Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

72. மதுமதி - மதுரம் தூவும் மழையே

மழை 20

மதுராவை அவமானப்படுத்திய சந்தோஷத்தோடு இல்லம் வந்து சேர்ந்தார் கற்பகம். அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் மதிவதனி.

கற்பகத்தைக் கண்டதுமே வேகமாக அவர் அருகே அமர்ந்தாள். “என்னம்மா, என்னாச்சு?” என ஆவலாக, அதே நேரம் நமக்குச் சாதகமான செய்தியைக் கேட்கும் எதிர்பார்ப்போடு அவர் அருகே அமர்ந்தாள்.

“சொல்றேன்டி. அதுக்கு முன்னாடி போய் ஏதாவது ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா! திட்டி, சத்தம் போட்டுக் கத்திட்டு வந்ததுல தொண்டையெல்லாம் வறண்டு போச்சு. போ, போய் எடுத்துட்டு வா!”

“அம்மா! நான் என்ன கேக்குறேன், நீ என்ன கேட்டுட்டு இருக்க? அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லும்மா?” எனக் கட்டுப்பாடின்றி (பொறுமையிழந்து) கேட்டாள்.



Advertisement

“சொல்றேன்டி, சொல்லாம எங்க போகப்போறேன்? போ, போய் எடுத்துட்டு வா” என்றார். அவளும் அவரைத் திட்டியபடியே பழச்சாறு தயாரித்து வந்து கொடுத்தாள்.

அதை வாங்கிப் பருகி மேசையில் கிளாஸை வைத்தார்… “இப்போ சொல்லும்மா, அந்த மதுராவைத் திட்டி அவமானப்படுத்தினியா? அண்ணனை அனுப்பி வச்சிடுவாதானே!” எனக் கவலையோடும் பயத்தோடும் கேட்டாள்.

“அதெல்லாம் அனுப்பி வச்சிடுவாடி. அப்படி மட்டும் அனுப்பலைனா அவளை நிம்மதியா இருக்க விடக் கூடாது! ஆனா, நான் இன்னைக்குப் பேசின பேச்சுல நாளைக்கே உன் அண்ணன் வீட்டுக்கு வந்திடுவான், நீ வேணா பாரு!”

Advertisement

“அண்ணன் வந்திடுவான் தானேம்மா! என் கல்யாணம் நடக்கும் தானே?!”

Advertisement

“ஏண்டி கவலைப்படுற? அதெல்லாம் நடக்கும், உன் அண்ணன் வந்திடுவான்!”

“அண்ணன் மட்டும் வரலை… ஒன்னு நான் உயிரோட இருக்க மாட்டேன், இல்ல உன்னைக் கொன்னுடுவேன் பார்த்துக்க… எனக்கு என் அருண் வேணும். அவனை நான் கல்யாணம் பண்ணியே ஆகணும். அதுக்காக யாரை வேணாலும், என்ன வேணாலும் செய்வேன்! எனக்கு அருண் வேணும்” என்று பைத்தியம் பிடித்தது போலக் கத்தினாள்.

“நீ கவலைப்படாத செல்லம். நிச்சயம் உனக்கும் அருணுக்கும் கல்யாணம் நடக்கும்! அண்ணன் வருவான்டா! என்னை நம்பு,” என்று அவளது தாடையைப் பிடித்துக் கொஞ்ச முயன்றார். அதனைத் தட்டிவிட்டவள், “எனக்கு அருணைக் கல்யாணம் பண்ணி வச்சிட்டு அப்புறம் கொஞ்சு, நான் ஏத்துக்கிறேன்” என்று அறைக்குள் சென்றுவிட, அவளை நினைத்துப் பயம் கொண்டவர், மகனையும் மதுராவையும் உள்ளுக்குள் கடிந்து கொண்டார்.

Advertisement

வருடங்கள் கழித்து அந்த வீட்டில் சிரிப்புச் சத்தம் நிறைந்திருந்தது. கதிர், ரம்யா, மதுரா, மதியூரன் என நால்வரும் அமர்ந்து சிரித்துப் பேசியபடி, கடையில் வாங்கிய உணவை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

மதியூரன் – மதுரா காதல் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாடவே அவர்களுக்குப் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி, சேர்ந்து அமர்ந்து உண்டனர்.

“ரொம்ப நாளாச்சு இப்படிச் சேர்ந்து சாப்பிட்டு! மதுவோட அம்மா இருக்கும்போது அவங்க கையால பிரியாணி செஞ்சு, சண்டே நைட்டு இப்படித்தான் சாப்பிடுவோம்… அவங்க எங்களையும் அவங்க வீட்டுப் பிள்ளையாத்தான் பார்த்தாங்க… அவங்க பாசத்துக்கு யாரும் ஈடாக முடியாது மதி,” என்று மதியூரனிடம் சொன்னான் கதிர்.

“உ… உண்மைதா… தான் க… கதிர் அ… அண்ணா! நா… நான் வந்த கொ… கொஞ்ச நா… நாளிலேயே அதை உ… உணர்ந்து இ… இருக்கேன். எ… என் பெ… பெத்தவ கூ… கூட ‘சா… சாப்பிடு’னு பா… பாசமா, அ… அன்பா சொ… சொன்னதும் இ… இல்லை. எ… எனக்காகச் சாப்பாடு செஞ்சு கொ… கொடுத்ததும் இல்லை… ஆனா, எ… என் மு… முகத்தைப் பா… பார்த்து, ப… பசியோட வ… வந்திருக்கேன்னு க… கணிச்சு, ‘சா… சாப்பிடுறியா?’ கூ… கூடக் கேட்காம த… தட்டுல போ… போட்டுக் கொடு… கொடுக்கிறது, அதை வா… வாஞ்சையா பா… பார்க்கிறதுல அ… அம்மாவும் பொ… பொண்ணும் என் அப்பாவை வி… விட ஒரு படி மே… மேலே தான்…” என்று அவரது புகைப்படத்தைப் பார்த்தபடி சொன்னான்.

“என்ன செஞ்சாலும் ரம்யா… குரல் கொடுக்காம இருக்க மாட்டாங்க! அம்மாவா கூடவே இருந்து ஒவ்வொன்னையும் பக்குவமா சொல்லிக் கொடுப்பாங்க! எனக்கு அவங்களைப் பார்க்கப் பொறாமையாத்தான் இருக்கும். ஆனாலும் அதுக்கு வேலையிலாதபடி என்னையும் அன்பா பார்த்துக்கிட்டாங்க,” என்று மூவரும் மரகத்தைப் பற்றிப் பேசினார்கள்.

கண்களில் நீருடன் இருந்தாள் மதுரா!

“சாரி மது! இப்படிச் சாப்பிடும்போது எனக்கு அம்மா ஞாபகம் வந்தது, அதான் அவங்களைப் பத்திப் பேசிட்டேன்,” எனக் கதிர் மன்னிப்புக் கோரினான்.

“நீங்க பேசலைன்னாலும் அவங்களை மறக்க முடியுமா? இல்ல நினைக்காமத்தான் இருக்க முடியுமா? என்னவோ என் நேரம், நான் வாங்கி வந்த சாபம்… என்னோடு என் அம்மா இல்லை… ஆனா, அவங்க ஆசீர்வாதமா இன்னொரு பொக்கிஷத்தை எனக்குக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க,” என்று மதியூரனைக் காதலோடு பார்த்துச் சொல்ல, அவனோ இதை எதிர்பார்க்கவில்லை.

“ம்… ம்ஹூம்… த… தப்பாச் சொ… சொல்ற துரா! எ… எனக்குத்தான் அ… அவங்க பொ… பொக்கிஷத்தைக் கொ… கொடுத்துட்டுப் போ… போயிருக்காங்க. அ… அதை ந… நல்லாப் பா… பார்த்துக்கப் படவா (மதுராவிடம் கதிர்/ரம்யா முன்னிலையில் செல்லமாகக் குறிப்பிடுவது போல)… கொ… கொடுத்துட்டுப் போ… போயிருக்காங்க,” என்றிட, ஏனோ அவளுக்கு வெட்கம் வந்தது.

“எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?” என்று ரம்யா கேட்டாள்.

“நா… நாளைக்கே!” என அவசரக் குடுக்கைப்போல அவன் சொல்லிவிட, மற்ற மூவரும் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர்.

அவனோ வழிந்தபடியே, “சீ… சீக்கிரமாக் க… கல்யாணம் ப… பண்ணிக்கிட்டா ந… நல்லது. இ… இல்லைன்னா கு… குறுக்கே இந்… இந்த கௌசிக் வ… வந்தான்னு எ… என் அ… அம்மா வ… வந்திடுவாங்களோன்னு ப… பயமா இ… இருக்கு,” என்று சொல்லிச் சமாளிக்க,

“ம்ம்… மதி சொல்றது சரிதான். சீக்கிரமாக் கல்யாணம் பண்றதுதான் சரி. நீங்க உங்க டீடைல்ஸ் கொடுங்க, நாளைக்கே போய் அந்தப் ப்ராசஸ் ஆரம்பிச்சுடுறேன். நாளைக்கு ஈவினிங் கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்கப் போலாம், ஓகே?” என்றதும் இருவரும் தலை அசைத்தனர்.

இரவு உணவை முடித்துக்கொண்டதும், கதிரும் ரம்யாவும் அவர்களுக்குத் தனிமையை வழங்கிவிட்டுச் செல்ல, கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தவனுக்கு, அவனை எதிர்பார்த்து வெட்கத்துடன் காத்திருக்கும் மதுராதான் தென்பட்டாள்.

இருவரும் நீள் இருக்கையில் அமர்ந்தாலும், அவன் வழக்கம்போல இடைவெளி விட்டு அமர்ந்தான்… அதைக் கண்டு பெருமையாக இருந்தாலும், ‘இன்னும் ஏன் இவ்வளவு தூரம்?’ என மனதிற்குள் கேட்டுக்கொண்டவள், அவனையும் அந்த இடைவெளியையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அதைக் கண்டுகொண்டவன் சிரிப்பை அடக்கியபடி, “எ… என்ன துரா?!” எனக் கேட்டான்.

“ஒண்ணுமில்லை யூரன்,” என்றவளுக்கு வெட்கமும் தயக்கமும் போட்டி போட்டன. தலைகுனிந்து நகங்களை ஆராய்ச்சி செய்தாள். உள்ளே புதிதாகப் படபடப்பு உண்டானது.

ஒரு வாரமாக உண்டாகாத படபடப்பு, தயக்கம், வெட்கமெல்லாம் புதிதாக அவளுக்குள் உருவானதை எண்ணி வியந்தாள். நிமிர்ந்து அவனைப் பார்க்கவே முடியவில்லை.

“எ… என்ன துரா! பு… புதுசா ஏதேதோ ப… பண்ற? எ… என்னாச்சு உ… உனக்கு?” எனக் கேட்டிட, ‘அச்சச்சோ… வெளிப்படையா அவனுக்குத் தெரியுற போலவா பண்ணிட்டு இருக்கேன்!’ எனத் தனக்குள் தன்னையே கடிந்து கொண்டவள்,

“நான் ஒன்னும் பண்ணலையே யூரன்! நீங்க என்ன சொல்றீங்க?” எனச் சாதாரணமாக இருக்க முயன்றாள். அவன் புருவம் உயர்த்தி ‘அப்படியா?’ எனக் கேட்ட விதத்திலேயே மீண்டும் தலைகுனிந்தாள்.

“துரா!” எனக் கிறக்கத்தோடு அழைத்தபடி பக்கத்தில் வந்து கையைப் பிடித்தான்.

இதைத் தான் அவளும் எதிர்பார்த்தாள். அவளாகச் சென்று அவனை அணைத்தபோதுகூட வராத கூச்சம், அவன் கைப் பிடித்ததும் வந்து தொலைக்கிறது. அவன் கண்களில் வழியும் காதலைப் பார்க்க அவளுக்கோ திராணி இல்லையே!

“எ… என்னை பாரேன்,” என்றான்.

மெல்ல நிமிர்ந்து அவளது கண்களைப் பார்த்தான்.

“ஐயாம் சாரி துரா!” என்றதும், அவள் கேள்வியாகப் பார்த்தாள்.

“எதுக்கு இப்போ இந்த சாரி யூரன்?”

“நா… நான் உ… உன்னை ஹர்ட் பண்ணியிருக்கேன் துரா! எ… எந்த வார்த்… வார்த்தை பேசி… பேசினா உ… உன்னைக் கா… காயப்படுத்துமோ, அ… அதைச் சொல்லி… சொல்லியிருக்கேன்… இ… இன்னமும் எ… என்னால எ… என்னை ம… மன்னிக்க மு… முடியலை துரா! நீ எ… எவ்வளவு து… துடிச்சிருப்… துடிச்சிருப்ப! நா… நானே உ… உனக்குக் கா… காயங்களைக் கொ… கொடுத்துட்டேன்னு நி… நினைக்கும்போது எ… எனக்கு ரொம்ப வலிக்குது துரா! ரியலி சாரிடி,” என இரு கைகளையும் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.

“யூரன்! என்ன இது, குழந்தை போல அழுதுட்டு?! அழாதீங்க ப்ளீஸ்.”

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“எனக்கு வலிச்சதுதான் யூரன்! ஆனா நீங்க அனுபவிச்ச வலியைவிட அது பெருசு இல்லை… அந்த வார்த்தையைவிட, நீங்க என்னை ‘தேவதை’ன்னு சொன்னா போதுமே… எனக்கான மருந்த நீங்க கொடுத்துட்டீங்க யூரன்! இனி பழசையே நினைக்காம புதிய வாழ்க்கையைப் பத்தி யோசிப்போமே!” எனக் கேட்டுக்கொள்ள, மொத்தமாகக் கண்ணீரைத் துடைத்தவன்,

“உ… உனக்குக் க… கல்யாணத்தைப் பற்றிக் க… கனவெல்லாம் இ… இருக்கும்ல, அ… அதைச் சொல்… சொல்லு துரா! அதுபடி செய்வோம்.”

“என்னை மன்னிச்சிடுங்க யூரன்! கல்யாணம் நடக்குமா என்ற கேள்வியோடே பயணிச்ச என் வாழ்க்கையில, இப்படியெல்லாம் கல்யாணம் நடக்கணும்னு கனவோ ஆசையோ இல்லை யூரன்,” எனப் புன்னகையுடன் சொல்ல, அதன் பின்னிருக்கும் வலியை அவன் உணரத்தான் செய்தான்.

“ப… பரவாயில்லை. இ… இப்போ க… கனவு கா… காணலாம். ஆ… ஆசைப் படலாம். சொல்லு, உனக்கு எப்படி கல்யாணம் பண்ணிக்கணும்?”

“சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாம் யூரன். நீங்க, நான், கதிர் அண்ணா, ரம்யா… போதும். சிம்பிளா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கணும்.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன… கோவிலுக்குப் போயிட்டு, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாடு சாப்பிட்டு வீட்டுக்கு வந்துடணும்.”

“ம்ம்.. அப்புறம்?”

“அப்புறம் என்ன? ரெஸ்ட்தான்.”

“அ… அதுக்கு அப்புறம்?”

“எங்காவது வெளிய போயிட்டு வரலாம்.”

“அ… அதுக்கு அப்புறம்?” எனக் காதலோடு கேட்க, இவளுக்கு வெட்கம் வந்தது.

“சொல்லு துரா!” என நெருங்கி, அவனது மூச்சுக்காற்று காதுமடலை உரசக் கேட்டான். அவள் உடல் அதிர்ந்து போனது.

ஆனாலும் அவளை விடாது, “அ… அப்புறம் எ… என்னன்னு சொல்… சொல்லு துரா!” எனக் கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்து குறும்போடு, “அப்புறம் என்ன யூரன்! தூங்க வேண்டியதுதான்,” என்று கண்ணடித்தாள்.

அவனோ மேலும் நெருங்கி, “தூ… தூங்க வி… விட மா… மாட்டேன் துரா!” என்றான்.

“எனக்குத் தூக்கம் வருது, நான் போறேன்,” என்று எழுந்தவளின் கையைப் பிடித்தான்.

“எ… என்னோடு கொ… கொஞ்சம் நே… நேரம் இ… இரு துரா!”

இவளுக்கோ இன்ப அவஸ்தையாக இருந்தது. மீண்டும் வந்து சற்றுத் தள்ளி உட்கார, அவனே பொறுக்காமல் இடையைப் பிடித்து அருகே அமர்த்திக்கொள்ள, வாயைப் பிளந்து அதிர்ந்தாள்.

அவன் பிடி இறுக, கூச்சத்தில் நெளிந்தவள், “யூரன்! என்ன பண்றீங்க? கையை எடுங்க.”

“ஏ… ஏன் துரா! பி… பிடிக்கலையா?”

“ப்ச்… கூச்சமா இருக்கு யூரன்.”

“இ… இதுக்கே இ… இப்படினா, இ… இன்னும் நி… நிறையா இருக்கே துரா! அ… அதுக்கு எ… என்ன ப… பண்ணுவ?” எனக் கேட்டு கண்ணடிக்க, “ஐயோ!” என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். அவனோ அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது சட்டை பட்டனைத் திருகியபடி அவன் நெஞ்சிலேயே கிடந்தாள். அவனோ அவளது விரல்களைப் பிடித்து முதல் முத்தம் வைக்க, அவளுக்குக் கூச்சம் வந்தது.

“துரா, எ… எனக்கு ரொ… ரொம்ப நா… நாள் ஆசை! அ… அதை நி… நிறைவேத்திக்கட்டுமா?” எனக் கிறக்கமாகச் சொல்ல, அவன் ஆசை என்றதும் சுதாரிப்பதற்குள், அவன் முகத்திற்கு மிக அருகில் தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

“நீ ச… சரின்னு சொல்… சொல்லு, நா… நான் செ… செய்றேன்.”

“சரி…” என்றதுதான் தாமதம், அவளது முகத்தை ஏந்தி தன் முதல் காதலின் ஆச்சாரத்தைத் தொடங்கினான் யூரன்.

முதலில் விழிகள் தெறித்து விழும் அளவுக்குக் கண்களைப் பெரிதாக விழித்தவள், பின் கிறக்கமாக மூடினாள். கைகளால் நெஞ்சைக் குத்தியவள், அவனது பிடியில் அடங்கினாள்.

இதுவரை சுவைக்கப்படாத பெண்ணின் இதழைச் சுவைத்து, முதல் ருசியை அறிந்தான். தித்திப்பாக இருக்கும் அவளது உமிழ்நீரை இன்னும் பருக ஆசைக்கொண்டான். அவளும் அவனுக்கு இணங்க, கை கொஞ்சம் அத்துமீற, அவளோ கைகளால் தடுத்துப் பார்த்தும் பயனில்லாமல் போனது.

நீண்ட முத்தத்தில் லயித்து இருந்தவள், பின் நினைவுக்கு வந்ததும் நெஞ்சில் கை வைத்து அவனைத் தூரத் தள்ளிவிட்டாள்.

அவனோ சுவைத்துக்கொண்டிருக்கும் பழத்தைப் பாதியில் பிடுங்கியது போலப் பாவமாகப் பார்க்க,

“நீங்க ரொம்ப மோசம் யூரன். போங்க, நான் இனி இங்க இருக்க மாட்டேன்,” என்று வேகமாக அறைக்குள் செல்ல முயன்றாள்.

“நா… நானும் வ… ரவா துரா! த… தனியா ப… படுக்கப் ப… பயமா இ… இருக்கு.”

“ஓ… எப்போதிலிருந்து?!”

“ரொ… ரொம்ப நா… நாளாவே! துரான்னு ஒ… ஒரு அ… அழகான மோகினி தி… தினமும் வ… வந்து இ… இரவுல எ… என்னை ரொ… ரொம்ப இ… இம்சை ப… பண்ணுது. அ… அதுகிட்… அதுகிட்ட இ… இருந்து எ… என்னைக் கா… காப்பாத்து துரா! ரொ… ரொம்பப் ப… பயமா இ… இருக்கு,” எனப் பாவமாகச் சொன்னான்.

“உங்களுக்குப் பாவம் பார்த்தா நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியும். நல்ல பிள்ளைன்னு நினைச்சேன்… ஆனா நீங்க மோசம்! இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு, அதுவரைக்கும் அந்த மோகினிகூடவே அவளோட இம்சையோட இருங்க! எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்,” என்று உள்ளே சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.

உதட்டில் அவளது முத்தம் இன்னும் ஒட்டியிருக்க, மேலே தடவிப் பார்த்தவன் பெருமூச்சு விட்டபடி, “இனி தூங்கின மாதிரிதான்…” என்று அவளது நினைவுகளை ஆரத்தழுவிக்கொண்டு, கண்களை மூடி வண்ணக் கனவோடு உறங்கிப் போனான்.

அவளும் அவன் தீண்டிய இடங்களையெல்லாம் தடவிப்பார்த்துக்கொண்டு, அவனோடு இருப்பது போலவே அவனைக் கட்டிப்பிடித்து உறங்குவது போலக் கண்களை மூடி, மெல்லிய சிரிப்போடு உறங்கிப் போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!