Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

மன்னவன் மஞ்சத்தில் 5

5.

மஞ்சம் – 5

நெஞ்சில் நெருப்பை வாரி இறைத்தது போல் சூடாமணி வெளியே ஓடி வந்தவர் “அண்ணா…!” என அதிர்ந்து நின்றார்.

இவள் கூட பிறந்த அண்ணன் சந்திரன்.



Advertisement

“அண்ணா வா…” என அவர் அழைக்க,

“வந்து என்ன பண்ண? இந்த வீட்டுக்கு என் பொண்ணு தான் மருமகளா வரணும்னு உன் கிட்ட சொல்லி இருந்தேன். ஆனா நீ உன் வாழ்க்கையை அழிச்சவள் பெண்ணை தேர்ந்து எடுத்து இருக்க போல?” அதிகாரமாக மிரட்ட, சூடாமணி பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

“எல்லாத்தையும் மறந்துட்டியா? உன் நாத்தனாரால் நம்ம பட்ட அவமானம், உன் புருஷன் உன்னை விட்டு ஓடி போனது. எல்லாத்தையும் மறந்துட்டியா?”

Advertisement

“ஐயோ! அண்ணா! நான் எதையும் மறக்கல அண்ணா. என்னால் எப்படி மறக்க முடியும்?. இரண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு தனியா நின்னப்ப, நீயும் அம்மாவும் தானே என்னை காப்பாத்துனீங்க. அந்த நன்றி இந்த உடம்பில் உயிர் இருக்க வரைக்கும் போகாது அண்ணா. அக்னி இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல.” கெஞ்சிக் கொண்டிருக்க, அவர் கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.

Advertisement

“நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்ட சூடாமணி.”

“அண்ணா…!!” என அலறினாள்.

“என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில்?”

Advertisement

“அமர் இருக்கான் அண்ணா.” என்றார் தைரியமாக.

“என் பொண்ணு விரும்புனது உன் மூத்த மகனை.” அழுத்தம், திருத்தமாக கூற,

“மாமா பரஞ்சோதி தான் இந்த வீட்டு மருமகள். என் அண்ணி. நீங்க கவலை படாதீங்க.” என அமர் வாக்கு கொடுக்க, அவர் முகத்தில் கொடூரமான சிரிப்பு தோன்றி மறைந்தது.

இவர்கள் குடும்பமே சிதைந்து போனது இவனால் என்று தெரியாமல் அவன் சொல்லுக்கு மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் மயங்கி போகிறார்கள்.

சூடாமணி தன் இரண்டாவது மகனை அதிர்ச்சியாக பார்த்தார்.

அவரால் வாக்கு கொடுக்க முடியவில்லை.

“நீ சொல்றது நடக்குமா? திரும்ப, திரும்ப என்னையும், என் மகளையும் முட்டாள் ஆக்க மாட்டீங்க தானே? உங்களை நம்பி என் பொண்ணு வாழ்க்கை நாசமாக கூடாது அமர்.”

“மாமா இதுவரையும் எந்த தப்பும் நடக்கல. இனியும் எந்த தப்பும் நடக்காது. இப்போ நடந்தது வெறும் கனவு ன்னு நினைச்சுக்கோங்க. அண்ணன் உங்க பொண்ணுக்கு தான் சொந்தம். உள்ள இருக்கவளை அண்ணனே வெளியே துரத்தி விடுவார்.” என உறுதியாக கூறியவனின் நம்பிக்கையை கண்டு பாட்டி, சூடாமணி இருவரும் உறைந்து போனார்கள்.

அனைத்தையும் அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நிவேதா முகத்தில் ஏமாற்றத்தின் வலி.

‘நான் பாட்டுக்கு வீட்டிலேயே இருந்து இருப்பேன். எல்லாரும் என்னையும், உன்னையும் பந்தாடிட்டு இருக்காங்க. யாருக்குமே உன்னையும், என்னையும் பிடிக்கல டா. அப்புறம் எதுக்கு நம்மளை கஷ்டபடுத்தனும். நம்மளை விட்டா கூட எப்படியோ வாழ்ந்துட்டு போறோம். நீ மட்டும் இல்லனா அம்மா எப்போவே போய் சேர்ந்து இருப்பேன். நீ பிறக்குற வரைக்கும் ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருந்தா போதும்னு நம்பி அம்மா வீட்டுக்கு வந்தேன். இப்போ அது கூட தப்புன்னு தோணுது.’ என சத்தமின்றி கண்ணீர் வடித்தவளை கண்டு அரவணைத்துக் கொள்ள கூட அங்கு யாரும் இல்லை.

“சூடாமணி என் மருமகன் சொல்லிட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு. என் பொண்ணுக்கு பரிச்சை நடக்குது. பரிசை முடிந்ததும் கொண்டு வந்து விடுகிறேன். இனி அவள் இந்த வீட்டில் தான் இருப்பாள்.”

சூடாமணி திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார்.

‘அக்னி அத்தனை உறுதியாக இருக்கும் போது எப்படி இவர் சொல்வது சாத்தியம். நிவேதா வை மருமகளாக இவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் அவளை மகன் அழைத்து வந்து அவன் அறைக்குள் உரிமையாக அல்லவா வைத்திருக்கிறான்.
யாருக்கும் கொடுக்காத உரிமையை அவளுக்கு கொடுத்திருக்கிறான். எப்படி அவன் மனம் மாறும்?’ என்று இவரோ மனதில் போட்டு புழுங்கி கொண்டிருந்தார்.

தென்பாண்டி பார்வை தங்கச்சி மீது படிந்து, “மாப்பிள்ளை உன்னை நம்பி கிளம்புறேன்.” என்று அவர் கிளம்ப,

“மாமா உள்ள வந்து சாப்பிட்டு போங்க.”

“உள்ள இருக்கவள் என்னைக்கு இந்த வீட்டை விட்டு வெளியே போகிறாளோ அன்னைக்கு இந்த வீட்டில் கை நனைக்கிறேன். அதுவரை நான் இங்க தண்ணி கூட குடிக்க மாட்டேன்.” என்று துண்டை உருவிக் கொண்டு சென்றார்.

“அம்மா மாமாவை தடுமா.”

“அமர் நீ அவர் கிட்ட சொல்லி இருக்குறது உன் அண்ணனுக்கு தெரிந்தால் என்ன ஆகும்?”

“ஒன்னும் ஆகாது மா. அண்ணன் ஒன்னும் விரும்பி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கல. கட்டாய கல்யாணம் இது. அண்ணன் வாழ்கையை நம்ம தான் காப்பாத்தனும். அதுவும் உன்னையும், எங்களையும் தெருவில் நிக்க வச்சு.. சாப்பாட்டுக்கு துடிக்க வச்ச குடும்பத்து பொண்ணு நம்ம வீட்டுக்குள்ள இருந்து நம்ம வீட்டு சாப்பாட்டை எப்படி சாப்பிடலாம்?” என அமர் பல்லை கடித்துக் கொண்டு கேட்க,

“அமர் நீ பேசுறது அபத்தம். என்னைக்கும் யாருக்கும் சோறு போட்டதை சொல்லிக் காட்ட கூடாது. அது மிகப் பெரிய பாவம். நீயா இப்படி பேசுற. தப்பு டா இது.” என பாட்டி கண்டிக்க,

“பாட்டி நானா பேசல. எனக்கும் இப்படி பேசணும்னு ஆசை கிடையாது. சூழ்நிலை என்னை பேச வைக்கிது. நல்லா இருந்த வீட்டில் இன்னைக்கு எல்லாரும் நிம்மதி இழந்து நிற்கிறோம். அதுக்கு எல்லாம் யார் காரணம்?” என அவனோ அவன் பிடிபாதத்தில் இருந்து இறங்கி வராமல் பேச,

நிவேதா கண்ணீர் கூட மறுத்து போய் அமர்ந்து இருந்தாள்.

‘இந்த வீட்டில் சாப்பிட்டு தான் நான் வாழ வேண்டுமா?’ என அவள் மனசாட்சி கேள்வி கேட்க,

‘உனக்காக இல்லை என்றாலும் உனக்குள் இருக்கும் சிசுவுக்காக நீ சாப்பிட்டு தான் ஆகணும். அது தான் உன் குழந்தையை வாழ வைக்கும்.’ என அதே மனசாட்சி கூற,

‘இனி இந்த வீட்டில் சும்மா இருந்து ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட கூடாது. வேலை செய்து என் சாப்பாட்டுக்காக ஈடுகட்டிய பிறகு தான் சாப்பிட வேண்டும்.’ என முடிவு செய்தாள்.

“என்ன எல்லாரும் வெளியே நிக்கிறீங்க?” என்றவன் எல்லோர் முகத்தையும் ஆராய்ந்தான்.

எதோ சரியில்லை என்று தோன்றியது அவனுக்கு. தன் தாயை பார்க்க, அவரோ அவனை பார்க்க முடியாமல் வேறு புறம் திரும்பி கொள்ள அவனுக்கு சுருக்கென்று வலித்தது.

உள்ளே அவசரமாக நுழைந்தவடன் அறைகதவு திறந்து கிடப்பதை கண்டு, வாசலில் நின்று உள்ளே பார்த்தான்.

இவன் இங்கிருந்து போகும் போது எப்படி அமர்ந்து இருந்தாளோ அப்படியே தான் இப்போது வரை அமர்ந்து இருந்தாள்.

அவன் நிழல் அவள் பாதம் வரை வந்ததை கண்டாலும் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை.

பார்க்க விரும்பவில்லை.

அவளுக்கு ஒன்றும் இல்லை என்பதில் மனதில் சிறு நிம்மதி பரவ, மீண்டும் வெளியே வந்தவன் “அம்மா யார் வந்தா?” என நேரடியாக கேட்டான்.

“உன் மாமா வந்தார்.”

அக்னி புருவங்கள் முடிச்சிட்டது. அவனுக்கு தான் அவரின் கோபத்தை பற்றி நன்றாக தெரியுமே.

“என்ன சொன்னார்?”

“கத்திட்டு போறார். அவர் பொண்ணை தான் உனக்கு கட்டனும்னு நான் முடிவு பண்ணி சொல்லி இருந்தேன். அதுக்கு சண்டை போட்டார்.” என்றவர் சின்ன மகன் கொடுத்த வாக்கை பற்றி மூச்சுவிடவில்லை.

“அம்மா மாமா கிட்ட நான் பேசுகிறேன். நீங்கள் எதுவும் பேச வேண்டாம்.”

“எதுக்கும் நீ அவர் வீட்டுக்கு போய் பேசிட்டு வா.”

“அவர் வீட்டுக்கு போக வேண்டிய அவசியம் கிடையாது மா. அவரை திரும்ப நான் பார்க்கும் போது பேசுகிறேன்.” என அந்த பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தமிழ் வந்தான்.

“நிவேதா….” என வெளியே நின்று குரல் கொடுத்தான்.

தமிழ் குரல் கேட்டதும் மொத்த குடும்பமும் வெளியே வந்தது.

“தமிழ் உள்ள வா டா. எதுக்கு வெளியவே நிக்கிற?” என சூடாமணி கேட்க,

“நான் நிவேதா பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன். அதை கொடுக்கணும்.” என்றான் மூன்றாவது மனிதரிடம் பேசுவது போல்.

அக்னி அவனை வெறுமையாக பார்த்தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து உருவான நட்பு இது. இதுவரை இருவரும் பாராமுகம் காட்டிக் கொண்டது கிடையாது.

“உள்ள வா டா. ரூம்ல இருக்கா.” என அக்னி கூற

அவன் கூறியது காதில் விழாதது போல,
“நிவேதா நான் கூப்பிடுறது உன் காதில் விழுதா மா. வெளியே வா.” என சத்தமாக அழைத்தான்.

நிவேதா பொறுமையாக வெளியே வந்தாள்.
“தமிழ் நீ இங்க என்ன பண்ற?” எதுவும் நடவாதது போல் கேட்க,

அவனோ அவள் கேள்விக்கு பதில் கூறாமல், “வெளியே வா.” என்றான் இருளை நோக்கி.

அனைவரும் அவன் அழைத்த திசையை பார்க்க அவள் தங்கை சில பொருட்களுடன் நின்று இருந்தாள்.

நிவேதா முகம் ரவுத்திரமாக மாறியது. வேகமாக படி தாண்டி கீழே இறங்கியவள் “பளார்!” என்று காது செவிடாகும் படி அறைய, அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள்.

அமரோ “என்ன விதமான நாடகம்?” என நக்கலாக கேட்க,

தான் எதற்கு அடி வாங்கினேன் என்று தெரிந்தவள், தன் கன்னத்தை அழுத்தி பிடித்தபடி, “அக்கா உனக்கு டிரேஸ் என்ன பண்ணுவ? எப்படியும் துணி கூட மாத்தாமல் இருப்பேன்னு தெரியும். அதான் உன்னுடைய சில முக்கியமான பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்தேன். தமிழ் மாமா கிட்ட தான் சொன்னேன். ஆனா அவர் இங்க வர மாட்டேன்னு சொல்லிட்டார். நான் போறேன்னு சொல்லவும் எனக்கு துணைக்கு வந்தார். என்னை பார்த்தால் தப்பா பேசுவாங்கன்னு தான் என்னை ஒதுங்கி நிக்க சொன்னார். இந்தா…” என பையை அவள் காலடியில் வைத்தாள்.

“கிளம்பு. இனி இந்த பக்கம் உன் நிழல் கூட வரக்கூடாது.”

“எனக்கு தெரியும். நீ சொல்லி இருக்க.” என்றவள் அடி வாங்கிய கன்னத்தை அழுத்தி பிடித்தபடி செல்ல,

“தமிழ் அவள் கூட துணைக்கு போ. இனி இந்த பக்கம் அவள் வரேன்னு சொன்னாலும் அவளை விடாத. புரியுதா?”

“நல்லா புரியுது. நீ இங்கிருந்து கிளம்புற வரைக்கும் அவளை நான் பாத்துக்கிறேன்.” என்றவன் மனதில் ஒரு கேள்வி “அவள் எதற்கு என்னை மாமா என்றாள்.

தொடரும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!