Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

மதுவினும் இனியாள் – 21 

அத்தியாயம் 21:

திரும்பவும் பார்த்தி கேட்டான் “உன் திடீர் காய்ச்சலுக்கும் ஹேரிக்கும் என்ன சம்மந்தம்”

சிறிது நேரம் அமைதியாக இருந்த மது “அவன் என்ன லவ் பண்றானாம். கல்யாணம் பண்ணிக்க கேட்டான்” என்றாள் மெதுவாக கீழே குனிந்து கொண்டே

“அதுக்கு நீ என்ன சொன்ன”



Advertisement

“இனிமே என்ன மீட் பண்ண வர வேண்டாம்னு சொல்லிட்டேன்”

“ஏன்”

“என்னண்ணா ஏன்னு கேக்கறீங்க. இது எப்படி ஒத்து வரும். அவன் கல்ச்சர் வேற. நம்ம கல்ச்சர் வேற. தாய் மீனாட்சியை பத்தி யோசிச்சு பாத்தீங்கன்னா இப்படி ஒரு கேள்வியை கேக்க மாட்டீங்க”

Advertisement

“அதுவும் சரிதான் மது. காஸ்ட் மாறி கல்யாணம் பண்ணாலே நம்ம ஊர்ல பெரிய பிரச்சனையாகும். இதுல மதம், மொழி, இனம் மட்டும் இல்லாம நாடே வேற. இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. அது சரி மது, நீ சொன்னா  அவன் உன்ன வந்து மீட் பண்ணாம இருப்பானா”

Advertisement

“அவன் என்ன பண்ணாலும் நா என் முடிவுல ஸ்ட்ராங்கா இருக்க போறேண்ணா”

“அப்ப ஓகே . நீ இனிமே உன் வேலைய பாரு. அவனை பத்தி மறந்துடு”

“சரிண்ணா” என்று சோர்வுடன் உரைத்து விட்டு போய் படுத்து விட்டாள்

Advertisement

பார்த்தியும் கிட்சன் வேலையை முடித்து விட்டு ஓய்வாக வந்து அமர்ந்து மொபைல் பார்த்து கொண்டிருந்தான். சரியாய் ஹேரியிடமிருந்து கால் வந்தது.

“மது எப்படி இருக்கா. சாப்பிட்டாளா. ஃபீவர் இல்லைல பார்த்தி”

“பரவால்லையே த, து லாம் கத்துகிட்டிங்க போல இருக்கு. உங்க தமிழ் ஆசிரியர் உண்மையிலேயே சூப்பர் பாஸ்ட் தான்”

“அவசியம் ஒரு நாள் என் டீச்சரை உங்களுக்கு இன்றோ கொடுக்கறேன். நீங்க ரொம்ப சந்தோச படுவீங்க. அவர் அத விட சந்தோச படுவார் உங்கள மீட் பண்ணா. இப்ப மது பேபி எப்படி இருக்கானு சொல்லுங்க”

“நல்லாருக்கா . சாப்டுட்டு தூங்குறா. இனிமே அவள மீட் பண்ண வரகூடாதுன்னு சொல்லிட்டாளாமே” என்றான் நக்கலாக.

“நா வரலேன்னா என்ன. அவளே வந்து என்ன மீட் பண்ணுவா”

“அவ்ளோ கான்ஃபிடன்டா உங்களுக்கு”

“ஆமா. மீட் பண்ண வேண்டாம்ன்னுதான் சொன்னா. என்ன பிடிக்கலன்னு சொல்லலையே. நீங்க ஏதும் ரூல்ஸ் பேசிட்டு வீட்டுக்கு கிளம்பிடாதீங்க. அவளோடயே இருங்க. எதாவது அவசரம்ன்னா என்ன கூப்பிடுங்க. இப்ப நா வீட்டுக்கு கிளம்புறேன்”

மது அவனை பிடிக்கவில்லை என்று  சொல்லாததை உணர்ந்தே இருந்த பார்த்தியும், வேறு ஒன்றும் பேசாமல் “அப்ப இவ்ளோ நேரம் எங்க இருந்திங்க” என்று கேட்டான்.

“பால்கனில இருந்து எட்டி பாருங்க”

போய் கீழே எட்டி பார்த்தவனுக்கு, ஹேரி காரில் ஏறிக்கொண்டே கையாட்டிவிட்டு கிளம்பினான்.

பார்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது. இவனுக்கு இருக்கும் வசதிக்கும் அழகுக்கும் எத்தனையோ பெண்கள் கிடைப்பார்கள். இவன் என்னவென்றால், காலையில் இருந்து சாப்பிட்டது போல் கூட தெரியவில்லை. அத்தனை கம்பெனி வைத்திருப்பவன் மதுவிற்காக மணி கணக்காக ரோட்டில் நின்றிருக்கிறான். முதல் முறையாக அவன் பேரில் ஒரு நம்பிக்கை வந்தது பார்த்திக்கு.

அன்று இரவும் மது வீட்டிலேயே தங்கியிருந்தான் பார்த்தி. சோஃபாவிலேயே அயர்ந்து உறங்கியவனை மறுநாள் காலை 6 மணிக்கு ஹேரியின் போன் கால் வந்து எழுப்பியது. 

போன் எடுத்து ஹலோ சொல்லியவனிடம் “சாரி பார்த்திபன், தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணதுக்கு. மது எப்படி இருக்கா”

“மது இன்னும் எழுந்து வரலை. நைட் நல்லாதான் கஞ்சி சாப்டுட்டு தூங்கினா. அப்புறம் உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நல்ல நாள்ல உங்களுக்கு திரும்பவும் சொல்றேன். மது வாழ்க்கைய விட்டு விலகிடுங்க. அதான் உங்களுக்கும் நல்லது . அவளுக்கும் நல்லது. லவ் சொன்னதுக்கே காய்ச்சல் வந்து படுத்துட்டா. இதெல்லாம் தேவையா”

“கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு தேங்க்ஸ் பார்த்திபன். நா லவ் சொன்னதால அவளுக்கு ஃபீவர் வரல. அவ லவ்வ சொல்லாம மறைக்கிறதாலதான் ஃபீவர் வந்துச்சு”

“ம்கூம் . நா சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

மது ஏழு மணிக்கு எழுந்தவளுக்கு இன்று கிறிஸ்துமஸ் என்று நியாபகம் வந்தது. அதற்காகத்தான் ஹேரிக்கு டீ சர்ட் எடுத்தாள். அதையும் கொடுக்கவில்லை. வாழ்த்து கூட சொல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டாள்.

எழுந்து வெளியே வந்தவளிடம் அவளின் உடல்நிலையை பற்றி விசாரித்தான் பார்த்தி.

“நா நல்லாருக்கேண்ணா. உங்களுக்குத்தான் என்னால கஷ்டம். நீங்க ரெஸ்டாரண்ட் கிளம்பறதா இருந்தா கிளம்புங்கண்ணா. நா இனிமே மேனேஜ் பண்ணிக்கிறேன்”

“உன்னால எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல. நீதான் தேவையில்லாத சிக்கல்ல போய் தலைய கொடுக்கற. அம்மா வேற கால் பண்ணிட்டே இருந்தாங்க எப்படி இருக்கன்னு. இந்தியால மிட் நைட்டா இருக்கும் இப்ப. அங்க விடிஞ்சதும் அம்மாக்கு கால் பண்ணிடு. வேலயிருக்கு . நா கிளம்புறேன் மது. வெளில அலையாத. நல்லா ரெஸ்ட் எடுத்துக்க” என்று சொல்லி கிளம்பி விட்டான்.

மதுவும் குளித்து ரெபிரஷ் ஆனவள் விநாயகரிடம் வேண்டி கொண்டாள், ஹேரி எப்பொழுதும் நன்றாக, சந்தோசமாக இருக்க வேண்டும் என்று .

அவளின் மொபைல் ஒலித்தது. அவன்தான். மது எடுக்க வில்லை.

மெசேஜ் வந்தது “எப்படியிருக்க பேபி. என்னட்ட பேச மாட்டியா. கிறிஸ்துமஸ் வாழ்த்து கூட சொல்ல மாட்டியா” என்று.

மது மனதை கடின படுத்தி கொண்டு அவன் நம்பரை பிளாக் பண்ணினாள். அரை மணி நேரத்தில் நேராகவே வந்து நின்றான். வாசலில் வைத்து சீன் கிரியேட் பண்ண வேண்டாம் என்று உள்ளே வர அனுமதித்தாள்.

நேராக வந்து சோஃபாவில் அமர்ந்திருந்தவளின் முன்னே கை கட்டி நின்றான்.

“சர்ச்க்கு கூட போகாம உன்ன பாக்க வந்துருக்கேன் பேபி. என்னட்ட பேச கூட மாட்டியா. என் நம்பரை பிளாக் பண்ற அளவுக்கு நா என்ன தப்பு பண்ணினேன்”

“தப்பு பண்ணலையா. அன்னைக்கு பார்க்ல ஏன் அப்படி நடந்துக்கிட்ட”

“என் மேல மட்டும் தப்பு கிடையாது பேபி. சூழ்நிலையும், ஏன் நீயும் கூட ஒரு காரணம்”

“என்ன. நான் காரணமா”

“ஆமா. மழைல ஈர ட்ரெஸ்ஸோட அவ்வளவு நளினமா நீ ஆடும் போது, மனசு முழுவதும் உன் மேல காதலோட இருக்கற நா எப்படி என்ன கண்ட்ரோல் பண்ணிக்க முடியும். ஒரு நல்ல காதலன் அப்படி நடந்துக்கலைன்னாதான் தப்பு” என்று கிண்டலாக கூறினான்.

முதலில் அவன் கூறியதை கேட்டு வெட்கத்தில் சிவந்த மதுவின் முகம், இறுதியில் அவன் சொன்னதை கேட்டு கோபத்தில் சிவந்தது.

“காதலனா? யாருக்கு யார் காதலன்”

“ஏன் நா உன்னோட காதலன் இல்லையா. உனக்கு என் மேல காதல் இல்லன்னு சொல்றியா”

“ஆமா. நீ மட்டும் காதலிச்சா பத்தாது. நா உன்னட்ட ஒரு பிரண்டா தான் பழகுனேன்”

“அப்படியா பேபி. எத்தன பிரண்ட நீ உன் உதட்டுல முத்தம் குடுக்க அனுமதிச்சிருக்க” 

“நா ஒன்னும் உன்ன அனுமதிக்கல. நீயாதான் வலுக்கட்டாயமா எனக்கு முத்தம் கொடுத்த”

“ஓ நா வலுக்கட்டாயமா உனக்கு முத்தம் கொடுத்ததுக்கே அப்படி மயங்கி நின்னியா பேபி”

“நா ஒன்னும் மயங்கவல்லாம் இல்ல” 

“மயங்களையா. அதையும் டெஸ்ட் பண்ணி பாத்துடுவோமா” என்று அவளை நெருங்கினான். 

அவ்வளவு தான் மது சோஃபா மேல் ஏறி நின்று விட்டாள். அன்றைக்கென்று வீட்டில்தான் இருக்கிறோம் என்று பிளாக் கலரில் கால் முட்டிக்கு கொஞ்சம் கீழே வரை இருந்த ஸ்கர்ட்டும், மேலே பிரவுன் கலரில் குட்டி பனியனும் அணிந்திருந்தாள். முடிக்கு நன்றாக எண்ணெய் வைத்து இரட்டை ஜடை போட்டிருந்தாள். 

 அவளை பார்த்து சிரித்து கொண்டே நெருங்கிய ஹேரியிடம் “டேய் கிட்ட வராத. வந்தா அவ்ளோதான் பாத்துக்க” என்று தலையணை, புக் என்று கையில் கிடைத்ததை தூக்கி எறிந்தாள்.

எல்லாவற்றையும் தட்டி விட்டவன் அவள் கிட்டே வந்து, அவளின் இரு இடுப்பிலும் இரு கை கொடுத்து ஈஸியாக கீழே தூக்கி தன் முன்னே நிறுத்தி கொண்டான். மது இரு கைகளாலும் அவன் நெஞ்சில் கை வைத்து அடித்து தள்ளி கொண்டிருந்தாள். அதெல்லாம் அவனுக்கு கொசு கடித்தது மாதிரி  இருந்தது போல.

“சு சும்மா இரு பேபி. இது என்ன டிரஸ் பேபி. ஸ்கூல் கேர்ள் மாதிரி. ஆனா இதுவும் உனக்கு கியூட்டாதான் இருக்கு” என்று அவள் பின் முதுகில் கை கொடுத்து கிட்டே இழுத்து, தூக்கி தன் கால்களில் அவளை நிக்க வைத்து கொண்டான். மதுவால் அசையவே முடியவில்லை. கைகளால் அவன் தோள்களில், நெஞ்சில் என்று அடித்து பார்த்தவள் ஓய்ந்து போய் அவனை பார்த்தாள்.

அவன் ரசனையாக அவள் முகத்தைத்தான் பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையை பார்த்தவள் கைகளால் உதடுகளை மூடுவதற்கு கொண்டு போனாள். அதை புரிந்தது போல அவள் இரு கைகளையும் மேலே கொண்டு வர முடியாதவாறு அவளை சுற்றி இறுக்கி அணைத்தவன் அவளின் முகத்தை நெருங்கினான். மது சட்டென்று அவளின் உதட்டை வாய்க்குள் மடித்து வைத்து கொண்டாள்.

ஹா ஹா என்று சிரித்தவன் “இன்னும் பேபியாவே இருக்கியே பேபி” என்று சொல்லிக்கொண்டே அவளின் உதட்டருகே இருந்த மச்சத்தில் மென்மையாக தன் உதட்டை பதித்து எடுத்தான். அவ்வளவுதான் மது செயலிழந்து விட்டாள். விரிந்திருந்த கண்கள் மூடி கொண்டது. வாய்க்குள் இருந்த உதடுகள் வெளி வந்து விட்டது.

அந்த பிங்க் உதடுகளை பார்த்ததும், அதை மென்று திங்க எழுந்த ஆசையை அடக்கி கொண்ட ஹேரி அமைதியாக நின்றான். எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை.

படக்கென்று கண் விழித்த மது, பார்த்தது அவள் முகத்தின் அருகே மயக்கும் புன்னகையுடன் அவளையே பார்த்து கொண்டிருந்த ஹேரியைதான். சட்டென்று அவனை தள்ளிவிட்டு, விடுபட்டு வெளியில் வந்த மது சோபாவில் போய் முகத்தை மூடி அவனை பார்க்க முடியாமல் அமர்ந்து விட்டாள்.

அவளின் முன்னால் போய் முட்டி போட்டு கார்ப்பெட்டில் அமர்ந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி “இப்ப சொல்லு பேபி. நீ என்கிட்டே மயங்கல? உனக்கு என்ன பிடிக்காது? நீ என்ன லவ் பண்ணல?” என்று மென்மையாக கேட்டான். 

அவனின் நீல கண்களையே பார்த்தவள் ஆம். உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று ஒத்து கொள்ள போன வேளையில் மதுவின் போன், அவள் தாயின் அழைப்பை ஏற்று ஒலித்தது. சட்டென்று அவனை தள்ளி விட்டு எழுந்து கொணடவள் “எனக்கு யாரையும் லவ் பண்ற எண்ணம் இல்ல. நீ வெளிய போ. உன்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு நீ இப்படித்தான் கேவலமா பொறுக்கி மாதிரி நடந்துப்பியா” என்று கடினமாக கூறினாள்.

அவளை அதிர்ந்து போய் பார்த்தவன் “போதும் பேபி.எனக்கு நல்ல கிறிஸ்துமஸ் கிபிட் கொடுத்துட்ட. நீயே கூப்பிடாம இன்னுமே உன் வீட்டுக்கு வர மாட்டேன். பை”  என்றவன் வெளியில் சென்றுவிட்டான்.

புயலடித்தது போல் மது ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள். அழவும் பிடிக்க வில்லை. வேண்டுமென்றே அவனை காய படுத்தவென்றே பேசியவளுக்கு எவ்வாறு அழுகை வரும். ஆனால் அவளும் அதிகமாக காய பட்டு போனாள்.

மீனாட்சிக்கு அழைத்து காய்ச்சல் இல்லை. நன்றாக இருப்பதாக கூறிவிட்டு வைத்து விட்டாள்.

இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. கிறிஸ்துமஸ் ஹாலிடே முடிந்து, நியூ இயரும்  முடிந்து விட்டது.

அதன் பின் மது ஹேரியை பார்க்கவே இல்லை. அவனும் அவளை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை. சரி நம்மை அடியோடு வெறுத்து ஒதுக்கி விட்டான் போல என்று மதுவும் மனதில் துக்கபட்டு கொண்டிருந்தாள்.

கிறிஸ்துமஸ் மறுநாள் பாக்ஸிங் டே என்பதால் ஆஃபரில் பொருட்கள், டிரஸ் எல்லாம் வாங்கலாம்.  ஷாப்பிங் பண்ண வருமாறு ஊர்வசி போன் பண்ணி அழைத்தாள். மது வரவில்லை என்று கூறிவிட்டாள்.

நியூ இயர்க்கு சிட்டியில் யாரா ரிவரில் வைத்து வான வேடிக்கைகள்,பட்டாசு எல்லாம் வெடிப்பார்கள். பார்க்க வருமாறு சத்யனும் ஊர்வசியும் அழைத்தார்கள். அதற்கும் செல்லவில்லை.மொத்தத்தில் மது களையிழந்து போய்விட்டாள்.

                                                                                                              (வருவாள்…) 

.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!