ஏ1 ஈவெண்ட்ஸ்ஸின் அஜந்தாவை பூக்கடையில் பார்த்ததுமே ராகா குதுகலித்துப் போனாள். அஜு, ராகாவின் நட்பு வட்டம் தான். நெருங்கிய தோழி என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்ற போதும், “ஹாய், பாய்” என்னும் அளவு நல்ல பழக்கவழக்கம் உண்டு.
அதிலும் அஜு கொஞ்சம் லொட லொடா வாய் வேறு. சிறிதளவு பேசத் துவங்கினால் போதும், மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் கறந்துவிடலாம். இதைத் தெரிந்திருந்த ராகா, சற்றே தூரத்தில் நின்றிருந்த அஜூவைக் கைகாட்டி அழைத்தாள்.
ராகாவின் அருகே மலர் குவியல் பைகளுடன் நின்றிருந்த மைக்கில் சற்றே பதறினான். “ஏ, என்ன பண்ணற? அஜூவை ஏன் இப்போ கூப்படற! நம்ம பர்சேஸ் தான் முடிஞ்சுதுல! வா போலாம்” என்று ராகாவை அங்கிருந்து இழுத்துச் செல்லவே பார்த்தான். அவன் பேச்சைக் கொஞ்சமும் காதில் போட்டுக் கொள்ளாத ராகா இவள் அழைக்க அருகே வந்திருந்த அஜூவிடம் பேச்சு கொடுத்தாள்.
“ஏ என்ன அஜூ பேபி, ஆளே இளைச்சுப் போயிட்ட, கண்ணுக்கு கீழ டார்க் சர்கிள்ஸ் வேற! ஒரு கன்சீலராவது போட்டுட்டு வெளிய வர்றது இல்லையா?” என்று உரிமையாக கண்டித்துக் கொண்டு தான் பேச்சைத் துவங்கினாள் ராகா. ராகாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகவில்லை. அஜு தன் புலம்பலைத் துவங்கியிருந்தாள்.
“ராகா உனக்கு தெரியாதா டா எங்க அனி மேம் பத்தி! சும்மா புழிஞ்சு எடுக்கறாங்க! அதுலையும் இப்போ எடுத்திருக்க ஈவெண்ட் வேற கொஞ்சம் பெரிய ஆளுங்க. கேட்கவா வேணும். இப்போ கூட பாரு, நாளைக்கு மூணு ஈவெண்ட் பிரசண்டேஷன். சாம்பிள் அரேஞ்ச்மெண்ட்ஸ் அண்ட் கலர் தீம்ஸ் காட்டணும் கிளையண்டுக்கு. அதான் பயங்கர டென்ஷன்ல சுத்திட்டு இருக்கேன்”
“அச்சோ! வெரி சாரி அஜு. ஆனாலும் உன் அனி மேம் கொஞ்சம் அரோகெண்ட் தான். உனக்கு இன்னும் கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருக்கணும் அவங்க. மூணு ஈவெண்டுக்கு நீ சோலோ வா எப்படி பர்சேஸ் பண்ணுவ டார்லூ. வெரி பிட்டி ஆஃப் யூ!?”
“ஆமா ராகா! மூணு ஈவெண்டுக்குமே நான் தான் பர்சேஸ். இதுல என்ன கொடுமைன்னா, எல்லாமே வேற வேற டேஸ்ட், வேற வேற செட்டப், கலர் சாய்ஸ், பூ, செட்டிங்கஸ்னு எல்லாமே டிஃப்ரெண்டா இருக்கு.”
“யா யா! அப்படித்தானே இருக்கும். நீங்க பெரிய கம்பெனி வேற சோ, எல்லா நல்ல நல்ல கிளையண்டும் வருவாங்க். யாரையும் மிஸ் பண்ண முடியாதே!” என்று அவர்களைச் சற்றே கீழே இறக்கித் தான் சொன்னாள் ராகா. ராகாவின் புகழ் பேச்சிற்கு மயங்கிப் போன அஜு, இன்னமு நிறைய உளறினாள்.
“ஒரு கபுள்க்கு டெஸ்டினேஷன் வெடிங். இன்னொரு கபிள்க்கு ஃப்ளவர் டெகரேஷன் அதிகமா இருக்கணும். ஸ்பிரிங்க் தீம் வெட்டிங்க். இது ரெண்டும் கூட பரவாயில்ல, மூணாவது ஒரு டெலிவிஷன் ஆக்டர். சோ, அவங்களுக்கு எல்லாமே ஃப்ளாஷியா இருக்கணுமாம். கலர்ஸ், பூ, தீம் செட்டப் எல்லாமே” என்று ராகாவின் தூண்டுதலில் அஜு அவளுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.
“அப்படியா? என்ன மாதிரி கலர் தீம்ஸ் போறீங்க?” என்று ஆர்வமே இல்லாதவள் போல ராகா வினவினாள்.
“அதுவா! இரு, எனக்கு கலர்ஸ் கன்ஃபூஷன் வந்துடக் கூடாதுன்னு நான் எல்லாமே டேப்ல சேஃப் பண்ணி இருக்கேன்.” என்ற அஜு, அவள் பையில் இருந்து ஆப்பிள் டேப்பை எடுத்து, ராகாவிடம் நீட்டினாள்.
அதை வாங்கி ஆர்வமில்லாமல் பார்ப்பவள் போல பார்வையிட்டாள். அந்த நேரம் அஜுவின் கைப்பேசி அலற, அதைக் காதிற்குக் கொடுத்துக் கொண்டே இரண்டடி முன்னால் நடந்தாள் அஜு. அந்த இரண்டடி இடைவெளியில் இருவருக்கு இடையிலும் மேலும் நான்கு பாதசாரிகள் குறுக்கிட்டுவிட, டேப்லெட்டில் செய்திகளை புரட்டிக் கொண்டே பின்தொடர்ந்தாள் ராகா.
அஜு பேசி முடித்து வந்ததும் அவளிடம் டேப்லெட்டை ஒப்படைத்துவிட்டாள். “அஜு நாளைக்கு எந்த ஹோட்டல்ல ஈவெண்ட் பிரசண்டேஷன்?”
“லீலா பேலஸ்ல.”
“ஓ, வாட் எ சர்பிரைஸ். எங்களுக்கும் நாளைக்கு லீலால ஒரு ஈவெண்ட் இருக்கு. ஆஃப்டர் லன்ச்டைம்”
“எங்க ஈவெண்ட்டும் ஆஃப்டர் லன்ச்டைம் தான். சரி நேரமாச்சு ராகா! நைஸ் டு சீ யூ! நாளைக்கு பார்க்கலாம். குட் லக் யா”
“யா யா, நைஸ் டு சீ யு டூ அஜூ டார்லு. டேக் கேர் பேப். வில் கேட்ச் அப் ஃபார் காபி சம்டைம்” என்று அஜுவிற்கு விடைகொடுத்தாள் ராகா. அஜு தன் கைப்பைகளுடன் முன்னால் செல்ல அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராகா, தன் ஆக்மார்க் ஈவில் விட்ச் புன்னகையுடன்.
மைக்கிலுக்குத் தான் குழப்பமாக இருந்தது. “நாளைக்கு நமக்கு லீலால எந்த ஈவெண்டும் இல்லையே! இவ எதுக்கு ஈவெண்ட் இருக்குன்னு பொய் சொல்லறா?” என்ற குழப்பத்துடன் சுற்றினான்.
ராகா அதன் பின்னர் கொஞ்ச நேரம் கூட வீணடிக்கவில்லை. அவசரமாக தன் கைப்பேசியில் இருந்து நடாஷாவிற்கு அழைத்து தன் மனதின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டாள். நடாஷாவிற்கு ராகாவின் “Fight for what you want” மனநிலை மிகவும் பிடிக்கும். தன் காரியம் வெற்றி பெற எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் ராகாவின் போக்கு நடாஷாவின் பெரிய பலம். அதனால் ராகாவின் யோசனைக்கு செவி மடுத்தாள்.
“நீ சொல்லறது கொஞ்சம் ரிஸ்கி தான். பட், இட் மைட் வர்க் அவுட். பார்க்கலாம். ஐ வில் சீ வாட் ஐ கேன் டு” என்று நடாஷா மறுமுனையில் சம்மதிக்கும் வரையில் ராகா தன் எண்ணங்களை நடாஷாவின் மனதில் பதியவைத்துக் கொண்டே இருந்தாள்.
ராகாவின் சம்பாஷனைய ஒரு பக்கமாக கேட்டுக் கொண்டிருந்த மைக்கிலுக்கு அவள் மீது சற்றே பயம் எழுந்தது. பயம் கலந்த மரியாதை என்பார்களே அது போல, “இவகிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கணும் கடவுளே!” என்ற எண்ணம் தோன்ற வைத்தது.
ராகா பேசி முடித்து, நடாஷாவிடம் நீண்ட நெடு நேரம் ஆகியும், அவள் உதட்டோரத்தில் இன்னமும் வீற்றிருந்தது அவள் ஈவில் விட்ச் புன்னகை.
******
அடுத்த தினம் ஒரு மணியளவில் லீலா பேலஸ் என்றழைக்கப்படும் அந்த பன்னாட்டு ஹோட்டலின் லாபியில் அமர்ந்திருந்தாள் ராகா. அவளுடன் நடாஷாவும் மைக்கிலும் உடனிருந்தனர்.
நடாஷா ரிஷப்ஷன் கவுண்டரில் அவளுக்குத் தெரிந்த மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்தாள். நடாஷாவையும் ராகாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த மைக்கிலுக்குத் தான் அங்கே என்ன நடக்கப் போகிறது என்று கொஞ்சமும் புரிந்திருக்கவில்லை.
நேற்று பூமார்கெட்டில் இருந்து அலுவலகம் திரும்பியதுமே ராகா, மிருதுளா – சத்யசாய்ராம் தம்பதியினரின் டிசைன் ஸ்கிரிப்டை எடுத்து வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நடாஷாவுடன் அமர்ந்திருந்தாள். இருவரும் பேசி முடிக்கவும், காலில் சக்கரம் கட்டிக் கொண்டவள் போல ராகா செயல்பட்டாள்.
மைக்கிலிடம் சில வேலைகள், வனிஷாவிடம் சில வேலைகள், தனக்கு இன்ன பணிகள் என கட்டளைகள் இட்டு வேலை வாங்கினாள். நேற்றைய தினம் இரவு மூவரும் உறங்கவில்லை. காலை பதினொரு மணியளவில் பணிகள் ஓரளவு முடிந்திருக்க, “ஒன் ஹ்வர் பிரேக். ரூமுக்கு போய் ஃப்ரெஷப் ஆகிட்டு நேரா லீலா பேலஸ் வந்துடணும்” என்று சொல்லியிருந்தாள்.
அவள் குளிக்கக் கூட தன் ரூமிற்குச் சென்றாளா என்று தெரியவில்லை. நேற்று போட்டிருந்த அதே நீல நிற ஜீன்ஸ்சுடனும், முக்கால்கை வெளீர் மஞ்சள் நிற சட்டையுடனும் தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.
சற்றைக்கெல்லாம் வனிஷா ஒரு மாற்று உடையுடன் அங்கே வந்துவிட்டிருக்க. அந்த ஹோட்டலின் ஒப்பனை அறையிலேயே துணி மாற்றிக் கொண்டு தயாராகிவிட்டாள் ராகா.
“ராகா, நல்ல வேளை அவங்க கான்ஃபரன்ஸ் ஹால்ல காமன் ஆஹ் புக் பண்ணலை. அப்படி பண்ணியிருந்தா நம்ம ப்ளானை எக்ஸிகியூட் பண்ண ரொம்ப கஷ்டம். நாலாவது மாடியில அடுத்தடுத்து மூணு ரூம்ஸ் தான் புக் பண்ணியிருக்காங்க. அதே ஃப்ளோர்ல நமக்கும் ரூம் புக் பண்ணியாச்சு” என்று சொல்லிய நடாஷா ராகாவின் கையில் அறையின் சாவியைக் கொடுத்தாள்.
“ஐ வில் சீ டு தட். நீ மேலே ரூம்ல போய் மத்த வேலை கவனி. இன்னும் ஒன் அவர்ல அவங்க வந்திடுவாங்க” என்று சொல்லி நடாஷா கண் சிமிட்ட, திருப்தியுடன் ராகா தன் வேலையில் கவனமானாள்.
*****
“திஸ் வே மேம்” என்ற மிருதுளா மற்றும் சத்யாவை அழைத்துக் கொண்டு அவர்களுடன் தொடர்ந்து வந்த ஹோட்டல் சிப்பந்தி, சரியாக இருவரையும் ராகா மற்றும் முழுவினர் இருந்த அறையின் வாசலில் கொணர்ந்து விட்டிருந்தான். சரியாக பத்து நிமிடத்தில் அதே சிப்பந்தியே மீண்டும் வந்து, “சாரி,மேம். இது உங்க ரூம் இல்ல. என்னோட மிஸ்டேக். இது ஷ்ருஷ்டீஸோட ஈவெண்ட் ரூம். உங்க ரூம் அடுத்தது. சாரி ஃபார் த டிரபுள் மேம்” என்று கூறி அவர்களை சரியான அறையில் விட்டுவிடுவான்.
இந்த ஏற்பாடு முழுக்க நடாஷாவினுடையது. அவள் கண்காணிப்பில் தோய்வின்றி நடந்தேறியது. அறையில் ராகாவோ மற்றவர்களோ அந்த நேரம் இருந்தால், இவர்கள் திட்டம் செயல்படாது என்பதால், லிஃப்டில் மிருதுளா-சத்யா ஏறும் சமயமே, தங்களது அறையில் இருந்து ராகாவும், மைக்கிலும் வெளியேறியிருந்தனர்.
சிப்பந்தி, மிருதுளாவையும் சத்யாவையும் அறையின் வாயில் வரையிலும் கொணர்ந்து விட்டுவிட்டு, “உங்க வெடிங் சாம்பிள் டெகரேஷன் இந்த ரூம்ல தான் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க.” என்று சொல்லி சென்றுவிட்டிருந்தான்.
அறையில் நுழைந்த மிருதுளா உண்மையில் பிரமித்துப் போனாள். அவள் ஆசைக் கனவை அப்படியே தத்ரூபமாக அங்கே உண்மை வடிவமாக்கியிருந்தனர். என்ன, தங்களது “ஏ1 ஈவெண்ட்ஸ்”தான் இதை செய்தது என்றே மிருதுளா நம்பினாள்.
“பரவாயில்ல சத்யா! நான் கூட அவங்க பிரசண்டேஷன் அவளோ இம்பிரசிவ்வா இல்லையே! நாலு கல்யாண கோஷ்டியை ஒரே இடத்தில உட்கார வச்சு பிரசண்ட் பண்ணியிருக்காங்களே! ஈவெண்ட் எப்படி டிசைன் பண்ணுவாங்களோன்னு நினைச்சேன். பட், திஸ் இஸ் மார்வலெஸ். எனக்கு பிடிச்ச,பேபி பிங்க் முத்து, அதுக்கு மேட்சிங்கா லைட் வயலட் க்ரிஸ்டல்ஸ், கொஞ்சம் பிரைட்னஸ் குடுக்க, டார்க் மெஜந்தா ஆர்கிட் அண்ட் கார்னேஷன் பூக்கள்னு என் மனசில இருந்த கற்பனையை அப்படியே கண்ணு முன்னால கொண்டு வந்துட்டாங்க சத்யா” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாள்.
சத்யாவிற்குமே நிம்மதி தான். “ஷ்ருஷ்ட்டீஸை விட்டுட்டு ஏ1 போறோமே! இவங்க மிருது மனசுக்கு பிடிச்ச மாதிரி டிசைன் பண்ணுவாங்களோ என்னவோன்னு நான் பயந்த மாதிரி இல்லாம, ரொம்ப க்ரியேட்டிவ்வா, அதே நேரம் க்ளாஸிக்கா பண்ணியிருக்காங்க.” என்று மெச்சுதலுடன் அறையை நோட்டம் விட்டான்.
ஆனால் இருவரது மகிழ்ச்சியும் சில நிமிடம் தான். சற்றைக்கெல்லாம், இவர்களை கொணர்ந்து அறையின் வாயிலில் விட்டுச் சென்ற சிப்பந்தி, மீண்டும் வந்துவிட்டிருந்தான்.
“வெரி சாரி சார். சாரி மேம். இது உங்க டெகரேஷன் ரூம் இல்ல மேம். இது வேற ஈவெண்டோடது.என்னோட மிஸ்டேக் மேம் இது. ப்ளீஸ் டோண்ட் கம்பிளைண்ட் டு த மேனேஜர் மேம். இன்னைக்கு நாலு ஈவெண்ட் மேம் இதே ஃப்ளோர்ல. அதனால கொஞ்சம் கன்ஃபூஷன்” என்று சொல்லி இருவரையும் வெளியே அழைக்க, மிருதுளாவின் முகம் வாடிப் போயிற்று.
அதிலும் அறையின் வெளியே ஹோட்டல் சிப்பந்தியின் பின்னால் நின்றிருந்த ராகாவைக் காணவும் மிருதுளா கொஞ்சம் போல தவித்தாள். ராகா மிருதுளாவை மட்டுமாகப் பார்த்து சினேகமாகச் சிரிக்க, மிருதுளா தன் பரிதவிப்பை மறைக்க சிரமமேதும் படாமல் அறையையே ஒரு ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டு வெளியேறினாள்.
அவள் பின்னால் சென்ற சத்யா, மறந்தும் கூட ராகாவின் பக்கம் முகத்தைத் திருப்பவில்லை. சத்யாவின் இந்த பாராமுகம் ராகாவின் மனதை ஒரு மாதிரி பிசைந்திருந்தது. அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “ஏன்? உனக்கு என்ன தான் பிரச்சனை என்கிட்ட? நான் என்ன உனக்கு ஜென்ம விரோதியா? அப்ப்ப்ப்ப்ப்ப்படி முகத்தை திருப்பிட்டு போற?” என்று கேட்டுவிடலாமா என்று கூடத் தோன்றியது.
கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவர்களது அறைக்குள் சென்றுவிட்டாள் ராகா.
“இந்த ரூம் தானா? ஆர் யூ ஸ்யூர்” என்று ஹோட்டல் சிப்பந்தியிடம் இரு தடவை கேட்டு விட்டே ஏ1 ஈவெண்ட்ஸ் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அறையினுள் சென்றான் சத்யா. அவனைத் தொடர்ந்து மிருதுளா உள்ளே நுழைய அந்த அறை சற்றே களோபரமாக இருந்தது.
அங்கே நின்றிருந்த அஜு தன் லேப்டாப்பையும் அவள் பாஸ் அனிதாவின் முகத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அறையின் பூக்களுக்கும் டெகரேஷன் நிறத்திற்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லாமல் இருந்தது.
“பீச் தீம் வெட்டிங்னு தெரியும்ல. அதுக்காகத் தானே ப்ரைட் யெல்லோல ஃபளவர்ஸ் டிசைட் பண்ணோம். இங்க பாரு. பீச் தீம்க்கு அதே லை ப்ளூகலர்ல கார்னேஷன் ஃப்ளவர்ஸ் வச்சிருக்க. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ அஜூ. அங்க, அந்த டீ.வி ஆக்டர் வெடிங் ரூமும் இதே கதை தான். ஆல்ரெடி ஃப்ளாஷியா இருக்க, ரெட் அண்ட் கோல்ட் தீம், அங்க போய் அடிக்கற யெல்லோ ஃப்ளவர்ஸ் வச்சு டெகரேட் பண்ணியிருக்க.” என்று கத்திக் கொண்டிருந்தாள் அனிதா.
“இல்ல மேம். நீங்க சொன்ன இன்ஸ்டிரக்ஷன் படி தான் அரேஞ்ச் பண்ணேன்.”
“மை காட் அஜூ. நீ கலர்ஸ் அண்ட் ப்ளவர்ஸை மிக்ஸ் அப் பண்ணிடக் கூடாதுன்னு தானே எல்லா இன்ஸ்டிரக்ஷனும் டேப்லெட்ல ஸ்டோர் பண்ணி வைக்க சொன்னேன். அதை செஞ்சியா நீ?”
“மேம் பண்ணேன் மேம். அந்த லீஸ்டை பிரிண்ட் போட்டு தான் வர்கர்ஸ்கிட்ட குடுத்தேன்”
“வர்கர்ஸ் மேல பழி சொல்லாத அஜூ. நீ என்ன குடுக்கறையோ அதைத் தான் அவங்க செய்வாங்க. பிரசண்டேஷன் அப்போ நீ கூட தானே இருந்த! அவங்க மாத்தி செட் பண்ணறப்போ நீ க்ராஸ்செக் பண்ணனுமா இல்லையா?” என்று அனிதா கேட்க, அஜு பதில் சொல்லாமல் தலை கவிழ்ந்து நின்றுகொண்டாள்.
அவளுக்கு தன் மீது எங்கே தவறு என்றே தெரியவில்லை. ஆப்பிள் டேபில் தான் சேமித்து வைத்திருந்த அலங்காரமும் இங்கே அறையில் இருந்ததும் ஒன்று தான். அதிலும், அனிதா நேற்றும் அதன் முன் தினமும் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. வேறு க்ளையண்டுகளுடன் மீட்டிங்கில் இருந்தாள்.
“சாரி மேம். மூணு டெக்ரேஷனும் அட் எ டைம்ல பார்த்ததால இந்த கன்ஃபியூஷன். ஐ வில் சால்வ் இட்” என்று சொல்லிய அஜுவை ஏறிட்டுவிட்டு, அறையில் நுழைந்த மிருதுளா மற்றும் சத்யாவிடம் சமாதானம் பேசினாள் அனிதா.
“ஐ எக்ஸ்டிரீம்லி சாரி மிஸ்டர் சத்யா. ஒரு ஸ்மால் கன்ஃபியூஷன். வி வில் சால்வ் இட் இன் எ ஃப்யூ மினிட்ஸ். ப்ளீஸ் என்ஸ்கியூஸ் அஸ்” என்று சொல்லிவிட்டு, மற்ற இரு அறைகளிலும் சென்று பரிசோதனை செய்யத் துவங்கினாள் அனிதா.
“வி வில் வெயிட் அட் த ரெஸ்டொரெண்ட்” என்று சொல்லிய சத்யா, மிருதுவை அழைத்துக் கொண்டு லிஃப்ட் நோக்கி நகர, அந்த நேரம் மிருது சத்யாவை விட்டு அகன்று நேராக ஷ்ருஷ்டீஸின் அறையினுள் சென்றாள்.
“ஏ மிருது!” என்று சத்யா அழைத்தம், “ஒன் மினிட் சத்யா! நான் கொஞ்சம் பிக்ஸ் மட்டும் எடுத்துட்டு வர்றேன் ரெஃபரென்சுக்காக” என்று உள்ளே செல்லவும், அங்கே அந்த அலங்காரங்களை மெல்ல கழற்றிக் கொண்டிருந்தாள் ராகா.
மிருது உள்ளே நுழைந்ததை சற்று எதிர்பாராதவள் போல, முகத்தில் கொஞ்சம் சோகத்தை தேக்கிக் கொண்டு நடமாடினாள். மிருது உள்ளே வரவும், ஒரு நொடி முகத்தில் சிரிப்பை உதிர்த்து, அடுத்த கணமே “ஓ, நீங்களா? நாங்க கூட எங்க க்ளையண்ட்னு நினைச்சுட்டேன். உங்க ஏ1 ஈவெண்ட்ஸ் ரூம் பக்கத்துல இருக்கு. இது இல்ல” என்று பட்டும் படாமல் பதிலளித்தாள் ராகா.
இதற்குள் நடாஷா எழுத்து மிருதுவின் அருகே வந்து, “சொல்லுங்க மேம். வாட் கேன் வி டூ ஃபார் யூ”என்று முன்பின் அறிமுகமில்லாவள் போலவே பேசினாள்.
“கேன் ஐ க்ளிக் சம் பிக்சர்ஸ் நடாஷா?” என்று மிருது சற்றே தயத்துடன் வினவ, நடாஷாவிற்கு கோபம் வந்துவிட்டது. அதாவது கோபித்துக் கொண்டவள் போல அருமையாக நடித்தாள்.
நடாஷாவிற்கு இந்த மேல் தட்டு வர்க்கத்தின் மூளை எப்படியெல்லாம் வேலை செய்யும் என்று தெரிந்தது. தானாக தட்டில் கொணர்ந்து கண் முன்னால் நீட்டப்படும் போது பிடிக்காத பலகாரம், பக்கத்து மேஜையில் கைக்கெட்டா தூரத்தில் மற்றவரிடம் இருக்கும் போது மிகவும் பிடித்தமானதாகத் தோன்றும். தனக்குக் கிடைக்காதது எப்படி மற்றவருக்குக் கிடைக்கலாம் என்ற குணத்தை பலரிடம் கண்டிருக்கிறாள் நடாஷா.
அதனால் தான் மிருதுவிடம் அவள் சற்றே கோபமாகப் பேசியதும். மிருதுவின் முக வாட்டத்தைப் பார்த்து சற்றே இறங்கிப் பேசினாள் ராகா.
“இட்ஸ் ஒ.கே நட்ஸ். லெட் ஷி டேக் பிக்ஸ். இந்த செட்டிங்கும் உங்க கடற்கரை டெஸ்டினேஷன் வெடிங் மாதிரி தான். என்ன இதை ஏற்பாடு செய்ய சொன்ன கபிள் வேற ஒரு பெரிய கம்பெனிக்கு போயிட்டாங்க. பண்ண ஏற்பாடெல்லாம் வேஸ்டா போச்சு.” என்று கண்களைப் பலவிதமாக உருட்டி, ஏற்ற இறக்கத்துடன் பேசினாள்
“எல்லாருக்கும் பெரிய பேனர் தான் தேவைப்படுது. நல்ல வர்க் எங்க இருக்குன்னு பார்க்க மாட்டேங்கறாங்க. இந்த டெக்ரேஷன்காக ரெண்டு நாளா தூங்காம கண் முழிச்சு எங்க டீம் வேலை பார்த்திருக்கு. ஆனா, நாங்க வளர்ந்து வர்ற சின்ன கம்பெனி தானே! சோ, ஈஸியா எங்களை வேண்டாம்னு சொல்லிடலாம்.” என்று உச்சு கொட்டினாள் ராகா.
அவள் பேசுவதைக் கேட்கக் கேட்க மிருதுவின் முகத்தில் அவர்கள் எதிர்பார்த்த மாறுதல் நடந்தது. அதை உணர்ந்த ராகா, “இதோ இப்போ கூட பாருங்க நட்ஸ், பக்கத்துல ஏ1ல அட் ஏ டைம்ல மூணு ஈவெண்ட்ஸ் ஹோஸ்ட் பண்ணறாங்க. கலர் காம்பினேஷன், ஃப்ளவர் அரேஞ்ச்மெண்ட்ஸ்னு எல்லாமே சொதப்பல். என் ஃப்ரெண்ட் அஜு அங்க தானே வர்க பண்ணறா! ரொம்ப புலம்பினா. அவங்க அனிதா மேம் இன்னைக்கு காலையில தான் இந்த பக்கமே எட்டிப் பார்த்தாங்களாம்.”
“ஆனா நாங்க எப்பவும் ஒரு ஈவெண்ட் முடிச்சுட்டு தான் அடுத்த ஃபன்ஷன் பத்தியே யோசிப்போம். ஒவ்வொரு க்ளையண்டும் எங்களுக்கு இம்பார்டெண்ட். ஒரே நேரத்தில மூணு நாலு ஈவெண்ட்லாம் ஹோஸ்ட் பண்ணா எல்லாமே முன்ன பின்ன தான் இருக்கும். இன்னைக்கு வெறும் ட்ரையல் டெகரேஷன். அதும் சின்ன லெவல்ல, ஹோட்டல் ரூம்ல. அதுக்கே இவளோ சொதப்பல். இதுல அவளோ பெரிய மண்டபத்தில, அவளோ கெஸ்டை வச்சுகிட்டு எப்படி சமாளிப்பாங்க?” என்று கேட்டுவிட்டு, நேராக மிருதுவின் அருகே சென்று தீர்க்கமாக மிருதுவின் கண்களைத் தன் முகத்தில் கொக்கி போட்டு நிறுத்திக் கொண்டாள்.
“உங்களது டெஸ்டினேஷன் வெடிங் வேறல மிருதுளா மேம். எப்படி அந்த டைம்ல அனிதா அண்ட் டீம் உங்க கூட உங்க இடத்தில இருப்பாங்களா? இல்ல, இங்க நடக்கற வேற வெடிங்ல கலந்துக்குவாங்களா? இதெல்லாம் நல்லா கேட்டுக்கோங்க! ஏன் சொல்லறேன்னா, அந்த டி.வி சேனல் ஆக்டர் வெடிங்க்கும் முன்ன பின்ன உங்க டேட்ஸ்ல தான் நடக்கப் போகுது. பெரிய பப்ளிசிட்டி தரக்கூடிய ஈவெண்ட் அது. நிறைய ஸ்டார்ஸ் வருவாங்க. அவங்க கம்பெனிக்கு இலவசமா விளம்பரம் கிடைக்கும். சோ, அங்க தான் இம்பார்டன்ஸ் போகும்.” என்றாள் ராகா சற்றே கம்மிய குரலில்.
ராகா மற்றும் நடாஷாவின் சம்பாஷணையின் தாக்கம் ஏங்கே சென்று கொண்டிருந்தது என்பதை சத்யாவால் பூரணமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. “பேப்..” என்று சத்யா மிருதுளாவிடம் பேசத் துவங்க, அதற்கு வாய்ப்பளிக்காமல் நடாஷா தடுத்து விட்டாள்.
நடாஷா மிருதுவின் கைகளை எடுத்து அவள் கைகளுக்குள் பொதித்துக் கொண்டு இதமாய் அழுத்தி விட்டு மேலே பேசினாள். “காசு குடுத்தா வேலை பார்க்க ஆயிரம் ஆளுங்க கிடைப்பாங்க மிருது மேம். ஆனா, எங்களை மாதிரி டெடிகேட்டட் டீம் கிடைக்காது. இன்ஃபாக்ட் இந்த டெகரேஷன் ஐடியா கூட உங்க டேஸ்ட்ல இம்பிரஸ் ஆகி நாங்க டிசைன் பண்ணது தான். உங்க ஆசைகள் கனவுகளை நீங்க அவளோ அழகா விவரிச்சீங்க. அப்போ நாங்க எடுத்த நோட்ஸை ரெஃபர் பண்ணி, உங்க யூனிக், க்ளாஸிக் டேஸ்டை புரிஞ்சுகிட்டு நாங்க பண்ண டிசைன்ஸ்.” என்று கூற, மிருதுவின் முகம் சற்றே பிரசாசித்தது.
நடாஷா மிருதுவிடம் பேசிக் கொண்டிருந்த நேரம், ராகாவின் கண்கள் சத்யாவைத் தான் நோட்டம் விட்டன. “நல்லா போயிட்டு இருக்கு. இவன் எங்கையாவது நடுவுல வந்து கலைச்சு விட்டற போறான்” என்று அவனைக் கண்காணிக்கும் பொருட்டே சத்யாவிடம் பார்வையைத் திருப்பினாள் ராகா. சத்யாவும் மிருதுவிடம் கவனம் பதித்திருந்தாலும் இம்முறை ராகாவை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதெல்லாம் உன் மாஸ்டர் ப்ளானா?” என்று கண்களாலேயே அவளிடம் கேட்டுவிட, ஒரு ஒற்றை நமுட்டுச் சிரிப்பை ராகா வெளியிடுவாள் என்று சத்யா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“நான் மனசில நினைச்சது புரிஞ்சு இவ சிரிக்கறாளா?” என்ற ஐயம் தோன்ற, அவனையும் அறியாமல் அவன் கீழ் வரிசைப் பற்களால் கீழுதட்டின் ஓரத்தை மெல்ல கடித்த வாக்கில் யோசிக்கலானான்.
ராகாவின் பார்வை அவன் உதட்டைச் சுற்றி ஒரு கனம் படர்ந்து மெல்ல மீண்டது. ஒரு பக்கம் தலையைச் சாய்த்து, கீழுதட்டைக் கடித்துக் கொண்டே சத்யா எந்த வித நோக்கமும் இன்றி ராகாவைப் பார்க்க, அவளுக்கோ சில நொடி தான் என்ன செய்து கொண்டிருந்தோம் என்பதே மறந்து போயிற்று. காது மடலின் ஓரத்தில் செம்மை பூத்து, கன்னம் சூடாவது போல உணர்ந்தவள், நொடியில் தன்னை சமன் செய்தாள்.
“ஏ ஃபூல். கான்செண்டிரேட் பண்ணு. அங்க என்ன வேடிக்கை?” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு சத்யாவிடமிருந்து தன் பார்வையை வலுவில் மீட்டு, மிருதுவின் பக்கம் திருப்பினாள். நடாஷா இன்னமும் மிருதுவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“உங்களை பிக்ஸ் எடுக்க வேண்டாம்னு சொன்னதுக்கு சாரி மிருதுளா மேம். ப்ளீஸ் நீங்க எவளோ பிக்ஸ் வேணாலும் எடுத்துக்கோங்க. நீங்க இதையே உங்க ஏ1 டீம்ல காட்டி கூட டிசைன் பண்ண சொல்லுங்க. வி டோண்ட் அப்ஜெக்ட். என்ன இன்ஸ்டிரக்ஷன்ஸ், எவளோ பிக்சர்ஸ்னு நாம காட்டினாலும், எக்ஸிக்யூஷன் பார்ட்னு ஒன்னு இருக்கு. அதுல இன்னைக்கு பெங்களூர்ல எங்க டீமுக்கு நிகர் நாங்க தான்.” என்று பெருமையுடன் முடித்துக் கொண்டாள் நடாஷா.
அவள் எதிர்பார்த்த முக மாறுதல் அனைத்தும் மிருதுளாவிடம் தோன்றிவிட்டிருக்க, இனிமேல் இந்த விஷயத்தை மிருதுளாவும், அவள் ஈகோவும் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாள். நடாஷாவும் ராகாவும் எதிர்பார்த்தது போலவே மிருது அடுத்து பேசினாள்.
“வி ஆர் வெரி சாரி ஃபார் நாட் சூசிங் யூ நடாஷா. ப்ளீஸ் டேக் அஸ் அகேன். எங்க கல்யாணத்தை பர்பெக்டா நடத்த நீங்க தான் ரைட் சாய்ஸ்” என்று மிருது பேசத் துவங்கவும், சத்யா அவள் அருகே வந்துவிட்டிருந்தான்.
“பேப்..” என்று அவன் என்னவோ சொல்லத் துவங்க, “ப்ளீஸ் சத்யா. ப்ளீஸ் டோண்ட் இண்டர் ஃபியர் அகேன். உங்க டெசிஷன் அண்ட் சாய்ஸ் எப்படி இருந்துச்சுன்னு நீங்களே பார்த்தீங்க தானே! பெரிய கம்பெனி, நல்லா பண்ணுவாங்கன்னு தானே நீங்க என்னைக் கன்வின்ஸ் பண்ணீங்க. சீ ஹவ் தே ஆர்? ஐ டோண்ட் வாண்ட் ஏ1 எனி மோர். வி ஆர் கோயிங் வித் ஸ்ருஷ்டீஸ்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டிருந்தாள் மிருதுளா.
மிருதுவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அருகே நின்றிருந்த ராகா, தன் ட்ரேட் மார்க் புன்னகை மாறாமல், “எப்படி திரும்ப கிளையண்டை பிடிச்சோம் பார்த்தியா?” என்ற தினுசில் சத்யாவை திரும்பிக் பார்க்க, அவனோ வீம்பாக அவள் பக்கம் திரும்பாமல் நின்று கொண்டான். ஆனாலும் அவன் இதழ் ஓரத்தில் கண்களுக்குப் புலப்படாமல் மெல்லமாய் தோன்றி, மின்னல் வேகத்தில் மறைந்து போன மெச்சுதல் சிரிப்பை ராகா கவனித்தாள் தான்.
இந்த விளையாட்டில் ரொம்பவும் திணறிப் போனது மைக்கில் தான். மைக்கிலுக்கு ஏ1ன்னில் இந்த களோபரம் நடக்க ஒருவேளை ராகா தான் காரணமோ என்ற ஐயம் தோன்றியது. “ஒருவேளை அஜுவோட ஆப்பிள் டேப்ல இன்ஸ்டிரக்ஷன்ஸை ராகா மாத்தியிருப்பாளோ! வெறும் ஐஞ்சு நிமிஷம் கூட ராகா கையில டாப் இல்லையே! அந்த கேப்ல இவளோ வேலை பார்க்க முடியுமா? சே சே இருக்காது. ராகா அப்படியெல்லாம் பண்ணியிருக்க மாட்டா! ஒருவேளை நாம தான் ராகாவை தப்பா நினைக்கறமோ! ஏ1 அவங்களாவே சொதப்பியிருப்பாங்களோ!”
ஆனால், பத்தடி தூரத்தில், தன் ஈவில் விட்ச் புன்னகையுடன் சத்யாவை ஏறிட்டபடிக்கு நின்றிருந்த ராகாவைக் காண்கையில், “இவ செஞ்சாலும் செஞ்சிருப்பா!” என்ற முடிவே ஏற்பட்டது மைக்கிலுக்கு.