Skip to content
Post Views: 15,796
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 27
நிரஞ்சன் தன் படிப்பு சார்ந்த தொழிலை தான் தேர்வு செய்தான். கார் சம்மந்தப்பட்ட காரின் உதிரி பாகங்கள் கிடைக்கும் கடை ஒன்றை நிறுவ நினைத்தான். அதில் தான் அவனுக்கு தெரிதல் அதிகம். எளிதாக கையாளலாம், முக்கியமாக தன் உடல் நிலையையும் கவனத்தில் கொள்ளலாம்…
நர்மதாவின் வார்த்தையின் பின், தான் தன் குடும்பத்திற்கு முக்கியம் என்று அறிந்து கொண்டான். அவர்களுக்கு தான் வேண்டும். ஒரு குடும்பத்தில் தந்தையாக பணம் சம்பாதித்து, குடும்பத்தை உயர்த்த மட்டுமல்ல குடும்ப தலைவன். அவன் தான் அவர்களின் அச்சாணி. பணத்தை மட்டும் கொடுத்து முழு பாரத்தையும் மனைவி தலையில் வைக்க அவன் விரும்ப வில்லை. மனைவியையும் சேர்த்து தன் தோலில் சுமக்க நினைத்தான்.
Advertisement
கனரக உதிரி பாகங்கள் சிறிய அளவில் இல்லாமல், எல்லாம் கிடைக்கும் கட்சியாக ஓரளவு பெரிதாக திறக்க நினைத்தான். அதற்கு பொருத்தமான இடம் தேடும் போது,
எப்பவும் போல மனைவி கை கொடுத்தாள். அவளுக்கு என்று பாளமரத்தான் வாங்கி கொடுத்து இடம். தூண்டுதல் அவர் தான், நகை நர்மதாவோடாது, மீதி பணம் கொடுத்து நிரஞ்சன். அடகு வைத்த நகைகளை மீட்டதும் நிரஞ்சன் தான். கணவனுக்கு அதில் விருப்பம் இல்லை…
“மாமா, உனக்குன்னு வாங்கி போட்டது நம்மு…”
Advertisement
“எனக்கு மட்டும்ன்னு உங்க கிட்ட சொன்னாரா… நமக்காக வாங்கி கொடுத்தது. அதுல முக்கால் வாசி நீங்க கொடுத்தது தான். அது பேச்சுல்ல… நம்ம இடம் மெயின்ல தான் இருக்கு, அதோட வெளிய வாடகைக்கு எடுத்தா ரேட் அதிகம். நம்ம சொந்த இடம்ன்னு போது வருமானம் அதிகமா வரும்…”
Advertisement
“சரிதான். ஆனாலும், எனக்கு உங்களை சொந்த வீட்டுல வைக்க ஆசை…” என்று இழுத்தான்.
“நிறையா சம்பாதிச்சு இத விட பெரிய இடம் வாங்கி… அங்க வீடு கட்டி எங்களை கூட்டிட்டு போங்க…” என்ற போதும் நிரஞ்சனுக்கு தயக்கம் தான்.
“பெருசா யோசிக்காதீங்க நிரஞ்சன். நம்ம முன்னேற்றத்துக்காக தான். நீங்க தயங்க என்ன இருக்கு…”
Advertisement
“அதில்லை நர்மதா. இது ஒன்னு தான் நம்ம கிட்ட சொத்துதா இருக்கு… இதையும் முதலீடாக வைக்கணுமா …”
“ஆழம் தெரியாம தான் கால் வைக்க கூடாது. நமக்கு தான் ஆழம் தெரியுமே!… அதுனால தான் தெரிஞ்ச இடத்துல இறங்க சொல்றேன். உங்களுக்கு இந்த தொழில் அத்துப்படி.. தைரியமா இறங்குங்க.. போனா பணம் தான், இடம் இருக்கும்…”
மனைவி சொல்வது சரி என்று பட்டாலும், நர்மதா சொல்வது போல போனால் பணம் தானே என்று எண்ண முடியவில்லை. தற்போது நிரஞ்சனுக்கு பணத்தின் தேவை எவ்வளவு முக்கியம் என்று அறிந்து கொண்டான். அதனால் மிக கவனமாக தான் கால் எடுத்து வைத்தான்.
நிரஞ்சன் நினைத்தது ஒன்றுதான் தனக்குப்பின் தன் குடும்பம் இருக்கு.. அவர்களுக்கான எதிர்காலம் தான் மட்டும் தான். கொஞ்சம் சறுகினாலும் தன்னோடு சேர்ந்து மனைவி பிள்ளைகள் எதிர்காலமும் வீணாகும். அதனால் நிரஞ்சன் எதிலும் மிக கவனமாக, திறமையாக கையாண்டான்.
கடை தொடங்குவதற்கான வேலைகள் மடமட வென்று தொடங்கி விட்டன். வேலைகள் ஒருபுறம் நடக்க, தன் புது தொழிலை வீட்டாருக்கு தெரிவிக்க நினைத்தான். நர்மதா பெற்றோர் இன்னும் ஊர் திரும்ப வில்லை பிருந்தா வீட்டில் தான் இருந்தார்கள். அவர்கள் ஊர் திரும்ப முன் ஒரு முறை எல்லோரையும் வைத்து பேசிவிட என்னை தன் வீட்டிற்கு எல்லோரையும் அழைத்தான்.
முன்பு போல நான் என்ற அகந்தை எல்லாம் நிரஞ்சனிடம் இல்லை. மனைவியைப் போல அனுசரித்து என்றில்லாமல் ஓரளவு உறவுகளை அரவணைத்து,அதன் எல்லையில் நிறுத்த கற்றுக் கொண்டான். அந்தபடி தான் தொழில் தொடங்கும் முடிவை தான், தன் மனைவி மட்டும் எடுத்துக் கொண்டாலும்… அதை தன் வீட்டிற்கு தெரியப்படுத்த தயங்கவில்லை.
அன்று மாலையே நிரஞ்சன் தன் பெற்றோருக்கும் நர்மதா பெற்றோருக்கும் பிருந்தா வீட்டுக்கும் வர சொல்லி அழைப்பு விடுத்தான். முடிவு அவர்களுடையதாக இருந்தாலும், பெரியவர்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே…
சின்ன மகன் அழைத்ததும் சந்தோசமாக வீடு வந்த பெற்றவர்களுக்கு… அங்கு உரிமையாக அமர்ந்து இருந்த நர்மதா பெற்றவர்களை பார்த்து மனம் சுருங்கியது. அதுவும் நிரஞ்சன் தன் மாமனார் பேச்சை மிக கவனமாக கேட்டு கொண்டு இருந்தான்.
இங்கு அதிக முக மாறுதல் சுசீலாவுக்கு தான். சகஜமாக இருக்க முடியவில்லை. நர்மதா உடன் விஜயாவும், பிருந்தாவும் அடுப்படியில் இருந்தார்கள். இந்த மாறுதல் சுசிலாவுக்கு ஒரு மாதிரி இருந்தது. முன்பெல்லாம் அப்படி கிடையாது. நிரஞ்சன் அதிக முக்கியத்துவம் கொடுப்பது தன் பெற்றவர்களுக்கு தான். நர்மதா பெற்றோரை எப்போதும் ஒரு எல்லைக்கோட்டில் மட்டும் தான் நிறுத்துவான்.
அவர்களும் அப்படி எல்லாம் மகள் வீடு என்று உள்ளே வந்து விட மாட்டார்கள். சம்பந்தம் பண்ணிய இடம் என்று தள்ளி நிற்பார்கள். இன்று கிச்சன் வரை வந்து நிற்கும் பிருந்தா, விஜயாவை பார்த்து சுசிலாவுக்கு ஒரு மாதிரி இருந்தது.. மகன் தங்களை தள்ளி நிறுத்துகிறானோ என்ற பயமும் வந்தது. முன்பு கூட்டு குடும்பமாக இருந்தவரை சுசிலாவின் கை தான் ஓங்கி இருந்தது. அவரின் பேச்சு தான் எங்கேயும் எப்போதும்…
மகன் உறவுகளை அரவணைத்து செல்கிறான் என்ற எண்ணமெல்லாம் வரவில்லை. அது எப்படி அவன் மனைவி விட்டார்களோடு ஒட்டலாம். தங்களின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ!… வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் மகன் தங்களை விட்டு தள்ளி நின்று விடுவானோ என்று ஒரு பயம் வந்தது. எப்போதும் மாமியாரின் கண் அசைவுக்கு நடக்கும் நர்மதா கூட அன்று என்னவோ தள்ளி நிற்பதாக ஒரு எண்ணம் சுசிலாவுக்கு… அவர்கள் வீட்டு ஆட்களைப் பார்த்தவுடன் தங்களை ஒதுக்கி விட்டதாக நினைத்தார்.
இதில் நிரஞ்சன், தான் தொழில் தொடங்கப் போவதை பற்றி சொல்ல அதில் அவருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும் நர்மதா வீட்டை முன்னிலைப்படுத்தி சொன்னது பிடிக்கவில்லை. அதுவும் அங்கு பிருந்தா வேறு இருக்க… மகன் தங்களை ஒதுக்கி விட்டான் என்றே முடிவு செய்தார்.
“ நிரஞ்சா அண்ணனுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டியா?…” என்று சுசிலா கேட்க,
“சொல்லனுமா கடை திறப்பு இருக்குல்ல அதுக்கு முன்ன போய் சொல்றேன்…” என்று நிரஞ்சன் முடிக்க..
அதற்கும் மனம் ஒப்பவில்லை சுசிலாவுக்கு, அது என்ன நர்மதா வீட்டு ஆட்கள் மட்டும் இங்கே இருக்க தன் பெரிய மகன் தள்ளி நிக்க வா…
“அண்ணன் வீட்டுக்கு ஒருமுறை போய்வா நிறைஞ்சா வரவே மாட்டேன் என்கிறான் என்று கவலைப்பட்டான் அண்ணன்…” என்று சுசிலா சொல்ல தாமோதரன் முறைத்தார் மனைவியை…
உறவுகளை நாம் ஒட்ட வைக்க முடியாது. முகுந்தன் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை சுசீலாவாக இரு மகன்களையும் ஒட்ட வைக்கும் முயற்சியில் பேசுகிறார். அவருக்கு நர்மதா தன் உடன் பிறப்போடு இருக்கும்பொழுது தன் மகன் தள்ளி நிற்பதா என்று ஒரு எண்ணம். முழுதாக நர்மதா வீட்டு ஆட்கள் இருந்து விடுவார்களோ என்று ஒரு பயம். வீட்டை விட்டு வெளியே வந்த பின் நர்மதாவும் தள்ளி நிற்பதாக ஒரு எண்ணம்.
சுசிலா போல தாமோதரன் ஒன்றும் நினைக்கவில்லை. நர்மதா மனதில் வேறு ஏதேனும் எண்ணம் இருந்தாலும் அது சரி என்றுதான் அவர் நினைத்தார். தனியாக கூட்டு குடும்பத்தில் இருக்கும் வரை ஒன்றும் தெரியாது. இப்போது வித்தியாவும் அங்கு இருந்து பிரச்சினையாகி வெளியே வந்து விட்டாள். சாதாரணமாகவே தோன்ற தானே செய்யும் பெரிய மருமகளை ஒன்றும் சொல்லாமல் தங்களை மட்டும் ஏன் சொல்கிறார் என்று…
நர்மதா அப்படி எல்லாம் நினைப்பாளா? என்று யோசிக்க வில்லை. அப்படி நினைத்தால் தப்பில்லை என்ற எண்ணம் தான்.
தன்னிடம் வந்து பேசாமல் தள்ளியே நிற்கும் மருமகளை முறைத்து பார்த்தார் சுசீலா. நர்மதா அருகே பிருந்தா, விஜயா இருக்க… அதை ஏற்க முடிய வில்லை.
“ஏய் நர்மதா.. மாமா வந்து எவ்வளவு நேரம் ஆச்சு. சும்மா பார்த்துட்டே நிக்கிற… அவருக்கு நேரத்துக்கு சாப்பிட கொடுக்க வேணும் தெரியாதா?…” என்று ஒரு அதட்டல் போட,
விஜயா முகம் மாறியது. அவர்கள் மருமகளாவே இருக்கட்டும். அதற்காக தன் மகளை தாங்கள் முன்பே அதட்டுவது என்ன?…
நிரஞ்சனுக்கும் பிடிக்க வில்லை. பின்னே மாமனார் வீட்டு ஆட்கள் முன் மனைவியை பேசுவது, யார் மரியாதையை குறைவாக காட்டும்.
“என்னம்மா? நர்மதா கேட்க தான் செய்தா… அப்பா தானே கொஞ்ச நேரம் போகட்டும்ன்னு சொன்னார்…” சுசீலா பணியில் நிரஞ்சனும் சொல்ல…
முகம் இறுகி போனது தாய்க்கு… நாலு பேர் முன் மகன் தன்னை அதட்டுவதா என்று… ஆனால், அதே நாலு பேர் முன் தான் மருமகளை அதட்டினார் என்பதை மறந்து போனார்.
நர்மதா நன்றாக கவனித்தாலும் சுசிலாவுக்கு திருப்தி இல்லை.வேற ஒன்றும் இல்லை. மருமகள் குடும்பம் உள்ளே வந்து தான் பிடிக்க வில்லை.
“நிரஞ்சா பேர் எல்லாம் முடிவு பண்ணிடியையா?…” என்று தாமோதரன் கேட்க.
“ம்ம், வச்சாச்சு ப்பா… நர்மதா பேரு தான்…” என்று சந்தோசமாக மகன் சொல்ல,
இது நர்மதாவுக்கே அதிர்ச்சி தான். ஆச்சர்யமாக கணவனை பார்த்தாள். அவன் ஏதாவது வித்தியாசமாக யோசித்து இருப்பான் என்று நினைக்க, தன் பெயரா?…
நர்மதா வீட்டவர்கள் பெருமையும் சந்தோஷமாக மகளைப் பார்த்தார்கள். அன்று அடித்து வீட்டை விட்டு அனுப்பிய மருமகன் என்ற நினைவெல்லாம் இப்போது வரவில்லை. கோடி ரூபாய் போட்டு தொடங்கும் தொழில் தன் மகளை முன்னிறுத்துகிறானே பெருமையாக இருந்தது. மகள் நின்று விட்டாள் என்று பூரிப்பு பால மரத்தானுக்கு…
“நர்மதா பேரா…” என்று சுசீலா இழுக்க,
“ஆமா ம்மா…”
“சஸ்டி உனக்கு ராசிடா…” என்ற தாய்க்கு,
“அந்த மகளை பெத்து குடுத்தது யாரு?… மொத ராசியே என் பொண்டாட்டி தான்…” என்று நிரஞ்சன் சொல்ல,
நர்மதாவுக்கு வெட்கமும் தயக்கமுமாக இருந்தது. கணவன் இப்படி பொதுவில் வைத்து பேசுகிறானே என்று… ஆனாலும் அவன் பேச்சுக்கு மறு பேச்சு எதுவும் இல்லை. அமைதியாக கணவன் பேசுவதை உள்வாங்கிக் கொண்டாள்.
அந்த வாரம் சுசிலாவுக்கு மெடிக்கல் செக்கப் இருந்தது. இதுவரை நர்மதா தான் அழைத்துக் கொண்டு போய் வந்தாள். இந்த முறையும் மருமகளே எதிர்பார்த்தார்கள். நர்மதாவுக்கு அது நினைவில் இல்லை ஒருவேளை கூட்டுக் குடும்பமாக இருந்தவரை அவள் கவனத்தில் இருந்தது இன்று தனியாக வந்து இரு பிள்ளைகளையும் வீட்டையும் தனியாக பார்த்து கணவனையும் கவனித்து. தன் வேலைக்கும் சென்று என்று நர்மதாவுக்கு நிக்காத ஓட்டம் தான்.
ஒரு வார்த்தை சொல்லி அவள் மறுக்கப் போவதில்லை . ஆனால், சுசிலா சொல்லவில்லை. அவளாக வரவேண்டும் என்று ஒரு எண்ணம். நர்மதா வரவில்லை. தாமோதரன் உடன் தான் சுசீலா மாதாந்திர செக்கப் சென்றார்.
ஆனாலும் சுசிலாவுக்கு மனம் அமைதியாக வில்லை, உடனே தன் மகனுக்கு போன் போட்டு விட்டார்.
“ நிரஞ்சா பாத்தியா உன் பொண்டாட்டிய… எனக்கு செக்கப் இருக்கு அது அவளுக்கு நல்லா தெரியும். அவ வரல…” அழுகை குரலில் தாய் சொல்லவும் அடுத்த அரண்மனை நேரத்தில் நிரஞ்சன் வந்து விட்டான்.
“என்னம்மா…” என்று மகன் கேட்கத் தொடங்கியது தான். கடகடவென்று ஏதேதோ சொல்ல தொடங்கி விட்டார் சுசீலா.
“என்ன பாக்கல? உன் பொண்டாட்டிக்கு எங்களை கண்ணுக்கு தெரியல? அவங்க வீட்டு ஆளுங்க வந்து ஒட்டுன உடனே நாங்க ஒன்னும் இல்லாதவங்களா போயிட்டோம்…”
“அம்மா சும்மா ஏதாவது பேசாதீங்க எனக்கு ஆயிரம் வேலை இருக்கு…” என்னமோ என்று ஓடி வந்தால் தாய் ஏதோ புலம்ப கடுப்பாக வந்தது நிரஞ்சனக்கு…
“உனக்கும் என் பேச்சை அப்படித்தான் இருக்கும். உனக்குத்தான் புதுப்புது சொந்தம் வந்திருச்சே…”
சுசீலா என்று தாமோதரன் அதட்டினார். பெற்றவர்கள் முக்கியம்தான். அதற்காக மகனுக்கு வேற சொந்தங்களை இருக்கக்கூடாது என்ற நினைவு தவறல்லவா…
நிரஞ்சன் சொல்லிவிட்டான் “அம்மா எங்களுக்கு உண்மையாவே ஞாபகம் இல்ல.. கொஞ்சம் எங்களையும் நீங்க புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்கம்மா.. நாங்க இப்ப ஒன்னும் இல்ல. அதனால எங்களுக்கும் சில கஷ்டங்கள் எல்லாம் இருக்கு. பிள்ளைகளை யார் பார்க்கிறது? வீட்ல வேலையாளும் கிடையாது? நர்மதா தான் வீட்டையும் பார்த்து என்னையும் பார்த்து பிள்ளைகளையும் பார்க்கணும்… எனக்கு புது கடை திறப்பு இருக்கு.. அதனால ஓடிட்டு இருக்கேன். நிக்க கூட எனக்கு நேரம் இல்ல. வீட்ல நான் இருக்கிறதே ரொம்ப கம்மி நேரம் தான். எல்லாமே நர்மதா தான் பார்க்கிறான் எங்களுக்கு இப்ப ரொம்ப டைட் சுச்சுவேஷனா இருக்கு நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…” என்று மகன் எடுத்துச் சொல்லவும்..
“நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஏத்துக்கல நிரஞ்சா.. நான் உன்னை அப்படி நினைக்கவே இல்ல. நீ எங்களை பார்ப்பா, கடைசி வரைக்கும் கூட இருப்பன்னு நினைச்சேன். இப்படி ஒரு மாசத்துல மாறிட்டியே நிரஞ்சா…” என்று அழுக,
“அம்மா என்னம்மா உங்களுக்கு? நான் சொல்ல வருது உங்களுக்கு கொஞ்சமாவது புரியுதா?… நாம கூட்டு குடும்பமா இருந்தோம் பிள்ளைகளை நீங்க பார்த்தீங்க… சில வேலைகளை அப்பாவும் பார்த்தாரு… நான் காலையில வேலைக்கு போய் நைட்டு வீட்டுக்கு வந்துருவேன். நானும் சில வேலைகளை பார்த்தேன். அதனால நர்மதா உங்க கூட இருந்து பார்த்தா…”
“ இன்னைக்கு எல்லாரும் தனியா நிக்கிறோம். எங்க வேலையில நாங்க தான் பாக்குற மாதிரி இருக்கு. இதுல எனக்கு வேலையும் இல்லை. இப்ப எல்லாமே நர்மதா தான் பார்க்கிறா… உண்மையா சொல்லனும்னா எங்க வீடே நர்மதாவை வச்சு தான் ஓடுது. நான் இருக்கிற பணம் எல்லாத்தையும் தூக்கி தொழிலுக்கு போட்டு இருக்கேன். வீட்ட பாக்குறது நர்மதா தான். இந்த சூழ்நிலையில எங்க அம்மா அப்பாவை நீ ஏன் பாக்கலன்னு நான் போய் கேட்க முடியுமா கொஞ்சம் யோசிங்க ம்மா…”
“சரி தொழில் தொடங்குவதற்கு எதுக்கு நர்மதா அம்மா அப்பாவ வர சொன்ன?…”
“வீட்டுக்கு பெரியவங்கன்னா அவங்களும் தானம்மா… அதோடு மாமா வாங்கி கொடுத்த இடத்தில் தான் நான் தொழிலே பண்ண போறேன். அவர் மகளுக்கு என்று அவர் கொடுத்தது…”
“நாங்க சொத்துக் கொடுக்கல அவர் கொடுத்ததனால அவரை முன்னாடி வச்சுட்டியா நிரஞ்சன்…” தாமோதரன் கூடவே தான் இருந்தார் மனைவி பேசுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
ஆனாலும் அவருக்கும் ஒரு நெருடல் இருந்தது. மகன் தங்களை விட்டு தள்ளி நிற்கிறானோ என்று…
_அம்மா என்ன பேசுறீங்க நீங்க எதுக்கு இவ்ளோ ஆர்க்யூமென்ட்டு எனக்கு புரியவே இல்ல என்னதான் ஆச்சு உங்களுக்கு…”
“முதல்ல ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கோங்கம்மா… உங்க மகன் நிரஞ்சன் ஒரு பெரிய தோல்வில இருக்கேன். யாருக்கும் தெரியாம அதை சரிபடுத்தி முன்னேற நினைக்கிறேன் இப்ப என்கிட்ட என்ன இருக்குன்னு நினைக்கிறீங்க… ஒன்னு கூட இல்லம்மா, என் குடும்பம் வாடகை வீட்டில் இருக்காங்க…”
“எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு. என்ன நம்பி வந்த பொண்ணு, அவளுக்கு நான் என்ன செஞ்சுட்டேன். அவ சொந்தமா நிக்கிறதுக்கு ஒரு நிழல் கூட என்னால் ஏற்படுத்திக் கொடுக்க முடியல. எனக்கே என் மேல கோபம். நிஜமா! உங்க யாரு மேல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. யாரையும் நான் பிளேம் பண்ணல. உண்மையான குற்றவாளி நான் தான். நான் என் மனைவி, பிள்ளைகளை நினைக்கல யோசிக்கல… இன்னைக்கு அந்த வீட்ல என் பிள்ளைகளை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு. எப்படியாவது அவங்க எதிர்காலத்தை நல்லபடியா உருவாக்குவதற்கு ஒரு அடித்தளம் போட நான் ஓடிட்டு இருக்கேன். உங்களுக்கு அது புரியுதா?”
“பணம் வேணும்ன்னா முகுந்தன் தாரேன்னு சொல்லி இருக்கானே அப்பா கிட்ட வாங்கினது.. உனக்கு கொடுக்க சொல்லுறேன்…”
“வேண்டாம்மா.. நானே பார்ப்பேன். கொஞ்சம் கஷ்டம் தான் சமாளிப்பேன்…”
“ரொம்ப கஷ்டமா இருக்கா நிரஞ்சா… சொத்தை பிரித்து எழுதி வைக்கவா…” மகனின் முகம் பார்த்து தாமோதரன் சொல்ல,
“அதெல்லாம் வேணாம் ப்பா… எனக்கு என்ன கஷ்டம். நர்மதா தான் என்னை விட அதிகம் கஷ்ட படுறா… எல்லாத்தையும் அவ தான் பாக்குறா…”
“ஆமாடா… நாலு வார்த்தை பேசுற. அதுல ரெண்டு உம் பொண்டாட்டிய பத்தி தான் வருது…” சாடவக சொன்னார் சுசீலா.
அவர்களுக்கு ஒரு பயம் நிரஞ்சன் தங்களை தள்ளி வைத்து விட்டானோ என்று… இந்த வீடு உனக்கு தான் என்றொரு நம்பிக்கையை கொடுத்து, கடைசியில் வீட்டை விட்டு வெளியேற்றி ஆச்சு. அதனால் மகன் மருமகள் தங்களை தள்ளி வைத்து விட்டார்களோ என்று ஒரு பயம்.
ஏனெனில் முகுந்தன் ஆரம்பம் முதலில் தள்ளி நிற்க கூடியவன் தான். நிரஞ்சன் மட்டுமே பெற்றவர்கள் என்று அவர்களை முன்னிலைப்படுத்தி நிற்பான். இன்று அவனும் மனைவி என்று அவள் பின்னே நிக்க. ஒரு மாறி தனிமை உணர்ந்தார்கள் பெற்றவர்கள். உண்மையில் நிரஞ்சன், நர்மதா தான் அவர்களைப் பார்த்துக் கொண்டது. பணம் என்பதை தாண்டியும் கவனிப்பு தனிமையை போக்குதல், தேவையை அறிதல், பெரியோர்கள் என்று அவர்களை முன்னிலைப்படுத்தி தள்ளி நிற்பது என்று நர்மதா எல்லாவற்றையும் பார்ப்பாள்.
பெரியவர்களுக்கு மனதில் ஒரு குற்ற உணர்ச்சி. தாங்கள் சின்ன மகனுக்கு நியாயம் செய்யவில்லையோ என்று… அவன் மனதில் தங்களைப் பற்றிய எண்ணம் குறைந்து விட்டதோ என்று… அதை உடைத்து பேச தோன்றாமல் மருமகளையே மீண்டும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் சுசீலா.
உண்மையில் நிரஞ்சன் மனதில் ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதில் முதல் குற்றவாளியே அவன் என்ற நிலையில் வேற யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் அமைதியாகிப் போனான். உண்மைதான் அவனுக்கும் மனதில் ஒரு உறுத்தல் உண்டு. பெற்றோர் தன் பக்கம் நிற்கவில்லை என்று…
ஆனால் முழு முதற் தப்பு நிரஞ்சன் பெயரில் என்பதால் யாரையும் குற்றம் சொல்லாமல் தன்னை மட்டுமே குற்றவாளி ஆக்கிக் கொண்டான். தான் ஒழுங்காக இருந்திருந்தால் யார் என்ன செய்தாலும் தங்களை பாதித்திருக்காது அல்லவா… இன்று யார் என்ன சொன்னாலும் முழுதாக பாதிக்கப்பட்டது யார்? தானும் தன் மனைவி பிள்ளைகளும் அல்லவா… இனி வாழ்க்கை அவர்களுக்காக மட்டும்தான். மற்ற எல்லோரும் உறவாக உடன் நிற்பார்கள். தன் குடும்பம் என்ற வட்டத்திற்குள் வர மாட்டார்கள்.
சொத்து விவகாரத்தை பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்ட முகுந்தன் மனைவியிடம் சொல்லவில்லை. அவன் அன்றே இந்த மாதிரி சொத்து பிரித்து ஆச்சு என்று சொல்லி இருந்தால், வீட்டு பற்றிய யோசனையோ அல்லது முழு சொத்தும் நிரஞ்சனுக்கு மட்டுமே போகிறது என்ற எதிர்மறை சிந்தனையோ வித்தியாவுக்கு வராது.
முகுந்தன் ஆபீஸில் லோன் போட்டான் தந்தை நேரடியாக பணம் கேட்ட பின் அமைதியாக போவதில் நியாயம் இல்லை. லோன் போட்டு பணத்தை ஏற்பாடு செய்தான். வித்யாவுக்கு இதில் உடன்பாடு இல்லை தனித்தனியாக நின்றாலும் ஒரே குடும்பம் தானே என்றாவது ஒருநாள் தங்கள் கைவரும் சொத்து தானே அதற்கு ஏன் கணவன் லோன் போட்டுக் கொடுக்க வேண்டும் தேவை என்றால் பெரியவர்களை தாங்கள் பார்த்துக் கொள்ள மாட்டோமா என்று ஒரு எண்ணம் . ஆனால் தாமோதரன் நினைவு வேற மாதிரி இருந்தது. இன்று நிரஞ்சனக்கென்னவோ அதுதான் நாளை தங்களுக்கு…. பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் தங்கள் கையில் பணம் இருந்தால் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு என்ற நிலையில் முகுந்தன் கையில் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கத்தான் முனைந்தார் தாமோதரன்
ஏனெனில் முகுந்தன் மேல் நம்பிக்கை இருந்தாலும் வித்யா மேல் இல்லை நாளை தங்களுக்கு என்று கையிருப்பு வேண்டுமென்று நினைத்தார் நர்மதா போல அமைதியாக போகும் பெண் இல்லை வித்யா சட்டம் பேசுவாள் நியாயம் சொல்வாள் தங்களுக்குள் ஒத்து வராது என்று முடிவு செய்து தான் தாமோதரன் பண விஷயத்தில் கண்டிப்பாக இருந்தார்
முன்பாவது அதிகமான சொத்து நிரஞ்சனக்கு போகும் என்று நினைத்தார். இன்று தான் அப்படி இல்லையே சரிசமமாகத்தான் பிரிக்கப் போகிறோம். அப்படி இருக்க சமமாக தான் பார்க்க வேண்டும். நிரஞ்சன் சொந்த தொழில் தொடங்குகிறான். வேலையும் இல்லை. அப்படி இருந்தும் தந்த இடம் ஒரு ரூபாய் கூட கை நீட்ட வில்லை.
அந்த மகன் பார்ப்பான், இந்த மகன் பார்ப்பான் என்று நினைப்பதை விட தங்கள் கையில் இருப்பு இருந்தால் யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தங்களுக்கு பாதுகாப்பு.
நிரஞ்சன் கடை திறப்பு விழாவுக்கு முறையாக அண்ணன் குடும்பத்தை அழைத்தான். யாரிடமும் விரோதம் பாராட்டவில்லை எதிரியாக நினைக்கவும் இல்லை எல்லோரையும் அவரவர் எல்லையில் நிறுத்த கற்றுக் கொண்டான்.
முகுந்தன் கூட சொன்னான்
“ஏன்டா நிரஞ்சா சொந்தமா வீடு வாங்க வேண்டியது தானடா… ஏன் எல்லா பணத்தையும் தொழில போடுற…”
“நானும் வீடு வாங்க தான்டா நினைச்சேன ஆனா நர்மதா தான் நிலையான வருமானம் வேணும் சொந்தமா தொழில் பண்ணுவோம் அப்படின்னு எனக்கு ஐடியா கொடுத்தது. நர்மதா சொல்ற படி தான் தொழில் வைக்கிறேன். கடவுள் கிருபையில நல்லபடியா போனா ஒரு பெரிய வீடா நர்மதாவுக்கு வாங்கி கொடுக்கணும்…” என்று நிரஞ்சன் சொன்னதும்,
கொழுந்தனை ஆச்சரியமாக பார்த்தால் வித்தியா, என்று இருந்து மனைவி பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான் நிரஞ்சன் அதிசயமாக இருந்தது.
“பணத்துக்கு என்னடா பண்ணுன?…” என்று முகுந்தன் கேட்க.
மனைவி நகையை வைத்தேன் என்று சொல்ல விருப்பப்படாமல்
“கொஞ்சம் கையிருப்பு இருந்துச்சு நான் பார்த்தேன்டா…” என்று முடித்துக் கொண்டான் நிரஞ்சன்.
அங்கு தான் வித்யாவுக்கு ஒரு நெருடல். ஏற்கனவே கணவன் லோன் போட்டு இருக்க, அடுத்த வாரமே நிரஞ்சன் புதுக்கடை திறந்தான். ஆக இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்கு போட்டாள்.
புதுக்கடை திறக்கும் பொழுது தம்பதிகளாக நிரஞ்சன் நர்மதா தான் அமர்ந்தது. பெரிய அளவில் என்று இல்லாமல் நார்மலாக தான் செய்தார்கள்.
error: Content is protected !!