Skip to content
Post Views: 2,722
அத்தியாயம் – 16
நேற்றைய தினத்தை எண்ணி பார்க்க பயந்தவளாக யாரும் அறியாமல் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள் சாலா.லட்சுவிடம் இப்படி ஒரு எதிர்வினையை அவள் எண்ணி பார்க்கவே இல்லை.அவள் பார்த்ததை விட, எண்ணியதை விட லட்சு மிகவும் வித்தியாசமாக இருந்தான்.
ஆழம் இல்லாத கிணறு என்பதால் நீந்தி வர முடிந்தது.அப்படியும் ஏணி, கயிறு என்று வள்ளியப்பன் அலைந்து திரிந்து ஆட்களைக் கூட்டி வரவே ஒரு மணி நேரம் பிடித்தது.ஒரு வழியாக ஆட்களை அழைத்து லட்சுமணன் ஏற உதவி செய்ய.வெளியில் வந்தவனை மூன்று பெரியவர்களும் விசாரிக்க வாயே திறக்க வில்லை.முகத்தை இறுக்கமாகக் கொண்டே உடையை மாற்றி வந்தான்.
Advertisement
இரவு நேரம் அவனது உடல் அனலாகக் கொதிக்க.மீனாள் பதறிப் போனால் மாத்திரை எடுக்கக் கூட மல்லுக்கட்டி நின்றவனை சத்தியமாகச் சமாளிக்க முடியாமல் குடும்பமே திணறிக் கொண்டிருந்தது.
Advertisement
ஒரு கட்டத்துக்கு மேல் கண்ணாத்தாள் இது சரிவராது என்று எண்ணியவள் மகளைப் பிடித்துக் கொஞ்சமாக மிரட்டி என்ன? ஏது? என்று விசாரிக்க.முதலில் சொல்ல மறுத்தவள் பின்பு சிலதை மறைத்து சொல்ல வேண்டியது மட்டுமே சொல்ல.
Advertisement
‘என்ன இது? இத்தினி கோபம்? தம்புடு சரியே இல்லை’ புலம்பி கொண்டவர் பயந்தே போனார். பேசி சண்டையிட்டு நின்றால் கூடத் தேவலாம் அதை விட்டு விட்டு இப்படிச் செய்தால் எந்த விதத்தில் இதனைச் சேர்ப்பது என்று நொந்து கொண்டவள் கணவனிடம் மட்டும் சொல்ல.
Advertisement
‘பார்த்துக்கோக இனி கல்யாணம் பத்தி எதுவும் பேச வேணாம் அவுக போக்குல விட்டுருவோம்’ என்று மனைவியை வள்ளியப்பன் மறைமுகமாகப் பயம் காட்ட. கண்ணாத்தாள் அதன் பின் எதற்கும் பேசுவதாக இல்லை அமைதியாகி விட்டார்.
இன்று காலையில் இருந்தே லட்சுவிடம் பேச தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள் சாலா.அவனைக் காண, காண மனமே ஆறவில்லை அவனது நிறத்திற்குக் காய்ச்சல் கண்டு, மூக்கு சிவந்து அத்தனை ரணமாக நின்றான்.காலை உணவை தவிர்த்து விட்டு காப்பி மட்டுமே அருந்தி படுக்கச் சென்றவன் பின்னே, யாரும் அறியாமல் சென்றாள் சாலா.அறைக்குள் நுழைந்தவன் தாழிடாமல் தனக்கு தானே ஊசி போட மருந்துகளை எடுத்து வைக்க.
அவன் பின்னே வந்து கதவை தாழிட்டவள் அரவத்தில் யாரு என்று பார்த்தவன் அங்கே சாலா நிற்கவும் அவளை ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் விட்ட வேலையைத் தொடர.அவன் பேச மாட்டான் என்பதை அறிந்தவள் அவளே பேச்சை தொடங்கினாள்.
“என்ன காரியம் பண்ணிடீக? அப்படி என்ன கோபம்? சரி அப்படியே கோபம் வந்தாலும் வாய் திறந்து பேசி, நேருக்கு நேர் நின்னு சண்டை கட்ட வேண்டியது தானே?” என்றதும் நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பி கொண்டான்.
“எனக்கு ரொம்ப பேசி பழக்கம் இல்லை. அதே போல ஒரே விஷியத்தைத் திரும்ப பேசுற பழக்கமும் இல்லை. ஒரே முடிவு தான் அதுவும் ரொம்ப யோசனை பண்ணி எடுப்பேன் எடுத்தா ஆயுசுக்கும் உறுதி கொடுத்து நிற்பேன்” என்றவன் குத்தல் புரிய.
“லட்சு!” என்று அவனை நெருங்க அதற்குள் லுங்கியை தளர்த்தி அவனுக்கு அவனே மருத்துவம் செய்து கொள்ள.அவனது செயலில் சாலா கூச்சம் கொண்டு நகரவில்லை ஒரு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
தனது இருப்பை அவன் வெகு இயல்பாக கடக்க. அவனுக்கும் தனக்குமான நெருக்கத்தை முதல் முறை நுகர தொடங்கினாள் அரிவை.விளையாட்டு தோழன்,தான் ரசித்த வெள்ளை பொம்மை, தொட்டு ரசிக்க விடாமல் முரண்டி நிற்கும் அந்த சின்ன சிறுவனை இப்போது எண்ணி உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கினாள்.கனவில் கூட நடவாத ஒன்று நினைவில் சாதித்து கொண்டிருக்க அவளுக்கு எப்படி தான் இருக்கும்.
“லட்சு!” மீண்டும் அழைக்க அவளது அழைப்பை கண்டு கொள்ளாமல் பாயை விரித்து படுத்து விட்டான்.அவனது செயலில் சிறு சலிப்பு பிறக்க மீண்டும் கதவை மெதுவாக திறந்து வீட்டில் உள்ளவர்களை எட்டி பார்க்க.வள்ளியப்பனும், கண்ணாத்தாளும் சரக்கை சரி பார்த்து கொண்டிருந்தனர்.மீனாள் அமர்ந்து கொண்டே அவர்களுக்கு உதவி கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் வேலை செய்வதை உறுதி செய்து விட்டு மீண்டும் கதவை தாழிட்டவள்.மெதுவாக அவனை நெருங்க கண்களை மூடி படுத்திருந்தவன் அருகில் வந்து அவனை ஒட்டி படுத்து கொண்டு அனைத்து கொள்ள.எந்த ஒரு எதிர்வினையும் இல்லை லட்சுவிடம்.மீண்டும் அவனது மோவாயை பிடித்து,”லட்சு!” என்று ஆட்ட.
அவளது இந்த உரிமையான செயலை உள்ளுக்குள் ரசித்து கொண்டான் லட்சுமணன்.அவன் எதிர்பார்ப்பதும் இது தானே இந்த நால்வரும் அவனது உலகம். இவர்கள் உலகத்தில் அவன் மட்டுமே அன்பு ராஜ்யம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்.எத்தனை பிடித்தமாக நடந்து கொண்டாலும் இவர்கள் நால்வர் மட்டுமே அவனது அன்பர்கள் என்று நெஞ்சில் சிறு வயதிலே விதைத்து விட்டான் போலும்.
இன்னும் கண்ணை திறக்காமல் லட்சுமணன் அடம் செய்ய.சாலா இன்னும் இறுக்கி கொள்ள அவளது செயலில் அவளை பக்க வாட்டில் திரும்பி பார்த்தவனை பார்த்து,”இனி இது போல பேச மாட்டேன் என்னை கொண்டே நீக இத்தினி சங்கடத்தை பார்த்து வைக்கிறீகளேன்னு தேன் அப்படி சொன்னேன்.உங்களை கண்டு அயித்தயும் சங்கடப்பட்டு போராக.இதை பார்த்துட்டு நான் சும்மாவே இருக்க முடியுமா சொல்லுக?”
“ப்ச! அவளது பேச்சை கேட்டு சலித்தவன் மீண்டும் கண்ணை மூடி கொள்ள.
“சரி! சரி! இனி அப்படி சொல்லவே மாட்டேன் இந்த லட்சு செட்டி தலையெழுத்து சாலா ஆச்சிகிட்டன்னு எழுதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்” என்றவளை மீண்டும் கண்ணை திறந்து பார்த்து அவளை அனைத்து கொண்டவன் சுகவாசியாக கண்ணை மூடி கொள்ள.
சிறு புன்னகையுடன் அவனது கன்னத்தை உரிமையாக கிள்ளிய சாலா, “அடம்! அடமான அடம்!” என்று கொஞ்ச இன்னும் சலுகையாக அவளுள் புதைந்து கொண்டான் லட்சுமணன்.இந்நிலை இதமாக இருந்தாலும் மனதுக்குள் சிறு கலக்கமாக தான் இருந்தது சாலாவுக்கு.நடப்புக்கும் மனதுக்கும் உள்ள இடைவெளியை லட்சுமணன் வெகுவாக கடக்க.சாலா அக்கம் பக்கம் பார்த்து கடக்க வேண்டிய சூழ்நிலை.
அங்கே உண்ணாமலையிடம் வாதாடி கொண்டிருந்தார் அண்ணாமலை.
“உண்ணா இது என்ன வம்பு செய்றீக? இதெல்லாம் நியாயமே இல்ல சொல்லிட்டேன்,அடம் பண்ணாம நான் சொல்றதை செய்க. வர வர ரொம்பத்தேன் வம்பு செய்றீக”
“யாரு நானா?”
“ஆமா நான் சொல்றதை செய்யனும் வாக உங்க பேரன் கிட்ட போயி பேசுவோம்”
“இதுக்கு நான் ஒரு காலமும் முன் வர மாட்டேன், நீக செய்றது நியாயமே இல்லை. இந்த மாதிரி நேரத்துல இந்த மல்லு கட்டுறது தேவையா? தூக்கி வாரி கொடுத்துட்டு நிக்கிறோம் அதை மனசுல வச்சுட்டு அடுத்த காரியம் எண்ணி வைக வேகமாக பொரிந்தவள் இதனை மட்டும் முனகி கொண்டால் பெரிய மனுஷன் பண்ணுற காரியமா இதெல்லாம் “
“உண்ணா அந்த இழப்புக்கு ஈடு செய்யத்தேன் பேசிகிட்டு இருக்கேன்”
“எதை ஈடு செய்ய? எம்புள்ள இடத்தை யாராலையும் ஈடு செய்ய முடியாது.அவுக தப்பே செஞ்சாலும் எம்புள்ள திருடுனா கிடந்தாலும் தாய்க்கு பிள்ளைத்தேன் அதுவும் தலைச்சன்” என்றவர் மகன் நினைவில் கண்ணீர் சுரந்தார்.சோமு மீது அவருக்கும் தீராத கோபம் இருந்தாலும் மகனது இந்த முடிவு அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.சோமு உயிருடன் இருந்தவரை பிறக்காத கேள்வியும்,பேசாத பேச்சும் இப்போது தோன்றி அவரைப் படுத்தி வைத்தது.
மகனை எண்ணிய வேகத்தில் மீண்டும் கண்ணீர் துளிர்க்க.அதனை அடக்கி கொண்டவரை பார்த்து உண்ணா புரியாம பேசாத லட்சு நம்ம கூட இருக்குறதுல இனி என்ன? அவுக ஆசை பட்ட பொண்ணையே கட்டிக்கிட்டும் நான் வேனானா சொன்னேன், ஆனா நம்பக் கூட இருக்கட்டும்.
என்ன? ஏதுன்னு? கேட்காம ஒரு பிள்ளையை வாரி கொடுத்தாச்சு .அவுகளுக்கு என்ன எண்ணமோ ? அவுக வாழ்க்கையில என்ன நடந்துச்சோ? வலி கண்டு போற அளவுக்கு என்ன தேவை அவுகளுக்கு? இதையெல்லாம் எண்ணி, எண்ணி நொந்து போறேன் நான்.நீக என்னன்னா வம்பு வளர்த்துக்கிட்டு கிடக்கீக”
“உண்ணா இந்தப் பேச்சை விடுக எனக்கு என் பேரன் வேணும்” அடமாக நின்றார் அண்ணாமலை.
“இங்க பாருக! இது தப்பு, பேரன்மார் அவுக கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சுளீர்னு வலி கண்டு நிக்குது இனி ரணபட எனக்கு தெம்பில்லை சொல்லிட்டேன் விட்டுருக”
“எதை வச்சு சொல்றீக?”
“அன்னைக்கு எழவு வூட்டுல அவர் பேசுனா பேச்ச வச்சு சொல்றேன் இது சரி வாராது அவுக இங்கன வர ஒத்துக்க மாட்டாக”
“நான் பேசுனா வர மாட்டாகதேன் அதேன் பெரியவுகள வச்சு பேச போறேன்”
“என்ன சொல்றீக? யாரை வச்சு பேச போறீக? எங்கன வச்சு பேச போறீக?”
“சின்னவரை கல்யாணத்துக்கு முதல் நாள் நம்ப சுனா பானா அண்ணே (சுப்ரமணியன்),சுந்தரம் அண்ணே,சின்னப்பன் இவுகள வச்சுதேன் பேச்சு அப்போ அவுக கேட்டுதேன் ஆகணும்” என்றதும் அதிர்ந்த உண்ணாமலை.
“இதெல்லாம் தப்பு நீக பேச போறதே தப்பு இதுல அவுகளை வச்சு பேச போறது ரொம்பத் தப்பு ஏன் இத்தினி வயசுக்கு அப்புறம் புத்தி குறுக்குல போகுது”
“உண்ணா நீக என்ன சொன்னாலும் நான் பின் வாங்க போறதில்லை”
சரித்தேன் தலைக்கு மேல வெள்ளம் இனி ஜான் போன என்ன? முழம் போனா என்ன? அவுக கிட்ட உங்க சார்பா எந்த நியாயமும் பேச மாட்டேன்”
“நீக எதுவும் பேச வேணாம், என்கூட ஆளா வந்து நின்னா போதும்” என்றவர் பிடிவாதத்தால் உண்ணாச்சிக்குக் கோபம் பொங்கி வழிந்தது.தன் பேச்சு இப்போது சபை ஏறி நிற்காது என்பதை அறிந்த உண்ணா ஆச்சி.
“சரி நான் வாரேன், ஆனா அங்கன வந்து பேச்சு துணைக்கு ஆள் தேடி நிக்காதீக சொல்லிப்புட்டேன்” என்றவர் கணவனை முறைத்துக் கொண்டே உள்ளே பேரனை பற்றிய யோசனையில் முழுகி நின்றார் அண்ணாமலை.அவருக்குப் பேரனை விட்டே கொடுக்க முடியவில்லை. மகனை கொண்டு ஒதுங்கி நின்றவர்.இப்போது மகன் இல்லை என்ற நிலையில் அவர்களைத் தங்களுடன் வைத்துக் கொள்ள எண்ணினார்.
அது என்னவோ இந்தச் சுயநலம் மட்டும் வந்தால். தான், தன், தன்னுடய என்று மட்டுமே எண்ணும் அடுத்தவர் பக்கமே இந்த மனம் எண்ணி வைக்காது போலும்.இங்கு அண்ணாமலையின் சுயநலமும் அப்படித் தான் காயம் கொண்ட இரு உள்ளங்களை பற்றிய சிந்தனையே இல்லாமல் திரிந்தார் மனிதர்.அது சரி மகனின் சுயநலம் மீனாளை முடித்தது.இப்போது இவரின் சுயநலம் எங்கு யாரை முடிக்க போகிறதோ தெரியவில்லை.
error: Content is protected !!