Skip to content
Post Views: 2,684
அன்பு – 28
நான்கு மாதங்கள் ஓடி விட்டிருந்தது!!!
Advertisement
இந்த நான்கு மாதத்தில் பிரபஞ்சன் கவியை எந்த விதத்திலும் அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என அழுத்தம் கொடுக்கவே இல்லை.
அவள் போக்கிலே விட்டுவிட்டாலும், தன் ஒவ்வொரு செயலிலும் அவள் மீதுள்ள காதலை மட்டும் வெளிப்படுத்த மறக்கவில்லை அவன்.
Advertisement
Advertisement
கவிக்கு அவனின் அன்பு புரிந்தாலும், அதில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்திடச் சொல்லி உள்ளே உள்ளம் தவித்தாலும், அவளின் கடந்த கால வாழ்க்கை அவள் கண்முன் வந்து நின்று பயங்காட்டியது!!
அனைத்தையும் எளிதாக மறந்துவிட்டு, பிரபாவினுடன் இயல்பாய் ஒரு இல்லற வாழ்க்கையை தொடங்குவதற்கு, அவள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் இன்னும் தயாராகவில்லை.
Advertisement
எங்கே தன் கடந்த கால வலிகள், பிரபஞ்சனின் நிகழ்கால சந்தோஷங்களை கெடுத்துவிடுமோ என்று அஞ்சியே, மிகவும் கவனமாக முடிந்தளவு அவனைவிட்டு விலகிச் செல்லவே முயல்கிறாள்.
ஒரு பெண்ணாக கவியின் மனதை சரியாக கணித்துவிட்ட மதுவும், அவளை அறியாமலே கவிக்கு நிதர்சனத்தை புரிய வைத்து, பிரபாவுடன் அவளைச் சேர்த்து வைக்க தன்னாலான முயற்சிகளை ஒருபக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறாள்.
இதற்கிடையில், இந்த நான்கு மாதங்களில் ஆதினியும் பிரபாவும் மிகவும் நெருங்கிவிட்டிருந்தனர்.
அதிலும் ஆதினியின் வாழ்க்கையில் பிரபா இன்றியமையாதவனாகிப் போனான்.
எத்தனை வேலை இருந்தாலும், குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதை தன்னுடைய முதன்மையான வேலையாக அவன் மாற்றிக்கொண்டான்.
அதுமட்டுமல்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வெளியே அழைத்துச் செல்வதை வேறு வழக்கமாக்கி வைத்திருக்க, குழந்தைக்கு இப்போதெல்லாம் கவியை விட பிரபாவைத் தான் அதிகம் தேடியது.
குழந்தையைக் கருத்தில் கொண்டே, இப்போதெல்லாம் கான்செர்ட் என வெளிநாடு செல்வதை முற்றிலும் அவன் தவிர்த்துவிட்டான்.
குழந்தையுடன் பிரபா அதிகம் நேரம் செலவிடுவதை முதலில் தடுத்த கவி, பின் ஆதினியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பாமல் இப்போதெல்லாம் அவர்கள் போக்கில் விட்டுவிட்டாள்.
எதையும் தடுத்து நிறுத்தவோ, மாற்றி அமைக்கவோ, சக்தி தனக்கில்லை என்று உணர்ந்துகொண்ட கவிக்கு, இப்போதெல்லாம் நடப்பது நடக்கட்டும் எனும் மனநிலை தான்.
எந்தவித ஏற்ற இறக்கங்களும் இல்லாமல், ஒரே சீராய் அவர்களின் வாழ்க்கை இப்போது பயணித்துக் கொண்டிருந்தது.
இன்னும் ஒரு வாரத்தில் மதுவிற்கு வளைகாப்பு நடக்க இருக்க, அதற்கான வேலையில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர்.
இன்று மாதாந்திர பரிசோதனைக்கு கவினும் மதுவும் மட்டும் சென்றுவிட்டு வர,
பிரபஞ்சன் அப்போது தான் ஒரு பாடல் ரெக்கார்டிங் முடித்துக்கொண்டு வீடு திரும்பினான்.
“அண்ணா!! என்ன சொன்னாங்க!! பேபி எப்படி இருக்காம்??” என வந்ததுமே அவன் விசாரிக்க,
“நான் எப்படி இருக்கேன்னு கேட்க மாட்டியா நீ?? வந்ததும் பேபி எப்படி இருக்குன்னு வர??” என ஒரு வம்பைத் தொடங்கிவிட்டாள் மது.
“நீங்க நல்லா இருக்கீங்கன்னு தான் பார்த்தாலே தெரியுதே.. இதுல தனியா வேற கேட்கணுமா??” என அவளுக்கு திருப்பிக் கொடுத்த பிரபா,
கவினின் கையில் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
“ரொம்ப போற டா பிரபா!!! நானும் பார்த்துட்டே இருக்கேன்.. இந்தக்குழந்தை உருவானதுல இருந்து, எங்களை விட நீ தான் ரொம்ப எக்ஸைட்டா இருக்க!!” என மது அலுத்துக்கொள்ள,
அனைவருக்கும் பழச்சாறு எடுத்துக்கொண்டு வந்த கவியின் காதுகளிலும் இவர்களின் உரையாடல் விழித்தான் செய்தது.
அப்போது குழந்தையின் வடிவத்தை ஸ்கேன் ஃபிலிமில் பார்த்த பிரபாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“ஹேய் கவி!!! இங்க வந்து பேபி பாரேன்!! க்யூட்ல!!!” என தன்னிடம் பழச்சாறை நீட்டிய கவியின் கரத்தைப் பற்றி தன்னருகில் அமர்த்திக்கொண்ட பிரபஞ்சனின் பார்வை மொத்தமும் கையில் இருந்த அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் தான்.
குழந்தையின் வடிவத்தைக் கண்டு அவன் கண்கள் காட்டிய மகிழ்ச்சி, கவிக்கு நெஞ்சைப் பிசைய வைத்தது!!!
‘ இந்த சந்தோஷத்தை உனக்கு என்னால என்னைக்கும் குடுக்க முடியாது பிரபா!!! அது ஏன் உனக்கு புரியவே மாட்டேங்குது??’ என மானசீகமாக அவனிடம் கேட்டுக்கொண்டவளின் பார்வை மொத்தமும் அவனிடம் தான்.
அதைக்கண்டுகொண்ட கவின், மதுவிடம் ஜாடை காட்ட,
அவளும் மென்முறுவலுடன் அவர்களைத் தன் கைபேசியில் புகைப்படமாய் சேமித்து வைத்துக்கொண்டாள்.
அன்று பிரபாவின் மகிழ்ச்சியைக் கண்டபின், கவி அவனிடமிருந்து சற்று விலகியே இருக்க, அதைக் கண்டுகொண்டாலும், தற்போது அதைப்பற்றி பேச நேரமில்லை என்பதால், வளைகாப்பு முடிந்தபின் அவளிடம் நிச்சயம் பேச வேண்டும் என மனதில் குறித்துக்கொண்டான் பிரபஞ்சன்.
மிக நெருங்கிய திரை உலக நண்பர்கள் சூழ, எளிமையாக மது – கவின் வளைகாப்பு சிறப்பாய் நடைபெற்றது.
இதற்குக் கூட வராமல் புறக்கணித்த மது மற்றும் கவினின் பெற்றோரை நினைத்து இருவருக்கும் வருத்தம் தான் என்றாலும், பெரிதாய் தங்களை அது பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டனர்.
மதுவின் வளைகாப்பிற்கு அவளின் முன்னால் காதலன் வந்து வாழ்த்து தெரிவித்து சென்றிருக்க, அதுதான் அன்றைய பரபரப்பு செய்தியாக இணையத்தில் உலா வந்தது.
எதேச்சையாக அந்த செய்தியை பார்க்க நேர்ந்த கவி,
“அக்கா!! என்ன இது?? உங்களைப் பத்தி தப்பு தப்பா ஏதோ ரூமர் ஸ்பிரெட் பண்றாங்க??” என அந்த செய்தியை நம்பாமல் மதுவிடம் பரபரப்பாக வந்து கேட்டாள் கவி.
அதை அசுவாரசியமாக வாங்கிப்படித்த மதுவோ,
“ப்ச்!! ஆமா தப்பா தான் போடுறாங்க.. நாங்க மூணு வருஷம் தான் லவ் பண்ணோம்.. இவனுங்க அஞ்சு வருஷம்னு ஒழுங்கா தெரியாம போடுறாங்க.. நீ வேணும்னா இவங்களுக்கு கரெக்ட் டீடெயில்ஸ் கொடுத்துட்டு வரியா??” என்று காதைக் குடைந்தபடி கேட்க,
“அக்கா!!! எது எதுல விளையாடுறதுனு இல்லையா?? கல்யாணமாகி பிரக்னெண்டா இருக்க பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி இன்னொருத்தன் கூட சேர்த்து வச்சு தப்பு தப்பா போஸ்ட் போட்டுட்டு இருக்காங்க.. நீங்க கூலா இருக்கீங்க??” என கவி தான் பொரிந்தாள்.
“ஷ்!!! கவி!! எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற??? கூல்!!”
“வா!! இங்க வந்து உட்காரு!!” என அவளை தன்னருகில் அமர்த்திக்கொண்ட மது,
“அவங்க போட்டிருக்க எதுவும் பொய் இல்லை.. எஸ் அந்த நவீனும் (பிரபல நடிகர்) நானும் லவ் பண்ணோம்!!” என மது இலகுவாகச் சொல்ல,
கவிக்குத் தான் இதற்கு என்ன எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை.
“இந்த சினி பீல்டுக்கு நான் வரப்போ என்னோட வயசு என்ன தெரியுமா கவி??” என்று மது கேட்க,
இல்லை என்பதாக மெதுவாய் தலையசைத்தாள் கவி.
“பதினாறு வயசு!!!” என உணர்ச்சிகளற்ற முகத்துடன் சொன்ன மது,
“அதுக்கு முன்ன வரைக்கும், நானும் உங்க எல்லாரையும் மாதிரி தான், ஸ்கூல், ஃப்ரெண்ட்ஸ், பேரண்ட்ஸ் இது மட்டும் தான் உலகம்னு ரொம்ப ஜாலியா சுத்திட்டு இருந்தேன்.. எனக்கு பெரிசா இந்த பீல்டுல இன்ட்ரெஸ்ட் எல்லாம் இல்லை.. நல்லா பேசுவேன்.. டான்ஸ் ஆடுவேன்.. அதைப்பார்த்த என்னோட ரிலேட்டிவ் ஒருத்தர் தான், அப்போ ஸ்டார்ட் ஆகியிருந்த ஒரு டான்ஸ் காம்பெடிஷன்க்கு என்னை ரெகமென்ட் பண்ணாரு!!!”
“நானும் டிவியில எல்லாம் வரப்போறோம்னு ஜாலியா வந்து பார்டிசிபேட் பண்ணேன்.. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா இந்த லைம் லைட் பிடிக்க ஆரம்பிச்சது.. அப்படியே இதையே என் கெரியரா மாத்திக்கிட்டேன்.. பை காட்ஸ் கிரேஸ், இப்போ சொல்ற, மீ டூ இல்லை அட்ஜஸ்மென்ட் மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை எனக்கு இந்த பீல்டுல வந்ததில்லை.. இப்போ எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்குற தெளிவு எனக்கிருக்கு.. பட் அந்த ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல பெரிசா இந்த சினி பீல்ட் பத்தி ஒன்னுமே தெரியாம இருந்தப்போ, இன்னைக்கு என்னைப்பத்தி வர விமர்சனங்களும் இல்லை இந்த மாதிரி என்ன பிரச்சனை வந்திருந்தாலும் எப்போவோ இதுல இருந்து காணாம போயிடுப்பேன்” என்ற மது,
“எனக்கு அப்போ பதினெட்டு வயசு!!! பட்டாம்பூச்சிக்கு ரெக்கை முளைக்கிற வயசு!!! அப்போதான் நவீன் நான் வொர்க் பண்ண சேனல்ல, ஒரு சீரியல் ஹீரோவா அறிமுகம் ஆனான்.. பார்த்ததும் ரெண்டு பேருக்கும் பிடிச்சது.. இதுதான் லவ் அப்படின்னு புரியாமையே, லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டோம்.. மணிக்கணக்கா பேசினோம்.. அடிக்கடி மீட் பண்ணோம்.. வெளிய போனோம்.. நிறைய கிஃப்ட் கொடுத்துக்கிட்டோம்.. வயசுக்கோளாறுல, இன்டிமேட்டா கூட இருந்திருக்கோம்” என்று மது சாதாரணமாய் சொல்லிக்கொண்டு வர, கவி அதிர்ந்து போய் பார்த்தாள்.
“ஹேய்!! நீ என்ன பேய் முழி முழுக்குற??” என்று அவளைக் கண்டுவிட்டு சிரித்த மது,
“நீ நினைக்கிற அளவுக்கு மோசம் இல்லை நான்.. அப்போ நவீன் தான் எல்லாம்.. அவனைத்தான் கல்யாணம் பண்ணப்போறேன் அப்படின்னு ஏதேதோ கனவுல இருந்தேன்.. நான் பார்த்து வளர்ந்த சமுதாயத்துல பிசிக்கலா இருக்கது அப்போ எனக்கு பெரிய தப்பாத் தெரியலை..”
“மூணு வருஷம் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்.. மீடியா ஃபுல்லா அடுத்த சினி கப்பில் நாங்க தான்னு நிறைய கிசு கிசு வரும்.. ஆனா ஒருநாள் எல்லாமே பட்டுனு முடிஞ்சிருச்சு!!! ம்ம்ம்.. நான் முடிச்சு வச்சிட்டேன்னு சொல்லணுமோ??” என பெருமூச்சு விட்ட மது,
“நவீன் பேசிக்கா நல்லவன் தான்.. பட் ஒரு ரிலேஷன்ஷிப் அப்படின்னு வரப்போ, அவன் வேற மாதிரி இருந்தான். வெளில மத்தவங்க பார்க்கிறதுக்கும், ஒரு லவ்வரா அவனைப் பார்க்குறதுக்கும் ரொம்பவே வித்தியாசம்.. ஹம் எப்படி சொல்ல?? ரொம்பவே டாமினன்ட் அவன்.. எல்லாமே அவன் கண்ட்ரோல்ல இருக்கணும்னு நினைச்சான்.. ஆரம்ப காலத்துல அக்கறையா தெரிஞ்சது எல்லாம் நாளாக நாளாக அடக்குமுறையா தெரிஞ்சது!! நானும் ரொம்பவே பொறுமையா தான் இருந்தேன்.. பட் அவனோட அராஜகம் நாளுக்கு நாள் கூடிட்டே போச்சு.. யார் கூட பேசினாலும் சந்தேகம்.. எல்லாத்துக்கும் சண்டை!!! இருபது வயசுல எனக்கு அதெல்லாம் ஹேண்டில் பண்ணக்கூட பக்குவம் இல்லை.. இந்த டார்ச்சரை டாலரேட் பண்ண முடியாம டெய்லி பாத்ரூம்ல கதவைப் பூட்டிட்டு கத்தி அழுவேன்.. இவன் பண்ண கொடுமையில ஓவர் டிப்ரஷனுக்கு போய் அதுக்காக டேப்லட்ஸ் எடுத்துக்குற நிலைமைக்கு போகவும் தான், என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு, நீ ஒன்னும் வேண்டாம் போடான்னு தைரியமா பிரேக்கப் பண்ணிட்டேன்!!” என்று அவள் கதை போல் கூற, இத்தனை நடந்திருக்கிறதா என கவி ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“போன்னு சொன்னதும் அவன் ஒன்னும் உடனே விட்டுட்டுப் போகலை.. நிறைய டார்ச்சர் பண்ணான்.. தொல்லை கொடுத்தான்.. அந்த சமயத்துல எனக்கு உறுதுணையா இருந்தது கவின் தான்!!!” என்று கூறிய மதுவின் முகம் கவினை எண்ணி மென்மையாக கனிந்தது.
“கவின் சாரா??” என கவி அதிர்ச்சியாக,
லேசாய் சிரித்த மது, “கவின் சாரே தான்!! அப்போ இருந்து என்னோட ஒரே பெஸ்ட் பிரண்ட்!! அவன் மட்டும் இல்லைனா நான் என்னைக்கோ மெண்டல் ஆகிருப்பேன்” என புன்னகைக்க,
“எல்லாம் தெரிஞ்சும் கவின் சார் எப்படி??” என அடுத்து கேட்க முடியாமல் கவி தடுமாற,
அவளின் எண்ணப்போக்கை புரிந்து கொண்ட மதுவும்,
“எல்லாம் தெரிஞ்சு என்ன கவி?? நான் என்ன கொலை பண்ணிட்டேனா?? இல்லை யார் குடும்பத்தையாவது அழிச்சிட்டேனா??” என்று சாதரணமாகக் கேட்க,
எங்கே அவள் தவறாய் எண்ணிவிட்டாளோ என பயந்த கவி,
“அச்சோ அக்கா!! அதெல்லாம் இல்லை.. நான் அப்படி கேட்கலை.. சாரி சாரி!!” என பதற்றம் கொண்டாள்.
“ஹேய் ரிலாக்ஸ்!!! லவ் பண்றதோ இல்லை வேற ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கதோ ஒன்னும் பெரிய கொலை குத்தம் இல்லை.. ஆனா எப்போ நாம ஒரு டாக்சிக்கான ரிலேஷன்ஷிப்ல இருக்கோம்னு தெரிஞ்சும், மத்தவங்களுக்கு பயந்துட்டு அதுல இருந்து வெளிவராம இருக்கது தான் தப்பு!!”
“நானும் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்.. அது என்னை மனதளவுல ரொம்பவே பாதிக்குதுன்னு தெரிஞ்சதும் வெளிய வந்துட்டேன்.. ஆனா அந்த காதல் தந்த பாதிப்பு எனக்குள்ள பல வருஷம் இருந்தது!!! அடுத்து ஒரு ரிலேஷன்ஷிப்குள்ள போகிற தைரியத்தை என்னோட பாஸ்ட் கொடுக்கவே இல்லை.. ரொம்பவே பயந்தேன் கவின் என்கிட்ட அவன் லவ்வை சொன்னப்போ!! மறுபடியுமா?? அப்படின்னு ரொம்பவே யோசிச்சேன்.. இன்னொரு முறை கஷ்டப்பட நான் தயாராவே இல்லை.. பட் கொஞ்சம் கொஞ்சமா கவின் எனக்கு காதல் மேல நம்பிக்கையை வர வச்சான்.. ரொம்பவே பொறுமையா வெய்ட் பண்ணான் எனக்காக.. ஒரு கமிட்மெண்ட்க்குள்ள போக ரொம்பவே தயக்கமா இருந்தது!! அதான் அவன்கிட்ட லிவ் இன்ல இருக்கலாம்.. பிடிக்கலைன்னா நான் போயிருவேன்னு சொல்லி தான் கமிட் ஆனேன்.. பெருசா நம்பிக்கை இல்லாம தான் இந்த ரிலேஷன்ஷிப்க்குள்ள காலெடுத்து வச்சேன்.. பட்!! கவின் அவன் காதலால எல்லாத்தையும் மாத்துனான்.. லவ் அப்படின்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை கத்துக்கொடுத்தான்..” என்றவளின் முகம் கவினை எண்ணி மென்மையாக மாற, கவி வாஞ்சையாக அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“ஹி ஹீல்டு மீ ஃப்ரம் அ பெயின், தட் ஹி டிட்இன்ட் காஸ் (He healed me from a pain that he didn’t cause – அவன் உண்டாக்காத காயத்தை, அவன் குணப்படுத்தினான்)” என கவினை எண்ணி காதலுடன் மது கூற,
மதுவிற்கு கவினைக் குறித்து பெருமையாக இருந்தது.
“ஒருவேளை!! என்னோட பாஸ்ட்டை நினைச்சு பயந்துட்டே கவினோட லவ்வை நான் ரிஜெக்ட் பண்ணிருந்தா, இப்படி ஒரு அழகான வாழ்க்கையை நான் இழந்திருப்பேன் நிச்சயமா!!! ஒரு முறை உன் வாழ்க்கை கதவை ஒரு பிசாசு தட்டிருச்சுன்னு பயந்து, அடுத்த முறை கதவைத் திறக்கவே மாட்டேன்னு நீ அடமா இருந்தா, உனக்காக கதவுக்கு பின்னாடி காத்திருக்க தேவதையை பார்க்குற சான்ஸ் உனக்கு கிடைக்கவே கிடைக்காது கவி!!!” என இப்போது கவியை அர்த்தமாகக் கண்டு மது அறிவுறுத்த,
கவி அதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
“உன் பாஸ்ட் என்னன்னு எனக்குத் தெரியலை!! எனக்குத் தெரியவும் வேண்டாம்.. பட் பிரபா கூட உன் பியூச்சர் எவ்வளவு அழகா இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்!!! பிரபா எப்படிபட்டவன்னு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்லை.. “
“முடிஞ்சு போனதை நினைச்சு, மிச்சம் இருக்க வாழ்க்கையைத் தொலைச்சிடாத!! அவ்வளவு தான் சொல்வேன்.. அவன் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டான்.. இனியாச்சும் நல்ல முடிவா எடுத்து ரெண்டு பேரும் நல்லா இருங்க!!!” என்ற மது, அவளே யோசித்து தெளியட்டும் என கவிக்குத் தனிமை கொடுத்து அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.
மதுவின் வாழ்க்கை கவியின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வர, அவளின் வார்த்தைகள் கவியின் மனதில் சற்று தெளிவைக் கொடுத்தது.
முதன் முதலாக அவளின் மனம் சரியான பாதையில் சிந்திக்கத் துவங்கியது!!!
“காயம் தந்தவன் ஒருவனாய் இருக்க,
காயத்திற்கு மருந்தாய் மாறியவன் வேறொருவன்!!!
எப்பேற்பட்ட காயத்தையும் போக்கும் சக்தி காலத்திற்கும் காதலிற்கும் மட்டுமே உள்ளதோ??”
error: Content is protected !!