Skip to content
Post Views: 47
அத்தியாயம் 31
குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு இருந்தது அந்த வீடு.
Advertisement
கணவன் இடிந்து போய் அமர்ந்து இருக்க, பிரேமாவதி தான் “டேய் என்னடா இதெல்லாம்.. எதுக்கு பிரபா இப்படி எல்லாம் பண்ற.. அப்படி என்ன நாங்க தப்பு பண்ணிட்டோம்…” என்று கேட்க
“தயவு செஞ்சு நீங்க பேசாதீங்கம்மா.. அவர்னாலும் மத்தவங்களுக்கு அநியாயம் பண்ணுனாரு.. குணத்திலேயே பொண்ணுங்கள பத்தி யோசிக்காத ஒருத்தர் தான்.. ஆனா நீங்க, நீங்க பெத்த பொண்ணையே மனசளவுல சிதைச்சு இருக்கீங்க.. அத கூட உணராம என்ன தப்பு பண்ணிட்டோம்னு கேக்குறீங்க இல்ல.. இதுக்கு மேல உங்க கிட்ட எல்லாம் பேச முடியாது..
Advertisement
Advertisement
…கிருபா தேவையானத எடுத்துட்டு கிளம்பு..
…அஞ்சு நமக்கு போட உடுப்பு மட்டும் எடுத்துக்க.. இந்த வீட்டுல இருந்து வேற எதுவும் வேணாம்…” என்று சொல்ல
Advertisement
அஞ்சனாவும் நித்தியாவும் தங்களது அறைக்கு சென்று தேவையானவற்றை எடுத்து வந்தனர்.
பெண்கள் இருவரும் குழந்தைகளை தூக்கிக் கொள்ள, ஆண்கள் இருவரும் தங்கள் உடைமைகளை தூக்கிக் கொள்ள, வீட்டை விட்டு வெளியேறினர்.
பிரேமாவதி எவ்வளவு தடுத்தும் யாரும் செவிமடுத்ததாக தெரியவில்லை.
பிரபாகரன் ஜீப் வந்து நின்றது என்னவோ பரணியின் வீட்டின் முன்பு தான். ஆனால் வீட்டினுள் செல்லவில்லை.
விருந்து சாப்பாடு சமைத்து முடித்து காத்திருந்த பரணி, வாகனம் வந்து நின்ற சத்தம் வந்து வெகு நேரமாகியும் யாரும் உள்ளே வரவில்லை என்றதும் வெளியே வந்து பார்க்க, அப்போதுதான் ஜீப்பில் இருந்து இறங்கினர் அனைவரும் .
“என்னடா?.. ஏன் உள்ள வராம இங்கயே நிக்கிற?…” என்று பரணி கேட்க
“மச்சான் இப்போ வெறும் பிரபாகரனா வந்து இருக்கேன்.. முருகானந்தத்தோட மகனா இல்ல.. இப்போ நான் உள்ள வரலாம் இல்ல.. இப்போ என்ன உன் நண்பனா ஏத்துப்ப இல்ல…” என்று பிரபாகரன் கேட்க
ஏதோ சரியில்லை என்பது புரிய ஒற்றை கையால் அவனை அணைத்து கொண்டவன் “எப்பவும் நீ என் பிரெண்டு தான்.. உள்ள வா…” என்று அழைத்துச் செல்ல அனைவரும் உள்ளே சென்றனர்.
பரணி எதுவும் கேட்காமல் முதலில் அனைவரையும் சாப்பிட வைத்தான்.
அதன் பின் தான் என்னவென்று கேட்க, கிருபாகரன் எல்லாவற்றையும் கூறி முடித்தான்.
“டேய் அவருக்கு தண்டன கொடுக்க சொன்னா நீ என்னடா பண்ணி வச்சிருக்க?…” என்று பரணி கேட்க
“அவருக்கு என்ன தண்டன கொடுக்க சொல்ற.. இதுவே அவருக்கு பெரிய தண்டனை தான்.. அவர் தேடுன கௌரவம், சொத்து, அந்தஸ்து எல்லாத்தையும் அனுபவிக்க இனி அவருக்கு வாரிசு இருக்க போறதில்ல.. யாருக்காக இதெல்லாம் பண்ணுனாரோ அவங்களே கூட இல்லனா என்ன பண்றாருன்னு பாக்கணும்.. எனக்கு இத தவிர வேற வழி தெரியலடா.. அவரோட இந்த குணம் பரம்பரை பரம்பரையா கடத்தப்பட்டது.. இவர மட்டும் குத்தம் சொல்லி என்ன பண்ண.. நல்லவேள அவர மாதிரி நான் இல்ல…” என்று தான் அவனால் ஆசுவாசப்பட முடிந்தது.
“அதுக்கு அவர விட்டுட்டு மட்டும் வந்திருக்கலாம் இல்ல.. மொத்த சொத்தையும் எதுக்கு ஆசிரமத்துக்கு எழுதி வச்ச…” என்று பரணி கேட்க
“என் தங்கச்சிக்கு நான் சீர் கொண்டு வருவேன் வாங்கிப்பியா?.. மாட்ட இல்ல.. ஏன்? ஏன்னா அது அந்த சொத்துல கொண்டு வர்ற சீர்.. என் தங்கச்சிக்கு ஒரு அண்ணனா செய்ய வேண்டிய கடமைய கூட செய்ய முடியாத சொத்து எனக்கு வேணாம்.. இதுக்கு பிறகு நான் சம்பாதிக்கிற ஒத்த ரூபாயும் என்னோட சம்பாத்தியம்.. அதுல இருந்து என் தங்கச்சிக்கு, தங்கச்சி பிள்ளைகளுக்கு சீர் செய்வேன்.. அத உன்னால தடுக்க முடியாது…” என்று பிரபாகரன் சொல்ல
“என்னாலயாடா…” என்று வருத்தமாக கேட்டான் பரணி. என்ன இருந்தாலும் தன் நண்பன் இன்று ஒன்றுமில்லாமல் நிற்பதற்கு தானும் ஒரு காரணமுமோ என்று நெருடலா இருந்தது.
“உன்னால இல்ல.. உனக்காகவும், எனக்காவும்…” என்று பேச்சை முடித்தான் பிரபாகரன்.
துர்ககாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு, மற்றவர்கள் அனைவரும் தோப்பு வீட்டிற்கு சென்று தங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்து விட்டு வந்தனர்.
மாலை நேரம் என்றும் பார்க்காமல் தோப்பு வீட்டில் பால் காய்ச்சி குடியேறிவிட்டனர்.
பரணி நாளை காலை சரி நல்ல நேரம் பார்த்து குடியேறலாம் என்று சொன்னதற்கு “இன்னும் சில வேலை இருக்குடா.. வீட்ட கொஞ்சம் திருத்தி அமைக்கணும்.. தொழிலுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன் அதையும் செய்யனும்.. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒரேடியா பூஜை ஒன்ன பண்ணலாம்.. இப்போதைக்கு இதுவே போதும்…” என்று பிரபாகரன் மறுத்து விட்டான்.
இரவு சாப்பாடு பரணி துர்க்கா கொண்டு சென்று கொடுக்க, சாப்பிட்டுவிட்டு ஆளுக்கு ஒரு அறையில் படுத்துக் கொண்டனர்.
இன்று தான் முறையாக அவன் செல்லம்மா அவனுக்கு மனைவியான நாள். ஆனால் எப்போதும் போல் அஞ்சனா ஆதூரியை கட்டிக்கொண்டு தூங்க, பிரபாகரன் தரையில் மெத்தையை விரித்து படுத்துக் கொண்டான்.
அடுத்த நாளில் இருந்து வீட்டை விரிவு படுத்தி அமைக்கும் பணியில் இறங்கினர் அண்ணன் தம்பி இருவரும். பிரபாகரன் தங்களின் அறையோடு ஒட்டி ஒரு சிறிய அறை கட்ட, கிருபாகரன் எதற்கு என்று கேட்டு வைக்க
“அது செல்லம்மா விளையாட…” என்று சொல்ல
“எந்த செல்லம்மா?…” என்று நமட்டு சிரிப்புடன் நித்தியா கேட்க
அப்போது தான் புரிந்தது ஆதூரியை செல்லம்மா என்றது. என்னதான் அம்மாவும் பொண்ணும் டீல் போட்டுக் கொண்டாலும் அவனுக்கு ஆதூரியையும் செல்லம்மா என்று தான் அழைக்க வந்தது.
“ஆதூவ சொன்னேன்.. குழந்தைக்கு விளையாட இடம் வேணும் இல்ல.. அதுக்கு தான்…” என்று சொல்லிவிட்டு பிரபாகரன் அங்கு நிற்காமல் சென்று விட
அஞ்சனாவின் காதில் “குழந்த விளையாடவா.. இல்ல குழந்தைக்காக நீங்க ரெண்டு பேரும் விளையாட வா…” என்று கேட்டு வைக்க,
முடங்கையால் அவள் இடையில் குத்தியவள் “புத்திய பாரு.. நீ வேணும்னா உனக்கு கட்டிக்க…” என்று சொல்ல
“வேணும்னா வா.. நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா.. நாங்களும் கட்டுவோம்…” என்று சொன்னவள் கிருபாகரனிடம் சொல்ல
“ஓஹோ அப்போ அண்ணா அதுக்கு தான் கட்றாங்களா?…” என்று கேட்க
“தெரியல ஆனா அப்படி ஒரு குட்டி அறை இருந்தா நல்லா இருக்கும்…” என்று சொல்ல
இருவரின் அறையிலும் குழந்தைகள் விளையாட என்ற பெயரில் குட்டி அறை தயாரானது.
தோப்புக்கு நடுவில் தான் வீடு இருந்ததால் வீட்டை சுற்றி வேலியும் போட்டுக் கொள்ளும் வேலையில் பிரபாகரன் கிருபாகரன் இருக்க,
நித்தியா ஆண்கள் இருவருக்கும் தாகத்திற்கு மோர் எடுத்து வந்தாள். அதை வாங்கிக் கொண்ட பிரபாகரன் அஞ்சனா வாசலில் இருக்க அவளிடம் சென்றான்.
கிருபாகரனோ மோர் எடுக்காமல் நித்தியா இடுப்பில் சொருகி வைத்திருந்த முந்தானையை உருவி எடுத்து தன் முகத்தில் இருந்த வியர்வையை துடைக்க
“ஏங்க! என்ன இது.. யாராவது பாக்க போறாங்க…” என்றவாறு அவன் கையில் இருந்து முந்தானையை உருவிக் கொண்டாள் .
“யாரும் இல்ல.. அண்ணா எப்பவோ போயிட்டாங்க.. அப்படி யாரும் பாத்தா என்ன.. நீ என் பொண்டாட்டி தானே…” என்று கிருபாகரன் சொல்ல
நித்தியா அவன் பின்னால் யாரையோ தேட
“யாரடி தேடுற?…” என்று கிருபாகரன் கேட்க
“இல்ல அறைய விட்டு வெளிய வந்தா, யார் இவனு பாக்கிற என் புருஷன காணல.. அதான் தேடுறேன் …” என்று நக்கலாக சொல்ல
“அவன தேடாத.. இவன் பொண்டாட்டி எங்க இருந்தாலும் இழுத்து வச்சு கிஸ் அடிப்பான் பாக்குறியா…” என்று சொன்னவாறு அவளை நெருங்க
“அச்சோ மச்சான்.. உங்களுக்கு என்னமோ ஆகிடுச்சு போங்க…” என்றவள் வீட்டினுள் ஓட
நித்தியா பயந்தது போல் அவர்கள் கொஞ்சல்களை பார்த்து விட்டனர் பிரபாகரன் அஞ்சனா இருவரும். என்ன பேசினார்கள் என்பது கேட்கவில்லை என்றாலும் அவர்களுக்கு இடையில் இருந்த இணக்கம் கவிதையாக தெரிந்தது.
பிரபாகரன் அஞ்சனாவை திரும்பி பார்க்க, அவளோ சங்கடமாக அவனைப் பார்த்துவிட்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
தாலி கட்டி ஒரு வாரமாகிவிட்டது. இப்போதெல்லாம் அஞ்சனா பிரபாகரனிடம் தனிமையில் ஒதுங்கி இருப்பது போல் தோன்றியது.
தாம்பத்தியத்தை ஆரம்பிக்க அவனுக்குமே வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அஞ்சனாவின் தயக்கத்திற்கான காரணம் புரியவில்லை.
தொழில் ஒன்றை தொடங்க வேண்டும், அதன் பின்னர் மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போட்டுக் கொண்டான்.
*****
இங்கு பரணியின் வீட்டில் எப்போதும் போல் செல்ல சீண்டல், சிறு சிறு முத்தங்கள் என்று தான் சென்று கொண்டிருக்கின்றது. இன்னமும் இதழ் முத்திற்கு கூட முன்னேறவில்லை இருவரும்.
பரணிக்கு கொள்ளை கொள்ளையாக ஆசை தான் மனைவியை மொத்தமாக கொள்ளையிட, ஆனால் அவள் அழைக்காமல் அறைக்குள் கூட போக மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டானே அதுதான் தடுக்கின்றது.
ஆனால் நித்தமும் நெஞ்சில் நிறைந்தவளின் நினைப்பு தான். இதோ மணி காலை பத்து தான் இருக்கும், கடையில் இருக்க முடியாமல் வீட்டிற்கு வந்து விட்டான் தன் கண்ணம்மாவை காண.
ஆனால் வீட்டினுள் எங்குமே அவள் இல்லை. தேடிக்கொண்டே வீட்டின் பின் கிணற்றடிக்கு வந்தவனுக்கு திவ்ய தரிசனம் தான். அவன் மனையாள் துணிகளுடன் மல்லு கட்டிக் கொண்டிருந்தாள்.
தூக்கி சொருகிய புடவையின் ஊடாக வாழைத்தண்டு காலும், இடுப்பைச் சுற்றி சொருகி இருந்த முந்தானைக்கு கிடையில் அல்வா துண்டு இடுப்பும் ஈ என்று இளித்தது அவனைப் பார்த்து.
அவனே எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் விரததாபத்தில் சுற்றிவர, மனதை கொய்தவளியின் மதி மயக்கம் தரிசனம் அவனுள் ஆயிரம் மாற்றங்களை உண்டு செய்ய, காது மடல் சிவந்து, உஷ்ணம் தலைக்கு ஏறி, மூச்சுக்காற்று கூட வெப்பமாக வெளியேறியது.
“படுத்துறாளே…” என்று முனகியவன் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு அவளை நெருங்கினான்.
சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்ற கணவனை ஆச்சரியமாக பார்த்தவள் “என்னங்க திடீர்னு.. ஏதும் வேணுமா?…” என்று கேட்க
அவன் பார்வை சென்றது என்னவோ செவ்வளரி இதழ்களுக்குத்தான்.
ஆம் இல்லை என்று நாலா புறமும் அவன் தலையை ஆட்டி வைக்க, அவனை யோசனையாக பார்த்தவள் “இருங்க துணி துவைச்சு முடிச்சிட்டு வாரேன்…” என்று விட்டு தன் வேலையில் கவனமாக .
அவன் அவன் வேலையில் மூழ்கினான். அவள் துணியை அடித்து, குத்தி துவைக்கும் போது அவள் மேனியின் நளினங்களை பார்க்க பார்க்க ஆடவன் உடல் முறுக்கிக் கொண்டது.
சலவை கல்லில் துணியை குத்தி துவைக்கும் போது குனிந்து நின்றிருந்த பெண்ணவளின் கார் கூந்தல் முன் வந்து விழ, அதை பின் தள்ளி விட்டு என்று அவள் சற்று சிரமப்பட
எழுந்து அவள் பின்வந்து நின்றவன் அவள் தோள்கள் இரண்டிலும் கையை வைத்து நிமிர்ந்து நிக்க வைத்து, அந்த கற்றை கூந்தலை எடுத்து கொண்டை போட்டு விட்டான்.
அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை அதன் பிறகுதான் கவனித்தான் ஜாக்கெட் மறைக்காத அவள் பளிங்கு முதுகு வியர்வை துளிகள் பூத்து மினுமினுக்க, கொஞ்சமும் யோசிக்காமல் குனிந்து அவள் முதுகில் இதழ் பத்தித்து இருந்தான்.
உறைந்து அப்படியே நின்று விட்டாள் பாவை .
சிலையாக சமைந்து நின்றவளை திருப்பி, நொடியும் தாமதிக்காது இரண்டு கன்னங்களையும் கைகளில் தாங்கி, இதழோடு இதழ் சேர்த்து இருந்தான். ஆழமான அழுத்தாமான முத்தம்.
முதலில் அதிர்ந்து விழி விரித்து, பின் நெகிழ்ந்து விழி மூடி உருகி நின்றிருந்தாள் பெண்ணவள்.
அவனுக்காக பாலும் தேனும் ஊறும் போலும் இடைவிடாது பருகிக் கொண்டிருந்தான்.
பெண்ணவள் மூச்சுக்கு தவிக்கும் நேரம் காப்பாற்றுவது போல் பரணியின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஃபோன் சிணுங்கியது.
மனமே இல்லாமல் மெதுவாக இதழை பிரித்தவன், ஃபோனை எடுத்துப் பார்க்க பிரபாகரன் தான் அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்று “என்னடா?…” என்றான் குரலில் கடுப்பு அப்பட்டமாக தெரிந்தது.
‘என்ன தப்பான நேரம் எடுத்துட்டமோ…’ என்று குழம்பிய பிரபாகரன் “மச்சான் தொழில் விஷயமா பேசணும்னு சொன்னேன்ல.. கடைக்கு வந்தேன் நீ வீட்டு போயிட்டதா பையன் சொன்னான்.. அதான் வீட்ட தான் இருக்கியானு கேக்க ஃபோன் பண்ணுனேன்…” என்று சொல்ல
“வீட்ட தான் இருக்கேன் வா…” என்று பிரபாகரனிடம் சொன்னவன்
மன்னவன் தந்த இதழ் முத்தத்தில் முழுதாக தன்னை இழந்து இருந்த பெண்ணவள் சட்டென மீட்டெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க
“அம்மு நீ துவைச்சு குடு.. நான் அலசி எடுக்கிறேன்…” என்றவன் கிணற்றிலிருந்து நீரை இறைத்து அவள் துவைத்து வைத்த துணிகளை அலச
துர்க்காவும் தன்னை சமம் செய்து கொண்டவள் “இல்லங்க வேணாம்.. ஸ்டிக் இல்லாம எப்படி…” என்று கேட்க
“நடக்க தான் ஸ்டிக் வேணும்.. இது ஒரே இடத்துல தானே நிக்க போறேன்…” என்றவன் வேலையில் கவனமாக அவளும்
துணிகளை துவைத்தாள்.
இருவரும் துணிகளை துவைத்து காய போட்டு விட்டு உள்ளே வர பிரபாகரனும் கிருபாகரனும் வீட்டினுள் வந்தனர்.
“வாங்கடா!…” என்று பரணி இருவரையும் வரவேற்க
“வாங்கண்ணா…!” என்ற துர்க்கா காஃபி போட சமையலறை சென்றாள்.
“பரணி மாட்டு பண்ணை வைக்கலாம்னு இருக்கேன்.. உனக்குத்தான் மாடுகள பத்தி நிறைய தெரியுமே.. நல்லதா பாத்து இருபது மாடு வாங்கி குடு…” என்று பிரபாகரன் கேட்க
“என்னடா இதுலயும் ஏதாவது உள்குத்து இருக்கா?…” என்று பரணி கேட்க
“நிச்சயமா.. ஒரு மாடு மேய்க்கிறவன் பையனோட சேரக்கூடாதுன்னு சொல்லி தானே உன்ன என் அப்பா அந்த பாடு படுத்தினாரு.. இப்போ அவரோட பையனுங்க இரண்டு பேரும் மாடு மேய்க்க போறோம் என்ன பண்றாருனு பாப்போம்…” என்று சொல்ல
“நீ சொன்னா கேக்க மாட்ட.. சரி எப்ப போலாம்னு சொல்லு நானும் வாரேன்…” என்று சொல்ல ரெண்டு நாள்ல போகலாம் என்று பிரபாகரனும் சொல்ல
இருபது மாடுகளுக்கு செட்டு போடுவதில் இருந்து, தீவனம் வாங்குவது முதல் கொண்டு பராமரிப்பு வரை தெளிவாக கலந்து பேபினர் துர்க்கா கொடுத்த காஃபியை குடித்துக் கொண்டே.
அதன் பின் வேலைகள் வேகமாக நடந்தது. மச்சான்களுடன் சேர்ந்து தொழில் அமைத்து கொடுப்பதில் மும்முரமாக இறங்கி விட்டான் பரணி.
அன்று முதல் இதழ் முத்ததின் பின் முன்னேற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அடிக்கடி இதழ் முத்தங்களை பரிமாறிக் கொள்ள முடிந்தது. தன்னவள் தன்னிடம் நெகிழ்ந்து நிற்கின்றாள் என்பது புரிந்தாலும் மேலும் முன்னேற அவள் முழு சம்மதம் வேண்டும் என்பதால் அவனாக எந்த முயற்சியும் செய்யவில்லை.
பிரபாகரன் கிருபாகரனுக்கு நினைத்தது போல் தங்களிடம் இருந்த பணத்தில் மட்டும் மாட்டு பண்ணை அமைக்கும் வேலைகளை முழுதாக முடிக்க முடியவில்லை.
நாளை மாடுகள் வாங்குவதற்காக சில இடங்களுக்கு சென்று பார்க்க வேண்டும் ஆனால் 20 மாடுகள் வாங்குவதற்குரிய பணம் கையில் இல்லை.
இருப்பதில் எத்தனை முடியுமோ அத்தனை வாங்கி விடலாம் ஆனால் நினைத்த அளவில் வருமானத்தை ஈட்ட முடியாது என்பதால் யோசனையாக இருந்தனர்.
அதை கவனித்த நித்தியாவும் அஞ்சனாவும் “எதுக்கு இவ்ளோ யோசனை.. எங்க நகை எங்க கிட்ட தானே இருக்கு அத வச்சு காசு பிரட்டலமே…” என்று சொல்ல
“இல்ல பொண்டாட்டிங்க நகைகள்ல கை வச்சு தான் தொழில் தொடங்கணும்னு அவசியம் இல்ல.. நான் வெளியில எங்கேயாவது கேட்டு பாக்கிறேன்…” என்று பிரபாகரன் சொல்லிவிட
“இதுல என்ன இருக்கு.. அதுவும் நாங்க மொத்த நகையையும் கழட்டி தர போறது இல்ல.. நானும் நித்தியும் சரி பங்கு நகைய தாரோம்.. உங்களுக்கும் பெரிய தொகை தேவைப்படலயே.. வருமானம் வர ஆரம்பிச்சதுக்கு பிறகு மீட்டு குடுங்க…” என்று எப்படியோ ஒருவாறு பேசி சமாளித்து, பெண்கள் இருவரும் சரிசமமாக தங்களது நகைகளிலிருந்து எடுத்துக் கொடுக்க
அதையும் அடகு வைத்து, அதில் வந்த பணத்தையும் வைத்துக்கொண்டு மாடு வாங்குவதற்காக பரணியுடன் அலைந்து திரிந்தனர். அவர்கள் நினைத்த மாதிரி எளிதாக கிடைக்கவும் இல்லை. ஒரு வழியாக அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று வாங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டனர்.
நாளை மாட்டுப் பண்ணைக்கும் அவர்களது புதிய வாழ்வுக்குமான பூஜையும், அதனுடன் சேர்ந்து விருந்தும் இருப்பதாக சொல்லி நேரில் சென்று பரணியையும் துர்க்காவையும் அழைத்திருந்தனர்.
error: Content is protected !!