Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 18

அத்தியாயம் 18

பிரபாகரனோ “போதும்.. யார் என்ன சொன்னாலும் செல்லம்மா இனி என்னோட தான் இருப்பா.. அவள் இங்க இருக்கிறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நானும் அவளோடையே போயிடுறேன்…” என்று ஒரேடியாக தன் முடிவை கூறிவிட



Advertisement

“எப்படி நீங்க நிம்மதியா இருக்கீங்கன்னு நானும் பாத்துடுறேன்.. நீ எனக்கு பதில் சொல்ல வேணாம்.. உன்ன பெத்தவங்களுக்கு பதில் சொல்லித்தானே ஆகணும்.. அவங்கள நான் கேட்கிற கேள்வியில நாண்டுக்கிட்டு சாகத்தான் போறாங்க.. நீ வாயில வயித்துல அடிச்சிகிட்டு வந்து நிற்க தான் போற…” என்று அகிலன் சவடால் விட

நித்தியாவோ அவனை நெருங்கி “நேத்து ராத்திரி நீ பண்ணுன அட்டூழியம் எல்லாம் வீடியோவா எடுத்தது நான்தான்.. மாமாகிட்டயும் என் புருஷன்கிட்டயும் காட்டுனேன்னு வச்சுக்க.. உன் உடம்புல இருக்கிற அத்தன எலும்பையும் உதிர்த்து எடுத்து மாலையா போட்டுடுவாங்க.. வாய மூடிட்டு விலகுறது உன் உசுருக்கு நல்லது…” என்று சிரித்த மாதிரியே கூற

Advertisement

Advertisement

அகிலனுக்கு நித்தியா சொன்னதை கேட்டதற்கே உடலெல்லாம் வலிப்பது போன்று உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

“கொஞ்சம் கூட நீ எனக்கு எப்படிப்பட்ட துரோகத்த பண்ணி இருக்கேன்னு உனக்கு புரியல இல்ல.. உனக்கு புரிஞ்சாலும் நீ எல்லாம் திருந்த மாட்ட.. என் அப்பா அம்மா கிட்ட என்ன சொல்லணும்னு எனக்கு தெரியும்.. என்ன பத்தி சொல்றேன்னு அங்க போய் நின்னுடாத.. உன்ன பத்தின வண்டவாளம் எல்லாம் அவங்களுக்கும் தெரியும்.. எப்பவோ உன்ன தூக்கி போட்டுட்டு வந்துட சொல்லிட்டாங்க..

Advertisement

…என்ன நான் இந்த முறை அவங்கள தேடி போகல.. ஏன்னா இங்க சில விஷயங்கள முடிக்க வேண்டி இருக்கு.. முடிச்சிட்டு கண்டிப்பா அவங்க கிட்ட தான் போவேன்.. இந்த ஊரு உலகத்துக்கு பயந்து அவங்க ஒரு தடவ பண்ணுன தப்ப திரும்பவும் பண்ண மாட்டாங்கனு நினைக்கேன்…” நிதானமாக அஞ்சனா சொல்ல

அதற்கு மேல் அங்கு யாரும் வாய் திறந்து பேசுவதற்கான வாய்ப்பை அளிக்காமல் பிரபாகரன் அஞ்சனாவின் கையை பிடித்துக் கொண்டு தனது அறைக்கு சென்று விட்டான்.

அகிலன் என்னதான் வாய் கிழிய பேசினாலும், தன் மனைவி இன்னொருத்தன் ஆசை நாயகி என்பது அத்தனை அவமானமாக இருந்தது.

இதற்கு அவள் தன்னை விவாகரத்து செய்து விட்டு என்ன வேண்டும் என்றாலும் செய்திருக்கலாம், பிள்ளை இல்லாததால் பிரிந்து விட்டோம் என்று சொல்லி இவன் இன்னொரு திருமணத்தை செய்து கொண்டு சென்றிருப்பான்.

ஆனால் இவன் மனைவியாக இருந்து கொண்டே இன்னொருவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள் என்றால் இவன் ஆண்மையைப் பற்றி தானே இனிமேல் பேசப்படும்.

ஊருக்கு நல்லவனாகவே வாழ்ந்து விட்டான், அவன் பொண்டாட்டி இன்னொருவனுடன் சென்று விட்டாள் என்பது எத்தனை பெரிய அவமானம்.

இனிமேல் ஊர் உலகத்தை எவ்வாறு எதிர்நோக்குவது என்று பயமாகவே இருந்தது. எனவே காரை எடுத்துக் கொண்டு வெளியூரில் வாங்கி போட்டிருந்த வீடு ஒன்றுக்கு விட்டான்.

அவன் எங்கு சென்றாலும் பிரபாகரன் கண்ணில் இருந்து அவன் தப்ப முடியாது என்பது அவனுக்கு புரியவில்லை. விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதால் தான் அவன் உயிரோடவே இருக்கின்றான் என்பதும் அவனுக்கு புரியவில்லை.

முருகானந்தத்திற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. அஞ்சனாவை வீட்டை வீட்டு துரத்த வேண்டும் என்று நினைக்க, தன் மகனே எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு சென்று விடுவதாக கூற சற்று யோசனையாக தான் இருந்தது.

அவருக்கு அவர் கௌரவம் ரொம்ப முக்கியம். அதிலும் அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது பிரபாகரன் என்று தான் நினைத்திருந்தார்.

இப்போது அவன் அஞ்சனாவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டால் அவர் இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்கள், மானம் மரியாதை எல்லாம் வீணாகி விடும் என்பதால் இந்த விடயத்தை நூதனமாக கையாளவே நினைத்தார்.

அதிலும் துர்க்காவின் திருமணம், இதோ தன் தலைமகனின் தரந்தாழ்ந்த செயல், என்று அவரை நிலைகுலைய வைத்திருக்க நிதானமாக யோசிக்க வேண்டி இருந்தது.

*****

அறைக்கு வந்ததும் குளியலறை சென்று முகம் கழுவி விட்டு, புடவையை சரியாக மடிப்பு எடுத்து போட்டுக் கொண்டு அஞ்சனா வெளியே வர, பிரபாகரனும் தன் சட்டையை போட்டுக் கொண்டு ஒற்றை சோஃபாவில் அமர்ந்து இருந்தான்.

“தேங்க்ஸ்!.. எனக்காக நடிக்க ஒத்துகிட்டதுக்கு…” என்று அஞ்சனா சொல்ல

பிரபாகரன் நிமிர்ந்து, சங்கடமாக நின்று இருந்தவள் முகம் பார்த்தான். கோயிலில் வைத்து எதுவும் பேசவில்லை, பிரபாகரனுடன் வந்து விட்டவள் அவன் அறைக்கு வந்த உடனே அகிலனை பழிவாங்க வேண்டும் என்று தன் திட்டத்தை சொல்லி நடிக்க தான் கேட்டாள்.

அதன்படி அகிலன் வரும்போது அவர்கள் இருந்த கோலம் வெறும் நடிப்பு மட்டுமே.

“ரெண்டு நாள்ல நான் போயிடுவேன்.. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க…” என்று அவள் சொல்ல

“நீ இன்னுமே என்ன மாமானு கூப்பிடல செல்லம்மா…” என்றான் பிரபாகரன்.

என்ன என்று அவள் விழிக்க, “எட்டு வருஷமாச்சு செல்லம்மா.. நீ என்ன மாமானு கூப்பிடு.. இப்பவாச்சும் கூப்பிடுடி…” என்றவன் வார்த்தைகளில் இருந்தது காதல் மட்டுமே.

இதுவரை தைரியமாக இருந்தவள் அவன் வார்த்தைகளில் நொறுங்கி, அப்படியே மண்டியிட்டு அமர்ந்து அழவே ஆரம்பித்து விட்டாள்.

சோஃபாவில் இருந்தவாறு அவளை அழுத்தமாக பார்த்தவன் “நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுனு சொன்னது மட்டும் தான் நடிப்பு.. மத்தது எல்லாம் நான் உண்மையா தான் சொன்னேன்.. அடுத்த வாரமே விவாகரத்து கிடைச்சதும், மறு நொடியே உனக்கும் எனக்கும் கல்யாணம்.. இந்த நிமிஷத்துல இருந்து நீ என்கூட தான் இருக்கணும்…” என்று சொல்ல

“நான் உங்களுக்கு வேணாம்.. வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க…” என்று கன்னம் நனைத்த கண்ணீரை துடைத்து விட்டு சொல்ல

“என் செல்லம்மாவ விட நல்ல பொண்ணுக்கு நான் எங்க போறது…” என்றான் அவனும் விடாமல்

“புரிச்சுக்கோங்க.. என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களால சந்தோஷமா வாழ முடியாது…” என்று அஞ்சனா சொல்ல

சோஃபாவில் இருந்து எழுந்தவன் அவள் முன் அவளை போலவே மண்டியிட்டு அமர்ந்து கொள்ள, அவளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அவன் கண்களையே அவள் பார்க்க, அவள் கன்னத்தை தன் இருகைகளிலும் தாங்கிக் கொண்டான் காளையவன். இருவரின் உடலிலும் ஒரு சிலிர்ப்பு, ஒரு நொடி பெண்ணவளின் இமை குடைகள் மூடி திறக்க, ஆடவன் தொண்டை முள்ளும் ஏறி இறங்கயது.

“என் சந்தோஷமே நீ தானடி செல்லம்மா.. உன்ன விட்டுட்டு வேற எங்க போய்டி என் சந்தோஷத்த தேடுவேன்.. நான் நிம்மதியா தூங்கி எட்டு வருஷமாச்சு செல்லம்மா.. தூங்க ரொம்ப கஷ்டமா இருக்கு, உன் மடி வேணும்டி நான் தூங்க…” என்று பிரபாகரன் கரைந்து உருகும் குரலில் கூற

உடைந்து அழுதவள் “எதுக்கு மாமா என் மேல இம்புட்டு காதல்.. உங்க காதலுக்கு தகுதி இல்லாதவ நான்.. ஒரு தடவ என் குடும்ப சந்தோஷம் தான் முக்கியம்னு உங்கள துன்ப கடல்ல தள்ளி விட்டுட்டு போயிட்டேன்.. இப்ப கூட என் மனச பத்தி தான் யோசிக்கிறேன்.. அப்படிப்பட்ட என்மேல உங்களுக்கு எதுக்கு இவ்வளவு காதல்…”

“காரணம் இருந்தாதான் தான் காதலிக்கனுமா!.. நீ என் செல்லம்மாடி.. அதுவே போதும் உன்ன காதலிக்க.. இந்த ஆயுசு முழுக்க, என் உசுரு போற வரைக்கும், எனக்கு நீ போதும்…”

“போதும் மாமா!.. உங்க காதலாலேயே என்ன கொல்லாதீங்க.. போன முறையும் என் சம்மதம் கேட்டு நின்னீங்க.. இந்த முறையும் என் சம்மதம் கேட்டு நிக்றீங்க.. இந்த முறையாவது என்ன கேட்காமலே தாலிய காட்டுங்க மாமா…” என்று அவள் சம்மதம் கூறி விட

மலர்ந்த முகமாக “நீயே சொல்லிட்டல.. கத்துனாலும் கதறுனாலும் உன்ன விட்றதா இல்ல..உன் கழுத்துல மூணு முடிச்சு போட்டு உன்ன என் வேட்டி நுனியில முடிச்சுக்குறேன்…” என்று அவன் சொல்ல

நீண்ட காலம் கழித்து அவள் இதழ்களிலும் ஆத்மார்த்தமான புன்னகை. அஞ்சனாவின் கன்னத்தில் இருந்த கையை இறக்கி அவள் தோள்களை பிடித்து தூக்கியவன் அருகில் இருந்த சோஃபாவில் அமர வைத்து அவனும் அமர்ந்து கொண்டான்.

“அப்பா, உன் அப்பா அம்மாவ மிரட்டுனது எப்போ தெரியும்?.. ஏன் என்கிட்ட சொல்லல?…” என்று கேட்க

“பத்து மாசம் முன்னாடியே அந்த அகிலனோட ஈனபுத்தி தெரிஞ்சதும் வீட்ட சொல்லிட்டேன் மாமா..அவங்க அமைச்சு தந்த வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுனு ரொம்ப வருத்தபட்டாங்க.. உனக்கு நீயே தேடிக்கிட்ட நல்ல வாழ்க்கைய நாங்க கெடுத்துட்டோம்னு எங்க மேல கோவமானு கேட்டாங்க.. நான் எதுவும் சொல்லல, அப்போ தான் உங்க அப்பா மிரட்டுனதையும் அதுக்கும் சேத்து தான் உங்கள வேணாம்னு முடிவெடுத்ததையும் சொன்னாங்க…” என்று சொல்ல

“ம்ம்…” என்று கேட்டுக் கொண்டவன் “செல்லம்மா நீ என்ன பண்ணனும்னு நினைக்கிறயோ அத பண்ணு.. நானும் ரொம்ப நாளாவே என் அப்பனோட கௌரவத்த கலங்க படுத்தணும்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா அவருக்கு புத்தி புகட்ட என் மனசுல தெம்பு இல்ல.. இப்போ தான் என் உசுரு நீ கூட இருக்கயே.. அவர் இதுவர விதைச்சத அறுவடை பண்ண வைக்கணும்…” என்று சொல்ல

“ம்ம்.. நான் இருக்கேன் மாமா…” என்று அஞ்சனா அவன் கையை பிடித்து கூற, அவனும் அவள் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

இருவரும் அடுத்து என்ன என்று பேசிக் கொண்டிருக்க, அறைக் கதவு தட்டப்பட்டது. பிரபாகரன் “யாருன்னு பாரு செல்லம்மா…” என்று சொல்ல

“கைய விட்டாதான் மாமா எழுந்து போக முடியும்…” என்று அவன் கைக்குள் சிறைப்பட்டு இருந்த தன் பூங்கரத்தை கண்களால் காட்டி சொல்ல,

“எட்டு வருஷ ஏக்கம் செல்லம்மா.. மந்திரம் போட்ட மாதிரி எல்லாம் மாறி, நீ என் கை வந்து சேர மாட்டியான்னு எத்தன நாள் தவிச்சிருக்கேன் தெரியுமா…” என்று சொல்ல

தன் மனம் கவர்ந்தவனின் காதலை நினைத்து உள்ளம் உருகியது பெண்ணவளுக்கு, இத்தனை காதலுக்கு தான் தகுதி இல்லை என்று தான் தோன்றியது. இருந்தும் தன் ஆயுள் முழுவதும் அவன் காலடியில் கிடக்கவே இதயம் துடித்தது.

“என் உசுரு போற வரைக்கும் இனி உங்கள விட்டு போக மாட்டேன் மாமா.. இப்போ கொஞ்சம் கைய விடுங்க…” என்று அஞ்சனா சொல்ல

உன் கையை விட்டாலும் என் கதகதப்பு உன்னுடன் இருக்க வேண்டும் என்பது போல், அவள் கையை எடுத்து தன் கழுத்துக்கு அடியில் வைத்துக் கொண்டு தலையை சரித்து சில நொடிகள் இருந்தவன், அவள் கையில் அழுத்தத்தை கொடுத்து விடுவித்தான்.

அவன் நினைத்ததை போன்றே அவன் விடுவித்த பின்பும் அவன் உடல் சூட்டை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது பெண்ணவளால்.

அவன் செயலால் நாணம் வந்து அவள் மனதை முட்டி நிற்க, அவளவன் முகத்தை பார்க்காமல் எழுந்து சென்று கதவை திறக்க, நித்தியா தான் நின்று இருந்தாள்.

கதவை திறந்த அஞ்சனாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தள்ளி வந்தவள் தோழியை அணைத்துக் கொண்டாள்.

அஞ்சனாவும் அவளை அணைத்துக் கொண்டவள் சற்று சங்கடமாக “நித்தி!.. என்ன நீ தப்பா…” என்று தனது செயல்களை தவறாக எடுத்துக் கொண்டாளோ என்று கேட்க

“என்ன தப்பா.. சரியா நடிக்க கூட தெரியல உனக்கு.. நல்லவேள அந்த பேக்கு உன்ன பாத்ததும் நம்பிட்டு…” என்று நித்தியா சொல்ல

இருவரும் சேர்ந்து போட்ட திட்டம் தான். ஆனால் கூடல் முடிந்தது போல் வெளியே வருவது முன்கூட்டியே அஞ்சனா யோசிக்கவில்லை.

பிரபாகரனின் அறையில் இருப்பது மட்டுமே திட்டம், அகிலனை பழிவாங்க என்று பிரபாகரனிடம் சொன்ன பின்னர் தான் கூடல் முடிந்தது போல் காட்ட வேண்டும் என்று நினைத்து கண நேரத்தில் அந்த கோலத்தில் வந்து நின்றது.

அரை மணி நேரம் அறையில் இருந்து இருக்கின்றனர் எனவே நித்தியாவும் உண்மை என்று நம்பிவிட்டாளோ என்று கேட்க, அவளோ நடிக்க தெரியவில்லை என்று கூற மனதில் அப்படி ஒரு நிம்மதி.

“எதுவும் நடக்கலன்னு எப்படி கண்டுபிடிச்ச…”

“ஹா!.. ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்சேன்.. இத்தன நாள் குடும்பம் நடத்துறோம் இத கூட கண்டுபிடிக்க முடியாதா.. சேலை நழுங்கி, பூ பொட்டு கலைஞ்சு இருந்தா மேட்டர் முடிஞ்சுதா அர்த்தமா..! உன் முகத்துல கொஞ்சம் கூட சோர்வு தெரியல.. முகத்துல வியர்வ இல்ல.. தண்ணீ எடுத்தாவது லேசா தெளிச்சு விட்டு இருக்கலாம்.. உதட்டுலயோ உடம்புலயோ தடயம் இல்ல.. நீயாவது உன் கீழ் உதட்ட கடிச்சு விட்டிருக்கலாம்.. சுத்த வேஸ்ட்.. ஒரு கெட்டப்ப ஒழுங்கா போட தெரியல…” என்று நித்தியா அடுக்கிக் கொண்டே போக

“அடிப்பாவி!.. இந்த அளவுக்காடி உன்னிப்பா பாப்ப…”

“பின்ன அந்தப் பொம்பள பொறுக்கிய மாதிரி மேலோட்டமா பார்த்து நம்ப நான் என்ன முட்டாளா.. நான் சொன்னதெல்லாம் பண்ணி இருந்தேன்னு வை.. இன்னும் அவன் முகம் கருத்து இருக்கும்.. ச்சே!.. மிஸ் ஆயிடுச்சு…” என்று போலியாக நித்தியா வருத்தப்பட

“பொய்யா ஒரு விஷயம் பண்ணும் போது இவ்வளவு தான் பண்ண முடியும்…” என்று அஞ்சனா சொல்ல

“எதுக்கு பொய்யா பண்ணிட்டு.. உண்மையாவே பண்ணி இருக்கலாம்…” என்க

“அடிங்க.. பேச்ச பாரு…”

“நானெல்லாம் சரியா தான் பேசுறேன்.. நீ காலையில சொல்லும்போதே தெரியும் ரெண்டு நாள்ல இங்க இருந்து நீ போக மாட்ட.. மாமாவும் விட மாட்டாங்கன்னு.. இப்ப சொல்லு நீ தானே எனக்கு ஓரங்கத்தி…” என்று நித்தியா கேட்க

“ம்ம்.. மாமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாங்க.. நானும் இத எதிர்பார்த்தேன், ஆனா…”

“என்னடி ஆனா.. இந்த முறையாவது லூசுத்தனமா யோசிக்காம ஓகே சொல்லி ஓஹோனு வாழ பாரு…”

“என்னத்த ஓஹோனு வாழ.. என் மாமாக்கு ஒரு வாரிச பெத்து கொடுக்க முடியாதே.. நான் அவருக்கு பொருத்தமே இல்ல நித்தி…” என்று அஞ்சனா கவலையாக சொல்ல

“அப்படியே இழுத்து ஒன்னு விட்டேன்னு வை.. கழுத்து அந்த பக்கம் திரும்பிக்கும்.. என்ன நம்ம நாத்தனாரோட காத்து பட்டுடுச்சு போல, மக்கு மாங்கா மாதிரி பேசுற.. மாமாக்கு ஆதூ இருக்கா.. ஏன் அவ உனக்கு பொண்ணு இல்லையா…” என்று நித்தியா கேட்க

“அச்சோ ஆதூ என் பொண்ணு தான்.. அவள தொட்டு தூக்க மாட்டோமானு எத்தன நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா…”

“பின்ன என்ன.. மாமா உன் புருஷன்.. ஆதூ உன் பொண்ணு.. இதவிட வேற என்ன வேணும்.. யாருக்கு தெரியும் உங்க காதலோட மேஜிக்கால நீ இதுக்கு பிறகு குழந்தை உண்டாக கூட வாய்ப்பு இருக்கு.. சும்மா கண்டதையும் யோசிச்சு என்ன ஓவர் டியூட்டி பாக்க வைக்காத.. இங்க இருக்கிறவளேயே சரி கட்ட முடியல.. எக்ஸ்ட்ராவா நீ வேறயா…” என்று அலுத்துக்கொள்ள

“சரிடி ரொம்ப அலுத்துக்காத.. என் மனசுல இருந்தத சொன்னேன்.. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்.. டிவோஸ் கிடைச்சதும் கல்யாணம்தான்.. அதுக்கு முன்னாடி துர்க்காவ அண்ணாவோட சேர்த்து வைக்கனும்…” என்று அஞ்சனா சொல்ல

“ம்க்கும்.. அவள பார்சல் பண்ணிட்டாலும்.. இப்ப நடந்த டிராமாவ பாத்துனாலும் மானமாவது மரியாதையாவது.. நம்ம வாழ்க்கை தான் முக்கியம்னு அண்ணன தேடி ஓடுவானு பாத்தா.. அவ அத்தைய பாத்ததும் அறைக்குள்ள போய் அடகாக்க ஆரம்பிச்சிட்டா…” என்று துர்க்காவிற்கு நித்தியா திட்ட

“சரி வா!.. அவள போய் பாக்கலாம்…” என்று அஞ்சனா நித்தியாவுடன் சென்று துர்க்காவின் அறை கதவை தட்டினாள்.

2 thoughts on “மீண்டும் கேட்குமா பூபாளம் 18

  • Gayathri Sgh

    Super prabha un kadhal la nane urukiten da 😍😍😍😍❤️❤️❤️..
    8 வருஷ காத்திருப்பு வீண் போல பிரபா 🥺.. உன்னோட காதல் ஜெச்சிருச்சி டா 🥺👌…
    நந்தினி இவளோ உன்னிப்பா கவினிச்சிருக்கியா 🤣…

    Reply
  • Gayathri Sgh

    Super prabha un kadhal la nane urukiten da 😍😍😍😍❤️❤️❤️..
    8 வருஷ காத்திருப்பு வீண் போல பிரபா 🥺.. உன்னோட காதல் ஜெய்ச்சிருச்சி டா 🥺👌…
    நந்தினி இவளோ உன்னிப்பா கவினிச்சிருக்கியா 🤣…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!