கூட்டத்தை நகர்த்தி பார்த்த இளந்திரையன், “மாறா” சீற்றமுடன் கத்தினான்.
Advertisement
மகேஷ் பாண்டியன் நெற்றி, வாயிலிருந்து இரத்தம் வந்திருந்தது.
மாறனை இழுத்து ஓங்கி அறைந்தான் இளந்திரையன்.
Advertisement
Advertisement
“தீரா” வேலன் சினமுடன் அழைத்தார்.
“சித்தப்பூ, இதுல நீங்க தலையிடாதீங்க. எத்தனை முறை சொல்லி இருக்கேன் மாறா? அவங்கள ஊரை விட்டு தள்ளி வைத்த காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. இதுக்கு மேல அவன் மேல நீ கையை வைக்கக் கூடாது. சத்தியம் பண்ணு” சினமுடன் கத்தினான்.
Advertisement
அண்ணா..அவன்..
சொல்றேன்ல்ல..
என் அண்ணா மேல சத்தியமா இனி இவனை அடிக்க மாட்டேன்.
“ம்ம்! சித்தப்பூ, மாறாவையும் செழியனையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க” தீரன் மறைந்திருந்த கலையரசனை முறைத்து அவன் நண்பர்களை பார்த்து எச்சரித்தான்.
மகி மெதுவாக எழ, அவனுக்கு கை கொடுத்து தூக்கிய இளந்திரையன் வித்யாவை பார்த்து, “என்னோட நம்பருக்கு கால் பண்ணு. இப்படி ஓடியெல்லாம் வரக் கூடாது”.
அழுது கொண்டே ஓடி வந்த மகேஷ் அம்மா, “எதுக்குடா சொல்லாம வந்த?” அழுது கொண்டே அவனை தாங்கினார்.
ம்மா..என்று அவன் கையிலிருந்த அழகான கம்மல் ஒன்றை கொடுத்தான்.
“உன்னோட அப்பாரே இதை எனக்கு வாங்கிக் கொடுத்துருவாருடா. இதுக்காக இங்க வந்து அடி வாங்கணுமா?”
ம்மா..அப்பா வாங்கித் தருவார். ஆனால் என்னால இப்பொழுதைக்கு இதான வாங்கித் தர முடியும்..
அவர் கண்கலங்க, “ஏன்டி, இத்தனை பொம்பளைங்க இருக்கீங்கல்ல? சின்னப்புள்ள அடி வாங்குதே கொஞ்சமாவது மனசு இறங்குதா? இறங்காதே… எல்லாத்தையும் செய்தவனுக நல்லா தான் இருக்கானுக” என்று ஊராரை திட்டிக் கொண்டே தன் மகனுடன் நடக்க, குரு அவன் காரை இடையே நிறுத்தி, “வாங்க அவனை ஹாஸ்பிட்டல்ல சேர்க்கணும்”
ஒண்ணும் வேண்டாம்..
ம்மா..தீரா சொன்னான்.
“அவன் சொன்னால் நீ செய். என் பையன் அடிவாங்குறப்ப எங்க போனான் அந்த தீரன்? அடிச்சதே அவனோட தம்பி தான! நீங்க யாரும் நல்லாவே இருக்க மாட்டீங்க” அவன் அம்மா சத்தமிட்டார்.
ம்மா, தீரன் அண்ணாவுக்கு ஏதும் தெரியாது..
ஆமாடா தெரியாது. அவன் பச்சப்பிள்ளை. அவனுக்கு சப்போர்ட் பண்ண அப்புறம் நான் பொல்லாதவளாகிடுவேன்.
“அண்ணாகிட்ட, தேங்க்ஸ் மட்டும் சொல்லிடுங்க அண்ணா” மகேஷ் தன் அம்மாவின் தோளில் இருந்து கையை எடுத்து தடுமாறினான்.
மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த இளந்திரையன் மகேஷை தூக்கி காரில் போட, அவன் அம்மா கூச்சலிட்டார்.
“என்னோட பிள்ளை” அவர் கத்த, அத்தை யாருக்கும் கேட்காது..
“அம்மா” மகேஷ் அழுத்தி அழைக்க, வாயை கைகளால் அடைத்துக் கொண்டார்.
அண்ணா..சாரி, என்னால உங்களோட தம்பியை அடிச்சுட்டீங்க? இப்ப என்னால் உங்களுக்கு நேரம் விரையமாகுது..
இல்லடா, நீங்க தான் என்னை மன்னிக்கணும்.
அண்ணா..ப்ளீஸ்..
மாறா, இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டான்.
பரவாயில்லை அண்ணா..
மகியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருந்திட்டு அவனையும் அவன் அம்மாவையும் பாதுகாப்பாக வீட்டிற்கு தீரனும் குருவும் அனுப்பி விட்டு வந்தனர்.
வீட்டிற்கு வந்த தீரன் மாறனை தேடினான்.
அவன் சாப்பிடவில்லை. கோபமாக அறைக்கு சென்று விட்டான் தீரா வேலன் கூற, அவனறைக் கதவை தட்டினான் இளந்திரையன்.
எனக்கு பசிக்கலை.
நீ சாப்பிட வேண்டாம். எனக்கும் எதுவும் வேண்டாம்.
கதவை திறந்து மாறன் சினமுடன், “நீங்க அடிச்சது கூட எனக்கு வலிக்கலை. அவனுக்காக அடிச்சுட்டீங்க?”
மாறனை அமர வைத்து அறிவுரை வழங்கினான் இளந்திரையன்.
மதிய வேளை. சுள்ளென வீசிய கதிரவனுக்கு உறக்கம் வந்தது போல மறைந்து மறைந்து காரிருளை காட்ட, சொட்டு சொட்டாக தொடங்கி காற்றுடன் வருணபகவான் மழையை பொழிய வைத்தார்.
நடந்து கொண்டிருந்த நம் நாயகிகள் நனைந்தவாறு ஓர் பேருந்து நிறுத்தத்தில் ஓடிச் சென்று அமர்ந்தனர். விழுப்புரத்தில் உள்ள வைசுவின் கல்லூரி தோழி வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனால் அவள் தோழி வீடு பூட்டி இருந்தது.
செய்வதறியாது அங்கும் இங்கும் சுற்றி நடந்த போது தான் மழை வந்து விட்டது.
மூவரும் சோர்வுடன் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அமர்ந்திருந்தனர். இரு நடுத்தர ஆண்கள் அவர்களை நெருங்கினார்கள்.
“ஏம்மா, பேருந்திற்காக காத்திருக்கீங்களா? தலை ஈரமா இருக்கு. வாங்க எங்க வீட்ல ஓய்வெடுத்துட்டு போகலாம்”.
வைசு பயந்து அவர்களை பார்க்க, “உங்கிட்ட கேட்டோமா? போய்யா” சுப்ரியா நடுங்கிக் கொண்டே சொல்ல, அவள் தோளில் அவர்களில் ஒருவன் தொட, அவனை பிடித்து தள்ளினாள் வைசு.
அச்சமயம் கார் ஒன்று அவர்கள் முன் வந்து நிற்க, அந்த இருவரும் ஓடி விட்டனர்.
“நம்மை கொல்ல எண்ணுபவன்” என்று எண்ணிய மூவரும் அதிர்ந்து நின்றனர்.
காரிலிருந்து இறங்கியவனை பார்த்து வைசு கண்கலங்க நிம்மதியுடன் அமர்ந்தாள்.
“ஹே வைசு, இங்க என்ன பண்றீங்க?”
“நீங்க அக்கா சீனியர் தான!” அக்சரா கேட்க, முதல் முறை அக்கா என்கிறாளேயென்று வைஷ்ணவியும் சுப்ரியாவும் அக்சராவை பார்த்தனர்.
“ஆமா, உனக்கு என்னை தெரியுமா?”
“ம்ம்! பார்த்திருக்கேன்” அக்சரா கூறினாள்.
“உங்க அம்மா எங்க வைசு? அவன் அவர்களருகே வந்து இப்படி நனைந்து இருக்கீங்க? உங்க வீடு இங்க இல்லையே!”
“ஆமா, எங்களுக்கு பாதுகாப்பான இடம் வேணும்” அக்சரா சொல்ல, “நோ..” அக்சரா கையை வைஷ்ணவி பிடித்தாள். அக்சரா அப்பொழுதும் அவள் கையை தட்டி விட்டாள்.
“ஹே, இப்ப எதுக்கு வைசு கையை தட்டி விடுற? பாதுகாப்புன்னா? வைசு..பிரச்சனையா? யாரும் பிரச்சனை பண்றாங்களா?” அவன் குரலில் அழுத்தம் தெரிந்தது.
“ஆமா, எங்களுக்கு உங்களால உதவ முடியுமா?” சுப்ரியா கேட்க, அவள் கையை வைஷ்ணவி பிடித்தாள்.
“எனக்கு என்ன பிரச்சனை வரப் போகுது? முதல்ல என்ன பிரச்சனை? யாரால்? சொல்லு?”
மூவரும் பேசாமல் அமைதியாக நின்றனர். யாருன்னு அவங்களுக்கே தெளிவாக தெரியாதே!
“சரி, வாங்க எங்க ஊருக்கு போகலாம்” அவன் அழைக்க, “உங்க அண்ணா பத்தி சொல்லி இருக்கீங்க. அவருக்கு பிடிக்காதுல்ல? வேண்டாம்” கைகளை ஆட்டி உதட்டை அசைத்து பேசினாள்.
உன்னை பிரச்சனைல்ல விட்டு போய் என்னால நிம்மதியா இருக்க முடியாது. “அவரிடம் நான் பேசிக்கிறேன்” என்று மூவரையும் அவன் காரில் ஏற்றினான்.
தயங்கினாலும் வைஷ்ணவிக்கு வேறு வழியில்லை. அவளுடைய சீனியருடன் கிளம்பினார்கள்.
அன்றிரவு கோவில் வேலைகளை முடித்து இரவில் பிரச்சனை இல்லை என்று ஊரை மாணிக்குடன் சுற்றி வந்து அவனை மதுரவீரன் கோவிலில் விட்டு பூசாரியிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு தன் சித்தப்பாவுடன் வந்தான் இளந்திரையன்.
தீராவும் வேலனும் நாளைக்கு கோவிலில் நடக்கவிருப்பதை பேசிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தனர்.
பழைய காலத்து பெரிய அரண்மனை, தூண்கள், மிருகங்களின் தலைகள், தலைமுறை புகைப்படம் இருக்கும் இடம் மட்டும் காலியாக இருந்தது.
ஹாலின் நடுவே வெட்டவெளியாக இருந்தது. மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி இருந்தது.
“இவனுக என்ன பண்றானுக? தண்ணீர் தேங்கி கிடக்கு” வேலன் தீராவிடம் சொல்ல, புதிய வாசனை வர அப்படியே அவன் நின்று “சித்தப்பூ வீட்டுக்குள்ள புதுசா யாரோ இருக்காங்க”
“நம்ம வீட்டுக்குள்ள வர எவனுக்கு தைரியம் இருக்கு?” அவர் சத்தமிட, செழியன் வேகமாக வெளியே வர, இடையே இருந்த பூக்கூடையை வேலன் சினத்தில் எத்தி விட்டார்.
சோர்வுடனும் வருத்தமுடன் அமர்ந்திருந்த தங்கபதுமைகள் மூவர் மீதும் பூக்கள் விழ, இடியோசை சத்தமாக பளீர் வெளிச்சத்தில் பொண்ணுங்க முகம் தேவலோக மங்கைகளாக தெரிந்தனர்.
வேலனும் தீரனும் அக்சரா, சுப்ரியாவை பார்த்து அதிர, இடியோசையில் அக்சரா பின் ஒளிந்திருந்த வைஷ்ணவி மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
வேலன் அதிர்ந்து அவளையும் அக்சராவையும் பார்த்து தீரனை பார்க்க, அவன் நெஞ்சில் கை வைத்து மூச்சற்று நின்றான்.
“தீரா” வேலன் கத்த, மூச்சை இழுத்து விட்ட இளந்திரையன், சித்தப்பூ இங்க பொண்ணுங்க…அது…அது…சித்தப்பூ….
திட்டிறாத அண்ணா. அவங்களுக்கு ஏதோ பிரச்சனை. அதான் பாதுகாப்புக்காக அழைச்சிட்டு வந்தேன். நான் விழுப்புரம் போனேன்ல்ல. அங்க பேருந்து நிறுத்தத்தில் தான் பார்த்தேன். இருவர் அவங்ககிட்ட பிரச்சனை பண்ணீட்டு இருந்தாங்க அவன் சொல்ல,
வேலன் மூவரையும் பார்த்துக் கொண்டே இளந்திரையனை அறைக்கு இழுத்துச் செல்ல, அவன் வைஷ்ணவியை பார்த்துக் கொண்டே சென்றான். அக்சரா வேலனை பார்த்து அதிர்ந்து நின்றிருந்தாள்.
மூவர் முன்னும் வந்த தீரன் ஒவ்வொருவராக பார்த்து, வைசுவை நெருங்க, சுப்ரியா வேகமாக வைசு முன் வந்து கராத்தே போஸ் கொடுத்து, “என்னோட அக்காவை தொடணும்ன்னா என்னை தோற்கடிக்கணும்”
மாறனோ, “ஓய்! யார்கிட்ட? உங்கள உள்ள விட்டதே தப்பு. எங்க அண்ணாவை யாரும் ஏதும் செய்ய முடியாது”.
“மாறா, அந்த துவாலையை எடு” தீரன் கேட்க, ஹ… மாறன் தீரனை பார்த்தான்
“சொன்னது கேட்கலையாடா?” வேலன் கேட்க,
“சித்தப்பூ எதுக்கு?”
செழியன் ஓடிச் சென்று எடுத்து வந்து தீரன் கையில் கொடுத்தான்.
சுப்ரியா கையை பிடித்து இழுத்து அவளை திருப்பிய தீரன், “கார்ல்ல தான அழைச்சிட்டு வந்திருப்ப? தலை இவ்வளவு ஈரமா இருக்கு” துவாலையால் சுப்ரியா தலையை துவட்டி விட்டான்..
அக்சராவை ஆழ்ந்து பார்த்த இளந்திரையன், அவளுக்கும் அவனே துடைத்து விட்டான். அவன் தம்பிகளால் அவர்கள் கண்ணையே நம்ப முடியவில்லை. அவர்கள் தீராவின் புதிய பரிமாணத்தை திகைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
“உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க?” இளந்திரையன் அக்சராவிடம் கேட்க, விரைந்து அவனிடமிருந்து விலகி “தெரிஞ்சா தான் உதவி செய்வீங்களோ?” அவள் பேச்சில் உரிமை தெரிந்தது.
ஆமா சித்தப்பூ, அவளோட ஐந்து வயதில் நடந்த பிரச்சனையில அவளுக்கு அம்னீசியா வந்து எல்லாமே மறந்து போச்சு. ஐந்து வயதின் பின் நடந்தது மட்டும் தான் நினைவில் இருக்கு. பேச்சில் பிரச்சனையில்லை. ஆனால் அவள் பேசுவதை நிறுத்தியதால் பேசவே முடியாமல் போச்சு..
இளந்திரையன் அதிர்ந்து வைஷ்ணவியை பார்த்தான்.
“என்னோட சிட்டுவுக்கு அம்னீசியாவா? மறந்துட்டாளா? அதான் ஏதும் தெரியாதது போல இருக்காளா?” அவன் கண்ணீர் வெளியே வந்தது.
வேலன் அவன் கையை அழுத்தி பிடித்தார்.
முகத்தை திருப்பி கண்ணீரை சுட்டி விட்டான்.
“அண்ணா” மாறன் சுருதி குறைய அழைத்தான்.
“அவளுக்கு அதனால மட்டும் பேச்சு வரல. ஆட்களை மட்டும் அவள் மறக்கலை. வாழ்க்கைக்கு தேவையான சின்ன விசயம் கூட அவளுக்கு நினைவில் இல்லை. அவளை பள்ளியில் சேர்த்த போது பசங்க எல்லாரும் அவளை கேலி செய்ய ஆரம்பிச்சாங்க. அதில் அமைதியானவள் தான். பேசவேயில்லை..
இவளை பேச வைக்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. பின் ஸ்பெசல் சைல்ட் படிக்கும் இடத்தில் சேர்த்தாங்க. அங்கேயும் கொஞ்ச நாள் தான் இருந்தா. அவளுக்கு அந்த சூழ்நிலை பிடிக்கலை. அதனால் அம்மா அவளை ஊக்கப்படுத்த நிறைய பேசி தான் எல்லாரும் படிக்கும் பள்ளியில் சேர்த்தாங்க. பசங்க கேலி செய்ய செய்ய மொத்தமாக பேசுவதையே நிறுத்தீட்டா” அக்சரா சொல்லி அழுது கொண்டிருந்த வைஷ்ணவியை பார்க்க, மனம் கனத்து நின்றிருந்தார் இளவேலன்.
ஆனால் தீரானால் அவன் சிட்டு அழுவதை அமைதியாக பார்த்துட்டு இருக்க முடியலை.
“போதும். இதுக்கு மேல எதுவும் நீ பேச வேண்டாம்” கத்தினான்.
எல்லாரும் அதிர்ந்து அவனை பார்க்க, வைஷ்ணவி அழுகையை நிறுத்தி அவனை பார்த்தாள்.
“முதல்ல ஆடையை மாத்துங்க. ரெஸ்ட் எடுங்க. நாளை காலை மீதியை பேசிக்கலாம்” சொல்லி விட்டு வேகமாக படியேறி அவனறைக்குள் புகுந்து கொண்டான்.
சுப்ரியா அக்சராவை முறைத்து, “வாக்கா” அழைக்க, ஓய்! நானும் உனக்கு அக்கா தான்.
நான் சொன்னது சரின்னு நிரூப்பிச்சுட்டேல்ல?
என்னடி?
வைசு அக்காவை அழ வச்சுட்டேல்ல?
அவளுக்காக தானடி பேசினேன்.
இல்ல நீ அக்காவை எப்போதும் போல கஷ்டப்படுத்த தான செய்த?
“அதென்ன எல்லாருக்கும் அவ தான் முக்கியமா? என்னை பார்த்தால் மனுசியாவே தெரியாதா? அந்த கொலைகார பாவிக்கு கூட அவளை தான் பிடிச்சிருக்கு. எல்லாரையும் அப்படி என்ன செய்து தான் மயக்குறா?” சீற்றமுடன் கத்தினாள் அக்சரா.
“ஏய், என்ன பேச்சு பேசுற?” செழியன் சத்தமிட, பதட்டத்தில் இருந்த சுப்ரியா அக்சராவின் வார்த்தையில் அவளை கன்னத்தில் அறைந்து “இப்படி பேசாத” கத்தினாள்.
கதவை திறந்து இளந்திரையன் வெளியே வந்தான்.
“அம்மாடி, சண்டை போடாதீங்க” வேலன் அருகே வர, “என்னயவே அடிச்சிட்டியா?” என்று அக்சரா சுப்ரியா முடியை பிடித்து இழுத்து அவளை அடிக்க வந்தாள்.
மாறன் திகைத்து அவர்களை பார்க்க செழியன் அக்சரா கையை பிடித்து தள்ளி விட்டு,
“அவ உன்னோட சின்னப்பொண்ணு. அடிக்க வர்ற? அவ கேக்குறதுல்ல என்ன தப்பு இருக்கு? வைசு உன்னை என்ன செய்தாள்? பொதுவாகவே சிலருக்கு கவர்ந்திழுக்கும் முகம் இருக்கும். அது வைசுவிடம் இருக்கு. அதுக்காக மயக்குறான்னு பேசுற? அடுத்தவங்களிடம் பேசாமல் எப்போதும் ஒதுங்கி இருக்கும் அவள் அடுத்தவனை மயக்க நினைப்பாலா? நீ தான சொன்ன? அவள பசங்க கேலி செய்து பேச முடியாமல் போனதுன்னு. அது புரிந்த உனக்கு அவள் எத்தனை பேர் பேச்சாலும் கேலியாலும் கஷ்டப்பட்டிருப்பா. அது உனக்கு புரியலையா?” சத்தமிட்டான்.