Skip to content
Post Views: 2,133
“ம்ம்.. என்ன பதிலையே காணோம்? சொல்லு.. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் ரேவந்த் விடாப்பிடியாக!
ஒன்றும் சொல்லாமல் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் மதுரா!
“சொல்லு..” என்று அவன் மீண்டும் அவள் முகம் நிமிர்த்த,
“ஏன்.. இப்படி?” என்று சொல்லி மீண்டும் அவனைக் கட்டிக் கொண்டாள் மதுரா.
Advertisement
“ஹேய்.. ஸ்வீட்டி.. உன் உடம்பு பயங்கரமா சுடுதுடி. முதல்ல டேப்லட்டைப் போடு” என்று சொல்லி அவளை விலக்காமலேயே ,
கொஞ்சம் எக்கி அருகில் இருந்த மாத்திரையையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து அவளை மாத்திரையை போட வைத்தான்.
“உடனே படுக்காதே. இப்படியே கொஞ்ச நேரம் இரு”. என்று அணைப்பை விடாமல் உட்கார வைத்திருந்தான்.
Advertisement
கொஞ்ச நேரத்திலேயே மதுராவுக்கு தூக்கம் வந்து விட்டது!
Advertisement
அப்படியே அவன் மேல் சாய்ந்து கொண்டே உறங்கி போனாள்.
அவள் உடலோடு மனமும் கூட அவன் நெஞ்சில் இளைப்பாறிக் கொண்டு இருந்தது.
அப்போது பார்த்து ரேவந்துக்கு லக்கியிடம் இருந்து போன் வந்தது.
Advertisement
அவன் அதை எடுக்க வில்லை.
மெல்ல மதுராவை அவள் தூக்கம் கலையாத வண்ணம் நகர்த்தி அவளை கட்டிலில் படுக்க வைத்து போர்வையை இழுத்துப் போர்த்தி விட்டு அருகில் அமர்ந்து போனை எடுத்துப் பார்த்தான் லக்கியின் மிஸ்ட் கால்!
அவன் திரும்ப அழைத்த போது லக்கி எடுக்க வில்லை!
கல்லூரி வகுப்புகளுக்கிடையே ஏதோ ஒரு இடைவெளியில் போன் பண்ணி இருக்கிறாள் போல!
அவளே மீண்டும் அழைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, அவன் போனில் இருந்து கொண்டே ஆபிஸ் மெயில்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது மதுராவிட்ம் சிறிய அசைவு!
கால்வலி அவளை குடைந்து கொண்டிருக்க, வலியில் அவள் அனர்த்தினாள்.
ரேவந்த் போனை வைத்து விட்டு, வலிக்கும் அவள் கால்களைப் பிடித்து விட்டான்.
அந்த இதத்தில் மீண்டும் அவள் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து மெல்ல புன்னகைத்து விட்டு அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.
நல்ல தூக்கத்தில் இருந்த மதுரா தூக்க கலக்கத்தில், “ம்ம்.” என்று முனகி “அப்ப இங்க..” என்று சொல்லி அவளின் இன்னொரு கன்னத்தையும் காட்டினாள் அவளையும் அறியாமல்!
இது போல பல கனவுகள் அவளுக்கு வந்திருக்கின்றன இத்தனை வருடங்களில்!
“உன்னொரு கன்னத்தில் இட்டால்
நீ ஓங்கி அடித்து விடாதே!
இன்னொரு கன்னத்தை காட்டு” என்று கண்ண தாசன் ஞானப் பாட்டு பாடி சென்றிருக்க,
மதுராவோ இங்கு காதல் பாட்டு பாடி இருக்கிறாள் தூக்க கலக்கத்தில்!
அந்த கண்ண தாசன் பாடலைப் போல “அவளின் கன்ன தாசனுக்காக?!”
ரேவந்துக்கு சிரிப்பு வந்து விட்டது!
சிரித்துக் கொண்டே இன்னொரு கன்னத்திலும் முத்தமிட்டவன் போனசாக நெற்றியிலும் முத்தமிட்டுக் கொண்டிருக்கையில், மீண்டும் போன் லக்கியிடமிருந்து!
“ம்ம். சொல்லுடி” என்றான் ஹஸ்கி வாய்சில்!
“ஏன் இப்படி பேசுறீங்க? நான் தன் கிளாசில் இருந்துட்டு பேசறேன்! உங்களுக்கு என்ன?“
“ம்ம். என் பொண்டாட்டி தூங்கிட்டு இருக்கா! சத்தம் போட்டு பேசினா அவளுக்கு டிஸ்டர்பா இருக்கும் அதான்!”
‘என்னது பொண்டாட்டியா? யார் அது?”
“வேற யார் உன் அக்கா தான்! நான் இப்ப உங்க வீட்டில் தான் இருக்கேன்!”
“ஓ. அங்க தான் இருக்கீங்களா? அப்ப கொஞ்ச முன்னமே நான் போன் பண்ணினேனே நீங்க ஏன் எடுக்கல?”
“அப்ப நான் கொஞ்சம் பிசியா என் பொண்டாட்டிக்கு கால் பிடிச்சு விட்டுகிட்டு இருந்தேன்! அதான் எடுக்கல!”
“என்ன சொல்றீங்க டியூட்? அக்கா உங்கள எப்படி அலவ் பண்ணினா?”
“ஹேய்.. முதல்ல இந்த டியூட் கியுட் ன்னு எல்லாம் கூப்பிடறத நிறுத்து. ஒழுங்கா அத்தான்னு கூப்பிட்டு பழகு!”
“ஓ..அவ்வளவு தூரம் ஆகிப் போச்சா? அப்படி என்னத்த சொன்னீங்க?”
“அதெல்லாம் ரொம்ப பர்சனல்! நீ சின்னப் பொண்ணு உனக்கு எதுக்கு அதெல்லாம்?”
“ஓ. இப்ப தான் நான் சின்னப் பொண்ணுன்னு உங்க கண்ணுக்கு தெரியுதா?
அப்ப ஐடியா கொடு ஹெல்ப் பண்ணுன்னு கேட்டதெல்லாம்?
திஸ் இஸ் டூ பேட்!” லக்கி செல்லமாக கோபப் பட்டாள்!
“ஓகே ஓகே கோச்சுக்காதே! பெரிசா ஒண்ணும் இல்ல!
நான் அவள் கால்ல விழுந்தேன்!
அவ என் கால்ல விழுந்தா!
ரொம்ப ஓபனா பேசிக்கிட்டோம்!
ஆல் ஓகே ஆகிடுச்சு!
எனக்கு ஓகே ஆன மாதிரி இந்த யுவியும் நல்ல நியூஸ் கொண்டு வந்தா நல்லா இருக்கும்!”
“கண்டிப்பா வரும் பாருங்க. ஏன் இன்னிக்கே கூட வரலாம்! என் போனை வச்சவுடனே கூட வரலாம்!
எல்லாம் இந்த லக்கியோட பிரைன் சொல்லிட்டே இருக்கு!
அப்படி வந்தா என்னை ஷாப்பிங் மால் கூட்டிட்டு போகணும்!
அதுக்கு முதல்ல இன்னிக்கு என்னை பிக்கப் பண்ண காலேஜ் வரணும்!
ஸ்பெசல் கிளாஸ். லேட்டாகிடும் வர்றதுக்கு. ட்ரைன் பிடிக்க முடியாது!
உங்களுக்கு பொண்டாட்டி கிடைச்சுட்டா, இந்த லக்கிய கண்டுக்காம இருந்திடக் கூடாது!
அப்புறம் ஏதோ ஒரு நேரத்தில் என்னோட ஹெல்ப் உங்களுக்கு தேவைப்பட்டாலும் படலாம்! ஓகே!” என்று சொல்லி அவள் போனை வைத்த அடுத்த நொடி யுவியிடம் இருந்து போன்!
அதுவும் வீடியோ கால்!
ஏர்போர்ட்டில் இருந்து கொண்டு!
“டேய்.. மச்சான். ஏர்போர்ட்டுக்கு எங்கள பிக்கப் பண்ண வந்திடறியா? இல்ல கேப் புக் பண்ணி வரட்டுமா?”
“ம்ம். பார்க்கிறேண்டா! என்ன சொல்றா ரேஷ்மா?”
“ம்ம். அவ என்ன சொல்லுவா..“
“நீயே பாரு..” அவன் தோளில் சாய்ந்து கொண்டிருந்த ரேஷ்மாவை காட்டினான்!
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டா!
எதுவா இருந்தாலும் என் நண்பன் கிட்ட கேக்காம நான் பதில் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்” என்ற யுவியின் கைகளை கிள்ளினாள் ரேஷ்மா!
“கொஞ்சம் சும்மா இரும்மா. பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல” என்றான் அவளிடம் திரும்பி!
“வீட்டுக்கு போய் சொல்லிக்கலாம் இல்ல! அதுக்குள்ள சொல்லி என் மானத்தை வாங்கணுமா நீங்க!
போச்சு அவன் என்னை கன்னா பின்னான்னு கிண்டல் பண்ணப் போறான்” என்று ரேஷ்மா சிணுங்க,
அவர்கள் செல்ல ஊடலை சந்தோசமாக பார்த்து விட்டு,
“அதெல்லாம் ஒண்ணும் பண்ணமாட்டேன் ரேஷ்மா. நல்ல சாய்ஸ் தான் இந்த ராஸ்கல்!
என்ன .. ஏற்கனவே சாரை கையில் பிடிக்க முடியாது!
இனிமே மாப்பிள்ளை கெத்து வேறே காட்டப் போறான்” என்று ரேவந்த் சொல்லி விட்டு,
“நிஜமாகவே இந்த பயலை உனக்குப் பிடிச்சுருக்கா ரேஷ்மா?” என்றான் ரேவந்த்!
“ம்ம்.” என்று வெட்கத்தோடு சொன்னாள் ரேஷ்மா!
“ஆனா இவரை விட எனக்கு ஆண்ட்டியை அங்கிளை தான் ரொம்ப பிடிச்சுருக்கு!”
அது என்னவோ உண்மை தான்!
அவர்கள் சிங்கப்பூரில் ரேஷ்மாவின் பிராண்ட் பிரமோசன் மற்றும் புது வியாபார ஒப்பந்தங்கள் போட சென்றிருந்தார்கள்!
அதற்கு ரேஷ்மாவே போதும் தான்!
ஆனால் ரேவந்த் தான் மிகவும் வற்புறுத்தி யுவியையும் அவளோடு அனுப்பி வைத்தான்!
சென்ற இடத்தில் யுவி காட்டிய கண்ணியம், மற்றும் அக்கறை அவளை மிகவும் கவர்ந்திருக்க,
யுவியின் பெற்றோர்கள் அவனிடம் போனில் பேசிய போது அவளிடமும் பேசினார்கள்!
அவர்களுடன் பேச பேச, ரேஷ்மாவுக்கும் அந்த குடும்பத்தில் தானும் ஒரு அங்கமாகும் ஆசை பெரிதாகிக் கொண்டே போனது!
ஆரம்பத்தில் நண்பனின் தங்கையை அவனும் தங்கையாக எண்ணிக் கொண்டிருக்க போகிறான் என்ற பயம், அவளுள் தயக்கத்தை ஏற்படுத்தவே செய்திருந்தது!
ஆனால் அவன் அப்படி நினைக்கவெல்லாம் இல்லை என்பதை அவன் கண்களும் சொல்லாமல் சொல்லி காதல் பேச தான் செய்தன!
ஒரு வழியாய் அவளே துணிந்து கேட்டே விட்டாள்!
“ஒரு வார்த்தை கேக்க, ஒரு வருஷம் காத்திருந்தேன்” என்று பெண் நயன்தாராவாக யுவியின் மனம் உள்ளுக்குள் பாடியது!
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டு விட்டு தன் தோள் சாய்ந்த ரேஷ்மாவை புன்னகையுடன் பார்த்து விட்டு,
அவளைத் தோளோடு சாய்த்துக் கொண்டு அந்த பாடலைப் பாடவும் செய்தான் அவள் காதுகளில் மட்டும் கேட்கும் வண்ணம்!
“என்ன ஒரு வருஷமா?” அவள் கேட்க,
“அது.. உன் அண்ணனோட மைன்ட் வாய்ஸ்!
இன்பேக்ட் ஒரு வருஷம் இல்ல. சில பல வருசமா அவன் உன் வாயில் இருந்து இந்த வார்த்தை என்னைப் பார்த்து கேக்கணும்னு தான் ஆசைப்பட்டான்!”
“ரியலி! ரேவந்துக்கு அப்படி ஒரு ஆசை இருக்கா?”
“ஆமா.. ஆனா உனக்கு என்னை பிடிக்கணும். பிடிச்சா தான் கல்யாணம் என்று காத்திட்டு இருந்தான்!
இப்ப இத சொன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்!”
அதையே அவனிடம் இப்போது சொல்லவும் செய்தான்!
“என்னடா ஹேப்பியா?” என்றான் மேலும்!
“பின்னே! அப்படியே அவ கிட்ட இப்ப நான் சொல்ற விஷயத்தை சொல்லு! அவளும் என்னை மாதிரியே குதிப்பா!” என்றான் ரேவந்த்!
“அப்படி என்ன ரேவந்த் ஹேப்பியான விஷயம்?” என்றாள் ரேஷ்மா.
“அது சஸ்பென்ஸ்! நீ வீட்டுக்கு வா முதல்ல! நீயே கேப் பிடிச்சு வந்திடு. ஏன்னா என் பொண்டாட்டிக்கு கொஞ்சம் பீவர்!
அவளை தனியா விட்டுட்டு நான் வர முடியாது!”
“வாட்? பொண்டாட்டியா யார் அது?” ரேஷ்மா அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, மதுரா எழுந்து அவன் அருகே வந்து விட்டாள்.
சாப்பிட்ட மாத்திரையின் விளைவாக காய்ச்சல் விட்டிருக்க, நன்றாக வேர்த்து போய் விட்டிருந்தது அவளுக்கு.
அவளின் மொபைல் போனிற்கு ஏதோ வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ், தெரியாத ஒரு நம்பரில் இருந்து வந்திருந்தது.
அந்த மெசேஜ் டோன் சத்தத்தில் தான் அவள் கண் விழித்ததே!
மெல்ல போனை எடுத்துப் பார்த்தவள் வந்திருந்த நோட்டிஃபிகேசனை மட்டும் பார்த்து விட்டு போனை மீண்டும் வைத்து விட்டு, மெல்ல எழுந்தாள்.
மெல்ல நடந்து பாத்ரூம் போய் முகம் கழுவி விட்டு ரேவந்த்தின் அருகில் வந்தவள், போனில் அவன் வீடியோ காலில் பேசுவதை அறியாமல், அவனைப் பின்னால் இருந்து கட்டிக் கொண்டாள்!
அவள் ரேவந்த்தைக் கட்டிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்ட ரேஷ்மாவுக்கு இன்ப அதிர்ச்சி!
“போச்சுடா. உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினச்சுட்டு இருந்தேன்!
ஸ்வீட்டி இப்படி வந்து நிப்பானு நான் நினைக்கல!” என்று ரேவந்த் உற்சாகமாய் சொல்ல,
அப்போது தான் அவன் வீடியோ காலில் இருப்பதைக் கண்டவள், அப்படியே அவன் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டு விட்டாள் வெக்கத்தோடு!
“மதுரா மேமா இப்படி? வெக்கமா? அவங்களுக்கா? சான்சே இல்லை! ரேஷ்மாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!
“இன்னும் என்னடி மேம் மேம்ன்னு அண்ணின்னு சொல்லுடி” என்றான் ரேவந்த்!
“ம்ம். ஸ்வீட் அண்ணி!” என்றாள் ரேஷ்மா ஆசையோடு!
ஸ்வீட் அண்ணி இல்ல! ஸ்வீட்டி அண்ணி! ஸ்வீட்டி தான் அவளோட நிக் நேம் ! என்றான் ரேவந்த்.
சரி..நாங்க கேப் புக் பண்ணி வீட்டுக்கு வந்திடறோம்! நீ எப்படிடா? உன் வீட்டில் இருப்பியா? இல்ல மாமியார் வீட்டிலேயே தான் இருப்பியா? என்றான் யுவி நக்கலாக.
“எல்லாம் எனக்கு ஒண்ணு தாண்டா! அதுக்கு மேல் குரு தட்சிணை ஒண்ணு பாக்கி இருக்கு!
அத கொடுத்துட்டு வீட்டுக்கு வந்திடறேன்! லக்கிய சொன்னேன்டா! அவளை பிக்கப் பண்ணிட்டு வந்திடறேன்.
நைட் நாம எல்லாரும் வெளியே டின்னர் சாப்பிட போலாம்” என்றான் ரேவந்த் உற்சாகமாய்!
ஓகே சொல்லி போனை வைத்தார்கள்.
வைத்தவுடனே ரேஷ்மாவின் போனுக்கு அழைப்பு வந்தது.
“அய்யோ.. என்ன சொல்றீங்க? அப்படியா? நான் இப்ப தான் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கேன்.
ஏர்போர்ட்டை விட்டே இன்னும் வெளியே வரல!
நான் வீட்டுக்கே போகல! நேரா ஹாஸ்பிட்டல் வந்திடறேன்” என்று சொல்லி போனை வைத்தவள் யுவியிடம் ஹாஸ்பிட்டல் பேரை சொல்லி “காரை நேரா அங்க விட சொல்லுங்க” என்றாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ரேவந்துக்கும் அதே தகவல்!
அவனும் ஹாஸ்பிடல் விரைந்தான்.
ரேஷ்மா டாக்சியில் போய் கொண்டிருக்கும் போதே மீண்டும் போன்!
“இதோ வந்திட்டு இருக்கேன் ஆண்ட்டி. நீங்க பயப்படாம இருங்க” என்று சொல்லி போனை வைத்தாள்.
“என்னமோம்மா.. என் பிள்ளையைக் கூட அவர் தேடல! உங்க ரெண்டு பேத்தையும் தான் தேடினார்.
சீக்கிரமா வாமா” என்று சொல்லி போனை வைத்து விட்டு மகனிடம் தம்ஸ் அப் காட்டினார் பார்வதி!
ரேவந்த், மதுராவிடம் “நீ கொஞ்சம் பத்திரமா இரு. லக்கி வந்திடுவா. அவளை கேப் புக் பண்ணி வர சொல்லிட்டேன்!
ராம் அங்கிள் திடீர்னு பேச்சு மூச்சு இல்லாம கீழே விழுந்துட்டாராம்!
பக்கத்தில் ஏதோ ஒரு சின்ன ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்களாம்!
நான் அர்ஜென்டாக போகணும்” என்று சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பிய அரை மணி நேரம் சென்றே,
மதுரா தன் போனிற்கு வந்திருக்கும் அந்த வாய்ஸ் மெசேஜை திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள்!
அது ராமநாதன் தன் நம்பிக்கையான டிரைவர் போனில் இருந்து அனுப்பி யிருந்த ஒரு எச்சரிக்கை செய்தி!
அதைப் படித்துப் பார்க்கு முன்னரே ரேவந்த் கிளம்பி கொஞ்ச நேரமும் ஆகி விட்டிருக்க, தன்னையே நொந்து கொண்டாள் மதுரா!
ரேவந்தும் ரேஷ்மாவும் பார்வதியின் சதியில் இருந்து தப்புவார்களா?
error: Content is protected !!