Skip to content
Post Views: 327
அத்தியாயம் – 27
இனிமையான மாலை பொழுதின் இதத்தை முற்றிலுமாக தொலைத்து நின்றது அந்த வீடு.குடும்ப மக்கள் அனைவரும் ஒவ்வொரு உணர்வில் தவித்து நின்றனர்.மீனாள் முகம் கலவரமாக இருந்தது என்றால், சாலாவின் முகத்தில் பயமும்,வள்ளியப்பன் முகத்தில் சலிப்பும் இருந்தது.
கண்ணாத்தாள் பெரும் எரிச்சலாக நின்று கொண்டிருந்தாள்.அவளுக்கு நேர் எதிரில் முகத்தில் எதனையும் வெளி காட்டி கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் லட்சுமணன்.
Advertisement
அவனுக்கு எதிரில் தவிப்பாக அமர்ந்திருந்தார் உண்ணாமலை.எப்போது விடியும் என்று இருந்தார் போலும். அவர் வந்து அரை மணி நேரம் பிடித்தும் இன்னும் பேசிய பாடில்லை.வந்தவர் குனிந்த வாக்கிலே அமர்ந்திருக்க அவரை பார்த்தவரே அமர்ந்திருந்தான் லட்சுமணன்.
Advertisement
தனது பக்கவாட்டில் நிற்கும் கணவனை நெருங்கிய கண்ணாத்தாள்,”என்ன சாலாப்பா இவுகளுக்கு என்னத்தேன் பிரச்சனை.மழை நின்றாலும் சாரல் நிற்காது போல” என்றவளை பார்த்து,
Advertisement
“இரு கண்ணு அவசர பட வேண்டாம் வந்தவுக பேச தயங்கி நிக்கிறாக அவுகளுக்கு என்ன சங்கடமோ பொறுமை எடுப்போம் அவுக பேசுறதை கொண்டு என்னான்னு பார்க்கலாம்” என்றதும் அமைதியாகி விட்டாள் கண்ணாத்தாள்.
Advertisement
மேலும் சில நிமிடங்கள் கண்டதும் அவர் அமைதி கொள்ள அவரது அமைதியை கலைத்தான் லட்சு ,”அப்பத்தா!” அந்த அழைப்பிற்காக காத்திருந்தவர் போல.அத்தனை வேகமாக எழுந்து வந்து அவனை அனைத்து கொண்டார்.
“அப்பு இந்த அப்பத்தா எதுவும் செய்யல ஐயா என்னை ஒதுக்கி வைச்சுடாதீக. உங்க ஐயா தாத்தா பண்ண கூத்துக்கு நான் ஜவாப் இல்லை அப்பு”என்று பெருங்குரலெடுத்து அழுக ஆதரவாக அப்பத்தாவை அனைத்துக் கொண்டான் லட்சுமணன்.
சிறு குழந்தை போல் அழுகை கொண்டு, அது செருமல்லாக மாறியதும் அவரது முதுகை நீவி கொண்டே,”அப்பத்தா! என்ன இது? என் பொண்ணு பிள்ளை கணக்கா அழுகுறீக” கீழே குனிந்து பார்த்து குறும்பு புன்னகையுடன் கேட்க முற்றிலும் அழுகையை நிறுத்தியவர் அவனது கன்னம் தாங்கி.
“நெசம்மா நான் உங்க பொண்ணு பிள்ளையா?” சிறு குழந்தை போலத் தேம்பலுக்கு இடையே அவர் பேரன் முகம் பார்த்து நிற்க. இன்னும் அழகாகப் புன்னகை கொண்டவன் அவரது நெற்றியில் பட்டும் படாமல் ஒற்றிக் கொண்டே.
“பின்ன இல்லையா? எங்க முன்னோர் பெயர் தானே பிள்ளைகளுக்கு.எங்க மூத்த பெண் பிள்ளை பேரு மீனாள், இளசுக்கு உண்ணாமலை, பையனுக்கு வள்ளியப்பன்” என்றதும் கண்ணாத்தாள் பெரும் அதிர்வுடன் வள்ளியப்பனை பார்க்க. அவரோ முகம் கொள்ளா புன்னகையுடன் லட்சுமணனை பார்த்துக் கொண்டிருந்தார்.
“சாலாப்பா!” பெரும் உணர்வுகளின் தாக்கம் கொண்டு கண்ணாத்தாள் அழைக்க.
“கண்ணு லட்சுக்கு சாலா கூட கல்யாணம் பேச வேண்டி நான் வாங்குன பேச்சுக்கும், காத்த பொறுமைக்கும், பிடிச்ச பிடிவாதத்துக்கும் நித்தம் நித்தம் ஒரு காரணம் கண் முன்னுக்குப் பார்த்தீகளா? இப்போ சொல்லுக இந்தக் கல்யாணம் சரியா?”அவரது தேர்வு மெய்ப்பித்து நின்றதாம். கண்ணில் அத்தனை கர்வம் மனிதனுக்கு.கண்ணாத்தாளும் அதனை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டாள்.
அதுவரை என்ன ஆகுமோ? இவர் என்ன பேசி லட்சுவை நோக செய்வாரோ என்று பதட்டமாக இருந்த மீனாள் லட்சுமணன் அணுகுமுறை கண்டு ஒரு தாயாகப் பூரித்து நின்றாள்.அவள் கண்ணிலும் ஒரு நிமிர்வு, ‘பார் என் வளர்ப்பை’ என்ற கர்வம் மின்ன தான் செய்தது.
சாலாவுக்குச் சொல்லவே வேண்டாம். இனி காலம் முழுமையும் லட்சுவை கொண்டு தெளியாத போதையில் தான் சுற்றுவாள் போலும்.அந்த அளவுக்கு அவளைச் சுண்டி இழுத்து தன் குணத்தால் இறுக்க கட்டி கொண்டான் லட்சுமணன்.
“மூணு இல்ல எத்தினி வேணாலும் பெத்துக்கோங்க அப்பு நான் வளர்த்தித் தாரேன்” என்றவர் கன்னம் வழிக்க. அவரது கையைப் பற்றிக் கொண்டு மெல்ல சிரித்தான் லட்சுமணன் சில நிமிடங்கள் உணர்வு போராட்டம் பெரும் மௌனத்தைக் கொடுக்க அதனை கலைத்தான் லட்சுமணன்.
“அப்பத்தா!”
“சொல்லுக அப்பு”
“நீக எதையும் எண்ணி நோக்காடு படாதீக உங்க பேரன் கிட்ட தயக்கம் எதுக்கு?”
“அப்பு அவுக” என்று உண்ணமாலை விளக்கம் சொல்ல தொடங்க வேகமாக அதனை தடுத்தவன்.
“போனதை பத்தி பேச வேணாம் அப்பத்தா அதை எண்ணி வச்சாலே என் குணமும், கனிவும் மாறி போகுது. அந்த அளவுக்கு என்னை வதைச்சு வச்சுட்டாக. அதுனால அதை கிளறி கிண்டி ரணம் கண்டுக்க வேண்டாம் அப்பத்தா. இப்போ இந்த நொடி எனக்கு உங்க மேல எந்த மனத்தாங்கலும் இல்லை.
உங்க பேரன் வீட்டுக்கு எப்போ வேணாலும் வரலாம்.என்னை பார்க்கணும் தோணுச்சா சொல்லுக நான் அங்க வரேன்” என்றதுமே பெரும் அதிர்வு தாக்க மீண்டும் அவனைப் பாய்ந்து கட்டி கொண்டவர்.
“உங்க தடத்துல மிதிப்பட்டா கூட எங்களுக்கு உங்க மனசு வராது அப்பு. இந்த வார்த்தை போதும் இதை எண்ணியே சொச்ச காலத்துக்கு அப்பத்தா பொழைச்சுக்கிடுவேன். என் அப்பு! உங்களைச் செதுக்கி வச்சிருக்காக எங்க மருமக பொண்ணு”
இந்த வார்த்தை இது போதுமே மீனாளின் கலக்கம் அனைத்தும் கானல் நீராகிப் போக.பெரும் மகிழ்வில் கண் கலங்க நின்றாள் மீனாள்.அவளின் உணர்வை புரிந்தார் போல் அவளை நெருங்கி தோளோடு பிடித்துக் கொண்டாள் கண்ணாத்தாள். அதன் பின் சில நொடிகள் உண்ணாமலை பேசிவிட்டு அவரை வற்புறுத்தி உணவளித்த பிறகே அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றான் லட்சுமணன்.
போகும் போது எதுவும் பேசாமல் பொதுவாக விடைபெற்ற உண்ணாமலை.மீனாளின் கைகளை இறுக்கப் பற்றிக் கண்ணில் வைத்துக் கொண்டார்.இருவரும் ‘வாங்க! போங்க!’ என்பதோடு சரி எதுவும் பகிர்ந்து பேசி கொள்ளவில்லை.மௌனமாகத் தனது உணர்வுகளைக் கிடத்தி கொண்டு நின்றனர்.
பின்பு சாலாவிடம் வந்தவர் அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு, “ராசனுக்கு ஏத்த ராசாத்தி தேன் இப்போ இல்லனாலும் ஒரு நாள் பெருமை பேசி நிப்பீக” பெற்றவர்கள் உச்சி குளிர சாலாவை வாழ்த்தி விடைபெற. அனைவருக்கும் பெரும் நிறைவாக இருந்தது. வாசல்வரை வந்து அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு.உண்ணாமலை சென்றதை உறுதி படுத்திக் கொண்ட கண்ணாத்தாள் மீனாளிடம் திரும்பி.
“மீனா!” என்றழைக்க.
“மதனி?”
“அடிக்கடி சொல்லுவீகளே இவுகள எப்படி வளர்க்க போறேன்? எதுக்கு இந்த வாழ்க்கை? என்னத்துக்கு இந்தப் பிறவின்னு? அதுக்குப் பதில் இதோ இப்ப நடந்தது தேன்.உங்க அத்தினி கேள்விக்கும் பதில் லட்சுதேன்.எப்படி ஒரு பெயர் வாங்கிக் கொடுத்திருக்காக பார்த்தீகளா? அடுப்புக்கு உள்ளுக்கும், மசாலா உள்ளுக்கும் கிடந்து தவுச்சதுக்குக் கிடைச்ச பலன்”
“உண்மைத்தேன் மதனி நல்ல புள்ளைய இந்த உலகத்துக்குக் கொடுத்திருக்கேன்னு நிறைவு வருது.அவுக காயம் செஞ்சாலும் லட்சு பேச்சை பார்த்தீகளா?” மகனை எண்ணி அத்தனை பூரிப்பு மீனாளுக்கு.
“இருக்காதா மீனா அவுக வைரம் பெத்த மாணிக்கம் ஆச்சே”
“போக மதனி நான் ஒன்னும் வைரம் இல்ல”
“அது எப்படி நீக சொல்லலாம்? சுயமா நின்னு தன் கையைக் கொண்டு கையேந்தி நிற்காம பொழைக்கிற ஒவ்வொரு பொண்ணும் வைரந்தேன் மீனா” என்றவள் பெரும் நெகிழ்வில் மீனாளை அனைத்து கொண்டாள்.
இவர்களையே பார்த்துக் கொண்டு நின்ற சாலாவை அப்போது தான் பார்த்த மீனா.”வா” என்பது போல் கண்களால் அழைக்க.சிறு புன்னகையுடன் அவளது அருகில் வந்து நின்று கொண்டாள்.
“உங்க கிட்ட அதிகம் பேச எண்ணி வைக்கிறேன், ஆனா பக்கத்துல இருந்தும் பேச முடியல. லட்சு உங்களைக் கட்டிக்கப் பிடித்தம் மட்டுமான்னு? ஒரு கேள்வி ஓடி கிட்டே இருந்துச்சு சாலா.இப்போ விடை பிடித்தம் மட்டுமில்லை அதுக்கும் மேல்னு புரியுது. எங்க அண்ணன் போலவே எல்லா சூழ்நிலையிலும் லட்சுவை அனுசரிச்சு தாங்கி நிக்கிறீக” பெரும் நிகழ்வில் மீனாள் சொல்ல.
“ஒன்னாவே வளர்ந்த பிள்ளைங்க மீனா அதேன் புரிதல் “
“இல்ல மதனி இவுக ஒன்னா வளர்ந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல அதுங்க படிப்பு, வேலைன்னு திசை மாறி போயிட்டாக. அதை கொண்டு தேன் லட்சு சாலாவை கட்டிக்கக் கேட்கும் போது ஆச்சிரியம்மா இருந்துச்சு ஏன்னா ஆசையா பார்த்து பேசி நான் பார்த்ததே இல்லை “
“அயித்த மகன் கரிசனையோ?” என்ற தாய்யை சாலா முறைத்து பார்க்க.
“நீக என்ன மதனி புள்ளையை வம்பு செய்றீக? இந்தப் புரிதல் ஆழமான அன்பு இருந்தா மட்டுமே சத்தியம்.என்ன இவுக அன்பு என் கண்ணுக்கு தட்டு படல”
“இவுக அன்பு மட்டும் இல்ல உங்க அண்ணன் எண்ணமும் தட்டு படல” என்றதும் மனம் விட்டு சிரித்த மீனாள்.
“அண்ணனை லட்சுக்கு ரொம்பப் புடிக்கும் மதனி. அவுகளுக்கு மாமா பேச்சு இல்லாம ஒரு நாள் ஒரு பொழுது கழியாது”எந்த வித இடர் மான்பான்மை இல்லாது மகனது பிடித்தம் சொன்ன தாய்யை வாஞ்சையாகப் பார்த்து வைத்தால் கண்ணாத்தாள்.
“அதேன் மாமாவை கொண்டு மாமா மவ மேல கரிசனை பட்டாச்சு”
“சாலா இதை லட்சு முன்னுக்குச் சொல்லி புடாதீக”
“சும்மா அயித்த வம்பு செஞ்சேன் அவுக கிட்ட பல முறை இதைப் பேசி இருக்கேன்” என்றதும் அத்துடன் பெரியவர்கள் பேச்சை நிறுத்தி கொண்டனர். அதற்கு மேல் சாலா லட்சுவின் உள் நுழைய விருப்பமில்லை இந்த நாகரிகம் சாலாவை வெகுவாக கவர்ந்தது.
அதன் பின் பொதுவான பேச்சுகளோடு அந்த நாள் கழிய.அப்பத்தாவை விட்டுவிட்டு மாமானுடன் வெளியில் சென்றவன் இரவு உணவுக்குத் தான் வீட்டுக்கு வந்தான்.வழமை போல் நால்வரும் அமர்ந்து உணவை உண்டனர்.
அதன் பின் உள்ள வேலைகளை முடித்து விட்டு அறைக்குள் நுழைந்தவளை சிறு புன்னகையுடன் எதிர் கொண்டான் லட்சுமணன். மீண்டும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வெகு ஆர்வமாகப் படிக்க தொடங்கியவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள் சாலா.
பொல்லா செட்டிக்கு அவளது பார்வை உணர்ந்து கொள்ள முடிந்தது போலும் இருந்தும் படிப்பது போலவே செய்கை செய்ய.
“லட்சு செட்டி!” ஒருவிதமான குரலில் அழைக்கச் சிரிப்பை ஒழித்துக் கொண்டு அவளை எதிர் கொண்டான் லட்சுமணன்.
“சொல்லுக சாலா ஆச்சி”
“நீக மட்டும் எப்படி இப்படி இருக்கீக?”
“ எப்படிங்க? அதே இரண்டு கண்ணு ஒரு மூக்கு ஒரு வாய் இரண்டு கை இரண்டு காலு தானுங்க” என்றதும் கொஞ்சம் சிணுக்களாக அதை சொல்லல”
“என்ன கேட்க வரீக?”
“ப்ச்! புரியும் வம்பு செய்றீக “
“இல்லங்க புரியல”
“இத்தினி நடந்தும் எப்படி அவுக கூட அத்தனை கரிசனம் கட்டி நிற்க முடியுது. எனக்கு உண்மைக்கும் வியப்பாத்தேன் இருக்கு. உங்க குணமெல்லாம் எனக்கு வராதுக. அத்தினி வம்பு செஞ்சும் அணைச்சு புடிச்சு முழு அன்பை எப்படி உங்களால குடுக்க முடியுது?”
“இதுல அதிசய பட என்னக இருக்கு? உண்மைக்கும் கோப பட வேண்டிய ஆள் எங்க ஐயா.உண்மைக்கும் பாதிக்கப் பட்ட ஆள் எங்க ஆத்தா.பார்க்க போனா கோபத்தைக் காட்ட வேண்டியது எங்க ஐயா கிட்டதேன்.அன்பை காட்ட வேண்டியது எங்க ஆத்தா கிட்ட தேன்.
இரண்டு வகையான பெத்தவுக.ஒரு பிள்ளை தவறு செஞ்சு நின்னா பெத்துவுக கண்டிப்பு காட்டுவாக இது ஒரு வகை.இன்னொரு வகைப் பிள்ளையை விட்டு கொடுக்க மாட்டாக.தப்பே செஞ்சாலும் தனக்குப் பிள்ளைன்னு அவுக ஒரு நியாயம் வச்சிருப்பாக.
எங்க ஐயா தாத்தா இரண்டாவது வகை.நீக என்ன நியாயம் பேசி வச்சாலும்.அவுக எண்ணம் மாறாது.நம்பலத்தேன் அவுக பக்கம் இழுக்கப் பார்ப்பாக.
அதேன், அவுக பேச்சை கொண்டு நான் பார்த்தா அவுக முகத்துல கூட நான் முழிக்க முடியாது.அதேன் அவுக பேச்சை காத்துல விட்டு அவுக பக்கமிருந்து கொஞ்சமா உள்ள நியாயத்தை வச்சு பேசுனேன்” என்றவனைப் பார்த்து இன்னும் காதல் பெருக.
“லட்சு அப்படியே உங்களைக் கட்டி கிட்டு கடிச்சு கிள்ளி கொஞ்சனும் போல இருக்கு” என்றதும் பெரும் புன்னகையுடன் கையில் உள்ள புத்தகத்தை மூடி வைத்தவன் எழுந்து அமர்ந்து கொண்டு.
“அதை இன்னும் பத்து மயில் தூரம் இருந்து சொல்லுக எண்ணத்தை வண்ணம்மா மாத்திடலாம் சாலா ஆச்சி வாக நான் உங்களுக்குத்தேன்” கைகளை விரித்துக் கொண்டு பெரும் புன்னகை கொண்டு சொன்னவன் தோரணையில் சிரிப்பு வர.வாய் விட்டு சிரித்தவள் அவன் கைகளுக்குள் புகுந்து கொள்ள.அவளை வாகாகத் தன்னுள் அடக்கி கொண்டவன்.
“உங்களுக்கு என்ன அப்படி ஒரு சிரிப்பு ஹ்ம்ம்”
“சரியான ஆள் நீக ஆளுக்குத் தக்கன ஆட்டம் போட்டு அத்தினி போரையும் மயக்கி வச்சிருக்கீக” அவன் கன்ன கதப்பில் உரசியவாறே சொன்னவளை இறுக்கி கொண்டவன்.
“யாரு மயக்கம் கண்டு என்னக செய்ய ஆச்சி? நீக மயங்கி வச்சாகளா அதேன் முக்கியம்”
“ஆச்சி செட்டியார் கிட்ட முதல் நாள் பேச்சிலே மயக்கம் கண்டு இன்னும் தெளிஞ்ச பாடில்லை “
“அப்படியா?”
“அப்படித்தேன்” என்றவள் அவனோடு சரிய ஒரு வாழை குடை சாய்ந்து அடுத்தத் தலைமுறைக்கு வித்திட்டு நின்றது.
error: Content is protected !!