Skip to content
Post Views: 8,441
அத்தியாயம் 24:
சாப்பிட்டு விட்டு வேலையை ஏனோ தானோவென பார்த்து கொண்டிருந்த மதுவிற்கு மொபைலில் அன்நோன் நம்பரிலிருந்து மெசேஜ் வந்தது. எடுத்து பார்த்தால் ஹேரிதான் அனுப்பியிருந்தான்.
மதுவை அவன் கேபினுக்கு வருமாறு சொல்லி அழைத்திருந்தான். டைம் பார்த்தால் மணி மூன்றரை. என்ன செய்வது என்று தெரியாமல் மது யோசித்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் சத்யன் நேரில் வந்தான். “மது பாஸ் உன்ன கூப்பிடறார். போய் ஒழுங்கா பேசிட்டு எந்த வம்பும் பண்ணாம வந்துடு. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு கட் அண்ட் ரைட்டா கட் பண்ணிட்டு வந்துரணும். இப்படி அனாவசியமா வளத்தாத”
Advertisement
மதுவுக்கு கோபமாக வந்தது. ஹேரியின் ரூமிற்குள் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள். உள்ளே இவளை எதிர்பார்த்து ரூமின் வாசலை பார்த்து கைகட்டி டேபிளில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ஹேரி.
மதுவை பார்த்ததும் “வா ஹனி. உட்கார்ந்து பேசலாம்” என்று ரூமில் ஓரமாக போட பட்டிருந்த சோஃபாவை காட்டினான். அதை காதில் வாங்கி கொள்ளாமல் அவனுக்கு எதிரில் முறைத்து கொண்டு நின்றவள் “என்ன அழைச்சிட்டு வர, எதுக்கு சத்யன் அண்ணாவ அனுப்புனீங்க. அவர் என்ன உங்களுக்கு எடுபுடியா. இந்த வேலெயெல்லாம் செய்றதுக்கு” என்று கோபமாக கேட்டாள்.
“அதுக்குதான் நா உனக்கு மெசேஜ் பண்ணியிருந்தேன் ஹனி. நீ வரல. என்ன வேற என்ன பண்ண சொல்ற. வேற யார்ட்ட சொல்லி அனுப்புனாலும் எதுக்கு என்னனு அவங்களுக்கு யோசனை வரும். அதான் சத்யனை அனுப்ப வேண்டியதா போச்சு”
Advertisement
அதற்கு மதுவால் எதுவும் கூற முடியவில்லை. “சரி இப்ப எதுக்கு என்ன வர சொன்ன”
Advertisement
“என் மேரேஜ் ப்ரோபோசலுக்கு என்ன பதில்ன்னு கேக்கத்தான் வர சொன்னேன்” என்று கேட்டவனை லூசா நீ என்ற ரீதியில் பார்த்து வைத்தாள். பிறகு “அதான் முடியாதுன்னு அன்னைக்கே சொல்லிட்டனே ஹேரி . திரும்ப திரும்ப அதையே கேட்டா என்ன அர்த்தம்”
“எப்ப சொன்ன ஹனி. அன்னைக்கு உன் வீட்ல என்ன கேவலமா திட்டி அனுப்பின. அதுக்கு அதான் அர்த்தமா”
அவன் கூறியதை கேட்ட மது, அன்றைய நினைவில் அமைதியாக போய் அங்கிருந்த டேபிளிற்கு எதிரில் கிடந்த சேரில் உட்கார்ந்தாள். அதன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹேரி டேபிளில் சாய்ந்து கொண்டே அவளை நேராக பார்க்குமாறு திரும்பி அதே போஸில் நின்றான்.
Advertisement
அவனை பார்க்காமல் கீழே குனிந்து விரல் நகங்களை ஆராய்ந்து கொண்டே “என்ன மன்னிச்சுடு ஹேரி. அன்னைக்கு உன்ன மோசமா பேசிட்டேன். நா மனசுலேர்ந்து ஏதும் பேசல” என்று பேசி கொண்டிருந்தவளை, அவள் பார்க்காததால் நன்றாக பார்த்து கொண்டிருந்தான்.
நல்ல கரும் பச்சையில் டாப்ஸ் , பெலாசோ பேண்ட் அணிந்திருந்தாள். அவள் கலரை இன்னும் தூக்கலாக எடுத்து காட்டியது அந்த உடை. அதே கலரில் குட்டி ஜிமிக்கி. சின்னதாக கிரீன் கலர் பொட்டு, தலையில் நடு வகிடெடுத்து இறுக்கி பின்னலிட்டிருந்தாள்.
ஒரு பெண்ணால் இவ்வளவு எளிய அலங்காரத்தில் இவ்வளவு அழகாக இருக்க முடியுமா என்று சொல்லும்படி இருந்தாள். செயற்கையான மேக்கப் முகங்களையே பார்த்து சலித்தவனிற்கு இவளை பார்க்க பார்க்க சலிக்கவில்லை .
நன்றாக சைட் அடித்து கொண்டிருந்தவன் அவள் பேசி முடித்ததும் “எனக்கு தெரியும் பேபி. நீ கோவத்துல பேசிட்டன்னு. லிவ் இட். நா கேக்கறதுக்கு பதில் சொல்லு. ஏன் என்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேங்குற”
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நா அவ்ளோ பேசுனத்துக்கு அப்புறமும் உனக்கு என் மேல கோவமே வரலையா. அப்படி என்ன என்கிட்டே இருக்கு. நீதான் பெரிய பணக்காரன் வேறயாமே. சத்யன் அண்ணா சொன்னாரு. உனக்கு இருக்குற அழகுக்கும் பணத்துக்கும் எவ்ளோ பொண்ணுங்க கிடைப்பாங்க. டெய்லி இங்க ஆபீஸ்ல ட்ரைன்ல சாதாரணமா என்ன கிராஸ் பண்ற பொண்ணுங்க எல்லாம் எங்க தமிழ் ஹீரோயின்ச விட அழகா இருக்காங்க. நீ ஏன் என்ன பிடிச்சு தொங்கிட்டிருக்க ஹேரி” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசி கொண்டிருந்தவளை எழுப்பி நிப்பாட்டியவன் அவள் தோள்களை பிடித்து கொண்டு,
“வெறும் பொண்ணு. எதிர் பாலினம். உடல் தேவையை தீர்த்துக்க ஒரு உடல்.இப்படி எனக்கு தேவை ஏற்பட்டிருந்தா, நீ சொல்லிட்டுருக்க தகுதில்லாம் ஓகே பேபி. ஆனா எனக்கு தேவபடறது ஒரு சோல் மெட். என் மனசுக்கு. உடம்புக்கு. ஆன்மாக்கு பிடிச்ச சோல் மெட். என்னட்ட குறைகிற நெகட்டீவ்ச ஃபில் பண்ண வர்ற மறு பாதி. இவ்ளோ நாளா நா யார் கூட இருந்தாலும்,எவ்ளோ பெரிய பார்ட்டி, பப், மீட்டிங் இப்படி எங்க இருந்தாலும் லோன்லியாதான் ஃபீல் பண்ணுவேன். ஏன் என் க்ளோஸ் பிரண்ட் ஜான் கூட இருந்தாலுமே அப்படிதான். ஆனா உன்ன பாத்ததுக்கப்றம், நீ பக்கத்துல இருக்கும் போது எனக்கு ரொம்ப வருசமா இருக்கிற தனிமை தீருது. என் மனசு சந்தோசமாகுது. மனசு மட்டுமில்ல. என் உடம்புமே நீ பக்கத்துல இருக்கும் போதுதான் ரியாக்ட் பண்ணுது. நா இத்தன வருசமா இப்படித்தான் தேடிக்கிட்டிருந்தேன்னு எனக்கே உன்ன பாத்ததுக்கு அப்புறமாத்தான் எனக்கு புரிஞ்சுது பேபி. நா சொல்றது உனக்கு புரியுதா பேபி என்று கேட்டவனை பாய்ந்து கட்டிக்கொண்டாள் மது.
அவளுக்கு புரிந்தது. நன்றாக புரிந்தது. ஏனென்றால் அவளுக்கும் அப்படித்தானே இருக்கிறது. வேறு ஆண்கள் ரசித்து பார்த்தால் வெறுக்கும் மனம், இவன் பார்த்தால் மயங்குகிறதே. மற்றவர்கள் உரச நேர்ந்தால் விறைக்கும் உடல், இவன் அருகில் வந்தால் குழைகிறதே.
அவனை கட்டிக்கொண்டு மார்பில் தலை சாய்த்த படி அழுதவளை “என்னாச்சு பேபி. என்னன்னு சொல்லிட்டு அழு” முதுகை தடவி சமாதான படுத்திய படி பேசி கொண்டிருந்தான். மது கேட்டால் தானே. குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள். அவன் அவளை பிரித்தெடுத்து முகத்தை நிமிர்த்தி “என்ன பேபி.எதுக்கு அழுகிறேன்னு சொல்லிட்டு அழு. நா ஏதும் தப்பா பேசிட்டேனா”
புறங்கையால் கண்களை துடைத்து கொண்டவளுக்கு, அவன் டேபிளில் இருந்த டிஷுவை எடுத்து துடைத்து விட்டான். அதில் இன்னும் அழுகை வரும் போல் இருந்தது மதுவிற்கு. திரும்பவும் கண்கள் கலங்கியவளை “ச்சு பேபி.என்ன ” என்றவனை நிமிர்ந்து பார்த்து “நீ சொன்னது என்ன ரொம்ப பீல் பண்ண வச்சுடுச்சு” என்றாள் மூக்கை உறிந்து கொண்டே. தொடர்ந்து “ஏன்னா எனக்கும் அப்படித்தான் ஆகுது” என்றாள்.
அவளை சந்தேகமாக பார்த்து கொண்டே “எப்படி ஆகுது” என்றான். அதற்கு “உன்ன பாக்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமாயிடுது. நீ கிட்ட வந்தா வயித்துல பட்டாம் பூச்சி பறக்குது. நீ முத்தம் குடுத்தா இன்னும் இன்னுமின்னு மனசும், உடம்பும் கேக்குது” என்று சொல்லி கொண்டிருந்தவள், வெட்கம் தாளாமல் அவன் மார்பிலே முகத்தை மறைத்து கொண்டாள்.
அவள் சொல்ல வருவது புரிந்தாலும் ஹேரிக்கு போதவில்லை. அவள் முகத்தை மறுபடியும் நிமிர்த்தி “சோ என்ன சொல்ல வர்ற பேபி” என்றவனிடம் அவன் கண்களை பார்த்து “எனக்கும் உன்ன ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்குன்னு சொல்றேன்” என்று விட்டு மீண்டும் முகத்தை அவன் மார்பில் ஒளித்து கொண்டாள்.
ஹேரிக்கு உடம்பெல்லாம் சந்தோச ஆர்ப்பரிப்பு. என்ன பிடிச்சிருக்குன்னு ஒத்துக்கிட்டாளா. ஹேரியால் நம்பவே முடியவில்லை. அவளை இறுக்கி அணைத்து கொண்டு உச்சந்தலையிலேயே முத்தத்தை பதித்தான். மதுவிற்கு உடலெல்லாம் சிலிர்த்ததை ஹேரியால் உணர முடிந்தது.
அழகு அழகு என்று இங்குள்ள பெண்களை சொல்கிறாளே. இந்த பெண்களிடம் இதுபோல் வெட்கத்தை சிலிர்ப்பை காண முடியுமா. இவள் என் கைக்குள் இருக்கும் போது கிடைக்கும் ஆனந்தம் என் பணத்தால் எனக்கு கிடைக்குமா. கண்களை மூடிக்கொண்டு இருவரும் அந்த மோன நிலையிலேயே சிறிது நேரம் நின்றனர்.
ஹேரிதான் அவள் முகத்தை நெஞ்சிலிருந்து நிமிர்த்தினான். இரு கைகளாலும் அவள் கன்னங்களை தாங்கி பிடித்து வெட்கத்தால் சிவந்திருந்த முகத்தை ரசித்தான். முகத்தை நிமிர்த்தினாலும் கண்களை நிமிர்த்தவில்லை மது.
“என்னை பார் பேபி” என்று ஹேரி அவளை கொஞ்சினான். கீழே குடை போல் சரிந்திருந்த இமைகளை மேலே தூக்கி பார்த்தாள். அதற்கு மேல் தாள முடியாமல் அவள் இடது கண்ணின் மேல் முத்தத்தை பதித்தான். அவள் வலது கண்ணும் சேர்ந்து மூடி கொண்டது. அதிலும் ஒரு முத்தத்தை வைத்தவன் பின் அவள் மூடிய விழிகளை பார்த்தபடியே அவள் உதட்டு மச்சத்தின் மேல் நுனி நாக்கால் வருடினான். படாரென்று விழிகளை திறந்த மது “என்னடா செஞ்ச” என்று கேட்டு கொண்டே மச்சத்தின் மேல் கைகளால் துடைத்து கொண்டாள்.
“நீ இப்ப என்ன பேபி செஞ்ச” என்றவனிடம் “எச்சி, அதான் தொடைச்சேன்” என்று உதட்டை சுழித்தாள். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சுழித்த அவள் உதடுகளை எச்சில் படுத்த ஆரம்பித்தான். முதலில் அவன் நெஞ்சை தள்ள முயன்று கொண்டிருந்த மதுவின் கைகள் கொஞ்ச நேரத்தில் அவன் தலையின் பின் பக்க அடர்த்தியான முடிகளை பிடித்திருந்தது. அதை உணர்ந்த ஹேரியின் மோகம் கிளர்ந்தெழுந்து, அவன் கைகள் அவள் உடலில் அலைய ஆரம்பித்தது.
ஆனால் மதுவிற்கு எச்சரிக்கை உண்டாகி அவன் கைகளை தட்டி விட்டு, வாய்க்குள்ளிருந்த தன் உதடுகளை வலு கட்டாயமாக பிடித்திழுத்தாள். கைகளை தட்டிவிட்டதுமே சுதாரித்தவன் உதடுகளையும் விட்டு விட்டு தலை கோதி கொண்டே திரும்பி நின்று கொண்டு மூச்சை இழுத்து விட்டான்.
மதுவும் வேக வேகமாக மூச்சுக்களை இழுத்து விட்டு கொண்டிருந்தாள். அந்நேரம் பார்த்து கதவு தட்டும் ஓசை கேட்டது. ஹேரி வேகமாக வந்து மது வெளியே தெரியாதவாறு மறைத்து நின்றான். கதவை திறந்து ஜான் தான் உள்ளே தலையை நீட்டினான்.
“என்ன ஜே” என்று ஹேரி கேட்டதற்கு, “சத்யன் மதுவை இன்னும் காணும்ன்னு பாக்க வந்தான். நான்தான் வெயிட் பண்ண சொல்லிருக்கேன். ஆனா ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க மாட்டான்”
“ஒரு 5 மினிட்ஸ் அவனை சமாளி ஜே” என்றவனிற்கு கட்டை விரலை காட்டி விட்டு சென்றான். அவன் சென்றவுடன் மதுவின் புறம் திரும்பியன் அவனை முறைத்து பார்த்து கொண்டிருந்தவளிடம் சென்று அவள் கலைந்திருந்த முடிகளை சீராக்கினான். உடை சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து விட்டு, “போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா பேபி” என்று அவளை, அவன் ரூமிற்குள்ளேயே இருந்த ரெஸ்ட் ரூமிற்க்கு அனுப்பினான். அவன் அவளிடம் நடந்து கொண்டதற்காக கோபம் கொண்டிருந்தவளுக்கு, அவசரமாக அவளை ஒழுங்கு படுத்தியவனை பார்த்து நேசம் பொங்கியது.
அவள் ரெஸ்ட் ரூம் கதவை திறந்து வெளியில் வருவதற்கும், சத்யன் கதவை தட்டி விட்டு உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
வந்தவன் சிவந்து கிடந்த மதுவின் கண்கள் முகத்தை பார்த்துவிட்டு, இருக்கையில் அமர்ந்திருந்த ஹேரியை முறைத்தான். இவன் எதுக்கு முறைக்கிறான்னு தெரியலையே என்று யோசித்து கொண்டிருந்த ஹேரியிடம் “இப்படி அழ வைக்கிறதுக்கு தான் நீங்கலாம் காதலிக்கிறிங்களா” என்று கோபமாக கேட்டான்.
அதற்கு ஹேரி ஒன்றும் சொல்லாமல், சத்யன் பக்கத்தில் வந்து ஜம்பமாக அவனை பார்த்து கொண்டிருக்கும் மதுவை பார்த்தான். “என்ன பாஸ் அங்க பாக்கிறிங்க. அவதான் உங்கள வேண்டாம்னு சொல்றாள்ள. அப்புறம் எதுக்கு அவளை போர்ஸ் பண்ணி அழ வைக்கிறிங்க” என்று கோபமாக கேட்டவன் மதுவின் கைகளை பிடித்து கொண்டு வேகமாக வெளியில் கூட்டி சென்றான்.
இவ்வளவு நேரம் மது அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு நின்றிருந்தவள், கிளம்பும்போது அவனை பார்த்து வெவெவே என்று சத்யனுக்கு தெரியாமல் பழிப்பு காட்டி சென்றாள் .
அதை பார்த்து அழகாக புன்னகைத்த ஹேரியை பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து நமுட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் ஜான்.
அவனை பார்த்த ஹேரி “என்ன ஜே சிரிக்கிற. நீ ஏதும் திட்டலையா. உன் சிஸ்டர அழ வச்சிட்டேன்னு”
“சத்யன் பாவம் அப்பாவி பிரம்மச்சாரி மேட். பட் நா அப்படி கிடையாது. எனக்கு நிறைய அனுபவம் இருக்கு”
“என்ன சொல்ற ஜே” என்று கேட்டவனிற்கு அவன் சட்டையின் நெஞ்சு பகுதியில் ஒட்டியிருந்த மதுவின் க்ரீன் கலர் பொட்டினை சுட்டி காட்டினான் ஜான்.
“இது அந்த கோலா நெத்தியில வச்சிருந்தது தான”
அதை குனிந்து கையில் எடுத்த ஹேரி, அதை சுட்டு விரல் நுனியில் வைத்து, என்னமோ மதுவையே பார்ப்பது போல காதல் சொட்ட பார்த்து கொண்டிருந்தான்.
“ம்க்கும் உனக்கு முத்திடுச்சி மச்சான்” என்று சொல்லி கொண்டே ஜான் எழுந்து சென்றான்.
வெளியில் வந்த சத்யன் மதுவிடம் “நீ ஃபீல் பண்ணாத மது. நீ சொன்ன மாதிரியே சென்னைக்கு உன்ன அனுப்பறதுக்கு ஏற்பாடு பண்ண பாக்கறேன். என்ன அப்படி பாக்கிற. பாஸா இருந்தா எனக்கென்ன பயமா. அதெல்லாம் ஒரு கை பாத்துடுவோம்” என்று சொல்லி கொண்டிருந்தவனை பாவமாக பார்த்து கொண்டிருந்தாள் மது
அவள் பார்வையை வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்த ஊர்வசி சத்யனை வினோதமாக பார்த்து கொண்டிருந்தாள்.
பேசிவிட்டு கோபமாக அமர்ந்திருந்தவனை பார்த்து அண்ணா என்றாள் மது.
“என்ன கண்ணு” என்று பாசமாக கோயமுத்தூர் பாஷையில் கேட்டவனிடம் “எனக்கு அவனை பிடிக்கும்னு சொல்லிட்டு வந்துட்டேண்ணா” என்றாள்.
ஊர்வசிக்கு புரிந்து சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்ட பட்டு அமர்ந்திருந்தாள். ஆனால் சத்யனுக்கு புரியவில்லை.
“என்னடா மது சொல்ற”
“அது வந்துண்ணா, ஹேரி திரும்ப திரும்ப கேட்டானா, அதான் பாவமா இருந்தது. அதான் எனக்கு அவன ரொம்ப பிடிக்கும்ன்ற உண்மையை சொல்லிட்டேண்ணா. ஆனா கல்யாணத்துக்கெல்லாம் நா இன்னும் சம்மதம் சொல்லவே இல்லண்ணா” என்றவளை பார்த்து அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து கொண்டான் சத்யன்.
“அப்புறம் இத பத்தி பார்த்தி அண்ணாட்ட ஏதும் சொல்லிடாதீங்க அண்ணா. அவங்க ரொம்ப டெர்ரர். நீங்கதான் ரொம்ப நல்ல அண்ணா. அதனாலதான் அவங்கட்ட சொல்லாம உங்கட்ட சொல்றேன். அண்ணா.. அண்ணா.. எங்க ஒன்னும் சொல்லாம போறீங்க”
சத்யன் எழுந்து நெஞ்சில் கை வைத்து கொண்டே மதுவை பார்த்து பீல் பண்ணிக் கொண்டே சென்றான்.
ஊர்வசி சத்யன் மாடுலேஷனிற்கு இந்த பாடல் வரிகளை பேக் ரவுண்டில் ஓட விட்டு கொண்டிருந்தாள்.
தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளமாச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளமாச்சி ……
(வருவாள்…)
error: Content is protected !!