Skip to content
Post Views: 1,166

அந்த மலையில்
“ஏலே முருகா… எங்க போயிட்டு வர…. ஆச்சி உன்ன தேடிட்டு இருந்தது… போய் பாரு….” என்று அவனின் அம்மா கருப்பாயி கூறினார்
Advertisement
அவனும் “சரி ஆத்தா ஆச்சி எங்க….. கற்பகம் அம்மா கிட்ட முன்னேற்றம் இருக்கா… தேவா அண்ணா ரொம்ப கோவ பட்டாங்க ஏன் முன்னாடியே சொல்லல அப்டினு” என்று கூறினான்….
“பாவம் அந்த தம்பி…. சொந்த வீட்டுலயே தப்பு பண்ணி இருக்காங்க.. எப்படி தாங்கிச்சோ… சித்ரா அம்மா உண்மை தெரிஞ்சா துடிச்சு போயிடுவாங்க….” என்று புலம்பலை ஆரம்பித்தார் கருப்பாயி…
“ஏய் புள்ள… தம்பி ஆச்சி எங்க இருக்குனு கேட்டுச்சுல அத சொல்லாம புலம்புற… தம்பி ஆச்சி ஆத்து கிட்ட இருக்கு…” என்று கூறினார் முருகனின் அப்பா முனியன்…..
Advertisement
“ஐயா எதுக்கு இப்ப ஆச்சி ஆத்துக்கிட்ட போச்சு… தனியா தான் போச்சா…. இப்ப கற்பகம் அம்மா கிட்ட யாரு இருக்கா” என்று கோவமாக கேட்டான் முருகன்…
Advertisement
“தம்பி கோவப்படாத…. மருமக பொண்ணு தான் ஆச்சிய ஆத்துக்கிட்ட கூட்டிட்டு போச்சு… கற்பகம் அம்மா கிட்ட உன் தங்கச்சி கயல் இருக்கா” என்று கூறினார்….
மருமக பொண்ணு என்று கேட்டு முருகனின் முகம் நொடிக்குள் பிரகாசம் ஆகியது….
“சரி ஐயா ஆச்சிய போயி பாத்துட்டு வரேன்” என்று கூறி விட்டு ஆற்றை நோக்கி நடந்தான்…
அதற்குள் யாரு இவர்கள் என்று பாக்கலாம்…. இந்த முருகன் தான் எந்த எக்ஸ்(X) மனிதன்… வயது இருபத்தி இரண்டு தான் ஆகிறது மலைவாழ் மக்களின் விதிபடி இவனுக்கு இருவது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது… மனைவியின் பெயர் ரோஜா… இவளுக்கு முருகனுடன் பதினெட்டு வயதில் திருமணம் ஆகியது… தற்போது கர்ப்பமாக உள்ளாள்.. ஆறு மாதம் நடைபெற்று கொண்டு உள்ளது…..
Advertisement
தந்தை முனியன் தாய் கருப்பாயி இவனுக்கு தங்கை ஒருத்தி உள்ளாள்
கயல் … தற்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டு உள்ளாள்… தினமும் அந்த இடத்தில இருக்கும் பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர்கள் ஆற்று வழியாக சென்று வருவர்…
அந்த ஆற்றில் இதுவரை எந்த வெள்ளபெருக்கும் ஏற்பட்டது இல்லை…. எவ்வளவு மழை பெய்தாலும் அங்கு வெள்ளம் வந்ததே இல்லை… அந்த ஆற்றின் கரையில் ஒரு குட்டி முருகன் சிலை இருக்கும்… அங்கு இருக்கும் மக்கள் எல்லாம் எந்த காரியம் ஆரம்பித்தாலும் அங்கு இருக்கும் முருகனை வேண்டி கொண்டு தான் ஆரம்பிப்பர்….
ஆற்றுக்கு செல்லும் முன் ஒரு குடிலுக்கு சென்றான்… அங்கு ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி இருந்தார்… முருகனைப் பார்த்ததும் அவரின் கண்கள் ஒளி பெற்றது…
“அம்மா கவலை படாதீங்க மதி ஐயா மேல எந்த தப்பும் இல்லனு சீக்கிரம் நிரூபிக்கலாம்… ஐயா வெளிய வர அப்ப நீங்க குணமாகி இருக்கனும்… சீக்கிரம் எந்திரிச்சி நடங்க” என்று கூறினான்…
அவரும் முகத்தில் சந்தோசத்துடன் சரி என தலை அசைத்தார்…. அவரிடம் இருந்து விடைபெறும் போது தன் தங்கையிடம் “ஏய் குட்டி சாத்தன் அம்மா தூங்கட்டும்…. நொய் நொய்னு பேசிட்டு இருக்காத” என்று கூறிவிட்டு ஆற்றை நோக்கி நடந்தான் வேகமாக…
அவன் அவ்வளவு வேகமாக சென்றது அவனின் மனைவியை பார்க்க தான்… ஆனால் முதலில் அவன் கண்டது அவன் ஆச்சி என்று சொல்பவரை தான்….
“ஆச்சி ரெண்டு பேரும் எதுக்கு இப்ப ஆத்துக்கு வந்திங்க…. மணல் எதோ சரிச்சி விட்டா என்ன ஆகும்” என்று கடுமையாக கேட்டான்…
இதை கேட்டு ரோஜாவோ முகத்தை சுருக்கினாள் என்றால் அந்த ஆச்சியோ “அப்டி தான்டா வருவோம்….. நான் என் பேத்தியை நல்லா பாத்துப்பேன்…. ரெண்டு நாள் பாக்காம தவிக்க விட்டு போயிட்டு இப்ப பெரிய இவனாட்டம் பேசுற” என்று அவனிடம் எகிறினார் ….
“உன்ன இத்தனை வருஷம் மருதநாயகம் ஐயா ஊருல இல்லாத அப்ப லட்சுமி அம்மா எப்படி சமாளிச்சாங்களோ தெரியல மணி ஆச்சி” என்று கூறினான்….
ஆம் மருதநாயகம் தாயார் ருக்மணி தான்…. அவர் எப்படி மருதநாயகத்துடன் இல்லாமல் இங்கு என்ன செய்கிறார் என்று கதையின் போக்கில் பாக்கலாம்…..
“டேய் மணினு சொல்லாத… எத்தனை தடவ சொல்றது.. அது என் புருஷன் மட்டும் கூப்புடுற பேரு ருக்குனு கூப்புடு…” என்று கூறினார்…
“சரி ஆச்சி…. இப்ப என்ன நடந்துச்சு சொல்லவா… இல்லை இப்படியே வெட்டி நியாயம் பேசலாமா” என்று கேட்டான்…
“சரிடா சொல்லு.. என் மகன் எப்படி இருக்கான்… நிலாம்மா கிட்ட முன்னேற்றம் இருக்கா…” என்று கேட்டார்…
“ஐயா நல்லா இருக்காரு ஆச்சி…. நிலாம்மாக்கு இப்ப பரவால்லனு உங்க வீட்டு தோட்டகாரர் சொன்னாரு… இப்ப நிலாம்மா கிட்ட முன்னேற்றம் தெரியுதாம்” என்று கூறினான்…
“ராசா எப்படி சாமி இருக்கு” என்று மதியைக் கேட்டார் ஆச்சி… அவர் கேட்டதும் அவனின் முகம் சோர்ந்து விட்டது… அவனின் சோர்ந்த முகத்தை பார்த்து ஆச்சி பதறிவிட்டார்…
“டேய் முருகா என்ன சொல்ற…. ராசாக்கு ஒன்னும் இல்லல… ஏதாவது சொல்லுடா…” என்று பதறி போய் கேட்டார்…
“ஆச்சி பதறாத… ஐயாக்கு ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்காரு” என்று பொய் கூறினான் அவரிடம்…
“உண்மைய சொல்லு முருகா உன் கண்ணுல பொய் இருக்கு” என்று கூறினார் ஆச்சி…
இனிமேல் மறைக்க முடியாது என நினைத்து அந்த ஜெயிலர் அடித்தது…. அவனை இரண்டு நாள் பட்டினி போட்டது… தற்போது மருத்துவமனையில் உள்ளது என அனைத்தையும் கூறி முடித்தான்…
கேட்ட இரண்டு பேரும் கலங்கி விட்டனர்… ஆச்சி தான் புலம்ப ஆரம்பித்தார்.. அவரை சமாதானம் செய்து “ஆச்சி கற்பகம் அம்மா கிட்ட சொல்ல கூடாது… வா இருட்டுற மாதிரி இருக்கு வீட்டுக்கு போலாம்….” என்று கூறி அழைத்து சென்றனர்…
அந்த இடத்தில் இரண்டு மூன்று மின் கம்பங்கள் தான் உள்ளது… அந்த இடத்தின் மையத்தில் பின் ஆற்றுக்கு செல்லும் வழியில்…. வேறு எங்கும் இல்லை.. வீட்டில் பெரும்பாலும் தீப விளக்கைத் தான் பயன் படுத்துவர்….
அந்த இடத்தில மொத்தம் இருபது குடும்பம்.. அதில் எழுபது பேர் தான் இருப்பர்…. அவர்களுக்கான தனி தனி குடில்… என சிறு ஊரக இருந்தது….
.
.
.
.
பசுமையூர்…
இதே நேரத்தில் மருதநாயகமும் “ஆத்தா நீ எங்க இருக்க… எப்படி இருக்க… நல்லா இருக்கியா… உனக்கு உன் ராசா தான் முக்கியம்னு என்ன விட்டுட்டு அவன் இல்லாத ஊருல நானும் இருக்க மாட்டேன்னு போயிட்டால” என்று ருக்மணி ஆச்சியிடம் மானசீகமாக பேசிக் கொண்டு இருந்தார்….
மருதநாயகத்தின் முகம் கவலையாக இருந்தது… ஆச்சி அவரை பத்தி கேட்கும் பொது இவருக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது… லட்சுமி அம்மா குடிக்க தண்ணீர் எடுத்து வந்து குடுத்தார்…
“என்னங்க ஏன் உங்க முகம் வாட்டமா இருக்கு” என்று மருதநாயகத்திடம் லட்சுமி அம்மா கேட்டார்…
“இல்ல லட்சு ஆத்தா ஞாபகமாவே இருக்கு…. அவங்களுக்கு அவங்க ராசா முக்கியமா போயிட்டானா… நாம வேணாம்னு போயிட்டாங்க பாரு…” என்று கவலையாக கூறினார்….
“நீங்க மட்டும் என்ன மதிய பத்தி ஊரே தப்பா பேசுதுனு இந்த ஊரே வேணாம்னு சொல்லிட்டீங்கல….. அது மாதிரி தான் அத்தைக்கும்” என்று கூறினார்….
“என்னவோ போ… ஹாஸ்பிடல்ல இருக்குறவன போய் பாக்க கூட முடியல… நம்ம யாரையும் பாக்க மாட்டேன்னு சொல்லிட்டான்….” என்று கவலையாக கூறினார் மருதநாயகம்….
“அது தான் டாக்டர் தம்பி தினமும் மதிய பத்தி சொல்றாருல இன்னும் கொஞ்ச நாள் மதிய கற்பகம் அண்ணிய அத்தைய எல்லாரையும் இங்க ஊருக்கு கூட்டிட்டு வந்துடலாம்” என்று லட்சுமி அம்மா கூறினார்…..
“ம்ம்…. நிலாம்மாவ போயி பாத்தியா” என்று கேட்டார்…
“ஹ்ம்ம் ஆமாங்க… நேத்து மாதிரியே இன்னிக்கும் கை விரல் தூக்க முயற்சி செஞ்சாளாம்..” என்று கூறினார் லட்சுமி அம்மா…
“எல்லா நல்ல படியா நடக்கட்டும்” என்று கூறி வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றுவிட்டார் மருதநாயகம்
மலையில்….
ஆச்சியை அவருக்கான குடிலில் விட்டுவிட்டு கயலை அழைத்து கொண்டு தங்களுடைய குடிலுக்கு சென்றனர்…. அங்கு கருப்பாயி செய்து வைத்த உணவை உண்டுவிட்டு முருகன் ரோஜா இருவரும் அவர்களுக்கான தனி குடிலுக்கு சென்றனர்….
இருவரும் ஆசுவாசமாக அமர்ந்தனர்… முருகன் ரோஜாவிடம் “என்ன சொல்றா என் குட்டி ரோஜா???” என்று அவளின் வயிறை தடவியவாறு கேட்டான் முருகன்…
“மச்சான் பொண்ணு இல்ல பையன்… குட்டி முருகன் தான் வேணும்.. நான் பேரு கூட யோசிச்சி வெச்சிட்டேன்… உங்க பேரு அப்பன் முருகன் பேரா என் பையன் பேரும் அப்பன் முருகன் பேரு” தான் என்று கூறினாள்….
“அப்படி என்ன பேரு” என்று முருகன் அவளின் காலை அமுக்கிவிட்டவாறு கேட்டான்…
“குமரன்”
“நல்ல பேரு தான் பையன் பிறந்தா அதையே வைக்கலாம்” என்று கூறி இருவரும் உறங்க ஆயத்தம் ஆகினர்…
.
.
.
.
மருத்துவமனையில்
மதி தன்னவள் நினைப்பிலேயே இருந்தான்…. ஊரில் நடப்பது எதுவுமே தெரியாது அவனுக்கு… அவனை பலமுறை மருதநாயகமும் முருகனும் தனி தனியாக ஜெயிலில் பார்க்க முடிவு செய்தனர்….
அவள் ஆசைப்பட்ட படிப்பில் சேர்ந்து நன்றாக படிப்பாள்… அவள் நன்றாக இருப்பாள்… என்ற நினைப்பில் இருந்தான்.. காலப்போக்கில் தன்னை மறந்து போய் விடுவாள்…
அவளுக்கு ஜெயிலில் இருந்த தான் வேண்டாம்… எனவே ஜெயிலில் இருந்து யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு இடத்திற்கு சென்று விடலாம் என நினைத்தான்…
அவனுக்கு ஊரில் நடப்பது தெரிந்தால்….. தன்னவள் கோமாவில் உள்ள நிலையை அறிந்தால் அவன் எடுத்த முடிவில் மாற்றம் இருக்குமா??????
.
.
.
.
ஒரு இருட்டு அறையில்
ஒரு உருவம் போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தது…. “எல்லா கரெக்டா இருக்கா.. யாரும் தப்பிக்க மாட்டாங்கல… யாரும் தப்பிக்க கூடாது…. நம்ம நாலு பேருக்கும் மட்டும் தானு உண்மை தெரியும்….. யாருக்கும் எந்த சந்தேகமும் வராதுல… எப்ப நாம கலெக்ட் பண்ண ஆதாரத்தை வெளிய விடலாம்” என்று கேட்டு கொண்டு இருந்தது….
போனில் பேசியவர்கள் என்ன கூறினார்களோ… இந்த உருவம் சரி சரி எனக் கூறிவிட்டு படுக்கையில் விழுந்து தூங்க ஆரம்பித்தது….
யார் இந்த உருவம்????? எந்த ஆதாரத்தை பற்றி இவர்கள் பேசுகிறார்கள்…. போனில் பேசிய மற்ற மூவர் யார்????
error: Content is protected !!