பாட்டி நெஞ்சம் அடைக்க அவளை பார்த்தார். அவளோ குடத்தை உள்ளே வைத்து விட்டு கொதிக்கும் பாலில், டிக்காஷன் கலந்து விட்டு வெளியே வந்தவள், “டீ போட்டு இருக்கேன் பெரியவங்களே, ஒருவேளை நான் தொட்டு நீங்க சாப்பிட மாட்டீங்கனா சொல்லுங்க. நான் சமைக்கல.” என்றவள் மீண்டும் வெளியே வந்தாள் மற்றொரு குடம் எடுக்க,
Advertisement
அமரன் வெளியே வந்தவன் பார்வை வாசலை நோக்கியது அவள் போட்டிருந்த கோலம் அழகாக இருந்தது. அவள் மீண்டும் உள்ளே வரும் போது, “நீ சொல்றதும் சரி தான். இங்கே சும்மா உக்காந்து சாப்பிட இது சத்திரம் இல்லையே. நீயே இனி வீட்டில் இருக்க எல்லா வேலையும் பார். ஆனா சமைச்சதும் முதல்ல நீ தான் சாப்பிடணும். ஏன்னா எனக்கு உன் மேலையும், உன் குடும்பத்து மேலயும் நம்பிக்கை கிடையாது.” என்று மேலும் உள்ளிருந்தவன் வலியை வார்த்தைகளால் அதிக படுத்தினான்.
“அமர் என்ன பேச்சு இதெல்லாம்?” பாட்டி கண்டிக்க,
“அவன் உண்மையை தானே மா சொல்றான். இனி இவள் இந்த வீட்டில் சம்பளம் இல்லாத வேலைகாரி. நீயே எதுக்கு கஷ்டப்படனும்? இனி எல்லாத்தையும் அவளே செய்யட்டும்.” என்றது அவளுக்கு தெளிவாக கேட்டது.
Advertisement
மனம் இறுகி போனாள். மட மடவென டம்ளர் எடுத்து தட்டில் அடுக்கியவள், டீயை வடிகட்டினாள்.
Advertisement
அவளே எடுத்து வந்து நீட்ட, “நீ முதல்ல குடி.” என சூடாமணி சத்தமாக கூற, அதுவரை நெஞ்சம் வலிக்க உள்ளே அமர்ந்து இருந்தவன் வேகமாக வெளியே வந்து அவள் கையில் தாட்டுடான் இருந்த டம்ளரை ஒன்றை எடுத்து குடிக்க தொடங்கினான்.
அவன் அவளுக்கும் கொடுக்கும் இடம் இன்னும் இன்னும் அமரனுக்கு அவள் மீது கோபத்தை வகுபடுத்தியது.
அவர்கள் கூறியதை அவள் செய்ய வேண்டும் அல்லவா டீயை பல்லை கடித்துக் கொண்டு குடித்தாள். அடுத்த கணமே குமட்டியது.
Advertisement
வேகமாக வெளியே ஓடினாள்.
‘புடவை தடுக்கி விழுந்து விடுவாளோ?’ என்று அவன் மனம் பதறியது.
தெருவிற்கு ஓடியவள் மொத்தத்தையும் வெளியே எடுக்க, அக்கம், பக்கம் இருந்தவர்கள் அவளை பாவமாக பார்த்தனர்.
அதற்குள் அக்னி நெருப்பாக அவள் அருகில் வந்து நின்றவன், “எதுக்கு நீ தெருவுக்கு வர? உள்ள இடம் இல்லையா? அங்கெல்லாம் எடுக்க முடியாதா?” என்று கத்த,
“உள்ளம் இடம் இருக்கு. ஆனா அது எனக்கும் என் குழந்தைக்கும் கிடையாது. இது உன் குழந்தை கிடையாது. நான் வாந்தி உள்ள எடுத்து உங்க அம்மாவும், தம்பியும் கேவலமாக திட்டவா?” என்றதும் ஆண் மனம் சம்மட்டியால் அடி வாங்கியது போல் துடி, துடித்து போனான்.
ஆனால் அவள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை என்று பாட்டி உணர்ந்தார்.
எதுவா இருந்தாலும் அவளை இவர்கள் நடத்தும் முறை சரியாக படவில்லை அவருக்கு. மகளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
நிவேதிதா தன்னிலை உணர்ந்து சமைக்க சமையல் அறைக்குள் சென்றாள். அங்கிருந்து வரும் வாசனைகள் அவளுக்கு குமட்டியது தான். ஆனால், அதையும் தாண்டி காலை உணவை சமைத்தாள்.
சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தவன் மனமோ ஊமையாக அழுதது.
வேறு எதுவும் செய்ய முடியாத நிலை அவனுக்கு. அவன் நினைத்தது விட நாட்கள் மோசமான வலியை அல்லவா அவனுக்கு தர போகிறது.
பாட்டி உள்ளே வந்தவர் அவள் படும் துயரத்தை கண்டார். அவரும் இரு பிள்ளைகள் பெற்றவர் தானே. கர்ப்ப காலத்தில் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாதா? அவருக்கு அவர் தாய் , கணவன் இருந்தார்.
இங்கு இவளோ நிர்க்கதியாக நிற்கிறாள்.
“உனக்கு நான் உதவி செய்றேன்.”
“பாட்டி நீங்க வெளியே வாங்க. அவளே செய்வாள். அவளே செய்றேன் சொன்ன பிறகு நீங்க எதுக்கு உள்ள போறீங்க? நீங்க ஓய்வெடுங்கள்.” என்றான் அமர்.
பாட்டி பேரனை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் தவித்தார்.
காலை உணவை சமைத்து, பாத்திரங்களை சுத்தம் செய்து, அடுப்பை துடைத்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வெளியே வந்தாள்.
“எல்லா வேலையும் முடிஞ்சு போச்சு.”
“சாப்பாட்டில் விஷம் கலந்து இருந்தா? போய் சாப்பிடு.” மீண்டும் அமர் தான் கூறினான்.
அவளோ உள்ளே சென்று தட்டில் ஒரு தோசை வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டு வந்தவள், அனைவர் முன்பும் நின்றபடி சாப்பிட்ட காட்ட, “சரி தான். ஆனா என் பாட்டி எப்போதும் தக்காளி சட்னி வைப்பாங்க. நீ என்ன வெறும் சாம்பார் தான் வச்சிருக்க?” என்றான்.
“எனக்கு தெரியாதே. இனி நான் சமைக்க போறதுக்கு முன்னாடி நீங்க மெனு சொல்லுங்க.” என வேகமாக கூற,
“உனக்கு எதுக்கு கோபம் வருது?. நீ என் வீட்டு வேலைகாரி. நீ சமைக்க போறதுக்கு முன்னாடி எங்க கிட்ட வந்து கேக்கணும். என் மகன் உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்ததே பழி வாங்க தான். உன் அம்மா பண்ண எல்லாத்தையும் நீ என் மூலமா அனுபவிக்க வேண்டாமா? போ போய் காரம் தூக்கலா தக்காளி சட்னி அரை.” என சூடாமணி கோபமாக கூற,
வலியை மறைக்க எச்சில் விழுங்கி உள்ளே சென்றவள் என்ன முயன்றும் தம் வலியை மறைக்க முடியவில்லை.
பல்லை கடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். ‘பழி வாங்க தான் கூட்டிட்டு வந்தாரா? நான் கூட கொஞ்சமாவது என் மேல அன்பு இருக்கும் நினைத்தேன். அதான் என் மாமனும், அம்மாவும் சொன்னதும். வந்து தாலி கட்டி கூட்டிட்டு வந்தாரா? இவருக்குத் இப்படி ஒரு குணம் இருக்கா? எனக்கு தான் இத்தனை வருஷம் தெரியாமல் போச்சா?’ என்று மனதளவில் நொடிந்து போனவள், அவள் மீது வைத்திருந்த நம்பிக்கையை. கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கினாள்.
வெளியே நின்று அனைத்தையும், கேட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவன் மனம் வெடிக்காமல் இருந்ததே பெரியது.
உள்ளே செல்லவே முடியாமல் அவன் கால்கள் பாரமானது. தன் பைக்கை எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பினான்.
அவளோ முடியாத நிலையிலும் தக்காளி சட்னி செய்து வைத்து விட்டு வெளியே வந்து அமர்ந்து கொண்டாள்.
“நிவி இங்க வா.” என மலரக்கா அழைக்க,
“என்ன கா?”
“இந்தா இதை குடி. வாந்தி எடுத்ததுக்கு மயக்கம் வராமல் இருக்கும்.” என கொடுக்க,
“அக்கா எனக்கு வேண்டாம். இப்போ எனக்கு வாந்தி இல்லை.” என மறுத்து விட்டு அவசரமாக வந்தாள்.
அவளை பொறுத்தவரை அனைவரையும். கண்டு பயம். குழந்தையை கலைத்து விடுவார்கள் என்று. அதனால் யாரையும் நம்ப முடியாமல் தவிக்கிறாள். அதிலும் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து தான் பயம் அதிகமானது.
மலரோ அவள் முகத்தை வைத்தே புரிந்து கொண்டார். அவள் மீது கோபம் வரவில்லை. அவள் அனுபவித்த வலிகள் அவளை அப்படி பேச வைக்கிறது என்று புரிந்து கொண்டார்.
“சரி போ. சூடாமணி வெளியே வந்திட போறா.” என அவளை அனுப்பி வைத்தார்.
நிவேதா மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டவகளுக்கு உள்ளம் எல்லாம் எரிமலையாக கொந்தளித்தது.
‘எதோ ஒரு பயங்கரம் மீண்டும் என் வாழ்வில் நடக்க போகிறது. அதை எதிர்கொள்ள நான் தயாராக வேண்டும். இதுவரை என் வாழ்வில் பல வேதனைகளை பார்த்து விட்டேன். இதையும் பார்த்து விட வேண்டியது தான். ஆனால் இனி யாரையும் நம்ப மாட்டேன். இனி நம்பிக்கை என்பது என் வாழ்வில் கிடையாது.’ என நினைத்துக் கொண்டிருக்க, அவள் மீது தாண்ணீர் ஊற்றியது.
நிவேதா பதறி எழ, “உன்னை யாரு வாசல்ல உக்கார சொன்னது. இது உக்கார இடமா?” என ஒன்றும் தெரியாதது போல் அமர் கேட்க, அவன் கன்னத்தில் சப், சப்பென்று அறைய தோன்றியது அவளுக்கு.
பல்லை கடித்து கோபத்தை கட்டுப்படுத்தி நிற்க, அந்த வழியாக வந்த தமிழ் கண்களில் அந்த காட்சி பட்டுவிட, வேகமாக உள்ளே வந்தவன், கொஞ்சமும் யோசிக்காமல் புயலாக உள்ளே நுழைந்தான், அமர் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்தவன், அவன் கன்னத்தில் பளார்! பளார்! என மாறி, மாறி அறைந்தான்.
சூடாமணி ஓடி வந்து தடுக்கும் முன்னே அவரை ஓங்கி உதைக்க, “தமிழ்!” என்று அலங்காரமாக ஒலித்தது அவர் குரல்.
“என்ன?” என அதை விட சத்தமாக இவன் குரல் ஒலிக்க, நிவேதா பயந்து போனாள்.
“தமிழ் ப்ளீஸ் பிரச்சனை வேண்டாம். ஏற்கனவே என்னை சுத்தி இருக்க பிரச்சனை போதும். நீ போ. என்னால உங்க நட்பு உடைய வேண்டாம். போ.” என அவனிடம் கெஞ்சினாள்.
“போறேன். வேற என்ன பண்ண முடியும்? அவன் கிட்ட படிச்சு, படிச்சு சொன்னேன். இந்த வீட்டுக்கு இந்த கொடுமைக்கார கூட்டத்துக்கு கிட்ட உன்னை கொண்டு வரா வேண்டாம்னு. கேட்டானா?”
“பழி வாங்க தான் இந்த கல்யாணம் தமிழ். என் அம்மா செய்த பாவத்தை நான் தானே தீர்க்கணும். என்னால் முடிந்தவரை இந்த பாவத்தை தீர்த்துட்டு வரேன். பிளீஸ் நீ இங்கிருந்து போ. உன்னுடைய நல்ல பெயரை கெடுத்துக்காத. உன் அம்மாவுக்கு தெரிந்தால் ரொம்ப வருத்தபடுவாங்க. என்னால உனக்கும் சங்கடம் வேண்டாம்.” என கை கூப்பி கெஞ்சினாள்.