த மற்றவை அவளுக்கு சிறு சந்தேகம் தோன்றியது உண்மை தான். அதன் வழியே யோசித்தால் யோசனை தப்பான அர்த்தம் கொடுக்க, அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தன்னையே தேற்றி தானும் உறங்க ஆயத்தமானாள் பூர்ணா.



Advertisement

     அவள் கையில் மல்லிகை வாசம் இன்னும் மணத்தது. சிறுவயது முதலே பூர்ணாக்கு பூ என்றால் அதிக இஷ்டம். இந்த பூ தான் என்று இல்லாமல் ஏதேனும் ஒன்று எப்போதும் அவள் தலையில் இருக்கும். செவ்வந்தி, சாமந்தி அடுக்கு மல்லி என்று ஏதாவது ஒன்று அவள் தலையில் வைத்துக் கொண்டே தான் இருப்பாள். திரும்பவும் தன் கையை வாசம் பிடித்து பார்த்தாள். வயது பிள்ளையாக இருக்கும் பொழுது கத்திரிப் பூ நிற தாவணியும், அடுக்கு மல்லியும் வைத்து தன்னை அலங்கரித்துக் கொண்டது நினைவு வந்தது பூர்ணாக்கு விதி விட்ட கோலம் விதவையாகி போனாள்..

 மகள் என்ன செய்கிறாள் என்று ஓர கண்ணால் பார்த்த வெள்ளிக்கு கண்களில் நீர் நிறைந்தது. எப்படி இருந்த மகள். இன்று இருக்கும் கோலம் என்ன? எப்படி எல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று கனவு கண்டார். இன்று தன்னைப்போலவே வாழாமல் முடங்கிப் போனாளே… இனி என்ன நடந்தாலும் சரி மகள் கழுத்தில் புதுமஞ்சள் தாலி ஏற வேண்டும். அதை தன் உயிரை கொடுத்தாவது நிறைவேற்ற என்று நினைத்துக் கொண்டார்.

   ஒரு வாரமாக வேலு பூர்ணா கண்ணிலே அகப்படவில்லை எப்போது அவளுக்கு விஷயம் தெரியும் தன்னை போட்டு பொளந்து கட்டுவாள் என்று தெரியாததால்.. அவள் கண்ணில் இருந்து மறைந்தே தான் திரிந்தான். இதில் தோட்டத்திற்கு போகும்போதும் வரும்போதும் தாமரை வேறு வெளியில் நின்று தன்னையே பார்க்க ஒரு மாதிரி மனதில் பயம் வந்தது. இது என்ன புது பஞ்சாயத்து… ஏற்கனவே மகளை தாமரை பின்தொடர்வதை அறிவான். இப்பொழுது தன்னையும் தொடர்வதை அவனால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அத்தோடு அமைதியாக போகும் தன் வாழ்க்கையில் பாதிப்பாகுமோ என்ற பயமும் வந்தது.

Advertisement

         அன்று ஏதோ ஒரு வேலையாக பீரோவை குடைந்து கொண்டிருந்த பூர்ணா கையில் சிக்கியது பணமும், புது மஞ்சள் தாலிக்கொடியும்… பார்த்ததும் பகிர் என்று நெஞ்சடைக்க வேகமாக தன் தாயைத் தேடிப் போனாள். மகள் கையில் வைத்திருந்த பொருளைப் பார்த்து முதலில் அதிர்ந்தாலும் பின் என்றாவது தெரிய தானே போகிறது என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டார் வள்ளி.

Advertisement

“என்னம்மோ இது?…”

“இது என்னன்னு தெரியாத அளவுக்கு விபரம் இல்லாமவா எம் மக போயிட்டா?…”

“அம்மா மறைக்காம விவரம் சொல்லு?…”

Advertisement

 பங்குனியில் திருமணம் என்று பேசியிருக்க, மறைக்கும் எண்ணம் இல்லை வள்ளிக்கு.. பெரியாத்தா வந்தது வேலுக்கு பெண் கேட்டது என்று எல்லாம் சொல்லிவிட்டார்.

 நெஞ்சே ஆடிப் போனது பூர்ணாக்கு.. யாரு வேலா?.. வேலுவுக்கு தன்னை கேட்டது?… முகம் கோபத்தில் கொதிக்க வேகமாக வெளியே வந்தாள். அங்குதான் விறகு வெட்டும் அருவாள் கிடக்க பட்டென்று கையில் எடுத்தவள் இந்த நேரம் வேறு எங்கிருப்பான் என்று அறிந்து நேராக களத்து மேட்டை நோக்கி நடையை போட்டாள்.

   அங்கு வேலுவோ மணிமாறனிடம் குழம்பிக் கொண்டிருந்தான் செய்து வைத்திருக்கும் வேலையைப் பற்றி…

“சொம்புக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுச்சு எங்க அத முடிஞ்சுச்சு மணி…”

“எனக்கு என்னவோ இது சரி வரும்ன்னு தான் தோணுது வேலு…” என்றான் மணிமாறன்.

“டேய்” என்ற அலறியவன் “நீயுமாடா… நான் போய் எப்படிடா நம்ம சம்முவ?… அது பெரிய துரோகம் மணிமாறா… என் மனைவின்னு எல்லாம் என்னால ஒரு நொடி கூட யோசிக்க முடியாது..”

“புருஷன் பொண்டாட்டினா தாம்பத்தியம் மட்டும் வாழ்க்கை கிடையாதுடா வேலு. அது ஒரு பாதுகாப்பு ஆதரவு அரவணைப்பு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இந்த உலகத்தில் நாம தனி இல்லன்ற ஒரு எண்ணம் இப்போதைக்கு நம்ம சம்முக்கு இதுதாண்டா தேவை.. நீ யோசிச்சு பாரு பவித்ரா மேல செம உயிரையே வச்சிருக்க.. இந்த கல்யாணம் தப்புன்னு நீ ஏன் யோசிக்கிற? இந்த ஒத்த கல்யாணம் நடக்க போறதனால ஒத்தையில இருக்கிற ஒரு பொண்ணுக்கு ஆதரவு கிடைக்குமேடா..”

“பவித்ராவும் அம்மாவுக்காக ஏங்கிக் கிடக்கு. சம்முக்கும் பவித்ரா தான் உலகம். எத்தனை நாளைக்கு உங்க பெரியாத்தாவே பிள்ளைய பார்க்கும் வாழ வழி இல்லாம திரும்பி வந்துடுச்சு நம்ம சம்மு.. உண்மையாவே நீ சம்முக்கு நல்லது செய்யணும் நினைச்சா உன் குடும்பத்தில் சேர்த்துக்க… கூலி வேலையும் வறுமையும் விதைன்னு ஒதுக்கி வைக்கிறதோ போதும்டா அதுக்கு… இனியாவது உன் மகளை வச்சு அந்த பிள்ளைக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கட்டும்டா..” என்று மணிமாறன் பேசிய கரைத்துக் கொண்டிருக்க, வந்துவிட்டாள் சம்பூர்ணா.

  அவளை முதலில் கவனித்தது வேலு தான். மணிமாறன் பேசிக் கொண்டிருக்க, பூர்ணாவையும் அவள் கையில் இருந்து அருவாளையும் பார்த்தவன்.. நொடியில் பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறிக்கொண்டான்.

“என்னடா திடீர்னு குரங்கு மாதிரி தாவுற?..” என்று மணிமாறன் கேட்டுக் கொண்டிருக்க..

“எவ்வளவு தைரியம்டா!.. உனக்கு இந்த பூர்ணா யாருன்னு தெரிஞ்சே, என்கிட்ட வாலாட்டி பாக்குறியா? உன் நெஞ்சில் இருக்கும் மஞ்சச்சார புளியல நான் பெருமாள் மவள்ள…”

“இங்க பாரு சொம்பு. நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது உன்னை மாதிரி தாம்ல நானும் அதிர்ச்சியாகி நிற்கிறேன்…”

 “உனக்கு தெரியாம எப்படில்ல லட்ச ரூபா பணமும், தாலிக்கொடியும் என் வீடு வரும். வயசுக்கு வந்த பிள்ளை வீட்டில் இருக்க புது மாப்பிள்ளை பவுசு கேக்குதோ பரதேசிக்கு…”

“டேய் வேலு என்னடா இது ஒரு பொம்பள அருவாள் எடுத்து மெரட்டுது.. ஒரு ஆம்பள பையன் நீயே எதிர்த்து நிற்காமல் ஓடிப்போய் மரத்துல ஒழியிற…”

“என்ன மணிமாறா நக்கலா.. அந்த வேலு பயல ஒழியாம என்கூட எதிர்த்து நிற்க சொல்லு நானும் ஒரு கை பாக்குறேன்…” என்றாள் பூர்ணா.

டேய் வேலு இதுக்கு மேல உனக்கு மரியாதையே கிடையாதுடா.. மரியாதையா இறங்கி வா, பேசற இந்த சொம்பு வாயிலே நாள் அப்பு விடு…”

“எது அப்பு விடுவாராம்ல!.. ஏன் மணிமாறா என் தங்கச்சி கிட்ட நீ வாங்குனது பத்தாதா.. என்கிட்ட வாங்கணுமா?…”

“அதானே அக்கா தங்கச்சி கிட்ட சீரழிக்கனும்னு தான் எங்க தலையெழுத்து போல..” கேலி போல மணிமாறன் சொல்ல,

அவனை உத்துப் பார்த்தவள் “அப்ப உனக்கும் விஷயம் தெரியும்…”

 “ஆமா சொம்பு எனக்கும் தெரியும். எனக்கு இதுல ஒன்னும் தப்பு இருக்கிற மாதிரி தெரியல…”

“போடா பொசகட்ட பயலே பொம்பளைக்கு இரண்டு பொழப்பா… இந்த ஊர் என்ன காரி துப்பாது என் வயசுல எங்க அம்மாவுக்கு நான் கட்டிக் கொடுக்கத்தக்க நின்னேன். கட்டையில போக காலம் ஆகிப்போச்சு இதுல கல்யாண வேற கேக்குதோ!.. என்ன கேவலப்படுத்தவே நீங்க எல்லாம் நடக்குறீங்கல்ல..”

“விதவைன்னு சொல்லி உன்னை தள்ளி வைக்கிற இந்த ஊரை பார்த்தா நீ பயப்படுற சம்மு…”

“அந்த ஊர்ல தாம்ல நான் வாழ்றேன், இனிமேட்டும் வாழனும்.. அப்ப அந்த ஊரை பார்த்து நான் பயந்து தான் ஆகணும் மணிமாறா.. தாலி அறுத்து எங்க அம்மா நிக்கும் போது இருவத்தி ரெண்டு வயசுதான். அவங்க வாழல அப்ப நானும் வாழுவேன். ஒருத்தனுக்கு கழுத்தை நீ சீல் பட்டு ஊர் சிரிச்சு போதாது..” அழுகையை அடக்கி சொன்னாள் பூர்ணா.

 “நம்ம வேலை அப்படி கிடையாது சொம்பு…”

“புருசன்னு வந்தா எல்லா ஆம்பளையும் ஒன்னு தான்டா மணி மாறா… ஒரு தடவை பட்டதே போதும்…”

“ இங்காரு வேலு, தன வருசம் பழகுன நம்ம பழக்க வழக்கத்தை கேவலப்படுத்தி விடாதே.. என் குணம் உனக்கு தெரியும். நீ புது மாப்பிள்ளை பவுசுகாட்ட ஆசைப்பட்ட அதுக்கு நான் ஆள் கிடையாது. இந்த கல்யாண பேச்சு வார்த்தை அடுத்த கட்டத்துக்கு போச்சு நான் பேசமாட்டேன் என் அருவாள் தான் பேசும் சம்மு எதுக்கும் பயந்து போறவன் கிடையாது உனக்கு என்னை தெரியும்…” நேரடியாகவே மிரட்டி விட்டு தான் நகர்ந்தாள் பூர்ணா.

    அடுத்த நாளே வேலு பவித்ராவோடு பூர்ணா வீடு சென்று விட்டான். அவனுக்கு நன்றாகத் தெரியும் கோபம் எல்லாம் தன் மீதுதான் வரும் பிள்ளையை அவள் ஒதுக்க மாட்டாள். பிள்ளையோடு வந்து உறவே வளர்க்க பார்த்தவனே பூர்ணம் முறைத்து பார்க்க..

“அம்மா எனக்கு காய்ச்சல்” என்பது சின்ன சிட்டு..

“என்ன காய்ச்சலா?.. என்னடி சொல்ற.. எப்படி காத்து வந்துச்சு போன வாரம் பார்க்கும்போது கூட நல்லாத்தானே இருந்த.. வேற எதை வாங்கி கொடுத்து பிள்ளையை கெடுத்திய வேலு..”

“நான் வந்தது உன்னைய பாக்காம இவனை பார்த்து நின்று போனேனே நீ மொத உள்ள வா?.. என்ன சாப்பிட்ட? பிள்ளைக்கு ஆகாத வாங்கி கொடுத்து கெடுத்து வச்சிருக்கியே..” அவனையும் திட்டி விட்டு பிள்ளையை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல.. அப்போதுதான் வெயிலுக்கு நிம்மதியே..

முழுதாக தங்களை ஒதுக்கி விடவில்லை என்ற எண்ணம் வந்தது. பூர்ணாவுக்கு பெரிய பலவீனமே பிள்ளை பாசம் தான் அதை வைத்து தானே பெரியவர்கள் திட்டம் போட்டதும்.. பவித்ரா என்று வந்து விட்டால் பூர்ணா கண்களுக்கு எதுவும் தெரியாது. அவள் மட்டும் தான் கருத்தில்.. அதை தற்போது வேலவும் பயன்படுத்திக்கொள்ள நினைத்தால் போல…

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!