Skip to content
Post Views: 2,464
அத்தியாயம் – 12
எண்ணத்தை வண்ணம் கொண்டு படிக்கலாம் என்ற கூற்றுக்கு ஏற்ப லட்சுமணன் எண்ணத்தை அவனது காது மடல் சிவப்பில் கண்டு கொள்ளலாம் போலும்.அத்தனை கோபமாக இருந்தான்.அன்று அரியகுடியிலருந்து, வந்த தினத்தில் இருந்தே லட்சுவின் முகமே சரியில்லை.புறப்படும் முன் லட்சுவும் கண்ணாத்தாளும் சில பல நிமிடங்கள் உரையாடல் கொண்டனர்.
அதில் இருந்து தான் லட்சுவின் முகமே சரியில்லை.என்ன? ஏது? என்று கேட்க கூடத் தயக்கமாக இருந்தது.அந்த அளவுக்கு அவன் மௌனம் கொண்டு அத்தனை பேரையும் தள்ளி நிறுத்தினான்.
Advertisement
இரு தினங்கள் அவனைக் கண்டும் காணாமல் இருந்த மீனாள்.அதற்கு மேல் முடியாமல் இன்று பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் அவனை நெருங்கினாள்.மாவடு ஊறுகாயை ருசி பார்த்து கொண்டிருந்தவனை நெருங்கி “லட்சு!” என்று அழைக்க.கண்ணை மூடி மா வடு புளிப்பை உள் வாங்கிக் கொண்டே திரும்பினான் லட்சுமணன்.
Advertisement
லட்சுமணன் செயலில் சிறு புன்னகை பிறக்க,”புளிப்புதேன் உங்களுக்கு ஆகாதே பிறகு எதுக்குக் கஷ்டப்பட்டு ருசி பாக்குறீக”
Advertisement
“சுந்தரி ஆச்சிதேன் பார்ப்பாக அவுக இன்னைக்கு வேலைக்கு வரலையே அதேன். தரம் பார்த்தாதேன் அடுத்த கட்டம் டப்பால அடைக்க முடியும்”
Advertisement
“ஓ! சரி எனக்குத்தாக நான் பார்த்து சொல்லுறேன்”
“ஏது? ஆத்தா! இனி கொஞ்ச நாள் புளிப்பு, உப்பு, எல்லாம் அளவுத்தேன் மறந்தும் எண்ணெய்,புளிப்பு,உப்பை தொட்டு புடாதீக” சிறு கண்டிப்புடன் சொன்னவன் அடுத்த வேலைக்குச் செல்ல பார்க்க.
“லட்சு!”
“என்ன ஆத்தா?”
“நானும் ஊருல இருந்து வந்த நாள் கணக்கா பாக்குறேன் ஏன் கடிசாவே இருக்கீக என்ன ஆச்சு?”
“ப்ச்!”சலித்துக் கொண்டவன் செய்யும் வேலையை விட்டுவிட்டு மனம் விட்டு பேச தாயின் கால் அருகில் அமர்ந்து விட்டான்.
“மணி!”
“சொல்லுக அண்ணே”
“ஆத்தாளுக்கு நாற்காலியை எடுத்து இங்கன என் பக்கத்துல போடு”
“சரி” என்றவன் லட்சுமணன் அருகில் நாற்காலியை போட்டுவிட்டு போக. அவன் செல்லும் வரை அமைதியாக இருந்த லட்சுமணன்.அவன் சென்றவுடன் தனது தாயிடம் திரும்பி.
“சொல்லுக ஆத்தா?”
“நீகத்தேன் சொல்லனும்? என்ன ஆச்சு உங்களுக்கு? வர, வர ரொம்பத்தேன் கோபம் வருது” என்ற தாய்யை பார்த்து அவனுடைய அக்மார்க் புன்னகையை கொடுத்தவன்.
“கோபம் எல்லாம் இல்ல ஆத்தா நான் சரியாதேன் இருக்கேனான்னு ஒரு எண்ணம், நம்ப ஆசை பட்டது ஒன்னே ஒன்னு அதுகூடச் சரியா நடக்க முடியாம இழுப்பறியவே இருக்கேன்னு ஒரு எண்ணம். எல்லாத்தையும் விட எனக்கு மட்டும் இப்படியா இல்ல எல்லாருக்கும் இப்படியான்னு தோணுது” லட்சுமணன் பேச்சில் பதறிய மீனா.
“என்ன? என்ன இப்படி வெறுக்க பேசுறீக ஐயா! என்னப்பா”
“வேற என்ன ஆத்தா நான் செய்ய? முன்னுக்குப் பின்னு என் காரியம் அத்தினியும் முரணாவே போகுதே”
“அய்யாவு! என்னய்யா இது?” மகனின் வெறுமையை எண்ணி இன்னும் பதறியது அந்த தாயுள்ளம்.
“உண்மைக்கும் ஆத்தா உங்களைக் கொண்டும் எனக்கு கவலைத்தேன். நான் உங்களைச் சரியாவே பார்க்கல இன்னும் நல்லா பார்க்கனும்”
“இந்தாக ஐயாவே! யாரு அப்படிச் சொன்னா? உங்களை மாதிரி பிள்ளை கிடக்கத் தவம் கிடக்கணும். வாழ்க்கைய வெறித்திருந்த எனக்குப் பிடிப்பே உங்களைக் கொண்டுதேன். இனி இப்படிப் பேசாதீக நோகுது அய்யாவு” என்றவள் அழுதே விட்டாள்.
“ஆத்தா! சரி இனி பேசல அழுது திரும்பப் பாவத்தைச் சேர்க்காதீக.எனக்கு என்னவோ வாய் விட்டு கேட்டும் நடக்கலையேன்னு ஒரு கோபம்.நம்ப மாமா, நம்ப அயித்தன்னு கூடுதல் உரிமை வச்சு தானே சாலாவை கேட்டேன்”
“ஐயா! ஐயா! என்னைப் பாருக” என்றதும் தாயின் முகம் பார்த்தவன் மோவாயை லேசாகக் கிள்ளி முத்தி வைத்த மீனா.
“உங்கள பெத்தவ நான், எனக்கே சாலாவ நீக விருப்பம் வச்சு வேண்டி நிப்பீகன்னு எதிர்பார்க்கள. அப்புறம் எப்படி அவுக எதிர்பார்த்து இருப்பாக.திடுதிப்புன்னு வந்து பிடிடா வெத்தலை பாக்கை, அடிடா மேளத்தை, எடுற தாலியை, விடிஞ்சா கல்யாணம்னு எடுத்து எடுப்புல ஓடுறீக.உங்க வேகத்துக்கு நாங்க ஈடு கொடுக்க முடியுமா? சொல்லுக?”
“உங்க விருப்பத்தை யோசிக்கவே நாள் போச்சு. அடுத்து அண்ணே, மதனி பிற்பாடு சாலா.சாலா கண்டாலே காது தூரம் ஓடுவீக, அவுக உங்க பக்கமே வரவே மாட்டாக.இந்த அழகுல அவுக உங்களைக் கல்யாணம் கட்ட சம்மந்தம் சொல்ல இன்னும் கொஞ்ச நாள் போச்சு.
இப்போ எல்லாக் கூடுற நேரத்துல உங்க அப்பா வூட்டு சனம்.அவுங்களைச் சமாளிச்சு எடுத்தா நான் படுத்தேன், இத்தினி நடந்தும் உங்க உறுதி மறல தானே அப்புறம் என்ன லட்சு?” மகனை சமாதானம் செய்யும் பொருட்டு ஒவ்வொன்றாக எடுத்து சொல்ல.
“இப்போ அயித்த முரண்டு வைக்கிறாகச், சாலாவும் அதுக்கு ஆமாம் சாமி போடுறாக. கல்யாணம் பண்ணி அவுங்கள அங்க தனியா விடுறாதா? உங்களுக்கு வேண்டித்தேன் நான் சீக்கிரம் பண்ணுறேன் இல்லனா படிப்பை முடிச்சுட்டு பண்ணிருப்பான்”
“லட்சு! மதனி என்ன சொன்னாக?”
“ரொம்பக் கோபமா பேசிட்டாக” என்றதும் கொஞ்சம் பதட்டம் வர.
“ஏன்? என்னாச்சு? நீக என்ன சொன்னீக?”
“அவுக இங்கன இருக்கப் பிரிய படல நானும் அவுங்கள விடுறதா இல்லை நான் ரொம்ப வாக்குவாதம் பண்ணவும் அவுகளுக்குக் கோவம் வந்துடுச்சு”
“அட சிவனே அண்ணே என்ன சொன்னாக?”என்றதும் அதுவரை ஆற்றாமை பேசியவன் மாமனை எண்ணியதும் மத்தாப்பு வெடிக்க சிரிப்புடன் .
“மாமா எப்போதும் என் பக்கந்தேன் “
“அது சரி அண்ணே நீக என்ன சொன்னாலும் கேக்குறாகப் போக சரியான கூட்டு”
“மாமா துணை வச்சு மலையை வலைப்பேன்” என்றவனைப் பார்த்துச் சிரிப்பு பொங்க.
“செஞ்சாலும் செய்வீக எனக்கு அண்ணே கூட நீக இத்தினி இணக்கமா இருப்பீகன்னு தெரியவே இல்லை. கண்ணை மறைச்சு சில காரியம் பண்ணுறீக உங்களை ஆத்தாவா இன்னும் படிக்கனும் போல” மகனை ஆழம் பார்க்க, சிரித்து மழுப்பியவன்.
“சரி ஆத்தா நீக இதையெல்லாம் மண்டையில ஏத்திகிடாதீக என்றவன் கை ஊனி எழுந்து கொண்டு வர வளர் பிறையில இருந்து கல்யாணம் வேலையைத் தொடங்குவோம் சிட்டை போட்டு கொடுகக”
“செட்டியாரே பொழைச்சுகிடுவீக நானே பேசணும்னு இருந்தேன். நீங்களே சொல்லிடீக பிள்ளையாருக்கு முடிப்பை போட்டு சிட்டை போட்டுறலாம் லட்சு” என்றதும் சரி என்பது போல தலையை ஆட்டிவிட்டு மீதம் உள்ள வேலையைப் பார்க்க சென்று விட்டான் லட்சுமணன். போகும் மகனை வாஞ்சையாக பார்த்து நின்றாள் மீனா.
அங்கே பெரும் யோசனையில் உழன்று கொண்டிருந்தாள் சாலா…
மனம் முழுமையும் லட்சுமணன் ஆச்சி செய்ய எதையும் கருத்தில் கொள்ள முடியவில்லை.அவனது அமைதியையும், பொறுமையையும் கண்டு பல நேரம் மண்ணு லட்சு என்று கூடக் கேலி செய்திருக்கிறாள்,
ஆனால் அவனது அமைதிக்குப் பின் இருக்கும் உணர்வுகளைக் கண்டு கொள்ளும் போது அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.
வறுமை என்றால் அது ஒரு வகை வலி, தகப்பன் இல்லாத பிள்ளையென்றால் அது ஒரு வகை வலி,யாருமற்று தனித்து வாழும் சூழல் கொண்டால் அது ஒரு வலி.இந்த மூன்றும் ஒரே நேரத்தில் அனுபவித்துப் பயணித்தால் எண்ணி பார்க்கவே பயம் கொள்ளகிறது அல்லவா.
அப்படிப்பட்ட சூழ்நிலையை லட்சுமணன் கடந்திருக்கிறான். அதுவும் தனது பிடித்தம் தொலைத்து ,கண்ணீர் தொலைத்து,உணர்வுகள் கொன்று வளர்ந்து நிற்கிறான்.தாயிக்கு ஈடாகத் தியாகம் செய்தவன் என்று தான் சொல்ல வேண்டும்.லட்சு பற்றியே சுற்றிய எண்ணத்தைத் தடுத்து நிறுத்தியது கண்ணாத்தாளின் குரல்,
“சாலா!”
“இதோ வாரேன்” என்றவள் பின் கட்டுக்கு செல்ல, அங்கே மதிய உணவுக்குக் காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தாள் கண்ணாத்தாள்.
“உங்க ராசனை கொண்டு கோட்டையைப் புடிக்கக் இப்பவே கானா கண்டுக்கிட்டு கிடக்கிகளா?” சிறு குறும்பாக மகளை வம்பு செய்ய முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தாயின் அருகில் அமர்ந்தாள் சாலா.
“என்ன முகத்தை தூங்குறீக?”
“நீக எதுக்கு அவுக கிட்ட அத்தினி கோபம் காட்டி வைக்கிறீக?”
“அட டா சங்கதி அப்படிப் போகுதோ! ஹ்ம்ம்! அவுங்கள பேசி வச்சா இங்கன நோக்காடு போல” என்ற தாய்யை சலிப்பாகப் பார்த்தவள்.
“ஆத்தா! அவுக நம்பக் கிட்டதேன் உரிமை பேசி வைப்பாக வெளில அவுக பேசி பார்த்திருக்கீகளா? உங்களுக்கே அவுங்களைப் பத்தி தெரியும்” என்ற மகளைத் தீர்க்கமாகப் பார்த்தவள்.
“ஒன்னு சொல்றேன் நல்லா மனசுல பதிய வச்சுக்கோக என்னத்தேன் தாயும், பிள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறதேன். இதே மீனா இடத்துல வேற ஒருத்தர் இருந்தா நம்பச் சலுகை சொல்ல முடியுமா? சொல்லுக? ” என்றதும் அமைதியாகி போனாள் சாலா.
தாய் சொல்வது எத்தனை சத்தியம் தான் கூட மீனாள்,லட்சு என்று தானே யோசித்தால் கணவன், மாமியார் என்று எண்ணவில்லையே என்று வருந்தினாள் சாலா.
“ஆத்தா! நான் இந்தக் கோணத்துல யோசிக்கல”
“இனி யோசிக்கணும் சாலா உங்க ஐயாவுக்கு மருமகன் மயக்கம் நமக்கே தெரியாம இத்தினி வருஷம் இருந்திருக்கு. தம்புடு ஒரு வார்த்தை சொன்னா அதேன் வேதவாக்கு அவருக்கு.
இத்தினி பெரிய மனுசனுக்கு நல்லது பொல்லது தெரியாது மகளைக் கொடுக்குற இடத்துல இருக்க முடியாதுனு தெரியாதா என்ன?” இந்த விஷியத்தில் கண்ணாத்தாளுக்குக் கணவன் மீது அத்தனை வருத்தம்.
“ஆத்தா! ஐயாவை எதுவும் சொல்லாதீக இவுக அமைதின்னு எண்ணி வைக்காதீக அழுத்தம் பேசி பேசியே காரியம் பண்ணுவாக.அதுவும் அந்தச் சிரிப்பே போதும் ஆளை முழுங்கி வைக்க” லட்சுவை எண்ணி செல்லமாகச் சலித்துக் கொண்ட மகளை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் கண்ணாத்தாள்.
” ஐயனுக்கு பரிஞ்சு வரீக உங்க அவுக அத்தினி பெரிய ஆளா?”
“ஆத்தா! செல்லமாகச் சிணுங்கி கொண்டு எழுந்து ஓடி விட்டாள் சாலா” ஓடும் மகளைச் சிரிப்புடன் பார்த்த கண்ணாத்தாள் மீண்டும் விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.எண்ணம் முழுமையும் லட்சுவின் பேச்சிலே, அதிகம் யோசிக்க வைத்து விட்டான் போலும்
இங்கு நிலவரம் இப்படி இருக்க. அங்கே பட்டினத்தில் சோமுவின் வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி கொண்டார்.மூடிய கண்களுக்குள் கள்ளமில்லா சிரிப்புடன் லட்சுமணன்.
“ப்ச்!” பெரும் சலிப்புடன் கண்ணைத் திறந்தவர் முன் காபி கோப்பையை நீட்டினாள் வள்ளி.
“எனக்கு எதுவும் வேணாம் வள்ளி”
“மாமா! ஊருக்கு போயி வந்ததுல இருந்து உங்க முகமே சரியில்லை என்றவள் கொஞ்சமாகத் தயங்கி மீனா அக்காவ எண்ணி” மேலும் எதுவோ சொல்ல போனவளை தடுத்தவன்.
“அவளைப் பத்தி வருத்த படுறவனா இருந்திருந்தா உன்கூட இருந்திருக்க மாட்டேன். கண்ணு முன்னாடி மயங்கி சரிஞ்சவளை வெறுமனை பார்த்துப்புட்டு தேன் கிடந்தேன்”
“அப்போ லட்சு”
“என்ன பொண்டாட்டி இல்லனா பிள்ளை பாசமா என்ன நீக வேவு பாக்குறீகளோ”
“ஐயோ இல்ல மாமா என்னால தேன்”
“நிறுத்து, நிறுத்து உண்ணலான்னு இல்ல நானும் காரணம் எனக்கு வாழ்க்கையில பிடிப்பே இல்லை. மீனா கூடவும் ஒட்டுதல் இல்லை, ஒட்டிட்டு வந்த உன் கூடவும் ஒட்டுதல் இல்லை. என்ன இந்த பிள்ளைதேன் சாட்டை கொண்டு எண்ணத்துல சுழட்டி அடிக்கிறான்” என்றவர் மீண்டும் கண்களை மூடி கொண்டே.
“எனக்கு எதுவும் ஆகி போச்சுன்னா பி. எல் ஏகாம்பரம் மாமா வூட்டுக்கு போயிடுக. உங்க காலத்துக்கும் காசு கொடுத்து வச்சிருக்கேன் ” என்றதும் வள்ளி அதிர்ந்து நெஞ்சில் கை நிற்க.வள்ளியை போகுமாறு செய்கை செய்தவர்.மீண்டும் லட்சு வை எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.அந்த புன்னகை அத்தனை சுகம் கொடுத்தது போலும்.
மகனை மட்டுமே கண்ணில் நிரப்பிக் கொண்டவர் அன்று இரவே மிகப் பெரிய முடிவை எடுத்து தனது இறுதி மூச்சை நிறுத்தி கொண்டார்.உண்மையில் இவர் என்ன வகையென்று தெரியாமல் தவித்து நின்றனர் குடும்ப மக்கள்.தந்தையின் இறப்பு செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற நிலையில் லட்சுவை நிறுத்தியது.
error: Content is protected !!