Skip to content
Post Views: 2,316
அத்தியாயம் – 7
ஆயிற்று மீனாள் அரியக்குடி வந்து ஆறு நாட்கள் கடந்து விட்டது.இந்த ஆறு நாட்களில் மீனாள்,வள்ளியப்பன்,கண்ணாத்தாள் மூவரும் தங்கள் பிள்ளைகளைப் பற்றியோ, இல்லை திருமணத்தைப் பற்றியோ எதுவும் பேசி கொள்ளவில்லை என்பது பெரும் வியப்பு தான்.மீனாள் தொடங்கட்டும் சங்கடம் வேணாம் என்று வள்ளியப்பனும்.
Advertisement
நான் எப்படி இதைத் தொடங்க என்று தயங்கி மீனாளும் திருமணப் பேச்சை தொடங்கவில்லை.கண்ணாத்தாளுக்கு உள்ளுக்குள் தவிப்பு இருந்தாலும் கணவனின் மௌனம் கொண்டு அவளும் அமைதி காத்தாள்.பெரியவர்களைக் கொண்டே சாலாவும் எதையும் காட்டி கொள்ளாமல் முன்பு போலவே மீனாளை சுற்றி வந்தால்.
சலுகை தரும் உறவுகள் மீது குழந்தைகள் அதிகம் பிரியம் கொள்ளும்.அது பாட்டி ,தாத்தா,அத்தை,பக்கத்துக்கு வீடு என்று யாராக இருந்தாலும் சரி.
Advertisement
Advertisement
அது போல் தான் மென்மையைக் கொண்டு கண்ணாத்தாளிடம் லட்சு ஒட்டி கொள்ள.சரவெடி சாலாவை தாங்கி நின்றாள் மீனாள்.இது ஒருவகையான பிள்ளை காவியம்.ஆண் பிள்ளை இல்லாத வீட்டில் லட்சு அரசனாகத் தெரிய,பெண் பிள்ளை இல்லா வீட்டில் சாலா அரசியாக நின்றதே இந்த அன்புக்குக் காரணம்.
இதோ லட்சு வந்து விட்டான்.இன்னும் இரு தினங்கள் இங்கு தங்கி இருந்து மாமன் வீட்டில் சீராடி விட்டு தாய்யை அழைத்துச் செல்ல வந்திருந்தான்.
Advertisement
சிவப்பு நிறம் முண்டா பனியன் அணிந்து தாயின் கால்களை மடியில் தாங்கி எண்ணெய் பூசி கொண்டிருந்தவனை வைத்துக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள் சாலா.
“ப்பா! இத்தினி நிறம் நானும் தேங்காய் நாரை வச்சுத் தேய்ச்சுத்தேன் எடுக்குறேன் ஒன்னுத்துக்கும் ஆக மாட்டேங்குது” என்றவள் தன் பார்த்து மூடி திறந்தாள்.இப்போது இது தான் முக்கியம் என்பது போல் அத்தனை கவலை அவளுக்கு.
முடி கொண்ட இடங்கள் மட்டுமே கருமை பூசி நிற்க, மீதம் எல்லாம் வெள்ளை நிறத்தில் அடர் சிவப்பு கலந்த வண்ணத்தில் மின்ன சிந்தாமல் சிதறாமல் அரிவையை அள்ளி கொண்டு தான் போனான் லட்சுமணன்.
அவனையே கண்கள் மேய எதார்த்தமாக நிமிர்ந்தவன் பார்த்தார்த்தமாகச் சாலாவை பார்த்து வைக்க.பதறி தலையைக் குனிந்து கொண்டாள் சாலா.ஆச்சியின் கள்ளம் கண்டு கொண்ட செட்டிக்கு அத்தனை குதூகலம்.
இருவரும் கூடி திரிந்த நாட்களில், ஒரு நாளும் கள்ளம் வைத்துப் பார்த்தது இல்லை.கண்ணியம் கொண்டே வளர்ந்து விட்டு. இப்போது கள்ளம் செய்ய வேர்த்து தான் வடிந்தது அரிவைக்கு.
இணையின் பார்வை ஈர்க்க சாலாவை குறும்பு செய்ய எண்ணினான் போலும் லட்சுமணன்,”மாமா!”
“சொல்லுக?”
“ஆத்தா கிட்ட சொன்னேனே இடம் போயி பார்த்தீகளா?”
“நீக வராம நான் அங்கன போயி என்னத்த செய்ய? வாழ போறது நீக தானே உங்க விருப்பம் எண்ணி பார்த்தா தான் சரிவரும்”
“சரித்தேன், ஆனா நான் மட்டும் அங்கன இருக்கப் போறதில்லை. நம்ப எல்லாரும் கல்யாணம் பண்ணி அங்கன போறதா தான் முடிவு” தீர்க்கமாகச் சொன்னவனை மீனா புன்சிரிப்புடன் பார்க்க. சாலா அதிர்ந்து லட்சுமணனை பார்த்தாள் வள்ளி, கண்ணு இருவருக்கும் மகளது நிலை தான் தடுமாறி நின்றார்கள்.
“உரிமை இருக்கப் போயி பாக்குறதுல என்ன தப்பு? உரிமை கொண்டவுக நல்லாவே பார்க்கலாம் மாமா என்றவன் சட்டென சாலாவிடம் திரும்பி என்ன சாலா சொல்லுறது சரிதானே?” என்று வேறு கேட்க பெரும் பதட்டமாகச் சுற்றி பார்த்து முழித்தாள் சாலா.
“என்ன லட்சு?”
“ஆத்தா கல்யாண பேச்சு என்ன ஆச்சு?” அதுவரை விளையாட்டாகப் பேசியவன் தோணி கொஞ்சம் தீவிரமாக மாறியது.
“அண்ணே! தொடங்குனா தொடங்கிப் புடலாம்னு இருந்தேன் பேசவே பயந்து வந்துச்சு” என்றதும் வள்ளியப்பனும், கண்ணாத்தாளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
கண்ணாத்தாள்,” மீனா நாங்க உங்கிட்ட பேச சங்கட பட்டுக்கிட்டுதேன் பேச மருகி நின்னோம்”
“என்ன மதனி நீக? சாலா மாதிரி புள்ள கிடைக்கக் கசக்குமா என்ன?, ஆனா உங்க எண்ணம் என்னான்னு தெரியல”
“எங்களுக்கும் லட்சு லட்டு மாதிரி கசக்குமா மீனா” பெரியவர்கள் பேசி கொள்வதைப் பார்த்துப் பொறுமை இழந்த லட்சுமணன்.
“எப்போதேன் முடிவு பண்ணுவீக? எத்தினி நாள் நான் காத்து கிடக்க? இரண்டு பக்கமும் உடைச்சு பேசுவீக தானே அத்தனை வேலையை தள்ளி வச்சுட்டு இவுகள இங்கன விட்டுட்டு போனேன். இந்த ஆறு நாள், மூணு பெரும் என்ன செஞ்சீக?
ஊறுகாய், மாசாலான்னு பேசிகிட்டுக் கிடந்தீகளா? வெட்கத்தை விட்டு விருப்பம் சொல்லி எத்தினி நாள் கடந்து போச்சு?” என்றவன் கோபத்தை உண்மையில் யாருமே எதிர்பார்க்கவில்லை. இது போல் எல்லாம் அவன் பேசும் ரகமில்லை.
லட்சுமணன் கோபமாக இருக்கிறான் என்றால் அதற்குப் பின் வலுவான காரணம் கண்டிப்பாக இருக்கும்.ஏனென்றால் அவன் ஒரு சூழலை வெகு அமைதியாக நிதானமாகக் கடப்பவன், அத்தனை லேசில் கோபத்தை வெளி காட்ட மாட்டான்.
இதனை மீனாள் அறிவாள்,ஆனால் இவர்கள்? வள்ளியப்பன் மகனை தப்பாக எண்ணி விடுவானோ என்று பயந்து பார்க்க.அவரோ சிரிப்பை அடக்கப் போராடி கொண்டிருந்தார்.
லட்சுமணனின் இந்தப் பரிமாணம் அவர் முன்பே அறிவாரே.அவனது அமைதிக்குப் பின் பெரும் பொக்கிஷமாக அவன் குணம் உள்ளது.பொறுப்பை முன் நிறுத்தி அவன் அமைதியை பூசி கொள்ள.வெளியில் தெரியா சில குணம் புதைந்து நின்றது போலும்.
“மாமா என்ன அமைதியா கிடகீக? உங்க மகள தாறீர்களா? இல்லையா?” என்றதும் மீனாள் பதறிக் கொண்டு எழுந்து நிற்க.எங்கே எழுந்த வேகத்தில் தடுமாறி விழுந்து விடுவாரோ என்று சாலா ஓடி வந்து அவளைத் தாங்கி கொண்டாள்.
அதனைக் கண்டவன்,” என்ன ஆத்தா?” என்று மீனாளிடம் விரைய.
“என்ன லட்சு? குரல் உசத்தி வைக்கிறீக” கண்டிப்புடன் கேட்ட தாய்யை மறுபுறம் தாங்கி கொண்டே.
“எனக்கு உரிமை இருக்கு கேக்குறேன் என்றவன் கை பிடித்து மீனாவை அமர வைத்துக் கொண்டே வள்ளியப்பனை பார்த்து அப்படித்தானே மாமா? உரிமை இருக்குல்ல?”
“உங்களுக்கு இல்லாத உரிமையா?” நல்ல தாராளமாகப் பல்லை காட்டியவரை என்ன செய்தால் தகும்” என்று தான் சாலா முறைத்து வைத்தாள்.கண்ணத்தாளுக்கு இந்த விளையாட்டு பேச்சும்,வெகு உரிமையும் கண்ணுக்கு தெரியவில்லை.
எங்கே பேச்சு முத்தி போயி உறவை பிளவு செய்து விடுமோ என்ற எண்ணம் தான் இன்னும் இருந்தது.பேரிளம் பெண் வெகு நேர்மை போலும்.மகளைத் தாண்டி தோழி போல் இருந்த மீனாவை எண்ணி வைத்தது அவரது மனம்.
“அண்ணே!” இன்னும் தயக்கம் காட்டிய மீனாளை பார்த்த வள்ளியப்பன்.
“மீனா இப்போ நேருக்கு நேர் கேக்குறேன் லட்சுக்கு என் புள்ளையைக் கொடுக்கத் தவம் கிடக்கேன் நீ என்ன சொல்லுற?”
“இது போதும் அண்ணே ஆகுற காரியம் பார்ப்போம்”
“என்கிட்ட இருக்க இருப்பைக் கொண்டு நிறைக்கச் செஞ்சுப்புடுறேன் உங்களுக்குனு ஆசை இருக்கும் அதைச் சொல்லுக என் சக்திக்கு வசப்பட்டா அதையும் செஞ்சுப்புடுறேன் “தனது நிலையை வெளிப்படையாக சொல்லி வைத்தார் வள்ளியப்பன்.
“என்ன பேச்சு இது அண்ணே? நீக போட்ட உயிர் பிச்சையில நிக்கிறேன்.அன்னைக்குக் காரைக்குடி கொப்புடையம்மன் கோவில்ல நீக பார்த்து வைக்காட்டி எந்த ஆத்துலையோ! எந்தக் குளத்துலையோ! கிடந்திருப்பேன்” என்றதும் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
எதோ இன்று நடந்தது போலக் கண்ணாத்தாள் பதறிக் கொண்டு மீனாவின் கையைப் பற்றி,”என்ன சொல்றீக?”
“ஆமா மதனி அன்னைக்கு பூச்சி மருந்து வாங்கி வச்சுக்கிட்டுதேன் கோவில் உள்ளுக்கு அழுதுகிட்டு கிடந்தேன் இந்த பைய சோறு தண்ணி இல்லாம சோர்ந்து போயி மடியில சுருண்டு கிட்டான். தண்ணில மருந்து கலந்து வச்சுக்கிட்டுக் கிடந்தேன். அதை அண்ணே பார்த்துப்புட்டு ஏசித்தேன் என்னைக் கூட்டிட்டு வந்தாக.
ஏன் வாழ்க்கை எல்லாம் என்ன வாழ்க்கை? சொல்லுக மதனி?. சிறுசுல இருந்து பார்த்த வளர்ந்த மாமா பையன் ஆசையா கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷம் வாழ்ந்த பிறப்பாடு முகம் சரியில்லை, மூக்கு சரியில்லை, அறிவில்ல, எனக்கு இணையில்லன்னு காரணமா அடக்கி வேற ஒரு பொண்ணு கூடப் போவான்னு நான் என்ன கனவா கண்டேன்.
அவுக அப்புச்சி, ஐயா எல்லாம் நியாயம் பேசி வைக்கிறேன்னு. என்னை அங்கனையே வாழ சொன்னாகா. எப்படி அந்த ஆளு அங்கன, அந்தப் புள்ளக் கூட இருக்கும் போது நான் எங்கன இருக்க முடியும், அவுகளுக்கு விளக்கு புடிக்காவா?
அவுக கரிசனையும் என்னைக் கொண்டு இல்ல.இதோ லட்சுவை கொண்டு அவுக அப்புச்சி அண்ணாமலை செட்டியார் ஜாடையுல இருக்கறதை கொண்டு சமாதானம் பேச வந்தாக.
அத்தினி சனம் சொல்லியும் பிடியா மறுத்து பொறந்த வூட்டை கூட வேணான்னு வந்தேன்.சண்டை சச்சரவு இல்லாம தீடீர்னு அவுங்களைப் பிரியவும் என்னால தாங்க முடியல மதனி .கூட இருந்தே கழுத்தை அறுத்து புட்டாக” என்று கண்களை மூடி கொள்ள அதில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
இன்று இந்நாள் வரை இது யாருக்கும் தெரியாது. சோமு வேறு ஒரு பெண்ணுடன் சென்றதால் மீனாள் தனித்து வந்தால் என்பது மட்டும் தான் தெரியும். கண்ணாத்தாள் முதற் கொண்டு அப்படியே எண்ணிருந்தனர்.வலியை கிளறாமல் அதற்கு மருந்திட்டு ஆற செய்வோம் என்பது தான் வள்ளியப்பன் எண்ணம் அதனால் அவர் மனைவியிடம் கூட இதனைப் பகிரவில்லை போலும்.
லட்சுமணன் தந்தை கொண்டு எதுவுமே தாயிடம் கேட்டதில்லை.ஒரு வேளை தந்தையைக் கொண்டு பேச்சு வந்திருந்தால் இந்த உண்மை அவனுக்கு தெரிந்திருக்குமோ என்னவோ.தாயின் நிலையை எண்ணி அத்தனை இறுக்கம் அவனுக்கு.அதனை உணர்ந்தார் போல அவனது கையை இறுக்கப் பற்றிய மீனாள்.
“அண்ணே! என் மகேன் அவன் தேவையைக் கூட வாய் திறந்து சொன்னதில்ல.நான் என்ன சொல்றேனோ அதேன் வாக்கு அவனுக்கு.சொல் பேச்சு கேக்குற புள்ள இப்போ அதிசயமா அதுவே வாய்விட்டு விருப்பப்பட்டுக் கேட்குது.எப்படி என்ன மானமா பொழைக்க வழி செஞ்சிகளோ, அதே போல மனமா வாழ எம்புள்ளைக்கு வழி செஞ்சு கொடுக அண்ணே” என்று கை கூப்ப வெடுக்கென நாற்காலியில் இருந்து எழுந்தவர் மீனாள் அருகில் வந்து,
மீனாள் கை பற்றி, “என்ன வேலை செய்றீக? பாவம் சேர்க்க பார்க்குறீக.நானும் சுயநல வாதித்தேன் மீனா. எம்புள்ள உன் கைக்குள்ள இருந்தா மனமா பொழச்சுக்கும்” என்றவர் மனைவியைப் பார்க்க.கணவன் பார்வை உணர்ந்து அருகில்,
“மீனா நாளைக்கே பிள்ளையார்பட்டி போயி நேத்தி வச்சுக் காரியம் தொடங்குவோம்” என்று இன்னொரு கையைப் பற்ற. அழகாக தொடங்கியது லட்சு சாலாவின் திருமண நிகழ்வு. பெரும் உணர்ச்சி குவியலில் பெரியவர்கள் நிற்க.லட்சுமணன் மெதுவக விலகி பொழக்கிடம் சென்று விட்டான்.
தாய் பிள்ளை அவன்.தாய் என்றால் உயிர் அவரது ஏற்ற, இறக்கம், வலி, கண்ணீர் என்று அனைத்தையும் உணர்ந்து வளர்ந்தவன்.அத்தனை வலியிலும் மீனாளின் துணிவையும், நிமிர்வையும் பார்த்து வியந்திருக்கிறான்.அந்த உறுதி கொண்டே இன்று ஒரு ஆளாகி நிற்கிறான்,ஆனால் தாயின் இந்த உறுதிக்கு பின் இருக்கும் காயத்தை கண்டவனுக்கு அதனை தாங்க கொள்ள முடியவில்லை.
லட்சுமணன் முகம் சுருக்கி பின்னே செல்ல.சாலாவும் அவன் பின்னே சென்றாள்.காது நுனி சிவந்து, கண்ணீர் பெறுக, மூச்சுக்கு தவித்து நின்றவனை பார்க்க என்னவோ போல் இருக்க வேகமாக அவனை நெருங்கி,
“லட்சு!” என்று அழைக்க அவள் குரல் கேட்ட நொடி சடாரெனத் திரும்பியவன். அதே வேகத்தில் சாலாவை அனைத்து கொண்டு,” சாலா எதிர்ப்பு சொல்லிப்புடாதீக தொண்டை நெஞ்செல்லாம் கவ்வி புடிக்குது, மூச்சுக்கு வழியே இல்ல, என்னால முடியல இறுக்கக் கட்டிக்கிடுங்க இல்ல திணறி செத்தே போவேன்” என்றதும் கண் இமைக்கும் நொடி தயக்கம் காட்டியவள் பிறகு அவனை விட இறுக்கமாகக் கட்டி கொண்டாள்.
இதோ அசைந்து, அசைந்து வந்தாலும் தங்களின் காதலை காவியமாக மாற்ற இரு உள்ளங்களும் பல்லாக்கில் ஏறி பயணத்தைத் தொடங்கினர்.
error: Content is protected !!