Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

43. தனுஜா செந்தில்குமார் - மண் கொடுத்த மாணிக்கம்

மண் கொடுத்த மாணிக்கம் – 5

அத்தியாயம் – 5
அன்றைய பேச்சுக்கு பிறகு லட்சுமணன் பேச்சை யாருமே எடுக்கவில்லை.இன்று மீனாளுக்கு அரியகுடியில் இருந்து மாசாலா,மற்றும் வத்தல் கொடுக்கும் நாள்.மாதம் இரு முறை என்ற கண்ணிக்கில் ஒரு தேதி தேர்வு செய்து சரியாக அந்நேரம் சரக்கை காரைக்குடியில் சேர்த்து விடுவார்கள் வள்ளியப்பனும்,கண்ணாத்தாளும்.


Advertisement

அதற்காக முன்  தினமே சரக்கை எடுத்து வைத்து விட்டாள் கண்ணாத்தாள்.அன்று முடிவு செய்தது போல் தான் மட்டுமே கிளம்பி செல்லலாம் என்று இருந்தார் வள்ளியப்பன்.
விடியலுக்கே பெட்டியை கட்டி கிளம்பி கொண்டிருந்தவரை தடுத்தது முத்துராமனின் வருகை.முத்துராமன் காரைக்குடியில் மீனாள் உணவகத்தில் வேலை செய்யும் ஒரு வேலையாள்.அந்த உணவகத்தில் கொஞ்சம் மேல் அதிகாரி போல் என்று சொல்லலாம்.

Advertisement

Advertisement

“வாக முத்துராமா! என்ன விடியலுக்கே வந்திருக்கீக ? யாருக்கும் எதுவும்?” அவனது பழக்கமில்லாத வரவு அதுவும் விடியலில் என்றதும் கொஞ்சம் பதறி தான் போனார் வள்ளியப்பன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லங்க அண்ணே தம்பி உங்களைப் பார்த்து விவரம் சொல்ல சொன்னாக ” இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே கண்ணாத்தாளும் வந்து விட்டாள்.

Advertisement

“வாக ஆச்சி! நல்ல இருக்கீகளா” என்ற முத்துராமனை பார்த்துக் கை கூப்பி.
“வாக அண்ணே!”
“தம்பி என்ன சொன்னாக”வள்ளியப்பன் நேரடியாகப் பேச்சுக்கு வந்தார்.
“அவரே இங்கன வந்து சரக்கை எடுத்துட்டுப் போறாராம் வண்டியிலதேன் வாரேன் மாமாவை அலைச்சல் காட்டா வேணாம்னு சொன்னாக”
“சரி! என்ற வள்ளியப்பன் கண்ணாத்தாளை பார்க்க அவளும் கலக்கமாகக் கணவனைப் பார்த்து வைத்தாள்.மீனாவின் மௌனமும் இப்போது அவர்களது வரவை தடை செய்யுமாறு இருந்த செயலும் என்னவோ? ஏதோவென்று? மனதை குடைந்தது.
“ஆச்சி!”கண்ணாத்தாளை அழைக்க
“சொல்லுக”
“குடிக்கக் கொண்டு வாக” முத்துராமனை கண் காட்டி சொல்ல உடனே அடுக்கலைக்குள் நுழைந்து கொண்டாள்.
“இல்ல அண்ணே எனக்கு வங்கி போற சோலி கிடக்கு தம்பி வேற இரண்டு, மூணு வேலை சொல்லி இருக்கு”
“அதுக்கு என்ன ரெண்டே நிமிஷம்” என்ற வள்ளியப்பன் பேச்சுக்குச் செவி சாய்த்து அமர்ந்து கொண்டவர். அதன் பின் நிதானமாகப் பேசி விட்டு தேநீர் அருந்தி விட்டு,விடைபெற்று செல்ல அதுவரை அமைதியாக இருந்த கண்ணாத்தாள்.
“சாலாப்பா!” மனைவியின் அழைப்பிலே அவளது எண்ணம் கண்டு கொண்ட வள்ளியப்பன்.
“வரட்டும் கண்ணு என்னான்னு பேசுவோம் அதுக்குள் எதையும் யோசிக்க வேணாம்” என்றவரை கலக்கமாகப் பார்த்தவள்.
“பயமா இருக்கு சாலாப்பா!” தங்களை எதுவும் தவறாக மீனாள் எண்ணி இருப்பாளோ? என்ற எண்ணமே கண்ணாத்தாளை கொஞ்சம் படுத்தித் தான் வைத்தது.இதில் இந்தச் செயல் வேறு இன்னும் பயத்தைக் கொடுத்தது.
“நான் பார்த்துக்குவேன் பயப்படாத கண்ணு பேச்சு என்னைத் தாண்டி தேன் உங்களைத் தொடும்”
“அப்போ உங்களைத் தொடும் தானே” என்றவளை புன்னகையுடன் பார்த்து விட்டு வெளியில் செல்ல தளர்ந்து நின்றாள் கண்ணாத்தாள். சாலா தூக்கத்தில் இருந்ததனால் இவர்கள் பேச்சுக்கள் எதுவும் தெரியவில்லை, லட்சுவின் வரவையும் அவள் அறியவில்லை.
இங்கு விடியலுக்கே எழுந்து தாயாராகிக் கொண்டு இருந்தான் லட்சுமணன்.அவன் வாசலுக்கு வந்து வண்டி எடுக்கும் நேரம் மீனா அழைக்க.விரைந்து தாயிடம் வந்து அமர்ந்தவன்,”சொல்லுக ஆத்தா?” மகனையே ஒரு நோக்கி இமைக்காமல் பார்த்தவள்..
“நீக விருப்ப பட்டுதேன் சாலாவை கட்ட போறீகளா?”இன்னும் அவனது முடிவை நம்ப முடியாமல் மீனாள் கேட்க.
“ஆமா ஆத்தா புடிச்சுத்தேன் கட்ட போறேன்” என்றவன் பதிலில் அவருக்கு அத்தனை உறுதியாக முடிவு கொள்ள முடியவில்லை அதனை உணர்ந்தவன் போல.
“சில செய்தியை பேசி புரிய வைக்க முடியாது ஆத்தா பழக்கத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிடலாம்” என்றவன் நேரமாவதை உணர்ந்து.
“இப்போ கிளம்பி வச்சா தான் வேலையை முடிச்சிட்டு மாமா வூட்டுக்கு போக முடியும் ஆத்தா”
“சரி பொழுதோட போயிட்டு நல்ல செய்தி கொண்டுவாக” என்றவள் அவன் கன்னம் வருடி முத்தி வைக்க சிறு புன்னகையுடன் விடைபெற்று அரியக்குடியை நோக்கி பயணம் செய்தான் லட்சுமணன்.
இதற்கிடையில் சோமுவின் தந்தை அதாவது லட்சுமணனின் தந்தையின் தந்தை கோபமாக அமர்ந்திருந்தார். அன்று மகன் செய்தது பிழை என்பதால் பேரனை தங்களுடன் வைத்துக் கொள்ள அப்படித் தான் போராடினார், ஆனால் மீனாள் ஒத்துழைக்கவில்லை பிடியாக மறுத்துவிட்டாள்.இன்று தனது மகளின் மகளை மறுத்து நிற்கவும் அண்ணாமலை செட்டியாருக்கு தாங்க முடியவில்லை.
“உண்ணா?” தவிப்பாக தனது மனைவியை அழைத்தார்.
“சொல்லுக”
“பச்! நீக மருமக பொண்ணு கிட்ட பேசுக” என்றதும் கணவனை ஏற்றிட்டு பார்த்த உண்ணா ஆச்சி.
“எந்த முகத்தை வச்சு அங்கன போயி பேச சொல்றீக?” சிறு காட்டமாக கேட்க
அதே காட்டத்தை தேக்கி , “அப்போ போகட்டும் விடச் சொல்லுறீகளா?”
“எண்ணம் இல்லாதவங்கள ஒண்ணுமே செய்ய முடியாதுக. உங்க மகனை கொண்டு இந்த உறவும் வேணாம்னு போயி, தனுச்சு நின்னு சாதிச்சு காட்டிட்டாக உங்க மருமக பொண்ணு இதுக்கே உறவெல்லாம் வாய் ஊறி போயி நிக்குது.
உங்க ஐயா ஜாடை வச்சு செக்க செவேலுன்னு இருக்காகளாம் சின்ன அப்புச்சி.நம்ம செனத்துல உங்க ஐயாவுக்கு அப்புறம் நிறம் கொண்டது உங்க பேரந்தேன் .மருத்துவ படிப்பு படிச்ச மவுசே இல்லாம அத்தினி வேலை செய்றாகளாம்” பெரும் ஏக்கம் அவரது பேச்சில் .ஒரே மகனின் மகன் அல்லவா அவனைப் பற்றிச் சொல்ல, சொல்ல காண முடியாத தவிப்பில் தவித்து நின்றார் உண்ணாமலை ஆச்சி.
“உங்க மகனை வர சொல்லி செய்தி குடுக”
“அவுக வந்து என்ன செய்யப் போறாக” என்றவரை அண்ணாமலை ஆழ்ந்து பார்க்க. ஒரு பெருமூச்சுடன் அவர் சொன்னதைச் செய்யச் சென்று விட்டார் உண்ணா ஆச்சி.
மகன் செய்த தவறுக்கு இந்நொடி வரை சரியான காரணம், காரியம் தெரியவில்லை.ஒரு பெண்ணுக்கு செய்த துரோகம் அந்தத் தலைமுறையைப் பாதிக்கும் என்பதற்குச் சாட்சியாக இப்போது சோமு நிக்க.அதனை சரி செய்யும் பொருட்டு பேரனை கொண்டு வாய்ப்பு தேடினார் போலும் அண்ணாமலை. அது சரி வாய்ப்பு அவர் தேடி நின்றாலும் காலம் தானே அதனை கொடுக்க வேண்டும்.
இங்கு அரியக்குடி வந்து சேர்ந்த லட்சுமணன்..
எந்த வித தயக்கமும் இல்லாமல் வெகு உரிமையாக வள்ளியப்பனை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான், “மாமா!.. அயித்த!…” என்றவன் குரலில் கை வேலையை விட்டு செவியை கூர்ந்து நின்றாள் சாலா..
“லட்சுவா?” கேள்வியாக முனகி மீண்டும் வேலையைத் தொடர.வள்ளியப்பன் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூடத்துக்கு விரைந்தார்.
“வா லட்சு!”
“எப்படி இருக்கீக?”
“நல்ல இருக்கேன் லட்சு” இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே கண்ணாத்தாள் வந்தாள்.
“வாக” என்றதோடு அவர் தூணோடு துணை கொள்ள. அவரது செல்ல அழைப்பை தவிர்த்த விதமும் அதற்குப் பின்னிருக்கும் காரணமும் அறிந்து குறும்பாகச் சிரித்துக் கொண்டான் லட்சுமணன்.மறந்தும் அவன் சாலாவை பார்க்கவில்லை.அவளும் அவனைப் பார்க்கவில்லை. சாலா மரியாதையின் பொருட்டுக் கூட அவனை வரவேற்கவில்லை.
“அயித்த இந்தாக என்றவன் கையில் பூவும், சாலாவுக்கு மிகவும் பிடித்த மனக்கோலம் என்ற இனிப்பு வகை இருக்க ஒருமுறை லட்சுவை பார்த்தவள் பெரும் தயக்கம் சூழ அதனை வாங்கிக் கொண்டாள்.
அதன் பின் சிறு மௌனம் கொண்டு, பேச வேண்டுமே எப்படித் தொடங்க என்று தடுமாறிய வள்ளியப்பன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “முத்துராமன் வந்தாக நீக வராதா செய்தி சொன்னாக”
“ஆமா மாமா உங்க கிட்ட பேச வேண்டித்தேன் நான் வர மாதிரி தோது பண்ணிக்கிட்டேன்”
“சொல்லுக” என்றதும் தான் தாமதம் சாரமாக வந்தது கேள்விகள்.
“நான் யாரு உங்களுக்கு?” தீடீரென இப்படிக் கேட்கவும் ஒரு நொடி தடுமாறிய வள்ளியப்பன்.
“உறவுக்குக் கொஞ்சம் தொலைவு இருந்தாலும் நான் மாமன் முறை”
“அது என்ன தொலைவு? என்றவன் அவனுடைய அதே மயக்கும் புன்னகை கொண்டு நீக மாமா இல்ல எனக்கு ஐயா!” என்றதும் வள்ளியப்பனுக்கு அப்படி ஓர் உணர்வு பேரலை.
“அது என்ன விலகி வச்சு பாக்குறீக அப்போ நான் இந்த வூட்டு பிள்ளை இல்லையா?”வள்ளியப்பனிடம் பேச்சிருந்தாலும் கண்கள் கண்ணாத்தாளிடம் தான் இருந்தது.
“என்ன தம்பி அப்படி எண்ணி வச்சா நான் உரிமையா வந்திருப்பேனா? இல்ல கல்யாணத்துக்கு உங்கள தான் கேட்டுருப்பேனா?”
“அப்புறம் என்ன மாமா? தயங்கி பேசுறீக விலகி போறீக. உங்களுக்கு இருந்த எண்ணம் எனக்கும் இருந்துச்சுப் படிப்பு வேலைன்னு ஊனி வச்சு பிறகு பேசிக்கலாம்னு தள்ளி நின்னேன்” அதுவரை தலையைக் குனிந்து கொண்டு நின்ற கண்ணாத்தாள் லட்சுமணன் பேச்சில் அதிர்ந்து கணவனைப் பார்க்க.
அவருக்கு மருமகனை கொண்டு அத்தனை கர்வம் போலும்.அவரும் அந்நேரம் மனைவியைப் பார்த்துப் புருவம் உயர்த்தி வைத்தார்.அவரது செயலில் கண்ணாத்தாள் பார்வையால் கண்டிப்பு காட்டி கண் அசைக்க மீண்டும் மருமகனிடம் பார்வையை திருப்பி கொண்டார்.
“எல்லாப் பெத்தவங்க மாதிரி எனக்கும் கொஞ்சம் சுயநலம். நான் பார்த்து வளர்ந்த பையன்.என் கைக்குள்ள இருந்த பையன் அந்த உரிமையில தான் கேட்டுட்டேன்.ஒரு எதிர்பார்ப்புக்கு பின்னுக்கு நிற்கும் ஏற்ற, இறக்கம், எதிர்ப்புகள் அப்போ புரியல லட்சு.ஆச்சிக்கும் சாலாவுக்கும் கூட என் எண்ணம் தெரியாது.மீனா சங்கடம் பட்டாகளா? ஏன் கேக்குறேனா நான் எண்ணத்தை சொன்ன நொடி திகைச்சு போயிட்டாக அதேன்”
முழுமையாக வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் வேண்டியவை மட்டுமே விளக்கம் வைத்து லட்சுமணன் முகம் பார்க்க அப்போதும் அவனிடம் அதே புன்னகை தான்.
‘இந்த சிரிப்பும் அமைதியுந்தேன் என்ன சுயநலமா யோசிக்க வைக்குது.உங்கள விடவே கூடாதான்னு தோணுது’ மனதுக்குள் மருமகனை எண்ணி மருகி தான் நின்றார் வள்ளியப்பன்.
“முகத்துக்கு முகம் உடைச்சு பேசாத வரை அதுவா? இதுவான்னு? யோசனை வரத்தான் மாமா செய்யும். இன்னொரு நாள் நம்ப தெளிவா பேசலாம் இப்போ கொஞ்சமா பேசலாம்” அதுவரை இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சாலா செய்யும் வேலையை விட்டுக் கதவருகில் வந்து நின்று கொண்டாள்.
“ஆத்தா அன்னைக்குக் கொஞ்சம் பதறி வச்சுட்டாக. என்ன பேச? என்ன சொல்லன்னு? தெரியல அவுங்களுக்கு, வேற ஒன்னுமில்லை.அதுவும் போக சாலாவை கட்டி வைக்கச் சொல்லி நான் கேட்பேன்னு அவுக கனவுல கூட எண்ணி வைக்கல அந்த அதிர்வு தேன்” என்று பல் தெரிய சிரிக்க.
கண்ணாத்தாள்,”தம்புடு” நெகிழ்ந்து அழைக்க.
“ஆஹா! இப்போதான் தெரியுதா அயித்த உங்க தம்புடுவ? விலகி ஏன் போறீக எல்லாரையும் விட உங்களுக்குத்தேன் உரிமை அதிகம்.இந்த பேச்சை எண்ணி நிறையக் கேள்வி பிறக்கும் அதுக்கெல்லாம் என்கிட்ட விளக்கம் இல்லை அத்தினிக்கும் பதில் நடப்புல பார்த்துக்க வேண்டியதுதேன்” லட்சுமணன் ஒரே போடாகப் போட.
“இது என்ன?” என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்து வைத்தனர் வள்ளியப்பனும், கண்ணாத்தாளும்.
“சரி மாமா பேச்சுக்கு வரேன் ஆத்தா முறையா பேச சொன்னாக நான் பேசிட்டேன் நாள் தோது பட நீகளும் அவுக கிட்ட வந்து பேசிடுக” என்றவன் அடுக்கு பேச்சிலும், கோர்வை கொண்ட திட்டத்திலும் சாலாவுக்கு அத்தனை கோபம் வந்தது.
இருவரும் அமைதியாக இருப்பதைப் பார்த்தவன் எழுந்து கொண்டு,” தயக்கம் ஹ்ம்ம்!.. என்னைக் கொண்டு நம்பிக்கையே இல்லனு உங்க அமைதியே சொல்லுது மாமா பார்ப்போம்” என்றவன் பேச்சில் இருவரும் பதறி அவன் அருகில் வந்தனர்.
“என்ன லட்சு?”
“பேசவே இல்லாம இருந்தா நான் என்னான்னு எண்ணி வைக்கிறது?”
“அப்படியில்ல லட்சு நான் உன்னைத்தேன் நம்பிருக்கேன் உன்னை மட்டுந்தேன்” என்றவர் அவனது கையை இறுக்கப் பற்றிக் கொள்ள. இன்னும் கண்ணாத்தாளின் முகம் தெளியாமல் இருக்க அதனைக் கண்டு கொண்டான் லட்சுமணன்.
“சரி மாமா கிளம்புறேன்”
“என்ன தம்புடு சமையல் ஆச்சு உங்களுக்குப் பிடிச்ச மோர் குழம்பு அதுவும் வெண்டைக்காய் போட்டு” என்றதும் பல் தெரிய சிரிப்பு சிரித்தவன்.எந்த வித மிஞ்சலும் இல்லாமல் சரியென்று தலையை ஆட்டி கொண்டு சமர்த்தாக அமர்ந்து கொண்டான்.
அதன் பின் வந்த நிமிடங்களை எரிச்சலுடன் பார்த்து கொண்டிருந்தாள் சாலா.கண்ணாத்தாளின் பரபரப்பும், வள்ளியப்பனின் கவனிப்பும் அவளைக் கொதி நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
அதுவும் போக லட்சுமணன் திருமணம் யாரை செய்து கொள்ளப் போகிறான்? இதில் முடிவு கொள்ள வேண்டிய முக்கிய ஆளே அவள் தான்,ஆனால் லட்சு அவளைத் தவிர மற்றவர்களிடம் திருமணப் பேச்சை எடுப்பது, அதற்கு விளக்கம் வைப்பது, தன்னை விருப்பம் கொண்டு கேட்பது, என்று ஒரு தினுசாகச் செயல்பட அவளுக்கு எப்படி இருக்குமாம்.
வயிறு நிறைப்பி விடைபெற நின்றவன், “வரேன் மாமா! வரேன் அயித்த!” என்றவன் சரக்கு பைகளை எடுக்க போக.அவனுக்கு முன்னாள் தூக்கி கொண்டு சென்று விட்டனர் இருவரும்.அவர்கள் சென்றதும் கோபம் எரிச்சல் என்று அத்தனையும் தன்னுள் அடக்கி அடக்கமான பெண்ணாக நின்று இருந்தவளை நெருங்கிய லட்சு பக்கவாட்டுக் கன்னத்தைக் காட்ட
ஓர் நொடியில் அரிவை அரண்டு பின்னே சென்றது. அவளது மிரண்ட தோற்றத்தை கண்ட லட்சுமணன், “பயந்து வைக்காதீக” என்றவன் மீண்டும் பக்கவாட்டாகத் திரும்பி கன்னத்தை அவள் அருகில் கொண்டு சென்று.
“இப்போ கிள்ளி  வைக சாலா ஆச்சி இந்த லட்சு செட்டியார் கன்னம் என்ன, செட்டியாரே உங்களுக்குதேன் வச்சுக்கோக” பெரிய மனதாக சொன்னவனை பயமாக பார்த்து வைத்தது அரிவை.
“என்ன ஒரே வருந்ததேன் அப்போ உங்க ஆச்சி சுட்ட இட்டிலி கணக்கா என் கன்னம் இருந்துச்சு. இப்போ உங்க அயித்த சுடுற தோசை கணக்கா ஆகி போச்சு” போலியாக வருந்தியவன் மீண்டும் அவளை நெருங்க பதறி உள்ளே ஓடி விட்டாள் சாலா.அவளது பயத்தில் அப்படி ஒரு சிரிப்பு சிரித்தவன் வள்ளியப்பன்,கண்ணாத்தாள் உள்ளே வருவதற்குள் வெளியில் சென்று விட்டான்.
அதன் பின் முறையாக விடைபெற்று சில பல ரகசிய மயக்கத்தைத் தன்னுள் நிரப்பிக் கொண்டு காரைக்குடி நோக்கி பயனபட்டான் லட்சுமணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!