Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 15

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 15

      நிரஞ்சன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான். இப்போது அவனுக்கு தான் மயக்கம் வரும் போல இருந்தது. தாலியை கழற்றி கொடுத்தது நிதானமில்லாமல் கோபத்தில் செய்தது தான். ஆனால் அவ்வளவு கோபம் அவள் மனதில் இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை.

    நிரஞ்சன் சட்டையை பிடிக்கும் ஆத்திரத்தில் தான் பிருந்தா ஓடி வந்தாள். தன் தந்தை, தங்கை மேல் கை வைத்தவனை ரெண்டு நாளாவது கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும் என்ற ஆத்திரத்தில் வந்தவவளுக்கு தங்கையின் செயல் பெரிய அதிர்ச்சி. நிரஞ்சனை தண்டிக்கணும் என்ற எண்ணம் தான் அவளுக்கு… உறவை முறித்துக் கொள்ளும் எண்ணமில்லை. அதனால் தான் நர்மதாவை திகைத்து பார்த்தாள்.



Advertisement

     சுசீலாவால் தாங்க முடியவில்லை.

  “ரெண்டு பிள்ளைக்கு அம்மாவான அப்புறம் இது என்ன கேலி கூத்து?… அவனும் கோபத்துல நிதானமில்லாம நடந்தான். நீயும் அதே போல தான் நிதாணமில்லாம நடக்குற நர்மதா. நீ செஞ்ச தப்போட வீரியம் என்ன தெரியுமா?… இனி நீ எங்க வீட்டுக்கு வரவே முடியாது…” என்று கத்த,

   “வர மாட்டேன் அத்த. கையை பிடிச்சு தரதரன்னு இழுத்து வந்து வெளியே விட்டார். ஊரே பார்த்த்துச்சு. என்ன வாழ்க்கை நான் வாழ்ந்து இருக்கேன். உங்க பையன் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி நின்னேன். புருசன், பிள்ளைக, குடும்பம் இதை தாண்டி எதையுமே யோசிக்காத எனக்கு உங்க பையன் என்ன பரிசு கொடுத்தார். கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளி விட்டார். அப்புறம் இத்தனை வருசம் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன?…”

Advertisement

   பிருந்தா தங்கை அருகே வந்து தட்டி கொடுத்தாள்.

Advertisement

  “அப்படி என்ன நான் ஆகாத பொண்டாட்டி உங்க மகனுக்கு… எம்புட்டு தான் நான் விட்டு கொடுத்து எம் புருசன்னு நின்னாலும், அவர் கிட்ட நல்ல பொண்டாட்டின்னு பேர் வாங்கவே முடியாது. என்னோட குறையை மட்டுமே யோசிக்கிற மனுசன் அவர்…”

  “நம்மு கொஞ்சம் அமைதியா இரு, திரும்ப பிரசர் கூடி போகும்…” என்று பிருந்தா அழுத்தி சொல்ல,

  “நான் பேசணும்க்கா… நான் என் புருசன் ன்னு காவடி எடுத்தாலும் அவர் கிட்ட நல்ல பேர் வாங்க முடியலையே. நான் என்ன மோசமான பொண்ணா? அவர் பொண்டாட்டி தான நானு… என் பேச்சை காது கொடுத்து கேட்டா என்னவாம்? அப்படியா கொண்டு போய் குழியில தள்ளிடுவேன். ஒரு பொண்டாட்டி புருசன் கிட்ட பெருசா என்னத்த சொல்ல போறா?… நாமளும் நாலு பெற போல நல்ல வாழ்க்கை வாழணும். அனாவசியமாக செலவு செய்யாதீங்க. ரெண்டு பிள்ளை இருக்கு ஆடம்பரம் வேனாம்ன்னு சொல்லுவேன். இதை கூட ஒரு பொண்டாட்டி சொல்ல கூடாதா…” என்று கண்ணை துடைத்தவள்,

Advertisement

   “அப்படி என்ன ஆண் கர்வம். எல்லாருக்கும் ஏறு முகமாகவே வாழ்க்கை இருக்குமா? இருக்கும் போது நாலு காசா சேர்த்து வச்சு மிச்சம் பிடிங்கன்னு சொல்றேன். அது எம் புருசன் தகுதிய குறைச்சு காட்ட இல்லை. மத்த யாருக்கு முன்னாடியும் நம்ம தகுதி குறஞ்சு போயிட கூடாதுன்னு… ஆமா, வீடு கட்ட சொன்னேன். அதுக்கு எவ்வளவு பேச்சு பேசினார் தெரியுமா! குடும்பத்துல மனஸ்தாபம் வந்துருச்சு. நான் என்னவோ பொறாமை பிடிச்சவ மாதிரி ஒரு பிம்பம். வீட்டை கட்டி நான் என்ன எங்க அப்பா வீட்டுக்கா கொண்டு போக போறேன். ஒரு சொத்து வாங்குன்னா உங்களுக்கும், உங்க பிள்ளைகளுக்கும் தான் பலன். நானா கட்டி ஆள போறேன். இவர் குணத்துக்கு யாரையும் அணுசரிச்சு போக மாட்டார். யார்ட்டையும் உதவி, யோசனை, அட்வைஸ் எதுவும் கேட்க மாட்டார். நாளைக்கு ஒரு சரிவு வந்தா, யார்டையும் போய் நிக்க தேவையில்லை தான?…” என்று கண்களை துடைத்து கொண்டவள்,

  “அதை எடுத்து சொன்னதுக்கு தான் இவ்வளவு பிரச்சனையும். என்னை நல்லா தெரிஞ்ச என் மாமியாரே சொல்றாங்க ஜோடி போட்டு ஊரை சுத்தி செலவு செய்றேனாம். நாம நல்லா இருக்கும் போதே இந்த பேச்சு. ஏதாவது ஒரு கஷ்ட நஸ்டம் வந்தா எவ்வளவு பேச்சு வரும். இவர் ஒரு ஆடம்பர செலவாளி. இவர் கூட சேர்ந்து எனக்கும் கண்ட மாதிரி ஆடம்பர செலவு செய்ய தெரியாத. எதுக்கு மிச்சம் பிடிக்க சொல்லுறேன். ஒரு மனுசனுக்கு யோசனை வேணாம்…”

  மறுத்து பேசாமல் எல்லோரும் கேட்டு கொண்டு தான் இருந்தார்கள். வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை கடந்து வந்தவர்கள். நடுத்தர வர்க்கத்துக்கு மேல் நிலையில் உள்ளவர்கள். அதனால் சேமிப்பின் அவசியம் தெரியும். நர்மதா, நீ தவறு என்று சொல்ல தோன்ற வில்லை. வெளியில் அமர்ந்து இருந்த நிரஞ்சனும் கேட்டு கொண்டு தான் இருந்தான்.

   “அவரோட கஷ்ட நஸ்டதுல கூட இருந்து, ரெண்டு பேரும் சேர்ந்து வாழ சொல்லி தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க. நான் பேசுனா எப்படி தான் இருக்குமோ… ஒரு வார்த்தை சொல்ல கூடாது. அவரோட பொண்டாட்டி தான நானு, அவர் தான என் வாழ்க்கை. அவர வச்சு தான் எங்க எதிர்காலம். அவருக்கு கெடுதலா நான் சொல்லுவேன். நான் சொல்றத காது கொடுத்த கேட்கிறது இல்லை. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. எத்தன வருஷமா சொல்லிட்டு இருக்கேன். அவ நாய் மாதிரி கத்துறாலே அப்படி என்னை தான் சொல்லுறா கேட்போம்ன்னு இல்லை. நான் என்ன சொல்றேன்னு கூட கவனம் இருக்காது…”

  “ஆனாலும், இதுவரைக்கும் யார்ட்டையும் எம் புருசன் இப்படின்னு போய் சொன்னது கிடையாது. எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கும். நம்ம புருசன் அப்படி ஒன்னும் மோசம் கிடையாது. பிள்ளைக வளர்ந்த பொறுப்பு வரும், மாறி வருவார்ன்னு இவருக்கு சாதகமா தான் யோசனை கூட இருக்கும். ரொம்பவும் தாங்க முடியாம ஏதோ ஒன்னு ரெண்டு எங்க அக்கா கிட்ட சொல்லுவேன். அதுக்கு அவ்வளவு பேச்சு. நீங்க பணக்காரராக இருந்தா, அது உங்க வரைக்கும்… எங்க அப்பாவுக்கோ, அக்காவுக்கோ என்ன வந்துச்சு. அவங்க என்ன உங்க வீட்டுக்கா வந்தாங்க. நான் நல்லா வாழ்ந்தா எங்க அப்பா பெருமை தான் படுவார்…” என்று அழுக,

   பால மரத்தான் மகள் அருகே வந்து அமர்ந்து கொண்டார்.

   நர்மதா முகத்தில் இயலாமை சிரிப்பு வந்தது. ஏதோ பெரிதாக தோற்ற உணர்வு.

  “இவர் என்ன பண்ணாலும் எம் புருசன்னு நான் நிக்கிறேன். அவருக்கு யோசிச்சு தான் ஒரு ஸ்டண்ட் எடுக்கிறேன். அதான், நான் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. நானும் அழுது ஆர்பாட்டம் பண்ணி, நாலு பேர் பார்க்க பஞ்சாயத்து வச்சு, விட்டு கொடுக்காம பிடிவாதமா இருந்து எங்க வீட்டுல ஆள கூப்பிட்டு பிரச்சனைன்னு எதுவும் பண்ணாம… வேலைக்கு போற மனுசன். வெளிய ஆயிரம் பிரச்சனையை பார்ப்பாங்க. நாமளும் வீட்டுல குடைச்சல் கொடுக்க கூடாதுன்னு எல்லாத்தையும் இழுத்து கட்டுணதுக்கு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிட்டார்…”

   “ போதும் எல்லாம் போதும். நான் புருசன் கிட்ட நல்ல பேர் வாங்க பண்ணது எல்லாம் போதும். கூடை. கூடையா கிடைச்சது பாராட்டு. இனி அவர் விருப்பம் போல வாழட்டும். கிறுக்கி மாதிரி ஒருத்தி கத்துன, இனி அவளும் இல்லை. முழு விடுதலை தான்…”

  “நர்மதா என்ன பேச்சு இது…” மாமியார் அதட்டல் போட்டார்.

  “ஆடம்பரமாக வாழ்கிற ஆள் நான் இல்லை. அத்தியாவசிய வாழ்க்கைக்கு என்னால வழி பார்க்க முடியும். இன்னைக்கும் எங்க அப்பா எனக்கு கொடுத்த படிப்பு இருக்கு. அது மூலமா ஒரு கௌரவமான வேலையும் இருக்கு. எனக்கும், எம் பிள்ளைகளுக்கும் அது போதும்…” என்று நர்மதா முடித்து கொண்டாள்.

  சுசீலா கைகளை பிசைந்து கொண்டு நின்று இருந்தார். அவர் நினைத்ததே வேற… படித்த, வேலைக்கு செல்லும் மருமகள். தங்களை மதிக்காமல் மீற கூடாது என்று தட்டியே தான் வைப்பார். அதற்காக அவள் தன் பிள்ளையோடு சேர்ந்து வாழ கூடாது என்றில்லையே…

    தாமோதரன் தன் சம்மந்தியை தான் பார்த்தார். முன்னமே அவர்கள் பேசி வைத்தது தானே… கொஞ்ச நாள் போகட்டும், பெரியவர்கள் பேசி சேர்த்து வைப்போம் என்று… அதை உணர்த்தி அவர் தலையாட்ட, பால மரத்தானும் தலையாட்டி சம்மதம் சொன்னார்.

   தாமோதரன் வீட்டு ஆட்கள் கிளம்ப, நிரஞ்சன் மெல்ல எழுந்து கொண்டவன். மனைவியை எட்டி பார்த்தான். சான்வியை மடியில் வைத்து கண் மூடி இருந்தாள்.

  ஒரு பெரு மூச்சு விட்டு சஸ்டி யை தூக்கி கொண்டு நகர, பின்னவே வந்த பிருந்தா வெடுக்கென்று அவன் கையில் இருந்த பிள்ளையை பிடிங்கி கொண்டு, அவனை முறைத்து விட்டு உள்ளே போனாள்.

   நிரஞ்சனுக்கு அப்படி ஒரு கோபம். இது தான், இதை தான் சொன்னான். என் பொண்டாட்டி, என் பிள்ளை, என் குடும்பம் தள்ளி நில்லுங்கள் என்று… காலத்துக்கும் இவர்களா பார்க்க முடியும். என் குடும்பம் தானே. என் பிள்ளை மேல் எனக்கில்லாத உரிமை உனக்கென்ன…

   பின்னாடியே சென்று கத்தி விட்டு பிள்ளைகள் ரெண்டு பேரையும் தூக்கி கொள்ள வெறி வந்தது. நிரஞ்சன் என்றால் என்னவென்று நினைத்தார்கள் என்று முகம் சிவக்கும் போதே…

 “வேண்டாம் நிரஞ்சா, பொண்டாட்டியை அடிச்சு, மாமனாரை தள்ளி விட்டு முழு குற்றவாளி நீ தான். எப்பவும் அமைதியாக போகும் உன் மனைவியே உன் சட்டையை கிழித்து எரிந்து விட்டாள். இதில் பிருந்தா அமைதியாக போவதே பெருசு. பொண்டாட்டியோட சண்டை என்றால் பரவாயில்லை. பொண்டாட்டியோட அக்கா கூட சண்டை போட்டு தரம் தாழ்ந்து போகாதே” என்று தனக்கு தான் அறிவுறுத்தி நகர்ந்தான்.

   அன்று முழுவதும் அப்சர்வேசனில் வைத்து மறுநாள் காலை தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். நிரஞ்சன் யாரோ போல ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை தான். விஜயா சென்னை வந்து விட்டார். மகன், மருமகளும் தான்…

   வெறும் கழுத்துதோடு, ரெண்டு பிள்ளைகளை கை பிடித்து வரும் மகளை கண்டு தாய்க்கு அழுகை பொங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!