Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 8

  நயம் – 8

அவள் தன்னை காதலித்தவன் என்றதும் கோபப்பட்டவனிடம், பாஸ் ஏன் கோபப்படுற மாதிரி பேசுறீங்க. உங்களுக்கு தான் ஆல்ரெடி தெரியுமே. அம்மா சொல்லி இருப்பாங்க தானே.

அவங்க என்கிட்ட சொன்னாங்க. ஆனால் அவன் ஏன் இங்க வந்து இருக்கின்றாய். அவனை யார் கூப்பிட்டா?

கூல் கூல் . அவன் அவங்க அண்ணன் பேச்சை மீறி எதுவும் பேசமாட்டான். அதான் நம்ம கல்யாணத்துப் பத்திரிக்கை வச்சி அவனை ஆப் பண்ணியாச்சு.



Advertisement

எனக்கு என்னமோ அவன் சும்மா இருப்பான்னு தோணலை. ஏதாவது பண்ணா என்னடா பண்றது?. உனக்கு அவனை பத்தி நல்லா தெரியுமா?

பாஸ், நீங்க கவலைப்படுற அளவு அவன் அவ்ளோ ஒர்த் இல்ல, நான் வெளியூர் போய் காலேஜ் படிக்க ஆரம்பிச்சதும் எதுவும் பண்ணல. அப்பப்ப எங்காவது நின்னு பார்ப்பான். அவ்ளோ தான், இல்லைனா அவங்க அண்ணன் அடி வெளுத்துருவான். சோ டோன்ட் ஒர்ரி .

இவன் மட்டும்தானே வந்தான் மத்தவங்க என்றான் கேள்வியாக.

Advertisement

அதோ அங்க கிரீன் கலர் சர்ட் ரகு , அப்புறம் உங்க ரைட் சைடுல நாலாவது வரிசைல புளு சர்ட் சூர்யா. இவங்க மூணு பேர் தான் வந்திருக்காங்க.

Advertisement

ஓ …,  லிஸ்ட் இன்னும் வருமா இல்ல முடிஞ்சு போச்சா.

அவ்வளவுதான் பாஸ். ரகுவும் சூர்யாவும் காலேஜ்ல ஒரு தடவை தான் சொன்னாங்க. நான் என் லவ் பத்தி சொன்னதும் ஒகே சிஸ்டர்னு சொல்லிட்டு போயிட்டாங்க. வருண் மட்டும் தான் வம்பு பண்ணான்.

அவனையும் உன் லவ்வ சொல்லி ஆப் பண்ணி இருக்கலாமே.

Advertisement

நான் சொன்னேன். நம்பல . அதான் கல்யாணத்துக்கு வந்து சாப்பிடு, மொய்ய  கூட எழுத வேணாம்னு சொல்லிட்டேன்.

என்ன ஒரு தாராள மனசு… ,,, அடிங்க எவ்ளோ தில்லா என்கிட்டயே சொல்ற. பயமே இல்லையா, ஆமாம் அது என்ன உன் லவ் ஸ்டோரி? எனக்கு தெரியாம ?

உங்ககிட்ட சொல்ல நான் ஏன் பயப்படணும். டெய்லி தான் பேசுரேன். அப்புறம் என்ன பயம். நீங்க நாளைக்கு வீட்டுக்கு வருவீங்க தானே ! அப்ப என் லவ்வர் பத்தி சொல்றேன். காட்றேன். அப்போ புரியும்.

ஏய் லூசு, ஏதாவது உளறாம பேசாம நில்லு. உன்னையெல்லாம் அத்தை எப்படிதான் சமாளிச்சாங்களோ. கடவுளே !

இன்னும் ஒரு நாள் முழுசா முடியலை. அதுக்குள்ள கடவுளை கூப்பிடறீங்க. அவரு என்ன உங்க பி.ஏவா பின்னாடியே சுத்திட்டு இருக்க என வம்பிழுத்தப்படி இருந்த அவள் அத்தையை பார்த்ததும் அமைதியாய் நின்றுவிட்டாள்.

அரவிந்த்  ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. அபி எவ்வளவு சுவாரசியமாய் பேசிகிட்டு இருந்த. நான் வந்ததும் அமைதி ஆகிட்ட. நல்ல பொண்ணுடா நீ  என பிரமிளா புகழாரம் சூட்டினார்.

நீ வேற ஏம்மா பேசி கடுப்பை கிளப்புற. உன் மருமகளை நீயே வெச்சிக்கோ என மனதில் நினைத்தபடி சிரித்து கொண்டான்.

அவனுக்கு அவளை புரியும் என்பதால் இதனை ஜாலியாக மட்டும் தான் எடுத்துக்கொண்டு சாப்பிட சென்றனர்.

அவர்கள் சாப்பிட அமர்ந்ததும் கலகலப்பாய் பேசி சிரித்து, உண்டு முடித்து, அனைவரும் உறக்கத்திற்கு சென்று விட்டனர்.

இவளை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். பிறர் அறியா அபி அவனுக்கு மட்டுமே தெரிகின்றாள் . என்ன ஆனாலும் ஒரு கை பார்க்கலாம் என எண்ணிக் கொண்டு உறங்கியும் விட்டான்.

விடியற்காலையில் நான்கு மணிக்கு பூணல் கல்யாணம். அதனை தொட்டு மாங்கல்ய ஸ்னாநம், காசி யாத்திரை , ஊஞ்சல், கன்யா தானம்,   பிற சடங்குகள், திருமணம் என்பதால் அனைவரும் சுறுசுறுப்பாய் வேலை செய்து இதோ முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது.

மந்திரங்கள் உச்சாடனம் செய்தபடி அய்யர் நல்ல நேரம் முடிய போகுது, சீக்கிரம் பொண்ணை கூட்டிட்டு வாங்கோ என்றார். உடனே மேடையில் நின்ற பவி தன் தங்கையை அழைத்து வர மேலே மணமகளின் அறைக்கு சென்றாள்.

மணமகனின் அருகே நின்றுயிருந்த  கோகுல் அரவிந்த் அருகில் சென்று , சகலை உனக்கு நல்ல நேரம் முடிய போகுதாம், அய்யர் வார்னிங் கொடுக்கின்றார். முழிச்சுக்கோ, பொழைச்சுக்கோ என்றான் சிரித்தபடி.

அதை கேட்டவன் சிரித்தபடி ஏன் அண்ணா பவி உள்ளே போனதும் கலாய்க்க ஆரம்பிக்கிறீங்க . இருங்க எடிட்டிங் அப்போ உங்க வாய்ஸ் மட்டும் ஜூம் பண்ணி அவளுக்கு வீடியோ அனுப்புறேன். அப்புறம் நல்ல நேரம் எதுன்னு அவளே உங்களுக்கு விளக்கம் கொடுப்பா என்றான் நமுட்டு சிரிப்புடன்.

தெய்வமே நேற்று நீங்க ரெண்டுபேரும் எவ்ளோ வாய் மேடையில நின்னு பேசினீங்க. நான் எதாவது சொன்னேன்னா. இல்லையே . அப்ப இப்ப மட்டும் என்னை ஏன் மாட்டிவிட பாக்குற. பேச்சு  பேச்சா  இருக்கனும் , நோ வயலன்ஸ் , ஓகே. என்றான் .

இவர்கள் சிரிப்போடு பேசி கொண்டு இருந்த நேரம் அவனின் மனம் கவர்ந்தவள் வந்து விட்டாள். அரக்கு வர்ண காஞ்சி பட்டில், ஆன்ட்டிக் நகைகள் மேனி தழுவ மங்கையவள் மெல்ல தோழியர் கைப்பற்ற நடந்து வந்தாள்.

வெண்பட்டு வேட்டியில் மிடுக்காய் இருந்தவன் விழியகற்றாது அவளை இரசித்திருந்தான்.அவன் அருகில் வந்து அமர்ந்ததும் புன்சிரிப்புடன் டேய் கிருஷ் என மெதுவாகக் கூறினாள்.

அதிர்ந்து போய் அவளை பார்த்து அப்பாடா ஞாபகம் வந்திருச்சா. ஏண்டி என்னை மறந்தே .

நீ மட்டும் என்னிடம் விளையாடுவ? நா பண்ண கூடாதா? என புருவம் தூக்கி சிரித்தாள்.

உன்னை என அவள் கையில் அடித்து  சிரித்தான்.

ஐயர் இவர்களின் அருகே குனிந்து தாலி கட்டி முடிச்சுட்டு பேசிட்டே இருங்கோ நேரமாச்சு என பொன்தாலி கையில் கொடுத்தார்.

இதோ நல்ல நட்பில் விளைந்த இரு மனங்கள் கல்யாண கூட்டிற்குள் விரும்பியே சந்தோசமாய் சிறைப்பட்டனர். தாலியை கையில் ஏந்தி அவள் முகம் பார்த்து கண்ணிலேயே கேட்டான். அவளின் விரிந்த கண்களில் மூழ்கியே  பெற்றோர்களின் ஆனந்த  கண்ணீருக்கு நடுவே,  உறவுகள் பூத்தூவி அட்சதை போட தாலியை அணிவித்தான்.

அம்மி மிதித்து அவனின் அருந்ததியைத் தான் பார்த்து கண் சிமிட்டினான். இருசுண்டு விரல் கோர்த்து அக்கினியை வலம்  வந்து கொண்டு இருந்தவன் அருகில் சென்றவள் மெல்ல அவன் விரல்களை சுரண்டி , ஏன்  பாஸ் , இத்தனை தடவை சுத்துறோமே அதுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் தெரியுமா.?

ஏன் தெரியலைனா நீ சொல்லி தரியா ?

எனக்கு தெரியலைனு தானே உங்களை கேக்குறேன். பேசாம நம்ம ரெண்டு பெரும் அய்யர்ட கேட்டு தெரிஞ்சுப்போமா. இருங்க கேக்குறேன் என்றவள் அய்யரை நோக்கி திரும்பினாள்.

அபி. உனக்கு என்ன டவுட் இருந்தாலும் நானே சொல்லி தரேன். ப்ளீஸ் இப்போ பேசாம சுத்துடா.

பேசாம இருன்னு சொல்றீங்க . அப்ப எப்படி மந்திரம் சொல்றது என வாயடிக்கவும் கைகளில் அழுத்தம் கொடுத்து அவளை பார்த்தவன்.

இப்போ என்ன வேணா பேசு. அடுத்து என்னோட தான் இருக்கனும். எப்படி பேச போறன்னு நானும் பார்க்கின்றேன்.

மந்திரம் சொல்வது போலவே இவர்களும் பேசிக் கொண்டது மற்றவர் கண்களுக்கு தவறுதலாய் புலப்படவில்லை. மணமேடையில் அமர்ந்த பின் இப்போ சொல்லுங்க என்றாள்.

நம்ம கை விரல்களில் பஞ்ச பூதங்களும் இருக்கு. சுண்டு  விரல் என்பது நீரினை குறிக்கும். நீரும் நீரும் சேர்ந்தா மட்டும் தான் அதன் இயல்பு மாறாமல் இருக்கும். அதனால் சுண்டு விரல்களை கோர்த்து அக்கினி பகவானை வலம் வருகிறோம். அதற்கு அர்த்தம்

அக்னிதேவனே! உத்தமமான இந்தப் பெண்ணை உன்னருளால் மனைவியாகப் பெற்ற பாக்கியசாலி நான். இவளுடைய கைகளைப் பற்றியே உன்னை வலம் வருகிறேன். உன்னருளால் நாங்கள் என்றென்றும் இணைந்திருப்போம். நல்ல குழந்தைகள், செல்வம், புகழ் அனைத்தும் பெற்று பெருமையோடு வாழ்வோம். நோய், வறுமை, பாவம் எதுவும் எங்களை தாக்காமல் நேரியவழியில் நடப்போம். என்றென்றும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக. நீயே சாட்சி!” காலம் காலமாக அக்னியை வலம் வரும் சடங்கு நடப்பதால் தான் ‘அக்னி சாட்சியா நடந்த கல்யாணம்’ என்ற சொல்லும் வழக்கம் இருக்கிறது. இப்போ புரியுதா என்றான் .

என்ர பாஸுக்கு இது எல்லாம் தெரியுது. குட் பாய் என்றாள் அபி.

இன்னும் என்ன எல்லாம் தெரியும்னு கொஞ்சம் கொஞ்சமா கத்து தர்றேன் , நீயும் குட் கேர்ளா கத்துக்கோ என்றான் நமுட்டு சிரிப்புடன். பின் அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற்றன. இடைப்பட்ட நேரத்தில் உறவினர்கள் வந்து வாழ்த்து கூறி பரிசுகளை வழங்கினர். பவி கோகுல் தம்பதி ஒரு நகைசெட்டை பரிசாக கொடுத்தனர்.

கணேஷ் பிரியா இருவரும் தன் இரு மகள்களுக்கும் புதிதாய் கட்டிய அடுத்தடுத்த வீட்டின் பத்திரத்தினை பரிசாக கொடுத்தனர்.  பவி திருமணம் அப்போ யோசிச்சேன். சின்ன பொண்ணுக்கும் கல்யாணம் முடிஞ்சதும் சேர்த்து கொடுக்கலாம் என வைத்து இருந்தேன். இது என் திருப்திக்காக ஏற்று கொள்ளுங்கள் என கொடுத்தனர்.

பிரியா தன் சார்பாக ஒரு புகைப்படத்தை பரிசாக அளித்தார். நடுநாயகமா பிறந்த குழந்தையாய் அபியை தாங்கி முகம் கொள்ளா பூரிப்புடன் நிற்கும் குட்டி அரவிந்த் .  அதனை சுற்றி அவர்கள் இருவரின் இளவயது சேட்டைகள் நிறைந்த சிறு சிறு படங்கள் ஒவ்வொரு வயதிலும் வகை வகையாய் அழகாக இருந்தன.

செம்மயா இருக்கு அத்தை, இந்த போட்டோ கலெக்ஷன் எல்லாம் என்கிட்டே இல்லை. ரொம்ப தேங்க்ஸ் அத்தை என்றவன், அபியை நோக்கி பார்த்தியா என் அத்தை மாமா எவ்ளோ அழகாக கிப்ட் கொடுத்து இருகாங்க. உன் மாமா தான் இன்னும் ஒண்ணுமே கொடுக்கலை என தன் தந்தையையம் சேர்த்து  வம்பிழுத்தான்.

உங்களை கொடுத்ததே எனக்கு பெரிய கிப்ட், வேறு என்ன எனக்கு வேண்டும் என்றாள் அபி .

அடேய் , உன் அத்தை புராணம் பாடிக்கோ, அதுக்கு வந்த நாளே என் மருமகளை எனக்கு எதிரே திருப்பாதே என்றனர் அச்சுதன் தம்பதியர். மேலும் நீ இன்னும் உன் அத்தை கொடுத்த வீட்டுக்கு போகவில்லை. ஆனால் என் மருமகள் கல்யாணம் பண்ணதே அவளோட மண்டபத்துல தான் என்றார். அதுவுமில்லாம நீ பாஸ்ஸாக உட்கார்ந்து  வேலை பார்த்ததும் அவளோட கம்பனி தான்.  இது ரெண்டும் அவ பேருல தான் இருக்கு என்றார் . ஆம்.  AK என்பதன் விரிவாக்கம் அரவிந்த் கிருஷ்ணன் அல்ல, அபிநயாகிருஷ்ணன் என்பதை சுருக்கி வைக்குமாறு பிரமிளா தான் கூறி உள்ளார்.

இதனை கேட்டதும் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். மிகவும் சந்தோசமாக தன் மகளை தாங்கும் உள்ளத்தை எண்ணி களிப்புற்றனர்.

அரவிந்த் மட்டும் ஏன்பா மருமக வந்த உடனே மகனை இப்படி கழட்டி உடுறீங்க , நம்ப முடியவில்லை…,  இல்லை …,என்றான் வீம்பாய் .

அப்படி இல்லைப்பா, எல்லாதுக்கும் அவ பாஸ், நீ அவளுக்கு பாஸ் , எனக்கு நீயும், அபியும் எப்பவும் ஒண்ணுதான். அது உனக்கு தான் புரியல என்றார் சிரிப்புடன்.

பரிசு கொடுக்க வந்த நிறைய பேர் அபியின் நடனத்தை மிஸ் பண்ணுவதாக கூறினர்.பழைய வீடியோகூட நடுவில் போடலாமே என அபிப்ராயம் தெரிவித்தனர்.

அதை கேட்டவுடன் நீ ரொம்ப நல்ல டான்ஸ் பண்ணுவ போல.  நான் தான் இன்னும் நேரில் பார்க்கல என்றான் அரவிந்த்.

அதுக்கென்ன பாஸ், நாளைக்கே ஆடி காட்டுறேன் . நீங்க என் கூடத்தானே இனிமே இருக்க போறீங்க , டோன்ட் ஒர்ரி என்றாள்.

மதிய உணவிற்கு பின்  மணப்பெண் வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்றனர்.

ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்றதும் பூஜையறைக்கு  சென்று  விளக்கேற்ற சொன்னார்கள். பின் பால் பழம் கொடுத்து உபசரித்தனர்.

காலையில் எழுந்ததில் இருந்த நடந்த சடங்குகளில் களைத்து போய் உடல் ஓய்விற்கு கெஞ்சியது. ஆனால் முடியாதே என்ன செய்வது என அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே அபியின் பாட்டி அவளிடம் , அபி மாப்பிளையை உன் ரூமுக்கு கூட்டி போ. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் திருப்பி  மண்டபம் போக வேண்டும் என்றார்.சரி பாட்டி என்றவள் அவனை மேலழைத்து சென்றாள்.

படியேறும் போதே பாஸ், என்னோட கலையுலகத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றேன். அங்க போனா சில விஷயம் உங்களுக்கு புரியும், நீங்க என்னிடம் மட்டும் தான் அது பத்தி கேட்க வேண்டும். என் லவர் உள்ளே தான் இருக்காங்க. பார்த்துட்டு பதறி கத்த கூடாது சரியா என்றாள்.

அடுத்த பதிவில் அவளின் அடுத்த கலாட்டாவை பார்ப்போம்.

“என் உள்ளத்து நாயகனே
அனுதினமும் உன்னை
எண்ணி துடிக்கும்
என்னை மறந்தாயோ ?
மறவாது நான் தவிக்க
உறங்காது விழி களைக்க
இரங்காது மனம் வருத்தும்
உன் ஓர விழி பார்வை
தானடா என் உயிர் துளி
ஆண்டுகள் கடந்திடினும்
அச்சம்  கொள்ளவில்லை
என்னை தேடி வருவாயென
மனம் சொன்னது
நட்பா காதலா
அறியாமல் வாழ்கின்றேன்
ஆனாலும் என்னில்
உணர்கின்றேன்
எந்தன் வாழ்வு மொத்தமும்
நீ மட்டும் தான் என்று
உணர்ந்ததை உணர்ந்திட
நினைத்ததை நினைந்திட
வாராயோ ? பதில் தாராயோ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!