Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

மன்னவன் மஞ்சத்தில் 11

11.

மஞ்சம் – 11

இவர்கள் இருவரையும் பார்த்ததும் இன்னும் சூடாமணி கோபம் தலை தூக்கியது. அதையும் நிவேதிதா மீதே திரும்பியது.

‘இவளுக்கு பிறந்த தரித்திரம் என் வீட்டில் இருக்கிறதா? என் வாழ்க்கையை நாசம் பண்ணியவள் மகள் என் மகனுடன் வாழ்வதா?’ என மகனுக்காக இறங்கி வந்த மனம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது வேதாளம் போல்.



Advertisement

இருவரும் அவளை நெருங்கி வந்தனர். சூடாமணி பார்வை என்னும் நெருப்பு அவர்கள் இருவரையும் பொசுக்கியது. அவள் பார்வையின் வீரியம் தாங்காமல் குனிந்து கொண்டனர்.

அவளிடம் பேசாமல் பார்த்ததும் பார்க்காதது போல் போயிருக்கலாம். விதி யாரை விட்டது.

“சூடாமணி!” என தென்பாண்டி அழைக்க,

Advertisement

“ச்சீ என் பெயரை சொல்லாத. உனக்கு என்ன தகுதி இருக்கு?” என அருவருப்பை கண்டது போல் முகத்தை சுழித்தார். இருவரையும் பார்த்து.

Advertisement

அவள் பார்வையின் தாக்கம் தாங்க முடியாமல்,
துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டவர்,

“எங்களை பார்த்தால் உனக்கு பிடிக்காதுன்னு தெரியும். ஆனா நிவேதிதா வை நல்ல பார்த்துக்கோ. அவ அப்பாவி. அவளுக்கும் நமக்குள் நடந்த கசப்பான நினைவுகளுக்கு எந்த சம்மந்தமும் கிடையாது. எங்க மேல இருக்க கோபத்தை நிவேதிதா மேல காட்டாத.
அவள் வாயும், வயிறுமா இருக்க பிள்ளை.” என்றார் சாதுவான குரலில்.

“அந்த எச்சி இலையை நான் வேற பார்த்துக்கணுமா? கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா யா உனக்கு? நீ தின்ப அதே மாதிரி என் மகன் தின்பானா? உங்களை பார்த்தாலே கொல்லனும் போல இருக்கு. உன்னை எப்போவோ கொன்னு இருக்கணும். அன்னைக்கு கொன்னு இருந்தா இன்னைக்கு என் மகன் தலையில் இப்படி ஒரு கருமத்தை கட்டி இருக்க மாட்ட. என்ன மாதிரி கேடு கெட்ட ஜென்மம் டா நீங்க? உங்களை மாதிரி விவஸ்தை இல்லாத பிறவிகளை பார்க்கவே முடியாது. உங்க உறவு வேண்டாம்னு இருக்க என் வீட்டில் அவளை கொண்டு வந்து விட்டுட்டு இதுல நான் வேற அவளை பார்த்துக்கணுமாம்.” என்றவர் “து.” என காரி உமிழ்ந்தார்.

Advertisement

இருவருக்கும் அவமானமாக இருந்தது. அதற்குள் அக்கம், பக்கம் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் சத்தம் கேட்டு எட்டி பார்த்துக்க தொடங்கினர்.

வைதேகி புடவை முந்தானையை வாயில் வைத்து அழுத்தி அழுது கொண்டு அழுதார்.

“அண்ணி என் மேல இருக்க கோபத்தை என் பொண்ணு கிட்ட காட்டாதீங்க.” என கெஞ்ச,

“நாயே நீ எல்லாம் என் முன்னாடி பேசவே தகுதி இல்லாதவள் டி. உங்களையும், உங்க குடும்பத்தையும் தான் பிடிக்காதுன்னு தெரியுமே. அப்புறம் எதுக்கு உன் பொண்ணை என் வீட்டுக்கு அனுப்பி வச்ச. இப்போ என்னை கெட்டவளாக்க எல்லார் முன்னாடியும் அழுது நாடகம் போடுற. என் வீட்டுக்கு வர மருமகள் எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன் தெரியுமா? அவளை நான் எப்படி பார்த்துக்கணும் ஆசை பட்டேன் தெரியுமா? என் மகனுக்கு எப்பேர் பட்ட பெண்ணை கல்யாண பண்ணி வைக்கணும்னு கனவு கண்டேன். எல்லாத்தையும் கெடுத்துட்டியே.” என கோபம் தாங்காமல் வைதேகி கன்னத்தில் “பளார்!” என அறைந்து விட்டாள்.

வைதேகி அடி தாங்க முடியாமல் தடுமாற தென்பாண்டி தாங்கி பிடித்துக் கொண்டார்,

“உன் மகளை அந்த எச்சில் இலையை உன் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன். உங்க நிழல் கூட என் வீட்டில் பட கூடாது.” என சூளுரைத்தார்.

“அம்மா இவங்க கிட்ட எல்லாம் எதுக்கு பேசிட்டு இருக்க? நீ வாம்மா. இதுங்க அசிங்கம்.” என அமரன் தாயை அணைத்தபடி இழுத்தான்.

தென்பாண்டி மனம் துடிக்க மகனை பார்த்தார். ‘பெற்ற மகனே தன்னை அசிங்கம் என்று சொல்லும் நிலமைக்கு என் வாழக்கை போய்விட்டதே.’ என உள்ளுக்குள் ஊமையாக அழுதார்.

“அம்மா வா. நம்ம மரியாதையை நம்மலே கெடுத்துக்க கூடாது.” என தாயை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து சென்றான்.

மொத்தமாக எல்லாரும் அவர்களை தான் வேடிக்கை பார்த்தனர்.

“வைதேகி தப்பு உன் மேல தான். சூடாமணி பத்தி ஊருக்கே தெரியும். அவளுக்கு உங்களை உங்க குடும்பத்தை பிடிக்காதுன்னு எல்லாருக்கும் தெரியும். நீ அவளுக்கு பண்ண துரோகம் அப்படி. இதுல உன் பொண்ணை அவள் மகனுக்கே கேட்டு கொடுத்து இருக்க. அதுவும் அவன் தம்பி பிள்ளை அவள் வயிற்றில் வளரும் போது. நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.

முன்னாடி இப்படி தான் அவசரம், அவசரமாக அவளுக்கு கல்யாணம் பண்ண.

அங்க என்ன நடந்துச்சோ? மூன்று மாசத்தில் வாழாமல் வந்துட்டாள். பிள்ளை பிறக்கும் வரைக்கும் அமைதியா இருந்திருக்க கூடாது நீங்க. வேற நல்ல இடமா பார்த்து முடிச்சு இருக்கலாம்.

சூடாமணி கோபகாரி தான். ஆங்காரம் பிடிச்சவள் தான். ஆனா நீயும் உன் அண்ணனும் பண்ணிய காரியத்தில் அந்த பிள்ளை ரெண்டு குழந்தைகளை வச்சிகிட்டு நிற்கதியா நின்னுச்சே அந்த குழந்தைகளை வளர்க்க மழை, வெயில் பார்க்காமல் மாடு மாதிரி உழைச்சு படிக்க வச்சு ஆளாக்கி இருக்கா. அந்த மகனுக்கு எப்படி எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டு இருக்கும்? கடைசில மகன் கல்யாணத்தை பெத்தவளை பார்க்க விடாமல் பண்ணிட்டீங்க நீங்க. நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. இதுல அந்த அப்பாவி பிள்ளை நிவேதிதா வை வேற கோர்த்து விட்டு இருக்கீங்க.” என ஒருவர் உண்மையை பேச, வைதேகி வாயடைத்து போனார்.

“விடுங்கம்மா. வைதேகி வா.” என தங்கையை இழுத்துக் கொண்டு சென்றார்.

வைதேகி வழி முழுக்க அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தார்.

ஆதி வழியில் தான் அமர்ந்து இருந்தாள், வைதேகி அழுது கொண்டு வருவதை நிமிர்ந்து பார்த்தவள், தன் ஜாக்கெட்டில் எம்ப்ராய்டரி போட்டுக் கொண்டிருந்தவள் தாயிடம் என்னவென்று கூட கேட்காமல் அதையே செய்தாள்.

“ஆதி போய் குடிக்க தண்ணி எடுத்துட்டு வா.” என தென்பாண்டி கூறவும் எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவள், மீண்டும் தன் வேலையை செய்தாள்.

“ஆதி அம்மா அழறாங்க நீ எதுவும் கேட்க மாட்டேங்குற?”

“நான் கேட்க மாட்டேன் மாமா. அம்மா மேல இருந்த பாசம் எல்லாம் அக்கா வாழ்கையில் விளையாடியதோடு போச்சு. உங்க ரெண்டு பேரையும் பார்த்தாலே பயமா இருக்கு.” என்றாள்.

வைதேகி அழுகை இன்னும் அதிகமானது.

“அண்ணா எல்லாரும் இப்படியே பேசினா நான் என்ன பண்றது?”

“என்னால ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடியும். வேறு எதுவும் செய்ய முடியாது. வேற இடத்தில் நிவேதிதா வுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு நானும் சொன்னேன். நீ உன் பிடிவாதத்தை விட்டு கொடுக்கவே இல்லை. இனி நடக்குறதை வேடிக்கை தான் பார்க்க முடியும்.” என்றவர் துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வெளியே சென்றார்.

மனம் தாங்காத வேதனையில் தவித்தது. என்னைக்கு இவருக்கு கல்யாணம் என்ற ஒன்று ஆனதோ அன்றில் இருந்தே இவர் வாழ்வு இருளில் சிக்கிக் கொண்டது. ஒன்றுக்கு இரண்டு கல்யாணம் செய்தும் இவர் நன்றாக வாழவில்லை.

“இவங்கள பார்த்தாலே எரியுது அமரா. என்னால் என் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியல.” என்றார் திமிறிக் கொண்டு.

“அம்மா அவங்களை திருத்தவே முடியாது. நம்ம கஷ்டப்பட்ட வரை வேடிக்கை பார்த்தாங்க. இப்போ நம்ம நல்லா இருக்கவும் நம்ம சந்தோஷத்தை அழிக்க அவங்க பொண்ணை அனுப்பி வச்சிருக்காங்க. என்னைக்கு அவங்க பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள வந்தாளோ அன்னைக்கே நம்ம குடும்பம் சிதைந்து போச்சு திரும்பவும்.”

“ஆமா அமரா. என்னைக்கு அந்த பீசை பிடித்தவள் வீட்டுக்குள் வந்தாளோ அன்னைக்கே எல்லாம் போச்சு. அவளை சீக்கிரமாக இந்த வீட்டை விட்டு துரத்தி விடுறேன்.” என சூளுரைத்தார்.

நெஞ்சம் முழுவதும் கோபம் பரவி போனது.

இவரின் கோபம் என்னும் சூழலில் சிக்கி இவர் மகன் அக்னி வாழ்வு தான் சிதைய போகிறது.

இவரின் மொத்த கோபம் பழையபடி நிவேதிதா மீதே திரும்பியது.

மகனுக்காக இளகிய மனம் தென்பாண்டி, வைதேகியை பார்த்ததும் மீண்டும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஆனது.

அதே கோபத்துடன் வீட்டுக்கு வந்தவர் “அம்மா என்ன ரெண்டு பேரையும் வெளியே காணும்?”

மகளின் பேச்சும் தோரணையும் மாறி இருப்பதை கண்டவர், “அவங்க ரெண்டு பேரும் தூங்குறாங்க சூடாமணி. எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்.” என்றார்.

சூடாமணி இரவு உணவை கூட விட்டு விட்டு படுத்துக் கொண்டார். ஆனால் விழிகள் மூடவில்லை.

எப்போது விடியும் என்று காத்திருந்தார்.

இரவு சீக்கிரம் தூங்கியதால் காலையில் மூன்று மணிக்கே அக்னி விழித்துக் கொண்டான்.

அடர்ந்த இருளில் அவள் முகம் தெரியவில்லை என்றாலும் அவள் தன் அருகில் இருக்கிறாள் என்ற சந்தோஷத்தில் அவளை கையால் துழாவியவன் ஒரு பக்கம் பாரமாக இருப்பதை உணர்ந்து தொட்டு பார்க்க அவன் மனைவி அவன் நெஞ்சிலே தலை சாய்த்து உறங்கி கொண்டிருந்தாள்.

வெப்பத்தில் உருகும் வெள்ளம் போல அவன் மனம் உருகியது.

மெதுவாக தடவி அவள் தலையில் கை வைத்தவன் அவள் தலையை வருடி கொடுத்தான்.

‘ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. எத்தனை நாள் காத்திருந்தேன். இன்னைக்கு தான் என் ஆசை நிறைவேறி இருக்கு. இனி நம்ம வாழ்க்கை மாறிடும்.’ என புன்னகையோடு நினைத்துக் கொண்டவன் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.

அவன் கைகள் தன்னிச்சையாக அவள் வயிற்றில் வருடியது. குழந்தையை வருடும் போது எல்லாம் அவன் கைகள் நடுங்கியது.

தூக்கம் கலைந்தும் அரை மணி நேரம் அவளுக்காக அப்படியே படுத்திருந்தான்,

“நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் டி. என்னால தான் உன்னை ஒழுங்கா பார்த்துக் முடியல. சாரி. நல்லா தூங்கு.” என அவள் தலையை தலையணை மீது வைத்தவன், எழுந்து வெளியே வந்தான்.

மகன் எழுந்து வருவதை கண்டதும் சூடாமணி படுத்து கண் மூடிக் கொண்டார் தூங்குவது போன்று.

அவனோ இரவே குளிக்காத காரணத்தால் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்தவன், வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு யாரையும் தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாமல் வயலுக்கு கிளம்பி விட்டான்.

மகன் புல்லட் சத்தம் அடங்கியதும் சூடாமணி வேகமாக எழுந்தவர், தன் தலை முடியை வாரி சுருட்டி கொண்டையாக போட்டுக் கொண்டு நிவேதிதா தங்கி இருக்கும் அறை கதவை சத்தமாக தட்டினார்.

தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!