Skip to content
Post Views: 192
அத்தியாயம் 17
அஞ்சனாவோ கூடல் முடிந்து கலைத்துப் போனவளாக பிரபாகரனின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்க, அந்த காட்சியை பார்க்க பார்க்க அகிலனுக்கு செருப்பால் அடி வாங்கிய உணர்வு.
Advertisement
அவன் இளமையை தொட்ட நாள் முதல் சுகித்த பெண்கள் ஏராளம். ஆனால் தன் மனைவி தன் கண் முன் இன்னொருவனுடன் இருந்தாள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.
“ஏய் என்னடி பெரிய புதுமைப்பெண்னு நினைப்பா.. இப்பவே ஊர கூட்டி, உன்ன அசிங்கப்படுத்தி, நீயே தற்கொலை பண்ணிக்கிட்டு சாகுற அளவுக்கு வைக்கல, என் பேர் அகிலன் இல்லடி…” என்று ஆக்ரோஷமாக பல்லை கடித்து சொல்ல
Advertisement
Advertisement
“என்னனு அசிங்கப்படுத்துவ.. நான் நடத்தகெட்டவள்னா.. அதுக்கெல்லாம் பயந்து இருந்தா ஊர் பாக்க கோயில இருந்து இவர் கைய பிடிச்சிகிட்டு வந்து இருக்க மாட்டேன்.. நீ சொல்லு.. நானும் உனக்கு எங்கல்லாம் தொடர்பு இருக்குன்னு சொல்றேன்…” என்று அஞ்சனா சொல்ல
“என்னடி பைத்தியமா நீ!.. என்னதான் நீ எனக்கு பத்து வப்***பாட்டி எங்க இருக்குன்னு சொன்னாலும் என் சட்டையில கூட அசிங்கம் ஒட்டாது.. ஆனா நான் சொன்னா போதும் உன்ன இந்த ஊரே காரி துப்பி அடிச்சு துரத்திரும்.. நான் தப்பா போனதுக்கு காரணமே நீ தான்னு சொல்லுவேன்..
Advertisement
…என் பொண்டாட்டியால எனக்கு ஒரு புள்ளைய பெத்து தர முடியல அதனால தான் நான் கொஞ்சம் தடுமாறி போயிட்டேன்னு சாதாரணமா சொல்லிட்டு போயிடுவேன்.. நீ என்ன சொல்லுவ ஒரு பொம்பள என்ன சொன்னாலும் புருஷன் இருக்கும் போது இன்னொருத்தன் கூட படுத்தவ தரங்கெட்டவ தான்…”
“ஓஹோ.. உனக்கு ஒரு புள்ளய பெத்து குடுக்காததால தான் நீ பத்து பேரோட ப*டுக்க போனயோ.. இத்தன வருஷமா கடவுள் ஏன் எனக்கு இப்படி ஒரு குறைய குடுத்தாருன்னு நான் கவலப்படாத நாள் இல்ல.. கடவுள்கிட்ட எனக்கு ஒரே ஒரு குழந்தைய கொடுனு மன்றாடி நிக்காத கோயில் இல்ல.. ஆனா இப்ப சந்தோஷமா இருக்கு.. நல்லவேள உன்ன மாதிரி ஒரு கேடுகெட்டவன் புள்ளைய சுமக்க வேண்டிய கேவலம். எனக்கு அமையல…” என்று சொல்ல
ஆத்திரத்தில் அஞ்சனாவின் கழுத்தை நெரித்தவன் “என்னடி சொன்ன.. எனக்கு பொண்டாட்டியா இருக்கிறது உனக்கு கேவலமா.. நீ இப்படி எல்லாம் நடந்தா உன்ன இப்படியே கை கழுவி விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சியா.. வாடி வீட்டுக்கு உன் கால உடைச்சு.. மொட்டை அடிச்சு.. வீட்டுக்க போட்டு தினம் தினம் சித்திரவத பண்ணி, சாவ கேட்டு உன்ன என்கிட்ட மன்றாட வைக்குறேன்…” என்று வக்கிர பார்வையுடன் சொல்ல
பிரபாகரனோ அகிலனின் கையைப் பிடித்து ஒரே முறுக்காக முறுக்கி, அவன் பின்புறம் அழுத்தியவன் “என்னடா நெனச்சிட்டு இருக்க.. அவ என் உசுருடா.. அவ விருப்பத்துக்காக தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கட்டும்ன்னு விட்டேன்.. அவ சந்தோஷத்துக்காக தான் அவள விட்டு தள்ளி நின்னேன்.. இப்போ கூட அவ மனசுல இருக்குற ஆதங்கம் குறையட்டும்னு நான் வாய மூடிட்டு நின்னா.. என் முன்னாடியே அவள என்ன எல்லாம் பண்ணலாம்னு திட்டம் போடுற…” என்றவன்
அவனை திரும்பி அகிலன் சுதாகரிக்கும் முன்னமே அவன் முகத்தில் சரமாரியாக குத்த, உதடு கிழிந்து மூக்கு உடைந்து ரத்தம் கெப்பளித்தது. “நான் இருக்குற வரைக்கும் என் செல்லம்மா நகத்த கூட தொட முடியாதுடா…” என்று அகிலனை கொல்லும் ஆத்திரத்தில் இருந்த பிரபாகரனை நித்தியாவும் அஞ்சனாவும் தான் பிடித்து இழுத்தனர்.
“மாமா விடுங்க.. வேணாம்…” என்று நித்தியா பிடிக்க
அஞ்சனாவும் பிரபாகரனை விலக்கியவள், நிற்க முடியாமல் கீழே விழுந்து கிடந்த அகிலனின் முகம் அருகே குனிந்தவள், தன் ஃபோனில் அவன் துர்க்காவின் புடவையை பிடத்து இழுத்த புகைப்படம் இருக்க,
அதை காட்டி “நீ எனக்கு செஞ்ச துரோகத்துக்கு தான் உன்ன கொல்லுற வெறியில இருக்காரு.. இத மட்டும் காட்டுனேன் இந்த இடத்துலேயே உனக்கு சமாதி தான்…” என்று மெதுவாக பற்களுக்குள் பேசியவள்
எழுந்து நின்று “உன் வீட்டுக்கு இனி நான் வரப்போறது கிடையாது.. என்ன சொன்ன நான் நடத்த கெட்டவளா! அப்படியே இருந்துட்டு போறேன்.. உனக்கு பொண்டாட்டியா இருக்குறத விட இவருக்கு வ***ப்பாட்டியா இருக்கலாம்.. அகிலன் பொண்டாட்டி பிரபாகரனுக்கு வ***ப்பாட்டியாம் எவ்வளவு நல்லா இருக்கு இல்ல.. இந்த பேருக்காகவே இதோ…” என்று
அவள் கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி காட்டியவள் “இந்த தாலிய கழுத்துல தான் போட்டிருப்பேன்.. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…” என்று சொல்ல
பிரபாகரனோ “செல்லம்மா நீ பண்ண வரைக்கும் போதும்.. இதுக்கு மேல ஒரு நாள் கூட இவனுக்கு நீ பொண்டாட்டியா இருக்க கூடாது…” என்று அஞ்சனாவிடம் சொன்னவன்
“டேய்! உன்ன உயிரோட விடுறதுக்கு காரணமே உனக்கும் செல்லம்மாக்கும் விவாகரத்து கிடைக்கணும்னு தான்.. ஒழுங்கு மரியாதையா டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டு உயிர காப்பாத்திக்க.. இல்லன்னு சொன்னனுவை உன்ன கொன்னுட்டு அவ கழுத்துல இருக்கிற தாலிய இறக்க வேண்டியதா இருக்கும்…” என்று மிரட்ட
“இல்லங்க வேணாம்.. அவனுக்கே தெரியாம எப்பவோ விவாகரத்துக்கு கோர்ட்ல கேஸ் போட்டுட்டேன்.. இன்னும் ஒரு வாரத்துல கடைசி ஹியரிங்.. இவன் சம்மதம்னு ஒரு வார்த்த சொன்னா போதும் இவனுக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சிடும்…” என்று சொன்ன அஞ்சனா
“என்ன பாக்குற.. நீ எந்த அளவுக்கு கேடுகெட்டவன்னு எனக்கு தெரிஞ்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம்.. அப்பவே உனக்கே தெரியாம உன்கிட்ட சைன் வாங்கி விவாகரத்துக்கு அப்ளை பண்ணிட்டேன்.. என் தங்கச்சி கல்யாணத்துக்காக தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…” என்று சொன்ன அஞ்சனா
பிரபாகரனிடம் “ஆனா இந்த ஒரு வாரமும் இவனுக்கும் எனக்கும் விவாகரத்து நடக்கப்போகுது என்றது தெரிய வேணாம்.. இந்த ஒரு வாரத்துல ஒரு சிலருக்கு சில விஷயம் புரிய வைக்க வேண்டி இருக்கு…” என்று சொன்னவள் பார்வை விழுந்தது என்னவோ அங்கு புகைப்படத்தில் சட்டமாக அமர்ந்திருக்கும் முருகானந்தத்தின் மீதுதான்.
அதற்கு ஏற்றார் போல் வெளியே சென்று இருந்த முருகானந்தம், பிரேமாவதி, சகுந்தலா உள்ளே வர,
தட்டு தடுமாறி எழுந்த அகிலன் “அத்தம்மா பாத்தீங்களா இந்த அநியாயத்த.. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்ணிட்டா..உங்க மருகனும் உடந்த…” என்று தன் மீது தவறு இல்லை என்பது போல் நடிக்க ஆரம்பிக்க
பெரியவர்கள் மூவரையும் பார்த்த பின்பு அஞ்சனா பிரபாகரனின் நெஞ்சோடு சாய்ந்தவாறு நின்று கொள்ள, அவனும் அவள் தோளை சுற்றி கையை போட்டு தன்னோடு நிறுத்திக் கொண்டான்.
“ஐயோ! ஐயோ! ஐயோ!.. இந்த அநியாயம் எங்கயாவது நடக்குமா..தகுதி தராதரம் பாக்காம ஆசைப்பட்டு கட்டி ராணி மாதிரி வச்சிருந்தானே என் மருமகன்.. அடங்காம இப்படி அடுத்தவன உரசிட்டு நிக்கிறயேடி.. உன் அப்பன் ஆத்தா வளப்பு இதுதானா.. நல்ல குடும்பதுல பொறந்திருந்தா இப்படி பண்ணுவீயா…?” என்று சகுந்தலா வசைபாட
‘ம்க்கும்.. இந்த அம்மா சரோஜா தேவிக்கு டஃப் குடுக்குமே…’ என்று நித்தியா மனதில் நினைக்க
“இன்னொரு வார்த்தை என்ன பத்தி உங்க வாயில இருந்து வந்துச்சு.. மரியாதை கெட்டுடும்…” என்று அஞ்சனா சகுந்தலாவை மிரட்ட
முருகானந்தமோ “என்னடா இது அசிங்கம்…” என்று சத்தமாக கத்த
“என்ன அசிங்கம்.. எனக்கு இவள புடிச்சிருக்கு.. அவளுக்கும் என்ன புடிச்சிருக்கு.. நாங்க ஒன்ன வாழ போறோம்.. இதுல என்ன அசிங்கம்…” என்று தெனாவட்டாகவே பிரபாகரன் கேட்க
“என்னடா பைத்தியம் மாதிரி உளர்ற.. இவன் பொண்டாட்டியோட நீ எப்படி வாழ முடியும்…” என்று கேட்க
அதற்கு பிரபாகரன் பதில் சொல்லும் முன்பு, முருகானந்தத்தை அழுத்தமாக பார்த்தபடி நெருங்கிய அஞ்சனா “இவன் பொண்டாட்டினு இல்ல.. எவன் வ**ப்பாட்டியா இருந்தாலும் என் கூட வாழ உங்க புள்ளைக்கு பரிபூரண சம்மதம்.. என்ன சொன்னீங்க என் அம்மா கிட்ட.. என்னதான் இவர் உங்கள எதிர்த்துகிட்டு என்ன கல்யாணம் பண்ணாலும் என் நடத்தை சரியில்லைன்னு ஊர் முன்னடி அசிங்கப்படுத்தி என்ன வாழ விடாம செஞ்சிடுவேன்னு மிரட்டுனீங்க இல்ல..
…உங்க மிரட்டலுக்கு பயந்து ஒன்னும் நான் இவர விட்டுட்டு போகல.. எதுவா இருந்தாலும் என்ன பாத்துக்க இவர் இருக்கார் என்ற நம்பிக்கை அப்போ இருந்துச்சு.. இப்போவும் இருக்கு.. ஆனா என் அப்பா அம்மா நிம்மதியும் எனக்கு பிறகு பொறந்த தங்கையோட வாழ்க்கைக்காவும் தான் இந்த நாய கல்யாணம் பண்ணிக்கிட்டு போனேன்.. எந்த கௌரவம் முக்கியம்னு என் வீட்டு மானம் மரியாதைய வாங்கிடுவேனு சொன்னீங்களோ, இப்ப அந்த கௌரவம் காத்துல பறந்து இருக்கும்…” என்றவள்
அகிலனிடம் திரும்பி “நீ சொன்ன இல்ல ஊர கூட்டி பஞ்சாயத்து வைக்க போறேன்னு.. இப்பவே ஊற கூட்டு எனக்கும் அதுதான் வேணும்.. பிரபாகரன் அடுத்தவன் பொண்டாட்டிய வீட்டுலேயே கொண்டு வந்து வச்சிருக்கார்னு ஊருக்கே தெரியட்டும்…” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல
முருகானந்தத்திற்கு தலையே சுற்றியது. வரும் வழியில் ஊர் மக்கள் இப்போதே பிரபாகரன் அஞ்சனாவை பற்றி புறளி பேச ஆரம்பித்து விட்டனர்.
இதில் அஞ்சனா சொல்வது போல் பஞ்சாயத்து கூடிவிட்டால் சுற்றியுள்ள எல்லா ஊருக்கும் விடயம் தெரிந்து மானம் மரியாதை போய் விடும் என்று பயந்தார்.
“ஏய் என்னடி திமிரா!.. எப்பவோ நடந்த ஒரு விஷயத்துக்கு இப்போ பழிவாங்குவியா…” என்று சகுந்தலா கேட்க
“ஓஹோ வாங்க ராஜமாதா.. எப்பவோ நீங்க இளம் விதவையா நின்னதுக்கு இந்த வீட்டு பொண்ண வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு நீங்க அலையும் போது.. நான் மட்டும் பழிவாங்க கூடாதா?…” என்று கேட்க
சகுந்தலாவிற்கு திருடனிற்கு தேள் கொட்டிய நிலைதான். “ஏய் என்ன வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க.. துர்க்கா வாழ கூடாதுன்னு நான் என்ன பண்ணேன்.. அவளாவே அவளோட வாழ்க்கைய கெடுத்துக்கிட்டா.. இனிமேலாவது நல்ல முறையா வாழ்றதுக்கு வழி சொன்னேன்…”
“எப்படி 14 வயசுல ஒருத்தன் கூட வாழ்ந்ததுக்கு.. காவி உடுத்திட்டு கடவுளுக்கு சேவை செய்ன்றது தான் நீங்க காட்டுன நல்ல வழியா.. உண்மைய சொல்லுங்க உங்களுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சுதர யோசிக்காத உங்க அண்ணன பழிவாங்க தானே அவர் பொண்ணுக்கு இன்னொரு வாழ்க்கை அமையாம கூடாதுன்னு தடங்கலா இருக்கீங்க…” என்று உண்மையை உடைத்து விட
“அண்ணா இவள நம்பாத.. சரியான விஷப்பாம்பா இருக்கா.. என்ன என்னமோ பேசுறா.. இத்தன நாள் எதுக்கோ காத்துட்டு இருந்திருக்கா.. இப்ப நேரம் கிடைக்கவும் நம்ம எல்லாரையும் நாசம் பண்றதுக்குனே இதெல்லாம் பண்றா…” என்று சகுந்தலா சொல்ல
“நீ சொல்லனுமா சகுந்தலா.. இதையெல்லாம் திட்டம் போட்டு பண்றான்னு நல்லா தெரியுது.. பிரபா இவ இப்படிப்பட்டவனு தெரிஞ்சு தான் அப்பவே உன்னோட காதல் விஷயம் தெரிய வந்த போ இவ தேவையில்லனு வெட்டிவிட்டேன்.. இப்போ இவ பேச்சைக் கேட்டு நீயும் ஆடாத.. நம்ம குடும்பத்துக்குனு ஒரு கௌரவம் இருக்கு.. இவள கழுத்த புடிச்சு வெளிய தள்ளு…” என்று கட்டளையாக சொல்ல
பிரபாகரனுக்கோ தன் காதல் விடயம் தந்தைக்கு தெரிந்து அஞ்சனாவின் வீட்டில் சென்று மிரட்டி இருக்கிறார் என்பதே இப்போதுதான் அவனுக்கே தெரிய வருகின்றது,
அந்த அதிர்ச்சியே குறையாமல் நின்று இருக்க, சகுந்தலாவை பற்றி அஞ்சனா கூறியது உண்மையாக இருக்குமோ என்று யோசனை இருக்க, முருகானந்தம் கூறியது அவன் காதில் விழவில்லை.
“பிரபா உன்கிட்ட தான் சொல்றேன்…” என்று அதட்டவும் தான் நினைவு வந்தவன் “முடியாதுப்பா.. செல்லம்மா என் கூட தான் இருப்பா.. இந்த வீட்டுக்கு மூத்த மருமக அவதான்…” என்று அழுத்தமாக சொல்ல
பிரேமாவதியோ “பிரபா என்னடா இது? இன்னொரு குடும்பத்த பிரிச்சு இப்படி ஒரு அசிங்கத்த பண்ணாத.. உனக்கு பொண்ணு தான் வேணும்னா அப்பா பாத்து இருக்கிற பொண்ண கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழு.. இதெல்லாம் கடவுளுக்கே அடுக்காது பிரபா.. புருஷன் இருக்கும் போது அவன விட்டுட்டு உன் கூட வாராள்னா இவளெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வருவாள்னு நினைக்கிறாயா?…” என்று கேட்க
“நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வருவாள்னு சொல்லி தான் பூர்ணாவ கல்யாணம் பண்ணி வச்சீங்க.. என்ன ஆச்சு இருந்த வரைக்கும் சண்டையும் சச்சரவுமா என் நிம்மதிய வாங்கிட்டு போய் சேந்துட்டா.. உங்களுக்காச்சும் நல்ல மருமகளா இருந்தாளா…” என்று கேட்க
பிரேமாவதியால் என்ன சொல்லிவிட முடியும். பூர்ணாவைப் பொறுத்தவரை தன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம். மாமனார் மாமியாரை கூட அவள் மதித்ததாக நினைவில்லை.
“அதுக்காக அவ ஒன்னும் பொறந்த வீட்டு, புகுந்த வீட்டு மானம் மரியாதைய குழி தோண்டி புதச்சிட்டு.. கட்டின புருஷன் முன்னாடி இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்த வரல.. இருந்த வரைக்கும் மரியாதையா வாழ்ந்துட்டு கௌரவத்த காப்பாத்தி கொடுத்துட்டு போய் சேந்தா மகராசி.. ஆனா இந்த நாடகக்காரி எவ்வளவு பெரிய அசிங்கத்த பண்றோம்னு தெரியாம எப்படி உன் பக்கத்துல நிக்கிறா.. கொஞ்சம் கூட அருவெறுப்பு என்றது இல்ல …”என்று பிரேமாவதி கேட்க
“பெத்த பொண்ணு கிட்ட மெத்தையில படுத்தா ஆம்பளையோட கட்டி உருள ஆசை வரும்னு.. கொச்சையா பேசுற உங்கள விட அருவெறுப்பான கேரக்டர் நான் இல்ல…” என்று அஞ்சனா சொல்ல
இதுவும் பிரபாகரனுக்கு புது செய்தி. அதிர்ச்சியாக தாயைப் பார்க்க பிரபாவதியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
அஞ்சனா நறுக்கு என்று பிரேமாவதியை கேள்வி கேட்கும் போது தான் கிருபாகரனும் உள்ளே வந்தான். அவனது காதிலும் இது விழுந்து விட நித்தியாவை தான் கேள்வியாக பார்த்தான்.
அவளை தவிர வேறு யாரினால் தகவல் சென்றிருக்க முடியும். நித்தியாவோ ‘ம்க்கும் என்னவோ இவர் வச்ச சிசிடிவி கேமரா மாதிரி நம்மளையே பார்க்க வேண்டியது.. இத்தன நாளா கண்ண பொரடியில வச்சிட்டு சுத்தினாய்களாக்கும்…’ என்று மனதில் நொடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“என்னடி உன்னோட அசிங்கம் புடிச்ச செயல மறைக்க.. எங்க மேல பழிய தூக்கி போடுறியா?…”
“ஓஹோ, அப்போ நான் பொய் சொல்லி பழிய தூக்கி போடுறனா…” என்று அஞ்சனா துர்க்காவை திரும்பி பார்க்க
அவள் வாயை திறந்து உண்மையை சொல்லிவிட்டால் பாலைவனத்தில் ஆலங்கட்டி மழை கொட்டி விடுமே .
error: Content is protected !!
Ohh அப்போ அஞ்சனா பிரபா வா விட்டு போனதுக்கு காரணம் பிரபா அப்பா தானா….
அப்போ அந்த ஆளுதான் பிரபாவ எல்லாத்துக்கிட்டயும் இருந்து பிரிச்சி வச்சதா…..
சகுந்தலா அவ புருஷன் கூட வாழலன்னு தான் துர்காவையும் இப்படி பண்ணுதுன்னு நினச்சேன்.. ஆனா அவ அண்ணன் ஆஹ் பலி வாங்கனும் நினைச்சிதான் துர்கா வா இப்படி பண்ணுச்சின்னு இப்ப தான் தெரியுது 😡… துர்கா இப்பயாவது வாயா தோரடி 🤦♀️… நீ சொன்னாதான் அஞ்சனா சொன்னது உண்மை ன்னு தெரியும்…