Skip to content
Post Views: 2,063
அத்தியாயம் – 17
அன்று லட்சுமணன் காட்டிய சூட்டில் வெகு விரைவாகத் திருமண வேலைகள் நடந்தது.ஒரு வருடம் போகட்டும் என்று சொன்ன கண்ணத்தாலே முதல் ஆளாக திருமண வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தாள்.முதல் முறை லட்சுமணனை மருமகன் ஸ்தானத்தில் வைத்து பார்க்க தொடங்கி விட்டாள் போலும்.இல்லை,இல்லை அப்படிப் பார்க்க வைத்து விட்டான் போலும் இந்த லட்சுமணன்.
மீனாளுக்கு மகனது மலர்ச்சி மட்டுமே கண்ணில் நிற்க.அவன் சந்தோஷம் எதுவோ அதுவே எனக்கும் என்ற ரீதியில் மகன் சொல் பேச்சு கேட்டு அவனுக்குத் தோது கொடுத்து நின்றாள்.
Advertisement
இதோ இன்னும் இரு தினங்களில் பெண் அழைக்கும் வைபவம் இருக்க.அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டி வள்ளியப்பனும் காரைக்குடிக்கு வந்திருக்க.இந்நேரத்தை சரியாகப் பயன்படுத்தி அண்ணாமலையும் அவரது மனைவி,மகள்,மகளது கணவன் மற்றும் பெரிய தலைக்கட்டு மூவர் படையுடன் உள்ளே நுழைந்தார்.
Advertisement
சுந்தரம்,சின்னப்பன்,சுப்பிரமணியன் மூவரும் உள்ளே நுழைய.அவர்களுக்குப் பின்புறம் அண்ணாமலையும் அவரது மனைவி உண்ணாமலையும்,அவரது மகள் மற்றும் மருமகன் வருவதைப் பார்த்துவிட்டு வள்ளியப்பன் அவர்களை வரவேற்க விரைந்தார்.இவர்களைக் கண்ட நொடி பயம் கவ்வ மீனாள் எழுந்து நின்றாள்.
Advertisement
வாங்க! என்று அழைக்கக் கூட வாய் வராமல் அதிர்ச்சியில் நின்றாள்.வள்ளியப்பனுக்கும் என்னவோ என்ற பயமிருந்தாலும் அதனை வெளி காட்டி கொள்ளவில்லை.
Advertisement
“வாக! வாக! அண்ணே!, மதனி வாக!, என்றவர் அனைவரையும் அழைத்துக் கூடத்தில் அமர வைக்க.
சுந்தரம்,” வள்ளி!”
“பெரியப்பா?”
“தம்பி எங்கன?”
“பின்கட்டுல சமையல் சாமான் சரி பார்த்திக்கிட்டு இருக்காக”
“செத்த நாங்க வந்த செய்திய சொல்லி அழைச்சிட்டு வாக” என்றதும் அவரே விரைந்து சென்று மருமகனை அழைத்து வந்தார்.அதுவரை வந்தவர்களை வா என்று அழைக்க வில்லை மீனாள்.
“என்ன மீனா எப்படி இருக்கீக?” சுப்பிரமணியன் நலம் விசாரித்த பிற்பாடே நடப்பு புரிய.
“பெரியப்பா வாக! , வாக மாமா! அயித்த! எல்லாரும் வாக! வாராதவுக வரவும் கொஞ்சம் தடுமாறிப் போயிட்டேன்” என்றவள் தனது செயலை எண்ணி சங்கடமாக உணர்ந்தாள்.
“அதுனால என்ன? உங்க மனசு புரியாம இருக்க நாங்க என்ன சின்னக் குழந்தையா மீனா?.உங்களுக்கு இருக்கும் ஆயிரம் கவலை விடுக.நீங்க பட்ட பாடுக்கு மவேன் பலன் கொடுப்பான்” சூச்சமமாக சொன்னார் சுந்தரம்.அதற்குள் லட்சுமணன் வர, அனைவரையும் அவனும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்.இது எதிர்பார்த்த நிகழ்வு தானே அதனால் அவனிடம் எந்த வித பதட்டமுமில்லை.
வள்ளியப்பனும், மீனாளும் தான் பதறி நின்றனர்.இருவருக்கும் இவர்களுடன் பேசியது தெரியும்,ஆனால் அண்ணாமலையும் அவர்களை சந்தித்து பேசி உள்ளார் என்பது தெரியாது.இதனை மட்டும் லட்சுமணன் இருவரிடமும் பகிரவில்லை.அதனால் எங்கே இவர் ஆட்களை அழைத்து வந்து மீண்டும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி விடுவாரோ என்று பயந்து நின்றனர்.
“வாக! கல்யாண மாப்பிள்ளை வேலை எல்லாம் எத்தினி தூரம் நிக்குது” வழமை போலச் சுந்தரம் குறும்பாகக் கேட்க.
“அவனும் ஒரு புன்சிரிப்புடன் “போகுது ஐயா”
“ஹ்ம்ம்! சரி விஷியத்துக்கு வருவோம்” என்ற சுப்பிரமணியன் அண்ணாமலையை பார்க்க.
“நீங்களே பேசுக நான் பேசுனா எங்கய்யா கோச்சுக்கிடுவாக” லட்சுமணன் கோபத்தை அன்று பார்த்தவர் ஆயிற்றே அதனால் இவர்களை விட்டே தனது காரியத்தைத் தொடங்கினார் அண்ணாமலை.
“அது சரி பேரனுக்கு அத்தினி பயமா என்ன?” என்று சிரித்த சின்னப்பன் லட்சுமணனிடம் திரும்பி.
“லட்சு அண்ணாமலை அண்ணே எங்ககிட்ட ஒரு கோரிக்கை சொன்னாரு. அவுக பக்கமிருந்து பார்த்தா அது சரியாதான் இருக்கு. அதேன் அவுக சார்பா நாங்க பேச வந்திருக்கோம்” சின்னப்பன் தாங்கள் வந்த நோக்கத்தை சொல்ல லட்சுமணன் வழமையான புன்னகையுடன்.
“ஓ! சொல்லுக” என்றவனை இமைக்காமல் பார்த்து வைத்தார் அண்ணாமலை.
“உங்க விருப்படி நீக விரும்புன பொண்ணையே கல்யாணம் முடிப்பீகளாம். அதுல உங்க ஐயா தாத்தாக்கு எந்த வித மனத்தாங்களும் இல்லையாம் அவுகளுக்கு வேண்டியது எல்லாம் நீக, உங்க அம்மை அவுக கூட சேர்ந்து இருக்குறதுதேன்.
மகன் இடத்தை நிரப்ப சொல்லுக எங்களுக்குன்னு, கோரிக்கை வச்சு நிக்கிறாக. கூடவே வயசு போச்சு எங்களை கண்டுக்க ஆண் வாரிசு இல்லன்னு சொல்றாக.பெரியவுக பேசி ஒரு முடிவு சொல்லுகன்னு சொல்றாக, நீக என்ன சொல்றீக? “பேச்சை இழுக்கும் எண்ணமில்லை போலும் சின்னப்பனுக்கு தேங்காய் உடைத்த கதையாக வந்த விஷியத்தைப் பட்டெனப் போட்டு உடைத்து விட்டார்.
இவர்கள் சொல்லி முடித்தவுடன் பெரும் அமைதி லட்சுமணனிடம்.அவனது அமைதியை எண்ணி மீனாள் பயந்து போனாள்.வள்ளியப்பன் அமைதியாக இருந்து கொண்டார் இப்போது அவர் எது பேசினாலும் சரியாக இருக்காது என்று எண்ணினார் அது உண்மையும் கூட அல்லவா.
முழுதாக ஓர், இரு நிமிடங்கள் மௌனம் கொண்ட லட்சுமணன். அண்ணாமலையை நேர் கொண்டு பார்த்து, “ஐயா! உங்களுக்கு என்ன வேணுன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல.முதல உங்க மனசுல என்ன ஓடுது அதை உடைச்சு சொல்லுக? பிற்பாடு நான் என் முடிவை சொல்றேன்”
“நான் உங்களைச் சங்கட படுத்த எதுவும் செய்யல. எங்க பக்கம் ஓட்டை அதிகம் அதேன் சத்தம் காட்டி வைக்க நியாயமே இல்லை. அதுனால தான் யாசகம் கேட்டு நிக்கிறோம்” என்றவரை கூர்மையாகப் பார்த்து வைத்தான் லட்சுமணன் வார்த்தை ஜாலம் என்பார்களே அதில் கரை கண்டவராக இருந்தார் இந்த அண்ணாமலை.
“ஹ்ம்ம்!”
“நீக உங்க போக்குக்கு இருக,ஆனா எங்க கூட இருக. மூப்புப் பயம் கொடுக்குது அதுக்கு வேண்டித்தேன் கேக்குறேன்.நாங்க போன ஜென்மத்துல என்ன பாவத்தை செஞ்சோம்முன்னு தெரியல உரிமை இருந்தும் பேச முடியல”
“சரிதான் ஐயா!” என்றவன் மத்தியசம் பேச வந்த மூன்று பெரியவர்களையும் ஒரு முறை அழுத்தமாக பார்த்தவன் மீண்டும் தனது தாத்தனை பார்த்து.
“நீக சொல்றதும் சரித்தேன் ஐயா! வயசு போன காலத்துல வூட்டு பெரியவுகள வச்சுப் பத்திரமா பார்த்துக்கனும் அது நியாயமும் கூட.உங்க பேச்சுப் படி அது சரித்தேன் நான் உங்களைப் பார்த்துக்கிடுறேன்” என்றவனைப் பார்த்து மகிழ்ச்சி பொங்க.
“உண்ணா பார்த்துகிடுக பேரனை என்னமோ சொன்னீகளே அவுக நம்ப இரத்தம்” என்றவரை உண்ணாமலை கவலையாகப் பார்க்க.லட்சுமணன் அதே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“வாக! இப்பவே நம்ப வூட்டுக்கு போவோம்” என்று லட்சுமணன் கையை அண்ணாமலை பிடித்துக் கொண்டு.வருஷம் முடிஞ்சு கொஞ்ச நாள் போகட்டும் அந்தப் பொண்ணையே கல்யாணம் கட்ட ஏற்பாடு பண்ணுறேன் என்ன?” என்றதும்,
“ஐயா! இருக” என்றவன் அவரது கையை விலக்கி விட்டு.
“எல்லாம் சரித்தேன் எனக்கு மனசுக்குள்ள சில செய்தி அரிச்சு கிடக்கு அதுக்கு விடை சொல்லுக? அது நியாயமான்னு சொல்லுக? கையோட கிளம்பி வரேன்” என்றதும் ஓர் நொடி அதிர்ந்து அவனது கையை விட்டவர் முகம் ஒரு மாதிரியாக மாற உண்ணாமலை பதறி போனாள்.
“பெரியவுக பார்த்து கட்டுன பொண்ணைக் காரணமே தெரியாம விட்டுட்டு இன்னொரு பொண்ணு கூட போனவுக உங்க மகேன்.கையில கணுக்கால் அளவு புள்ளையைக் கொடுத்துட்டு போனவுக உங்க மகேன். ஆக எங்களோட வலிக்கு காரணம் உங்க மகேன் அதையும் மறந்து நிற்போம் விடுக.
அவுக உசுரோட இருந்த வரை என்ன செஞ்சாக எங்களுக்கு? காசு, பணத்தை விடுக ஒரு விசாரிப்பு, வச்சாகாளா? என்ன செய்றாக? சரி அதை வுடுக பல வருஷம் கழிச்சு அன்னைக்குதேன் அவரை கோவிலுல பார்த்தேன். மனசுல கொஞ்சமா பாசமிருந்தா கூட கண்ணுக்கு முன்ன நிக்கிற என்னை பார்த்த நொடி பாஞ்சிருக்க வேணாம். அன்னைக்கு அவுக பார்வைக்கு கூட பஞ்சமால நின்னாக.
சரி இதையும் விட்டுருவோம் சாவ போறம்னு தெரிஞ்சவுக நினைவுல நாங்க இருந்தோமா? இல்லையே? வள்ளியை சுட்டிக்காட்டி, ஆனா அவுக கூட இருந்தவுகளுக்குச் பக்கவா செஞ்சுட்டு போயிருக்காக. அதுவும் எப்படி அவுக சாவு வரைக்கும் யாருகிட்டயும் கையேந்தி நிற்காத மாதிரியாம். இதை நாங்க சொல்லல உங்க உறவுல ஒருத்தவுக என்கிட்ட வந்து நேருக்கு நேர் நின்னு உங்க ஐயா மார் கூட இருந்தவுகளுக்கே இத்தினி யோசனை பண்ணி செஞ்சவுக உங்களுக்குச் செஞ்சிருக்க மாட்டகாலன்னு கேக்குறாக?
இதுக்கு நான் என்ன சொல்ல? இப்போ நீக கேட்டீக உரிமை இருக்கு, நியாயமிருக்குன்னு நான் சரித்தேனு ஒப்புக்கிட்டேன். ஏன் நான் ஒப்புக்கிட்டேன்? அங்கனதேன் என் ஆத்தா வளர்ப்பு பேசி நிக்குது.நியாயமா இருந்தா தனிஞ்சு போக சொல்லி கொடுத்துருக்காக.அடுத்தவுக வலிய உணர சொல்லி கொடுத்திருக்காக”
நீ உன் மகனுக்கு சொல்லி கொடுக்கவில்லை.தனித்து வளர்த்த என் அன்னை எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறாள் என்பது தான் இதற்கு மறை பொருள்.சாட்டையால் அடித்தது போல் இருந்தது அண்ணாமலைக்கு.
தப்புனு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப நீக பண்ணுற வம்பை ஒவ்வொரு முறையும் சத்தம் காட்டாம நின்னு வேடிக்கை மட்டுமே பார்க்குறாகப் பாருக என் ஆத்தா.இங்கனதேன் எங்க ஆத்தா குணம் பேசி நிக்குது.இதே வேற ஒரு பொம்பள ஆள இருந்திருந்தா இந்நேரம் இங்கன என்ன நடத்திருக்கும்னு உங்களுக்கு நான் சொல்லி தெரியனுமா என்ன?” என்றவன் கண்ணில் அத்தனை கனல்.
நீக உங்க மகனுக்கு என்ன சப்ப கட்டு கட்டி வச்சாலும்.நீக எத்தினி நியாயம் பேசி வச்சாலும் என்னால உங்க கூட ஒட்ட முடியல ஐயா! தயவு செஞ்சு என் உணர்வுக்கு மதிப்பு கொடுக” கையெடுத்து லட்சுமணன் கும்பிட தளர்ந்து போனார் அண்ணாமலை.
உண்மைக்கும் பாசம் வச்சுத்தேன் நீக பேசுறீகானா.தாராளமா என் கூட வாக உங்களை நான் வச்சுத் தங்கமா பார்த்துக்கிடுறேன் ஐயா! எனக்கு அந்த வலு இருக்கு” என்றதும் உண்ணாச்சி படக்கென லட்சுமணனை கட்டி கொண்டு கதறி விட்டார் இத்தனை பாதகம் பேசியும் நான் உன்னை தாங்கி நிற்கிறேன் என்னுடன் வா! என்ற பேரனின் குணம் அவரது மனதை அடித்து வீழ்த்தியது.
“இது போதும் அய்யாவு எங்களுக்கு! என் தங்கமே! இது போதும். நாங்க நியாயமே செய்யல அய்யாவு. இந்த அப்பத்தா ஐயாவை மனிச்சுக்கிடுங்க” என்றவர் முடிந்த மட்டும் இத்தனை நாள் இறுக்கத்தை அழுகையில் கரைக்க அண்ணாமலை கண்களை மூடி கொண்டு அமர்ந்திருந்தார்.
முகத்திலும், உடலிலும் அத்தனை அழற்சி. பேரனை சிறிதாக எடை போட்டதின் பலன் அவரை வாட்டி தான் வதைத்தது.லட்சுமணனிடம் பேசியே காரியம் செய்து விடலாம் என்று எண்ணினார் போலும்.தன் உதிரமும் லட்சுமணன் உடலில் பினைந்திருப்பதை அங்கணம் மறந்து நின்றார் அண்ணாமலை.கண் மூடி அமர்ந்திருந்த அண்ணாமலையை ஒரு பெருமுச்சுடன் பார்த்த சுப்பிரமணியன்.
“அண்ணாமலை!” என்று அழைக்க மெல்ல கண்களைத் திறந்தார்.
“உங்க பக்கம் நியாயமே இல்லன்னு தெரிஞ்சும் நாங்க பேச வந்ததுக்குக் காரணம் உங்களையும் விட்டு கொடுக்க முடியாதுன்னுதேன் தம்பி சொல்ற விளக்கம் அத்தினியும் சத்திய வாக்கு. இதுல எங்கன பேச்சுக்கு நிக்குறது? இடமே இல்லையே, எங்கையும் வளவு, நெளிவு வச்சு கூடப் பார்க்க முடியாது அண்ணாமலை அந்த அளவுக்கு அவுக பக்கம் நியாயமிருக்கு.
பிடிவாதத்தை விட்டுட்டு பேரன் அன்புத்தேன் முக்கியம்னு எண்ணி வச்சா நாங்க சொல்ல வேண்டியதில்ல. லட்சுமணன் ஆண் வாரிசா இருந்து உங்களையும் பார்த்துக்கிடுவாக .
இதுக்கு மேல அந்தப் புள்ளையைப் படுத்தி வைக்கக் கூடாது அது தப்பு.முப்பது முடிஞ்சுதேன் கல்யாணம், துக்கம் நடந்த வூட்டுல கல்யாணம் நடக்குறது நல்லதுதேன் அதைக் கொண்டு அந்தப் புள்ள நல்ல இருக்கட்டும்னு முன்ன நின்னு கல்யாணத்தை முடிச்சு வைக அதேன் பெரியவுகளுக்கு அழகு.என்னமா சொல்றீக? மருமகனே நீக?” அண்ணாமலையின் மகளையும், மருமகனையும் பார்த்து கேட்டார் சுப்பிரமணியன்.
“நீக சொல்றது சரித்தேன் என்றார் மருமகன். மகளோ எங்க அண்ணன் அவுக இடத்தை நிரப்ப தவற விட்டாக. மதனி இடத்துல நான் இருந்தாலும் இதுதேன்” என்றவளை பார்த்து ஆமோதிப்பாக தலையை ஆட்டி கொண்டனர் பெரியவர்கள்.
காலம் மாறிக்கிட்டே கிடக்கு அண்ணாமலை இந்தக் காலத்துல பெரியவுக நோகம, மரியாதை கொடுத்து நடக்கிற பிள்ளைகள் எல்லாம் எண்ணிக்கை வைக்கிற அளவுக்குக் குறைஞ்சு கிட்டு வருது அப்புறம் உங்க இஷ்டம்” என்று பேச்சை முடித்துக் கொள்ள.வெகு நேரம் அசையாமல் அமர்ந்திருந்தவர் பின்பு எழுந்து நின்று கொண்டு மனைவியைப் பார்க்க.இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வாசலை நோக்கி நடந்து விட்டனர்.
“ஐயா தாத்தா!” போகும் அவர்களை உரக்க அழைத்தான் லட்சுமணன்.அவனது குரலில் நின்று இருவரும் திரும்பி பார்க்க.
“என்ன முடிவு?” என்றதும் ஒருமுறை அவனை ஆழ்ந்து பார்த்தவர் வெடுக்கென வெளியில் சென்று விட்டார்.கணவனது செயலில் சங்கடமாக உணர்ந்த உண்ணாமலை என்ன செய்வது என்று தடுமாறி நின்றவர் நிலையை உணர்ந்தவன் போல.
“போயிட்டு வாக அப்பத்தா கல்யாணத்துக்கு வந்திருக காத்துக் கிடப்பேன்” என்றதும் கண்ணில் நீர் பொங்க தலையை மட்டும் ஆட்டி விட்டு சென்று விட்டாள் உண்ணாச்சி.
error: Content is protected !!