ஆம் பாக்கியத்தை ஊருக்கு வரவழைத்து அவள் உண்ணும் உணவில் விஷத்தை கலந்து விட்டாள்..
Advertisement
விஷயம் அறிந்து துடித்துப்போன சக்கரவர்த்தி இந்த பேய் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வாள்.. என்பதனால் உடனே திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் பாக்கியத்தை சந்தித்த போது அவள் திருமணம் செய்து கொள்ள கேட்டுக் கொண்டதால் வேறு வழியில்லாமல் சந்திராவை மனமே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்..
Advertisement
Advertisement
அப்பொழுது அவர் செய்த பிழை பாக்கியத்திற்கு 18 வயது ஆகட்டும் நானும் தொழிலில் கொஞ்சம் நிலையாக நின்று கொள்வோம்.. மூன்று வருடத்திற்கு பின்பு திருமணம் செய்துகொள்வோம் என்று காலம் கடத்தியதால் அவர் காதலி கை சேராமல் போனாள்..
Advertisement
திருமணம் தான் செய்து வைக்க முடியும் எவ்வாறு தன்னோடு இணைந்து வாழ முடியும் என்று நினைத்து சக்கரவர்த்தி இரண்டு வருடம் கடந்து விட்டார்..
இன்னும் தன்னை திரும்பி பார்க்காமல் இருக்கும் கணவன் மேல் துவேஷம் கொண்ட சந்திரா மீண்டும் அவரை மிரட்டி வாழ வைத்தார்..
இதோ இருவருக்கும் திருமணம் ஆகி 10 வருடங்கள் கடந்து விட்டது இன்னும் சந்திராவிற்கு குழந்தை பிறக்கவில்லை..
உண்மை காதல் தோற்பதில்லை போல் சந்திரா குழந்தை பெற்றுக் கொள்ள கால தாமதம் ஆகலாம். இல்ல முடியாமலும் போகலாம் என மருத்துவ அறிக்கை வந்ததும்.
எதைப் பற்றியும் யோசிக்காமல் சக்கரவர்த்தியின் தந்தை பாக்கியத்தை இரண்டாவதாக சக்கரவர்த்திக்கு திருமணம் செய்து வைத்தார்.. அதில் பாக்கியத்திற்கு உடன்பாடு இல்லை என்றாலும் சக்கரவர்த்தி வாழ்வை கருத்தில் கொண்டு சம்மதித்து திருமணம் செய்து கொண்டார்..
பத்து வருடங்களாக நடைபிணமாக வாழ்ந்த சக்கரவர்த்தி காதலியை திருமணம் செய்து கொண்ட பின் புத்துணர்வோடும்,சந்தோசத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார்.. அவர்களின் காதலுக்கு சாட்சியாக பத்தாவது மாதமே பெண் குழந்தையை பெற்றெடுத்தார் பாக்கியம்..
அவர்களுக்கு சின்ன சந்தோஷத்தை கொடுத்த காலமும்,காதலும் மீண்டும் சந்திராவின் உருவில் தடையாக வந்து தங்கையின் மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்க்க முடியாமல் அவள் மீண்டும் தன்னோடு வாழ வேண்டும் என கட்டாயப்படுத்தினாள் சக்கரவர்த்தியை..
இப்போது மிரட்டுவதற்கு கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் அவர்களது செல்ல மகள் கௌரி..
என்ன வேணுமானாலும் செய்வாள் என்பதற்கு சாட்சியாக அப்பொழுது பாக்கியத்திற்கு விஷம் கொடுத்தாள் என்பதால் அவளை கண்ணும் கருத்துமாக 24 மணி நேரமும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதாலும் மீண்டும் சந்திராவுடன் வாழ ஆரம்பித்தார் ஒரு குழந்தை வந்த நேரமோ என்னமோ சந்திரா கருத்தரித்தார்..
அவருக்கு முதலாக பெண் குழந்தை பிறந்தது அதன் பின்பு பாக்கியத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்கவில்லை..
அடுத்த மூன்று வருடங்களில் அடுத்த பெண் குழந்தை ஆண் குழந்தை வேண்டும் என ஏக்கத்தில் சந்திரா இருந்தாள்.. அப்பொழுதுதான் தன் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு கிடைக்கும் கணவனின் சொத்தும் தங்களுக்கு வந்து சேரும் என்ற எண்ணத்தில் மீண்டும் மூன்று வருட இடைவெளியில் கருத்தரித்தார் இந்த வருடம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது..
கர்ப்பப்பை நேரத்தோடு வீக்காக இருந்தால் சந்திரா கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்..
அத்தோடு திருமணம் முடிந்து நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து மூன்று குழந்தைகள் பெற்றெடுத்ததால் உடல் அளவில் மிகவும் நலிந்து விட்டார்.. அதனால் உடலை காட்டி கணவனை தன்னால் பிடித்து வைக்க முடியாது என நினைத்து ஆண் குழந்தையும் பிறந்து விட்டது இனி தான் வைத்தது தான் ராஜ்யம்.. போனால் போகிறது என விட்டதால் அவர் மீண்டும் ஒரேடியாக பாக்கியத்துடன் வாழ ஆரம்பித்து விட்டார்..
உண்மை காதல் எங்கே இருக்கிறதோ அங்கே தான் வாழ்க்கை சுவாரசியமாகவும், ருசியாகவும் இருக்கும் பாக்கியத்தையும், கௌரியையும் பார்த்தால் மட்டுமே சக்கரவர்த்தி முகத்தில் சிரிப்பு தன்னால் உதயமாகும்..
கடமைக்காக கல்யாணம் கடமைக்காக வாழ்க்கை என சந்திராவுடன் வாழ்ந்த வாழ்க்கையை விட காதலோடு பாக்கியத்துடன் அவர் வாழ்ந்த வாழ்க்கை அத்தமானதாக இருந்தது.. மீண்டும் பாக்கியம் கருத்தரித்தார் 15 வருடங்களுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது..
இதோ தமிழரசனுக்கு நான்கு வயது இருக்கும் பொழுது கௌரிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார் ..
சந்திராவின் பெண் பிள்ளைகளுக்கும் அவர் எந்த குறையும் வைக்காமல் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமண வயது வந்ததும் திருமணத்தை செய்து வைத்தார்..
தாயைப் போல பிள்ளை என்பது போல சந்திராவின் இரண்டு பெண்களும் தந்தையை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.. தாயின் சொல் படி கேட்டு வளர்ந்ததால் அவர்கள் மனதிலும் பாக்கியம் மற்றும் கௌரியின் மேல் வஞ்சமே அதிகமாக இருந்தது..
ஆனால் சந்திராவின் மகன் சரவணன் அப்படி இல்லை.. தந்தை மற்றும் பாக்கியம், கௌரி என பாகுபாடு பார்க்காமல் அவர்களுடன் சொந்த தாய், அக்கா போன்றே பழகுவான்.. அது சந்திராவுக்கு பிடிக்காமல் கண்டித்து பார்த்தார்.. ஆனால் ஒரு அளவிற்கு மேல் வளர்ந்த மகனை கண்டிக்க முடியாது அப்படியே விட்டுவிட்டார்..
கௌரி திருமணம் முடித்த அதே வருடத்தில் கௌரிக்கு பெண் குழந்தை பிறந்தது தங்கமயில் என ஆசையாக தமிழரசன் தான் பெயர் வைத்தான்..
அதிக நேரம் தாய்மாமன் மடியில் தான் தங்கம் வளர்ந்தாள்.. அவன் தான் அவளை வளர்த்தான் என்று கூட சொல்ல வேண்டும்..
இருவருக்கும் ஐந்து வயது தான் வித்தியாசம்.. ஆனால் தமிழரசன் முதிர்ச்சியாக தங்கமயிலை நன்றாகவே பார்த்துக்கொண்டான்..
காலம் யாருக்கும் காத்திருக்காமல் இதோ வயல் வேலைக்கு சென்ற கௌரிக்கும் பாக்கியத்துக்கும் மின்சாரம் தாக்கி அவ்விடத்திலேயே இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக உயிரை விட்டுவிட்டார்கள்..
சக்கரவர்த்தியாலும் சரி கௌரியின் கணவன் சண்முகம் மற்றும் பிள்ளைகள் யாராலும் இருவரின் இறப்பையும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக் கொள்ளவும் முடியாமல் மிகவும் துடித்து விட்டார்கள்..
அதன் பின் தங்கமயில் நிரந்தர பொறுப்பாக மாமனிடமே வந்துவிட்டாள்..
அவனும் சிறுவன் தானே பள்ளிக்குச் செல்ல வேண்டும் அவளையும் பள்ளிக்கு அழைத்து செல்லவேண்டும் பார்த்துக்கொள்ள வேண்டும் பக்குவம் அறியாக வயதில் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டான்..
தங்கமயில் பாட்டிக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் அவளை பார்த்துக் கொள்ள முடியவில்லை..
இதை காரணமாக வைத்து சக்கரவர்த்தி தங்கதின் தந்தைக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார்.. ஆனால் காலப்போக்கில் மனைவி தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்ளவில்லை என அறிந்த அவர் அவளை அழைத்துக் கொண்டு தங்கத்தை அவர்களிடமே ஒப்படைத்து விட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டார்..
இதோ தங்கமயில் சடங்கானதையும் முதலில் தெரியப்படுத்தியது தமிழரசனிடம் தான்.. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவன் அதை பக்கத்து வீட்டு அத்தையிடம் கூறி அவர் என்ன செய்ய வேண்டும் என கூறியபடி தந்தைக்கு அழைத்து தகவலை கூறிவிட்டு பாட்டி வீட்டுக்கு பாதுகாப்பாக அவளை அழைத்துச் சென்று விட்டான்..
தங்கமயிலின் தந்தை வந்து மகளின் விசேஷத்தை சிறப்பாக தான் செய்து வைத்தார்..
சண்முகத்தின் மேல் சக்கரவர்த்திக்கு எந்த வருத்தமும் இல்லை.. அவரிடத்தில் இருந்து பார்த்தால் அவர் நியாயம் அவருக்கு சரியாகப்பட்டது.. அதனால் யாரையும் குற்றம் சொல்லும் நிலையில் அவர் இல்லாததால் தங்கமயிலயும் தங்களோடு வைத்து பாதுகாப்பாக பார்த்துக் கொண்டார்..
பகல் அதிக நேரம் அவர்களுடன் இருப்பாள் ஆனால் பாட்டிக்கு உடனில்லை சரி இல்லாத காரணத்தால் இரவில் மட்டும் அங்கே தங்குவாள்..
படிப்பு வீடு என மூன்று வருடம் ஓடிவிட்டது 16 வயதில் கால் வைத்திருந்தாள் தங்கம்.. அவள் பாட்டிக்கு மிகவும் உடல் நிலை முடியாமல் போய்விட்டதால் அவர் எப்பொழுது எமன் வருவான் என்று தெரியாமல் காலத்தை தள்ளிக் கொண்டிருந்தார்..
அதிக உழைப்பும், பாக்கியத்தின் இழப்பும் என கவலையில் அவரை கவனிக்காமல் இருந்ததால் சக்கரவர்த்திக்கு இரண்டாவது மாரடைப்பு வந்துவிட்டது.. அவரும் எப்பொழுது என்ன நடக்கும் என தெரியாமல் காலத்தை கடத்துவதால் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்தை செய்து வைத்துவிட வேண்டும் எனத்தான் மகனிடம் போராடிக் கொண்டிருக்கிறார்.. அவன் அதற்கு சற்றும் ஒத்துக் கொள்ளாததால் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தாலும் அவர் முடிவில் உறுதியாக இதோ சக்கரவர்த்தி மகனின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என ஒற்றைப்பிடியில் நின்று திருமணத்திற்கு நாள் பார்க்க யோசியரை சந்திக்க சென்றுவிட்டார்..