Skip to content
Post Views: 7,328
அத்தியாயம் 29:
ஹேரி மேலிருந்து கீழே வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ஜானின் பக்கத்தில் வந்து அமர்ந்தான். பின்னாடியே துரத்தி வந்த மது அவன் முதுகிலே அடித்தாள்.
அதை வாங்கி கொண்டு, அவளை கண்டு கொள்ளாமல் “என்ன ஜே. இங்க உக்காந்துருக்க. ரெஸ்ட் எடுக்க போறேன்னு சொன்ன”
“டைம் என்னனு பாரு மேட் . மூணு ஆகுது. நா ரெஸ்ட் எடுத்துட்டு வந்துட்டேன். உனக்குத்தான் உன் பேபி பக்கத்துல இருந்தா நேரம், காலம், பசி, தூக்கமெல்லாம் மறந்துருமே. ஆனா எனக்கு பசிக்குது. அதான் ஏதாச்சும் ஆர்டர் பண்ணலாம்னு பாத்தேன்”
Advertisement
ஹேரியை அடித்து கொண்டிருந்த மது டயர்டாகி அவர்களை முறைத்து கொண்டு வந்தமர்ந்தாள்.
ஹேரி ஜானிடம் “மது பேபிக்கு மட்டன் பிரியாணின்னு ஒரு டிஷ் இருக்கு. அத வாங்கி கொடு ஜான் இந்தியன் ரெஸ்டாரண்ட்ல இருந்து. அவளுக்கு அதான் ரொம்ப பிடிக்கும் “
“நோ ஜாக்கி. இன்னைக்கு பொங்கல். நான் வெஜ் சாப்பிட முடியாது” என்று அவசரமாக சொன்னவள் ஹேரியை பார்த்து “ஆமா உனக்கு பிரியாணி தெரியாதா”
Advertisement
“ம்ஹும் பேபி தெரியாது”
Advertisement
“நானும் சாப்பிட்டதில்லை கோலா”
அவர்களை பாவமாக பார்த்த மது “ச்ச பாவம் நீங்க. பிரியாணி சாப்பிடாத வாழ்வென்ன வாழ்வு. சோ சேட்”
ஹேரியும் ஜானும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள்.
Advertisement
“அதான் இன்னைக்கு வாங்கலாம்னு பாத்தா வேண்டாம்னு சொல்றியே. அப்படி என்ன இன்னைக்கு சிறப்பான நாள் உங்களுக்கு” என்று ஜான் கேட்டான்.
“ஹே என்ன இப்படி சொல்லிட்ட. நா தஞ்சாவூர்காரி. காவிரி பாயற ஊர். அதும் எங்க அப்பா ஒரு விவசாயி. நெல்தான் நாங்க முதல்ல விளைவிக்கிறது. எல்லாருக்கும் சாப்பாடு போட்ற வேலை. அந்த விவசாயிகளுக்கும், விவசாயித்துக்கு உறுதுணையா இருக்க இயற்கைக்கும் நன்றி சொல்ற விழாதான் பொங்கல் . முன்னாடில்லாம் நெல்லை விதைச்சு முதல்ல அறுவடை செஞ்சு எடுத்துட்டு வர்ற நெல்லதான் சக்கரை பொங்கல் செஞ்சு சாமி கும்பிட்டு சாப்பிடுவோம். இப்பதான் காலம் மாறி போச்சு. எங்க பாத்தாலும் மரத்தை வெட்டி வீடு கட்றது, பில்டிங் கட்றதுன்னு பண்ணி மழை பெய்யாம போச்சு. மீதி இருக்க நிலத்தையும் பிளாட்டா போட்டு தள்றாங்க. இளைய தலைமுறை யாருக்கும் விவசாயம் பாக்க பிடிக்கல. ஏன்? எங்க அப்பா என்னயே அக்ரிதான் படிக்க சொன்னாங்க. நா கம்ப்யூட்டர் பின்னாடி வந்துட்டேன். எனக்கு மாப்பிள்ளையாவது அக்ரி படிச்சவனா பாக்கணும்னு எங்க அப்பாவுக்கு ஆசை. நா இப்ப உன் பின்னாடி வந்துட்டேன். எங்க அப்பாவுக்கு அப்புறம் எங்க நிலம்லாம் யாரு பாக்கிறது சொல்லுங்க”
என்று வருத்தப்பட்டவளை யோசனையாக பார்த்தான் ஹேரி. ஜான்தான் “ஓகே கோலா கூல். தெரியாம கேட்டுட்டேன். இப்ப உனக்கு என்ன சாப்பிட வேணும்”
“ஏதா இருந்தாலும் வெஜ்ஜா இருக்கணும் அவ்ளோதான்” என்றாள். எல்லாருக்கும் வெஜ் பிஸ்ஸாவே ஆர்டர் செய்தான் ஜான்.
சாப்பிட்டு முடித்தவுடன் ஜான் “கேபி என்ன சொன்னா மேட். அவசரமா போய்ட்டா” என்றான்.
அதற்கு ஹேரி மதுவை பார்த்து “மது யாருன்னு கேட்டா. சொன்னேன். என்ன நினைச்சாளோ, ஒன்னும் சொல்லாம கிளம்பிட்டா” என்று சொன்னவன் மதுவை அழைத்து கொண்டு கார்டனுக்கு சென்றான்.
ஜான்தான் யோசனையாக அமர்ந்திருந்தான். பிறகு கேபிக்கு போனை போட்டான்.
“ஹலோ கேபி”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் “எத்தனை நாளா ஹேரி அந்த பொண்ணு கூட பழகறான் ஜே”
“ஒரு டூ மந்த்ஸ் இருக்கும்”
“ஓ அதான். நிறைய நாள் பேக்டரி வரல. வெளியூரும் போகல. நீ கூட என்னட்ட மறைச்சிட்ட பாத்தியா”
“மறைக்கணும்னுலாம் இல்ல கேபி. இவ்ளோ நாள் மது ஓகே சொல்லல. ஆனா இவன் அவள பாத்த அன்னைக்கே கவுந்துட்டான்”
“என்னட்ட இல்லாதது அந்த பொண்ணுட்ட என்ன ஜான் இருக்கு. ஸ்கின் கலர், காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல்,லாங்வேஜ் எல்லாமே டிஃபரென்ட்ங்கிறதால அட்ராக்ட் ஆய்ட்டானா . இவனோட இன்டெலிஜெண்ட், ஸ்டேட்டஸ்,கட்ஸ் இதுக்கெல்லாம் எப்படி பொருந்துவா அந்த பொண்ணு. நாளைக்கு இவன் கல்ச்சர், லைப் ஸ்டைல்க்கு எப்படி ஈடு கொடுப்பா”
“இதெல்லாம் பத்தி ஹேரிதான் கவலை படணும் கேபி. எல்லா டிஃபரன்சையும் தாண்டி அவனுக்கு மதுவ ரொம்ப பிடிச்சிருக்கே. காதல் இதுக்கெல்லாம் அப்பாற்பட்டதுன்னு எனக்கு தோணுது கேபி”
“என் இத்தன வருஷ காதல் அவனுக்கு புரியவே இல்லையே ஜான்”
“எனக்கு இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல கேபி. ஆனா அவன் உன் மேல வச்சிருந்த பிரண்ட்ன்ற எல்லைய ஒரு நாள், ஒரு நொடி கூட தாண்டுனதே இல்ல. அப்படி இருக்கும்போது அவன குத்தம் சொல்ல முடியாது கேபி”
“நீ அவன் பிரண்டுல்ல. அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ற”
“நா உனக்கும் பிரண்ட் தான் கேபி. அதனாலதான் உனக்கு உண்மைய சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு. இதுக்கு மேல நீதான் யோசிக்கணும்” என்று சொன்ன ஜான் காலை கட் பண்ணி விட்டான்.
ஹேரியுடன் சென்ற மது “கேபிய கூட உனக்கு பிடிக்கலையா ஹேரி”
“அவ ரொம்ப சின்ன வயசுலயே எங்க கிளாஸ்ல வந்து ஜாயின் பண்ணிட்டா பேபி. அப்ப இருந்து பிரண்ட். டீனேஜ்ல அவளும் வேற வேற பாய் பிரண்ட் கூட பழகுனா. என்னட்ட அவளுக்கு அப்படி ஒரு தாட் இல்ல. காலேஜ் டைம்ல எங்களுக்கும் அவளுக்கும் கேப். கொஞ்ச வருஷம் நாங்க பாத்துக்கவே இல்ல. திரும்ப எங்கள மீட் பண்ணதும் என்ன பாத்தவ, டேட்டிங் கேக்கிறா என்னட்ட. எனக்கு புரியவே இல்ல. ஆனா அவள என்னால அப்படி யோசிச்சு பாக்கவே முடியல. ஏற்கனவே அந்த சமயம்தான் பொண்ணுங்களே நம்ம லைஃப்ல வேண்டாம்னு நா வெறுத்து போய் ஒதுங்கியிருந்தேன். கேபிட்டயும் தீர்மானமா அப்பவே சொல்லிட்டேன் வாய்ப்பே இல்லன்னு. ஆனா அதுக்கு அப்புறமும் அவ விடாம மேரேஜ் பண்ணிக்கலாம். இல்ல ஒரே வீட்ல இருந்து பாக்கலாம்ன்னு அப்பப்ப கேப்பா. நான்தான் அவாய்ட் பண்ணிடுவேன். நல்ல பொண்ணு. சின்ன பிள்ளையில இருந்து பழகுனவ. அதனாலதான் ரொம்ப ஹார்ஷா அவட்ட நடந்துக்க முடியறதில்ல. சிக்ஸ் மந்த்க்கு முன்னாடிதான் என் கம்பெனில வந்து ஜாயின் பண்ணா. நல்ல எஃபிசியன்ட் ஒர்க்கர்” என்றவன் , மதுவை முதலில் நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்றான். அதை பார்த்ததும் குஷியானவளிடம் “ஸ்விம் பண்றியா பேபி” என்றான்.
“ம்க்கும். ஆசையாத்தான் இருக்கு. ஆனா ஸ்விம்மிங் பூல் இப்படி ஒப்பன்ல இருக்கு. இங்க இருந்து ஜான் ஹால்ல உக்காந்துருக்கறது தெரியுது. நீ வேற இருக்க. எப்படி நீந்தறது” அவள் சொன்னதை கேட்டு குழம்பினான் ஹேரி.
“என்ன ஹனி . காமடி பண்ற. ஸ்விம்மிங் பூல் ஒப்பன்லதான் இருக்கும். க்ளோஸ்டா இருந்தா அதுக்கு பேர் பாத் ரூம். இப்படி இருந்தாதான் ஸ்விம் பண்ணிட்டு சன் பாத் எடுக்க வசதி. அப்பதான் இங்க D வைட்டமின் கிடைக்கும்”
“அது சரிப்பா. உங்கள மாதிரில்லாம் நம்மளால காத்து வாங்க முடியாது. வா போகலாம்” என்றவளை “நில்லு பேபி. நீந்தான ஸ்விம்மிங் பிடிக்கும்னு சொன்ன. ஒழுங்கா சொல்லு. ஏன் வேண்டாம்ங்கிற”
“டேய் ஏன்டா படுத்துற. அரைகுறை ட்ரெஸ்ஸோட எப்படி எல்லார் முன்னாடியும் நீந்தறது. எனக்கு வெக்கமா இருக்கும்”
சிறிது யோசித்தவன் “என் முன்னாடி கூடவா” என்றான்.
“நீ மட்டும் என்ன பெரிய அப்பாடக்கரா. உன் கண்ணுக்கு முன்னாடி நீந்த தான் ரொம்ப பயமா இருக்கு” என்று சொன்னவளை சிரித்தபடி அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் பேஸ்கட் பால் கோர்ட்டுக்கு அழைத்து போனான்.
“ம். இதையாவது விளையாடி பார்க்கலாம். சாப்பிட்டது கொஞ்சம் செரிக்கும்” என்றவள் தாவணியை இழுத்து இடுப்பில் சொருகி கொண்டு போய் பாலை எடுத்தாள். பாலை தட்டி கொண்டே ஓடி போய் கூடையில் போட்டாள்.
வடிவேலு புலிகேசி படத்தில் கரடிக்கு அம்பு விட்ட கதையாக, அவள் கூடையில் போட்டால் அது நீச்சல் குளத்திற்கு சென்றது. அதை பார்த்து சிரித்தவனை முறைத்தவள் “இத பாரு. நான்லாம் ஸ்போர்ட்ஸ் பீரியட்ல PT மேம்க்கு தெரியாம ஓரமா படுத்து தூங்குறவ. எதோ சாப்பிட்டது செரிக்கணுமேங்கிறதுக்காக விளையாடறேன். அதனால கிண்டல் பண்ற வேலையெல்லாம் வச்சிக்காத” என்று உதட்டை சுளித்தவளை ரசனையாக பார்த்தான் ஹேரி.
பட்டாம் பூச்சி போல் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தவளை கை கட்டி ரசித்து கொண்டிருந்தான். கிட்ட தட்ட பத்து தடவைக்கு மேல் முயற்சி பண்ணி விட்டாள் கூடையில் பந்து விழவே இல்லை. எட்டி எட்டி முயற்சித்து கொண்டிருந்தவளை, திடிரென்று இரண்டு கைகள் அவள் கால் முட்டியின் அருகில் பிடித்து மேலே தூக்கியது. கூடையின் கிட்டே சென்றவள் எம்பி பந்தை போட்டு விட்டாள்.
“அப்பாடா போட்டுட்டேன். இறக்கி விடு கண்ணா” என்றவளை நிதானமாக முழுதாக உரசியவாறு இறக்கி விட்டவன், அவள் வயிற்றில் கைகளை கட்டி கொண்டு முதுகில் முகம் புதைத்தான்.
அவன் கைகளின் மேல் கைகளை வைத்து கொண்டு நெளிந்து கொண்டிருந்தவளிடம் “இங்கயே இருந்திடறியா பேபி” என்றான்.
“ம்”
“என் கூடவே இருந்திடேன்”
“ம்”
“நீ போய்ட்டா போர் அடிக்கும் பேபி”
“ம்”
“ரொம்ப தனிமையா பீல் பண்ணுவேன் பேபி”
“ம்”
“வீடு அமைதியா ஆய்டும் பேபி”
“ம்”
ம் கொட்டி கொண்டிருந்தவளை வேகமாக திருப்பியவன் “நா என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ ம் போட்டுட்டே இருக்க”
அவன் மார்பில் நன்றாக சாய்ந்து கொண்டவள் “எனக்கும் தான் போக கஷ்டமா இருக்கு” என்றவளை ஆச்சரியமாக பார்த்தவன் அவளை இறுக்கி கட்டி கொண்டான். தலையில் முத்தம் வைத்து விடுவித்தவன் அவளை வீட்டுக்குள் அழைத்து சென்றான்.
நேராக அவளை அவன் பெட்ரூமிற்கு அழைத்து சென்றவன் ஒரு லாக்கரை திறந்து ஜ்வெல் பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்தான்.
“இந்தா பேபி ஃபஸ்ட் டைம் வீட்டுக்கு வந்ததுக்கு என்னோட கிஃப்ட்”
அதை வாங்கி திறந்து பார்த்தாள் மது. கோல்ட் செயினில் ஹார்ட் பெண்டண்ட். நடுவில் ஹார்ட் ஷேப்பில் பெரிய சைஸ் பிங்க் டைமண்ட். சுற்றி குட்டி குட்டி வைட் டைமண்ட் பதித்திருந்தது. அட்டகாசமாக இருந்தது.
“அழகா இருக்கு கண்ணா. ஆனா ரொம்ப எக்ஸ்பென்சிவ்வா இருக்கும் போலவே”
“ரொம்ப காஸ்டெல்லாம் இல்ல பேபி. உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா. இந்திய பெண்களுக்கு நகை ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேனே “
“அது உண்மைதான். இந்த செயினையும் எனக்கு பிடிச்சுருக்கு. ஆனா இங்கயே இருக்கட்டும்”
“ஏன்? உன் கழுத்துல போட்டுக்கோ பேபி”
“அது சரி. தாய் மீனாட்சி வீடியோ கால் பேசும்போது பாத்துட்டு ஏதுன்னு கேட்டா நா என்ன சொல்றது”
“ஓ” என்று ஏமாற்றமாக சொன்னவனை பார்த்து “இரு இப்ப உனக்கு போட்டு காட்டிட்டு கழட்டிடறேன்” என்று கழுத்தில் அவள் ஏற்கனவே அணிந்திருந்த நெக் செட்டை கழட்டிவிட்டு இந்த செயினை போட போனவளிடம் “நா போட்டு விடறேன் பேபி” என்று கேட்டான்.
“அதெல்லாம் வேண்டாம். நீ மொதல்ல என் கழுத்துல தாலி தான் கட்டணும். அதுதான் என் ஆசை” என்று கூறிக்கொண்டே செயினை அணிந்து காட்டினாள்.
அழகாக அவள் கழுத்து குழிக்கு கீழே அமர்ந்திருந்த டாலரை பொறாமையாக பார்த்தான் ஹேரி.
“ஏன் ஹனி. தாலி கட்டிட்ட அப்புறம் முழுசா நீ எனக்கே எனக்குதான சொந்தம்”
“ம் அப்படித்தான்” என்று மையலாக அவனை பார்த்தாள்.
“அப்ப எப்ப தாலி கட்டறது”
“எங்க அம்மா, அப்பா சம்மதம் சொன்ன பிறகு”
“நா உங்க அம்மா, அப்பாட்ட பேசவா”
“இல்ல கண்ணா. அது மரியாதை கிடையாது. முதல்ல நாந்தான் சொல்லணும். கூடிய சீக்கிரம் சொல்லிடறேன். அது வரை பொறுமையா இருப்பியாம்” என்று அவன் முடியை களைத்து விட்டாள். பிறகு செயினை கழட்டி பாக்சில் வைத்து அவன் கைகளில் கொடுத்தாள். அதை கொண்டு போய் லாக்கரில் வைத்து விட்டு இருவரும் கீழே வந்தார்கள்.
மணியை பார்த்தால் ஐந்தரை ஆகியிருந்தது. சரி என்று ஜானிடம் சொல்லி கொண்டு இருவரும் மதுவின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
மதுவின் அபார்ட்மெண்ட் வாசலில் காரை நிறுத்தியவனிடம் “சரி கண்ணா. நா இறங்கிக்குறேன். நீ கிளம்பு” என்றாள்.
சரி என்றவன் அவளை ஒரு முறை கட்டி அணைத்து விடுவித்தான். அவள் இறங்கி திரும்பி திரும்பி பார்த்து கொண்டே உள்ளே சென்றதும் கிளம்பிவிட்டான்.
மறுநாள் வழக்கம் போல் ஆஃபீஸ் சென்றாள் மது.
சீட்டில் போய் அமர்ந்தவள் பக்கத்தில் இருந்த ஊர்வசியிடம் “என்ன ஊர். பொங்கல்லாம் எப்படி போச்சு” என்று கேட்டாள். அதற்கு மதுவை திரும்பி பாவமாக பார்த்தாள்.
“என்ன ஊர் உன் லுக்கே சரியில்லையே. என்னாச்சு?”
“உன்னட்ட பேசணும் மது. வாயேன் ரெஸ்ட் ரூம் போயிட்டு வருவோம்”
“ஏன் ஊர். பேசறதுன்னா இங்கயே பேசு. இல்ல பக்கத்துல ஸ்டார்பக்ஸ் போகலாம். எனக்கு காஃபி குடிக்கணும் போல இருக்கு”
அதற்கு ஊர் முறைத்து கொண்டே “இல்ல ரெஸ்ட் ரூம் தான் போகணும்” என்றாள் .
“சரி வந்து தொலையும்” என்று சொல்லிக்கொண்டே ரெஸ்ட் ரூம் சென்றாள் மது ஊர்வசியுடன்.
அங்கு சென்றதுதான் தாமதம் மதுவை கட்டிக்கொண்டு ஓ என்று அழுதாள் ஊர்வசி. மது பயந்து போய் விட்டாள்.
“ஹே என்ன ஆச்சு. ஏதும் ப்ராபலமா. பூஜா எதும் வம்பு பண்ணாளா. சொல்லிட்டுதான் அழுவேன் ஊர். எதுவா இருந்தாலும் உன் அத்தை பையன்கிட்ட சொல்லலாம்ல”
“ம்ஹும் அவர்தான்”
“அவர்தான்…”
“அவர்தான் என்ன கட்டி பிடிச்சு முத்தம் குடுத்து ஐ லவ் யூ சொல்லிட்டார்”
என்னமோ என்று நினைத்து கொண்டிருந்த மது, ஊர் சொன்னதை கேட்டதும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள் “அதுக்கு ஏன் ஊர் அழற. உனக்கும் தான் அவர பிடிக்குமே” என்று மது கேட்டதற்கு விடாமல் அழுது கொண்டிருந்தவளிடம் “என்ன ஊர், அவர பிடிக்கும் தான”
ம் ம் என்று அழுது கொண்டே தலையாட்டினாள்.
“அப்புறம் ஏன் இப்படி அழுது தொலைக்கிற” அவள் அதட்டியதில் கொஞ்சம் தெளிவானவள்
“அது அப்பாவ நினைச்சாதான் பயமா இருக்கு”
“இதுல நீ ஏன் பயப்படற. உங்க அத்தை பையன் பேரென்ன பிரசாத் தான. அவர விட்டே உங்க அப்பாட்ட பொண்ணு கேட்டா ப்ராப்லம் சால்வ்ட். இதுக்கு ஏன் நீ இப்படி பயப்படற”
“பிரசாத்தும் நா பாத்துக்கிறேன்னு தான் சொன்னாரு. ஆனா அப்பா என்ன திட்டினாருன்னா. ஏற்கனவே பிரசாத் இருக்க வீட்ல தங்குனா, இப்படி ஏதாவது வரும்ன்னுதான் என்ன தங்க விடல”
“ஏண்டி ஆஸ்திரேலியா காரனையே லவ் பண்ணிட்டு நா அசால்ட்டா நின்னுக்கிட்ருக்கேன். நீ அத்தை பையன லவ் பண்ணிட்டு இப்படி படுத்துற. உங்க அத்தைய விட்டு பொண்ணு கேக்க சொல்லு டி. ஒரு பிரச்னையும் வராது”
“அப்படிங்கரியா”
“ஆமா. அப்படித்தான். இப்ப வா. வந்து உங்க அத்தை பையன் உனக்கு முத்தம் கொடுத்ததுக்கு ஸ்டார்பக்ஸ்ல காஃபி ட்ரீட் குடு” என்று அழைத்து கொண்டு போனாள்.
(வருவாள்…)
error: Content is protected !!