Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 15

கருப்பன் ஆட்டம் 15

 கவுன்சிலர் செல்வம் வீட்டில்



Advertisement

 அங்கு ஒருத்தன் இவர்கள் செய்த சூழ்ச்சியின் வீரியத்தால் உயிருக்கு போராடும் நிலையில் இருக்க, ஆனால் செல்வம் மற்றும் அவனின் அல்லக்கைகளோ தாங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைந்ததை நினைத்து பார்ட்டி வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அதில் செல்வத்தின் அல்லக்கைகள் அனைவரும் அமர்ந்து சரக்கு அடித்து மகிழ்ந்து கொண்டிருக்க, அதில் அய்யனாரும் ஒருவனாக இருந்தான்.

Advertisement

Advertisement

செல்வம் அய்யனாரிடம் “அய்யனாரு…! என்னதான் நீ காலைய அடக்கி கருப்பன ஜெயிக்கலனாலும், ஊருக்குள்ள நான் தான் பெரிய சண்டியன் வீரன்னு நினைச்சுக்கிட்டு திரிஞ்சவன மொத்தமா அடிக்கிபுட்டல்ல, இது போதும் எனக்கு..” என்று தனது மார்பில் கை வைத்துக் கொண்டு கூறினான் செல்வம்.

அதனைப் பார்த்து அய்யனாரோ “அட என்னண்ணே நீயி…! இத போய் என்ன பெரிய விஷயம் மாதிரி பேசிட்டு இருக்க, உனக்காக இந்த தம்பி உசுர கூட கொடுப்பேன். அந்தக் கருப்பன் எல்லாம் எம்மாத்திரம்.!” என்று அவனும் அதே போதையில் பதில் கூறியவன் யோசனை வந்தவனாக,

Advertisement

 “அப்புறம் அண்ணே நீங்க முன்னாடி சொன்ன மாதிரி அங்க கேமரா எதுவும் இல்லையே? ஏன்னா நான் குத்துனத எந்த பயலும் பார்த்திருக்க மாட்டியான். ஆனா இந்த கேமரா கண்ல மட்டும் நான் பட்டுட்டா நான் தப்பிக்க முடியாது..!” என்று அய்யனார் கேட்டான்.

 “அட. அதனால தானே இந்த வட்டம் ஜல்லிக்கட்டுக்கு எந்த ஒரு டிவி சேனல் காரனையும் உள்ள விடல…! அந்த விஷயத்தை நினைச்சு நீ எதுவும் பயந்துக்காத சரியா.! நான் இருக்கேன்” என்று செல்வம் கூறினான்.

“அப்பிடியா சரிண்ணே! சரிண்ணே! அப்ப நான் கிளம்புறேன்” என்று அய்யனார் அங்கிருந்து கிளம்பி இருந்தான் .

 அப்பொழுது செல்வத்தின் அல்லக்கை ஒருவன் செல்வத்தின் அருகில் வந்து, “அண்ணே நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்க மாட்டிங்களே!”

“என்னடா..?”

“இல்லைண்ணே, அந்த கருப்பன சரிக்கிறது உன்னோட திட்டம் அப்படின்னா, அதுக்கு தான் உன்னோட உயிர் தொண்டர்கள் நாங்க இத்தனை பேர் இருக்கோமே..! எங்களை எல்லாம் டீல்ல விட்டுபுட்டு ஏண்ணே நீ அய்யனார கூட்டு சேர்த்துக்கிட்ட?” என்று அவன் கேட்டான்.

அதற்கு செல்வமோ “இது பத்தி உனக்கு தெரியாது.. இதுல பலவித சூழ்ச்சி இருக்கு.. நாள பின்ன ஏதாவது ஒன்னுனா கூட அய்யனார் ஏன் பெயரை சொல்ல மாட்டியான்.

இரண்டாவது, அவன் பண்ணது அவங்க குடும்ப பிரச்சனைன்னு சொல்லி ஊருக்கார பயலுவ பூராம் பேச்சு திருப்பி போட்டுக்குவானுங்க.

ஆனா இதுவே நம்முடைய ஆளுங்கள விட்டோம்னா…! எல்லாருக்கும் நான் தான் பண்ணேன்னு பொட்டுல அடிச்ச மாதிரி தெரிஞ்சு போயிடும். அதனால….! நான் எது பண்ணாலும் அதுல ஒரு காரியக்காரணம் இருக்கும்டா” என்றான் செல்வம்.

 “சரிண்ணே நீ நடத்துண்ணே..!” என்று அந்த போதை அல்லக்கையும் அங்கிருந்து நகர்ந்து மற்ற நபர்களுடன் சேர்ந்து கொண்டான்.

 மருத்துவமனையில்,

என்ன தான் தன் நண்பன் எதையும் தாங்கி சமாளித்து மீண்டு வருவான் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், அவனின் இப்பொழுதைய நிலையை தர்மனால் தாங்கி கொள்ள முடியாமல் அவன் ஒரு புறமும்,

பொண்ணுத்தாயி ஒருபுறமும் கருப்பனின் நிலையை நினைத்து இடிந்த நிலையில் அமர்ந்திருக்க, அமுதாவும் இருளாயும்

பொண்ணுதாய்க்கு தைரியம் கூறி தேற்றிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் நால்வர் அறியா வண்ணம் கருப்பனின் அறைக்குள் நுழைந்து இருந்தால் மலர்விழி.

 சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள் அவனின் உடலில் பொருத்தப்பட்டிருக்க, செயற்கை சுவாசம் மூக்கில் மாட்டப்பட்டு, அதன் வழியாக சீரான மூச்சினை வெளியிட்டுக் கொண்டு சுய நினைவின்றி ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான் கருப்பன்.

 எப்பொழுதும் கட்டிளம் காளையாக அந்த கிராமம் முழுவதும் சுற்றித் திரியும் கருப்பனின் ஆறடி ஆஜானபாகுவான அந்த தோற்றம் சிறிதும் மங்காமல் அந்தக் கட்டிலில் அவன் படுத்திருந்தான்.

 அவனையும் அந்த அறையையும் சுற்றி தனது விழிகளை படறவிட்டவள் பின் கருப்பனின் அருகில் சென்று நின்று அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

 “யோவ் காட்டான்…! என்ன நீயி இந்த சின்ன விசயத்துக்கு போய் இப்படி வந்து படுத்துட்ட…? இவ்வளவுதானா உன் பவுசு…? நான் கூட உன்னைய என்னவோ நெனச்சு மனசுல எங்கேயோ வச்சிருந்தேனே…? ஆனா நீ இப்படி நாலஞ்சு கீறலுக்கே இப்படி வந்து படுத்துக்கிட்ட…?

அப்ப இதுவரைக்கும் நான் உன்ன காட்டான்னு கூப்புட்டது எல்லாம் வேஸ்ட், நீ ஒரு டம்மி வெடின்னு இப்பதானே தெரியுது…!” என்று அவனின் காதில் விழும்படி அவனை கிண்டல் செய்யும் தோணியில் பேசியவளின் விழிகளில் மட்டும் ஏன் அத்தனை கண்ணீர் வடிந்தது என்று அவளுக்கே வெளிச்சம்..?

 பின் தன் கண்ணீரை ஆழ்ந்து துடைத்துக்கொண்டவள்

 மூடி இருந்த அறைக் கதவை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் கருப்பனின் முகம் பார்த்தவள்,

“இதோ பாரு அத்தான்…! இப்போ நான் ஒன்னு சொல்லுறேன் தெளிவா கேட்டுக்கோ.. போன மாசம் எனக்கு கல்யாணம் நடக்க இருந்துச்சு.. ஆனா நான் அத புடிக்காம அங்கிருந்து இங்க வந்துட்டேன்.

நான் எதுக்காக கல்யாணம் புடிக்கலைன்னு சொன்னேன் உனக்கு தெரியுமா..? அதுக்கான உண்மையான காரணம் என்னன்னா..! என் மனசுல நீ இருந்த..! அதை இதுநாள் வரைக்கும் நான் என் ஃபிரண்டு மயில் கிட்ட கூட சொன்னது இல்ல.

அன்னைக்கு அவ என்ன அந்த நிலைமையில இருந்து காப்பாத்தி இங்க கூட்டிட்டு வருவா..? அதுவும் இதே ஊர்ல தான் நீ இருப்ப அப்படின்னு நான் எதிர்பார்க்கல…!

 உன்னுடைய போட்டோவ மட்டுமே வச்சு பார்த்து உன்ன அனு அனுவா ரசிச்சவ நான். ஊருக்கு வந்து இறங்குனதும் ஒன்னு இந்த மாதிரி அடிதடியில பார்த்ததும் உனக்கு நான் செல்லமா வச்ச பேரு தான் காட்டான்.

ஏன்னு தெரியல..! இந்த காட்டான, காட்டானா பாக்குறதுக்கு முன்னாடியில இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படியா பட்ட ஒன்ன இந்த ஊருல இருக்குற

பொண்ணுங்க முன்னாடி இவ்வளவு சண்டியன திரியும் போது,

போயும் போயும் அவளுக பார்வையில நீ படுற மாதிரி இருக்கியே..! அப்படிங்கிற கோவத்துல பொறாமையில தான் நான் உன்ன பாக்குறப்ப எல்லாம் உன்கிட்ட பேச்சு குடுத்து சீண்டிட்டு இருந்தேன்.

இன்னுமும் கூட நீ எவ்வளவு வேணாலும் சண்டித்தனம் பண்ணு நான் வேணாம்னு சொல்ல மாட்டேன். ஆனால் இந்த மாதிரி இருக்காத, எனக்கு சுத்தமா பிடிக்கல.

 ஒரு நாலஞ்சு கீறல எல்லாம் தாங்க முடியாத அளவுக்கு என் அத்தான் ஒன்னும் கோழை கிடையாது எனக்கு நம்பிக்கை இருக்கு..

இந்த விஷம் எல்லாம். என்ன விஷம்..! ஆலகால விஷம் குடுச்ச அந்த சிவபெருமானயே மிஞ்சினவன் நீயி.. அப்படியாப்பட்ட உனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது…! நீ மறுபடியும் எந்திருச்சு வந்து பழையபடி அதே தாட்டியம் குறையாம நீ இருக்கணும்.

நான் எனக்கு நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தி ஊரை விட்டு வந்து உன்னை பார்த்ததுக்கு அப்புறம், என்னோட வாழ்க்கை எல்லாமே நீ மட்டும் தான் அப்படின்னு நினைச்சுட்டு இருக்கேன்.

எனக்குன்னு இப்போதைக்கு யாரும் இல்ல. நான் மயில் வீட்டில் வந்து இருக்குறது எனக்கு சங்கடமா இருக்கு ஆனா எனக்கு வேற வழி இல்லாம இருந்துட்டு இருக்கேன். எனக்கு அந்த நிலைமைல இருக்க புடிக்கல,

எனக்கு உன்னோட அந்த குட்டி வீட்ல, உனக்கு பொண்டாட்டியா உன் கூடயே இருக்கணும். உனக்காக வாழனும், உனக்காக மட்டும் வாழனும், உனக்குள்ள புதைஞ்சு வாழனும்னு ஆசையா இருக்கு அத்தான்.

இப்ப நான் சொல்றது உனக்கு கேக்குதா என்னன்னு எனக்கு தெரியல, ஆனா என் மனசுல உள்ளது முழுசும் நான் கொட்டி தீர்த்துட்டேன். அது உனக்கு கேட்டுருச்சு அப்படின்னு நீ சீக்கிரம் எந்திருச்சு வா..! உனக்காக இந்த மலரு எப்பவுமே காத்துட்டு இருப்பேன்” என்று கூறிய மலர்,

 அங்கிருந்து திரும்பி செல்ல தனது பாதத்தை ஒரு அடி நகர்த்த அப்பொழுதே கருப்பனின் கைவிரல்கள் அசைவதை கவனித்தவள் பட்டென திரும்பி கருப்பனின் முகம் பார்த்தாள்.

அவனின் மூடி இருந்த இமைகளுக்கு இடையே கருவிழிகள் அங்கும் இங்கும் அசைவதை உணர்ந்தவள் முகம் கொள்ள ஆனந்தத்தோடு,

 “அத்…அத்தான்… உங்..உங்களுக்கு… நீ..நீங்க..” என்றவளுக்கு அதன் பின் வார்த்தை வராமல் கண்களில் நீர் திரல அறையில் இருந்து வெளியில் வந்தவள் தர்மனின் முன்பு வந்து,

“அண்ணே … அண்ணே … உள்ள அவரு…க.. கண்ணு.. கை…!” என்று அவள் அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறினாள்.

“என்னம்மா சொல்ற? கருப்பன் கை அசைஞ்சுதா..!” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்று கருப்பனின் நிலையை கவனித்தவன் நொடியும் தாமதிக்காமல் மருத்துவர் அறை நோக்கி விரைந்து அடுத்த கணமே மருத்துவர் உடன் கருப்பனின் அறைக்குள் நுழைந்து இருந்தான்.

அறைக்குள் நின்று இருந்த அனைவரையும் சிறிது நேரம் வெளியில் இருக்குமாறு கூறி அனுப்பிய மருத்துவர் கருப்பனின் உடலையும், அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த மானிட்டரையும் கவனித்து எதனையோ கணக்கிட்டவர் “சூப்பர் இம்ப்ரூவ்மென்ட்..!”என்று கூறியவர் அங்கிருந்த செவிலியரிடம் சில விஷயத்தை கூறிவிட்டு அறையில் இருந்து வெளியில் வந்து பொண்ணுத்தாயின் முன்பு வந்து நின்றவர்,

“அம்மா உங்க பையனுக்கு ஒன்னும் இல்ல, அவரு அபாய கட்டத்தை தாண்டிட்டாரு, அவரு இப்போ நல்லாயிருக்காரு, கொஞ்சம் மயக்கத்தில் இருக்காரு, இப்போதைக்கு உள்ள யாரு போக வேண்டாம். அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.

 நர்ஸ் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பார்க்குறேன்…!” என்று கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட, அங்கிருந்து அனைவருக்கும்.அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

இதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த மலர்விழியின் மனது சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அவள் மனதிற்குள்ளோ “யோ காட்டான் நீ பிழைச்சுட்ட, உனக்கு ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.

இனி நீ எந்திருச்சு வந்துருவ, மறுபடியும் உன்கிட்ட நான் சண்டை போட போறேன். நீயும் நானும் நிறைய நிறைய சண்டை போட்டுகிட்டே நிறைய நிறைய சந்தோஷத்தோடு வாழ போறோம்..! சீக்கிரம் எழுந்து வாயா காட்டான்” என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் கண்களில் இருந்து அவளின் மகிழ்ச்சியின் சாட்சியாக கண்ணீரும் ஆர்ப்பரித்து வழிந்தது.

 தன் நண்பனின் நிலையை நினைத்து ஆழ்ந்த கவலையில் இருந்த தர்மனுக்கும் அதே நிலைதான். ‘என் கதிருக்கு ஒன்னும் இல்ல அவன் பொழச்சுட்டான்..! அவனுக்கு இனிமேல் எதுவும் ஆகாது. ஆகவும் நான் விடமாட்டேன்..!’ என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டு கூறினான் தர்மன்.

 அடுத்த சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்த செவிலிய பெண் மருத்துவரை அழைத்து கருப்பன் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டதாக கூறினார்.

 உடனே அறைக்கு விரைந்த மருத்துவர் கருப்பனை பரிசோதித்து விட்டு “மிஸ்டர் கதிர்..! இப்போ எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டார்.

அதற்கு கருப்பனோ “எனக்கு ஒன்னும் இல்ல டாக்டர்” என்று சுரத்தை இல்லாத குரலில் கூறினான்.

 “அவ்வளவுதான் கதிர் இனி உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, நீங்க சூப்பரா ரெடி ஆகிட்டீங்க” என்று கூறியவர் அறையில் இருந்து வெளியில் சென்று விட்டார்.

செவிலிய பெண் வந்து, “அவர் இப்போ நல்லாயிட்டாரு நீங்க உள்ள போய் பார்க்கறதுன்னா பார்க்கலாம்” என்று கூறவும்,

அவன் மயக்கத்தில் இருந்த பொழுது தனது மனதில் உள்ள அனைத்தையும் கொட்டி தீர்த்த மலர்விழியால் இப்பொழுது கருப்பனை காணச் செல்வதற்கு கால்கள் தடை போடவே மற்றவர்கள் உள்ளே செல்ல அவள் மட்டும் உள்ளே செல்லாமல் வெளியவே நின்றிருந்தாள்.

கருப்பன் பொறுமையாக தனது விழிகளை சுழல விட்டு அறைக்குள் இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் பின் அந்த அறையின் கதவை பார்த்தான்.

கருப்பன் வேட்டை தொடரும்….

💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝

கமெண்ட் ப்ளீஸ் 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!