அத்தியாயம் 6.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 6
முக்தி தேடி அலையும்
பித்தனைப் போல உந்தன் காலடித்
Advertisement
தடம் தேடி அலைகிறேன் நான்!!!
புதன் கிழமை தான் அக்கா தங்கை இருவரும் கல்லூரிக்கு வந்தார்கள். ஆனால் அமருக்கோ பிராக்ட்டிகல் எக்ஸாம் நடந்து கொண்டிருந்ததால் அவளால் அவனைக் காண முடிய வில்லை. அவள் வந்ததும் அவனுக்கு தெரிய வில்லை.
Advertisement
Advertisement
அன்று மாலை பார்க்கிங் சென்ற போது தான் அவனுக்காக எப்போதும் காத்திருக்கும் இடத்தில் காத்திருந்தாள் ரதி. அவளைக் கண்டதும் அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அவன் அவ்வளவு அவசரமாக அவளை நெருங்க அவன் வேகத்தில் மிரண்டவள் அதிர்ந்து சுற்றி முற்றி பார்த்தாள்.
தன்னைக் கண்டு தான் பயப்படுகிறாள் என்று தவறாக புரிந்தவனுக்கு அவ்வளவு அசிங்கமாக இருந்தது. “ஏய் பயப்படாத டி, உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன். அன்னைக்கு நடந்ததுக்கு சாரி சரியா? உன்னை அவ்வளவு குலோசப்ல பாத்ததும் என்னையே அறியாம அப்படி நடந்துக்கிட்டேன். பிளீஸ் ரதி மா. சாரி டி”, என்று சொல்ல சரி விடுங்க பரவாயில்லை என்றா அவள் சொல்ல முடியும்? அதனால் அமைதியாக நின்றாள். ஆனால் அவள் அமைதி அவளது கோபம் என்று எண்ணிக் கொண்டான்.
Advertisement
“பிளீஸ் டி, சத்தியமா வேணும்னு பண்ணலை. என்னையே அறியாம நடந்தது. மன்னிச்சிக்கோ. ஒரே ஒரு தடவை இனி எதுவுமே பண்ண மாட்டேன்”, என்று அப்பட்டமாக கெஞ்ச அவள் கண்கள் அவனை அளந்தது.
அவன் நான்கு நாட்களாக சரியாக தூங்க வில்லை என்பதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.
“பெரிய தப்பு பண்ணிட்டேன் தான். அதுக்குன்னு இப்படி பேசாம பாக்காம இருப்பியா? ஃபோன் கூட ஆப் பண்ணி வச்சதும் செத்துட்டேன் தெரியுமா? அடுத்த ரெண்டு நாள் எதுக்கு காலேஜ்க்கு வரலை? நான் உன்னை தேடுனேன் டி. எனக்கு பிடிக்கவே செய்யாத உன் மாமா கிட்ட கூட கேட்டேன் தெரியுமா? அவன் தெரியாதுன்னு இன்சல்ட் பண்ணிட்டு போய்ட்டான். உன் விஷயத்துல எனக்கு ஈகோ கூட வராது கண்ணம்மா. உன்னை இந்த அளவுக்கு விரும்புறேனான்னு எனக்கே அதிசயமா இருக்கு. இனி இப்படி பண்ணாத பாப்பா. என்னை அடிக்க கூட செய் டி. சாரி டி பேசு டி”, என்று அப்பட்டமாக கெஞ்ச அவனை அப்படியே கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைக்க தோன்றியது.
“எனக்கு கோபம் எல்லாம் இல்லை. எனக்கு உடம்பு சரி இல்லை. அதான் வரலை போதுமா? மொபைல் வேற பிராப்ளம் ஆகிருச்சு. என்னால் உங்களை காண்டேக்ட் பண்ண முடியலை”, என்று விளக்கம் சொல்லியும் அது புரியாதவன் “என்னால தானே உனக்கு காச்சல் வந்தது? என்னோட செய்கையை தாங்க முடியாம தானே ஃபீவர் உனக்கு?”, என்று கேட்க அவள் என்ன சொல்லவாம்?
அவள் அமைதியாக இருக்க அவனுக்கோ அவளை விடவே மனதில்லை. நான்கு நாட்கள் அவளிடம் பேசாமல் பட்ட கஷ்டத்தை சொல்ல வேண்டும். மறுபடியும் அவள் முகத்தில் சிரிப்பையும் வெட்கத்தையும் காண வேண்டும் என்று ஆவல் பிறக்க “கேன்டீன் போகலாமா?”, என்று கேட்டான். அவளோ நேரம் ஆனதால் தயங்கினாள்.
“இன்னும் என் மேல பயமா தான் இருக்கியா? அதான் சாரி சொல்றேன்ல? ஏதாவது பேசேன் பாப்பா? ரொம்ப குற்ற உணர்வா இருக்கு டி. இனி உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கேன் கண்ணம்மா. பேசு டி ரதி”, என்று அவன் சொல்ல அவளோ அவன் காதலில் நெகிழ்ந்து போய் இருந்தாள். வார்த்தைகள் கூட சிக்கியது.
“என்ன பேச?”, என்று தடுமாற்றமாக கேட்க அப்போது தான் அவள் முகத்தில் இருந்த வெட்கம் அவன் கண்ணில் பட்டது.
“ஏய் மன்னிச்சிட்டியா? ஐ லவ் யு ன்னு சொல்லு டி”, என்று சொல்ல சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.
“ஹேய் கியூட்டா இருக்க டி. இப்படி எல்லாம் பண்ணினா என்னால உன்னை விட்டுட்டு எல்லாம் இருக்க முடியாது. அழகா இருக்குறது அடுத்தவங்களை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா? அதான் கண்ட்ரோல் மிஸ் ஆகுது. இனி நாம நேர்ல அதிகம் பேச வேண்டாம். போன்ல பேசிக்கலாம்”, என்று சொல்ல அவள் அதற்கு என்ன பதில் சொல்ல என்று விழித்தாள்.
ஏனோ அமருக்கு அவளது ஒவ்வொரு செய்கையும் ரசிக்கும் படியாக இருந்தது. அவளை விட்டு பார்வையை அங்கே இங்கே திருப்ப முடிய வில்லை. ஆனால் அவளுக்கு அது பிடிக்க வில்லை என்றதும் அவளை நெருங்க அவ்வளவு பயந்தான். உயிர் ஆனவளை கஷ்டப் படுத்தி அந்த கஷ்டத்தை ரசிப்பானா என்ன? அதற்கு ஒதுங்கி இருந்து அவனையே தண்டித்துக் கொள்வானே?
அப்போது திவ்யா அங்கே வந்து விட அரை மனதாக கிளம்பினாள் ரதி. போகும் அவளையே பார்த்த படி இருந்தான். ஏனோ அவளுடனே செல்ல அவன் கால்கள் பரபரத்தது.
“ஏய் அவ சின்ன பொண்ணு. அடங்கு டா”, என்று தன்னையே அடக்கிக் கொண்டான்.
அடுத்த நாள் கல்லூரிக்குள் திவ்யாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள் ரதி. அப்போது அமர் ஒரு பெண்ணுடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அந்த பெண் அமரின் அன்னை சகுந்தலாவின் தோழியின் மகள் என்பதால் தான் பேசினான். அதுவும் அந்த பெண் அவனை அண்ணன் என்று அழைத்து தான் பேசிக் கொண்டிருந்தாள். அது அவர்களுக்கு தெரியாதே.
திவ்யா அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொள்ள ரதிக்கு மட்டும் சிறு குறுகுறுப்பு. இதில் அவள் பார்ப்பதைப் பார்த்த அமர் என்ன என்னும் விதமாய் புருவங்களை உயர்த்திக் கேட்டான்.
ஏனோ ஒரு கோபம் தலைக்கு மேல் ஏறி உடம்பில் ரத்தம் பாய்ந்து முகம் சிவந்து போனது ரதிக்கு. எதனால் இந்த கோபம் என்று புரியாமல் திகைத்தான் அமர்.
அவளுக்குமே அது தெரிய வில்லை என்பது தான் விந்தை. அவன் வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதற்கா கோபம் கொள்கிறேன் என்று அவளையே கேள்வி கேட்டுக் கொண்டாள். ஆனால் ஆம் என்று ஒத்துக் கொள்ளத் தான் அவளுக்கு மனதில்லை.
அன்று மாலை அவளைப் பார்க்கும் போது “ஏன் ரதி மா என் மேல அவ்வளவு கோபம் உனக்கு?”, என்று கேட்டான்.
“நான் எங்க கோப பட்டேன். எனக்கு யார் மேல கோபம்? நான் எதுக்கு கோப படனும்? உங்க மேல கோப பட நான் யாரு?”, என்று அவசரமாக கேள்விகள் கேட்டாள்.
எப்போதும் அமைதியாக இருப்பவள் என்று அவசரமாக வார்த்தைகளை உதிர்க்க “ஏய் நீ என் ரதி தானா?”, என்று வியப்பாக கேட்டான்.
அதில் நடப்புக்கு வந்தவள் அவனைப் பார்க்க “அவ கூட பேசினதுக்கு தானே கோபம்?”, என்று கேட்டான். ஏனோ ரதிக்கு வார்த்தைகள் வெளியே வந்ததால் அதற்கு மேல் கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை.
நின்று கொண்டிருந்த அவன் கையைப் பற்றி அமர வைத்தவள் “ஆம்”, என்னும் விதமாய் தலையசைத்து விட்டு முதல் முறையாக அவனை நெருங்கி அமர சிலிர்த்து போனான் அமர். அவன் காதல் எப்போதும் வார்த்தைகளாக செயல்களாக வெளிப்படும். ஆனால் எதுவுமே பேசாமல் அவ்வபோது அவள் காதலை தெளிவாக எடுத்துச் சொல்லி விடுவாள் ரதி. அந்த நிமிடங்கள் எல்லாம் அவனுக்கு பொக்கிஷம் தான்.
அதற்கு பின் வந்த நாட்களில் எல்லாம் அமர் அவளிடம் உரிமையாக பேசி பழகினான். அவள் கேன்டீனில் அமர்ந்திருந்தால் ஒரு டேரி மில்க் சாக்லேட் வாங்கி அவள் அருகே வைத்து விட்டுச் சென்று விடுவான். எப்படியாவது அவளுக்கு தினமும் தரிசனம் கொடுத்து விடுவான். அது போக தினமும் போனில் பேசினான். ஆனால் முன்பு போல அவளிடம் அதிக நெருக்கம் காட்ட வில்லை. கொஞ்சம் விலகியே இருந்தான்.
தான் அவளிடம் காட்டிய உணர்வு அவளுக்கு உணர்வுகளை தூண்டுவதற்கு பதில் காச்சலை கொடுத்திருக்கிறது என்றால் அது அவளுக்கு பிடிக்க வில்லை என்று தானே அர்த்தம்? அதனால் இனி அவளுக்கு பிடிக்காததை செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
‘கண்ணம்மா’ என்று உருகுவதற்கு கூட அவனுக்கு பயமாக இருந்தது. அவளைக் கண்டால் அவளை நினைத்தால் தோன்றும் அனைத்து உணர்வுகளையும் தனக்குள் அடக்கினான். ஏனோ அவள் மீதிருந்த மொத்த காதலையும் அவனுக்குள்ளே அடக்குவது அவ்வளவு கஷ்டமாக இருந்தது அவனுக்கு.
அவன் விலகி இருப்பதை ரதியும் உணர்ந்து தான் இருந்தாள். அது அவளுக்கு மனபாரத்தை தான் கொடுத்தது.
“எங்க அக்கா உன் ஆள் இப்ப அடிக்கடி உன்னைப் பாக்க வரது இல்லை? உன்னை விட்டுட்டு வேற அக்காவை கரெக்ட் பண்ணிட்டாரா மச்சான்?”, என்று கேட்டாள் திவ்யா. அவள் விளையாட்டுக்கு தான் கேட்டாள். ஆனால் ரதி கண்கள் கலங்கி விட்டத்து.
“அக்கா அழுறியா நான் சும்மா தான் சொன்னேன்”
“எனக்கு கஷ்டமா இருக்கு திவி”
“என்ன ஆச்சு? மச்சான் ஏதும் சொன்னாங்களா? உங்களுக்குள்ள எதுவும் சண்டையா?”
“அவர் என் கிட்ட சரியாவே பேசுறது இல்லை திவி. விலகி விலகி போறார். ஃபோன் கூட ரொம்ப பேசுறது இல்லை. தூங்கு டான்னு சொல்லிட்டு போறாங்க. எனக்கு கஷ்டமா இருக்கு”
“என்ன உளறுற? மச்சான் வேற யார் கிட்டயும் பேசுறாங்கன்னு நினைக்கிறியா?”
“இல்லை. அவங்களை நான் எப்பவும் சந்தேகப் பட மாட்டேன். ஆனா அவங்க என் மேல கோபமா இருக்காங்க போல?”
“வாய்ப்பே இல்லை. மச்சானாவது உன் மேல கோப படுறதாவது? அவங்க உன்னைப் பாக்குற பார்வையே வேற மாதிரி டி. உன்னைப் பாக்கும் போது அவங்க கண்ணுல காதல் பொங்கும். முகம் அப்படியே பிரகாசிக்கும். நீ கோப பட்டு பேசாம இருக்காங்கன்னு சொல்ற? முதல்ல உன் மேல எதுக்கு கோபம்? நீ என்ன பண்ணினன்னு சொல்லு”
“அது… அன்னைக்கு..”, என்று முகம் சிவக்க அவள் உரைக்க “ஹேய் என்ன? என்ன நடந்துச்சு? ஆனா உன் கதையை கேக்குறதே ஒரு கிக்கா தான் அக்கா இருக்கு சொல்லு சொல்லு”, என்றாள்.
“அன்னைக்கு கிஸ் பண்ணாங்க டி. ஒரு செகண்ட் தான்”
“ஏய் சூப்பர்”, என்று சொன்னவள் மனதுக்குள் தன்னால் வந்தது சாணக்கியனின் நினைவு. நினையாதே மனமே என்று அடக்கியவள் அக்காவிடம் கவனம் செலுத்தினாள்.
“அப்புறம் நாலு நாள் பேசலையா? அது அவங்களுக்கு நான் கோபத்துல தான் பேசலைன்னு தோணிருக்கு போல? அதான் விலகிப் போறாங்க. அதும் கஷ்டமா இருக்கு திவி”
“அக்கா ஒண்ணு சொல்லவா?”
“ம்ம்”
“இப்ப சொல்றதை எப்பவும் நினைவு வச்சிக்கோ. உங்களுக்குள்ள என்ன வேணா நடக்கட்டும். இனியும் கூட ஏதாவது சண்டை கூட வரட்டும். ஆனா முதல்ல இப்படி அப்படின்னு குழப்பிட்டு இருக்குறதுக்கு நேரடியா அவங்க கிட்டயே கேட்டுரு. இல்லை நீ ஏதாவது நினைச்சாலும் அவங்க கிட்ட நீயே சொல்லிரு. இப்ப உன் மனசுல இருக்குற ஆசையையும் சொல்லிரு”
“ஆசையா? என்னன்னு சொல்ல?”
“அடேய் மாங்கா மடையா? நீ முத்தம் கொடுத்தது பிடிச்சிருந்தது. எனக்கு எந்த கோபமும் இல்லைன்னு.. இன்னும் எத்தனை முத்தம் வேணும்னாலும் கொடுன்னு சொல்லு”, என்று சொல்ல “ஐயோ சி”, என்று அழகாக வெட்கப் பட்டாள் ரதி.
“ஹா ஹா, சரி சரி கிளம்பலாமா?”, என்று கேட்டாள் திவ்யா.
“அவங்களை பாக்கணும் போல இருக்கு திவி”
“மச்சான்க்கு லேப் எக்ஸாம் நடக்குது. நாளைக்கு எக்ஸாம் வேற. இப்ப அங்க தான் இருப்பாங்க. வா பாத்துட்டு கிளம்பலாம்”, என்று சொல்ல இருவரும் அங்கே சென்றார்கள்.
திவ்யா கீழே நிற்க ரதி மேலே ஏறி ஜன்னல் வழியாக அமரைத் தேட அவன் ஏதோ ஆய்வு செய்து கொண்டிருந்தான் நண்பர்களுடன். நாளை யூனிவர்சிட்டி லேப் என்பதால் இன்று பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்கள்.
“அக்கா மச்சானை வெளிய கூப்பிடு”, என்று திவ்யா சொல்ல ரதி அவனை எப்படி அழைக்க என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளைப் பார்த்தாள் பிரியா. அவள் ஜன்னல் ஓரமாக தான் இருந்தாள்.
ரதியைப் பார்த்ததும் தன்னால் ஒரு எரிச்சல் வர சட்டென்று கையில் இருந்த திரவத்தை அவளை நோக்கி வீசினாள்.
“அக்கா”, என்று திவ்யா எதற்கோ அழைக்க அங்கிருந்து ரதி திரும்பியதால் அந்த அமிலம் ரதியின் இரண்டு விரலில் மட்டும் பட்டது.
“ஆ”, என்று அவள் கத்திய கத்தலில் மொத்த லேபும் பதறிய படி வெளிய வர “ஐயோ அக்கா”, என்று திவ்யாவும் அலறினாள்.
“எரியுது திவி”, என்று சொல்லும் போதே ரதி கண்கள் கலங்கி விட “ரதி என்ன மா ஆச்சு”, என்ற படி அங்கே வந்த அமர் அவள் கையைப் பார்க்க அதுவோ சிவந்து கொப்பளமாகி விட்டது.
“ஏய் வா டி ஆஸ்பத்திரிக்கு போகலாம்”, என்று அமர் அவளை அழைக்க “ஒரு நிமிஷம் இருங்க வரேன்”, என்று சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து ஓடிச் சென்று டிஸ்பென்சரியில் மருந்தை வாங்கிக் கொண்டு வந்து திவ்யாவிடம் கொடுத்தான் அரவிந்த். அதை அமர் ரதிக்கு போட்டு விட ஆரம்பித்தான்.
கை எல்லாம் சிராய்தது போல லேசாக தோள் சிதைந்து ரத்த கலரில் காயம் வெளியே தெரிந்தது.
“ரொம்ப வலிக்குதா டி?”, என்று கேட்டவனின் குரலில் காதல் கொட்டியது. “ம்ம்”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.
“கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல் போயிறலாம் டா”, என்றவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள அவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். ஏனோ அவன் அருகில் வலி கூட தூரம் போனது போல இருந்தது. அரவிந்த் மற்றவர்களை அங்கிருந்து ஏற்கனவே அனுப்பி இருந்தான். பிரியா மட்டும் நக்கலாக சிரித்த படி தெனாவெட்டாக நின்றாள்.
அமர் பிரியாவை அடிக்க போனான். அவளோ “இங்க பாரு அமர். இந்த கை வைக்கிற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத. இவ இங்க வந்தா இப்படி எல்லாம் தான் ஆகும். நான் வேணும்னு பண்ணலை. நம்ம லேப்க்கு இவ எதுக்கு வரணும்?”, என்று கேட்டாள்.
“திவ்யா இவ மேல போய் ஒரு கம்பலைண்ட் கொடு”, என்றான் அமர்.
அவள் “சரி மச்சான்”, என்று சொல்லும் போதே “வேண்டாம், இதை இப்படியே விடுங்க. அவ சொன்ன மாதிரி நாம கம்பலைண்ட் கொடுத்தா அவ என்ன சொல்லுவா தெரியுமா? தப்பா எதுவும் பேசுவா. நாங்க எதுக்கு இங்க வந்தோம்ன்னு கேப்பா. அதனால வேண்டாம்”, என்று ரதி சொல்ல சரி என்று விட்டார்கள்.
“சரி இப்ப ஹாஸ்பிட்டல் போகலாம்”, என்றான் அமர்.
அவர்களும் தலை அசைக்க “உன்னோட மாமாவையும் கூப்பிடு திவி”, என்றான் அமர். அரவிந்த் அவனை வியந்து பார்த்தாலும் எதுவும் செல்லாமல் அவர்களுடன் சென்றான்.
