Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 20

 அத்தியாயம் 20

அஞ்சனாவின் அழுகையில் மிரண்ட குழந்தையை பிரபாகரன் பிரித்து தன்னிடம் வைத்துக் கொண்டவன் “ஸ்ஷூ!.. என்ன செல்லம்மா இது.. ஆதூ பயப்புடுறா பாரு…” என்று சொல்லவும்



Advertisement

கண்களை துடைத்துக் கொண்டவள் “இல்ல ஆழல.. அழல…” என்றவள் மிரண்டு நின்ற ஆதூரியின் முகத்தை தாங்கி “இன்னொரு தடவ அம்மானு கூப்பிடுடா!…” என்று கேட்க

எதற்கு என்று புரியாவிட்டாலும், தான் அம்மா என்று அழைத்தாள் புதியவள் சந்தோஷப்படுகின்றாள் என்று புரிய “அம்மா!…” என்றாள் மென் மொட்டு வாய் திறந்து தேன் குரலில்.

Advertisement

Advertisement

குழந்தையின் முகம் எங்கும் முத்தம் வைத்து “அம்மா தான்.. அம்மா தான்…” என்றவள் அணைத்துக் கொண்டாள்.

இந்த பாச போராட்டம் இப்போதைக்கு ஓயாது என்று நினைத்த பிரபாகரன் “போதும் செல்லம்மா.. ஆதூக்கு பசிக்கும சாப்பிட ஏதாவது குடு…” என்று சொல்லவும் தான்

Advertisement

குழந்தையை தூக்கிச் சென்று கை, கால், முகம் கழுவி உடை மாற்றி விட்டவள், கீழே சென்று பாலும் கருப்பட்டி பணியாரமும் எடுத்து வந்து, ஊட்ட வரவும் ஆதூரி தந்தையை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள், வாயை திறந்து சாப்பிடவில்லை.

என்னவென்று புரியாமல் பிரபாகரனை அஞ்சனா பார்க்க, அவனும் மகளின் அருகில் நெருங்கி தன் மடியில் தூங்கி வைத்துக் கொள்ள, முகத்தை திருப்பிக் கொண்டு கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு தகப்பன் மடியில் வாகாக அமர்ந்து கொண்டாள் ஆதூரி.

“என்னவாம் என் செல்லம்மாவுக்கு…” என்று மென்மையாக பிரபாகரன் கேட்க

மறு பக்கத்தில் இருந்த அஞ்சனா முகம் சுருங்கி விட ‘ஓஹோ இது தான் மேட்டரா…’ என்று மனதில் நினைத்தவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

தன்னவள் இனி தனக்கு இல்லை என்று எண்ணி, தன் மகளை செல்லம்மா என்று ஆசை தீர அழைத்து தன் மனதை தேற்றிக் கொண்டான். இப்போது அவன் செல்லம்மா அவனுக்கே கிடைத்து விட இரண்டு செல்லம்மாவை எப்படி சமாளிக்க.

“நீ ஏன்டி முகத்த சுருக்குற…” என்று அஞ்சனாவை கடிந்தவன்

“செல்லம்மா!…” என்று மகளை அழைக்க

“போப்பா.. போ.. என்ன ஆதூனு கூப்பிட்ட…” என்று தகப்பனிடம் முறுக்கிக் கொள்ள

“ரெண்டு பேரும் இருக்கும் போது செல்லம்மானா ரெண்டு பேரும் பாக்குறீங்க.. ஆதான்டா செல்லம்மா ஆதூ குட்டினு கூப்பிட்டேன்…” என்று சமாதானம் சொல்ல

“இல்ல.. இல்ல.. ஒத்துக் முடியாது.. நான் தான் உன் செல்லம்மா…” என்று ஆதூரி சொல்ல

“அப்போ நான்…” என்று தன் பங்கிற்கு அஞ்சனா போர் கொடி தூக்க

“ரெண்டு பேரும் செல்லம்மா தான்…” என்று பிரபாகரன் சரண்டர் ஆக

முடியாது என்று இருவரும் அடம்பிடிக்க, இப்படி ஒரு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்காத பிரபாகரன் இருவரையும் பாவமாய் பார்க்க, தந்தைக்காக மகள் தான் இறங்கி வந்தாள்.

“சரி உங்க முதல் செல்லம்மா யாரு?…” என்று ஆதூரி கேட்க

அவன் அஞ்சனாவை கை காட்ட, “அப்போ நான் குட்டி செல்லம்மா.. அவ்வளவு தான் குட்டி செல்லம்மானே கூப்பிடுங்க…” என்று சொல்ல

அஞ்சனாவோ “குட்டி செல்லம்மா குட்டியா இருக்கிறதால.. செல்லம்மாவ குட்டியா சுருக்கி செல்லம்னு கூப்பிடுவோம்…” என்று சொல்ல

“செல்லம் நல்லா இருக்கு…” என்று துள்ளி குத்தித்தாள் ஆதூரி.

“சரி இப்போ பால் குடிக்கலாமா செல்லம்…” என்று பிரபாகரன் கேட்க “ம்ம்…” என்ற சின்னவள் பால் குடிக்க

“ஏன்டி செல்லம்மாவ விட்டுக்குடுக்க மாட்டயா?…” என்று கிசுகிசுப்பாக பிரபாகரன் கேட்க

அஞ்சனாவோ “செல்லம்மா என்றது உங்க உயிர்ல எழுதின சொல்.. அத உங்களால விட்டுக் கொடுக்க முடியாது தானே.. அதான் நானும் விட்டுக் கொடுக்கல…” என்று சொல்ல இருவரின் கண்களும் காதலாக கலந்து கொண்டது.

****

அன்று சூரியன் மறைய பூமி சுழலும் வேகத்தை விட, பிரபாகரன் அஞ்சனா விடயம் ஊர் முழுவது பரவி விட்டது.

கிருபாகரனுக்கும் தன் அண்ணன் மீது சிறு அதிருப்தி வந்தது. பிடித்து இருந்தால் திருமணம் செய்து கொள்ளாமல் எதற்கு ஊருக்கு பேசும் பொருளாக வேண்டும் என்று ஆற்றாமையாக இருந்தது.

தன் அண்ணனின் பேர் கெட்டுப்போவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அஞ்சனா கூறியவற்றை கேட்ட பின்னர் இனிவரும் நாட்கள் இதை விட பெரும் புயல் வீச வாய்ப்பு உள்ளது என்பது மட்டும் புரிந்தது.

அன்று இரவு சாப்பிட்டு முடித்தவனுக்கு எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல, மேற் கொண்டு எதுவும் யோசிக்க முடியாமல் மூளை சூடாகி விட, மனதையும் உடலையும் சீர்படுத்த மனைவியின் மடி வேண்டும் என்று தோன்றியது.

“ம்ஹூம்.. கிட்ட போனாலே வார்த்தைய வாளா மாத்தி வீசுறா.. என்ன பண்ணலாம்.. அணைச்சுக்கிட்டு தூங்குனா கூட போதும் நிம்மதியா தூக்கம் வரும்…” என்று நினைத்தவன்

எழுந்து குளிக்க சென்றான். அவன் மகன் விகர்ணன் எப்போதோ தூங்கி இருந்தான். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அறைக்கு வந்த நித்தியா கணவனை காணாமல் தேடவும், குளியலறையில் இருந்து சத்தம் வந்தது.

“இந்த நேரத்துல குளிக்க மாட்டாரே என்னவா இருக்கும்…” என்று அவளுக்குள் இருந்த பட்சி அலாரம் அடிக்க ‘சரி பாத்துக்கலாம்…’ என்று நினைத்தவள்

அவள் சாயந்தரம் மடித்து வைத்த துணிகள் ஒற்றை சோஃபாவில் இருக்க, அதை எடுத்து அலுமாரியில் அடுக்க ஆரம்பிக்க, குளியல் அறையில் இருந்து கள்ளத்தனமாக எட்டி பார்த்த கிருபாகரன் விஷம புன்னகையுடன் வெளியே வந்தான்.

அவன் இடையில் சிறிய துண்டு மட்டுமே இருந்தது. அப்படியே வந்தவன் கண்ணாடி மேஜையின் முன்பு நின்று தலையை வார,

“இந்த அர்த்த ராத்திரியில தலைவாரி பவுடர் போட்டுக்கிட்டு துரை எங்க போகப்போகுதோ…” என்று வாய்க்குள் முணுமுணுத்தவள், அவள் வேலையை பார்க்க,

கிருபாகரனோ ரொம்ப நேரமாக அப்படியே நின்று அரையடி முடியை அரைமணி நேரமாகா வாரிக்கொண்டிருக்க

“வேஷ்டிய கட்டி தொலைக்க வேண்டியது தானே.. பெரிய ஆம்பள சில்க்னு நினைப்பு கவர்ச்சி காட்டி கவுக்க பாக்குராறாங்கும்…” என்று சற்று சத்தமாகவே நித்தியா முணுமுணுக்க,

அவள் கூறியது அவனுக்குமே கேட்க கீழ் உதட்டை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கியவன் ‘கிராதகி மடங்க மாட்டா போலவே…’ என்று மனதில் நினைத்தவன்

“குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்.. கூடசாளி ராக்கம்மா பொண்ணு வேணும்.. ஊருசனம் தூங்கையில.. சாமகோழி கூவையில…” என்று பாட

நித்தியாவோ அவனை வெறி கொண்டு முறைத்தவள் “பொண்ணு வேணுமாம் இல்ல பொண்ணு.. கிட்ட வாங்க கடிச்சு துப்பிடுறேன்.. கவர்ச்சி கண்ணன்னு நினைப்பு.. அடச்சீ வேட்டிய எடுத்து கட்டிட்டு பொத்திட்டு படுங்க…” என்று திட்ட

“அடிப்பாவி! கடிச்சு துப்பிடுவியா…” என்றவன் ‘சண்டாளி மெயின் மேட்டர்லே கைய வைக்க பாக்குறாளே…’ என்று மனதில் நினைத்தவன்

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு வந்து அலுமாரியின் இரட்டை அடைப்பு கதவு திறந்து இருக்க, ஒரு பக்கம் நித்தியா உடைகளை வைத்து கொண்டு இருக்க, அவளை ஒட்டி நின்று கொண்டு மற்றைய பக்கம் வேஷ்டியை தேடியவன்

இல்லாமல் போக நித்தியாவை அலுமாரி கதவோடு அலுத்தி, அவள் அடுக்கிய உடைகளில் வேஷ்டியை எடுக்கின்றேன் என்று அவளை உடைகளோடு அலுத்தியவன் தன் முரட்டு கையை எடுத்து கொத்தாக பிடித்து இழுக்க

“ஸ்ஸ்ஆஆஆ!…” என்று மங்கையவள் அலற

“ஏய்.. சாரிடி.. சாரிடி..வேஷ்டினு நினைச்சேன்…” என்றவன் கையை எடுக்க

“எப்படி கா இஞ்ச் வேட்டிய கொத்தா கைய வச்சுத்தான் எடுப்பீங்களா!…” என்றவள் தன் மார்பை தடவி குடுக்க

“பின்ன வேணும்னா புடிச்சு இழுத்தேன்…” என்று முக்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டவன்

“வலிக்குதா என்ன.. நான் வேணா தடவி விடவா…” என்று மீண்டும் கையை அவளை நோக்கி நீட்டியவன் செய்த சேவையில் உதடு கடித்தாள் கோதை.

நீண்ட நாட்கள் கழித்து கணவனின் அந்தரங்க தொடுகை உணர்ச்சிகளை கிளர்ந்தெழ செய்ய, ஆடவனோ எப்போதோ மற்றைய கையால் அவள் இடை வளைத்து தன் உடலுடன் இருக்க அணைத்துக் கொண்டான்.

“என்ன..ங்க பண்றீங்க…?” என்றாள் கடினமாக கேட்க நினைத்து காற்றில் மிதந்து வந்த மெல்லிய குரலில்

“தடவி குடுக்கேன்…”

“ம்ம்.. வேணாம்.. விடுங்க…”

“ஏன்!.. நான் தடவ கூடாதா?.. இவ்வளவு நாளா நான் தடவி கொடுத்து தானே…” என்று அவள் காதில் ரகசியம் பேச

பதில் சொல்ல முடியாமல் அவன் அழுத்தத்தில் கிறங்கி நின்றாள் பெண்ணவள். அவளின் மயக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவன் இடையில் இருந்த கையை உயர்த்தி அவள் கழுத்தை வளைத்து இதழ்களை கவ்வி கொண்டான்.

எடுத்ததும் ஆழமான ஆக்ரோஷமான வன்முத்தம் தான். இத்தனை நாள் பட்டினியை ஒரே முத்தத்தில் தீர்த்துக் கொள்ளும் அளவிற்கு இதழ் அமுதம் அருந்திக் கொண்டிருந்தான்.

உன்னை விட்டு நான் இல்லை, என்னை விட்டு நீயில்லை என்பதை போல் இதழ்கள் இணைந்து இருக்க, இருவரின் உடலிலும் இரசாயன மாற்றம் நிகழ, உடல் முழுவதும் குறுகுறுத்தது.

பெண்ணவளின் நா வரண்டு போகும் அளவிற்கு ஆழமான முத்த பரிமாற்றத்தில், மூச்சு முட்டும் போது தான் அவள் இதழில் இருந்து தன் அதரங்களைப் பிரித்து, அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து அவனவளின் வாசம் பிடித்தான்.

அவளின் முதுகோடு கைகள் இரண்டையும் இணைத்து, தன் உடலோடு அவளை இறுக பிணைத்துக் கொண்டவன், அவள் பின் பக்கம் உடலை வருட கணவனின் பத்து விரல்கள் செய்த மாயாஜாலத்தில் மயங்கி, கிறங்கி இருந்தவள், அவன் எங்கே வருகின்றான் என்பது புரியவும்

‘அடியே இதுதான் உன் பாடம் புகட்ற லட்சணமா…’ என்று அவள் மற்றும் ஒரு மூளை விழித்துக் கொள்ள,

கிருபாகரன் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டாள்.

மனைவியின் மலருடல் தந்த மயக்கத்தில் இருந்தவன், மிட்டாய் பறி கொடுத்த குழந்தையாய் விழிக்க “என்ன நடந்தாலும் பொண்டாட்டி இதுக்கு தான் இல்ல…” என்று நித்தியா திட்டவும்

“ஏய் நித்தி அப்படி இல்லடி.. அதுதான் மன்னிப்பு கேட்டேனே.. இனிமேல் நீ ஆசைப்பட்டபடி வாழலாம்.. துர்க்காவோட கல்யாணத்துக்கு நீ தான் காரணம்னு தெரிஞ்சாலும் நான் எதுவுமே சொல்லலையே.. நீ சொன்னதுக்கு பிறகு தான் எனக்கே தோணுச்சு..

…சரி அண்ணா கிட்ட பேசி துர்க்காவ பரணியோட சேர்த்து வைக்கலாம்னு பாத்தா இப்ப அண்ணா வாழ்க்கையில எதிர்பார்க்காம என்னென்னமோ நடந்துட்டு இருக்கு.. நான் நாளைக்கு அண்ணா கிட்ட பேசி துர்க்காவ பரணி வீட்டுக்கு அனுப்பி வச்சிடுறேன்.. என்ன நம்புடி.. எனக்கும் உனக்கு இருக்கிற ஆசை எல்லாமே இருக்கு.. அண்ணா ஒரு பக்கம் துர்க்கா ஒரு பக்கம் ரெண்டு பேருமே சந்தோஷமா வாழாம.. என்னால மட்டும் எப்படி.. அதுதான் கொஞ்சம் தடுமாறி போயிட்டேன்…” என்று சொல்ல

“துர்க்காவ அண்ணாவோட நீங்க தான் சேர்த்து வைக்கணும்னு இல்ல.. கல்யாணம் பண்ணி வைக்க தெரிஞ்ச எங்களுக்கு சேத்து வைக்கவும் தெரியும்.. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க மன்னிப்பு கேட்ட அடுத்த நிமிஷமே எல்லாத்தையும் மறந்துட்டு உங்க கூட சகஜமா இருக்கணுமா.. உங்கள மன்னிச்சிட்டா இத்தன வருஷம் நான் இழந்ததெல்லாம் இல்லன்னு ஆயிடுமா.. நான் சொன்னது சொன்னது தான்.. நான் நாலு வருஷம் இழந்து தவிச்சத நீங்க நாப்பது நாள்னாலும் இழந்து தவிக்கணும்.. இன்னைக்கு நிம்மதியா படுத்து தூங்குங்க காலையில இருந்து உங்க கவுண்டன் ஸ்டார்ட்…” என்று சொன்னவள் சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள

அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டவன் “நித்தி நீ இழந்தது அதிகம்தான்.. நான் அவஸ்தைப்பட்டா உன் மனசு குளிரும்னா அனுபவிக்க நான் ரெடி தான் பொண்டாட்டி…” என்று சொன்னவன் மறு பக்கம் வந்து படுத்துக் கொண்டான்.

அதே நேரம் பிரபாகரன் அறையிலோ அஞ்சனாவும் ஆதூரியும் கதை பேசியபடி கட்டிலில் படுத்துக் கொள்ள, அவர்களை கண்களில் நிறைத்துக் கொண்டே சோஃபாவில் படுத்து தூங்கினான் பிரபாகரன்.

அடுத்த நாள் விடியல் யாருக்கு எப்படியோ துர்க்காவிற்கு அமோகமாகவே ஆரம்பித்தது. காலை பூஜைக்கா தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு நின்றவளை ஒரு வித அவசரகதியில் தேடி வந்தார் அங்கு வேலை செய்யும் வாணி.

“துரக்காம்மா விசயம் தெரியுமா.. அந்த படுபாவி சிவா ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில உடம்பு அழுக கிடந்து.. ஒரு மாசம் முன்னாடி செத்துட்டானாம்.. போலீஸ் விசாரிச்சு அவங்க அப்பா அம்மா கிட்ட இப்பதான் உடம்ப குடுத்துட்டு போயிருக்காங்க…” என்று சொல்ல

துர்க்கா எந்த வித உணர்வையும் காட்டவில்லை ஓ.. அப்படியா என்று மட்டும் கேட்டுக்கொண்டாள்.

வாணிக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த பாதகன் இறந்த செய்தியை கேட்டு சந்தோஷப்படுவாள் என்று நினைத்து இருக்க, அவள் முகத்தில் அதற்கான சிறிய சுவடு கூட இல்லை

“துர்க்காம்மா கேட்குறேன்னு கோச்சுக்காதீங்க.. உங்க வாழ்க்கைய நாசம் பண்ணுன ஒருத்தன் ரண வேதனைய அனுபவிச்சு செத்து இருக்கான்.. அதக் கேட்டு சந்தோஷப்படுவீங்கனு நினைச்சேன்.. நீங்க என்னம்மா இப்படி சாதணமா இருக்கீங்க…” என்று கேட்க

விரக்தியாக சிரித்தவள் “அவன் செஞ்சது பாவம்னா.. அந்தப் பாவத்த செய்ய முழு சுதந்திரம் குடுத்தது நான்.. இப்ப கூட அவன் செத்துட்டானதும் என் ஞாபகம் தானே உங்களுக்கு வந்துச்சு.. 14 வருஷம் கழிச்சு திரும்பவும் என்னோட நடத்தைய பத்தி விமர்சிக்க போறாங்க.. அத நினைச்சு நான் சந்தோஷப்படனுமா.. சொல்லப்போனா நான் வருத்தப்படணும்.. அவனுக்கு விடுதலை கிடைச்சிருச்சு எனக்கு சாகுற வரைக்கும் விடுதலை கிடைக்காது…” என்று சொல்லும்போது

அவளின் பின்னிருந்த நித்தியா “உனக்கு விடுதலை எப்பவோ கிடைச்சிருச்சு.. நீதான் தங்க கூண்டிலேயே அடைப்பட்டு கிடக்கனும்னு இங்கேயே இருக்க…” என்று சொல்ல

திரும்பி பார்க்க நித்தியா கூட அஞ்சனாகவும் நின்றிருந்தாள். விடிந்து கண்விழித்ததும் இருவரும் தேடிவந்தது துர்க்காவைத்தான். எப்படியாவது இன்று அவளை பரணியுடன் அனுப்பி வைத்து விட வேண்டும் என்பது அவர்களின் முடிவு.

ஆனால் அதை தள்ளிப் போட வேண்டிய சூழ்நிலையாகி போனது. அஞ்சனாவும் “ஆமா துர்க்கா இப்போ நீ அண்ணா வீட்டுல இருந்து இருந்தா பரணியோட பொண்டாட்டியா மட்டும் தான் உன் அடையாளம் இருந்திருக்கும்…” என்று சொல்ல

“ஏன் அஞ்சு புரியாம பேசுற.. ஒரு குடும்பத்துல ஒரு பொண்ணு ஓடிப் போயிட்டானா.. நாலு தலை முறைக்கும் அந்த குடும்பத்தை அடையாளப்படுத்தும் போதெல்லாம் அந்த வீட்டு பொண்ணு ஓடிப்போச்சுதேனு சளைக்காம சொல்லுவாங்க.. அப்படி இருக்க நான் இன்னொருத்தன் பொண்டாட்டி ஆயிட்டா மட்டும் என்ன விட்டுடுவாங்களா…?” என்று கேட்க

அது என்னவோ உண்மை என்று தான் தோன்றியது. “நீ சொல்றது சரிதான்.. அப்படியானவங்களும் இருக்க தான் செய்றாங்க.. ஆனா அதே பொண்ணு இன்னொரு குடும்பத்துக்கு வாழ போனதுக்கு பிறகு இன்னொருத்தன் பொண்டாட்டினு அடையாளப்படுத்தவும் ஆளுங்க இருக்காங்க…” என்று சொல்ல

“ப்ளீஸ் அஞ்சு இத பத்தி அப்புறமா பேசலாம்…” என்ற துர்க்கா வேகமாக வீட்டினுள் நுழைந்து கொள்ள

நித்தியாவோ “அவளோட பழைய ரணங்கள யாராவது கிளறி விட்டுருவாங்கன்னு தான் அறைக்குள்ளயே அடஞ்சி கிடந்தா.. யார் என்ன சொன்னா எனக்கு என்னனு நினைச்சு எப்ப அவ கூட்ட விட்டு வெளிய வருவான்னு தெரியல.. போதாக்குறைக்கு இன்னைக்கு அவ பழைய வாழ்க்கை எல்லாம் கண் முன்னாடி வந்து போகும்.. இப்போதைக்கு துர்க்காவ பார்சல் பண்ண முடியாது.. அவ மனசு சரி ஆகட்டும் நாளைக்கு பாத்துக்கலாம்.. அதுவரைக்கும் நீ நம்ம மாமனாருக்கு பாடம் எடு நான் என் புருஷனை படுத்தி எடுக்குறேன்…” என்று சொல்ல

“ஏய் லூசு.. நம்ம மாமனாருக்கு பாடம் புகட்டணும் அது சரி.. உன் புருஷன எதுக்கு படுத்த போற…?”

“அது வேற கணக்கு அஞ்சு.. லைட்டா வறுத்து எடுத்தாதான் என் மனசு கொஞ்சம் ஆறும்.. வா போய் நம்ம வேலைய ஆரம்பிப்போம்…” என்ற நித்தியா வாணியிடம்

“அக்கா நீங்க போய் வேலைய பாருங்க.. இதுக்கு மேல அந்த நயவஞ்சகன பத்தி துர்க்கா கிட்ட எதுவும் சொல்லாதீங்க…” என்று சொல்ல வாணியும் சரி என்று தலையாட்டி விட்டு தனது வேலையை கவனிக்க சென்று விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!