Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மதுவினும் இனியாள்

 மதுவினும் இனியாள் – 28

அத்தியாயம் 28:

சத்யன் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு கிளம்பினான். மது முடியை சீவி பின்னல் போட்டுகொண்டு ஹேரியிடம் “ஜாக்கி வீடு எங்க இருக்கு கண்ணா. அவனுக்கும் கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டு போய் குடுக்கலாம்ல. நான் சமைச்ச சாப்பாடு நல்லாருக்குன்னு அன்னைக்கே நல்லா சாப்டான்” என்று கேட்டாள்.

“அவன் நம்ம வீட்லதான் இருப்பான் பேபி. அவனுக்கு சிட்டில வீடு இருக்கு. இருந்தாலும் அதிக நாள் என்னோடுதான் இருப்பான்”

“ஒ அப்ப சரி. அவனுக்கும் கொஞ்சம் பொங்கல் பார்சல் பண்ணிடுவோம்” என்று எடுத்து கொண்டவள் கிளம்பிவிட்டாள் ஹேரியின் வீட்டுக்கு.



Advertisement

செக்யூரிட்டி கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த காரிலிருந்து ஹேரியின் வீட்டை பார்த்த மது, வீடுன்னு சொன்னான் பங்களாவால்ல இருக்கு என்று அசந்து போய் காருக்குளேயே உட்கார்ந்திருந்தாள்.

ஹேரி இறங்கியவன் மதுவின் புறம் சென்று காரின் கதவை திறந்து அவளுக்கு  “வெல்கம் ஹோம் பேபி” என்று கையை கொடுத்தான்.

அனிச்சையாக அவளின் கையை அவனிடம் கொடுத்து கொண்டே இறங்கினாள்.

Advertisement

அந்த நேரம் அவர்களுக்கு அருகில் இன்னொரு கார் வந்து நின்றது. அதிலிருந்து காரை ஒட்டி கொண்டு வந்தவள் இறங்கினாள். அவளை பார்த்து திரும்பவும் அசந்து போனாள் மது.

Advertisement

காரிலிருந்து வந்தவள் நேராக ஹேரியிடம் வந்து “ஹாய் மேட்” என்று சொல்லி மென்மையாக அணைத்தாள். ஹேரியும் திரும்ப அவளை ஹக் செய்தவன் “என்ன கேபி, சண்டே வீட்டுக்கு வந்துருக்க” என்றான்.

அந்த கேபி என்பவள் பிளாக் கலரில் ஸ்லீவ்லஸ், வி நெக்குடன் முட்டி வரையிலான இறுக்கி பிடித்த உடை அணிந்திருந்தாள். மது அவளை வாயை பிளந்து பார்க்க காரணம் அவள் ஹேரிக்கு கிட்டத்தட்ட சமமான உயரத்தில் இருந்தாள். இரண்டு அல்லது மூன்று  இன்ச் குறைவாக இருப்பாள். உயரத்திற்கு  கரெக்டான உடல் வாகில், தோல் வரை புரண்ட, ஸ்ட்ரயிட் கூந்தலுடன் மிக அழகாக இருந்தாள்.

“ஏன் மேன் நா உன் வீட்டுக்கு வரக்கூடாதா” என்றவள் பக்கத்தில் இருந்த மதுவை பிரமிப்பாக பார்த்து “யார் இந்த ஏஞ்சல் ஹேரி” என்று கேட்டாள்.

Advertisement

அவளுக்கு “இவ மதுமிதா ஃபிரம் இண்டியா” என்றவன் மதுவிடம், ஹனி “இவ கேபிரில்லா ஃபிரம் இட்டாலி”  என்று அறிமுக படுத்தினான்.

மது அவளிடம் கையை நீட்டுவதற்குள் கேபி “ஹாய் பேபி” என்று அவளை மென்மையாக அணைத்திருந்தாள்.

அவள் விலகியவுடன் மது “என்ன உங்களுக்கும் நா பேபியா?” என்றவள் சிறிது இடைவெளி விட்டு “அப்புறம் இத நா சொல்லியே ஆகணும் . நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்றாள்.

“ஹா ஹா பாத்தியா. நீ பேபி மாதிரிதான் பேசுற. எந்த பொண்ணாவது இன்னொரு பொண்ண பாத்து அழகா இருக்கீங்க என்று சொல்வாளா. நீயும் ரொம்ப அழகா இருக்க. முக்கியமா உன் காஸ்ட்யூம் வெரி க்யூட் பேபி. அப்புறம் இது ஒரிஜினலா” என்று மது முன்னாள் போட்டிருந்த பின்னலை காட்டி கேட்டாள்.

அதற்கு மது “ஹண்ட்ரேட் பர்சன்ட் ஒரிஜினல். தாய் மீனாட்சியால் வளர்க்கப்பட்டது” என்று கூறினாள். அவள் கன்னத்தை மிருதுவாக தட்டிய கேபி, இருவரையும் சிரிப்புடன் பார்த்திருந்த ஹேரியிடம் ” நா முக்கியமா பேச வேண்டிருக்கு மேட் உன்னட்ட பாக்டரி விஷயமா” என்றாள்.

“சரி வா உள்ள போய் பேசலாம்” என்றவன் மதுவிடம் “கம் பேபி” என்று அழைத்து கொண்டு உள்ளே சென்றான். கேபி அவள் காரிடம் சென்றாள்.

ஹேரியும் மதுவும்  உள்ளே சென்றதும் வீட்டை சுற்றி ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தவளை பார்த்தவன் ஜானுக்கு போன் பண்ணி அழைத்தான்.

மாடியிலிருந்து வந்த ஜான் மதுவை பார்த்து சந்தோசமானவன் “வாங்க மதுமிதா மேடம்” என்றான். ஹேரி ஜானிடம் “கேபி வந்துருக்கா. நீ மதுட்ட பேசிட்டு இரு. நா அவள்ட்ட பேசிட்டு வரேன்” என்றான்.

அதற்குள் கேபி சில பைல்களை அள்ளி வந்தாள். ஜானிடம் ஹாய் சொன்னவளை ஜானும் “வா கேபி” என்று அழைத்தான்.

ஹேரி மதுவின் கன்னத்தில் தட்டி “சாரி பேபி. நா எதிர்பாக்கல இப்படி வேலை வரும்னு. நீ ஜானோடு பேசிட்டு இரு. நான் வந்திடுறேன்” என்று சொல்லியபடி மாடியில் இருக்கும் அவன் அலுவலக அறைக்கு படியேறியவனை ஆச்சரியமாக பார்த்த படி பின்னே சென்றாள் கேபி.

கேபியை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்த மதுவை பார்த்து “என்ன கோலா. அப்படி பாக்கிற” என்று கேட்டான்.

“எங்க ஊர் ஹீரோயின் அனுஷ்கா மாதிரி உயரமா அழகா இருக்காங்க . அதான் பாத்தேன். சரி ஜாக்கி, உனக்கு சாப்பாடு எடுத்து வந்தேன். சாபிடறியா” என்று கேட்டாள்.

“நீ சமைச்சதா. குடு கோலா சாப்பிடலாம் . இப்பதான் சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணலாம்னு பாத்தேன்”

“ஏன் வீட்ல சமைக்க மாட்டிங்களா” என்று அவனுக்கு அவள் பேகிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்து கொடுத்தாள்.

“இன்னைக்கு சண்டேல. அதான் மியா வரல. அவங்க இருந்தா கேட்டத சமைச்சி குடுப்பாங்க. பிஸ்சா, பாஸ்தா, கான்டினென்டல், சைனீஸ்னு நிறைய வெரைட்டிஸ் செய்வாங்க. மியாதான் இங்க கேர் டேக்கர். சன்டேங்கிறதால எல்லா ஒர்க்கர்ஸ்க்கும் இன்னைக்கு லீவ்” என்று சாப்பிட்டு கொண்டே பேசி கொண்டிருந்தான்.

“சரி அந்த கேபி யாரு. ஹேரி அவங்க இத்தாலினு சொன்னான்”

“ஆமா. கேபிக்கு இத்தாலிதான் நேட்டிவ். ஆனா ஸ்கூல் டேஸ்லயே இங்க வந்துட்டா. எங்க ஸ்கூல் அண்ட் கிளாஸ் மேட். பட் ஹயர் ஸ்டடீஸ்  நா ஹேரில்லாம் IT பீல்டு. கேபிக்கு மெஷின் மேல பயங்கர இன்ட்ரெஸ்ட் . அதான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க போய்ட்டா. இப்ப ஹேரியோட கம்ப்யூட்டர் ஹார்ட்வர் மேனுபாக்ச்சரிங் பாக்டரில முக்கியமான பொறுப்புல இருக்கா” என்று சொல்லி விட்டு சிறிது இடைவெளி விட்டவன்,

“கேபிக்கு மெஷின் மேல மட்டும் இன்ட்ரெஸ்ட் இல்ல கோலா. ஹேரி மேலயும் இன்ட்ரெஸ்ட்” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் மது.

அதற்குள் ஜான் சாப்பிட்டு முடித்து விட்டு தொடர்ந்தான்.

“என்ன பாக்கிற. இன்னைக்கு நேத்து இல்ல. கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருஷமா அவன் மேல லவ் அவளுக்கு. மத்த பொண்ணுங்க கூட டேட்டிங் ஆவது ட்ரை பண்ணவன், இவள அந்த மாதிரி யோசிக்கவே முடியலன்னு ஒரு கோடு போட்டு நிறுத்திட்டான். நா ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி கூட சொன்னேன். இப்படி தனியாவே இருக்கத்துக்கு அவளோட ஒரே வீட்லயே இருந்து பாரேன், கொஞ்ச நாள்ல பிடிக்க ஆரம்பிச்சிடும்ன்னு சொல்லி பாத்தேன். ஹேரி பிடிவாதமா அவ பிரண்ட் மட்டும் தான், அதுக்கு மேல அவளை யோசிக்க முடியாதுன்னு சொல்லிட்டான். கேபியும் பிடிவாதமா வேற யாரையும் எனக்கு பிடிக்கலைனு, சிங்கிளாத்தான் இருக்கா இன்னமும்” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போது கேபிரில்லா மேலிருந்து கீழே வேகமாக இறங்கி வந்தாள்.

வந்தவள் இவர்களிடம் “சாரி கைஸ். உங்கள இன்னொரு நாள் பாக்கிறேன். பை” என்று அவர்களிடம் நில்லாமல் சென்று விட்டாள்.

அவளை ஆச்சரியமாக பார்த்த மதுவிடம் “நீ யாருன்னு அவகிட்ட ஹேரி சொல்லிருப்பான். அதான் அப்படி போறான்னு நினைக்கிறேன்” என்றான்.

அதற்கு மது “ஆனா ஹேரி பக்கத்துல பாக்கும் போது அவனுக்கு மேட்சா இருக்காங்கல்ல ” என்று கேபி சென்ற வழியை பார்த்தாள்.

அதற்கு ஜான் “என்ன கோலா. பொறாமையா” என்றான்.

வேகமாக இல்லையென்று மண்டையை ஆட்டியவள், பின்பு மெல்லிய குரலில் “லைட்டா” என்றவள் தலையில் தட்டி சிரித்தவன்

“அதுக்கு தேவையே இல்ல கோலா. இப்பதான் அவனுக்கு மது பைத்தியம் பிடிச்சிருக்கே. முன்னெல்லாம் எனக்கு ஆச்சரியமா இருக்கும். இவன் என்னதான் எதிர்பாக்கிறான் பொண்ணுங்ககிட்டன்னு. ஆனா உன்ன பாத்தபிறகு எனக்குமே, அவன் இவ்வளவு நாள் வெய்ட் பண்ணதுக்கு ஒரு அர்த்தம் இருக்கதா தோணுது” என்றவனை புரியாமல் பார்த்தாள் மது.

“ஆமா கோலா. நா இதுவரை ஒரு மூணு நாலு கேர்ள் பிரண்ட் கூட ரிலேஷன் ஷிப்ல இருந்து பிரேக்கப் பண்ணிருக்கேன். எல்லார்கிட்டயும் ஒரு கிவ் அண்ட் டேக் பாலிசிதான் இருந்துருக்கு. யார் மேலையும் ஒரு அன்பு , அக்கறை எனக்கும் இருந்தது இல்ல. அவங்களுக்கும் இருந்தது இல்ல. இப்ப உன்ன பாக்கும் போதுதான் லைஃப்ல எது கடைசி வரை தேவைங்கிறது புரியுது. நீ ஒரு அன்பான அழகான ஏஞ்சல். உனக்கு உன்ன சுத்தி இருக்கவங்கள நேசிக்க தெரியுது. எல்லார் மேலையும் அக்கறை காட்ட தெரியுது. எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்க தெரியுது. ஹேரி உன் மேல பைத்தியமா இருக்கான்னா அதுல ஒன்னும் ஆச்சரியம் இல்ல”

அப்பொழுதும் அவனை ஆச்சரியமாக பார்த்தவள் “ஒரு சக்கரை பொங்கலும் , வடையும் குடுத்துக்காகவா, நீ இவ்வளவு நேரம் தம் கட்டி பேசற ஜாக்கி”

“ஹா ஹா கோலா நீ இருக்கியே சரியான குறும்புக்காரி” என்று சொல்லி சிரித்தவன் “வா உனக்கு  வீட்ட சுத்தி காட்றேன்” என்று அழைத்து போனான்.

கீழே உள்ளே எண்ட்ரியானதும் பெரிய லிவிங் ஹால், பக்கத்தில் பெரிய டைனிங் டேபிளுடன் கூடிய டைனிங் ஏரியா, அதற்கு பின்புறம் பெரிய ஓப்பன் கிட்சன் இருந்தது. உள்ளேயே லிஃப்ட்

லிவிங் ஏரியாவிலிருந்தே கார்டனுக்கு போக பெரிய கண்ணாடி டோர் இருந்தது. கிரௌண்ட் ஃப்ளோரில் நான்கு ரூம் இருந்தது.

ஒரு ரூம் மட்டும் சகல வசதிகளுடன் லிவிங் ஏரியா, ஹால், அட்டாச்ட் பாத்ரூம், டிவி, பிரிட்ஜ், ஓவன் என்று அனைத்தும் கொண்ட ஸ்டூடியோ ரூமாக இருந்தது. அதில்தான் ஜான் இருந்தான்.

மற்ற ரூம்கள் அட்டாச்ட் பாத்ரூம் கொண்ட நார்மல் பெட்ரூம்கள்தான். அதை பார்த்து கொண்டிருக்கும்போதே ஹேரி தேடி வந்து விட்டான். அவன் வந்தவுடன் “நீ அழைச்சுட்டு போய் மேல காட்டு ஹேரி. நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்” என்று ஜான் அவனின் ரூமிற்கு சென்றான்.

ஹேரி மதுவை அழைத்து கொண்டு லிஃப்ட்டில் மாடி ஏறினான். “சாரி பேபி. திடீர் ஒர்க் நா எதிர் பாக்கல”

“பரவால்ல கண்ணா”

அதற்குள் மேலே சென்றால் அங்குதான் ஹேரியின் உலகம் பறந்து விரிந்திருந்தது. அவனுடைய ஜிம், அதிகமாக கணினி புத்தகங்கள் கொண்ட  லைப்ரரி, அலுவலக அறை, பார் இவை அனைத்தும் ஹேரியின் படுக்கை அறையை சுற்றி அமைந்திருந்தது. படுக்கை அறையில் பெரிய சைஸ் க்ரெ கலர் எம்பரர் பெட், டார்க் பளுவில் பெட் ஸ்பிரட் , க்ரெ கலரில் தரையில் கார்பெட் , சுற்றி சோஃபா செட்ஸ், மினி டைனிங் டேபிள், பிரிட்ஜ் அனைத்தும் இருந்தது.

ஹேரியின் படுக்கை அறை மட்டும் மதுவின் வீட்டை விட பெரியதாக இருந்தது. அதனோடு அட்டாச்மெண்ட்டாக ட்ரெஸ்ஸிங் ரூம், அதை தாண்டி ரவுண்ட் சைஸ் ஜக்கூசியுடன் கூடிய குளியலறையும் இருந்தது.

எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த மதுவை அழைத்து கொண்டு  ஹேரி படுக்கை அறையில் இருந்த ஒரு கதவை திறந்து உள்ளே அழைத்து போனான். அதற்கு படிக்கட்டுகள் கீழே சென்றது. அங்கும் ஒரு பெரிய அறை இருட்டாக இருந்தது. நடுவில் பெட் இருந்தது அரையிருளில் தெரிந்தது. லைட்டை போட்டான் ஹேரி. பிரமித்து போனாள் மது. ஏனென்றால் அறையை சுற்றிலும் மதுவின் ஓவியங்கள்.

முதன் முதலில் ட்ரைனில் பார்த்த மது, இன்னொரு நாள் கோயிலில் பார்த்த மது, கண்ணில் அழகாக அபிநயம் பிடிக்கும் மது, பார்க்கில் நனைந்த உடையுடன் மது, இதழில் நீர் துளிகள் இருக்கும் மது, உதட்டை சுழிக்கும் மது, தலையை சாய்த்து கண்களை சுருக்கும் மது, கண்ணில் குறும்பு தெரிய சிரிக்கும் மது, அலுவலகத்தில் காதல் சொல்லி அழும் முகத்தில் நெற்றியில் கிரீன் கலர் பொட்டுடன் கூடிய மது, கண்ணை மூடி மயங்கி நிற்கும் முகத்துடன் மது, முறைக்கும் மது, சிரிக்கும் மது, இப்படி அரை முழுக்க பென்சிலில் கோட்டோவியமாக வரைந்த மதுவின் முகங்கள்.

“என்ன கண்ணா இது” என்று அதிசயித்து போய் கேட்டவளை பார்த்து சிரித்து  கொண்டே “முன்ன இந்த ரூம என்னோட அஃபிஸியல் லாக்கர் ரூமா யூஸ் பண்ணிட்ருந்தேன். இப்ப பர்சனல் லாக்கரா யூஸ் பண்றேன் பேபி ” என்று நெஞ்சை தொட்டு காட்டியவன் தொடர்ந்து “நீ என் பக்கத்தில் இல்லாதப்ப இந்த ரூம் வந்தேன்னா, உன் கூடவே இருக்க பீல் வரும் பேபி” என்றவனிடம்,

“நா உன் பக்கத்தில் இல்ல,  நீ இந்த ரூம்லயும் இல்ல. அப்ப என்ன பண்ணுவ கண்ணா” என்று கலங்கிய குரலில் கேட்டவளை அழுத்தமாக பார்த்தவன், அணிந்திருந்த டீசர்டை கழட்டி அவன் இடது நெஞ்சை காட்டினான். உறைந்து போனாள் மது.

நெற்றி கன்னங்களில் சுருள் சுருளாக முடி தொங்கி கொண்டிருக்க, உதட்டு மச்சத்துடன், நீண்ட கூந்தலுடன் கூடிய மதுவின் முகத்தை டேட்டூவாக நெஞ்சில் குத்தியிருந்தான் ஹேரி.

நீண்ட கேவலுடன் போய் ஹேரியை கட்டி கொண்டாள் மது. டேட்டூ மேலே அடித்தாள் அழுது கொண்டே. “ஏன் இப்படி பண்ண. லூசாடா நீ” என்று கேட்டு கொண்டே தேம்பி தேம்பி அழுதாள்.

அவள் கைகளை தடுத்தவன் “அங்க அடிக்காத பேபி. அங்க என் பேபி இருக்கா பாரு. அவளுக்கு வலிக்கும்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தவள், வேகமாக அவன் முகம் முழுவதும் முத்தத்தை பதித்தாள். இறுதியாக அவன் நெஞ்சிலும் முத்தத்தை பதித்துவிட்டு அழுதாள்.

“நா என்ன பண்ணேன் உனக்கு. ஏன்டா இப்படி லவ் பண்ற என்னை” என்று அழுதவளை நிமிர்த்தியவன் “ச்சு என்ன பேபி. நீ சந்தோசப்படுவன்னு பாத்தா இப்படி அழற” என்று கண்களை துடைத்து விட்டான்.

“எப்படி சந்தோசப்படறது. எவ்வளவு வலிச்சிருக்கும். ஏன் இப்படி முட்டாள்தனம் பண்ண”

“என்ன? என் பேபி என் கூடவே எப்பொழுதும் இருக்கணும்னு நினைக்கிறது முட்டாள் தனமா. உண்மையா சொல்லணும்ன்னா எனக்கும் டேட்டூ குத்தறது பிடிக்காது. ஆனா என் பேபி என் கூடவே இருப்பான்னா என்ன வேணுன்னா பண்ணுவனே. எனக்கு உன் கூடவே இருக்கணும். நீ இப்படி என் கைக்குள்ளயே இருக்கணும்னு எனக்கு பேராசை. அது முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவ. அப்ப என்ன பண்றது. அதும் நா டேட்டூ போட்டது என்னைக்கு தெரியுமா. நீ என்ன கேவலமா திட்டி உன் வீட்டை வீட்டு அனுப்புனீயே அன்னைக்குதான். அப்ப என் மனசுல இருந்த வலிக்கு இந்த டேட்டூ வலியெல்லாம் பெருசா தெரியல பேபி”

“சாரி கண்ணா” என்றவள் அவன் டேட்டூ மேலே உதட்டை பதித்தாள். “இது அநியாயம் பேபி. உனக்கே முத்தத்த கொடுத்துக்கிற” என்றவனிடம் “வேற எங்க வேணும் என் கண்ணனுக்கு” என்று மையலாக கேட்டாள்.

அவளை பார்த்து மயங்கியவாறே தன் உதட்டை தொட்டு காட்டினான். முதலில் வெட்கத்தில் விழியை தாழ்த்தியவள், பிறகு அவளையே பார்த்து கொண்டிருந்த ஹேரியின் கண்களை ஒரு கையால் மூடி, கால்களை மெதுவாக எக்கி அவன் உதட்டில் மெதுவாக தன் உதட்டை ஒற்றி எடுத்தவள் வெட்கம் தாங்காமல் அவன் மார்பிலே ஒளிந்து கொண்டாள்.

அவளை பார்த்து சிரித்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி “என்ன பேபி பண்ண இப்போ” என்று கேட்டான்.

“ச்சு போடா” என்று வெட்கமாக விழிகளை தாழ்த்தியவளை பார்த்து அதற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாமல் வேகமாக அவள் முகம் முழுவதும் முத்திரையை பதித்தவன் உதடுகளில் வந்து இளைப்பாறினான். அவன் கைகள் அவள் இடுப்பில் தாவணிக்குள் நுழைந்ததும் மது குழைந்து போய் அவன் மேலேயே சரிந்தாள். ஹேரி உதட்டை பிரித்து விட்டு பார்த்தால், மது ஆடையெல்லாம் நெகிழ்ந்து அவன் கைகளில் குழைந்து கிடந்தாள். அதை பார்த்தவனுக்கு உணர்ச்சிகள் கொந்தளித்தாலும் அதை அடக்கி கொண்டு, சிறு புன்னகையுடன் அவளை நிமிர்த்தி, நெற்றியில் அழுந்த  இதழ் பதித்தான். அந்த அழுத்தத்தில் விழிகள் திறந்து ஒன்றும் புரியாமல் பார்த்தவளிடம் கன்னத்தை தட்டி “ஒன்னும் இல்ல பேபி . வா மேல போகலாம்” என்று நெகிழ்ந்திருந்த அவள் ஆடைகளை சரி செய்ய போனான்.

அப்பொழுதுதான் சுய நினைவுக்கு வந்தவள் அவன் கைகளில் இருந்து விலகி, திரும்பி உதட்டை கடித்து கொண்டு நின்றாள். பிறகு அவசரமாக ஆடைகளை சரி செய்தாள். ஹேரியும் அவன் டி ஷர்ட்டை அணிந்து கொண்டான்.

தயக்கமாக நின்று கொண்டிருந்தவளிடம் “பேபி மேல அண்ணாந்து பார்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த ரிமோட்டை  இயக்கினான்.

மேற்க்கூரை நகர்ந்து கண்ணாடி வழியாக நீல வானம் தெரிந்தது. அதிசயமாக பார்த்தவளிடம் “ஸ்டார்கஸிங் ஓப்பன் டெர்ரஸ் பேபி.  ஸ்டார்ஸ் பாத்துட்டே படுத்துக்கலாம். நைட்ல இன்னொரு நாள் காட்றேன். இப்போ வா போகலாம்” என்று அவளை மேலே கூட்டி வந்தான்.

பெட் ரூம் வந்தவர்கள் வெளியே வந்து கீழே இறங்கலாம் என்று வரும்போது மது, மது பானங்கள் அடங்கிய பாரை காட்டி “இது என்ன கண்ணா , வீட்லயே வச்சிருக்க” என்று கேட்டாள்.

“நீ என் மனைவியா என் வீட்டுக்கு வரும்போது, இது இருக்காது பேபி. ப்ராமிஸ்” என்றவனை காதல் பொங்க பார்த்தவள் திடீரென நினைத்து கொண்டவளாக “ஏய் இப்ப நடந்த சீனெல்லாம் ட்ராயிங்கா வரைஞ்சு வைப்பியா” என்று கேட்டவளை பார்த்து ஹா ஹா என்று சிரித்தவன் “அஃப்கோர்ஸ் பேபி” என்றான்.

நடந்ததை நினைத்து பார்த்து வெட்கம் கொண்டவள் ஏய் என்று நெஞ்சில் அடிக்க போனாள் . அவளை தடுத்து தோளை காட்டினான் ஹேரி “அங்க அடிச்சின்னா உனக்குத்தான் வலிக்கும் பேபி” என்றவனை விடாமல் தோளில் அடித்தவள் கையை உதறி கொண்டு “இது என்ன உடம்ப இப்படி டைட் பண்ணி வச்சுருக்க. அடிச்சா என் கைதான் வலிக்குது. பாறைல போய் முட்ற மாதிரி” என்றவளிடம் சீரியஸாக ஒரு கேள்வி கேட்டான் ஹேரி “நீ எவ்ளோ வெயிட் பேபி” .

அவனை சந்தேகமாக பார்த்தவள் “ஏன் நா குண்டா இருக்கேன்னு கேக்குறியா” என்று தன் உடலை வருத்தமாக குனிந்து பார்த்தாள் மது.

“பேபி காமடி பண்ணாத. உன்ன நா ஒத்த கையாலேயே தூக்கிருவேன். நானே நீ வெய்ட் ரொம்ப கம்மியா இருக்கியோன்னு பீல் பண்ணிதான் கேக்கிறேன் சொல்லு”

“ஒரு 54 கிலோ இருந்தேன் டூ மந்த்ஸ்க்கு முன்னாடி”

அதை கேட்டு தீவிரமாக எதையோ கணக்கு செய்தான் ஹேரி . அவனை பார்த்து உண்மையிலேயே பயமாக இருந்தது மதுவிற்கு.

“என்னன்னு தான் சொல்லேன். எனக்கு பக்கு  பக்குன்னு இருக்கு” என்றவளிடம் “நா 85 கிலோ இருக்கேன். நீ இப்படி இவ்ளோ கம்மியான வெயிட்ல இருந்தா என் வெயிட்ட தாங்குவியா” என்றான்.

அவன் சொல்வதை ஒன்றும் புரியாமல் கேட்டு கொண்டிருந்தவளுக்கு கொஞ்சமாக விளங்கியது. முகமெல்லாம் சிவந்து “அடேய்” என்று அவனை அடிக்க பாய்ந்தவளிடம் அகப்படாமல் படி வழியாக கீழே இறங்கி சென்றான்.

(வருவாள்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!